கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஏய் அப்பு! ஏன் உனக்கு மப்பு? நானொரு வப்பு! ஆடாத எங்கூட தப்பு! பத்திரமா ஓடித் தப்பு! போட்டிடுவன் ஆட்டுக்காலு சூப்பு! அந்தாபாரு லொலி பப்பு! வச்சிடுவன் உனக்கு ஆப்பு! சும்மா சும்மா பம்பலுக்கு!
-
- 2 replies
- 652 views
-
-
ஒற்றையடிப் பாதை கன்னங் கரிய இருட்டு சில் வண்டின் ரீங்காரம் உடலை சிலிர்க்க வைக்கும் குளிர் தூரத்தில் கோட்டானின் கதறல் பக்கத்தில் இருந்த பதிந்த மரக்கிளையில் தொங்கி விழிகளை உருட்டிய வௌவால் எதிரே தெரிந்த நிமிர்ந்த மரம் தந்த ஏகாந்தப் பேயை ஏற்றிடும் தோற்றம் எதையும் இவன் இலட்சியம் செய்யவில்லை இலட்சியம் எல்லாம் எதிரே தூரத்தில் ஏதிலியாய் நின்ற ஒற்றைக் குடிசை. இன்றோ நாளையோ இடிந்து விழுவேன் என்றே சொல்லிய குடிசை மண் மதில் அந்த சுவரில் ஊதுபத்தி சூட்டில் எரிந்தும் எரியாததுமான மங்கலான கலண்டர் முருகன் படம் விடிந்தால் சூரியன் விழுந்தடித்து உள்ளே வரும் வித்தியாசமான ஓலைக் கூரை மூலையில் கிடந்த முழுசாய் கிழிந்த ஓலைப் பாயில் முழங்கால் முகத்துக்கு நேரே நீட்டி முழுவட்டமாய் …
-
- 2 replies
- 1.3k views
-
-
-
வரலாறு காடுகளை பூக்க வைக்கும். HISTORY WILL BLOOM FOREST. . பாடா அஞ்சலி வ.ஐ.ச.ஜெயபாலன். . உதிர்கிற காட்டில் எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? . சுனாமி எச்சரிக்கை கேட்டு மலைக் காடுகளால் இறங்கி கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் கவிஞன் நான். பிணக்காடான இந்த மணல் வெளியில் எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட. . வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது. எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத... . இந்த உலகிலும் பெரிய இடுகாடெது? பல்லாயிரம் சாம்ராட்சியங…
-
- 2 replies
- 864 views
-
-
மூன்று கற்கள் கனவில் கிடைத்த மூன்று கற்களில் முதல் கல்லை வீசினேன் சூரியனை நினைத்தபடி பார்வையால் பொசுக்கும் வேகத்துடன் பட்டென்று ரதமிறங்கி வந்து நின்றான் இழுத்து வந்த குதிரைகள் இரைத்த படி மூச்சுவாங்கின வெளிச்சச் சில்லுகள் பதித்த தேகத்தில் வேர்வை வழிந்தது தாகத்துக்கு அருந்த இளநீரை நீட்டினேன் ஆசுவாசமுற்ற ஆனந்தத்தில் வெற்ற்லை பாக்கு போட்டபடி வேடிக்கைக்க கதைகள் பேசிவிட்டுச் சென்றான் காற்றை நினைத்தபடி இரண்டாம் கல்லை வீசினேன் விண்ணுக்கும் மண்ணுக்குமிடையே விஸ்வரூபத்துடன் வந்தான் வாயுதேவன் முகம்பார்க்க முடியவில்லையே என்றதும் உடல்சுருக்கி எதிரில் சிரித்தான் இளநீரை விரும்பிப் பருகிய பின்னர் ஏராளமான கதைகள் சொன்னான் ஒவ்வொரு மூச்சும்…
-
- 2 replies
- 1.1k views
-
-
