கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
குரங்குகள் கழுத்தில் பூமாலையாக விழுவது தான் எமது புத்திஜீவித்தனத்தின் இறுதி எல்லை குரங்குகள் பிய்த்தெறியும்போது பூமாலைகளில் தான் பிழைகள் இருக்கவேண்டும் என்பதே சிந்தனையின் எல்லை இந்தச் சிந்தனை முறை உயிர்வாழ முற்படும் போதெல்லாம் எல்லோரும் எல்லாமும் அர்த்தமற்றதாக்கப்படுகின்றது மிகச் சுலபமாக இந்தச் சிந்தனை முறை வானுயர்ந்த வீரத்தையும் தியாகத்தையும் அர்த்தமற்றதாக்கிவிடும் எது குறித்து சிந்திக்கவேண்டுமோ எதையெல்லாம் நினைத்து உணர்வுகள் வளரவேண்டுமோ அதையெல்லாம் கத்தரித்து கப்பாத்து பண்ணிவிடும். அடிமைத்தனத்தால் கட்டப்பட்ட மேடைகளில் காட்டப்படும் குறளிவித்தைகளால் தொப்பிக்குள் இருந்து முயலை எடுப்பதுபோல் எமக்காக எதையும் எடுக்க முடியாது ஒருவேள…
-
- 1 reply
- 1.9k views
- 1 follower
-
-
ஒரு தூக்கு கைதியின் கடிதம் http://youtu.be/tsiZx9omDjo
-
- 1 reply
- 418 views
-
-
வதை முகாம் -------------- சதி, திமிருடன் கைக்கோர்த்து - எங்கள் விதியுடன் விளையாடியதால்..... இன்று எம் அம்மையும், அப்பனும் ஆளுக்கொரு முகாமில் அழுகையும், ஆத்திரமுமாய்........ முட்கம்பிவேலி முழங்காலிட்டு நுழையும் கொட்டகை எலும்பும், தோலோடு - என் அண்ணன்களும், தங்கைகளும் ஆடும், மாடுமாய்........ குளிர்ப்பனியோ... கும்மிருட்டோ... சுடுவெயிலோ... கொடும் விடமோ... கடினமல்ல - எம் மக்களுக்கு காட்டிக்கொடுக்கும் கயவனின் கடும் செயலைவிட! சிங்கமுக சொறிநாய்... செருக்குற்ற வெறிநாய்... பிஞ்சையும் புணர்ந்து பேராண்மைப்பேசும் ஓநாய்... துப்பாக்கிமுனையில் துகிலுரிக்கும் கயவனே! உன் அக்காளாய், தங்கையாய் தமிழ்ப்பெண் உனக்குத் தெரியாதோ? அஞ்ச…
-
- 1 reply
- 619 views
-
-
நீ என்னை பார்க்காதே, என் மனம் உன்னை காணாது! நீ ஒன்றும் சொல்லாதே, என் உள்ளம் கேட்காது! கண்முன்னே மறைந்தாயே, கானல் நீர் போல.... உயிர் போகும் நேரத்தில் காண கண் துடித்திருக்கும், உள்ளம் இளகுதடி உன்னை காணமல் போனதற்கு! வராமல் போனதற்கு மன்னிப்பாயா.... தொடரும் தோல்விகளாய், துரத்துதடி ஞாபகங்கள். மாறி போன வாழ்க்கையில், மறந்து போன நினைவுகள் வாழ்ந்த வாழ்க்கையே மாயமாய் போன பின் வாழ்க்கையை துறந்து விட, வயது என்னை தடுக்குதடி! முற்றும் துறந்து நான் முனிவனாய் மாறினால். அங்கும் நீ அமர்ந்திருப்பாய் அம்மன் சிலையாக... வல்லக்கோட்டை முருகா வல்லமை தாராயோ.... சந்திரிகா தேசம் தமிழ் கூடல்.
