கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
ஏங்கும் மனதாலும் தாங்கும் செயலாலும் தூங்கும் நிலை மறந்து தூயதான விடியலிற்காய் தூய்மைகள் அங்கே வியூகமாய் பொங்கும் நாள் தேடி பூம்புனல் தானாகி எங்கும் மங்களமாய் எங்கள் மண் எமதாக்க துய்ப்பதற்காய் சுதந்திரத்தை தூயவர் அவர் படைக்க,கங்குலாகியவர் களம் காண நோக்குகையில், புலம் பெயர்ந்து நிலம் நோக்கும் பலம் வேர்க்க உளம் நோகும் இங்கெவர்க்கு பொங்கல் இதமாக இனித்திருக்கும் இனம் நோக இதனை நீ இயல்பாக நோக்காதே ஈழ மலரங்கு, ஈகையாய் முரசொலிக்க மண்வாசம் நமதாக மனமெல்லாம் நிறைவாக இனியவர்களுடன் இழைந்திருந்து இயல்பாக பொங்குதலே இமயமான , இங்கிதமான இணையிலாப் பொங்கலாகும்.
-
- 0 replies
- 739 views
-
-
எம் மக்களுக்காய் ஓர் முயற்சி... கவிதை..... பலகாலம் தொடரும் தமிழரின் பேரவலம் இருந்தும் சிலவாரம் அதற்கெல்லாம் ஓர் சிகரம்..... கவிதை வடிக்கவென்று கணனிமுன் உட்கார்ந்தால்..... காணும் காட்சியெல்லாம் எங்கள் உறவுகளின் இரத்த வெள்ளம்.... ஐயோ..மனது பொறுக்கல்லையே மனமும் அதைப் பார்க்க மறுக்கிறதே இதை உலகுக்கு அறியவைக்க என் அறிவுக்கு யோசித்தேன்..... பெரும்பாலும் உங்களுக்கு தெரிந்திருக்கும் இருந்தும் சொல்லுகிறேன்.... ஏற்கனவே தெரிந்திருந்தால் என்னை மன்னித்திடுங்கள் தெரியாமல் இருந்திருந்தால் என் அறிவுரையை ஏற்றிடுங்கள்... நீங்கள் பார்க்கும் கொடூரக் காட்சிகலில் 'மவுசை' ரயிற் கிளிக் பண்ணிடுங்கள் அங்கே…
-
- 4 replies
- 891 views
-
-
கடந்துவிட முடிந்தாலும் தொடர்கின்றன ஒருபகல் நிலவைப்போல இறந்துபோன நேசிப்புகளும் காயங்களும், சப்தங்களை பிரிந்த சங்குகளாய் வெதும்புகின்றன இன்றைய பொழுதுகளில் - இந்த இதயத்தின் துடிப்புக்கள்.. விழிகரைந்துருகி விடை கொடுத்தும், கரைந்துமழிந்திடாத நதிக்கரை படுக்கைகளாய் உள்நிறைந்து போகிறது நேசிப்புக்கள். நல்ல நிலக்காலங்களிலும், சில அதிகாலைகளிலும், தேவதைகள் இறங்கிஅலங்கரிக்கின்றனர் நேசிப்பு மீதான கனவுகளை, நேசிப்பின் கொடிமரங்களில் அலங்கரிக்கப்பட்ட கனவுகள் அறைந்துகொள்கின்றன தங்களை, நிதர்சனங்களின் வலிகளை சுமந்து மௌனமாக, இந்த மௌனங்கள் திரண்டொரு பெரும் ஒலிக்குறிப்பாய் எழும்! அது ஒரு, நேசிப்புக்கான மரணத்தை உங்கள் முகங்களில் அறையும்.
