கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
மானின் விழி கண்டு மருண்டு நான் நின்றபோது அன்ன மொன்று வந்து அவள் நடையைக் காட்டியதே.
-
- 3 replies
- 1.2k views
-
-
வசந்தம் வந்தது வண்ணக் கதிரவன் ஒளியொடு வான் உயர்ந்த மரமெல்லாம் வான் மறைந்துத் துளிர்த்து நிற்ப வசந்தம் வந்தது வண்ணக் கதிரவன் ஒளியொடு பூ மகள் மேனிதனை பூக்கள் மறைத்து நிற்க பாரே அழகில் மிதக்குது பகலவன் சிந்தும் புன்னகையில் இத்தனையும் பார்க்கையிலே மனசெல்லாம் ஒரு தவிப்பு - எம் தாய்மண்ணின் பிறந்ததற்காய் தம் வசந்தம் தொலைத்து வாழும் - எம் தொப்புள் கொடி உறவுகள் வாழ்வில் தொலைந்த வசந்தம் வீசும் நாள் எந்நாளோ??? http://inuvaijurmayuran.blogspot.ch/2014/03/blog-post_20.html .
-
- 3 replies
- 1.4k views
-
-
உனக்கு என்ன கவலை .... இருந்தாலும் தோள் மீது .... சார்ந்துகொள் ..... என்னை கேட்காமலே .... தோள் மீது சாய்ந்துகொள் ....!!! என் தோள் உன் .... இதய சுமையை இறக்கும் .... இதய சுமையை தாங்கும் .... சுமைதாங்கியாய் இருந்தால் .... உயிர் உள்ளவரை உன்னை தாங்குவேன் .....!!! நான் உன் உயிர் நட்பு ..... உன் அத்துனை சுமைகளையும் .... என்னிடம் கொட்டிவிடு .... உன் முகத்தில் சிரிப்பையே.... பார்க்க வேண்டும் .....!!! & கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை 01
-
- 3 replies
- 2k views
-
-
-
பிணங்களைக் காக்கவோ வருவர் ? நினைவுகளோடு வாழும் நிலமற்ற அகதிகள் நாங்கள். 'நாளைய பொழுது நமக்கானது' கனவுகள் பொய்த்துக் காலிடை மிதியும் பிணங்களை விலக்கி உடலில் வழியும் குருதியைத் துடைத்து ஓடுதல் ஒதுங்குதல் உயிர் வாழுதல் பற்றிய ஏக்கமும் துயரும்.... கடற்கோள் கொள்ளையிட்ட துயரைவிடக் கொடுமையிது காப்பிடமற்ற விரிந்த வெளியில் கூப்பிடவும் யாரும் கேட்காத் தொலைவிருந்து காத்திடுவர் தூதர் கடலிடை வந்து மீட்டிடுவர் என்றான நம்பிக்கையும் களவு போய் பிணங்களின் நடுவேயான கூக்குரலும் குழந்தைகளின் கதறலும் ஏழ்கடல் நுனிவரையும் எங்களின் அழுகை.... எறிகணை துரத்தித் துரத்தி எறிந்திருப்பது கடைசி முனை.... எங்களைப் பற்றி உலகம் பேச…
-
- 3 replies
- 1.1k views
-
-
போகமட்டீரோ நீரும் நரகத்திற்கு...... சிங்களவா உனக்குத் தமிழர் செங்குருதி தானா உணவு பல தசாப்தங்கள் கடந்தும் பசி அடங்கவில்லையா உனக்கு இன்னும் எத்தனை தசாப்தங்கள் தேவை உனக்கு இனப்படுகொலை புரிந்து, உன் ஈனப்பசியைப் போக்குதற்கு வேணுமடா இது எமக்கு வேறுபாடு பாராமல் அன்று உன் கையில் ஆட்சியினைத் தந்ததற்கு சாபமடா எம் பிறப்பு, அதை காட்டுதடா நாட்டு நடப்பு போதுமடா எம் தவிப்பு போகமாட்டீரோ நீரும் நரகத்திற்கு
