கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கவிஞனுடன் உரையாடல்....! பாவலனே உன்னை பாவால் வணங்குகிறேன்- உந்தன் பு வாிகள் கோர்த்து- உனக்கு பு மாலை சாத்துகிறேன்... வேண்டாம் இதுவென்று வௌியில் எறியாதே ஏழை நானென்று எட்டி உதையாதே... உயர்ந்த மாளிகைக்கு உழைத்தவர் வீதியிலே வாடகைக்கு வந்தவர்கள் வானத்து வீதியிலே... ஆகா என் வாிகள் அர்த்தங்கள் ஆயிரங்கள் என்னை விட மேலானாய் எழுதிடவே எழுதிடவே... ஆட்டங்கள் போடுகிறார் ஆடுகிறார் பாடுகிறார் வீழ்வோமா நாமென்று வீராப்பு பேசுகின்றார்.. மமதையில் மிதப்பவர் மனிதரா நீ சொல்லு..? இவருள்ளம் அழுக்காகி இருப்பதனை நீ காணு.. தன்னிலை மறந்ததினால் தலைக்கணத்தில் சுற்றுகிறார் இவர் ஆயுள் எதுவரையோ இவைதன…
-
- 1 reply
- 1.1k views
-
-
எரியும் விளக்கே அணையாமல் நீ இரு என் தோழி உறங்குகின்றாள் துணையாக நீ இரு சுத்தும் மணியே சத்தங்கள் போடாதே தூக்கத்தில் எழுந்துவிட்டால் என் உள்ளம் தாங்காதே கைகளை பிடித்து உள்ளத்தை நீ அணைத்தாய் தோள்மீது தலைசாய்த்து உன் சுமையை இறக்கிவைத்தாய் உன் உதட்டின் வெப்பத்தில் என் கன்னம் உருகிபோக மெய்மறந்து நான் நின்றேன் இன்னும் இறுக்கி அணைத்தாயே உன் கண்ணின் நீர்துளி கைகளிலே ஏந்திவைத்தோன் உன் கையில் என் இதயம் பத்திரமா சொல் தோழி உயிரை பகிர்ந்தாய் உறவை பகிர்ந்தாய் காலம் முழுதும் என்னோடு துணையாக வரவேண்டும் எரியும் விளக்கே அணையாமல் நீ இரு என் தோழி உறங்குகின்றாள் துணையாக நீ இரு சுத்தும் மணியே சத்தங்கள் போடாதே தூக்கத்தில் எழுந்…
-
- 1 reply
- 956 views
-
-
உனது ஆட்சிக்கான சாவுமணியை நீயே அடிக்கிறாய்.. நாமென்ன செய்ய..? உன் அழிவுக்கான குழியினை நீயே வெட்டுகிறாய்… யார் என்ன செய்ய..? உனது அகங்காரங்கள் உனக்கான பாடையை அலங்காரம் செய்து கொண்டிருப்பதை நீ அறிய மாட்டாய்… உனது கொடுங்கோலின் நுனி உனக்கான கல்லறையைச் செதுக்கும் உளியென்பதை நீ உணர மாட்டாய்… மனிதத்தையும் மனிதர்களையும் எரித்துக் குளிர் காய்பவனே… பிணங்களின் மீதமர்ந்து பிறைச் சோறுண்பவனே… உன் அரசாசனத்தை அக்கினி சூழ அதிக நாட்களில்லை…! ஆமாம்… உனது ஆணவ நடை ஓயும்.. உன் அகம்பாவக் குடை சாயும்…! உனது மாட மாளிகைகள் மண்ணோடு புதையும்; கூட கோபுரங்கள் குப்பை மேடாகும்! எங்களின் தயவாலும் நீ சூடிக் கொண்ட மகுடம் இன்னும் சில மாதங்களில் எரி…
-
- 1 reply
- 777 views
-
-
நாடிழத்தல். நான் பயணப்பட முடிவெடுத்த போது காலத்தின் துயரத்திற் பழுத்த மனங்கள் முதுவேனிற்கால மரங்களிற் தொங்கிக் கொண்டிருந்தன. வாழ்வென்னும் சுடர் அவிந்து விழுமியங்களின் சுவடுகள் அழிந்த வெளியினூடு செல்லும் போது வழிகாட்டுவதற்கு ஆட்காட்டி போதுமென்று நினைத்தேன். நானொரு நாடோடியாகக் கூடுமென்றும் தூரங்களைக் கடக்கும் போது எழுத்தாணியிற் கவிதை சுரக்குமென்றும் நினைப்பவர்கள் என்னை மன்னியுங்கள். இருந்த நாட்குறிப்புக்களையும் எரித்துவிட்டே பயணிக்கிறேன். நான் வழிப்பறிக்கு அஞ்சியவன். காலம் நெடுகிலும் தனித்தழும் மரங்களை மூடிக் கிடக்கும் புழுதியை அள்ளிப்பூசிக் கொள்கிறேன். உருவழிய, உதிர்ந்த இலைகளைத் தழுவும் …
