Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by Thulasi_ca,

    எச்சரிக்கை துன்பம் மனித வாழ்வில் ஓர் பக்கம் துன்பம் ஈழத்தமிழன் வாழ்வின் முழுப்பக்கம் அன்னையை அழிப்பினும் வேட்டுக்கள் தாலாட்ட வளர்ந்திவோம் பள்ளிக்கு குண்டு போட்டினும் பதுங்கு குழியில்ப் படித்திடுவோம் பட்டினி நீர் போட்டினும் பசியுடனே படித்திடுவோம் குண்டு நீர் போட்டினும் குப்பி விளக்கில் படித்திடுவோம் புத்தகம் நீர் அனுப்பாவிடினும் நம் தமிழ்ப் பண்டிதரிடம் படித்திடுவோம் வெட்டுப் புள்ளி அதிகரிப்பினும் வீறுடனே படித்திடுவோம் வேலை வாய்ப்பு அளிக்கா விட்டால் வேளாண்மையுடன் பிழைத்திடுவோம் மலையே நீர் போட்டாலும் மாய்ந்து நாம் மடிய மாட்டோம் துளசி

    • 3 replies
    • 1.4k views
  2. களத்துக்கு புதிதாக வந்திருக்கும் பிரம்மம் இணைத்திருக்கும் இணையத்தளங்களுக்குள் உலா வந்த போது சமுதாயத்தைச் சாடிய ஒரு பாடல் அடிக்கடி என் மனதில் ஞாபகம் வந்தது. அந்தப் பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்களேன். http://www.myspace.com/sujeethgs அதுசரி பிரம்மத்திடம் ஒரு கேள்வி நீர் தான் சுஜித்ஜியா? அல்லது உங்களுக்கு வேண்டப்பட்டவரா?

  3. பெண் மலர் தான் மலிவல்ல...?! பெண் மலர் தான் மலிவல்ல... சில்லறை வண்டுகள் ரீங்காரமிடும்போது , சில்லிட்டு உறையாமல் சிக்காமல் மீண்டு எழுந்தால்; பெண் மலர் தான் மலிவல்ல...! ஆப்பிள் தேவதைகள் தான் ... அழுகிப் போகாமல் காக்கும் வரை; சாக்லேட் தேவதைகள் தான் ... சாக்கடையில் நழுவாமல் தன்னைத் தானே காக்கும் வரை; பெண் மலர் தான் மலிவல்ல! ஆதாமின் முதுகெலும்பு ஏவாள் என்றால்... ஏவல்களில் தேய்ந்து போன பெண்ணியத்தின் முதுகெலும்பில் விரிசல்களை எண்ணக்கூட வராதொழிக்கும் ஆதாமை சட்டை செய்யாது விட்டு விடுதலையாகி சிட்டுப் போல் சிறகு விரித்து பறந்து திரிந்து ஊரில் பல…

    • 3 replies
    • 1.2k views
  4. TODAY IS MY LOVELY MOTHER'S 95TH BIRTH DAY. MISSING YOU AMMA. மறக்க வில்லை அம்மா நான் வண்டி இன்னும் வரவில்லை. மாறவும் இல்லை அம்மா நான் வளமைபோல் பயணக் காசோடு வாசலில் வந்து காத்திரம்மா 1 அம்மா * போர் நாட்களிலும் கதவடையா நம் காட்டுவழி வீட்டின் வனதேவதையே வாழிய அம்மா. உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து அன்றுநான் நாட்டிய விதைகள் வானளாவத் தோகை விரித்த முன்றிலில் நின்று எனை நினைத்தாயா தும்மினேன் அம்மா. அன்றி என்னை வடதுருவத்தில் மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ? அம்மா அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள் நம் முற்றத்து மரங்களில் மீண்டு வந்து பாடுதாம் உண்மையா? தம்பி எழுதினான். வலியது அம்மா நம்மண். கொலை பாதகரின் …

