கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஆறு ஊரின் வெளியே ஆறு - அது ஓடும் அழகைப் பாரு! மாரி பொழிந்தால் வெள்ளம் - கரை புரண்டு ஓடும் எல்லாம்! ஓய்வு சிறிதும் இல்லை - அது ஓய்ந்தால் வருமே தொல்லை! ஆய்வு செய்தால் நிறைய - ஞானம் பிறக்கும் மடமை மறைய! மலையின் மீது தோன்றி - ஊற்று நீராய் வருமே தாண்டி! கலையாய் பூக்கள் எங்கும் - மலர நீரும் போயே தங்கும் துள்ளிக் குதித்து ஆடும் - தங்கப் பாப்பா நீரில் ஓடும்! பள்ளி செல்லும் நேரம் - தேனீ போல விரைந்து போகும்! தடைகள் வந்தால் ஆறு - அவற்றைத் தகர்த்துச் செல்லும் கேளு! மடைகள் திறந்து நீராய் - வெல்லும் படையாய் இருக்க வாராய்!
-
- 1 reply
- 1.3k views
-
-
மாவீரர் ஒருவரைக் கண்டேன். மாவீரர் ஒருவரைக் கண்டேன். மனது திக்… திக்…என்றது. வணக்கம் மாவீரரே! என்றேன். மௌனமாக நின்றார். கையிலே மாலையும் இல்லை. காத்திகைப் பூவும் இல்லை தோளில் போர்க்கத் துண்டும் இல்லை என் செய்வேன் என்று இரு கைகூப்பி வணங்கினேன். அப்போதும் அவர் மௌனமாக நின்றார். மன்னித்துக் கொள்ளுங்கள் நீங்கள் மாலைக்கோ மணி மகுடத்துக்கோ மற்றெந்;தச் சலுகைகளையோ விரும்பாத சரித்திர நாயகர்கள். கதிகலங்கி நிற்கும் தமிழருக்கு கலங்கரை விளக்கங்கள்;; இதைப் புரியாத நான் உங்களை…. ……………….. நான் என்ன தவறு செய்தேன்? என்மேல் என்ன கோபம்? உங்கள் கனவைக் கலைத்தேனா? உங்கள் பெயரால் பணம் சேர்த்து என் மடியை நிறைத்தேனா? உதட்டளவில் விடுதலை என்…
-
- 1 reply
- 864 views
-
-
ஸ்ரீலங்கா தேசிய கீதம் தமிழில் பாடுவது தடை செய்யப்பட்டு விட்டது. இனி அங்கு வாழும் சிங்களம் தெரியாத தமிழர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் பாடுவதற்கு ஒரு தேசிய கீதம் வேண்டாமா? அவர்களுக்காக எனது சிறிய முயற்சி: --------------------------------------------- ஸ்ரீலங்கா பேயே நம் ஸ்ரீலங்கா நமோ நமோ நமோ பேயே தமிழரின் தலை கொண்டு புதைகுழிகள் யாவும் நிறைப்பாய் வெறி லங்கா ஞாலம் இகழ இனவெறி மதவெறி கொலை வெறி தமிழ் இரத்தம் கொள் லங்கா தமிழரின் கொலைக்களம் என ஒளிர்வாய் நமதருமை பேயே எக்கடன் பட்டும் கொலை தொடர்வோமே நமோ நமோ நமோ பேயே நம் ஸ்ரீலங்கா நமோ நமோ நமோ பேயே http://gkanthan.wordpress.com/index/anthem/
-
- 1 reply
- 828 views
-
-
அடர்ந்த பனிக் கூதலில் நட்சத்திரங்களின் மெல் ஒளியின் படர்தலில் இரவின் நிசப்தத்தை இரசித்துக்கொண்டு இரண்டு இதயங்கள் தொலை தூரப் படபடப்பில் இமைகளை மூடிவிட சாளரம் வளியே முத்மிடும் சாரல் காற்றின் ஸ்பரிசத் தக தகப்பில் மூச்சுக்காற்றின் சுகந்தம் அறிதல் உற கொம்பொன்றில் கொடிபடரும் பேரழகாய் கரை தடவும் மெல்லலையில் மணல்க் கோடாய் மாண்ட நடு இரவின் பொழுதுகள்தான் பொய்த்தனவே ஏக்கத் துடிப்பான எண்ணங்கள் இணைந்துவிட
-
- 1 reply
- 639 views
-
-