-
- 1 reply
- 824 views
- 1 follower
-
-
2012 டே எப்படி உனை நான்... ---------------------------------------- மகிழ்ச்சி வெள்ளத்தில் அகதியாய் நான் வாழும் நாடு யுத்தச் சூறாவளியுள் தொலைந்த எம் தேசமே எப்போது எம் வாழ்வில் புத்தாண்டு மலருமென ஏக்கமுடன் பார்த்திருக்கும் குழி விழுந்த கண்களுடன் கூன் விழுந்த தோற்றமுடன் தேற்றுவாரற்ற இனமாக என் இனமே துவண்டு துரும்பாகிக் கிடக்கையிலே எப்படி உனை நான் மகிழ்வோடு... 2012 டே எம்மினத்தின் ஒற்றுமை கொணரும் ஆண்டாக வேற்றுமை களையும் ஆண்டாக எம் தலைநிமிரும் ஆண்டாக மலராதோ மலராதோ...... மலர்விக்கும் கடனெமதானால் வரும் ஆண்டுகள் யாவும் எமதே!
-
- 1 reply
- 728 views
-
-
வற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை -தீபச்செல்வன் 01 வண்டில் பூட்டி வந்து வயல் வெளியிலிருந்து கோவில் முற்றத்தில் பானை வைத்து பாற்பொங்கலிட்டு விடியும் பொழுதுவரை கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில் முகம் பரப்பியிருக்க ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி இம்முறையும் திரும்பவில்லை குருதியூறி ஓலங்களால் நிரம்பிய இதேபோலொரு வைகாசியில் அவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான் சுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க இருண்ட தாழைமரங்களுக்குள் கேட்கும் ஒற்றைக்குரல்கள் அவள் குறித்தொரு இரகசியமும் சொல்லவில்லை உடைந்த குரலில் ஆயிரம் கண்கள் கசிய தனித்தலைபவனின் காலடிகளைத் தொடரும் நாரைகளும் மௌனம் கலைத்தேதும் பேசவில்லை 02 …
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழினத்தை அழிக்கும் அரச பயங்கரவாதிகளுக்கு, சர்வதேச அரங்கில் என்ன விளையாட்டு?. நீ..கைகளைக்கட்டி முதுகினில் சுடுவாய். தமிழ் பெண்களின் முதுகில் காலால் உதைப்பாய். அதற்கும் 'LIKE ' போட முகநூலில் நாலாயிரம் பேர்!. சிங்களப் பேரினவாதமே.. ஒன்றை உற்றுக்கவனி. உன்னில் பத்தாயிரம் பேர் திரண்டிருந்த மைதானத்தில் எம் தேசியக்கொடியுடன் ஒரு தமிழன். Seelan Ithayachandran
-
- 1 reply
- 535 views
-
-
_________________________________ அவர்கள் பெருங்கனவுடனே மரணத்தை முத்தமிட்டனர். கடைசியில் அவர்களின் ஞாபகம் நிரப்பிவிடப்;பட்ட கல்லறைகளும் நம்மிடம் இல்லை. தாய்மார்கள் தீப்பந்தங்களையும் தமது பிள்ளைகளுடன் இழந்து விட்டனர். மனைவிமார்கள் தங்கள் புன்னகையுடன் கல்லறைமீதான தமது சொற்களையும் இழந்து விட்டனர். கனவின் அளவற்ற ஞாபகத்தில் வானம் முட்டிக்கிடக்கிறது. இம்முறை எந்தப் பூக்களும் மலரவில்லை. இலைகளில் குருதி ஒழுக பூமரங்களின் வேர்கள் அறுக்கப்பட்டிருக்கின்றன. தலைகளை மின்கம்பத்தில் மோதி இல்லாதவர்களை அழைக்கிறது நம்பிக்கையற்ற மனம். கனவை உறிஞ்சி எடுத்துக்கொண்டு அவர்களை தின்று முடித்துவிட்டது உலகம். அவர்கள் மீதெழுதப்பட்ட மரணப்பாடல் நெருப்பில் கிட…
-