துடைத்து வைத்த கண்ணாடி போல இருந்ததடி என் உள்ளம்! இப்போதெல்லாம் அதில் தெரிகின்றதடி உன் விம்பம்! சலனம் இன்றிப் பயணித்தவன் நான் என்னுள்ளே நீ வந்தபின் உன் பெயரை மனனம் செய்யப் பழகிக் கொண்டவன் மரணம் வரும் எப்போதோ நானறியேன் அதுவரை சரணம் என்றுன்னை அணைப்பேன் ஊரெல்லாம் ஏதேதோ கதைக்க நீயும் நானும் வாய்மூடி மெளனிகளாவோம் உன் மனம் நானறிய என் மனம் நீயறிய உதவாத கதையெல்லாம் எமக்கெதற்கு? சிந்தை சிதறாது காதலி முந்தை வினையெல்லாம் கூடி எம்மை அலைக்கழிக்கும் பந்தை பக்குவமாய் வெட்டி விளையாடும் கால்பந்து வீரனாவோம்! விந்தை எதுவுமின்றி விரண்டோடும் வினையெல்லாம்…
-
- 2 replies
- 1.2k views
-
-
திங்கட்கிழமை தீ மூட்டிக் கொன்றார்கள் செவ்வாய்க்கிழமை செல் அடித்துக் கொன்றார்கள் புதன்கிழமை புகை விட்டுக் கொன்றார்கள் வியாழக்கிழமை விண்ணில் வந்து கொன்றார்கள் வெள்ளிகிழமை வெடி வைத்துக் கொன்றார்கள் சனிக்கிழமை சத்தம் இன்றிக் கொன்றார்கள் ஞாயிற்றுகிழமை நஞ்சு விட்டுக் கொன்றார்கள் ஏழு நாளும் இரக்கமின்றிக் கொன்றார்கள் விடிகாலையிலே வீடு வந்து கொன்றார்கள் மதியவேளையிலே மோட்டார் அடித்துக் கொன்றார்கள் பின்னேரத்திலே பிடித்துச் சென்று கொன்றார்கள் இராப்போழுதினிலே ராக்கெட் விட்டுக் கொன்றார்கள் அமாவாசையில் அடித்து அடித்துக் கொன்றார்கள் பௌர்ணமியில் பட்டினி இட்டுக் கொன்றார்கள் கரிகாலத்திலே கற்பழித்துக் கொன்றார்கள் சுபயோகத்திலே சிரமறுத்துக…
-
- 2 replies
- 1.6k views
-
-
கையில்லதவனும் கால் இல்லாதவனும் கண் இல்லாதவனும் சாதிக்கிறான் எல்லாம் இருப்பவன் காதல் தோல்வி என்ற பெயரை சொல்லி சாகிறான் சாவதற்க்கு ஒரு நொடி யோசித்தால் போதும் சாதிப்பதற்க்கு பல நொடி யோசிக்க வேண்டும் நீ சாகப்பிறக்கவில்லை சாதிக்க பிறந்திருக்கிறாய் சாதித்து காட்டு...
-
- 2 replies
- 1.2k views
-
-
பிரிவுகளும் இழப்புக்களும் அடிக்கடி வந்து பழக்கப்பட்டதென்றாலும், வலிகளும் வேதனைகளும் சர்வசாதாரணமென்று நினைத்தாலும், மீண்டும் பார்ப்போம்... என்ற நம்பிக்கையில் பிரியும் போதும் கூட, விழியோரத்தில் கசியும் நீர்த்துளிகள் ... கட்டுப்பாட்டை மீறும் தருணங்கள், கேள்விகள் கேட்டு நிற்கின்றன..... இது உனக்குப் புதியதா?... என்று !!!
-
- 2 replies
- 902 views
-
-
என் இருப்பின் எல்லைக்குள் என் வசமாகுமா? வெள்ளி மீன் சிரிக்கும் வானக் கடலினுள்ளே பிள்ளை நிலா தவழ்ந்துவரும். மல்லிப் பூ விரிக்கும் மோகனப் பொழுதினிலே உள்ளம் என் வசமிழக்கும். படம் விரித்த கடல் நாகம் தரையிலே மோதும். - பாவம் இடம் விட்டு கரைமகுடி அதைத் திருப்பி அனுப்பும். உப்புக் காற்று வந்து - என் உடல் தழுவி, சப்புக் கொட்டி - பல சண்டித்தனம் செய்யும். தப்பென்று யான் முறைத்தால் அப்பால்ச் சென்று தென்னங்கீற்றோடு கை கொட்டிச் சிரிக்கும். பட்டுத் துகிலுடுத்திச் சிட்டுக்குருவி வரும். மொட்டவிழ் மலரினுள்ளே மட்டு எடுத்துக் கொண்டிருக்கும். வட்டமாய் விழி அகல, வெட்டாமல் யான் முழிக்க - தன் குட்டிச் சொண்டாலே, - எனைக் க…
-
- 2 replies
- 1k views
-
-