ஒரு அகவையை தாண்டுவதே ..... இயந்திர வாழ்கையில் .... சாதனையாக காணப்படும் .... காலத்தில் பதினெட்டாவது .... அகவையை அடையும் - யாழ் .... இணையத்தை பாராட்டாமல் .... இருக்கவே முடியாது .....!!! மண்ணுக்காக மடிந்த .... மைந்தர்களை மாவீரர் நினைவுகள் ... பகுதியிலும் .....!!! உள்ளூர் புதினங்களை ஊர் புதினம் பகுதியிலும் ..... வெளியூர் புதினத்தை ... உலகச்செய்தி பகுதியிலும் ..... சமூக பிரச்சனைகளை .... சமூக சாரளம் பகுதியிலும் .....!!! கவிஞருக்கு கவிதை பூங்காடு .... கதாசிரியருக்கு கதை கதையாம் ... தனியாக வகுத்து செய்திதரும் .... யாழ் இணையத்தை பாராட்டாமல் .... இருக்கவே முடியாது .....!!! யாழ் மண்ணுக்கு மகிமையுண்டு .... யாழ் இணையத்துக்கு வ…
-
- 1 reply
- 691 views
-
-
அந்த நாட்கள் அதிகாலைச் சூரியனும் அழகுநிலவும் அணைத்துக் கொண்ட நாட்கள் பசுமை தேடிய புற்களுக்கு பால் வடித்த கண்ணீர் மழையாகி உயிர் நனைத்த நாட்கள் வழி தொலைத்த பறவைகள் கூடிக்களிப்படைந்து வெறுமையான நாட்களுக்கு இதயப் பூக்களால் அர்ச்சனை புரிந்த நாட்கள் சிதறி உடைந்த கண்ணாடித் துண்டுகளிலே சிக்கிய விம்பங்கள் போலே அவன் வடித்த புன்னகைகளில் என் முகம் புதைந்துபோன நாட்கள் அவை சந்தித்தபோதேல்லாம் பேசமொழி மறந்து விழிமொழி பேசியதுண்டு அவ்வப்போது மெளனம் துணைக்கு வந்துபோனதுண்டு.. ஏழு ஜென்ம வாழ்க்கை அந்த நாட்களுடன் ஐக்கியமானதுண்டு.. திசைமாறும் பறவைகள்தான் எனினும் இதயத்தின் பரிபாசைகளில் இணைந்து…
-
- 1 reply
- 857 views
-
-
தமிழ்க் குரலில் வாரவாரம் வரும் பொன்.காந்தனின் வெள்ளிப் பொழுது 02.08.2019 வெள்ளிப்பொழு 'கல்' எனும் தலைப்பில் சொற்களின் திருவிழா... பொன்.காந்தனுடன் தமிழகத்தில் இருந்து ஈழக்கவிஞர் சிவ.திவாகர் மற்றும் கவிஞர் செல்வா. 'மை' 16-08-2019 அன்று தமிழ்க் குரலில் ஒலிபரப்பாகிய பொன்.காந்தனின் வெள்ளிப் பொழுது
-
- 1 reply
- 657 views
-
-
நிழல்கள் தீண்டிய மனவறை நியங்களின் தாண்டவத்தால் நிசப்தமாகி கிடக்கிறது நிரூபனமாகிவிட்ட சில நிறுவல்கள் நியத்தை தாண்டி நிகழ்காலத்தை கூறுகின்றன இறக்க போகும் என் எதிர்காலம் நடப்புக்காலத்தால் ஆழப்படுகிறது இறந்த காலத்தின் வடுக்களும் வரும் காலத்தின் ஏக்கமும் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது தலைவிரி கோலமாய் எழுந்து எதிர்காலம் அச்சமூட்டுகிறது பிணைத்திருக்கும் பிணம் தின்னும் கழுகுகளின் கர வலிமையை எண்ணி திராணியற்று போகிறது எதிரியின் நெஞ்சம் பாட…
-
- 1 reply
- 811 views
-
-
உயிரை வருத்தி நீங்கள் செய்த தியாகங்கள் வீணாகிவிடக் கூடாதேயென நித்தம் நித்தம் ஏங்கியேங்கி நாங்கள் இப்போது மூச்சுத்திணறி நிற்கின்றோம்! தாயகம் சுமந்துவரும் உங்கள் நினைவுகள் எம் ஒவ்வொருவர் மூச்சுக்காற்றிலும் கலந்து மண்ணை மீட்பதில் நாம் கண்ணாயிருக்க ஆன்ம பலத்தை எங்களுக்கு தரட்டும்! http://karumpu.com/wp-content/uploads/2010/song.mp3 தகவல்: நிதர்சன் | வன்னித்தென்றல்