- 1 reply
- 852 views
-
-
தொலைந்து போகும் அடையாளங்களை தூக்கிநிறுத்துவதற்கு புலிப்பிரமுகர்கட்கும் புலிஎதிர்ப்பு பிரமுகர்கட்கும் மகிந்த வள்ளலானார் இரும்பும் கரும்பாய் இனிக்குமடா இனி…. செயலிறங்கத் துடிக்கும் புலத்து இளையோரை பொறிக்குள் வீழ்த்திட தூதுவராலயத்து தூதுவர்கள் அபிவிருத்திக் குச்சிகளோடு ஊரோடு உறவாட வருகிறார்கள் ஊர்சார் அமைப்புக்களே உசாராகுங்கள் குண்டுமணியளவேனும் எங்கள் சொந்தப்பலத்தில் நிகழட்டும் எங்கள் சொந்தநிலத்திற்கு சேரட்டும் புதிதாய் முளைக்கும் ஊர்ப்பற்றாளரிடம் விழிப்பாயிருங்கள் இயற்கைவளமே எங்கள் பலமென்று வாழ்ந்தவர் நாம் கடலும் வயலும் பனையும் தென்னையும் கனிதருமரங்களும் எங்கள் சொந்தம் எங்கள் நிலத்தில் மூச்சுவிட்டு இருக்கவிடு இராணுவ அரண…
-
- 1 reply
- 804 views
-
-
என்னைக் கவர்ந்த சங்ககாலம் இதுவரை நான் படித்துச்சுவைத்த சுவைத்துக்கொண்டிருக்கின்ற சங்ககாலப்பாடல்களை அவற்றிற்கான சிறு சிறு விளக்க்கங்களுடன். . .
-
- 1 reply
- 1.2k views
-
-
மூதாட்டி: பெற்றெடுத்த முத்துக்களை காணவில்லை பெயர்காக்க ஒரு மலரும் பூக்கவில்லை தள்ளாடும் வயதில் ஒரு தடியும் இல்லை தளராமல் இருக்கும் மனம் எனக்குமில்லை..! முதியவர்: வாடுவதும் ஏனோ என் கண்ணே... தேடுவதும் எதையோ என் பெண்ணே... உன் மணவாளன் நானிருக்கேன் மணியே.. உன் மகனை மறந்து வா தனியே.. மூதாட்டி: பெற்ற மனம் என்றுமே பித்தத்தான் பெற்ற வலி என்றுமே எனக்குத்தான் விட்டுவர கூவுதிங்கே இதழ்தான் விம்மியழ ஏங்குமிங்கே மனம்தான் ! முதியவர்: மணமுடித்த நாளே முடிவெடுத்தேன் மரணம்வரை நான் உடனிருப்பேன்.. மாதரசி உன்னில் நான் கலந்திருப்பேன் மார்போடு உன்னையே அணைத்திருப்பேன் மூதாட்டி: நரைத்த முடியும் நடுங்கும் உடலும் நடவா காலும் நகைப்பது தெரியலையோ? கிழடு தட்டியும் கிண்டலா …
-
- 1 reply
- 578 views
-
-
பெரியதொரு குங்குமச் சிமிழும் சிறியதொரு சாம்பல் பொட்டலமும் போதுமானது... எம் இனத்தை அழிக்க! புரியாத மந்திரமும், அறியாத சடங்குகளும் போதுமானது... எம் சனத்தை கவிழ்க்க!! பால், பழம், தேன், வெண்ணை, சக்கரையென சகலத்தையும் புனிதக் குளியலுக்கு விரையமாக்கும் இடத்தை திருத்தலம் என்கிறார்கள்... திருந்தாத சென்மங்கள்!! பால் வடியும் முகங்கள், பாசத்திற்காக