கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
காதல் ... வெற்றி பெற இதய... பரிமாற்றம் போதாது இதயமாக .... மாறவேண்டும்.....!!! ^ காதல் துளிக்கவிதைகள் கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 714 views
-
-
நாம் நாமாகவில்லை எமது கைகள் மட்டும் தான் முதலில் கட்டப்பட்டது இப்போ எமது காலும் கட்டப்பட்டுவிட்டது இனி எம்மால் எழுந்து நடக்க முடியாது எழுதமுடியாது பேசமுடியாது நாம் இனி மேல் நாமாகவே இல்லை எம் விடுதலையும் வெகு துரமாகிவிட்டது நாம் இப்போ எம் அடையாளத்தை தொலைத்த ஓர் அடிமை மனிதர்.
-
- 5 replies
- 1.1k views
-
-
அகிம்சை. ஒரு சில தசாப்தங்களுக்கு முதல் வரை அகிம்சை என்றால் காந்தி என்றனர். அதனையே உலகும் காந்தியம் என்றது. காந்தி நாடு என்று பாரதத்தை கொண்டாடியது. உண்மை அகிம்சைஎது என்று உலகுக்கு சொல்லி பாரதத்தின் முகமூடி கிழித்தான் பார்த்தீபன் பாரதம் பார்த்திருக்க பசியில் பிள்ளை நீர்த்து பன்னிரண்டாம் நாள் வீர சுவர்க்கம் சென்றான் அகிம்சை தீயை உலகில் ஏற்றிய தீபச் சுடர் திலீபன். பௌத்தத்தை அகிம்சை மதமென்றனர் மதங்கொண்ட பௌத்தார் மனட்சாட்சி இல்லாமல் கொலைக்காட்சியை உலகிற்கு காட்டினர் முள்ளிவாய்க்களில் அந்த ஆ.. கிம்சையாளருக்கு அரவனைப்பு கொடுத்தது கிம்சையாளர் ஆளும் ஹிந்தியா தமிழன் என்ற உணர்வு தலை தூக்கிய பொழுதெல்லாம் தரங்…
-
- 2 replies
- 749 views
-
-
நினைவுகளை மட்டும் விட்டுச் சென்ற நினைவழியாப் போராளி பிரகாஸ் ! 2ம் ஆண்டு நினைவுநாள்10.07.02013 எழிலெனும் எழிமையான விடுதலை புலியே எங்கள் எண்ணங்களில் நிலைபெற்ற இனியவனே திருமலை மண்ணிலிருந்து புறப்பட்ட எரிமலையே தியாகப் பயணத்தின் வழியெல்லாம் தோழொடு தோழாய் வந்த அன்புத் தோழனே ! விடுதலையின் வேர் நாட்டி உலகின் திசையெங்கும் விழுதெறிந்து சென்றவனே நீயாற்றிய பணிகள் கண்டு நிமிர்ந்தோமே அன்று நாங்கள். அடிமை விலங்குடைய அன்னை மண் விடுதலையடைய உனை வருத்தி நீ சாதித்தவைகள் ஏராளம். சாவின் விளிம்பில் நின்றாலும் சாதுரியமாய் வென்று வரும் சாதனையாளன் நீ. உன் சாவைக் கூட அறிவிக்காமல் சத்தமில்லாமல் போனாயே ! பறந்து திரிந்த புலியுன்னைப் புற்றுநோய் தின்று நீ பாடையிலே போய் முடியு…
-
- 2 replies
- 681 views
-
-