-
- 1 reply
- 851 views
-
-
லீனா மணிமேகலையின் மூன்று கவிதைகள் முந்நீர் காதை அவன் தன்னை மீன் என அறிமுகப்படுத்திக்கொண்டான் திராட்சை ரசத்தில் கெளிறென நீந்திவரச் சொன்னேன் ஒன்றல்ல மூன்று தரம் புன்னகையுடன் நீந்தினான் துடுப்புகளுக்கு முத்தமிட்டேன் மூன்றல்ல முப்பது தடவை மெல்லுடலியாக இருக்கிறானே நீராளியோ இவன் என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது பொதிகையில் விழுந்த சூரியனாய் நிறங்கள் தரித்தான் அட இவன் வலைக் கடியன்தான் என முடிவுக்கு வந்து அள்ளியெடுத்து புணர்ந்தேன் முப்பதல்ல முன்னூறு பொழுதுகள் கடல் முள்ளியாய் அவன் கிழித்த என் பவளப் பாறைகளில் மூவாயிரம் வாள்மீன்கள் உருண்டன ஒவ்வொன்றிலும் அவனின் கண்கள் இப்போது தன் தரப்பு எனத் தன் ஆறாயிரம் கண்களை சிமிட்டினான் முழுவதுமாகத் தன்னை…
-
- 1 reply
- 576 views
-
-
இயல்பினைக் கடந்த திடத்துடன், இயற்கையை வென்றவர்கள்...! எப்பொழுதும் இறப்பதில்லை!!! அறத்தினை மீறிய உலகிற்கு, வீரமறவர் எனத் தமைக் காட்டியோர்...! தம் இனமென்றே தம்முயிர் வாட்டியோர்!!! நிலத்தினில் வீழ்ந்திட்ட விதைகள், புலத்தினில் புதிதாய் கதைகள்...! உம் கல்லறையேனும் சொல்லுமா விடைகள்??? உங்கள் ஒவ்வொரு கதையும் போதும், எம் பரம்பரை உம்மைத் தொடரும்...! உம் இலட்சியம்............. அடையும் வரை!!! அதுவே உங்களுக்கான உண்மையான அஞ்சலிகள்! on Saturday, 27 November 2010 at 02:57 [ 2010 இல் எழுதியது ]
-
- 1 reply
- 933 views
-
-
இது ஒட்டுமொத்த தமிழினத்தின் சாபமாக இருக்கட்டும் இதை இயன்ற அளவில் பரப்புரை செய்வதே நாம் நம் இனத்திற்கு செய்யும் களப்பணி. கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய் எங்கள் தமிழினத்திற்கு... எத்தனை வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும் காலில் விழுந்தும் கதறியும் கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்ந்தாயிற்று... எதுவுமே காதில் விழாத உங்களுக்கு இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்... பட்டினியால் சுருண்டு மடிந்த பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து அழுது வீங்கிய கண்களோடும் அரற்றிய துக்கத்தோடும் களைந்த கூந்தலோடும் வயிரெரிந்து இதோ விடுகிறேன்.. கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! …
-
- 1 reply
- 884 views
-
-
