Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இன்று இணையப்பக்கங்களில் மேய்ந்து கொண்டிருந்த பொழுது http://veyililmazai.blogspot.com என்கிற வலைப்பூவில் ஒரு கவிதையை படித்தேன் பிடித்திருந்தது. நமக்குத்தான் சொந்தமாய் எழுதவராதே அதனாலை நீங்களும் படித்துப்பார்க்க இங்கு இணைக்கிறேன்.நன்றிகள். தீக்குச்சி இரவுகள்... பௌர்ணமி இரவில் நிலவைத் தொலைத்திருந்தது வானம்... உலக வெப்பமயமாதலின் விளைவென்கிறார்கள், எங்கள் உயிர் குடித்தத் துப்பாக்கிகளின் முனையிலிருந்து எழுந்த‌ப் புகைமூட்டத்தில் கருகிவிட்டதென்பதை அறியாமல்... நாளை மாந்தோப்பில் சந்திக்கலாமென்று கையசைத்துச் சிறகுமுத்தம் கொடுத்தனுப்பிச் சென்ற காதலி, சீர்கெட்டச் சீருடைக்காரர்களின் குதம்து…

    • 2 replies
    • 1k views
  2. Started by vanni mainthan,

    குற்றம் ஏர்.... ஊருக்கு உண்மைகள் உரைப்பேன்- எனக்கறிந்த உண்மைகள் அத்தனை உரைப்பேன் பாருக்கெல்லாம் முதலாகுமென்ற பாரதியை வார்த்தையை உரைப்போம்... தாளப்பறந்த விமானம் தள்ளாடி விழ்வது முறையே கண்ணேதிர் முன்னே நின்ற கட்டிடம் காண பிழையே... உச்ச கதிரோன் தானெனவே உசந்ததாய் நினைத்தத பிழைதானே மதியதை மதியதை மறந்தாரே- இன்று மனிதமதையெ இழந்தாரே.... கூடு கட்டிய குருவிகளின் கூடது உடைத்தத பிழைதானே மாட மாளிகையில் தானெனவே மனிதா நினைத்தத பிழைதானே.... நீதிநெறியதை மறந்தாரே- இன்று நீதிகெட்டின்று விழந்தாரே தூக்கிட யாரின்று வருவாரோ...? துன்பத்தில் தவிப்பது முறைதானே... இகழ்வதும் புகழ்வதும் முறைதானே- தொடர் இகழ்வது இகழ்வது பிழைதானே மனிதன் போட…

  3. கண்ணீரும் குருதியுமாய் ஈழம் ! செந்நீரின் மையெடுத்து நம் கண்ணீரின் கதையெழுதி புண்ணாகிப் போன நெஞ்சின் வலிகொண்டு கவிதை வரைந்தேன் அந்நாளில் நானும் குழந்தையாய் அம்மண்ணில் தவழ்ந்திருந்த ஆனந்தமான பொழுதுகள் அவை போன இடமெங்கே ? என் சொந்தங்கள் தூக்கமின்றி ஏக்கத்தில் வாழ்ந்திருக்கும் எண்ணத்தின் சுமை கொண்டு என் விழிகள் நிறையுதம்மா எரிகின்றது என் ஈழத் தேசமம்மா எண்ணை வார்க்க ஆயிரம் பேர் எவருமில்லை தீயணைக்க, அழுவதின்றி என் செய்வோம் ஆற்றாமையால் நாம் தவிப்போம். தவிக்கின்றார் தம்பி தங்கையர் தமிழர் என்னும் ஒர் காரணத்தால் தமைத் தாமே இழக்கின்றார் தமிழன்னை பாராளோ ? பதிலொன்று கூறாளோ ? சேறும் சகதியுமாய் நன்னிலங்கள் சீரழிந்து போவதுண்டு.…