நான் ஒரு இஸ்லாமியன் இஸ்லாமியக் குடியரசுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் ஒரு இஸ்லாமியன் எனக்கும் எந்திரத் துப்பாக்கிகளுக்கும் பெண்களை இருட்டறையில் பூட்டுவதற்கும் அமெரிக்க டாலர்களுக்கும் கல்லால் அடித்துக்கொல்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் ஒரு இஸ்லாமியன் இறைவனை நம்புகிறவன் அதனாலேயே கருணையை நம்புகிறவன் கடவுளினால் நீதி மறுக்கப்பட்டால் அந்தக் கடவுளை சந்தேகிக்கவும் தயங்காதவன் சமாதானத்திலும் சுதந்திரத்திலும் இறைவனை தொட்டு உணர்கிறவன் மசூதியை இடித்தவனை எப்படி வெறுக்கிறேனோ அவ்வாறே புத்தரின் சிலையை வெடிவைத்து தகர்ப்பவனையும் வெறுக்கிறேன் எல்லா பழங்கால தண்டனைமுறைகளும் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று நம்புகிறேன் நா…
-
- 2 replies
- 679 views
-
-
இன்றைய தேதியில்... மகிமைக்கு உரிய அத்தனை பேரையும், பத்துநாள் பட்டினி போட்டால் திருந்துவார்கள்! அந்தஸ்தோடு ஆட்டிப்படைக்கும் மனித எந்திரங்கள்!! அதிகாரங்களின் அதிகாரங்கள் இவர்கள்!!! அவர்களை நினைத்தாலே போதும் ... ஒலிவாங்கியோடு ஒரு ஒளிநாடாதான் எம் கண்முன் நிற்கும். அதை விட்டால் வேறொன்றும் வராது!? வராதா....????!!!! அடங்குவதும் தாங்குவதும் அவர்களுக்கும் இயல்புதான். அவர்கள் வாழும் முகவரியும் அதே எங்கள் பூமிதான். வலியும் கிலியும் அவர்களுக்கும் இருக்கு. வழியும் சளியும் ... நெளியும் பாம்பும் அவர்களையும் பயமுறுத்தும். என்றாவது ஒருநாளேனும் அவர்களை இயல்பாய் பார்த்திருக்கின்றோமா? பசித்தலும் புசித்தலும்... புசித்தபின் படுத்தலும் , காலையிலெழுதலும் காலைக…
-
- 2 replies
- 849 views
-
-
அர்த்தமுள்ள காதல்....... பெண்ணே.......... நீ... என் இதயத்தில் இல்லாமல் போயிருந்தால் உறக்கம் என் உயிரை உருவிக்கொண்டு போயிருக்கும்...... நீ....என் உணர்வில் உதிக்காது போயிருந்தால் காற்று என் உடலை கரைத்துக் கொண்டு போயிருக்கும்.... நீ.... என்னோடு வாழாமல் போனால் நான் வாழ்வதில் அர்த்தமே யாருக்கும் தெரியாமல் போய் விடும்........ >>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்<<<<<
-
- 2 replies
- 1.3k views
-
-
இது தான் இறுதி தாக்குதல்.....[/color] நேற்று தான் உன் வீட்டில் வெடித்தது குண்டு சிதறின உன் உடலில் பல துண்டு... ஓடிய குருதி காய முன்னே ஓடி வருவாயா எல்லையில் நீ என்ன...??? வேதனை தான் உனக்கு அதற்க்காய் ஏன் புலம்புகின்றாய் பொன்சேகா...??? வாகரை என்ன உன் வாசல் படியா....??? எங்கள் வீட்டுக்கு ஏறி நீ வருவாயா வா... பந்தி வைக்கின்றோம் உனக்கு நீ முந்தி வா.... முறிந்து விழுந்த உன் முதுகெலும்பு எங்கே..?? சிதறிய உன் சதை துண்டெங்கே...?? தேடி எடுக்க இங்கு வாராயா வா.... சுற்று மதில் காவலுற்குள் சுற்றி நீ இருக்க சுற்றி வந்துன்னை சுழன்றடித்தோம் அதற்குள் மறந்தாயோ...??? அகந்தை கொண்டாயோ...??…
-
- 2 replies
- 1.2k views
-
-
[size=4]இனியவளே என்னுள் இருக்கும் உன் நினைவினை அழித்துவிடலமென்று நினைக்காதே அந்த சூரியன் கூட என்னை எரிக்கலாம் ஆனால் என்னுள் இருக்கும் உன் நினைவினை அழிக்க முடியாது நான் உயிருடன் இருக்கும் வரை...[/size]
-
- 2 replies
- 873 views
-
-