    • 3 replies
    • 948 views
  5. அழியா வரம் பெற்ற ஆதவன்கள் எழுதியவர்: த.சரிஷ் விடுதலை நெருப்புக்கு நெய்சேர்த்து சென்றுவிட்டது ஒரு நெருப்புக்குழந்தை...! ஈழத்தின் ஒவ்வொரு ழூலை முடுக்கிலும் விடுதலை நெருப்பை விதைத்துவிட்டு மெல்ல அணைந்துவிட்டது அந்த நெருப்பு...! இந்த நெருப்புப்பந்தின் வெளிச்சம் மெல்ல அணைந்தாலும் வெப்பம் இன்னும் அடங்கவில்லை...! தமிழீழத்தில் புறப்பெடுக்கும் கடைசிக்குழந்தையின் காலம்வரை கட்டாயம் அடங்காமல் இருக்கும் இந்த வெப்பம்...! ஒரு வழிகாட்டி புறக்கப்போகும் பிஞ்சுக்கும் பாடமாகிவிடுகிறான்...! மானிடகுலத்தின் கடைசிக்காலம்வரை செல்லும் வாழ்க்கைப்பயணத்தில் எதிர்பாராமல் இடைக்கிடையே இனம்தெரியாத இடிமின்…

  6. Started by vaithegi,

    சபதம் பாராளுமன்றங்களே................ பாராமுகமேனோ?????? உதவாமல் நீரிருந்தால், எம் உணர்வென்ன மடிந்துபோகுமோ? கையிழந்து காலிழந்து தலையிழந்து உடல் சிதறி உயிரிழந்த போதும் உணர்விழந்து உரிமையிழந்து, சிங்களவன் அடிபணிந்து வாழமாட்டோம் சபதமிது.....

    • 3 replies
    • 1.2k views
  7. [size=5]ஆசைப்படும் பட்டாம் பூச்சி கையில் இருக்கும் போதே ரசிக்கணும் -[/size][size=1] [size=5]அது பறந்த பின்பு வெறுமை மட்டும் உன் கையில் இருக்கும் ...[/size][/size] [size=1] [size=5] ...::: ராஜீவ் :::...[/size][/size]

  8. என்னருமைத் தமிழகமே ஏனிந்த தடுமாற்றம் ? என்னருமை உடன்பிறப்புக்கள் ஏதிலியாய் உங்கள் மண்ணில் ஓடோடி வருவதுவும் ஒன்றும் புதிதல்லவே .. உங்களுக்கு ! எத்தனை காலத்துக்கு எங்களின மக்களுக்கு அகதி என்ற முத்திரையும் அரிசி .. இத்தியாதிகளை கொடுப்பதாகத் திட்டம் .. என்று கொதித்துப் போனேன் .. நேற்றுவரை ஆனால் .. இன்று உங்கள் நடவடிக்கை ! இடியேறு கேட்ட நாகமானேன் ! என்காதை வந்தடைந்தால் .. எப்படி .. எழுதாமல் இருப்பேன் ? ஈழமண்ணின் விடுதலைக்கு இந்தியாவால் முடியாதென்றால் .. உதவத்தான் முடியலைன்றாலும் உபத்திரவம் தான் கொடுப்பதுமேன் ?

  9. வெறிச்சோடிப் போயிருந்த அந்த வெற்றுலகத்தில்... அன்புக்கான ஏக்கம் மட்டும் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது! அந்த மண்டலத்தை என்னவென்று அழைப்பது? மனிதம் வாழும் கூடு என்றா? முதிர்ந்த குழந்தைகளின் கோவில் என்றா? பெற்றவருக்காக பிள்ளைகள் கட்டியமைத்த தனிக்குடித்தன கொட்டகை என்றா? புறக்கணிக்கப்பட்ட புண்பட்ட நெஞ்சங்களின் சரணாலயம் என்றா? அங்கே... நடக்கவே முடியாமல், நான்குச் சக்கர வண்டியில் நகர்ந்துக்கொண்டிருந்தால் ஒருத்தி! தடுக்கி விழுவோமா என்ற அச்சத்தில் தாங்கிப் பிடிக்க நாதியற்று, தடியோடு தள்ளாடிக்கொண்டிருந்தார் ஒருவர்! இவர்களைப் போலவே.. அங்கே.. அறுபதுக்கும் மேற்பட்டவர்கள்... கூண்டுக்கிளிகளாகவும், குற்றவாளிகளாகவும்.. நன்றியில்லா நாய்களை சேய்களாய் ஈன்றெடுத்த தவறைத் தவிர, வேறேத…

