Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by கவிதை,

    காதலை வரமாகக் கொடுத்தான் இறைவன் ! அதனை சாபமாக மாற்றிக்கொண்டான் மனிதன் !! காதல் எப்பொழுதும் தோற்பதில்லை ! காதலர்கள்தான் தாமே தோற்றுப்போகிறார்கள் !! காதலைக் காதலியுங்கள்...! காதலும் உங்களைக் காதலிக்கும்...!! வாழும் வாழ்வினை இனிதாய் வாழவைக்கும்...!!! அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

  2. சாம்பலாக்கப்பட்ட நிலத்தின் நடுவிலிருக்கிற சிதைக்கப்பட்ட நகரம் ‐ தீபச்செல்வன்: :தீபச்செல்வன் 01 மாடுகள் அலைந்து திரிந்து கண்ணிவெடிகளையும் மண்ணையும் மேய்ந்து கொண்டு சாணியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக நகரத்திற்கு வேறு பக்கம் திரும்புகின்றன. எரிந்து கருகிப்போயிருக்கிறது சனங்களின் நிலம். அழிந்து சமதரையாகிப்போன வெளியில் பேய்கள் வாழ்ந்து திரிகிறது. நிலம் எரிந்து சாம்பல் பூத்திருக்க தலைகள் பிடுங்கப்பட்ட மரங்கள் மண்ணில் குத்துண்டு நிற்கின்றன. தலையிழந்த பனைகளால் மிகுந்த வெளியில் நோடட்மிடுகிற காவலரண்களை சுமந்து நிற்கிறது வேர் பட்ட பனங்குத்திகள். உப்பு விழைந்த வாடிகளில் இல்லாத சனங்களின் குருதியும் துயரும் சேர்ந்து விளைந்து…

  3. Started by pakee,

    எதையும் தாங்கும் இதயம் எனக்குள் இருக்கிறதென நீண்ட காலமாய் நினைத்துக் கொண்டிருந்தேன் உண்மை அதுவல்ல என்று உண்மையைச் சொன்னது உனது பிரிவு!...

    • 2 replies
    • 1.1k views
  4. சுதந்திரக் காற்று பரவட்டும்

    • 0 replies
    • 1.1k views
  5. கடைசியாக எப்போது மழையை இரசித்தேன்? நினைவில்லை. கருநிறக் காளானென தெருவெங்கும் ஆங்காங்கே முளைத்திருக்கும் குடைகளின் விளிம்புகளிலிருந்து வெண்பனித் துகள்களாய்.. சரம் சரமாய்.. மழைநீர் கோர்த்துத் தொங்குவதை, தார்ச்சாலைகளில் விழுந்து தெறிப்பதை கடைசியாக எப்போது விழிவிரியப் பார்த்திருந்தேன்? அதுவும் நினைவில்லை. இன்றும் மழைபெய்தது. உச்சந்தலையில் தென்னைமரக் கொண்டையிட்டலைந்து, வீட்டுமுற்றத்தில் தேங்கி நிற்கும் மழைநீரில் காகிதப் படகு விடவென கொப்பித்தாள்களைக் கிழித்து அம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட நாட்களில் பெய்த அதே மழை.., மறுபடியும் இன்று. இப்போதெல்லாம்.., என் கண்களுக்கு எதுவுமே தெரிவதில்லை எதிர்ப்படும் மனிதர்கள், தெருவில் கடந்து போ…

    • 3 replies
    • 1.1k views
  6. எப்போதும் நான் ஜன்னல் ஒன்றை தூக்கிக்கொண்டு பயணிக்கின்றேன் அவ்வப்போது கம்பிகளினூடாக காலைக் கருக்கலையும் பொழுதுபடுதலையும் பார்ப்பேன் போறவாற ஆக்களையும் பார்ப்பேன் கம்பிகளினூடாக பர்க்கும் பேதே என்னால் எதையும் எவரையும் புரிந்துகொள்ள முடிகின்றது போற போற இடங்களில் தற்காலிக வீடுகளிலெல்லாம் இருக்கும் ஜன்னலோடு என்ர ஜன்னலையும் பிணைத்துவிடுவேன் வேற ஆட்கள் செய்த ஜன்னலால் பார்த்த மாதிரி இருக்காது ஊரில் தொலைத்த வீடுகள் வளவுகள் உறவுகள் தென்னைமரங்கள் அவை எல்லாம் இல்லாத குறையின்றி ஜன்னல் என்னை பாதுகாக்கின்றது. என் ஜன்னலால் பார்க்கும் போது coniferous மரங்களும் பனைக் கூடல்களாக தெரியும் நான் ஒரு நாடோடி ஆனால் …