யார் இவர்கள்..... கவிதை - இளங்கவி தமிழர்களை அழவைத்த அந்தக் கொலைக்காட்சி இதுவும் போதாதா உலகத்துக்கு எங்கள் இனப்படுகொலைக்குச் சாட்சி.... இறந்த உடல்களெல்லாம் நிர்வாணமாய் கிடக்க உயிருள்ள ஓர் உறவின் உயிர் குடிக்கிறது துப்பாக்கி..... அவர் உதிரம் நிலம் நனைக்க அவன் சிர்ப்போசை கேட்கிறது.... நாம் சிந்திய இரத்தத்தில் அவன் சந்தோசம் மிதக்கிறது..... யார் இவர்கள்....? எமைக் காத்த தெய்வங்களா.... இல்லை..ஈழத்து இளம் மயிலா... அல்லது... எம் ஊரு காளைகளா.... எம் மொட்டுக்களின் பெற்றோரா...? புலியாக இருந்தாலும் பொதுமகனாக இருந்தாலும் அவன் இறந்தது உனக்காக..... உன் தேச மீட்புக்காக....... கண்ணீரும் வற்றி விட்டோம் கலங்க நேரமில்லை... ப…
-
- 10 replies
- 1.5k views
-
-
இந்: உன் மேல ஒரு கண்ணு நீ தான் என் மொர பொண்ணு கிறங்குறேன் நொருங்குறேன் பாரு நான் உன் மாப்புள்ள இல:உன்னோட இவ ஒன்னு உன்ன மறந்தா வெறும் மண்ணு கிறங்குறேன் நொருங்குறேன் ஆனால் அவனே என் மாப்புள்ள இந்:கொஞ்சி நான் மிஞ்சுறேன் மிஞ்சி நான் கொஞ்சுறேன் ஏன்டி இந்த நாடகம் இல: கெஞ்சி நான் அஞ்சுறேன் அஞ்சினா கெஞ்சுற நானும் அவன் ஞாபகம் இந்:சொல்லாம சொல்லாம மூடி வெச்சு என்ன அங்கேயும இங்கேயும் அலையவிட்ட இல: அல்லாம கில்லாம நோக வெச்சு என்ன முன்னாலும் பின்னாலும் மொன இந்: ஓத்துக்கிட்டா மாமன் தான் கட்டிக்க வாரேன் வாரேன் இல: வெட்டுனா ஒட்டுறா ஒட்டுனா வெட்டுறா லூசு பையன் மாதிரி …
-
- 3 replies
- 1.7k views
-
-
மெல்ல மெல்லக் கசியும் உண்மைகளிலிருந்து நீண்ட பெருவெளிக் கனவு தற்கொலை செய்து கொள்கிறது..... முட்புதர்களின் அடர்த்திக்குள்ளிருந்து சொட்டுச் சொட்டாய் சேர்த்து வைத்தவையெல்லாம் இரத்தம் குளி(டி)த்துப் பெருத்து நாறிப் பிணங்களாய் மனித எலும்புக் கூடுகளாய் வெளிவருகிறது. நேசித்தவர்களும் நேசிப்பின் நினைவாய் விட்டுச் சென்ற வார்த்தைகளும் ஆள்மாறி ஆள்மாறி அவர்கள் பகிர்ந்தவற்றைப் பகிர்ந்து கொண்டு துயர் வலியில் தடயமறிவிக்காமல் தொடர்பிலிருந்து விடுபடுகிறார்கள். சீருடைகளோடு நிமிர்ந்து நின்ற வீரங்கள் சாவின் நிணம்மாறாத் தடைமுகாம் வேலிகள் பின் தலைகுனிந்து.... யாது நிகழ்ந்திற்று ஏது நடந்திற்றென்று ஏதுமறியா நிலையில் இலக்கத் தகடுகளால் அவர…
-
- 9 replies
- 1.6k views
-
-
ஊமையாய்..... அன்பே உன் காந்தக் கதிர்கள் வீசும் கண்களால் தள்ளாடும் என் எண்ணங்கள் நித்தம் ஒரு புதிதாய் இன்ப சஞ்சாரங்கள் காட்டிய உன் கனவுகளால் நித்தம் வலம் வரும் இரவுகளில் சுகமான தொல்லை உன் நினைவு எனும் ஊற்று எந்நேரமும் புூத்த மலர் நறுமணமாய் என்னில் என் இதயத்தில் இன்றும் என்றும் மறக்காது உன் முகம் தினம் சொல்லுது என் யுகம் உன்னை தினம் நினைத்து நசசரிக்கும் என் எண்ணங்களால் எச்சரிக்கின்றேன் உன் மௌனத்தை தினம் ஊமையாய்
-
- 14 replies
- 2.1k views