  10. உயிர்க்கூடு அதிர்கிறது உணர்வுகள் அழுகிறது இமை மடல் சிவக்கிறது கண்ணீர்ச்சுரப்பி வற்றி இரத்தம் கசிகிறது சாவுச்செய்திகளை கேட்டுக் கேட்டே காது என்புகள் அறுந்து போகிறது ஈழ மண்ணில் இரத்த ஆறு ஓடுகிறது சவக்குழிகள் நிறைகிறது நடுவீதியில் இறங்கி பதாகை சுமந்து உரத்து கத்தி ஒரு பயனுமில்லை நடு வீதியில் உச்சி வெயிலில் நின்று உரிமைக்காய் உரத்து கத்தியவரி;ன் உயிர் மூச்சு பட்ட பகலில் பறிக்கப்பட்டுள்ளது இலங்கைத்தீவு ஜனநாயக போர்வையுடன் கண் காதுகளை இறுக மூடிய சர்வதேசம் குருட்டு மனித உரிமை பேசுகிறது கதிர வெளியில் காட்டு மிராண்டிகள் தின்று குவித்த உறவுகளுக்காய் நீதி கேட்டவன் உயிரிழந்து கிடக…

    • 3 replies
    • 959 views
  11. அர்த்தமற்ற விடியலிற்காய்..... மித்திரன் ----------------------------------------- தூரத்து விடியலுக்கய் இன்னமும் நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம் பாதையற்று... குந்தியிருக்க குடிநிலமின்றி கூப்பாடுபோடும் மந்தைக்கூட்டமாய் தொலைந்துபோனதாக நாம் நினைத்த நிம்மதியும் நிலவொளியும்..... கட்டிய கோவணமும் உருவ உனக்கு நாள் குறித்த பின்னர் எதற்கு அலங்காரமும் அபிசேகமும்... விதைநிலங்கள் எங்கும் விஷங்களின் விதைகள் இனி உனக்கெதற்கு விளைநிலங்கள்? உறவிழந்தபோதும் உன் விண்ணப்பங்கள் விடையறியாமலே விழுதொடிந்து போகிறது..... எனினும் உன்னுள் உறங்கிக் கிடக்கிறது விடுதலையின் வினாத்துளி..... தினம்தினமாய் நீ …

    • 3 replies
    • 888 views
  12. Started by nochchi,

    செயற்படுவோம்! -------------------------- கதைத்தோம் ஓடினோம் ஏறினோம் போனோம் கூடினோம் குரல்கொடுத்தோம் கலைந்தோம் ஆனாலும் ஓயோம் தமிழீக் கொடியதனை ஐநாவில் ஏற்றும்வரை ஓயோம்! ஓயோம்! என்றே நாம் உறுதிகொண்டே செயற்படுவோம்!

    • 3 replies
    • 733 views
  13. பூக்கள் அழகானவை ..... கற்பனயில் பூக்கும் -நீ பூக்களின் ராணியாக .... அழகாய் இருக்கிறாய் ....!!! உன் உடலின் வியர்வைகள் ... பனித்துளிபோல் அழகாய் .... உன் மூச்சு காற்று எங்கும் ... வாசமாய் மனம் கவர்கிறாய் .... நீ உதிர்ந்து விழுந்தாலும் ..... உன்னை தாங்கும் காம்பு யான் ... மீண்டும் பூப்பாய் என்று ... காத்திருக்கிறேன் ....!!! ^ பூக்களால் காதல் செய்கிறேன் கவிப்புயல் இனியவன்

  14. உன் விடியல் உன் கையில்...... கவிதை.... தமிழா நீ எழுந்திடு நம் தாய் நாடு மீட்க சேர்ந்திடு.... தமிழீழம் உன் தாயல்லவா உன் தாயை நீ கை விடலாமா...? எதிரியின் அழிப்பில் நீ என்றும் உன் இனத்தை அழிய விடலாமா...? ஒற்றுமை உணர்வின் உயிராக நமக்கு காக்கைகள் உனக்கு தெரியலையா..? அதில் ஒன்றுக்கு அநீதி இழைத்துவிட்டால் அவை எல்லாம் சேர்ந்து உன்னை தாக்காதா...? நீ உன் ஒற்றுமையின் பலம் காட்டு மலை போன்ற எதிரியும் உனக்கு மண் மேடு.... மியிர் கொட்டி பூச்சி தன் உயிர் காக்க தன் மியிர் கொண்டு உன்னை தாக்கிடுமே...! மனிதனாய் பிறந்த உங்களுக்கு ஏன் மயக்கம் இன்னும் தெளியவில்லை..! உங்கள் உரிமைக்காய் நீங்கள…