  4. விரிக்கப்பட்ட ஒரு துண்டின் மேல் விழும் எச்சில்களுக்கு இரத்தம் வருத்த ஆடுகிறான் தன் பிஞ்சுகளோடு கனத்த உடலும் கால் தெரியும் அமைப்பும் ரசிக்கத்தான் கூட்டமுண்டு காலணா வீச ஆளில்லை கரணம் அடிக்கும் பூக்களை ரசிக்கத் தெரிகிறது சிந்தும் துளி ரத்தங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை உழைக்கப் பல தொழில்கள் பிழைக்கப் பல தொழில்கள் பிச்சைக்குத் தொழிலுண்டா? வீசுங்கள் உங்கள் சட்டைப்பை காசுகளை. ஆகாயத்தின் மத்தியில் ஆடும் இவர்களின் வாழ்க்கையும் அடிக்கடி கலையும் மேகங்கள் கயிறின் நுனியில் உயிரை வைத்து பூக்கள் வாடும் மஞ்சள் வெயிலில் உதடுகள் வெடிக்க இவர்கள் ஆடுகிறார்கள் இறைவனின் கூத்து இறைவன் ஆடுகிறான் இவர்களின் வாழ்க்கையில் கூத்து.…

    • 5 replies
    • 1k views
  5. இன்று நான் கவிதையொன்றெழுத முயன்றிருக்கின்றேன். நீங்களும் படிச்சுப்பாருங்கோ. பிடிச்சிருந்தாச் சொல்லுங்கோ.அன்புடன்சாதாரணன். உண்மை அல்லது குழப்பம் பனைமரத்தின் கீழே பச்சைத்தண்ணியைக் குடிச்சிட்டுப் பாலென்று சொல்லக் கள்ளென்று நம்பும் …

  6. ஈழம் என்பது தமிழ் மக்களின் கனவாம் சிங்களம் சொல்கிறது ஆமாம் ஈழம் என்பது எங்கள் கனவுதான் உங்களால் எங்கள் உறக்கத்தைத்தான் கலைக்க முடியும் எங்களை உறங்க வைக்காத ஈழக்கனவை யாராலும் கலைக்க முடியாது -யாழ்_அகத்தியன்

  7. மெல்லிசையின் இனிமை மறந்தேன் இயற்கை எழில்மேல் ரசனை இழந்தேன் செயற்கைகள் நிறை வாழ்கை முறை அதனால் நானும் இங்கோர் எந்திரனானேன் உள்ளத்தின் ஓசையின் ஏவல் கேளாமல் உலகின் ஓட்டத்தில் ஓட விளைந்தேன் மனிதனின் மனிதத்தை மதிக்க மறந்து - கொண்ட பொருளினால் அவன் மதிப்பைக் கணித்தேன் பொருளோடு, கல்வியும் தேட வந்து வாழ்வு தந்த தேசத்தில் வாசம் கொண்டு தவழ்ந்து வளர்ந்த தேசத்தின் வாசம் மறந்து விழுமியங்கள் மறந்தேன், என் சுயத்தை இழந்தேன் (27 August 2010)

  8. மனம் என்னும் மாயப் பிசாசு மறைந்திருந்து கொல்லும் எண்ணங்கள் எதிரிகளாக கடிவாளமற்ற குதிரைகளில் காததூரம் கடக்கும் சொற்களற்ற நிழல்களிநூடே சொல்லாது விடும் வார்த்தைகள் கோர்த்து சுவற்ற சிற்பங்களாய் கனவுகள் ஆயிரம் வடிக்கும் பகுத்தறிய முடியா உண்மைக்கும் பொய்க்கும் இடையே சஞ்சலம் மட்டும் கொண்டு சக்திகள் எல்லாம் அற சகலதும் துறக்கத் தோன்றும் ஏன் தான் மனிதற்கு மட்டும் இறைவன் ஒருமனம் தந்தான் விருப்பமற்றதை விலக்கி வேண்டாதவற்றை கழற்றி வில்லங்கம் கொண்டதை விடுத்து நின்மதியாய் நான் வாழ நிறைய மனங்கள் வேண்டும் எனக்கு

  9. ஊரடங்கு தளர்த்தப்படும் அப்பா படலையை எட்டிப் பார்பார் தெருநாய்கள் குரைக்கும் படலையை திறக்கப் போன அப்பா திரும்பி வருவார் வீதி சுத்தம் செய்யும் படைச் சிப்பாய்கள் வருவார்கள் நாய்கள் அலரி அடித்து ஓடி வரும்....