-
-
யுத்த நிறுத்தம்????????! யுத்தம் நின்றது என்று யரோ சொன்னார் அப்போ சத்தமில்லாமலே எங்கள் சந்ததி அழிகிறதே எப்படி?? சதைகளை ஓநாய்கள் தின்னுதே.. எங்கள் சரித்திரம் மெதுவாய் கண் மூடுதே.. சாவோடு என்னடி தோழி போர் நிறுத்தம்? தாயும் பிள்ளையும் அழியும் நாளில்.. தாலாட்டு இனி வாழுமா? பூவோடு காம்பும் சேர்ந்து எரியுதே.. செடி இனி வாழும் என்று சொன்னால்.. உலகம் சிரிக்காதா? நிறுத்து நிறுத்து என்று உலகம் சொல்லட்டுமே.. எங்கள் நிம்மதி தினமும் குண்டு.. அதிர்வில் குலைந்து போனதே-அறியுமா? யார் என்ன சொன்னால் என்ன? தாயை கட்டியணைக்க ஒரு சாத்திரம் தேவையா? சர்வதேசமே!!!!!! போர் நிறுத்து என்று நீ சொன்னாலும்... ஊர் நிறுத்தம் இருக்காது…
-
- 28 replies
- 4.2k views
-
-
கொட்டட்டும் - போர் முரசு கொட்டட்டும் எட்டும் திசை யெட்டும் விடுதலை உணர்வு பொங்கட்டும்! போடட்டும் - குண்டு போடட்டும்...- பின் தமிழ் பெண்ணோடு வீரம் கண்டு - எதிரி மண்ணோடு சாயட்டும்! போடும் வரையும்- யாரும் தடையும் போடட்டும்... தமிழ் மானம் கண்டு-பின் தம் வாயை மூடட்டும் ! எட்டும் வரை எட்டி வெற்றிப் புலிக் கொடி வானை முட்டட்டும் ! இந்தத் தாயினம் செய்திடும் சத்தியம் - நாளை சரித்திரம் சொல்லிடும் தமிழீழம்! (என்று) கொட்டட்டும் - போர் முரசு கொட்டட்டும் எட்டுத் திசை யெங்கும் எதிரி சிதறி ஓடட்டும் இல்லை- சாகட்டும்! இந்தத் தாயினம் செய்திடும் சத்தியம் - நாளை சரித்திரம் சொல்லிடும் தமிழீழம் !
-
- 21 replies
- 3.6k views
-
-
ஏன் கொன்றாய்....??? வீதியலே நின்றவரை வீனாக ஏன் சுட்டாய்....??? என்ன தவறிழைத்தார் என்றவரை நீ கொன்றாய்....??? அட உன் குற்றம் நீ மறைக்க ஊமையதை ஏன் கொன்றாய்...??? அவன் பார்த்து நின்றான் என்றா மா பாவி நீ கொன்றாய்....??? சாட்சியாகி நின்றிடுவான் என்றென்னியா நீ கொன்றாய்....??? பிறப்பினிலே வாய் கட்டி இறைவனவனை தான் படைத்தான்.... மொழிகளதை அறிந்தும் அவன் பேச முடியா அவன் துடித்தான்.... திங்கின்றி கிடந்தவனை தீண்டி வந்து ஏன் கொன்றாய்....??? உன் பீத்தல் நீ மறைக்க அந்த உத்தமனை ஏன் கொன்றாய்....??? என்ன கெடுதல் இழைத்தான் என்று இன்றவனை நீ கொன்…
-
- 0 replies
- 886 views
-
-