-
- 7 replies
- 957 views
-
-
எங்கட ஊருக்கும் மின்சாரம்...!!!! எங்கட ஊருக்கும் மின்சாரம் - இனி அவுணில சுடலாம் பணியாரம் சும்மா குடுக்கிறாங்களாம் எல்.சி.டி இனி எல்லா வீட்டிலயும் சண் டி.வி படிப்பு தான்ரா எங்கட சொத்து வச்சான்ரா ஆமிக்காரன் அதுக்கு ஆப்பு ஆருக்கு வேணும் தமிழீழம் அதை மறந்து நாங்கள் கனகாலம்..!!! தூந்து போன துயிலும் இல்லங்கள் மறந்து போனாலும் மனச்சாட்சி கொல்லும் லாம்பு விளக்கில் மங்கிய இரவுகள் இனி ரியூப்பு பல்ப்பில் பளபளக்கும் கனவுகள்..! அன்றைய இரவில் நிலவும் நச்சத்திரங்களும் கூட இருந்தன மங்கிய வெளிச்சத்திலும் தெளிவாய் நடந்தோம் இரவுகளின் நீளங்கள் தெரியாமல் வாழ்ந்தோம். இனி ஆருக்கு வேணும் தமிழீழம் அதை மறந்து நாங்கள் கனகாலம்...!!! எங்கட ஊருக்கும் மின்சாரம்-இனி அவுணில ச…
-
- 8 replies
- 1.4k views
-
-
தலைவனுன்னா… மக்கள் விட்டு எட்ட நின்று.. குளிரூட்டி வாகனத்தில் தான் மகிழ்ந்திருந்து.. வெயில் காய்ந்த புழுதி குளித்த வியர்வை வழிந்தோடும் மக்கள் முன்.. கசங்காத வெள்ளை வேட்டி மேடை தரிசனம் தந்து.. வலு விழந்த வாழ்விழந்த சொந்தங்கள் முன்.. நாலு வார்த்தை நயவஞ்சகமாய் உதிர்த்து… எதிரி தாழ் பணிந்து சூழ்ச்சி மகுடம் சூடி… கேட்ட கேள்வி நேரிடைப் பதில் இன்றி மேவிப் பேசி.. வாய்கிழிய தத்துவம் பேசி… புத்திசீவித்தனம் என்று தலைக்கன ரவுடீசம் செய்து நடப்பவனல்ல..! தானைக்கும் தலைவன்… தமிழர் தரணிக்கும் பரணிக்கும் சொந்தக்காரன் தமிழர் தளபதி… தகுதி விகுதி என்றின்றி… தமிழ் தாயை தரையில் வந்து அவள் நிகராய் நின்று கையெடுத்து வணங்கி.. அவள் புரியும் மொழி கொண்டு …
-
- 12 replies
- 1.3k views
-
-
மானத்தை தேட ஒரு வெளிச்சம் என்னும் ஒளிர்கின்றது நீயும் மனுசன் என்று கூறி உயிர் எரியும் வாசம் வீசுகின்றது பெருக்கெடுத்து ஓடும் குருதியின் மேல் மிதந்து வரும் தீபங்கள் தலை குனிந்து மண்டியிட்டு கூனிக் குறுகியவர்களின் தோழ்களை எப்போதும் தொடும் ஒரு நேச நெருப்பு எல்லாம் இழந்த பின்பும் பயம் சூழ அடிமைத்தனம் வந்த பின்பும் எட்ட இருந்து ஏவல் செய்யும் என்போன்றவர்களும் தூய ஒளியின் முன் குற்றவாளியாய் நிற்கின்றோம் நாங்கள் தவறுடன் தான் பிறக்கின்றோம் தவறை நியாயப்படுத்துவோம் தவிர எப்போதும் திருந்தியதில்லை திருத்தம் பெற்ற ஒளிகள் திசை காட்டி நிற்கின்றது எதிரி கருமேகமாய் கவிழ்ந்து எங்கள் நிலத்தை மறைத்தான் எங்கள் துரோகங்கள் புயலாய் வ…
-
- 8 replies
- 1.6k views
-
-