-
- 3 replies
- 915 views
-
-
மாவீரர் புகழ் பாடுவோம்! மண்ணோடு மண்ணாக மாதங்கள் பல வருடங்கள் புழு பூச்சிகளுடன் புனிதர்கள் எமக்காய் தவம் செய்தார்களே பதுங்குகுழிகளினுள்! படுத்திருந்தோம்நாம் மாளிகைகளில்! மறப்போமா? வீடுகளில் வயிறுமுட்ட விழுங்கிவிட்டு நாங்கள் கிரிக்கெட் ஆட்டத்தில் லயித்திருந்த நேரம் நேராகக் கொடியவன் குகைநோக்கிச் சென்று ஈழவேள்வியில் ஆகுதியானாரே! அவரை மறப்போமா? ரியூசனுக்கு போகவேணும்! 4ஏ எடுத்துப்பின் அவுஸ்திரேலியாவில் படிப்பதற்கு ஸ்கொலர்சிப் கிடைக்கவேணும்! நாங்கள் கண்டவண்ணக் கனவுகள்தான் எத்தனை! ஆனால் இவர்கள்? இயக்கத்தில் சேரவேண்டும்! பெரியாலாய் வந்தங்கு ஆமிக்காம்பொன்றை தான்நடத்திப் பிடிக்கவேண்டும்! அதில்வீர…
-
- 3 replies
- 1.2k views
-
-
சஹாராவில் பூக்களா? பாலைவனத்தில் ... பா(ழ்) ல் பண்ணை ...? நிறுவ முடியுமா? முடிந்தாலும் ... பச்சை வயலை எரித்துவிட்டு,,,, பாலைவனத்தில்... பன்னீர் மழையா? வீணே போகுமே!! சூரியனுக்கு... கறுப்படிக்க நினைக்கிறானாம்.!. முடிந்தாலும்........(???) சுற்றி வர - இருட்டாகுமே ... கவலையில்லையா?! (யாருக்கோ)
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரம்மஞானியின் பாதச்சுவடுகள்பாதை காட்டிடும் புறப்பட்டு வா’-றோய் 71 Views பிரம்மஞானியின் பாதச்சுவடுகள் பாதை காட்டிடும் புறப்பட்டு வா…. ஈழத்தை நோக்கிப் பயணித்த பாதங்கள் இடையினில் நிக்குது பாரடா இளைஞனே தேசத்தின் குரலாய் அகிலத்தில் ஒலித்த புரட்சிக் குரலது கேட்குதா உனக்கு… ஈரேழு வருடங்கள் கடந்திட்ட போதும் ஓயாமல் நின்று அழைக்குது பாரு அன்ரன் பாலசிங்கம் அண்ணணாய் … அரசியல் ஆசானாய் … தத்துவ மேதையாய்த் தமிழீழக் கனவுடன் ஓயாது உழைத்தவர் இன்றைக்குத் தானடா ஓய்ந்து போனதாய்… ஈரேழு வருடங்கள் கடந்து போகுதே… எண்ணத்தில் ஏற்றிப் புறப்பட்டு வா! தலைவரின் கரத்…
-
- 3 replies
- 598 views
-
-