    • 8 replies
    • 1.1k views
  7. மௌனங்கள் பேசட்டும் அன்பே நீ பூமியில் அவதரித்த நேரம் நிசப்த நேரமா??? அதனால் தானோ என்னவோ நீ உன் மொழியாக மௌனத்தை தேர்ந்தெடுத்துள்ளாய் போதும் உன் மௌனம் பிறப்பில் இருந்து நீ மௌனமாய் இருந்தது பேசிவிடு உன் மௌனத்தை கலைத்து விட்டு என்னுடன்... உன் மௌனங்கள் பேசும் என்ற நம்பிக்கையில் நான்...

  8. டெங்குவே உன்னைச்சுற்றி நாளும் நாளும் உயிர்களை பறித்து கோர ஆட்டம் போடும் டெங்குவே! உன் கொட்டத்தை அடக்கி, மக்கள் உயிரைக் காத்திட மனிதரில்லை. உன்னை வைத்து அரசியல் நடத்த ஆயிரம் பேர் கிளம்பியுள்ளார்கள். கேட்க யாருமில்லை என்பதால் நீயும் ஆவேசமாய் உயிர்களை பறித்தெடுக்கும் வெறியாட்டத்தை தொடர்கிறாய். ஆயிரம் கேள்விகள்,குற்றச்சாட்டுகளை மாறி மாறி எதிர் எதிராக தொடுத்து, அட்டகாசம் புரியும் கேடு கெட்ட மனிதர்களால் நாளும் நாளும் வேதனைக்குள் தத்தளிக்கும் மக்களை காத்திட யார் வருவார். உன்னிடமிருந்து மக்களை காத்திட எவருமே உள்ளத்தால் நினைக்கவில்லை. உன்னை வைத்து தமக்கு இலாபம் ஈட்ட எண்ணில்லாதோர் முளைத்துவிட்டார்கள். மருத்துவமனைக்கு செல்லல்,ஆறுதல் கூறல் …

    • 6 replies
    • 1.1k views
  9. பத்துபொருத்தம் பார்த்து பத்தும் பொருந்தி இருக்கும் யார் என்று கூட தெரியாத என் பெற்றோர் பார்த்த மணமகள் ஒருபக்கம் பத்து பொருத்தம் வேண்டாம் நீ மட்டும் போதும் என்று சொல்லும் பத்து வித்தியாசங்களை எம்மிடையே கொண்ட நீ மறுபக்கம் இப்போது நான் என்ன செய்ய...

    • 0 replies
    • 1.1k views
  10. Started by priyasaki,

    மறந்து விடவா? தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்

  11. எட்டடா தூரமில்லை - இனி முட்டுமெம் கைகள் வானை தட்டடா கைகள் சேர்த்து - எங்கள் வானிலே கொடியை ஏற்று தொட்டிடலாமோ பகைவர்- உயிர் தாயவள் மண்ணை யென்றும் முட்டவா வந்தான் மூடன் - வேங்கை மூச்சினால் அழிந்து போவான். கொட்டடா முரசு - எட்டு திக்கிலும் சேதி சொல்வோம் உருண்டிடும் உலகப் பந்தை ஒருமுறை நிற்கச் சொல்வோம். கட்டிலாப் புலமை பெற்ற - உலக கவிகளை கூட்டி வந்து மட்டிலாத் தீரம் செய்தான் - எங்கள் தலைவனைப் பாடச் சொல்வோம். பற்றினை விட்டு வந்தார் - புதுப் பரணிக்கு வழி சமைத்தார். இட்டிடும் தலைவன் ஆணை முடித்துயிர் தந்து போனார். பெற்ற…

  12. குருவிகளுக்கு கிடைத்த ஒரு தென்னிந்திய திரை இசை மெட்டில் அமைந்த றீமிக்ஸ் வடிவில் வெளிவந்த தாயகப்பாடல் ஒன்றை குருவிகளின் ஒலிப் பெட்டகத்தில் இருந்து கேட்டு மகிழுங்கள்..! இணைப்புக் குறித்த உங்கள் அபிப்பிராயங்களையும் எழுதுங்கள்...! பொப் அப் புளக்கர் உள்ளவர்கள் அதை தற்காலிகமாக நீக்கிக் கேளுங்கள்..! http://www.jukeboxalive.com/player/player....967&method=play