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒன்றும் புரியவில்லை, இன்றும் வெளிச்சங்கள் இல்லை, அருகிருக்கும் தோழனின் அம்மா நித்தம் வந்தால், பக்கத்தில் எனக்கும், மலர் வைத்துச்சென்றாள், அவள் வரவும் இன்று இல்லை, விடுதலைக்காய் வீழ்ந்த தோழர்களை, வித்துடலாய் காவி வந்த, தோழர்களே,எம்மை துயிலெழுப்பி மவுனமாய், சத்தியம் செய்து சென்றீரே, உங்களை இன்று காணவில்லையே? எழுந்து வந்து தேடவும் முடியவில்லை. இன்று எல்லாம் மாற்றமாய் கிடக்கிறது, சிங்கள மொழி கேட்கிறது, சீரும் இயந்திரம் எங்கள் கல்லறை மீது போகிறது, சப்பாத்து கால்கள் எங்கள் இல்லங்களை சாக்கடை ஆக்கின்றதே, சத்தியம் செய்து சென்ற தோழர்களே, லட்ச்சியம் மறந்து போனிரோ? பூமிக்குள் நாம் படும் வேதனை புரியவில்லையா? எம்மை புதைத்த தோழர்களே, …
-
- 1 reply
- 495 views
-
-
என்னை மறந்து உன்னை யாசித்தேன்... --- நினைவோ ஒரு பறவை... வானங்களும் இறங்கும் சொர்க்கத்தில் வடித்த விம்மல்... உன்னை யாசித்தேன் மோகனம் மீட்கும் கம்பிளி பூச்சிபோல் வடித்தேன் ---- கற்கண்டு மழையாக மரத்தின் இடைவெளி தேனாக --தூறல் போட்டேன்..... பிறகு.......... விழிகளை செடியின் இடுப்பில் வைத்தேன் இரவே இல்லாத உலகமாய் மனமே இல்லாத வாசலாய்... சென்றுவிட்டாய்....... :cry: :cry: விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 1 reply
- 996 views
-
-
Theepachelvan Pratheepan இன்றைய ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்த கவிதை. காந்தள் மலர்கள் வானம் பார்த்திருந்து மழையை தாகத்தோடு அருந்தி கிழங்குகள் வேரோடி நிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறது காந்தள்க் கொடி. எதற்காக இந்தப் பூக்கள் வருடம் தோறும் கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றன? ஒரு சொட்டு கண்ணீர் விடவும் ஒரு விளக்கு ஏற்றவும் மறுக்கப்படுகையில் எதுவும் இல்லையென எல்லாமும் அழிக்கப்பட்டாகிற்றென்கையில் அனல் கனக்கும் தாயின் கருப்பையை ஈரமாகிக்கின்றன காந்தள் மலர்கள் தாயின் கனவு வண்ணமாய் தாகத்தோடு பூக்கும் காந்தள் மலர்களை யாரால் தடுக்க இயலும்? தீபச்செல்வன்
-
- 1 reply
- 670 views
-
-
மாணவர்களுக்கு அரசியல் தேவையா ...? ஊழல்வாதிகள் அடிப்படை வாதிகள்... மாறாச் சமூகை உறுதி படுத்த வைக்கப்படும் கேள்வி... வாக்குப்போட மட்டும் உங்கள் தேவையை கேட்பர்... கூட விரலில் கருப்பு மையை வைத்து ஜனநாயக கடமை முடிந்ததாக சொல்லுவர்... வெள்ளையனின் ஓட்டத்தில் மாணவர்களின் பங்கிலாத அரசியல் உண்டோ? மொழிக்காக்க தீயாய் எரிந்த போரில் தீயே நீங்கள் அல்லவா.... மநூவின் நீதியை குலத்தொழிலை மறுத்த போர் இளைஞர்களின் போரல்லவா.... தந்தைச் செல்வாவின் வெற்றி வாக்கரசியலை சிங்களம் மிதித்ததாலேயே.... எழுதுகோல் ஏந்திய கைகளில் துவக்கு ஏந்திய அரசியலை உலகம் அறியாததா? சோவியத்தில் செஞ்சீனத்தில் பொலியாவில் வியட்நாமில் தத்துவ பலத்தை அரசியலாக்கியதில் இளைஞர்களில் பாதையை…
-
- 1 reply
- 902 views
-
-