வதையின் மொழி வதை என்பது ஈழத்தமிழனின் வாழ் வென்றானது -இன்று உயிர்த் தமிழுக்கும் தமிழனுக்கும் அதுவே மொழியானது சிறை என்றும்,சித்திரவதை என்றும்- அது இலக்கணம் சொன்னது கொலை என்றும்,கொடும் அவலம் என்றும் நா கூசாமல் பேசியது என்ன இது ? பெண்னென்றும் ஆணென்றும் அது பேதமற்று வதைத்தது.. தெருவில் வாழும் உயிருக்கும் கருவில் வளரும் உயிருக்கும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டன ... ஏன் என்றார்கள் மக்கள் ...?நீ தமிழன் ! அதனால் என்றது வதைமொழி .. தமிழ்த் தாயின் கருவறையில் உயிர் பெற்றதால் -தனக்கென கல்லறை கூட இல்லாது போனான் தமிழன் ...! கலங்கி தவிக்கின்றன- ஈழத்தில் கருவறைகளும் கல்லறைகளும் ...! உயிர் தாங்க கருவறைகளும், உடல் தாங்க கல்லறைகளும் மௌனமாய் மறுக்கின்றன- இருந்து வாழ்வ…
-
- 1 reply
- 1k views
-
-
கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும் [ சு. பிரசாத் ] வியாழன், 26 மார்ச் 2009 19:10 மூத்த தமிழனே எம் தமிழகத்தின் முதல்வனே, எம் கண்ணீரை ஒரு கவி பாடும் உம் சங்கத் தமிழ் கொண்டு தெருவில் நிற்கிறோம் தமிழன் என்று தலை குனிந்து நீ ஆட்சி செய் தமிழனென்று தலை நிமிர்ந்து சங்கம் வளர்த்த எம் தலைவனே தமிழை வார்த்த எம் வேந்தனே எம் சாவில் ஒரு கவி பாடும் உம் சரித்திர தமிழ் கொண்டு குண்டு மழை பெய்தபின்னர் கொலை கொலையாய் பிணங்கள் அங்கே ஓட்டு மழை பெய்தபின்னர் வாழ்க உம் வெற்றி இங்கே பெரியாரின் புதல்வனே பெரியாரை புகழ்ந்தவனே எம் கதறலை ஒரு கவி பாடும் உம் பொய்யா மொழி கொண்டு இலவச மருந்து என்றாய் மருந்தின்றி சாகிறோம் பார் …
-
- 1 reply
- 991 views
-
-
'மகிந்தா ஆட்சி கலைய போகுது....'' ஜயா மகிந்தா ஆட்சியது குலைய போகுது..... அந்தோ பார் அலையதுவும் ஏறப் போகுது.... அவலம் தந்த படைகள் எல்லாம் சிதறப் போகுது.... சீற்றம் கொண்ட புலியணிகள் சீறப் போகுது.... சிங்களவன் படை நிலைகள் உடையப் போகுது.... அவன் சிந்தனைகள் கூட அங்கு சிதறப் போகுது.... ஓலத்தில பகை அணிகள் ஓட போகுது.... ''அந்த திருமலையும் இன்றுடனே விடியப் போகுது.....'' எங்கள் மண்ணும் எங்கள் வசம் ஆகப் போகுது.... அந்த ஆட்டத்திலே மகிந்தா ஆட்சி கலைய போகுது.... - வன்னி மைந்தன் - :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P
-
- 1 reply
- 933 views
-
-
-
- 1 reply
- 748 views
-
-
என் அன்னை கலைப்பொழுதினிலே என் கடமை முடிக்க முன்னே சேலைத்தலைப்பை தூக்கிச்சொருகி பின்னே வேலைப்பழுவை தன் தோளில் சுமந்து மூலை முடுக்கெல்லாம் தேய்த்துக்கழுவி பாலைக்காய்ச்சி பதம் பார்த்துச்சமைத்து- பாட சாலைக்குச்செல்லும் தன் சேய்க்கு- வாழை இலையில் வதக்கிய கறியுடன் சாதம் இட்டு சாலைவரை தன் கரம்பற்றி வழியனுப்பி- பின்னே காலை விரைந்து வைத்து கடைவீதி சென்று வந்து மாலை வருமுன்னே மதியமும் உண்ணாது நூலைப்போல் இழைத்து என் முகம் காண ஓலைவேலிக்குள் ஒளிந்திருப்பாள் என் அன்னை.
