கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
:arrow: இங்கே கிலிக் >>> பாசம் என்னவனின் அன்பு முகம் இதுவெனில் அவர் அடுத்த முகம்...? ----பா-ச-ம்........ பாசத்தை காட்டி என்னை கொல்லாதே செல்ஷ் வார்த்தை ஒன்றை சொல்லி..... பூமியின் பந்தையே சுற்றி விட்டாய் ஏன்டா பாசம் வளர்த்தேனோ உன் மேல்........ புரியுமுன்......... ... சுடும் இதையத்தில் முள் தைத்தாய் இன்று உன் நினைவை புதைத்து விட்டேன் ........சாம்பலாய் சொல்லிவிட்டு பிரிந்து போகிறேன்...... :cry: :cry: விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆக்கிரமிப்பு நிலங்கள் .... மீளளிப்பு செய்யப்படுகின்றன .... ஆவலுடன் சென்ற மக்களின் ... திகைப்பும் திண்டாட்டமும் ..!!! எது என் குடியிருப்பு ...? எது எங்கள் சுடுகாடு ...?
-
- 1 reply
- 575 views
-
-
பாடலற்ற நிலம் .. நாங்கள் கனவழிக்கப்பட்ட மக்கள் நாங்கள் வாழ்வு அழிக்கப்பட்ட மக்கள் நாங்கள் நாடழிக்கப்பட்ட மக்கள் இப்பொழுது நாங்கள் கொடியும் பாடலும் அற்ற மக்கள். எங்களுக்கு ஒரு கனவு இருந்தது எங்களுக்கு ஒரு வாழ்வு இருந்தது எங்களுக்கு ஒரு நாடு இருந்தது அப்பொழுது எங்களுக்கு ஒரு கொடியும் பாடலும் இருந்தது. இன்று எங்கள் நகரத்தில் அந்நியக் கொடி பறக்கிறது எங்கள் நிலத்தில் அந்நியப் பாடல் ஒலிக்கிறது அன்று எங்கள் நகரத்தில் எங்கள் கொடிகள் பறந்தன எங்கள் நிலத்தில் எங்கள் பாடல் ஒலித்தது. அன்று எங்களுக்கு காவல் இருந்தது இன்று நாங்கள் காவல் இழந்திருக்கிறோம் அன்று எங்களுக்கொரு தலைவன் இருந்தான் இன்று எங்களுக்கு யாருமில்லை! தீபச்செல்வன் …
-
- 1 reply
- 716 views
-
-
முத்தம்மா பெற்ற பிள்ளை மூன்று பேர் உயிரோடு இல்லை முத்தப்பன் வளர்த்த பிள்ளை உடம்பில கை கால் இல்லை பத்துமாத தமிழ்ப் பிள்ளை படுத்துறங்க மடியில்லை படைவேரியன் பிடியில அழக்கூட முடியல்ல நன்றி - முகநூல்
-
- 1 reply
- 817 views
-
-
அழகெனும் மாணிக்கமாய் அனைவரும் அணியாது விழாதெழு மத்திவாரங்களாயொரு தமிழீழ அமைப்பதற்காய் வெளியில் தோன்றா வித்தாகிப் புதைந்தவர்களங்கே களிப்போடங்கே தேடாமுகமாக வாழ்வைத் தொலைத்தவர்கள் மதில்மேலொட்டுகின்ற சுவரொட்டி மருந்துக்கும் தெரியாது விதிநொந்து போகாமல் விழுதுகள் ஆனவர்கள் உதிக்கின்ற தமிழீழ உயர்வுக்காய் உழைத்தவர்கள் விதிக்கின்ற கட்டளையை விரும்பி யேற்றவர்கள் மண்ணின் விடிவுதன்னை மகிழ்வாய் தேடியவர் எண்ணத்தை மாற்றார்க்கு எடுத்துரைக்க மறுத்துவிட்டால் கண்மணிகள் கரும்புலிகள் கூற்றுவனை வலிந்தழைத்து மின்னலென வெடிமுழங்க மலர்சாய்ந்து போனவர்கள் கல்லறைகள் தோன்றாது கழிவிரக்க அஞ்சலியால் இல்லாத உடலுக்கு கண்ணீரைத் தானழைத்து வெந்து உடல்கருகும் வேங்கைகள் ஆனவர்…
-
- 1 reply
- 1.1k views