http://www.youtube.com/watch?v=t71oJeY1OVQ ஆடுவோம் கண்ணா எழும்பிவாட இருவரும் விளையாடுவோம் இன்று பகல் முழுதும் ஆசையாய் கேட்டால் ஆர்வமில்லை ஏனோ ஆரும் இல்லை எனக்கு சேர விளையாட கால்கள் நான்குண்டு குத்திக்க எமக்கு கனிந்த பெரு மனம் உண்டு களிக்க, குலவ.. .. ஆடுவோம் காலத்தை போக்காதே கவலையில் துள்ளி எழுந்தால் தோகை விரித்தால் நம் தனிமை துயரம் பறக்கும் ஒரு நொடியில் தூரம் போய் நாம் தேசம் பல பார்த்து, நாட்டை சுத்தி நுனி மூக்கால் நீண்டமோப்பம் நெடுநேரம் போட்டு, துடுக்கு பல செய்து துயரத்தை போக்கி.. ..ஆடுவோம்.. ஒட்டிக்கொள்ளாதே சுவரோடு தோழா உன்னைபோல் ஒழிவதற்கா இந்த உலகம் என்கரத்தை தட்டினால் எவர் உண்டு எமக்கு கள்ளத்தில் படுக்காதே கவலைதான் மிஞ்சும், காலம் இளம் காலையும…
-
- 2 replies
- 742 views
-
-
கட்டிலில் நான் கன்னியிடம் கண்ட சுகம் கடைசிவரை வருமா கனவு மெய்பட கடவுள் அருள் தர வேண்டும்😂
-
- 2 replies
- 751 views
-
-
எப்போது விடுதலை எம் கைகள் எப்பொழுது அவிழ்க்கப்படும்? நினைத்ததை எழுதவும் எழுதியதை மீண்டும் நாம் படிக்கவும் காலம் வருமா? என்ன பிழை செய்தோம் ஏனிந்த காலவரையறையற்ற தண்டனை கொச்சைப்படுத்தியோரை பேனா கொண்டு தாக்கினோம் இது தப்பா? நாலு பேர் சிரிக்க மஞ்சல் தடவினோம் நாலு பேர் இன்பம் பெற நீலம் தடவினோம் இது பெரும் தவறா? மாதங்கள் வந்தன வருடங்களும் வந்தன 16 வயசுக்கொண்டாட்டமும் வந்தது விடுதலையை எதிர்பார்த்தோம் அப்படியே எமது கோரிக்கை நிராகதியாய்க்கிடக்கிறது நம்வீட்டுக்கதவை தட்டும்வரை தூங்கிப்பழகிவிட்ட இனம் இங்கும் அப்படியே தொடர்கிறது........... இன்னும் இரு சொற்கள் எழுதினால் மரண தண்டனை கைகள் கட்டப்பட்டு வார்த்தைக்கு வார்த்த…
-
- 2 replies
- 737 views
-
-
நிழல் சொல்லும் நிஜங்கள்!! கண்ணுக்குள் இமையாக காதல் உணர்வையே இசையாக நெஞ்சுக்குள் முள்ளாய்......... காற்றே நீ மூசு, பின்.......கண்களாய் மோதிப் பார்க்க வந்தாயா--!! வெளிச்சத்தைக் கொண்டு ....... விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 2 replies
- 1.2k views
-
-
போராடிப் பெருவீரர் சாய பிழை பிடித்த இனம் தமிழினம் பலநூறாய் பொதுமக்கள் சாக பண்டிகை எடுத்த இனம் தமிழினம் எதிரியின் எச்சில் இலைக்காக ஏவல் செய்யும் இனம் தமிழினம் சிறீலங்கா கிரிக்கெட்டில் ஜெயிக்க சிரித்து மகிழ்ந்த இனம் தமிழினம் தமிழீழம் தவித்து ஏங்க தமிழகத்தில் தூங்கிய இனம் தமிழினம் மண்ணில் தோன்றிய இனங்களிலே மானங் கெட்ட இனம் தமிழினம் http://gkanthan.wordpress.com/
-
- 2 replies
- 1.1k views
-
-
என் உழைப்பை உறிஞ்சும் வரிப் பணத்தில் கொடிக்கம்பம் நட்டு கொடி ஏற்றும் தினமே மே தினம்..! பஞ்சமும் பட்டினியும் வேலை இன்மையும் கூலி இன்மையும் இன்றும் தொடர்கதை தான் ஆண்டுகள் தோறும் ஒப்புக்குத் தோன்றும் மே தினம் போல்..! ஊழலும் ஏய்ப்பும் நிறைந்த உலகில் இன்னொரு புரட்சி புதிய அடக்குமுறை தாண்டி வெடிக்கும் வரை வராமல் போ கொடுமைகள் மறைக்கும்.. மே தினமே..!