  10. Started by Sembagan,

    புரியாத ஏக்கம்… என் கண்கள் அவனையே கூர்மையாக நோக்கின… வாட்ட சாட்டமான உடல் ஆடை அணியும் அழகாகத் தெரிந்தன. ஆனால்… அவனின் செயற்பாடு… அவன் போடும் சத்தம்… என்னைத் திடுக்கிட வைத்தது… இந்த வயதில்… இப்படியான தோற்றத்தில்… இப்படி ஒரு நிலையா! கடவுளே!!! ஊரில்… மருத்துவ வசதியிலாத இடத்தில்… பொருளாதர பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழும் மக்களிடையே… ஒரு சிலர்தான் இப்படியான நிலையில்… தனிமையிலே கதைப்பார்கள்… தனிமையிலே சிரிப்பார்கள்… தன்பாட்டிலேயே துள்ளிக் குதிப்பார்கள்.… ஆனால்… இங்கே …. எல்லா வசதிகளும் உள்ள மருத்துவ வசதி மிக்க நாட்டில்… அவர்களைப்போல்தான் இவர்களுமா?; ஒரு நேரத்தில் எத்தனை பேர்! சனத்தொகை வீதத்தில்… எ…

    • 6 replies
    • 1k views
  11. துவேச துவசத்தின் திவசம்! ஆண்டாகி போனதுவோ மாண்ட கதை கேட்டு ? பூண்டோடு கொளுத்தி கொன்றான் இனவெறியன் ! தாங்க முடியாமல் பாராளுமன்ற சதுக்கம் சென்று இரவிரவாய் ஓலமிட்டு கதறிய காலம் அது ! பச்சிளம் குழந்தை தாயின் பிணத்தினிலே பால் தேடி புழுவோடு போட்டி போட்ட அந்த கேவலத்தை கண்டோமே ! பிறக்காத குழந்தைதனை வயிற்றை பிளந்து கொன்று இனவெறியின் கொடுமை அதை கொதித்தபடி பார்த்தோமே ! எத்தனை கொடுமை அதை என்னால் எழுத பலமில்லை ! இன்னும் என் இமைக்குள்ளே உறுதியாய் பதிந்த படம் ! தூக்கமும் வாராமல் கண் முழித்து வலையில் தேடி பார்த்தேன் எதாவது ஒரு "பதில்" செய்தி, அதை இன்றுவரை தேடுகிறேன் ! முள்ளிவாய்காலில் பாய்ந்து ஓடிய தமிழ் இனத்தின் ரத்தம் கடலோடு கலந்ததுவோ? இல்லை! உலக…

    • 3 replies
    • 1k views
  12. நான் அழுதபடியும் நசிபட்டுக்கொண்டும் தான் இப் பூமிக்கு வந்தேன் சவ்வுகளை கிழித்தும் குருதி பெருக்கியும் தாயை துடிதுடிக்கவைத்தும் தான் வந்தேன். வன்முறைதான் எனது பிறப்பின் இயல்பு. நான் வரும்போது பேப்பரும் பேனாவும் கொண்டுவரவில்லை அல்லது எந்தக் கடவுளிடமும் காப்பாற்று என்று மன்றாடிக்கொண்டு வரவில்லை. என்னிடம் வெளித்தெரியாத பற்களும் வளரத்துடிக்கும் நகங்களும் மட்டுமே இருந்தது, அதுதான் எனது நிரந்தரச் சொத்து. பசியாற்றவும் இரைதேடவும் என்னைப் பாதுகாக்கவும் அவைதான் எனக்குத் துணை. நான் வாழ்வதற்கான தந்திரங்களை தாய் தந்தையிடம் இருந்தும் சுற்றத்திடம் இருந்தும் கற்றுக்கொண்டிருக்கவேண்டியது விதி. இரைதேடத் தந்திரங்களை கற்றுத்தர மறுத்துவிட்டார்கள் இரைக்குப் பலியாகாமல் தப்ப…