  13. Started by kavi_ruban,

    எத்தனை அழகாய் சிரித்துவிட்டுப் போகின்றாய் நீ... இங்கே ஒருவன் சிறைப்பட்டதை அறியாமல்....! உந்தன் நினைவுச் சிலந்தியில் சிக்கிய என்னைக் கொஞ்சம் விடுவி... இரவுகளோடு நான் படும் அவஸ்தை போதும்! சிரிப்பில் கூட போதை இருப்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது! "களுக்" என நீ சிரிக்கின்றபோது மனசுக்குள் எங்கோ உளுக்கிக் கொள்கிறது! புன்னகை கூட இத்தனை அற்புதமாய் இருக்கும் என்று நான் அறிந்ததில்லை மயில்பீலியாற் மனதை வருடுகின்ற மகா சுகம் "ரெடிமேட்" சிரிப்பை உதடுகளில் ஒட்டவைத்துக் கொள்பவர்களும் உண்டு அதற்கு ஒரு சாமர்த்தியம் வேண்டும் நீ, எல்லாம் கடந்து புன்னகையால் உதடுகளில் புதுக்கவிதை எழுதுபவள்…

  14. ஆரிடம் முறையிடுவோம்? ஆரிடம் முறையிடுவோம்? எவரை நம்புவோம்? அவனியிலே எம்மை அணைத்திட யாருளர்? போரியல் வாழ்வினைப் பழக்கத்திற் கொண்டோம் புதியவை யல்லஇத் துன்பங்கள் எமக்கு சூரியத் தலைவனங்கு எதிர்வு கூறுகின்றான் சாற்றும் நூறாண்டு நூறாண்டு காலம் நேரிய பாதையிற் பதிலடி கொடுத்திட நேரம் வந்ததெனத் திடமுரைக் கின்றான் மனிதநேயப் பணியாளர் தாமங்கு செயலாற்ற மிக்கவே அச்சுறுத்தல் நிறையிழி நாடென மனிதவுரிமை அமைப்பொடு ஐ நா சபையினரும் மட்டிலாக் கண்டனம் மனதாரக் கூறுகிறார். நனிவுயர் எம்மக்கள் நாடோறும் மடிதல் நன்றாக அறிந்துமிவர் எதுவுமே செய்திலர் கனியமுத வார்த்தையிற் சிங்களர் அவரைக் கட்டுக்குள் வீழ்த்தித் தம்பக்கம் சாய்க்கின்றார் அறிக்கைகள் விடுகி…

  15. நான் பூலோக கன்னியை பார்த்ததும் இல்லை தேவலோக தேவதையை கண்டதும் இல்லை இறம்பை ஊர்வசியை பார்த்ததும் இல்லை உன்னை பார்த்தேன் பெண்ணே நீதான் அந்த தேவதையோ? பிரம்மன் செதுக்கிய சிற்பமும் நீதானோ? விசுவாமித்திரனின் தவத்தை குலைத்தவளும் நீதானோ? இந்திரனை மயக்கிய மோகினியும் நீதானோ? மதுரை மீனாச்சி அம்மனும் நீதானோ? நெல்லை காந்திமதி தேவியும் நீதானோ? தஞ்சாவூர் சிற்பமும் நீதானோ பெண்ணே? என்னை நீயும் ஏன் நாடி வந்தாய்? என் இதயத்தை திருடவா நீயும் வாந்தாய்? வேண்டாம் பெண்ணே நீயும் என்னை விட்டுவிடு!!!

  16. Started by வினித்,

    தீபம் பத்தும் அறியாத பருவகாலவயது அது.. கார்மேகம் கண்ட மயிலாய் காதல்தீபம் ஏற்றினாள் அவள் கயல்விழிகளால் காலம் கடந்தபின்னும் பிரகாசமான ஒளியுடன் சுடர்விடுவது - என் இதயத்தில் மட்டும் அல்ல எங்கே.. நெஞ்சில் கைவைத்துக் கூறுங்கள் அந்தப் பருவகாலம் மயிலிறகாய் வருடிய நினைவுகளாக உங்கள் இதயத்தில் இல்லை என்று ??? நேசமுடன்.. -நித்தியா ஒலிவடிவில்..