-
- 1 reply
- 1.1k views
-
-
பக்கத்துவீட்டுக்காரன் செத்து புழுத்து மணந்தாலும் எட்டிப்பார்த்து ஏன் எண்டு கேட்கா தேசத்தில் வாழ்ந்தாலும்... இப்போதும் ஈழத்தமிழராய்த்தான் வாழ்கிறோம். எனக்கொண்டெண்டால் பத்துமைலுக்கப்பால் வாழும் என் நண்பன் ஓடி வருவான் அவனுக்கு ஒண்டெண்டால் நான் ஓடிப்போவன் கிழமையில் ஒருநாள் எண்டாலும் அவன் வருவான் இல்லையெண்டால் நான் போவன் பிறந்தநாள் மண்டபத்தில் கதிரை காணாமல் வருது கொத்துரொட்டியும் பாணும் பருப்பும் ரோல்சும் வடையும் உடன் ஆட்டிறைச்சியும் புட்டும் இடியப்பமும் சொதியும் சம்பலும் ஒடியற்கூழும் இன்னும் தமிழ்க்கடைகளில் விற்பனைக்கு இருக்கு கோயில்களும் திருவிழாவும் தேரும் தீர்த்தமும் கும்பாபிசேகங்களும் …
-
- 1 reply
- 892 views
-
-
தைத்திருநாள் இல்லமெல்லாம் தளிர்த்திடும் தைப்பொங்கல் இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ்ப்பொங்கல் கூவி அழைத்திடும் சேவல் குதித்தெழுவோம் குளிப்போம் பூவெடுப்போம் புதிதணிவோம் பொங்கலன்று நாங்கள் கோலமிட்டு விளக்கேற்றிக் கும்பிடுவாள் அம்மா பாலெடுத்துப் பொங்கலுக்குப் பானை வைப்பார் அப்பா விரும்பிய மா வாழை பலா விதவிதமாய்க் கனிகள் கரும்பிளனீர் படைத்து மனம் களித்திடுவோம் நாங்கள் வெண்ணிறப்பால் பொங்கி வர வெடி சுடுவோம் நாங்கள் இன்னமுதப் பொங்கலுண்ண இணைந்து நிற்போம் நாங்கள்
-
- 1 reply
- 5k views
-
-
-
"இடர்கள் தந்தபோதும்...,எம் இலட்சிய தாகம் தீராது......" கோயில் மணி ஓசையிலும், குயில்களின் இன்னிசையிலும், மங்கள வாத்திய இசையிலும் , மலர்ந்திடும் எங்கள் காலை...., இன்று..., கூவி வரும் செல்(பீரங்கி) ஓசையிலும், பறை எழுப்பும் அவல வசையிலும் , ஐயோ ...என்ற அலறலிலும், விடிகிறது எங்கள் காலை. யுத்தத்தின் வடுக்கள்.... அடுத்தவன் கை ஒன்றை எடுத்து தன் கையோ ?என ஏங்கும் ஒருவன் அங்கே...! பிணமாய் கிடக்கும் ஒருவனுக்கு ......, அவன் குடலே மாலையாய் கழுத்தில் அங்கே...! தமிழன் அல்லவா.....? இறந்தும் அவன் பறவைகளுக்கு தீனி தருகின்றான். பிணக்குவியல் அகற்ற அந்த ஊரில் நாதியில்லை...., நாய்களே நன்றிக்கடன் கழிப்பதாய் இறுதிக்கடன் செய்கின்றன. "இந்தா பிள்ள …
-
- 1 reply
- 648 views
-
-
1991. 06.12 அன்று மகிழடித்தீவு கிராமம் இரண்டாவது படுகொலையை எதிர் கொண்டது. எரிகிறது வீரம் நிறைந்த மண் உருகிறது உயிர்கள் கருகிறது உறவுகள் ஓடுகிறார்கள் எம் மக்கள் கதறுகிறார்கள் வாலிபர்கள் பாதகர்கள் கையில் யுவதிகள் சிக்குண்டு தவிக்கிறார்கள். தஞ்சமடைந்தனர் ஞானமுத்து குமாரநாயகத்தின் அரிசி ஆலையிலே துப்பாக்கிக்கு இரையாகி வெந்த அனலில் கருகிப் போகியது எம் உறவுகள். தாயவள் முலைப்பால் ஊட்டிய நிலையிலே தான் பெற்றெடுத்த கைக்குழந்தையுடன் கறைபடிந்திருந்தாள் இறந்த உயிர்கள் ஓவியங்களாகவே இருந்தன. அன்றைய நாள் இருட்டானது எம்மூர் மக்களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட உறவுகளை இழந்து நின்றோம் கைக்குழந்தையும் வயோதிபத்தையும் பார…