  13. மீண்டும் நீ மறக்க முடியா நினைவாக....! Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Sunday, May 26, 2013 comments (0) எதிர்பாராத நிகழ்வுகளாய் வந்தடைகிற நட்புகளும் உறவுகளும் உன்னவர்களாகவே வருகிறார்கள்....! நீண்ட வருடங்களைக் கரைத்திருக்கிற காலக்கதவுகளை உடைத்தபடி கனவுகளோடு இலட்சியம் சுமந்து உன் தோழர்கள் மீண்டும் வருகிறார்கள்....! உன்பற்றியும் உனது வீரமரணம் பற்றியும் நேரமெடுத்துப் பேசுகிறார்கள் நினைவழியா உன் வாழ்வை நேசிக்கிறவர்களாய்....! நினைவிலிருந்து கழற்றியெறியப்பட்ட தடங்களை மீளவும் புதுப்பித்துச் செல்கிறார்கள் மீண்டும் நீ மறக்க முடியா நினைவாக....! வரலாறுகள் என்றுமே வெற்றிடமாய் ஆவதில்லை நீ வழிகாட்டிய பாதைவழி அவை தொடர்ந்து கொண்டே…

    • 5 replies
    • 1k views
  14. Started by kavi_ruban,

    கண்ணெதிரே வந்து நின்று களிப்பூட்டும் காதலியைக் காணவில்லை வெறிச்சோடிக் கிடக்கும் ஊரின் நிலை மாறவில்லை தேரில் வரும் சாமியைக் கும்பிட வழியில்லை ஆமி செய்யும் அட்டகாசம் ஓயவில்லை சமாதானம் சமாதானம் என்று வீண் கோஷம் போடுவதில் அர்த்தமில்லை எல்லோரும் சமமென்று நினைக்கும் வரை நிம்மதியொன்றில்லை விண்மதியின் ஒளியினில் குளிர்ச்சியில்லை தன் மதி தான் தனக்குதவி என்று உணரும் வரை வளர்ச்சியில்லை விலைவாசி குறையவில்லை மலைவாசி சிறப்புடன் வாழவில்லை எந்தவாசியும் எமக்கில்லை - சிவன் ஆசி மட்டும் இருந்தால் தொல்லையினி இல்லை மனிதனை மனிதன் புரிந்து கொண்டால் ஓர் சண்டையில்லை எல்லை கேட்டு போரிடவும் தேவையில்லை சாதிகள் ஆதியில் இருந்து வந்தவையில…

  15. கணையாழி ஜனவரி 2016 இதழில் வெளிவந்த எனது “கறுப்பு வெள்ளி” என்ற கவிதையை, யாழ் களத் தோழர்களுடன் தோழர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். கணையாழி ஆசிரியர் குழுவுக்கும், யாழ் களத் தோழர்களுக்கும் நன்றி! கறுப்பு வெள்ளி அந்தப் புதன்கிழமை என் நண்பனின் யாதுமாகிய காதலிக்குத் திருமணம். முகூர்த்த நேரத்தில் மலைக்கோட்டை மீதேறி அந்தத் திருமண மண்டபத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான். அவளுடன் பேசிய அலைபேசியை ஒரு பாறையில் மோதிச் சிதறிடச் செய்தான். இறங்கி வருகையில் ஒவ்வொரு படியிலும் நின்று சங்கல்பம் எடுப்பதுபோல் எதையோ முணுமுணுத்தான். திரும்பி வருகையில் திருச்சி சாரதாஸில் அம்மாவுக்கு நூல்ப…

  16. Started by pakee,

    ரோஜாச் செடியில் ஏராளமான முற்கள் உண்டு ஆனால் ரோஜாப்பூ அழகாத்தான் இருக்கும் அது போல நீ சில சமயம் கோவபட்டாலும் நீ அழகுடி...

  17. அவர் அப்படி ஒன்றும் திறமில்லை அவருக்கு யாரும் இணையில்லை அவருக்கு இளமையில்லை ஆனால் அது ஒரு குறையில்லை அவர் பெரிதாக சட்டம் படிக்கவில்லை அவரை நாம் படிக்கவில்லை அவர் பிடித்த சிங்க கொடி பிடிக்கவில்லை இருந்தும் கவனிக்க மறுக்கவில்லை அவருக்கு ஈழம் பிடிக்கவில்லை அவருக்கு தேசியம் பிடிக்கவில்லை அவருக்கு மாகாணசபை பிடித்திருக்கு அது ஒரு குறையில்லை புலம்பெயர் தமிழனை பிடிக்கவில்லை அவனின் துட்டு பிடித்திருக்கு அது ஒரு குறையில்லை வாக்குகளை கூட்டமைப்புக்கு போடுவதில் தப்பில்லை