-
-
அகன்று திரண்டு அன்பு கனிந்தொரு அன்னை வளர்த்தாலும்-பிள்ளை தெருவில் நடந்தொரு பள்ளி பயின்றிட எதிரி தடையாக. நிமிர்ந்து எழுந்தனர் கருவி சுமந்தனர்-புலி தமிழர் படையாகி களங்கள் திறந்தனர் சமரில் உயர்ந்தனர் உலகம் வியந்தாக. படையில் விழுவதும் எழுந்து நிமிர்வதும் புதிய விதியல்ல விழுந்த மாவீரர் விதையா யாயினர் எழுவார் என்றென்றும். படலை திறந்தொரு தெருவில் இறங்கிட பயந்து சிலரோட நடுத்தெருவில் பலர் கதை முடிந்து சாவொரு மலிந்த நிலையாக, களங்கள் திறந்து சுழன்று சமரிடை புலி நிமிர்ந்த மாவீரன் குருதி படிந்து புதைந்து கிடந்தமண் கோவில் லாகாதோ. சதிகள் குவிந் தொரு நிலையில் மனமது தளந்து போகாமல் விமானத் தளங்கள் அழிந்தன களங்கள் எரிந்தன தமிழர்…
-
- 1 reply
- 734 views
-
-
ஆனந்த விகடனில் சென்ற வாரம் (30.12.15) "திருடன் விளையாட்டு” நிலாக்கனவு" என்ற எனது இரு கவிதைகள் வெளியாகியுள்ளன, என்பதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் திருடன் விளையாட்டு ராஜா ராணி மந்திரி போலீஸ் திருடன் சீட்டெழுதிப் போட்டு விளையாடியது சண்டையில் முடிந்தது. அழுதுகொண்டே ஓடி வந்த நிலா சொன்னாள்.... “ராஜா - ராணி மந்திரி - போலீஸ், எல்லாரும் திருடன்!” ந…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒரு உறவை இழந்தாலே ஆண்டாண்டு தவிக்கும் எம் இனத்தில் கொத்துக்கொத்தாய் ஆயிரமாயிரமாய் கொடுத்துக்கொண்டிருந்ததை கேட்டு பார்த்து அழுது புரண்டு காப்பாற்றும்படி மன்றாடி தோற்று இன்றும் எழும்பமுடியாமல் நித்திரை தொலைத்து நினைவுகளை மட்டுமே நெஞ்சில் சுமந்து நடைப்பிணங்களாக வாழ்கின்ற தமிழினம் தொலைத்தவை கொஞ்சமா? காவலுக்கு நின்ற தம்பிகளை தங்கைகளை பறி கொடுத்து தலைமை தாங்கிய தளபதிகளை இழந்து காப்பாற்றவேண்டிய தலைமையை தொலைத்து இந்த நூற்றாண்டின் இணையற்ற வீரர்களின்றி தலை குனிந்து நிற்கும் எம் இனம் மீண்ட…
-
- 1 reply
- 1.1k views
-
-
என்ன பாவம் செய்தமோ ...? ஈழ தமிழார் என்றால் ... துன்பம் ஒரு தொடர் கதை ....!!! அதோ தெரிகிறது வெளிச்சம் .... இதோ வருகிறது விடிவு .... என்று நினைக்கும் போது.... வெளிச்சத்துக்கு முடிவு .... வந்துகொண்டே இருக்கிறது ...!!! கொடியது கொடியது ... மனிதபிறவி கொடியது ... அதனிலும் கொடியது ..... தமிழனாய் பிறப்பது கொடியது .... அதனிலும் கொடியது .... ஈழத்தில் பிறந்தது கொடியது ... அதனிலும் கொடியது .... ஈழத்தில் பெண்ணாய் பிறந்தது ... கொடியது .....!!! + வலிக்கும் கவிதைகள் ஈழ கவிதை
-
- 1 reply
- 1.3k views
-
-