உள்ளிருந்து ஒரு குரல் 'உள்ளிருந்து ஒரு குரல்'நிகழ்ச்சியை கேட்ட இங்கே அழுத்துங்கள் 'உள்ளிருந்து ஒரு குரல்'நிகழ்ச்சியைத் தரவிறக்கிக் கேட்க இங்கே அழுத்துங்கள் (உள்ளிருந்து ஒரு குரல் என்ற கவிதையை நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். காலத்தை பிரதிபலிக்கும் இக் கவிதையை ஒலிவடிவில் தருகிறோம். எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படாமையால் கவிதைக்கு உரியவரின் பெயர் சேர்க்கப்படவில்லை. எழுதியவரின் பெயர் அறிந்தால் அஞ்சலிடுங்கள் சேர்த்துக் கொள்வோம்)
-
- 1 reply
- 724 views
-
-
நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்? காலியில் எங்கள் கழுத்து வெட்டப்பட்ட பொழுது நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! மூதூரில் சிறுமிகளை வன்புணர்வு குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தினேர்கள் நீங்கள் தமிழர் இல்லை -முஸ்லிம்கள். கொழும்பில் குற்றுயிரும் குலையுயிருமாய் நாம் எரிக்கப்பட்ட பொழுது நீங்கள் வாய்புதைத்து பேசா மடந்தைகளாய் இருந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! அடங்கிக் கிடந்த நாங்கள் ஆயுதம் ஏந்திக் களம் புகுந்த பொழுது உங்களில் எல்லோரும் எங்களுக்குக் கைகொடுக்க வரவில்லை. ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! ஆனால…
-
- 2 replies
- 1.8k views
-
-
ஓராண்டை இழுத்து வந்துவிட்டது காலம் உன் நினைவுகள் தா(தே)ங்கிய மனங்களில் நீ எத்தனையோ அடையாளங்களாய்..... தேசம் தேசியம் என்றெல்லாம் கனவுகள் நிரம்பியல்லவா உனது கடிதங்களை எழுதினாய்...! ஒவ்வொரு தோழமைப் பிரிதலின் முடிவிலும் உரமூட்டி உரமூட்டியல்லவா உன்னைத் தீட்டிக்கொண்டாய்....! உனதும் உன்போன்ற தூயவர்கள் கனவுகளிலும் காலம் இப்படியொரு கோலம் வரையுமென்று கனவில்கூட எண்ணாத ஒரு பொழுதொன்றில் எங்கள் கோட்டைகள் சிதைவுறத் தொடங்கியது.... எங்கள் கொள்கைகள் நலிவுற்றுச் சாகத் தொடங்கிய நாளில் நீ ஞானிபோய் சொன்னாயாம்.... மேமாத முடிவுகளைத் தைமாதமே உரைத்த நீ மாசி27 கிபீரடியில் உன் கொள்கையும் இலட்சியமும் தமிழீழ தேசத்தின் கனவுடனே கரைந்த…
-
- 3 replies
- 826 views
-
-
போதுமடா சாமி! கட்டிய கோவில்களும் போதும் வெட்டிய புதைகுழிகளும் போதும் அமைத்த ஆலயங்களும் போதும் தொலைத்த உறவுகளும் போதும் எரித்த தீபங்களும் போதும் எரிந்த சடலங்களும் போதும் படித்த பஜனைகளும் போதும் வடித்த கண்ணீரும் போதும் எடுத்த காவடிகளும் போதும் கடித்த குப்பிகளும் போதும் இழுத்த சப்பரங்களும் போதும் இழந்த சரித்திரங்களும் போதும் படைத்த படையல்களும் போதும் கிடைத்த வெகுமதிகளும் போதும் சாமியால் பிழைத்த மனிதர்களும் போதும் மனிதரால் பிழைத்த சாமிகளும் போதும் போதாமல் இருப்பதின்று மனிதருக்காய் வாழும் மனிதர்கள் http://gkanthan.wordpress.com/index/saami/