''மா வீரர்கள்....'' கார்த்திகை மாதம் கண்ணீர் வடிக்கும் கல்லறை மீது தீபங்கள் ஏற்றும்.... பொன்னவர் உடல்கள் புக்களால் குளிக்கும் தேசமே திரண்டு அஞ்சலி செலுத்தும்... எங்களை காக்கவே தம்மையே அழித்தவர் மண்ணையே காக்கவே மரணத்தை ஏற்றவர்.... தீர செயல் கண்டு நெஞ்சமே விறைக்கும் உணர்வுகள் சிலிர்க்கும்... மெழுகாய் உருகி வழிகள் அழும் அவர் கல்லறையதையே கண்ணீர் கழுவும்... எழுந்தே வந்து என்னை உதைப்பான் அழுகிறாய் ஏனென்று என்னை கேட்பான்... அழுதே என்னை அசிங்கமாக்காய் எழுந்தே போய் களத்தில் நிற்ப்பாய்... அந்நியன் அவனை அடித்தே கலைப்பாய் அன்னை மண்ணை மீட்டே எடுப்பாய்... கல்லறை இருந்து கட்டளை இடுவான் இற…
-
- 2 replies
- 1.1k views
-
-
தாயே நீ உறங்கு...... பார்வதி அம்மாவின் அஞ்சலிக் கவிதை..... தாயே கண்ணுறங்கு..... தமிழர் மானம் காத்த சிசுவைத் தந்தவளே நீயுறங்கு....... உன் ஓரணுவில் தமிழை நிமிர வைத்தவளே நீயுறங்கு..... நீ இறந்தாலும் எம் மனதில் ஒலிக்குதம்மா தாலாட்டு....... நீ இறக்கவில்லை எம் மனதில் பிறக்கின்றாய் இப்போது....... பிற நானூற்றுக கதையெல்லாம் நம் பிடரியில் உறைக்கவில்லை...... நீ பெற்ற வரலாற்றுக் காவியம் தான் தமிழர் மனங்களையே வென்றது....... நீயோர் வீரத்தாய்..... வீரனைப் பெற்றெடுத்தாய்........ வாழ்வைத் துறந்தாலும் உன் வல்வை மண்ணில் விதையாய் விழுந்துவிட்டாய்....... நீ எரிந்து மறைந்தாலும் உன் நினைவு எம்மனதில் என்றும் கொழுந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
நேற்று என் தோழனும் தோழியும் கடத்தப்பட்ட பின்.. காதலர்களாய் மடிந்தனர் இன்று அவர்களுக்காக காதலர் தினம் வேற்று நாட்டில் அவனும் விம்மிய படி அவளும் விதி செய்த சதியால் பிரிந்திருக்க இன்று இவர்களுக்காக காதலர் தினம் கூற்றுகள் தவறியதால் காதல் கும்மாளம் போட்டவரும் குறுகிய காலத்தில் பிரிந்தனர்... இன்று அவர்களுக்காக காதலர் தினம் நாற்றுக்களுக்கு நடுவே நல்லதாய் காதல் செய்தவர் நேற்றிந்த சிங்களன் போட்டகுண்டில் நொடியினில் மடிந்து போயினர் இன்று இவர்களுக்காய் காதலர் தினம் ஏற்று தலைவன் ஆணை அணி வகுத்தார் புலியாய் வாட்டும் பகை கொன்று வந்தார் மீட்டும் காதலது நெஞ்சில் கொண்டார் கொள்கையால் கதலரானார் -இவர் கொள்கைக்காய் மாண்டார்... …
-
- 2 replies
- 1.1k views
-
-
நண்பர்களே! தமிழீழ தேசிய கீதத்தை எழுதும் போட்டியொன்றை விடுதலைப்புலிகள் அறிவித்திருந்தமை நீங்கள் அறிந்திருக்கக் கூடியதே. இது வரை அப்படி ஒரு தேசிய கீதம் இயற்றப்பட்டதாகவோ யாரும் பரிசு பெற்றதாகவோ நான் அறியவில்லை. இங்கு கவி வடிக்கும் பல கவிஞர்களின் திறமையையும் கண்டு வியந்த நான் ஏன் நீங்கள் அதற்கு முயற்சி செய்யக்கூடாது என்று கேட்கிறேன்? தமிழீழ தேசிய கீதம் மிக எளிமையான சொற்களால் ஆனதாக இருக்கவேண்டும். ஆக, இது வரை நாம் அறிந்த இலகுவான தமிழ்ச் சொற்களின் கோர்வையே தமிழீழ தேசிய கீதமாக மலரப்போகிறது. ஆனால், அது எதைச் சொல்லப்போகிறது, சொல்ல வேண்டும் என்பதே கேள்வி. எனவே, பல்வேறு நாடுகளின் தேசிய கீதங்களையும் தமிழில் சேகரிப்போமென ஒரு முயற்சியைத் தொடங்குகின்றேன். சேகரிக்கப்படும் …