காதலர் தினத்தையொட்டி இரு காதல் பாடல்கள். அனைத்து யாழ்கள உறவுகளும் மகிழ்வோடு காதலர் தினத்தைக் கொண்டாட என்னுடைய வாழ்த்துக்கள். கடந்த பத்து வருடங்களுக்கு முன் என் மனதில் விழுந்த நதிக்காக நான் எழுதிய இரு பாடல்கள் இங்கே. இந்தப் பாடல்களின் தோற்றத்தால் இரு இறுவட்டுக்களும் ஒரு திரைப்படமும் உருவானதில் பெரு மகிழ்ச்சி. காதலர் தினத்தைக் கொண்டாட தயங்குபவன் தமிழனாக இருக்க முடியாது. காதலைப் போற்றாதவன் மனிதனாக வாழ முடியாது. காதல் என்பது இன்பத்துள் பேரின்பம், உணர்ச்சியுள் பேருணர்ச்சி, ஆற்றலுள் பேராற்றல், அடிப்படையுள் பேரடிப்படை, எல்லோருக்கும் உரியது, நட்பினுள் இரு பாலரையும் இணைப்பது என்பதைச் சங்கத் தமிழர்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்களும் அறிந்திருக்க வேண்டும். காதல் என்பது என்னைப் பொறு…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
01. உடலின் முன் மண்டியிட்டொரு மன்னிப்பு மஞ்சள்நிறக் கரைசல்கள் வழியும் சுவர்கள் மாத்திரைகளின் உபயம். காய்ச்சலின் தகிப்பைத் தம் குரலிலேற்றிப் பாடுகின்றன பறவைகள் உடலை இருபாதியாய் வகிர்ந்து பரவுகிறது வெப்ப மின்னல் பாதங்கள்தாம் எத்தனை கனம் உலகமோ எனக்கு எட்டாத தொலைவில் 'இதுதான் கடைசி; இனிமேலில்லை' உடலின் முன் மானசீகமாக மண்டியிடுகிறேன் பொதியுடன் மலையேறும் கழுதைபோல என்னைக் கொண்டிழுக்க எவ்வளவு சிரமப்பட்டாய் நீ. இந்த உலகின் நிறம் குருதி சுவையோ வட்ட நீள வில்லைகளின் கசப்பு மணம் சிறுநீர் ங்.....ஙென்றொரு சுநாதம் அ…
-
- 1 reply
- 1.1k views
-
-
தீபத்திருநாள் எங்கள் வீட்டு புன்னகையை இறைவன் தின்ற வீரம் செறிந்த நாள் என் வீடு முழுக்க நிறைந்து கிடந்தது இரத்தச் சிதறலும் சிதைந்த உடலும் என் உடலம் தினமும் குளித்து துவண்டது பெருக்கெடுத்தோடிய உறவுகளின் செந்நீரில் என் பதுங்ககழியில் பாம்பு தூங்கியது சுகமாக தறப்பாள் கொட்டிலில் தம்பி தூங்கினான் பிணமாக தந்தை மூட்டிய தீயில் கொதித்த நீரின் சுவையறிய துடித்தது நா ஆனால் தர மறுக்கிறது காலம் தங்கையின் அழுகுரலிலும் தாயின் அசையாத உடல் இயக்கத்திலும் நான் தவித்துக் கிடந்தேன் சிங்களத்தின் தீபாவளி கொண்டாட்ட வானவேடிக்கைகள் எம்மை தின்று தீர்த்தன பிறந்தகம்…
-
- 1 reply
- 1.2k views
-
-
என்றும் போல... - சாந்தி ரமேஷ் வவுனியன் - நிலவுக் கதிர்களை விழுங்கிச் செல்கிறது மழைக்கால வானம். மாவீரம் சொன்னபடி மழைத்துளிகள் நிலம் நனைக்க கருவறை வாசம் நினைவேற்று நித்திரை அறுகிறது..... ஒளிக்காட்சியொரு பொழுதில் உயிர் அதிர்த்த ஞாபகத்தில் விழிக்காட்டிக்குள்ளிருந்து துளித்துளியாய் சொட்டுக்கள்..... சென்று வருவதாய் சொல்லிப் போனவனின் கடைசிக் கடிதத்தின் சொற்கள் கசங்சி மங்கலாகி பல்லாயிரம் தரங்கள் படித்துப் படித்துப் பாடமான பின்னாலும்.... அவனைக் காணும் அவசரம் என்றும் போல..... இரவுக் கரி திரட்டி ஒளியின் விழி தன் உயிரில் திரிமூட்டி ஊரதிர உயிர்க்காற்று பேரதிர்வாய் நிறைகிறது. சொல்லாமல் கொள்ளாமல் சென்றவனின்…