புதுக்கவிதை சுருக்கமான வரலாறு ஜெயமோகன் புதுக்கவிதை என்று தமிழில் இப்போது வழங்கிவரும் இலக்கியவடிவம் மிகமிகப்பரவலானதும் பல்நோக்கு பயன்பாடு கொண்டதுமாகும். இன்றையசூழலில் இவ்வடிவத்தைப்பற்றிய ஒரு வரையறையை அளிப்பது எளிதல்ல என்னுமளவுக்கு இது பரநது விரிந்திருக்கிறது. ஆகவே கோட்பாட்டு ரீதியாக ”ஒரு மொழியில் ஒரு சொல்லுக்குப் பின் இன்னொரு சொல் வரக்கூடியதும் எழுதியவராலோ பிரசுரித்தவராலோ வாசித்தவராலோ அல்லது சம்பந்தமில்லாத பிறராலோ கவிதை என்று கருதப்படுவதுமான ஓர் மொழியமைப்பே கவிதை’ என்ற பொதுவரையறை இங்கே அளிக்கப்படுகிறது. புதுக்கவிதை என்ற பெயரை இதற்கு போட்டவர் க.நா.சுப்ரமணியம் என்ற இலக்கிய விமரிசகர். ஆங்கிலத்தில் new poetry என்ற சொல்லை எஸ்ரா பவுண்ட் என்ற கவிஞர் பயன்படுத்திருப்பத…
-
- 3 replies
- 2.4k views
-
-
எறித்த வெய்யிலை ஓரம் கட்டியபடி எங்கும் எக்களித்தபடி காற்று திடுமென வானம் திகைத்து நிற்க கார்மேகக் கூட்டத்தின் கடைபரப்பல் துமித்துத் தூவானத்துடன் தூறலாய் ஆர்ப்பரித்தபடி மழை அதி வேகத்தோடு சோவெனச் சோலைகளை நிறைத்து சொல்லாமல் பெய்கிறது கோடையில் மழை குதூகலம்தான் ஆயினும் ............ எரிக்காத வெய்யிலை இரசித்தபடி ஏகாந்தத்துள் திளைத்திருந்து சுவாசத்தின் காற்றை சுத்தமாய் நிரப்பியபடி மெய்மறந்திருந்த என்னை குளிர்ந்து பட்ட துளி குதூகலம் கலைத்து கூட்டினுள் கலைத்தது ஆயினும் வீசும் குளிர் காற்றும் மூக்கை நிறைக்கும் மழையின் மணமும் சடசடத்துப் படபடத்து ஆடும் இல்லை மரக் கொடிகளும் வாசலில் நின்றெனை வர்ணிக்க வைத்தது இயற்கை எப்போதும் இரசனைக்குரியதே ஆனாலும் மாந்தர் நாம் …
-
- 3 replies
- 916 views
-
-
சொன்னால் தான் புரியுமா என் கண்ணே மனசுக்குள் பல வண்ணப் பட்டாம்பூச்சி பறப்பது... உள்ளுக்குள் தெரிந்தாலும் உண்மையிது புரிந்தாலும் நான் சொல்லிக் கேட்பதில் உனக்குப் பரவசம்! நாடுகள் எமைப் பிரிக்கும் எம் உயிர் தாங்கும் கூடுகள் தான் அதை மதிக்கும்... எம் உயிருக்கு ஏதடி இடைவெளி? உலவலாம் எங்கெங்கும் உலகமிது சமவெளி! விண்ணில் ஏறுவோம் விண்மீன் எறிந்து விளையாடுவோம் மண்ணில் இறங்கிப் பாடுவோம் பூக்களின் மகரந்தப் பொடி அள்ளித் தூவுவோம் வண்டுகள் எமை மொய்க்கும் உன் கண்ணிரண்டு கண்டு தம்மினமோ என்று யோசித்து நிற்கும்! யாசித்து வருவதில்லையே அன்பு நமைப் போல் நேசித்து நின்றால் …
-
- 3 replies
- 1.3k views
-
-