-
- 12 replies
- 4.9k views
-
-
கோழியின் கால்களை பிடித்து தலையை சுவற்றில் ஓங்கி அடித்து பின் சுருக்கில் தொங்கவிட்டு உரித்து குழம்புவைப்பார்கள் அப்படித்தான் அவ்வப்போது ஆட்களையும் அடித்து தொங்கவிடுகின்றார்கள் ஆனால் ஏன் என்று தெரியவில்லை திருவிழாக்களில் பறவைக் காவடிகள் குறைந்துவிட்டதால் கடவுளின் கோபம் என்றும் பேசிக்கொள்கின்றார்கள் கடவுளை குளிப்பாட்டி பவுடர் போட்டு மசாஜ் செய்துவிட்டாலும் கோபம் குறைவதாக தெரியவில்லை கடவுளின் பொண்டாட்டிமார்களுக்கு மேக்கப்செய்து திருக்கலியாணம் நடத்தி முதலிரவுக்கு அனுப்பி வைத்தாலும் கோபம் குறைவதாக தெரியவில்லை கடவுளுக்கும் சரி காவடி தூக்கும் பக்தனுக்கும் சரி கோபம் ஒரு மார்க்கமாகத்தான் எப்போதும் வருகின்றது கண்ணகியம்மன் கோயில்க் கோடி…
-
- 13 replies
- 2.1k views
-
-
கார்த்திகைப் பூவோடு, தீபங்களை உன் கரங்களில் ஏந்தியவாறு வாரீரே... இன்று வருவீர்கள் நாளை வருவீர்கள் என்று பூமியின் வேரில் ஒளியின் அடியில் காத்திருக்கின்றோம் .... என்னை பெற்ற தாயே என் தோழியே,என் உறவுகளே உங்களைக் காண.. கல்லறையில் விழித்தவாறு தினமும் வானத்தைப் பார்க்கின்றேன் என் சிறகுகள் பறிக்கப்பட்டாலும், நாளை நீங்கள் சுகந்திரமாக பறப்பதை காணத்தான் காத்திருக்கின்றேன்... என் கண்களைக் கொள்ளை கொள்ளும் காட்சி ஒன்று தெரிகிறதே... என்ன அழகு என்ன அழகு ஒளி கொண்ட எங்கள் கல்லறைகளில் மேலும் தீப ஒளி ஒளிரட்டும் வாசமுள்ள கல்லறையின் மேல் மேலும் காத்திகை பூவின் நறுமணம் வீசட்டும்.... மரணங்களில் நாங்கள் வாழ்கின்றேம் ஒவ்வொரு ம…
-
- 9 replies
- 1.8k views
-
-
கள உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்தத் திரியில் நான் என்னுடைய சில குறுங்கவிதைகளை( அது கவிதையா இல்லை மொக்கையா என்று நாங்கள்தானே சொல்லணும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. என்ன செய்யுறது எல்லாம் நானும் ஒரு கவிதை எழுதிடவேணும் என்ற ஆர்வக்கோளாறுதான். ) பதியலாம் என்றிருக்கிறேன். நீங்களும் உங்களுடைய குறுங்கவிதைகளைப் பதியுங்கள் (பார்ரா..சேர்ந்து அடிவாங்குறதுக்கு ஆட்கள் சேர்க்கிறான் என்று இன்னும் சிலர் முறைப்பது இப்பவே மனக்கண்ணில் தெரியுது.) எதுநடந்தாலும் நான் பின்வாங்கிறதா இல்லை.(அப்ப என்ன ஆணிவாங்கப்போறியா என்று யாரும் கடந்தநூற்றாண்டில் காலவதியான மொக்கையை போடாதீங்க.) இந்த திரியை நானே தைரியமாக தொடக்கி வைக்கிறேன்.(பயப்படுறது எழுத்தில தெரியலைதானே) அடைத்துச் சா…