-
- 1 reply
- 1.4k views
-
-
முத்துப் போன்ற தீர்மானம்-நம் முதல்வர் காத்தார் தன்மானம் ஒத்துப் போக அனைவருமே-நல் ஒற்றுமை காட்டி தமிழினமே சத்தாம் வழிவகை வடித்தாரே-புகழ் சரித்திர முடிவு எடுத்தாரே பத்தொடு ஒன்றா ?இதுவல்ல-இந்த பாட்டில் முழுவதும் நான்சொல்ல அருளாதாரம் அணு அளவும்-என்றும் அறியா பக்சே உள்ளளவும பொருளாதார தடை ஒன்றே-சிங்களர் போக்கினில் மாற்றம் தருமென்றே ஒருநாள் கூட எண்ணாதீர்-வந்த ஒற்றுமை கெடவே பண்ணாதீர் திருநாள் காணின் தனிஈழம்-எட்டுத் திசையும் தமிழினப் புகழ்பாடும் ஒன்றே செய்யினும் நன்றாமே-அதை உடனே செய்தீர் இன்றாமே குன்றே எதிரே மறித்தாலும-கை குறுக்கே குழியே பறித்தாலும நின்றே முதல்வர் ஆய்வீரா-ஈழம் ந…
-
- 1 reply
- 635 views
-
-
முன்புபோல யாழிணையத்தில் கவிதை மற்றும் பதிவுகளை பிரசுரிப்பதே கருத்துக்கள் விவாதங்களில் இருந்து கற்றுக்கொள்ளவே, அந்த நாட்கள் சுவடுகளுமின்றி மலையேறிவிட்டது சோகம் ? எல்லோரும் மெல்ல மெல்ல விடுபட்டபடிக்கு. இது இன்னும் பிரசுரிக்கப் படாத கவிதை. . என்னுள் காதலாய் நிறைகிறது. . அக்கினி நட்சத்திர வெய்யிலை வீழ்த்திய தென்றல் மழை என்னை அன்புடன் தொட்டு உசுப்பிவிட்டது. சிலநாட்கள் சன்னலின் வெளியே அங்குமிங்குமாக ஊஞ்சல் ஆடி பார்த்த வேப்பமரம் ”டேய் கபோதி நான் பூப்படைந்துவிட்டேண்டா” என்றபடி சன்னல்வரை வந்து வெண் முத்துச் சாரமாடும் தன் பசிய கூந்தலை அசைத்துக் காட்டியது. எல்லாவற்றையும் மிஞ்சி இப்பகூட என்னை சுற்றிக் குயில்கள் பாடுகின்றன. . எனது குட்டித்தோழியும் பத்திரிகை…
-
- 1 reply
- 822 views
-
-
நீ கேட்கும் போதெல்லாம் என் கவிதைகளை தந்துகொண்டே இருக்கிறேன் ஏதாவது ஒரு கவிதையை படித்துவிட்டாவது என்னைக் கேட்பாய் என்ற நம்பிக்கையில் * தினமும் நீ என்னை பார்த்தும் பாராமல் போகிறாய் அதையும் பார்ப்பம் பாரமல் பார்க்காம எத்தனை மட்டும் பார்க்கப் போறாயென்று * சொன்னா கேக்க மாட்டிங்களா என்றதை கேக்கிறதற்காகவே தினமும் மழையில் நனைந்து வரலாம் * ஒரு இரவாவது நீ தூங்குவதை தூங்காமல் பார்க்க வேண்டும் என்ற என் ஆசை இன்னும் நிறைவேறவில்லை ம்ம் கொடுத்து வைத்த கணவன் நான் கொடுத்து வைக்கப் போகிற அம்மா நீ * நான் தொடர்ந்தும் உனக்காகவே கவிதை எழுத வேண்டும் என்பதில் எவ்வளவு ஆசை உனக்கு என் கவிதையை படித்துவிட்டு யாரு எழுதிய கிறுக்கலுக்கு …
-
- 1 reply
- 786 views
-
-
உனக்கெதற்கு கட்சி....???? ( ரவுகக்கீம் ) கதிரைகளை காத்து விட கழுதையாகி போவதுவோ....??? பண மூட்டைகளை வேண்டி பிட்டு பகை மூட்டைகளை சுமப்பதுவோ....??? பன்னிருவர் பலியெடுத்தான் பார்த்து நீயும்; நிற்பதுவோ....?? ஏறியவன் பகை உதைக்க இயலாமால் போனதுவோ...??? கை நீட்டி பணம் வேண்டி கை கட்டி நிற்பதுவோ....??? மக்களவர் மைந்தர் என்று மார் தட்டி உரைத்தவரே.... உன் இனத்தை அவன் அழிக்க பார்த்து இன்று நிற்பதுவோ....??? ஒன்றினைந்து அவன் உதைக்க உன்னால் இன்று முடியலயே.... ஓட்டு கேட்டு வீதியிலே ஓடி...ஓடி.... வந்தாயே.... ஓலத்தில் உன் மக்கள் அவர் ஓலத்தை துடைக்கலயே.... தனி தரப்பு …