-
- 5 replies
- 1.1k views
-
-
ஆயிரம் தான் கவி சொன்னேன்--அன்னையருக்கு சமர்ப்பணம் https://www.facebook.com/photo.php?v=864189466928913
-
- 0 replies
- 971 views
-
-
காதலுக்குள்ளும் மனிதத்திற்குள்ளும் கரைந்துவிட்ட நேசம் பணத்திற்குள்ளும் பகட்டுக்குள்ளும் பனித்துளியாகி விட்ட பாசங்கள் உறவுகளை தேடி உரைத்திட மொழியின்றி படித்திட வரியின்றி கண்களில் கண்ணீர் கனவுகளும் கற்பனைகளும் காணமல் போய்விட்டது சோகமும் வேதனையும் கண்ணுக்குள் வந்து விட்டது தேற்றுவார் அன்றி தேடுவார் அன்றி இருக்கும் காலமும் வந்துவிட்டது தேடவேண்டும் உணர்வுகளை சல்லடை போட்டு அவர்களிடம் வழியும் கண்ணீரை துடைத்திட மனமின்றி வழி மேல் விழி வைத்து காத்திருந்த உறவுகள் நீலக்கண்ணீர் வடித்து நிஐம் என நிருபிப்பார்கள் வென்றிட வழியின்றி வெற்றியின் பாதையில் அநியாயங்கள் ஆனந்தமாய் அரவணைத்து ஆறுதல் சொல்பவர்கள் போல் ஆயிரம் முறை ஆப்பு வைக்க …
-
- 25 replies
- 4.2k views
-
-
நானும் காற்றில் கத்தி வீசுகிறேன் நானும் காற்றில் கத்தி வீசுகிறேன் யாரின் முகமூடி கிழிக்கவோ திறந்த முகத்தில் குத்தி கூர்பார்கவோ அல்ல எமக்கான விளையாட்டு காற்றில் கத்தி வீசுவது என் தூரம் அறிந்தே வீசுகிறேன் எல்லைக்கு உட்பட்டு மழுங்கிய கத்தி கொண்டே வீசுகிறேன் காற்றை கிழிக்கும் ஓசை எனக்கானது காற்றின் அறைகூவல் வீசட்டும் மணலில் கத்தி சொருகி நிலை கொண்டிருப்பேன் அது ஓயும்வரை ஒளி, ஒலி பிழை இருக்கலாம் காற்றை கிழிப்பதில் இருக்கிறது விளையாட்டின் வெற்றி எனக்கும் பிரிகையில் காற்றுக்கும் இதுவரை தோற்றாலும் இது ஒரு விளையாட்டு அவ்வளவே! http://pakkam5.blogspot.com/2006/05/blog-post…
-
-
- 339 replies
- 121.5k views
- 3 followers
-
-
ம(ர)ணமாலை பச்சை நிறமறியா.. இறுகிக்கிடந்த மன வெற்றுநிலத்தில் வந்து விதை போட்டாள்.. வெளியில் கிடந்த விதை...இளகி.. முளைகள் விட தன்னைப் படுத்தியே.. தண்ணீர் ஊற்றினாள்.. தன் கையைக்கீறியே.. செந்நீர் ஊற்றினாள்.. காளை மனதிலே ஈர கங்கை பாய்ந்தது.. காதல் முளைத்தது.. காலம் இனித்தது.. பார்வையில் உயிரைப் பகிர்ந்து பாவையின் மடியில் துயின்று... இதழ்களை இதழ்களால் இழுத்ததும்..குளித்ததும்.. இருபது விரல்களும்.. பனியில் தளிராய்.. இறுகிக்கிடந்ததும்.. ஊரை இருட்டென ஏய்த்து உயிருக்குள் தீப்பந்தம் கொழுத்தி வைத்திருந்ததும்.. தெளிந்த நீலவானில் ஒரு விண்கல புகையின் கோடாய் கூட்டத்தில் காதல் ஜோடி..கூடித்திரிந்தது.. …