-
- 25 replies
- 3.3k views
-
-
வாழும்வரை நேசிப்போம் காதலை மூச்சாய் சுவாசிப்போம் கனவிலே கூட காதலை யோசிப்போம் காதலை கவிதையாய் வாசிப்போம் காதல் மாறாதது என்பது உண்மை. ஆள் மாறினாலும் இல்லாள் மாறினாலும் காதல்மாறுவதில்லை கண்களில் காதல் வைத்து இதயத்தில் காதலியை தைத்து கனவில் காதல் கீதம் இசைத்து காலமெல்லாம் காதலோடு வாழத்துடிக்கும் காதலர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்...
-
- 3 replies
- 1.3k views
-
-
அடித்த மணியோசையும், தபால்காரரும்.... கொடுத்த சந்தோசம், தற்காலிக ஆறுதலாய்... வாசித்து முடிக்கும் வரைக்கும்தான்! அதன்பின்னர்தான்.... தபால்காரரின் புன்னகைகூட, உண்மையான புரிதலென்று புரிந்தது! என் மகனே! அன்றொருநாள் எனக்கென நீயனுப்பிய காசு... இன்னமும் மிச்சமிருக்கு ராசா...!!! என் பேரப்பிள்ளைகளுக்கு... என்ன வேணும் சொல்லு ராசா? வாங்கி அனுப்புறன்... என்னெண்டாலும்!!! எத்தனை நாளைக்கு நானிருப்பேன்... எனக்கே தெரியாது! ஆனால் உன் அக்கா தங்கச்சி பிள்ளைகள் ... அவங்களின் வாரிசுகள், எல்லாமே இங்குதான் சீவிப்பார்கள்... சிந்தியுங்கள்! "தாய்" எனும் நிலையிலிருந்து ... தாய் மண்ணிலிருந்து... என் இறுதி வார்த்தைகள்!!! உன் அப்பா கட்டிய.... எங்கள் வீட்டை வித்துப்போட…
-
- 14 replies
- 1.5k views
-
-
எனக்குள் ஒருத்தி அரபி மூலம்: நிசார் கப்பானி தமிழில்: அ. ஜாகிர் ஹுசைன் எனது கோப்பையை வாசிப்பவர்கள் நீதான் என் காதலி என்பதைப் புரிந்துகொள்வார்கள் எனது கைரேகையைப் படிப்பவர்கள் உனது பெயரின் நான்கு எழுத்துக்களையும் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள் காதலியின் வாசனையைத் தவிர எல்லாவற்றையும் நாம் பொய்யாக்கிவிடலாம் நமக்குள் நடமாடும் காதலியின் அசைவுகளைத் தவிர எல்லாவற்றையும் நாம் மறைத்துவிடலாம் உன் காதலியின் பெண்மையைத் தவிர எல்லாவற்றையும் நீ விவாதப் பொருளாக ஆக்கலாம் காதலியே! உன்னை நான் எங்கே மறைத்துவைப்பேன்? நாம் இருவரும்…
-
- 0 replies
- 1.8k views
-
-