சட்டைக்குள் புகுந்துதினம் சில்மிசம் செய்த _என் கிராமத்துக்காற்றே, அந்த ஆலமர மடத்தில் _உன் ஸ்பரிசம் தந்த சுகமும் விளையாடிக்களைத்த மம்மல்போழுதில் வந்தெனை ஆரத்தழுவி வியர்வைதுடைத்த பரவசமும் _இன்று நினைவுகளில் மட்டுமே ! எல்லைகளில் உயர்ந்த பனைகளோடு உரசி சிரித்தவள் நீ , முல்லையின் வாசத்தோடு முற்றத்து மண் அள்ளிக்கொட்டி ஆக்கினைசெய்தவள் நீ , நேற்கொழுவில் நேற்கதிகளோடு சல்லாபித்து நெஞ்சைத் தொட்டவள் நீ , ஏகாந்த இராத்திரியில் மஞ்சம் வந்து _கன்னம் கொஞ்சிப்போனவள் நீ , என் கிராமத்துப்பூங்கற்றே வேலிக்கிழுவையும் ஆடுதண்டுப்பூவரசும்_உன் தரவுகளின் ஆமொதிப்பாளர்களாக இ (த)லையாட்டிக்கொண்டிருக்கும் வரை மாற்றமில்லாமல் நீ வந்து…
-
- 3 replies
- 814 views
-
-
நண்பா றெக்ஸ் இல்லம் தேடி நான் சென்றபோது இன்முகம்காட்டி எமை வரவேற்றான் எப்போ ஒருநாள் பழகிய பழக்கம் இன்றுவரை அதனை நினைவில் கொண்டான். உள்ளம் தளர்ந்து உவகையில் மிதக்க துள்ளிக் குதித்து தன் மகிழ்சியைச் சொன்னான் அன்பாய் என்னிடம் அருகே வந்து அணைத்து முத்தம் தந்து சென்றவன். தங்கிய நாட்கள் தன் கடமையை உணர்த்தி நட்பின் தன்மையை எனக்குக் காட்டி புறப்பட்ட நாளில் என்முகம் பார்த்து பிரிவுத்துயரைத் தன் கண்ணால் சொன்னான். ஏக்கப் பார்வை கண்ணில் தெரிந்தது ஏன்தான் இவன் இப்படிப் பார்க்கிறான் என்று எண்ண்ணியே நானும் அப்போ என்னைப் பிரியும் ஏக்கத்தினாலோ இப்படிப் பார்க்கிறான் என்றெண்ணி வந்தேன் வந்த சில நாட்களில் செய்தி வந்தது அதிர்ச்சியுடன் நானும் அவன் செயல்களை நினைத்தேன். பா…
-
- 3 replies
- 814 views
-
-
சில பெண்களை பார்க்கும் பொழுது கரும்பலகையில் எழுதிய எழுத்துக்கள் ஈரத்துணியால் துடைக்கப்பட்டது போல மனதில் இருந்தவை எல்லாம் மறைந்து விடுகின்றன...
-
- 3 replies
- 1.4k views
-
-
ஏன் வந்தாய்? ஊரென்ன பார்க்க வந்தாயா? உன் உறவுக்கு சொல்லி வந்தாயா? சோரம் போகா வன்னி மண் தீரம் தெரியாமல் வந்தாயா? தீயவனே ஆவி ஒடுங்கி-உன் உடல் ஊர்போகும் நாள்தெரிய வந்தாயா? பண்டார வண்ணியனின் பரம்பரை பிறந்த மண்ணில் சிங்கம் புணர்ந்து பிறந்த வம்சத்தின் சிறு நரிக்கென்னவேலை? வணங்கா மண் வன்னியின் வரலாறு தெரியாமல்-மூடனே களங்காணா உன் அமச்சரின் கதை கேட்டு வந்தாயோ? அகங்காரம் தலைக்கேற ஆணவம் மிகக்கொண்டு இளக்காரம் என எண்னி தமிழய்ச்சியின் வளைய்க்கரம் சீண்டிப்பார்க்க வன்னிக்கு வந்தாயோ? வளைக்கரம் வலிமை கொண்ட வண்ணிமண் எங்களது இங்கே கொலைக்களம் உனக்காக கொடியவனே நாளை எண்ணு அடங்காப்பெருவீரம் பிறப்பெடுத்து ஆர்ப்பரிக்கும் …
-
- 3 replies
- 1.1k views
-
-