-
- 1 reply
- 648 views
-
-
A POEM WRITTEN IN கடற்புறம் - வ.ஐ.ச.ஜெயபாலன் . 1979ல் எனது யாழ்பாணம் பலகலைக்கழக நாட்களில் எழுதிய கவிதை. முதலில் பல்கலைகழக மாணவர் சங்க அறிவித்தல் பலகையில் ஒட்டப்பட்டது. பின்னர் பெருந்தோழர் டோமினிக் ஜீவா அவர்கள் தனது மல்லிகை சஞ்சிகையில் பிரசுரித்தார். அதன்பின் பலதடவை மீழ் பிரசுரம் செய்யப்பட்டது. மலையகத்தைச் சேர்ந்த தோழி ஞானாம்பிகை ( gnana chitraranjan ) இலங்கை உயர்கல்வித் துறையில் பணியாற்றியபோது பாடபுத்தகத்தில் இக்கவிதை சேர்க்கபட்டதால் இலங்கை தமிழ் ஆசிரியர்கள் மாணவர்களிடையே பிரபலமானது. . இக்கவிதையை தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் கே.எஸ்.சுப்பிரமனியன் ஆங்கிலத்தில் மொழி பெயர்திருக்கிறார் யாரிடமாவது பிரதி இருந்தால் அனுப்பி உதவுமாறு கேட்…
-
- 1 reply
- 758 views
-
-
நாங்கள் நடந்தது…….! நாங்கள் நடந்தது உங்கள் வாழ்வு தலைநிமிர தலைநிமிர்வுக்காகத் தலைதந்து களம் வீழ்ந்தோம் வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுந்து நிமிர்வதற்கே நிமிர்வதற்காய் நிமிருங்கள் நீதிக்காய் துணியுங்கள் துணிவுடைத்தோன் தலைவனவன் சொல்லியதை மறக்காதீர் மறக்காது மதிநுட்பம் தாங்கியோராய் மதிகொடெழுந்தலே எழுச்சியிலே பேரெழுச்சி காணுகின்ற நிலை தோன்றும் தோற்றத்தின் தொடராக மாற்றங்கள் நிகழ்ந்தேறும் ஏற்றமதை காண்பதற்கு எங்களுக்குள் எழுச்சிகொள்வோம் தன்னெழுச்சி கொள்ளாது மண்னெழுச்சி கொள்ளாது கொள்கையிலே உறுதிகொண்டோர் தோற்றதில்லை உலகினிலே …
-
- 1 reply
- 1.7k views
-
-
கவிஞர்வை வைரமுத்து மரங்கள் குறித்து பாடிய கவிதை மரங்களை பாடுவேன்வாரும் வள்ளுவரேமக்கட்பன்பில்லாதவரை என்ன சொன்னீர்,மரம் என்றுமரமென்றால் அவ்வளவு மட்டமா.!!வணக்கம் ஒளவையேநீட்டோலை வாசியான் யாரென்றீர்மரமென்றுமரமென்றால் அத்தனை இழிவா !!பக்கத்தில் யாரவர் பாரதிதானேபாஞ்சாலி மீட்காத பாமரரை என்னவென்றீர்நெத்தை மரங்கள் என்றீர்மரங்கள் என்றால் அவ்வளவு கேவலமா !!மரம் !!!!!!சிருஷ்டியில் ஒரு சித்திரம்பூமியின் ஆச்சரிய குறிநினைக்க நினைக்க நெஞ்சூறும் அனுபவம்.விண்மீனுக்குத் தூண்டில் போடும் கிளைகள்சிரிப்பை ஊற்றிவைத்த இலைகள்உயிர் ஒழுகும் மலர்கள்மனிதன்தரா ஞானம் மரம் தருமெனக்குமனிதன் தோன்றும் முன் மரம் தோன்றிற்றுமரம் நமக்கு அண்ணன்அண்ணனை பழி…
-
- 1 reply
- 4.6k views
-
-
ஏழையாய்ப் போனேனே.... கோமேதகக் கண்ணிரண்டும் கோடி பெறும் கட்டிவைத்த முத்துக்களாய்.. பற்கள் மின்னும்.. தங்கநிற மேனியோ... கண்கள் கூசும் தாமரை அவள் வார்த்தை.. சங்கீதமாகும் எல்லாமும்.. என் சொத்தே எண்ணி வாழ்ந்தேன்... பொல்லாத செல்க் காலானால் ஏழையானேன்.