விடை பெறச் சொல்கிறாயா ?? நெஞ்சில் வரைந்த ஓவியம்.....!! பூமிக்கு வந்த பனி துளி நான்... விடை பெறச் சொல்கிறாயா ? உன் சித்தம் போல புள்ளி மானாக கோலம் போட்டேன்..... வேதனை வடியவில்லை ...... அருவியாய் என்னை காலமெல்லாம் - அழ வைத்து விட்டாய்......., ஞபகம் வருது..... ----காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே!! சிறகுகள் நானும் உடைந்து , திசை தெரியாமல் திண்டாடி மோதிடுதே.. தூறல் பட்டம் அறுந்து , மூங்கிலாய் .......... இசை.....ஓசை மறந்து அடங்கியதே!! என்னென்று சொல்வேனோ முன்ஜென்ம பகையோ ..... ஏன்? காத்லே நீ வந்து கொன்றாய்? ... மீண்டும் வருவாயா ? என் செல்லமே ? ----நிஜங்களின் தரிசனமாய் கண்களினை கடன் கொடுத்து.... வ…
-
- 1 reply
- 1.1k views
-
-
முன்பு பின்பு இப்போ இனிமேல் முன்பு அடித்தபோது வாங்கினோம் பாதுகாப்புத்தேடி ஓடினோம் பின்பு அடித்தபோதும் வாங்கினோம் திருப்பி அடித்தபோது நீ ஓடக்கண்டோம். இப்போ அடிக்கிறாய் அடிக்கடி அடிக்கிறய் தாங்கிக்கொண்டோம் அதனால் பலவீனரா? இனிமேல் அடிக்க நினைத்தாயோ! முடியாமற்போகும். அப்போதிருப்பாய் நீ பலவீனனாய்.
-
- 1 reply
- 880 views
-
-
ஒரு புலம்பெயர்ந்தவனின் புலம்பல் தை பிறந்தால் வளி பிறக்கும் பயிர்கள் எல்லாம் தழைத்தோங்கும் மாசியில் மாம்பழம் மறக்கேலா நினைவு அது பங்குனியில் கதியால் வெட்டு பரபரப்பாய் நாட்கள் நகரும் சித்திரையில் வேம்பு பூத்து சிறப்பாய் சிலிர்த்து நிற்கும் வைகாசியில் விசாகம் தமிழர் வரலாற்றுப் பாரம்பரியம் ஆனியில் அனல் வெயில் அப்பப்பா என்ன புழுக்கம் ஊரெல்லாம் வெப்பத்தால் உறங்கிவிடும் வீட்டுக்குள் எங்களுக்கோ கொண்டாட்டம் எவ்வளவு சந்தோசம்........... பின்னேரம் கிளித்தட்டு காலையில் பாட்டுக்குப்பாட்டு கனவுகளில் கவலையின்றி களிந்தது எம் இழமைக்காலம் இடையில் வீடு வந்தால் இருக்கும் சாப்பாடு இடையிடையே அம்மாவின் வசைப்பாட்டும் வழமையங்கே உப்பிடியே பு…
-
- 1 reply
- 944 views
-
-
துயர் காவிகளாய் இருண்டு கிடக்கின்றன வான்முகில்கள் முகம் மழுங்கிச் சிதைந்து எழுகிறது ஒளிமுதல் விதை விழுந்த நிலத்தில் கிளையெறிந்த பெருமரங்கள் இயலாமையோடு மௌனித்துக் கிடக்கின்றன, நீண்ட வீதிகள் இனங்களை இணைத்துவிடவென்று மக்கிப்போகாத உடலங்கள் மீதேறிப் போகின்றன, முள்வேலிகட்டிய பகை, நெஞ்சுக்கூட்டில் பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்புரை நிகழ்த்துகிறது. காற்றினில் கந்தகநெடி இல்லை வானில் மிகையொலி விமானங்கள் இல்லை கடலினில் செங்குருதி மிதக்கவில்லை தீசூழ்ந்து எம்மூர்மனைகள் அழியவுமில்லை இருந்துமொரு, தீபம் ஏற்றிட வழியில்லை மணியொலித்துக் காந்தள் தொடுத்து, கல்லறை தொழுதிடவொரு களமும் இல்லை. மண்சுமந்த வேழங்கள் நடந்த தடத்தில் கண்ணீர் சொரிந்த…
-
- 1 reply
- 584 views
-
-