ஏங்கும்போது... "பாவம்" என்று ஒதுங்கி நின்று, பத்து காசை மட்டும் பாத்திரத்தில் போட்டுவிட்டு பாவம் கழிந்ததென பாரினில் பிதற்றிக்கொள்ளும் பாழாய்ப்போன நெஞ்சங்கள்!! வேண்டுதல் எனும் பெயரில்.. வேண்டாத அணுகல்கள்! கூரான ஆயுதத்தால் குருதியின் குவியல்களங்கே.. தானம் செய்ய வேண்டும்போது வானம் அளவிற் வாய்ப்பிளக்கும் பிறவிகள்! தேவையில்லா இடத்தில் விர…
-
- 1 reply
- 554 views
-
-
கூலிப் படையே உனக்கு இரக்கம் இல்;லையா....??? பகை முகாம்கள் காலடியில் எம் சிறார்கள் பிச்சைகேட்டு.... பட்டினியால் தவிக்கையிலே பாவம் அவர் கையேந்தி.... நீ உண்டெறிந்த மிச்சம் கேட்டு உந்தன் முன்னால் நிரையடுக்கில்.... ''பிஞ்சு வந்து கேட்கையிலே எட்டி எட்டி உதையிறியே....'' ஈவ் இரக்கம் இன்றியவரை எள்ளி நடை ஆடுறியே..... முட்டி விழியில் நீர் கொட்ட முண்டியடித்து நிக்கையிலே.... திட்டி திட்டி வந்தவரை எட்டி எட்டி உதையிறியே.... அவர் விட்ட கண்ணீர் கூட உந்தன் இதயமதை கரைக்கலயா....??? ''வறுமை என்று தானே வந்து படையில் நீயும் இணைந்தாயே...'' அட உந்தன் மனம் கூட கொஞ…
-
- 1 reply
- 971 views
-
-
ஊருக்கு ஏற்றார்ப்போல் பேசி... உறவுகளுக்காக நடித்து...... வேலைக்கு ஏற்றார்ப்போல் ஆடி... வேண்டிய மட்டும் பொய் வார்த்தைகள் கூறி... நாட்களை நகர்த்துகிறேன் நான்.... என்னுடைய சுயத்தை இழந்தபடி.... http://www.ilankathir.com/?p=2622
-
- 1 reply
- 718 views
-
-
அங்கே பிணங்கள் விழுந்துகொண்டிருக்கின்றன நாம் ‘எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன? என்று விசாரித்துக்கொண்டிருக்கின்றோம். அங்கே குண்டுகள் வெடித்துக்கொண்டிருக்கின்றன நாம் பட்டாசு வெடித்துப் பரவசப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். அவர்கள் வேட்டையாடப்பட்டுக் கதறிக்கொண்டிருக்கின்றார்கள் நாம் வெள்ளித் திரைகளுக்கு முன் விசிலடித்துக்கொண்டிருக்கின்றோம். அவர்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் நாம் ‘கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?” என்று பட்டிமண்டபம் நடத்திக்கொண்டிருக்கின்றோம். அவர்கள் வெளிச்சத்தின் விளைச்சலுக்கு ரத்தம் சொரிந்துகொண்டிருக்கின்றார்கள் நாம் இருட்டுக்காடுகளுக்கு…
-
- 1 reply
- 1.7k views
-
-
என் உண்னதக் காதலலுக்கு புண்னைகையாய் வாந்தாய் பூவிழிலி ஓரம் நீர்த் துளி வழிவி என மேல் காதல் கொண்டாய் தேன் உதடால் மோகம் செய்து உருமை கொண்டாடினாய் பூ விரல் கொண்டு என் மேனி வருடினாய் அவள் கூந்தல் ஆண்டவன் செய்த கருநீர் அரிவி யார் இவளோ? தேன் அமுதோ? www.tamil1.tk www.tamil.2.ag