-
- 1 reply
- 853 views
-
-
கவிப்பேரரசு கண்ட கருப்பு நிலா அளவாகத்தீயெரிந்தால் அதனை விளக்கென்போம் அளவுக்கு மீறிவிட்டால் அதனை நெருப்பென்போம் அளவுக்கு மேல்பொறுமை அன்னமே நீ காட்டியதால் களவுக்குப் போனதம்மா காத்துவைத்த உன்சொத்து ம் தற்போதைய எமது நாட்டு நடப்பிற்கும் இந்த கவிதை மிகப்பொருத்தமாக இருக்கின்றது. பொறுத்தார் பூமியாழ்வார் என்பது பழங்கதை. இன்று பொறுத்தவர் இழந்து நிற்பதுதான் மிச்சம். புரிந்தால் அனைவரும் அணிதிரள்வோம். விடுதலை என்னும் சிறகை விரிக்கவே விரைந்து உதவுவோம்.
-
- 1 reply
- 1.1k views
-
-
தீபமே எங்கள் திலீபமே! தமிழீழ விடியலென்ற தீராத பசியோடு தண்ணீரும் அருந்தாது தியாக வேள்வியிலே தீபமாய் எரியும் திலீபமே யாரடா உள்ளனர் உந்தன் உணர்வையும் தமிழீழ உயிரொன்றையும் மறக்கடிக்கச் செய்வதற்கு யாரடா உள்ளனர்! நிலம் மீட்கும் துணிவோடு மண்ணின் மக்களின்று அகிம்சைப் போர் தொடுத்து ஆங்காங்கே நகர்கின்றார்! வேதியலுக்கும் புரியாத வேங்கையரின் வீரத்தை வீறுடனே பதியமிட்ட அகிம்சையின் வேந்தனே காந்தியைத் தலைகுனிய வைத்த கிந்தியத்தின் முகத்திரையைக் கிழித்தெறிந்து முரசறைந்தாய் திலீபமே! பெரும் புயலாக மேலெழுந்து திலீபமாய் மூட்டிய தீயின்று அணைந்து விட்டதாய் யார் யாரோ சொல்கின்றார் சிங்கத்தின் கால் கழுவி யானையின் கை தடவி அரசியல் பிழைப்புக்காய் அலைகிறது ஒரு கூட்டம் அ…
-
- 1 reply
- 741 views
-
-
மேஜர் சிட்டுவின் 40வது பிறந்தநாள் நவம்பர் 4ம் திகதி. எங்கள் இனத்துக்காக வாழ்ந்த மாவீரர் சிட்டுவின் 40வது பிறந்தநாள் வலைப்பூவில் சிட்டுவின் பாடல்கள் நினைவுக்குறிப்புகளை பதிவிடும் நோக்கில் ஏற்பாடுகள் ஒழுங்காகிறது. யாழ்கள கவிஞர்கள் கருத்தாளர்களிடமிருந்தும் உங்கள் எண்ணங்கள் கவிதைகள் நினைவுப் பகிர்வுகளை அனுப்பி உதவுமாறு வேண்டுகிறேன். எங்களுக்காக வாழ்ந்து எங்கள் நினைவுகளில் வாழ்கிற மாவீரர்களின் வரலாறுகளைப் பதிவிடுவோம். உங்கள் எண்ணங்கள் கவிதைகள் நினைவுப்பகிர்வுகளை கீழ்வரும் மின்னஞ்சலுக்கு அஞ்சலிடுங்கள். 2ம் திகதி நவம்பருக்கு முன்னர் கிடைக்குமாறு அனுப்புங்கள். மின்னஞ்சல் முகவரி - rameshsanthi@gmail.com சிட்டுவிற்கான வலைப்பூ - http://chiddu1997.wordpress…
-
- 1 reply
- 3.5k views
-
-
தேசக் காதல் யூலியட் இறக்கவில்லை நடித்திருந்தாள். ரோமியோ அறியவில்லை இறந்துவிட்டான். யூலியட் அறிந்துபின் இறந்துவிட்டாள். “இருவரும் இறக்கவில்லை விதைக்கப்பட்டார்கள்” எழுதிவைத்தார்கள் காதலுக்காய் உயிரைவிடுதல் காவியம் என்று. ரோமியோ! யூலியட்! உருகி வழிகிறது உலகம் முழுதும் ஒன்றுக்கு பதிலாய் பல நூறாயிரமாய் நாமும் காதலித்தோம். இதயச்சுவர்களில் ஈரமாய் எழுதினோம். ஊர்காற்று முழுதும் ஓலை அனுப்பினோம். காது மடல்களில் கானம் இசைத்தோம். மூக்கு முட்டிச் சுவாசித்தோம். இதழ்களால் இறுகப் பற்றினோம். கண்கள் முழுதும் நிறைத்தோம். ஒரு கோப்பையில் உண்டோம். காலடிச் சுவடுகளில் கால்வைத்து நடந்தோம். அவள் ஒளியில் …