  15. இக்கவிதை கண்ணதாசன் தான் உயிரோடிருக்கும்போதே தன்னுடைய இறுதி ஊர்வலத்தின்போது சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது கணீரென்ற குரலினால் பாடப்பட வேண்டும் என்று இயற்றிக்கொண்டாராம் தேனார் செந்தமிழமுதைத் திகட்டாமல் செய்தவன் மெய் தீயில் வேக போனாற் போகட்டுமெனப் பொழிந்த திரு வாய் தீயிற் புகைந்து போக மானார் தம் முத்தமொடும் மதுக் கோப்பை மாந்தியவன் மறைந்து போக தானே எந் தமிழினிமேல் தடம் பார்த்துப் போகுமிடம் தனிமைதானே! கூற்றுவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன் படுத்தவனைக் குவித்துப்போட்டு நீ எரிவதிலும் அவன் பாட்டை எழுந்து பாடு! -'கவியரசு'கண்ணதாசன் உங்கள் இரங்கற்பாவை யாழில் இயற்றிவையுங்கள், பிறகு பாடுகிறோம்.............

  16. மீண்டு வராத காலத்தின் நினைவுகளை துவட்டத் தொடங்குகிறான் சாம இரவில் விழிப்படைந்த வேடன். அன்றொருநாள், குறிதவறியிருக்கலாம். அன்றில், நரகத்தின் வாசலில் நிறுத்தி நழுவிச்சென்ற விரல்களில் இருந்து ஒழுகிய, பூப்படைந்த வாசம், இன்றில் அறையெங்கும் நிறைந்து யன்னல்களால் வெளியேறத்தொடங்குகிறது உவர்த்த இதழ்களும் நெகிழ்ந்த முதல்களும் வசீகர தழுவல்களும் இரைகொள்ளும் பேரலையாய் கவிழ்ந்துவிழ, பெரும் தீ ஆற்றொனாப் பெரும் தீ.

  17. இந்: உன் மேல ஒரு கண்ணு நீ தான் என் மொர பொண்ணு கிறங்குறேன் நொருங்குறேன் பாரு நான் உன் மாப்புள்ள இல:உன்னோட இவ ஒன்னு உன்ன மறந்தா வெறும் மண்ணு கிறங்குறேன் நொருங்குறேன் ஆனால் அவனே என் மாப்புள்ள இந்:கொஞ்சி நான் மிஞ்சுறேன் மிஞ்சி நான் கொஞ்சுறேன் ஏன்டி இந்த நாடகம் இல: கெஞ்சி நான் அஞ்சுறேன் அஞ்சினா கெஞ்சுற நானும் அவன் ஞாபகம் இந்:சொல்லாம சொல்லாம மூடி வெச்சு என்ன அங்கேயும இங்கேயும் அலையவிட்ட இல‌: அல்லாம கில்லாம நோக வெச்சு என்ன முன்னாலும் பின்னாலும் மொன இந்: ஓத்துக்கிட்டா மாமன் தான் கட்டிக்க வாரேன் வாரேன் இல: வெட்டுனா ஒட்டுறா ஒட்டுனா வெட்டுறா லூசு பையன் மாதிரி …

  18. வாழும்வரை நேசிப்போம் காதலை மூச்சாய் சுவாசிப்போம் கனவிலே கூட காதலை யோசிப்போம் காதலை கவிதையாய் வாசிப்போம் காதல் மாறாதது என்பது உண்மை. ஆள் மாறினாலும் இல்லாள் மாறினாலும் காதல்மாறுவதில்லை கண்களில் காதல் வைத்து இதயத்தில் காதலியை தைத்து கனவில் காதல் கீதம் இசைத்து காலமெல்லாம் காதலோடு வாழத்துடிக்கும் காதலர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்...