-
- 1 reply
- 882 views
-
-
-
பள்ளிக்கூடப் பிள்ளைகள் இடையில் Among the School Children - W.B.Yeats தமிழில் - நோயல் ஜோசப் இருதயராஜ் செல்லுகிறேன் நீண்ட வகுப்பறையின் ஊடே சிறுமுறுவல் சிலவினாக்கள் சிந்திக் கொண்டே; வெள்ளை உடை முக்காட்சில் முதய கன்னி விடைகனிவாய்ச் சொல்லுகின்றாள்: ``சிறுமியர்கள் மெல்லிசைப் பண், வரலாறு, கணிதம், தையல் மேலும் நவ நாகரிகம் கற்கின்றார்கள்`` எல்லோரின் விழிகளும் ஓர் கணவியல்பில் எழுகிறது அறுபதினைக் கடந்த என்மேல்! காணுகின்றேன் நின்றபடி கனவில், ஹோமர் காவியத்து ஹெலன்போன்ற என்றன் காதல் ராணியினை. தாழும் தீக் கணகணப்பில், ராப்போதில் அன்றொருநாள், அரட்டை கேலி வீண் அற்பச் சிறுபிள்ளைத் தனங்கள் எல்லாம் விபரீதம் விளைத்தகதை சொன்னாள்! கேட்டேன்! ஊன்கலந்த…
-
- 1 reply
- 966 views
-
-
மணலிலும் காற்றிலும் கடலிலும் ஒன்றாக சங்கமித்து இன்றும் விடுதலைக்காக காத்திருப்பவர்கள் எங்கள் மாவீரர்கள் விடுதலைக்காக போராடியவர்கள் இன்று விடுதலைக்காக காத்திருப்பதை சிந்திக்காமல் அவர் நினைவு கொண்டாடுவதில் பிரித்து போராடுபவர்களை நினைத்தால் என் நெஞ்சு வெடிக்கிறது நீங்கள் எழுங்கள் ஏனெனில் உங்கள் நினைவுகள் கொண்டாடுவதில் போட்டீ போட்டு உங்கள் நினைவுகளை அழிப்பவர்கள் ஏன் உங்கள் இலடச்சியங்களை சிதைக்காமல் இருப்பார்களா! ஆகையினால் எழுந்து விரைவாக வாருங்கள் உங்கள் நினைவு தினத்தை வைத்து சொத்து சேர்ப்போரும் ஒரு தொகுதியினர் இன்னொரு தொகுதியினர் பணத்திற்க்காக உங்கள் நினைவுகளை சிதைப்பவர்களும் அதுதான் அவர்கள் நோக்கமெனில் கைவிடுங்கள் நிலையற்ற வெறும் மாயைக்கு…
-
- 1 reply
- 717 views
-
-
-
தக்காளி ,வெங்காயம் விளை நிலம் எங்கே உண்ணும் உணவும் உடை இல்ல நிலை இங்கே மறந்து மறைத்து போனது எங்களின் நிலைமை மூன்று மாதத்தில் நெல் சாகுபடி வருமானமோ நாங்கள் சாகும் படி ..... மாறும் எங்கள் காலம் தங்கம் இப்போ உங்க காலம் வரும் நெல்லை தேடி அலையும் காலம் சிறிய வீடு சிறிய காரும் போதும் எனக்கு இது தான் உன் எதிர்பார்ப்பு இயற்கை சீற்றம் வந்தால் இதில் இல்லை பாதுகாப்பு உண்ணும் உணவு நாங்கள் தயாரிப்பது உங்களுக்காக இதை நீ புரியாதவனாக இருக்கிறாய் வழி விடு வழி விடு உன் சங்கதி வாழ்வதற்கு புதிய இயந்திரம் வந்தாலும் இதில் அனைத்தும் கிடைத்து விடுமா ....... சிந்தனை என்னும் வார்த்தைகளை சிந்திக்க மறந்து விட்டாய் என் தோழா …
-
- 1 reply
- 873 views
-
-
எலிகள் அஞ்சி ஓடுகின்றன பிள்ளையார் ஏறி உட்கார்ந்து விடுவார் என்பதால்.