நேசிப்பின் நிலாவரையல்ல நெருப்பின் உலாமுகமே நிகழ்காலத்தேவை. கொடுங்குலத்தின் கூர்ப்புடைக்கும் மடுத்தலத்தின் மத்தியிலே தடுத்தாட் கொள்ள என்று தமிழருக்கு இருந்த தாய் அடங்காச் சினங் கொண்ட அநியாயச் சிங்களத்தின் நெடுங்காலத் திட்டமதில் மடுத்தல மாதாவும் இப்போது இடப்பெயர்வு அகதி பரம்பொருளே!.... தடுத்தாட் கொள்ள யார் உள்ளர் உலகில்? இருதயநாதரும் இராணுவ ஷெல்வீச்சில் சிதைவுற்று போனாராம். சீர்தூக்கி இறைமகனை காக்க ஒரு கையின்றி, கட்டிட சிதைவுக்குள் கருணைக்கடல் நிற்கிறாராம் கண்கொண்டு பார்த்து கனக்கும் இதயமெங்கே? ஆருக்கும் எம்மினம் அவதியைக் கொடுக்கவில்லை ஆனால் போர் வித்தை கற்கவரும் வல்லாண்மைகளின் மானுட நேசிப்பு எம் மண்ணைக் குதறுகிறது மானுட ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஓடுகின்ற கால்கள் ஓய்வெடுக்கும் போது நான் எடுத்துக்கொண்ட பயணம் முடிந்திருக்க வேண்டும்! வாழ்ந்த நாட்களை திரும்பிப் பார்க்கும் போது என் பெயரை சிலர் உச்சரிக்க வேண்டும்! கோபுரங்களின் அழகை அத்திவாரங்கள் தாங்குவது போல் நான் பிறந்ததின் பயனை ஊரறியச் செய்வேன்
-
- 20 replies
- 1.7k views
-
-
சிலமாதங்களுக்கு முன்னர் எழுதிய ஹைக்கூ பதிவு காட்டில் நிலாவான கதை தனிக்கதை! ஆனாலும் ஆசை யாரை விட்டது. கவிதை வடிவங்களில் ஓரளவுக்கேனும் சுமாராக எழுதுவேன் என்று நம்புவது இந்த ஹைக்கூவை தான். கேதாவின் National Geographic website இல் வந்த படத்தை பார்த்தவுடன் இதற்கு பொருத்தமான கவிதை ஒன்று எழுதவேண்டும் என்று தோன்றியது. இந்த படத்தின் மூடுக்கு வெண்பாவோ, ஐந்து வரி புதுக்கவிதையோ குழப்பிவிடும்! ஹைக்கூ தான் சரிவரும் என்று தோன்றியது. ஹைக்கூ. ஜப்பானிய கவிதை வடிவம். அதற்கென்று ஒரு வரையறை இருக்கிறது. The essence of haiku is "cutting". This is often represented by the juxtaposition of two images or ideas and a cutting word between them, a kind of verbal punctuation mark which signals …
-
- 348 replies
- 30.5k views
-
-
[size=3] நாட்கள் வாரங்களாய் மாதங்கள் வருடங்களாய் கடந்து கொண்டு இருக்கிறது[/size] [size=3] அறிவியல் யுகத்தில் மனிதனின் சாம்ராஜ்ஜியம் கணினியும் செல்போனும் சட்டைப் பையில் சங்கமிக்கின்றன பெண்களை பற்றிய மதிப்பீடுகளோ குப்பைத் தொட்டியில்[/size][size=3] [/size][size=3] கணவன் சின்ன வீட்டிற்கு சென்ற போது கண்டுகொள்ளாத கண்ணகி பரத்தையர் வீட்டிற்கு கணவனைத் தூக்கி சென்ற நளாயினி நெருப்பில் குதித்து- கற்பை நிலை நிறுத்திய சீதாப்பிராட்டி இவர்கள் தான் பெண் குலத்துக்கு தெய்வங்களாம். சீச்சீ….வெட்கக்கேடு[/size][size=3] வாருங்கள் ஆண்களே அன்பைப் பகிர்ந்து கொள்வோம் புதியதோர் உலகம் செய்ய இருவரும் இணைந்தே செயல்படுவோம் இதில் ஏது ஏற்றத்தாழ்வு?[/s…
-
- 0 replies
- 723 views
-