  18. நாலுலட்சம் பேரின் கண்ணீர் அணையுடைந்து வருகிறது. வல்லரசப் பலம் திரட்டி வன்னிக்குப் படையனுப்பிக் கொன்றதும் குறையுயிரில் துடிதுடிதுடிக்கக் குண்டள்ளி வீசியதும் கொன்றே முடிப்போமென்று கொழுப்பெடுத்து எழுந்ததுவும் பஞ்சாய்ப் பறக்காதோ ? பாவியர் பாடையில் ஏறாரோ ? பழியோ இதுவெங்கள் பாவமோ என்றெம் விழியுடைந்த நேரம் கல்மடுவில் கதவுடைந்ததாம் காணொளியும் கண்ணால் பார்த்தது போல் காதுகளில் எட்டிவிடும் செய்திகள் பொய்க்காமல் போகாதோ ? எமக்காய்ப் பொழுதொன்று விடியாதோ ? புலியைக் கொன்று முடித்துக் கடலில் தள்ளிவிட்டுப்படை திரும்பச் சிங்களர் வீடெங்கும் சிங்கக் கொடியேற்றுவோம் என்றெம் இதயங்கள் நோக வஞ்சம் வைத்து நஞ்சு துப்பியவன…

    • 0 replies
    • 1k views
  19. ஜூலை 5.. கரும்புலிகள் நாள் நினைவாக.. மீள்பிரசுரம்..!! எமது ஆக்கத்தையும்.. ஆவணப்படுத்தி நிற்கும்.. தேசக்காற்றுக்கும் நன்றி. நெல்லியடியில் நெத்தியடியாய் நெடுநாள் சிங்களப் பகை நொருக்கி வீழ்ந்த அந்த நெடும் வீரன் மில்லர் வழியில்… தமிழராம் எம் தாகமாம் தமிழீழம் விடியும் வரை பிச்சை கேட்டு அடிமைகளாய் வாழப் போவதில்லை…! விடியலின் கனவோடு கந்தக மூச்செடுத்து சாவினில் வாழும் மறப் புலிகளாய் கரும்புலிகளாய் எம் தேச விடியலை சிதைக்க நினைக்கும் தடைகள் முடிப்போம். விடியற் சூரியனை கூவி அழைத்து ஈழ வானில் சேர்த்து.. மின்னிடும் வான் தாரகைகளாய் நாமும் மிளிர்வோம். தலைவன் வழியில்.. விடியலின் வேளை வரை தமிழர் நாம் என்றும் கரும்புலிகளே…! http://thesakkaatu.co…

  20. நீ நடந்து வரும் பாதையை ... காத்திருந்தே என் கண்கள் .... காய்ந்து போகிறது....!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை (S M S ) இதயத்தில் இருந்து வெளியேறாதே.... என்னைவிட உன்னை யாரும் .... இந்தளவுக்கு காதல் செய்ய மாட்டார்கள் ...!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை (S M S )

  21. தேநீர் கவிதை: அம்மாவின் கைராட்டை ஓவியம்: முத்து சிம்னி விளக்கொளியில் இரவும் பகலுமாய் அம்மா சுற்றிய கைராட்டை உறங்கவிடாமல் சுற்றிக் கொண்டேயிருக்கிறது என் கவிதைகளில். அறுந்து புனைந்த நூல்கண்டுகளில் முடிச்சு முடிச்சாய் அவிழ்த்தெறிய முடியாத அவள் ஞாபகங்கள். தனக்கு மட்டும் கேட்கும்படி அவள் பாடிக்கொண்டே நூற்றுக் கொண்டிருந்த பொழுதுகள், சோடி முடிந்த நாட்கள் எல்லாத் திசைகளில் இருந்தும் எதிரொலிக்கிறது எனக்குள். எவருக்கும் தெரியாமல் அவள் அழுத கண்ணீரின் …