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈகத்தின் சுடரே! மக்களுக்காக எரிதனலேந்தி மண்ணிலே சாய்ந்த மைந்தனே முருகா துன்பமே சூழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வினை மாற்ற தீயினைச் சூடிப் போரினைத் தொடுத்து பொன்னெழுத்துகள் சூடி மண்ணிலே சாய்ந்தாய்! தாய் மண்ணிலே இன்றும் துன்பங்கள் சூழத் துயரங்கள் ஆளத் துடிக்கிறார் மக்கள் வடிக்கிறார் உதிரம் உதிரத்தால் உறைந்த உயிரெனும் தாய்நிலம் அடிமையாய் இன்னும் அழிகின்ற நிலையாய் தொடர்வதும் ஏனோ! ஈகங்களாலே ஈன்ற எம் தேசம் வேடங்களாலே வேற்றவராள மாற்றான் போன்று மகுடிக்கு ஆடும் பாம்புகளான தலைமைகளாலே விடையென்று வருமென்று வானகம் இருந்தே முருகதாசனோ தவிக்கின்றான்! ஈகத்தின் சுடரே தலைகுனிகிறோம் தம்பி அங்கிங்கொன்றாய் எழுகின்ற தமிழனம் …
-
- 1 reply
- 712 views
-
-
காத்துக் கிடக்கின்றனர் அவர்கள் அவளின் ஒவ்வொரு வரிகளுள்ளும் பிரவகித்து ஓடும் காதலிக்கப்படுவதான பிம்பங்களின் நிழலில் குளிர் காய்தலில் தம் இழந்து போனவைகளையும் கனவுகளுள் புதைந்து போனதையும் எச்சங்களின் படிமங்களில் எப்படியோ காண்பதான பிரமைகளையும் துழாவமுடியாத இருட்டில் தினம் குருடாகிப் போன கண்களின் வெளிச்சத்தில் தேடியபடியே இருக்கின்றனர் கண்முன்னே காத்திருக்கும் காரணமற்ற வெளிச்சங்களை பார்த்திட முடியாத மனக்குருடாய் மடை திறந்தோடும் மனவாற்றின் வழியே ஆசையின் அகல்விளக்கேற்றி அடைந்திடமுடியாததான அகத்தின் அருகே சஞ்சரிப்பதான பிரமை கூட்டியபடி வீழ்ந்திடாத பழமரங்களுக்காய் கற்களைத் எந்நாளும் எறிந்தபடி
-
- 1 reply
- 585 views
-
-
புலிகளை வாழ்த்துவோம் புத்தெழில் கொஞ்சும் தமிழீழத்தில் தித்திப் பளிக்கும் முஸ்லீம் சிறுவரின் முத்தம் வாங்கி முழங்கு போர்க் களத்தே இத்தமிழ் விடுதலைப் புலி எழுகின்றான்…. எங்கள் சிறிய பிள்ளைகள் எழுச்சி பொங்கிப் படைக்கும் புலிகள் தோளில் தொங்கி ஆடத் துடிக்கும் காலம்… மதங்கள் வேறுதான் மனங்கள் நூறு விதங்களா? இல்லை! தமிழினம் ஒன்றே! கற்றவர் மலிந்த கலையாழ் மண்ணும் அற்புத மீனிசை அமைந்த தேனாடும் நெற்கதிர் குலுங்கும் வன்னி நிலமும் நற்றமிழ் முதுபுகழ் மாந்தை நன்னாடும் உற்ற கோணமா மலையும் மக்கள் பற்றிவாழ் காத்தான் குடிப்பட்டணமும் கற்குடாக் கடலும் நாட்டுக் கவிதை முற்றிப் பழுத்த அக்கரைப் பற்றும் விற்பனை மடுவின் விரிந்த காடும் பற்றி…
-
- 1 reply
- 697 views
-