-
- 25 replies
- 3.9k views
-
-
-
03.04.2002 அன்று யாழ் இணையத்தின் முன்னைய களத்தில் எழுதிய கவிதை காலத்தின் தேவை கருதி இங்கு இன்று அடக்கியாண்ட சிங்களமே அடங்கிப் போய்விடு பதுங்கியிருந்த புலி இப்ப பாயத் தொடங்கி விட்டது... இருண்டுகிடந்த எம்மண்ணில் வெளிச்சம் வந்துவிட்டது.. மறைத்துவைத்த சூரியனை வெளிக் கொணர்ந்து விட்டோம்.. கருவறைக்குள் வஞ்சம் கொண்டு எம்மை கல்லறைவரை சென்று அழித்தாய்... எம்மினம் கல்லறையென்ன உன்தன் கருவறை புகுந்தே அழித்துவிடும்.. படித்துவிட்டான் தமிழன் உன்தன் நாசகார பாச வேலைகளை... கூலிப்படை கொண்டே எம்மை கொடூரமாக கொண்றாய்.. தன் மூளையை கொண்டே உன்னை இன்று புலி அடிபணிய வைத்துவிட்டது.. தலைவன் பிறந்த மண் இது... இங்கு ஒரு தளிர் வாட விட…
-
- 1 reply
- 753 views
-
-
நந்திக் கடலும், கிளாலி நீரேரியும், வற்றிப் போகாமல், வாழ்வழிந்த உறவுகளின் கண்ணீர், வடிந்தோடி நிறைத்திருக்க, வடக்கிலும், கிழக்கிலும். வசந்தம் தேடியவர்களின், வாடிப் போன முகங்களில், கோடுகள் மட்டும் விழுகின்றன! அரேபியாவின் பாலைவனங்களை, அழகு படுத்தும் 'பிரமிட்டுக்களாக'; அரைக் காசுக்கும் பயனில்லாத, அபிவிருத்தித் திட்டங்கள் ஆயிரமாய் அரங்கேறுகின்றன! அந்தக் காலத்து வாழ்வில், ஆடம்பரங்கள் இல்லை! அரை வயிற்றுக் கஞ்சியும், ஆனையிறவின் அசைவில்! ஆனாலும் வாழ்வில், அர்த்தம் இருந்தது! வளவைச் சுற்றி வர, வேலிகள் இருந்தன! விடி வெள்ளி கூட. அருகில் நெருங்கியது! யாருக்குத் தெரியும்? விட்டில் பூச்சிகளுக்கு, விளக்கு வைக்கப் பட்டிருகிறதென்று! …
-
- 21 replies
- 2.4k views
-
-
யார் சொன்னது வழிந்தோடும் என் இளமைக்கால நினைவுகளை மேய்ந்தபடிபோகும் வயல்க்கரை மாடுகளின் பாசைகளைப் புரிய முடியாதென்று...? யார் சொன்னது நான் தொலைத்துவிட்ட சிறுவன் நடந்துதிரிந்த வீதிகளில் எஞ்சியிருக்கும் புறாக்களினதும் புலுனிகளினதும் கவலைப் பாட்டினை விளங்கமுடியாதென்று....? யார் சொன்னது வெட்டைக் காணிகளின் சம்புப் புற்களுக்கிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குந்தியிருக்கும் தும்பிகளின் இறக்கைகளில் இருந்துதொடங்கும் என் பால்யகாலக் கவிதைகளைப் படிக்க முடியாதென்று...? அவைகளின் மொழிகள் உனக்கெப்படித் தெரியுமென்ற வியாக்கியானங்களை விலத்திவையுங்கள்... அவைகளின் மொழிகளில்தான் மீட்டிக்கொள்கிறேன் கிழித்து வீசப்பட்டதால் பொருளை இழந்துப…
-
- 13 replies
- 2.5k views
-
-