எங்களுக்காகவும் தீபங்கள் ஏற்றுங்கள்...!!! எங்கே உங்கள் இதயங்களை கொஞ்சம் திறவுங்கள்-கல்லறைகளில் கண்மூடித்துயிலும் உங்கள் பிள்ளைகள் வந்துள்ளோம். அட கல்லறைகள் இல்லையென்றால் என்ன...? உங்களின் இதயங்கள் தானே நாங்கள் துயிலும் துயிலும் இல்லங்கள். துயிலும் இல்லங்களை இடித்த போது எங்களுக்கு வலிக்கவே இல்லை. என் இனமே என் சனமே நீ துடித்தாய். அதை நாங்கள் மட்டுமே அறிவோம். எங்கே உங்கள் இதயங்களை கொஞ்சம் திறவுங்கள்-கல்லறைகளில் கண்மூடித்துயிலும் உங்கள் பிள்ளைகள் வந்துள்ளோம். தூரங்கள் அதிகமானாலும் சொந்தங்கள் விட்டுப்போகாது. துயரங்கள் அதிகமானாலும் பாசங்கள் குறைந்து போகாது. நீங்கள் வந்து எங்கள் கல்லறைகளில் விளக்கேற்றா விட்டாலும் உங்கள் விழிகளில் விழிகளில்…
-
- 3 replies
- 878 views
-
-
என் கண்ணில் பட்டவளே.....!!! நீ பிரம்மனின் .... தங்க தேவதையா ....? தெய்வீக தேவதையா ...? தோகை மயில் அழகியா ...? மானிட பெண் தாரகையா ...? என்னை கொல்லும் யார் நீ ...? +++ குறள் - 1081 அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. +++ திருக்குறள் வசனக்கவிதை
-
- 3 replies
- 1.1k views
-
-
நீ பிரிந்தபோது ... உறைந்துபோன ... இதயம் - நீ தந்துவிட்டு போன ... நினைவுகளால் .... மீண்டும் துடிக்கிறது ....!!! & காதல் எஸ் எம் எஸ் கே இனியவன் LOVE SMS
-
- 3 replies
- 824 views
-
-
செத்துப்போகட்டும் அவர்கள் சாகப்பிறந்தவர்கள் ஏன் கவலை அதற்காக சாகப்பிறந்தவர்கள் அவர்கள். ஈனப்பிறவிகள் எண்ணிவிட்டு போகட்டும். தானாடாவிட்டாலும் தசையாடுமாம் இவர்களுக்கு ஒன்றும் ஆடவில்லை. அங்கே பிணக்குவியல்கள். பணத்தை குவிப்பதற்காய் மலிவு விற்பனைகள் களியாட்டவிழாக்கள். செத்துவிட்டு போகட்டும் வன்னிமக்கள் சதையாடாத ஈனப்பிறவிகள். புலிபாய்ந்த காலத்தில் ஆணிவேர் எடுத்தவர்கள் புலிசாய…
-
- 3 replies
- 1k views
-
-
கல்லறைத் தெரு என் தெருவின் பெயர் மரித்தவர் நடுவே நான் வசிக்கிறேன்... சோகமும் கண்ணீரும் என் கொடி இலச்சினைகள் இரவில் மட்டுமே என் உரையாடல்கள் அதுவும் அவர்களுடன் மட்டுமே ஒவ்வொரு நாளும் இறக்கிறேன் மறுநாள் உயிர்த்தெழுவதும்கூட அன்றிரவு மரிப்பதற்கே பாழ்நிலத்தில் விருப்பமுள்ளவர்கள் வாழட்டும் நான் அப்பால் ஏகுகிறேன் என்னுடன் உரையாடுபவர்களுடன் எருக்கம்பூக்களின் வாசம் மனத்துக்கு இதமாய் மரமல்லியை விடவும் இருளும் வெற்றிடமும் சூழ்ந்திருக்கும் இவ்விடத்திற்கு நாளை நீங்கள் வருவீர்கள். * தி. பரமேசுவரி
-
- 3 replies
- 855 views
-
-