    • 3 replies
    • 1.3k views
  19. பாடிப் பறந்த குயில் மாஞ்சோலையெங்கும் மாங்கனிகள் தோரணம் மரக்கிளைகள் மத்தியிலே மாங்கிளிகள் மோகனம்; தூங்கும் பழங்களிலே அணில்களின் மோகம்; துள்ளிப் பாய்வதிலே மந்திகளின் ஆர்வம் சோலையின் மறைவினிலே கோகிலத்தின் ராகம் சொற்கள் வந்த திசையினிலே அதைக் காணாத சோகம் நேரில் வந்து கூவுவதற்கு இதற்கேனோ தயக்கம் நெடுநாளாய் இதுபற்றி என் மனதிலே ஏக்கம் ஆவலுடன் காத்திருந்தேன் அடுத்த ஓசை கேட்க அலறிப் பறந்ததுவே காக்கையொன்று நுழைய தாழாத சோகம் என்னை வந்து தாக்க தவித்ததே மனம் பழசையெண்ணி ஏங்கி வேலைத் தலமொன்றில் வேலைதேடிப் போக வேலையின்றி இருந்தவரோ நீ யாரென்று கேட்க பயத்துடனே பதில்சொல்லி பதுமையாய் நிற்க பார்த்திருந்த மங்கையரோ புன்முறுவல் பூத்தார். வேலையங்கே கிடைத்தபின்னர் வேடிக்கைகள் பல…

    • 3 replies
    • 787 views
  20. Started by yaal_ahaththiyan,

    மறக்க முடியாத உன் முதல் முத்தம் வேண்டாம் நான் இறக்க வேண்டும் கடைசி முத்தம் கொடு * நீ தூங்குவதே இல்லையா என் தூக்கங்களில் கனவாய் வருகிறாயே * எல்லாரும் கவிதைக்குள் கருத்தைதான் தேடுவார்கள் நீ மட்டும் உன்னைத் தேடுவாய் * நீ வாங்கிக் கொடுத்த செருப்போடுதான் இன்றும் நடக்கிறேன் கைகளில் சுமந்தபடி * என் கவிதைகளை எப்படி படிக்க வருகிறாய் என்பதை கற்றுக்கொடு நீ குளிப்பதை எப்படி எட்டிப் பார்ப்பது என்பதை கற்றுக் கொள்கிறேன் -யாழ்_அகத்தியன்

  21. Started by Thinava,

    என் காதலனே!! கவிதை வரைந்தேன் உண்மை மூடி காதல் கொண்டேன் கண்ணை மூடி படிக்கச் சென்றேன் பையை மூடி பட்டம் பெற்றேன் பைத்தியம் என்று என் காதலனே!! உன்னையே உலகமென நினைத்தேன் - ஆகையால் உன்மீது பாசத்தைப் பொழிந்தேன் உன்னையே வாழ்க்கையையென நினைத்தேன் - ஆகையால் உன்மீது ஆதரவாக நடந்தேன் என் காதலனே!! காதலிக்கும் போது உன் வயதை மறைத்தாய் - என்னைக் காண வரும் போது உன் நரையை மறைத்தாய் கதைக்க வரும்; போது உண்மையை மறைத்தாய் - என்னைக் காரில் ஏற்றும் போது கண்ணாடியை மறைத்தாய் என் காதலனே!! காதல் து}ய்மையானதென்று அடிக்கடி கூறுவாய் காதல் இனிமையானதென்று அடிக்கடி சொல்வாய் காதல் சுகமானதென்று அடிக்கடி அறிவாய் காதல் பலமானதென்று அடிக்கடி விளக்கினாய் …