  17. உறவின் வாசனை உன்னால் தானடா உணர்வில் இன்னும் மாலைநேரத்து வெயிலில் காய்ந்து வழியும் இலுப்படி நிழல் உனது அமைதியின் இருப்பிடம் அங்கே தான் நீ அதிக நேரத்தைச் செலவிடுவாய் அங்கே தான் நாங்களிருவரும் அறிமுகமாகினோம். சோளகம் உருவிப்போகும் இலுப்பம் இலைகளின் உதிர்வில் வசந்தத்தின் வரவைப் புதுப்பித்துக் கதைகள் சொல்வாய் உதிர்ந்து காயும் இலுப்பம் இலைகளின் மறைவிலிருந்து துளிர்க்கும் குருத்துகளின் உயிர்ப்பைக் காட்டித் தைரியம் தந்தாய் தலைநிமிரச் செய்தாய். விடியலைக் காணவிடாத சமூகச்சாவியை உடைத்துவரும் வீரத்தையூட்டினாய் விழியுடைந்துருகிக் கன்னம் தொடும் நீர் துடைக்கும் தோழமை விரலாய் வெற்றியைக் காட்டினாய்....! அந்தக் குழந்தைக் காலத்த…

  18. ஏன் வந்தாய்? ஊரென்ன பார்க்க வந்தாயா? உன் உறவுக்கு சொல்லி வந்தாயா? சோரம் போகா வன்னி மண் தீரம் தெரியாமல் வந்தாயா? தீயவனே ஆவி ஒடுங்கி-உன் உடல் ஊர்போகும் நாள்தெரிய வந்தாயா? பண்டார வண்ணியனின் பரம்பரை பிறந்த மண்ணில் சிங்கம் புணர்ந்து பிறந்த வம்சத்தின் சிறு நரிக்கென்னவேலை? வணங்கா மண் வன்னியின் வரலாறு தெரியாமல்-மூடனே களங்காணா உன் அமச்சரின் கதை கேட்டு வந்தாயோ? அகங்காரம் தலைக்கேற ஆணவம் மிகக்கொண்டு இளக்காரம் என எண்னி தமிழய்ச்சியின் வளைய்க்கரம் சீண்டிப்பார்க்க வன்னிக்கு வந்தாயோ? வளைக்கரம் வலிமை கொண்ட வண்ணிமண் எங்களது இங்கே கொலைக்களம் உனக்காக கொடியவனே நாளை எண்ணு அடங்காப்பெருவீரம் பிறப்பெடுத்து ஆர்ப்பரிக்கும் …

  19. இதைப் பார்க்கும்போது வன்னியில் வாடிக்கொண்டிருக்கும் எம் குழந்தைகளின் நினைவுகள் வந்துபோயின...பின் ஒருகணம் வெளிநாட்டில் எம் உறவுகளின் பிள்ளைகளையும் நினைத்தேன்...கண்ணீர்களுக்குள் என்னால் கவிதைகளை தேடிக்கண்டுபிடிக்க இயலவில்லை..ஆற்றாமையில் மனம் துடிக்கிறது... இந்தப்படம் உங்கள் மனங்களுக்குள் தூண்டிவிடும் உணர்வுகளை கவிதை ஆக்குங்கள்...

  20. மரண அடி விழுந்தவுடன் ஒழிந்தானே பகைவன்-அங்கு கரணம் இட்டு புகை எழவே புலம்பி நின்றான் மகிந்தன் இரணை மடுவில் குண்டெறிந்து தேடுகிறார் எலிகள்-இனி சரணம் சொல்லி கதை முடிப்பார் சீறிவரும் புலிகள் விடுதலைக்கு வானோடும் அது தாயகத்தின் அடிப்படை-அதை தடுப்பார் எவருண்டு அது தலைவனுக்கே வெளிப்படை கொடுப்பார் பல வெற்றிகளை தமிழீழ வான்படை-அவர் விடுப்பாரே போர்முரசம் எதிரியின் உயிர்பறித்து ஒப்படை உலகமெல்லாம் போற்றிடவே புவியாளும் புலிப்படை-நாம் கலக்கமின்றி வாழ்ந்திடலாம் தலைவன் மனம் தங்கம் எடை மறத்தமிழா நுகர்ந்திடுவாய் தாய்மண்ணின் நல் வாடை-அதை மறந்தால் நீ பிணந்தானே உன் மேனிக்கு ஏன் ஆடை ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த திருநாடு-இது வேண்டாத பேருக்கும் வாழ்வளித்த சி…