......................................................................முகவரி ......................................................................இதய ராஜ மன்மதன் ......................................................................இதய இடதுபுற ஒழுங்கை ......................................................................காதல் குறுக்கு தெரு ......................................................................காதல் நகர் இன்று இலத்திரனியல் சாதங்கள் உலகையே ஆக்கிரமித்து விட்டன . காதலர்கள் இயந்திரமயமாகி விட்டனர் . கிடைக்கும் நேரத்தில் முகநூல் ,வாடசப் .ஈமெயில் வைபர் என்று இலத்திரனியல் சாதனத்தில் காதலை பரிமாறுகிறார்கள் அவை பரிமாற்று சாதனங்களாக இருக்கின்றனவே …
-
- 1 reply
- 11.3k views
-
-
புத்தர் பிறந்த நாளுக்கு இரத்தக் கறைகளுடன் அது இலங்கைக்கு வருகிறது… குஜராத் முஸ்லிம்களின் குருதி பருகிய கொம்பேறி மூக்கன் அது… காஷ்மீரின் கண்ணீரில் கண்மூடிக் குளிக்கின்ற கட்டுவிரியன் அது… இஸ்லாமிய விழுமியங்களில் இயன்றவரை நஞ்சுமிழும் இனவாத சர்ப்பம் அது… ஆர். எஸ். எஸ். தேள்களை அரவணைத்துப் போஷிக்கும் ஆபத்தான அரவம் அது… மனிதர்க்கன்றி இப்பாம்பு மாடுகளுக்குத்தான் மரியாதை செலுத்தும்… மூத்திரம் குடிக்குமிந்த மூடப் பாம்புக்கு மூத்திரம் கழுவிச் சுத்தமாயிருக்கும் முஸ்லிம்களின் மீதுதான் ஆத்திரம் எல்லாம்… இந்தப் பொல்லாத பாம்பின் மூச்சிலும் விஷமிருக்கும்… ஆதலால் மூடி வையுங்கள் ஜன்னல்களை!AkuranaToday.com | Read more http://www.akuranatoday…
-
- 1 reply
- 1.4k views
-
-
கண்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை? கண்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை? காதல் வந்தும் சொல்லாமல்........ அந்தப்பெண் தனியாக அமர்ந்து இந்த கேள்விகளுக்கெல்லாம் காரணமான விழிகளை அணைத்து, பாதங்கள் மட்டும் ஒருவராக .. நடந்துகொண்டு இருக்கிறாள்......... ஈர நினைவில்....... வானை நோக்கி........!! விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 1 reply
- 1.2k views
-
-
அன்பே: ஏன் பிரிந்தாய்? நம் பிரிவை உயிர் மட்டும்தான் பிரிக்கும் என்றுதானே நானிருந்தேன். எப்படி பிரிந்தாய்? நீ இல்லாமல் வாழத்தெரியாத நான் நீ இருந்தும் இல்லாமல் எப்படி வாழ்வேன். சொல் கண்ணே சொல் நீ இல்லாத உலகத்தில் நான் பிணமாய் வாழ்வதைவிட நீ இருக்கும் உலகில் நான் கல்லறையாய் வாழலாம். எங்கே நீ சொல் அன்பே சொல்.. உனக்கான என் காதல் மரத்தில் இருந்து தினமொரு கவியிலையாய் விழுந்து கொண்டிருக்கிறது என் கண்ணீர் எனும் மழையாலும் உன் நினைவெனும் புயலாலும். வா அன்பே வா... நீ என்னை வாழ வைக்க வேண்டாம் வாழ விடாமல் வைத்துவிடு அது போதும் உனக்காய் வாழ்ந்து உன்னால் இறந்…
-
- 1 reply
- 886 views
-
-