-
- 2 replies
- 507 views
-
-
மறதி ஒரு தூக்கமாத்திரை அது எங்கெங்கும் இலவசமாக வழங்கப்படுகிறது அது நமக்கு நடந்தவை எதுவும் நமக்கு நடந்தவை அல்ல என்று நம்ப வைக்கிறது துரோகத்திற்கும் அவமானத்திற்கும் நம்மைப் பழக்கப்படுத்துகிறது நினைவுகள் இனி படிக்கப்பதற்கான கதைகளே என அது நம்பத் தொடங்குகிறது … பிறகு அவை இன்னும் ஒரு முறை எதிர்காலம் என்ற நம்பிக்கையைத் தருகின்றன -மனிஷபுத்திரன் http://www.ilankathir.com/?p=4695
-
- 2 replies
- 1.6k views
-
-
யுத்தக்கல் சுமக்கும் சிறுவன் தீபச்செல்வன் ஒற்றைக்காலுடன் இழுத்துச் செல்லும் சிறுவனுக்காய் திறக்கப்பட்டிருக்கிறது குண்டுகள் கொட்டப்பட்டு குழிகள் வீழ்ந்த நகரம் செல்துளைத்த ஓட்டைக்குள்ளால் பள்ளியிலிருந்து பார்த்த பொழுது அழிவில் முழுநகரும் தோய்ந்திருந்தது வலிக்காத கால்களுடன் நகரத்தில் திரிகையில் ஒரு கையில் அம்மாவும் மறுகையில் அப்பாவும் இருந்தனர் யாருமற்ற நகரில் ஊன்றுகோல்களை அவன் பிடித்திருந்தான் கால்களற்ற சிறுவர்கள் தவழ்ந்தலையும் கனவு நகரில் விளையாடும் குழந்தைகளில்லை குழந்தைகளின் பூங்காவில் யுத்தக் கல் நிறுத்தப்பட்டிருந்தது கால்கள் முதல் எல்லாவற்றையும் இழந்த குழந்தைகளுக்கு தோல்வியை நினைவுப…
-
- 2 replies
- 574 views
-
-
இரக்கப்பட்டு கவிதை எழுதவில்லை ..... அவர்கள் என்னை விட எம்மை விட .... இரக்கமானவர்கள்.......!!! உணர்ச்சிவசப்பட்டும் எழுதவில்லை ..... அவர்கள் உணர்ச்சிகளை அடக்குவதில் .... என்னை விட எம்மை விட ..... உன்னதமானவர்கள் ......!!! தியாக உணர்விலும் எழுதவில்லை ..... அவர்கள் என்னை விட எம்மை விட .... தியாகத்தின் உச்சமானவர்கள் .......!!! காதல் வயப்பட்டும் எழுதவில்லை .... அவர்கள் என்னை விட எம்மை விட .... காதல் உள்ளம் நிறைந்தவர்கள் .....!!! உடன் பிறப்புகளோடு பிறந்து ..... உண்மையான இரக்கத்தை பகிர்ந்து ..... பருவவயது வரும்போது உடலில் .... பருவமாற்றம் சிறிது மாறும்போது .... தாம் விரும்பும் பருவத்தை விரும்பி .... வாழமுடியாமல் தவிர்க்கும் .... உணர்வுகளை உணர்ச்சிகளை ..... அடக்கி அடக்கி வாழும் ...…
-
- 2 replies
- 516 views
-
-
குர்து மலைகள்பெண் கொரில்லாக்கள்ஏந்தியிருக்கும் கொடியில்புன்னகைக்கும் சூரியனின் ஒளி அக்ரா நகரெங்கும் பிரகாசிக்க ஜூடி மலையிலிருந்து மிக நெருக்கமாகவே கேட்கிறது சுதந்திரத்தை அறிவிக்கும் குர்துச் சிறுவனின் குரல் போர்க்களத்தில் மாண்டுபோன கணவனுக்காக யூப்ரட் நதியிருகே ஒலிவ் மரம்போல் காத்திருக்கும் பெண் ஒருத்தி இனி அவன் கல்லறைக்கு கண்ணீருடன் செல்லாள் ஓய்வற்ற இக்ரிஸ் நதிபோல தலைமுறை தோறும் விடுதலை கனவை சுமந்து சுதந்திரத்தை வென்ற உம் இருதயங்களில் பூத்திருக்கும் பிரிட்டில்லா மலர்களின் வாசனையை நான் நுகர்கிறேன். குருதி ஊறிய குர்து மலைகளே உமது தேசம் போல் எமது தேசமும் ஒர்நாள் விடியும் எமது கைகளிலும் கொடி அசையும் கோணமலையிலிருந்து உமக்குக் கே…
-
- 2 replies
- 1.2k views
-