தேசத்தின் புன்னகை - இன்குலாப் மறுகரையில் தேற்றுதலின் தணியாத விசும்பல் கேட்கும் மரத்துப் போகாத செவிகளில். மாவீரர் விரும்பாத ஒப்பாரி காலம் காலமாய் மக்களின் மனசிலிருக்கிறது. இன்றென் சொல்லும் கண்ணீரில் நனையட்டும்! பகைநடந்ததற்குச் சாட்சியங்களான கருகிய பனை தென்னை ஊடாக நாங்களும் நடந்திருந்தோம். சிதைந்து கிடந்த டாங்கியும் சிதறிக் கிடந்த ராக்கெட் கூடுளும் பிணமாய் மிதக்கும் எதிரியின் கப்பலும் முடிந்த யுத்தத்தின் மிச்சங்களாகுமோ? கண்ணி வெடிகளுக்குப் பக்கத்திலேயே புதைந்து கிடக்கும் விதைகள் பசுமையாய் முளைவிடும் என்ற எல்லோருக்குமான எனது நம்பிக்கையும் துளிர்க்குமோ? கருகுமோ? உப்பு மிளகாய் அரிசி மருந்துகூட ஆயுதமாய்த் தடைப்பட்ட …
-
- 0 replies
- 988 views
-
-
என் உயிர் எழுத்தே!! அன்பே அன்பே அன்பின் அன்பே என்பை உருக்கி நின்றால் கூட அன்பைக் காட்டும் அன்பே அன்பால் உன்பால் இணைந்தேன் அன்பே அதனால் என்னுள் உயர்ந்தேன் நானே!! ஆறுதல் தரும் ஆருயிர் நீயே ஆறாய் என்னுள் பாயும் தமிழே ஆரிருள் நீக்கிட என்னுள் வந்தாய் செல்லம்! ஆறுதல் என்றும் உன் திருமடியே! இடிகள் கூடத்தாங்கும் இதயம் பழிகள் தாங்க முடியாப்பொழுதில் இன்னிசை தந்து இன் தமிழ் தந்து இன்னல் போக்கி இன்பம் தந்து இணைத்துக்கொள்ளும் இன்னுயிரே இசைந்தே நிறைந்தேன் உந்தன் மடியே!!. ஈட்டி போல குத்தும் வார்த்தைகள் கேட்டதும் உடனே வாடிவிடுவேன்!! ஈர்த்தாய் உன்பால் இணையில்லாத் தமிழால் ஈரம் உள்ள நெஞ்சைக் கண்டேன்…ஈரேழுலுகமும் வாழ்த்தவேண்டும் ஈடில்லா உறவே உனைச் சேர்ந்திட வேண்டும…
-
- 8 replies
- 1.8k views
-
-
காலச்சிதைவின் துர்க்கனவிலிருந்து உயிர் பெற்றெழுமெனை மறுப்பின்றி இறந்தவன் எனக்கொள்க. ஒளிப்பொட்டில் கரைந்தழியும் இருளின் மறைப்பில் நீளுமெனது நிர்வாணம் காலத்தால் வாழ்ந்தவன் எனக்கொள்க, சாத்தியமேயில்லாத இரண்டாம் உயிர்த்தெழுகை நடுங்குமிந்த இரவுகளில் நிகழ்ந்துவிடக் கூடுமென்ற அச்சத்தில் விழிகளை திறந்து போட்டிருக்கிறேன். கபாலத்தைப் பிளப்பது போலொன்றும் இலகுவாயில்லை காலத்தைப் பிளப்பது. பெயரை அழித்துவிடுதலும் எனைக் கொன்றுவிடுதலும் வேறுவேறாயினும் ஒன்றென்பதுபோல எதுவுமே இலகுவாயில்லை. நேற்று நேற்றாயிருந்தது இன்று ந…
-
- 1 reply
- 724 views
-
-