    • 2 replies
    • 1.1k views
  21. உறவுகட்காய் சிலதுளிகள் மண்மீட்புப் பணியினிலே மாவீரர் ஆகிவிட்ட மாண்புகளை எமக்களித்த மகத்தான பெரியவர்க்காய் எம் மண்ணின் நினைவுடனே எங்கெங்கோ வாழ்ந்திருக்கும் எம்களத்து உறவிடத்தில் என்னுடைய விண்ணப்பம் http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=208806#208806

    • 1 reply
    • 1.1k views
  22. என் அன்னை கலைப்பொழுதினிலே என் கடமை முடிக்க முன்னே சேலைத்தலைப்பை தூக்கிச்சொருகி பின்னே வேலைப்பழுவை தன் தோளில் சுமந்து மூலை முடுக்கெல்லாம் தேய்த்துக்கழுவி பாலைக்காய்ச்சி பதம் பார்த்துச்சமைத்து- பாட சாலைக்குச்செல்லும் தன் சேய்க்கு- வாழை இலையில் வதக்கிய கறியுடன் சாதம் இட்டு சாலைவரை தன் கரம்பற்றி வழியனுப்பி- பின்னே காலை விரைந்து வைத்து கடைவீதி சென்று வந்து மாலை வருமுன்னே மதியமும் உண்ணாது நூலைப்போல் இழைத்து என் முகம் காண ஓலைவேலிக்குள் ஒளிந்திருப்பாள் என் அன்னை.

  23. [size=2][/size] நான் காதலெனும் தடாகத்தில் தகுதியின்மை கண்டு தரையில் விடப்பட்ட ஒற்றை மீன் உனது நீதிமன்று குற்றப்பத்திரிகையே இல்லாமல் மரணதண்டனை விதித்தது எனக்கு. இலங்கையின் இன்றைய சிறைகளைப்போலவே காரணமில்லாமல் நம் உறவில் கத்திரி போட்டவளே சொல் என்ன குற்றம் கண்டாய் என் அன்பின் ஆழத்தில். அடியேய் மரியான ஆழி உன் மனதிடம் மடிப்பிச்சை கேட்க வேண்டும். வைரமானவற்றை வைரத்தால் அறுப்பார்களாம் வைரத்தை தோழி உன்னால்தான் அறுக்க முடியும். ஏய் உழவன் மகளே என் நெஞ்சில் வேதனையை விதைத்தவளே வந்து பார் விளைச்சலை அற்புதமாய் இருக்கிறது. நீ கனவுகளை அடைமானம் வாங்கி கவிதைகள் தரும் அடைவுக்காறி. வ…

  24. Started by வர்ணன்,

    சஹாராவில் பூக்களா? பாலைவனத்தில் ... பா(ழ்) ல் பண்ணை ...? நிறுவ முடியுமா? முடிந்தாலும் ... பச்சை வயலை எரித்துவிட்டு,,,, பாலைவனத்தில்... பன்னீர் மழையா? வீணே போகுமே!! சூரியனுக்கு... கறுப்படிக்க நினைக்கிறானாம்.!. முடிந்தாலும்........(???) சுற்றி வர - இருட்டாகுமே ... கவலையில்லையா?! (யாருக்கோ)

  25. யாழில் 'கவிதை சீசன்' என்பதால், 'பணம்' திரைப்படத்தில் என்.எஸ்.கிருஸ்ணன் பாடிய பாடலை வருத்தம் கலந்த கற்பனையோடு என்னால் முடிந்த வரையில் 'உல்டா' செய்துள்ளேன்! எங்கே தேடுவேன்...? எங்கே தேடுவேன்...? எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்? ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? சீனம் செழிக்க உதவிய மக்களை எங்கே தேடுவேன்? சீனம் செழிக்க உதவிய மக்களை எங்கே தேடுவேன்? அலாஸ்கா முதல் ஒஸாகா வரை ஆசைப்படும் ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? அலாஸ்கா முதல் ஒஸாகா வரை ஆசைப்படும் ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? கருப்பு காட்டில் கலங்குகின்றாயோ? வஞ்சகன் கையிலே சிக்கிக் கொண்டாயோ? கருப்பு காட்டில் கலங்குகின்றாயோ? வஞ்சகன் கையிலே சிக்கிக் கொண்டாயோ? காற்று வீச சுத்திக் கிற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.