-
- 1 reply
- 851 views
-
-
நிறைவேறா ஆசைகள் ஆயிரம் கோடி ஆசைகள் என் நெஞ்சினில்...இருக்கிறது அன்னை கனவு நிறைவேறனும் அண்ணன் பொறுபானவன் ஆகனும் அக்கா என்றும் ஆனந்தமாய் இருக்கனும் தம்பி அவன் சுமைகள் குறையனும் தங்கை அவள் எதிர்காலம் சிறக்கனும் என்னவன் என்னக்கானவனாய் ஆகனும் என்னை நம்பி நட்பு வைக்கும் உறவுகள் வாழ் நாளில் என்றும் பிரியாது இருக்கனும் அலைகடல் கடந்து சென்றாலும் உறவுகளுடன் என்றும் குறையாமல் அன்பாய் இருக்கனும் கையில் இருக்கும் அன்பான நட்புகள் என்றுமே சுயநலமில்லாது இருக்கனும் எந்த எதிர்பார்புகளும் இல்லாது என் துன்பங்களில் என்னவர்கள் பங்கு கொள்ளனும் இப்படி எத்தினை எத்தினையோ ஆசைகள் எல்லாமே என்றும் நிறைவேறா ஆசைகள்
-
- 1 reply
- 1k views
-
-
மூத்த தளபதியே எங்கள் முதல்வனே உன்னை தேடி எங்கள் தேசம் அலைந்தது.... எங்கே நீ என்று ஏங்கி தவித்தது... காலம் கடந்தொரு சேதி வந்தது வீரனாகியே நீ வீழந்தாய் என்றது.... அடியென நெஞ்சில் இடியொன்று வீழ்ந்தது உன்னையிழந்தெம் தேசம் தவித்தது... கண்கள் சிவந்து குளமாய் நிறைந்தது அழுதோம் துடித்தோம் ஆற்றுவாரின்றி தவித்தோம்... வீரனே எங்கள் விடுதலையின் ஊற்றே கண்ணி வெடி நாயகனே உன்னையா நாமிழந்தோம்....??? நம்ப முடியலயே.... மரண படுக்கையிலே மரனமாய் கிடைக்கையிலே மா பாவிகள் உன்னை கடத்தி போயினரோ....??? எங்களின் வேங்கையர் எத்தனை நீ காத்தாய் எம்மால் இயலலயே உனை காக்க முடியலயே... உளவு எடுக்க உன் உயிர் வதைத்த…
-
- 1 reply
- 889 views
-
-
என் காதலுக்கு உயிரோட்டம் தந்தவளே ஒற்றை வார்த்தைச் சொல்லில் கட்டிப் போட்ட வித்தகியே... இந்த நாளில் உன் வாய் திறந்து நீ உரைத்த தித்திக்கும் செந்தமிழே இன்னும் என் செவியில் உன் நினைவுகளை மீட்டும் தாரகை மந்திரமாய்... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழியிலும் என் சிறந்த தோழியாய் நீ.... நீ என் இனிப்புப் பெட்டகம் அன்பான வார்த்தைகளின் சொந்தக்காரி கண்களில் வைரக்கல் பதித்த காதல் ஓவியம் நீ உன் செவ்விதழ் என்ற காதல் ரோஜாவால் என் இதயத்தில் பூச்செண்டு முடித்து வைத்தாய். உன் மென் விரல்கள் என்னைத் தொடும் போதெல்லாம் என் இதயம் மெ…
-
- 1 reply
- 704 views
-
-
மாட்டுப்பொங்கல் வாய்க்கு ஒழுங்கா தீனி போடலை என்றாலும் வாய் நிறையா அம்மா என்று அழைக்கிறேனே உழைச்சு உழைச்சு ஓடா தேய்ஞ்சேனே எலும்பும் தோலுமா நிக்கிறேனே வருஷம் பூராவும் உழைக்கிற எனக்கு பொங்கலுக்கு மட்டும் என்னை கவனிச்சா போதுமா கதறி கதறி கண்ணிர் விடுற இந்த ஐந்தறிவுள்ள வாயில்லா ஜீவனை ஆறறிவுள்ள மனிதன் வருடம் பூரா கவனிக்க மாட்டானோ (இலங்கைப்பெண் கவிதைகளில் இருந்து)
-
- 1 reply
- 1.9k views
-