நீ சொன்ன ஒரு வார்த்தை.... ஆயிரம் கஸல் கவிதையை ... தோற்றிவிட்டது ....!!! சுதந்திர பறவைகளை ... திறந்த சிறைச்சாலைக்குள் .... அடைத்துவிடும் .... காதல் ......!!! இதயங்களை .... இணைக்கும் .... சங்கிலி -காதல் ... துருப்பிடிக்காமல் .... பார்த்துக்கொள் .....!!! முள் மேல் பூ அழகானது ..... என் இதயத்தில் பூத்த .... முள் பூ நீ ................!!!! நீ காதலோடு...... விளையாட வில்லை .... என் மரணத்தோடு ..... விளையாடுகிறாய் ......!!! ^ இது எனது 1000 கஸல் இத்தனை காலமும் ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் உளமான நன்றி ^ அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன் ^ " முள்ளில் மலரும் பூக்கள் " க…
-
- 1 reply
- 645 views
-
-
முன்பை விட அதிகமாக கோபம் வருகிறது உன் கவிதைக்கு இன்னும் அது திருந்தவில்லையென பேசிக்கொள்கிறார்கள் அநீதிகள் இழுத்துச் செல்வதை அது விட்டு விடவில்லை உரத்து குரல் கொடுப்பதை அது நிறுத்திக்கொள்ளவில்லை துரத்தப்பட்டவனோடு கைகோர்த்து நிற்கிறது வெளியே நிறுத்தப்பட்டவனோடு வெயிலில் கிடக்கிறது பள்ளியில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் குழந்தைகளோடு ஏன் பேசிக்கொண்டிருக்கிறது அவர்களின் கைகளைத் தடவிக் கொடுப்பதும் இனி சுத்தம் செய்யாதீர்கள் எனச் சொல்வதும் கவிதையின் வேலையில்லை மனு இன்னும் சாகவில்லை என்று குற்றம் சாட்டும் உன் கவிதை என்ன வக்கீலுக்கா படித்திருக்கிறது சாதியத்தை வளர்க்கும் ஆசிரியர்கள் பங்கி குழந்தைகளை வண்டியில் ஏற்ற மறுப்பவர்கள் வால்மீகி பெண்களுக்கு கட்டளையிடுபவர…
-
- 1 reply
- 475 views
-
-
இன்னும் ஏன் மௌனம்.....??? வாருமய்யா வாருமய்யா மனித உரிமை வாதி ஜய்யா.... மலிந்து போயு கிடக்கிதுங்கு மனிதயுரிமை பாருமய்யா... வீதியிலே பிணங்களாகி வீழ்ந்திருக்கு பாருமய்யா... விதைவையாகி உறவு இங்கு கதறுவதை காணுமய்யா.... ஆண் உறுப்பை அறுத்தெறிந்து அழித்து கொண்டான் பாருமய்யா... உடல் சிதறி உருக்குலைந்த உறவுகளை பாருமய்யா.... என்ன செய்தார் என்றிவரை கொன்றழித்தான் கேளுமய்யா....??? குண்டு மழை பொழிந்து உயிர் பறித்தான் இங்கு பாருமய்யா... குஞ்சுகளும் பிஞ்சுகளும் பிய்ந்து கிடக்கு பாருமய்யா... எத்தனையோ கொடுமைகளை பகையாடுதிங்கே காணுமய்யா... அத்தனையும் கண்டு …
-
- 1 reply
- 1k views
-
-
கேதா ஊருக்கு போய்விட்டு வந்தவுடனேயே “தொதல் கொண்டுவந்தியா? பருத்தித்துறை வடை கொண்டுவந்தியா?” என்று கேட்காமல், நல்ல போட்டோ எடுத்துக்கொண்டு வந்தியா? என்று தான் கேட்டேன். எல்லோர் கையிலும் இருக்கும் அதே கமரா தான், அவன் எடுக்கும் போது மட்டும் கவிதை பாடும். விண்ணைத்தாண்டி வருவாயாவில் கார்த்திக் ஜெஸ்ஸியை பார்த்து “நீ அழகா இருக்கே, நிறைய பசங்க உன்னை சுத்தி வந்திருப்பாங்களே” என்று கேட்க பதிலுக்கு அவள் “ஒருவேளை அவங்க உன் கண்ணால என்னை பாக்கலியோ என்னவோ” என்பாள். கேதாவின் கமரா கண்கள்! படம் கவிதை சொல்லுது. பதில் கவிதை சொல்ல, படலையின் அரசவைக்கவிஞரும் இன்றைக்கு பிறந்தநாளை கொண்டாடும் மன்மதகுஞ்சுவுக்கு அழைப்பு விடுத்தேன். தல ஐந்து நொடியில் கவிதை ஒன்றை துப்பினார். வைரமுத்து கூட “வெட்ட…
-
- 1 reply
- 755 views
-