கொள்ளை நோய் அகதிகள்- மனுஷ்ய புத்திரன் March 29, 2020 - மனுஷ்ய புத்திரன் · இலக்கியம் கவிதை கொரோனோ கொள்ளை நோய் அகதிகள் மனுஷ்ய புத்திரன் அங்கு கைவிடப்பட்டவர்களின் மிகப்பெரிய ஊர்வலமொன்று சென்றுகொண்டிருக்கிறது போர்கள் வருவதற்கு முன்பு அகதிகள் வந்து விடுகிறார்கள் கொள்ளை நோய் பரவுவதற்கு முன்பு கொள்ளை நோய் அகதிகள் புறப்பட்டு விட்டார்கள் பெரியவர்கள் குழந்தைகளையும் முதியவர்களையும் சுமந்துகொண்டு அவர்கள் கடக்க முடியாத விதியின் தொலைவொன்றைக் கடந்துகொண்டிருக்கிறார்கள் சிறுவர்களும் சிறுமிகளும் தட்டு முட்டுச் சாமான்களை சுமந்தபடி நடந்துகொண்டிருக்கிறார்கள் கால்முறிந்த மனைவியை சுமந்துகொண்டு …
-
- 0 replies
- 667 views
-
-
காங்கேசன் துறைவீதியில் இணுவைப்பதியின் எல்லையை இரு கூறாய் சமமாய்ப் பிரித்தால் ஊரின் நடுவில் உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த மரம். புதிதாய் எங்கள் ஊர் வருபவர்களுக்கு புரியும்படி சொல்லி வைக்கும் அடையாளம். சீனிப் புளியடி பெயர் சொல்லும்போதே நா இனிக்கும் . எங்கள் பள்ளி கூட புளியடிப் பள்ளியென்றுதான் புவி எங்கும் அறிமுகம் குடை போல விரிந்த மரம் குளிரோடு தந்த நிழலில்தான் இடைவேளையில் அம்மா கட்டித் தந்த இடியப்பமும் முட்டைப் பொரியலும் கவளமாய் களம் இறங்கும். வகுப்பறையில் வராத சங்கீதம் - இந்த மர நிழலில் வரும் என்று லேகா ரீச்சர் எங்களோடு தொண்டை தண்ணி வத்த ச ப சொல்லித் தந்தும் அங்குதான். கண்ணன் பாட்டுக்கு அபிநயம் பழகியதும் அங்குதான் உடற்பயிற்சி வேளை முடிய உற்சாகம் த…
-
- 8 replies
- 675 views
-
-
காதலின் வலி. நீளமான மெளனங்கள்............. நீ பேசியதை விட - உன் மெளனங்கள்...... பேசியவை ஏராளம் வர்த்தைகளை விட வலிமையானவை மெளனங்கள் - என்பதை உன்னைக்காதலித்த போது தெரிந்துகொண்டேன் என்னுள் நானே பேசி......... ஏகாந்ததில் சிரித்து............... அர்த்தமற்ற சந்தோசம் கொண்டாடுவதற்கு நீயல்ல - உன் காதல்தான் கற்றுத்தந்தது............ காதலியே! உனக்காக காத்திருக்கிறேன் கனவுகளை மட்டும் பரிசளித்து சென்றுவிட்டாய் காலமெல்லாம், கண்ணீருடன் நான் உன் வீட்டைக்கடக்கும் பொழுதெல்லாம் இதயத்துள், ஒரு இதமான அவஸ்தை உள்ளே நீ இல்லாவிட்டாலும் கூட காதலின் அவஸ்தைகளை புரியவைத்தவள் நீ ஆனால் உனக்கு மட்டும் அது புரியாமல் போனது ஏனோ?
-
- 7 replies
- 5k views
-
-
பொய் சத்தியம் மனைவியிடம் சத்தியம் வாங்கி பல காலம் விட்டிருந்த சிகிரெட்டைய் யாரும் பார்க்காத நேரம் பற்றவைக்க நினைத்தது குரங்கு ஆனால் ஒளிந்திருந்த மற்றுமோர் குரங்கொன்று கண்டுவிட்டது கடவுளிடம் சொல்லுவதாக சொன்னது பறவாயில்லை அவரை நான் சமாளிப்பேன் என்றது குரங்கு கோவம் வந்த மற்றக் குரங்கு மனைவியிடம் சொல்வதாக வெருட்டி விட்டது. பா.உதயன்
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-