  22. தேடுகிறோம் இப்போது?????? மனிதத்தன்மையை மக்களிடம் என்கவிதை இத்தலைப்பில்.. எங்கே மனிதன்????????என்றே...... அரசியலில் பெரும்புள்ளி ஆளுயர மாலையோடு அவர்வீட்டு வாசலிலே அயராது தொண்டர்படை ... பாமரனும் வந்தானாம் பெருந்தலைவர் புகழ்காண தலைவரவர் குணமறிய தாளாத ஆவலுடன்........ வழியிலே வழிமறித்தார் வலதுகையாம் உதவியாளர் அடுக்கடுக்காய் அளந்தாரே அண்ணலவர் அரும்பெருமையை... சிங்கமென முழங்குவார் சீற்றமுடன் மேடையிலே... புலியென பாய்ந்திடுவார் சட்டசபை கூட்டத்திலே... தொகுதி பத்தி கேட்டாலோ முழிப்பாரே ஆந்தையாய்....... குரைப்பாரே நாய்போல கும்பிட மறந்தாலோ... செவியுந்தான் பாம்பாச்சே வம்புமது கேட்பத…

  23. செத்துப்போகட்டும் அவர்கள் சாகப்பிறந்தவர்கள் ஏன் கவலை அதற்காக சாகப்பிறந்தவர்கள் அவர்கள். ஈனப்பிறவிகள் எண்ணிவிட்டு போகட்டும். தானாடாவிட்டாலும் தசையாடுமாம் இவர்களுக்கு ஒன்றும் ஆடவில்லை. அங்கே பிணக்குவியல்கள். பணத்தை குவிப்பதற்காய் மலிவு விற்பனைகள் களியாட்டவிழாக்கள். செத்துவிட்டு போகட்டும் வன்னிமக்கள் சதையாடாத ஈனப்பிறவிகள். புலிபாய்ந்த காலத்தில் ஆணிவேர் எடுத்தவர்கள் புலிசாய…

  24. Started by Tamizhvaanam,

    ஆணிவேர் உலக தரத்தில் உண்மை சொல்ல தமிழை உயர்த்தும் புதிய திரைப்படம்! வன்னி நிலத்தை விழிகள் பருக அகிலம் போற்றும் ஈழத் திரைப்படம்! உடல் சுமக்கும் உயிர் விறைக்க இதயம் கனக்கும் ஈழத்துக் காட்சிகள்! பெயரிலே உறுதியும் திரைத்துளி பார்க்க இமைகள் துடிக்கும் போரின் சாட்சிகள்! உறவை தூக்கி நெஞ்சில் அணைக்க நெருப்பகை; கிழிக்கும் நிமிர்ந்த வேகம்! எதிரியின் பிடியில் தங்கை தவிக்க மூச்சை உடைக்கும் எரிமலைத் தாகம்! வலைக் கூட்டிலே குழந்தை சிரிக்க வலியில் துளிர்க்கும் இனிய காதல்! குரல் வளையை சுடுகுழல் ருசிக்க எதிரியை எரிக்கும் மருத்துவர் மோதல்! முள்ளும் மலரும் நெஞ்சத்தைக் கிள்ள உதிரிப் பூக்களின் …

  25. மன்னித்துக் கொள்ளுங்கள் முத்துக்குமாரர்களே! எண்களில் தொலைந்தது இன முழக்கம்! ஏழுக்கும் ஐந்துக்கும் மூன்றுக்கும் ரெண்டுக்கும் விலை போயின அக்னி மரணங்கள்... உரத்து முழங்கியவன் சிறையிலிடப்பட்டான்! அடக்கி வாசித்தவன் அணியில் சேர்க்கப்பட்டான்! மேடைப்புலிகளின் வீரவாள் உறையிலிடப்பட்டது! தியாக தீபங்களே... உங்களைச் சற்றே மறந்திருந்து தேர்தல் முடிந்ததும் திரும்பிப் பார்ப்போம்! இன உணர்வுக்குக் குறுக்கே எலெக்ஷன் வந்தால் என்ன தான் செய்வது? மறதித் திலகங்களே.. வாருங்கள் ஜனநாயகக் கடமையாற்றுவோம்... இறையாண்மையைக் காப்போம்! போங்கடாங்...! ஆக்கம்: தாமிரா நன்றி:பெயர் தெரியாத தமிழக சஞ்சிகையொன்றிலிருந்து. எனக்குக் கிடைத்தது மின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.