இலங்கையில் தமிழ்க் கவிதைகள் ஒரு பார்வை பூங்குழலி வீரன் ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சிபற்றிச் சிந்திக்கும்போது அடிப்படையில், அவை நான்காகப் பகுக்கப்பட்டு விவாதிக்கப்படுவது காணக்கூடியதாக இருக்கிறது: 1. மரபு வழிப்பட்ட நிலை 2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு 3. சுதந்திரத்திற்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி 4. அண்மைக்காலப் போக்கு மரபு வழிப்பட்ட நிலை ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் கவிதை எழுதிய ஆரம்ப எழுத்தாளர்களிடம் காண முடிகின்றது. அ.குமாரசுவாமி புலவர், சுவாமி.விபுலாநந்தர், வித்துவ சிரோன்மணி. சி.கணேசய்யர், அருள்வாக்கு அப்துல் காதிர் புலவர், மாதகல் மயில்வா…
-
- 3 replies
- 4.8k views
-
-
[size=4]இது வரை குளத்தில் மட்டுமே மீன்களைப் பார்த்திருக்கிறேன் முதன் முறையாக உன் முகத்தில் கண்கள் வலை வீசுவது யார்? கரையில் இத்தனை காவலர்கள் - இமை முழு நிலவு முகத்தில் இடது வலதாய் இரு மூன்றாம் பிறைகள் - புருவம் என்ன அதிசயம் தென்றலைத் தாலாட்டும் கூந்தல் அய்யயோ... வார்த்தைகள் வரவில்லை பார்த்து விட்டேன் இதழ்களை வரைந்தது யார்? ஏய் அழகுத்தீவே சிரிக்காதே நான் உயிர் வாழவேண்டும் - உனக்காக...[/size]
-
- 3 replies
- 649 views
-
-
நிறமற்றவன் எதில்தான் இல்லை வர்ணம் இலையில் பூக்களில் மரத்தில் பூச்சிகளில் மனிதர்களில் எதில்தான் இல்லை வர்ணம் மனங்களில் சோதியில் சாதியில் வர்ணங்களற்று வாழவே முடியாது நம்மால் முஸ்லீமாய் இந்துவாய் கிறித்துவனாய் சீக்கியனாய் வர்ணங்களற்று வாழவே முடியாது நம்மால் புத்தனுக்கென்று ஒரு நிறமில்லை எந்த வர்ணத்தையும் அவன் வரைந்து கொள்ளவில்லை அதனால் தான் நம்மிடமிருந்து புத்தனையே துடைத்தோம் நம் வர்ணத்துக்கு புத்தன் ஆக மாட்டான் இம்சையே நம் இயல்பின் வண்ணமாயிருக்க நம் நிறத்தை மறுத்தார் ஒருவர் அஹிம்சையின் நிறத்தினை துப்பாக்கியால் துடைத்தோம் நம் குரூரத்தின் வர்ணத்தினை அவரிலிருந்து வெளியாக்கினோம் வெண்புறாக்கள் பறக்கும் …
-
- 3 replies
- 892 views
-
-
நெல்லெடுப்பது யார்? என்னவாயிற்று? ஏனிந்தப் புலம்பல்? ஒப்பாரிச் சொற்களை கூட்டிப் பெருக்கிக் குப்பையிலே கொட்டுக. நெல்லெடுத்து மழலையின் ஈறில் கீறிவிட்டாலே பல் வெளிக்கிளம்ப பாதை திறக்கும். வலியும் குறையும். இது இயற்கை மருத்துவம். நெல்லெடுப்பது யார்?
-
- 3 replies
- 1.1k views
-