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரளயத்தின் சாட்சி கண்கொண்டு பார்க்க முடியாது ஒரு பறவை இரத்தம் சொட்டச் சொட்ட நந்திக்கடற்கரைச் சேற்றுக்குள் பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர் பின்னர் ஆண்குறிகளால் பின்னர் துப்பாக்கிகளால் அழுகிய பிணங்களைப் புணரும் வீரமிகு படைகள் வேறெதைச் செய்வர்? யாருமற்ற கடற்கரையில் ஈனக்குரல் எழுப்புகையில் ஒரு ஊர்க்குருவியும் துணைக்கில்லை வற்றப்பளையம்மன் எங்கு சென்றாள்? யாராலும் எழுத முடியாது நேரிட்ட நிர்க்கதியை சிந்திய கண்ணீரை உறிஞ்சபடப்ட்ட இரத்தத்தை பிய்த்தெறியப்பட்ட கதையை இறுதிக்குரலை நிராயுதயபாணிகளை வேட்டையாடும் கொலையாளிகளிடம் ‘அது நானில்லை’ என்று சொன்னாய் …
-
- 1 reply
- 624 views
-
-
பிழை நடக்குது என உணா்ந்தவன் துவக்கை எடுத்தான் களை பிடுங்க – அவன் எதிரிகள் தலையை எடுத்தான் சிலை போல் சிலா் நின்றது கண்டு விழி சிவந்து நின்றான் மலை மேல் விழினும் தலையால் மோதி உடைப்பாய் என்றான்! நிலை உயா்ந்து நின்ற சிலா் மண்ணை விலை பேசுதல் கண்டு கையிலைச் சிவன் போல் உக்கிரம் கொண்டான்! மண்ணை மீற்க மறவா் படை அமைத்தான் கழுத்தில் நஞ்சு கட்டி யமனின் வேலை குறைத்தான்! களம் பல ஆடி பகையோடு மோதி நகை பல செய்து நின்றான்! திகைத்து நின்றான் பகைவன் திசை பல ஆள் அனுப்பி சூழ்ந்து நின்று சூழ்ச்சி செய்தான்! எதிர்த்து நின்றான் தம்பிகளோடு அண்ணன் இறுதியில் வென்றது துரோகம்! வீரம் சுமந்து நெஞ்சில் ஈழம் சுமந்து நி…
-
- 1 reply
- 898 views
-
-
நிமலரூபன் சிறைச்சாலையில் கொலை... இது பலருக்கு செய்தி.... சிலருக்கு ஆறாத்துயர்... நிமலா.... நாம் சொல்கிறோம்... உனக்கு இது விடுதலை! உண்மையிலேயே நீ விடுதலை அடைந்துவிட்டாய்..... நாம் இன்னும் விடுதலைக்காக காத்திருக்கிறோம்.... உடலிலும் உள்ளத்திலும் வலிகளை சுமந்தபடி..... விடுதலைக்காய் காத்திருக்கிறோம்...... உள்ளேயும்........... வெளியேயும்...... காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் நாம் கதைகளும், கவிதைகளும் ஆகிவிட்டோம். நிஜம்களாய் இருந்த நாம்... இப்போது நிழல்களாய் மாறிவிட்டோம். விடுதலைக்காய் காத்திருக்கிறோம்.... விடுதலை கிடைக்கும்போது நிழல்களும் அழிந்துவிடும்.
-
- 1 reply
- 752 views
-