    • 3 replies
    • 2.2k views
  22. உன் மெளனம் கூட ஆசைப்படுகிறது நீ பேசுவதைப் பார்த்து கவிதையாக வேண்டுமென்று * பூச் செடிக்கு பக்கத்தில் வைத்து உன்னை படம் எடுத்ததில் உன்னைப் பறித்த பூவின் புன்னகை தெரிகிறது * இரவு வந்தால் போதும் கவிதை நேரத்துக்காய் காத்துக் கிடக்கிறேன் வானொலிக்கு பக்கத்தில் அல்ல என் கைபேசிக்கு பக்கத்தில் * உனக்கு பிடித்த எல்லாம் எனக்குப் பிடிக்கும் உனக்கு பிடித்த கவிஞர்களைத் தவிர * வாசல் அழகுக்காய் கோலம் போடுகிறாய் நீ கோலம் போடும் வரைதான் அழகாக தெரிகிறது வாசல் -யாழ்_அகத்தியன்

    • 3 replies
    • 1.2k views
  23. துளிர் விட தொடங்கியது மரம் இறக்கை முளைக்கும் குருவி குஞ்சு போல தூரமா போன பறவைகள் எல்லாம் மீண்டும் வந்து அமர்வதை பார்க்கிறேன் காற்றுக்கும் ,மழைக்கும் ,ஈடு கொடுக்கும் பலத்துடன் மரம் இருந்தாலும் ஆடை களையப்பட்டு அம்மணம் ஆனால் யார்தான் விரும்புவார் ஒதுங்குவார் அருகில் இப்பொழுது சிறகு விரிக்கிறேன் என்னருகில் பலர் பாயை விரிக்கிறார் வரலாம் அமரலாம் கதைகள் பேசலாம் நீங்கள் உங்கள் தேவைகள் உள்ளவரை சுடும் அனல் வெய்யிலின் தாக்கம் போகும்வரை மீண்டும் மரம் இலை உதிர்க்கும் சருகாக அதனருகில் காற்றுடன் பறக்கும் அப்பொழுதுகளில் கால்களால் தள்ளி விட்டு விலகி போகும் கட்சிகளை மரம் கண்ணுறும் அப்பொழுது பணம் இருக்கும் உறவு தேடி வரும் சொந்தங்கள் போல என் நிலை தெரியும் பூப்பதும் உதிர்வ…

  24. ஆதி மனிதன் தொட்டு அண்மைக்காலம்வரை அன்பெனும் பிணைப்பால் பின்னிப்பிணைந்து வாழ்ந்;த நம் உறவுகள் ஏன்தான் இன்று இப்படி? ஓலை வீட்டிலும் ஒட்டிய வயிற்றுடனும் வாழ்தபோது ஒற்றுமையாய் வாழ்ந்த நம் உறவுகள் காசைப்பார்த்ததும் மாறியதோ? கடல் தாண்டி வந்தபின் மாறியதோ? கருணை மனம் எங்கு ஓடியதோ? தன்வயிற்றை ஒட்டவைத்து தன்னுள் கருவாக்கி உன்னை ஊர் போற்ற உருவாக்கிய அன்னைக்கு உதவாமல்? உலகத்தில் நீ எங்கு வாழ்ந்;தாலும் உன்னால் யாருக்கென்ன நன்மை? கண்ணை மறைத்ததோ காசு வந்து உன்னை? பின்னால் ஒருகாலம் உன்னிலை உணரும்போது மண்ணில் இருக்காளே அன்னை? அப்போது நீ எண்ணித் தவித்தென்ன நன்மை? ஆக்கம் இசைக்…

  25. கார்த்திகை நாயகர்கள் உடலைத் திரியாக்கி உதிரத்தை நெய்யாக்கி உயிரை ஒளியாக்கிய உத்தமரே – எம் உணர்வுக்கு வித்தாகி – தமிழ் உலகுக்கு சொத்தாகி தமிழீழ விடிவுக்கு விளக்காகிய வித்தகரே! தீபத்தின் சுடரிலே உங்கள் தியாகம கண்டோம்- அது சுடர் விடும் நிறங்களிலே உங்கள்; முகம் கண்டோம் காத்திகை மலர்களிலே உங்கள் கனவு கண்டோம் - அதைக் கையினில் எடுக்கையிலே உங்கள் அழகு கண்டோம் கார்த்திகை மாதத்தின் நாயகராய் நீங்கள் காட்சியளிக்கும் காலம் இது கைகூப்பி நாங்கள் வணங்குகிறோம். காவல் தெய்வங்களாய் போற்றுகிறோம். செண்பகன் 21.11.2013

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.