Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. களனி கங்கையின் இசை நிலவிலே பெளத்த நாட்டிளம் பெண்களுடனே சுந்தர சிங்களத்தில் பாட்டிசைத்து ரயில்,பஸ் ஒட்டி விளையாடிடுவோம் யாழ்ப்பாணத்து செம்மண் புறத்து பனம்பண்டம் புளத்சிங்கள வெத்திலைக்கு மாறு பண்டம் முஸ்லிம் மக்களின் கவிதை கொண்டு அரபிய தொப்பிகளை பரிசளிப்போம் புலத்து தமிழருக்கோர் பாலம் அமைப்போம் இணையத்தை பலப்படுத்தி உறவு சமைப்போம் மகாவலியில் ஒடிவரும் நிரின்மிகையால் எல்லா மாவட்டங்களிலும் பயிர் செய்திடுவோம் மலையகத்தில் தேயிலை பயிரிடுவோம் வெளிநாட்டுக்கு ஏற்றியிடுவோம் மட்டுநகரில் கருவாடு காயவைப்போம் தொப்புள் கொடி உறவுகளுக்கு பார்சல் பண்ணிடுவோம் ஆயுதம் செய்வோம் நல்ல குடியேற்றம் செய்வோம் விகாரைகள் வைப்போம் அகதி முகாம் வைப்போம் ச…

  2. Started by Thulasi_ca,

    பிரிவு வாழ்வில் எத்தனை பிரிவுகள் தாய் நிலத்தைப் பிரிந்தேன் தாய் தந்தையைப் பிரிந்தேன் தம்பி தங்கையையும் பிரிந்தேன் செல்ல நாய்க்குட்டியைப் பிரிந்தேன் கிளித்தட்டு ஆடும் சிறு திடலையும் பிரிந்தேன் சிட்டாய் பறக்கும் என் துவிச்சக்கர வண்டியைப் பிரிந்தேன் பசுமையான பள்ளித் தோளியரைப் பிரிந்தேன் நறுமணம் வீசும் முற்றத்து மல்லிகையைப் பிரிந்தேன் இனிய குயில்ப் பாட்டைப் பிரிந்தேன் மொத்ததில் எனது இனிய கனவுகளைப் பிரிந்தேன் இத்தனை பிரிவுகளும் எத்தற்கா செய்தேன்? பிரிவுகளின் கொடுமையில்த் தவியாய்த் தவிக்கிறேன். :cry: துளசி

    • 8 replies
    • 1.7k views
  3. இந்தியாவையும் சீனாவையும் இழுத்து வந்து போட்டீர்-பா .உதயன் இந்து சமுத்திரத்தில் வந்ததொரு சீனக் கப்பல் இலங்கைக்கு வந்திருக்காம் சிக்கல் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இதனால விக்கல் அண்ணன் அமெரிக்காவும் அதனால முறுகல் பூகோள அரசியலில் இங்கே புதிதாய் கயிறிளுத்தல் போட்டி இனி என்ன நடக்கும் இந்து சமுத்திரத்தில் இந்த சிறிய தீவில் புகுந்து இருந்ததெல்லாம் அறுத்துக் கொட்டிப் போட்டு எல்லாப் பெருச்சாளிகளும் இப்போ இந்து சமுத்திரத்தில் கண்ணாம் தங்கள் பாதுகாப்பு என்று சொந்த நலன் போட்டி பட்டுப் பாதை திட்டம் என்று பாதி உலகை சுறுட்டிய சீனா இலங்கைக்கும் வந்து இருந்ததையும் சுருட்டிப் போட்டான் இது சீனாவின் இன்னும் ஓர் ஆசியக…

  4. அழகாயிருப்பேனா..? காயாத ரணங்கள் கொண்ட மனது கஷ்டங்கள் மேல் எழுந்து அமுத்துவதால் கவலைகள் அடிக்கடி தற்கொலைசெய்யும் அழகில் நான் கறுப்பி ஆகிவிட்டதால் நிலைக்கண்ணாடியும் என் நிறத்தின் நிஜமாய் நிதர்சனமாய் சொல்கிறதே அழகின் வரைவிலக்கணம் எது என்று அறியவில்லை இதுவரை சிலந்திவலையை கொண்டு விண்மினை பிடிப்பது போல் இருக்கின்றது வாழ்க்கை இறந்த பிறகாவது நான் அழகாயிருப்பேனா..?

  5. Started by slgirl,

    நினவுகளில்... என் அன்பே ஏனோ நான் இன்னமும் உன் நினைவுடனே நீ தான் சொல்லி விட்டாயே நாம் இனிமேல் நண்பர்கள் என்று என்னால் ஏனோ இதனை ஜீரணிக்க முடியவில்லை என்ன நான் செய்வேன் உந்தனை மறக்க நீயே எனக்கு ஏதும் வழி சொல் உன்னில் நான் நிஜமான உள்ளம் இழந்தேன்...இதை நான் திருப்பி பெற்றுகொள்ள விரும்பவில்லை நீயோ எடுத்து செல் என்று கூறி பல காலம் ஆகி விட்டது முடியாது அன்பே என்னால் அது என்றுமே முடியாது அன்பே எப்படி நான் வாழ்வேன் உந்தன் அன்பு அது என்னில் இல்லை என்றால் பதில் ஏதும் கூறு அன்பே என்னவனாய் நீ வர மாட்டாயா...???

    • 7 replies
    • 1.2k views
  6. லண்டனில் ஒரு மாமி மாமியைப் போல புருஷன் பாவம் இவோ புருஷன் பயந்த சுபாபக்காரன் மாமி ஒருக்கா பார்த்தால் மனுஷன் பயந்து போவேர் இரண்டு பேரும் சேர்ந்து காசு காசாய் உழைத்து இன்னும் போதாது என்று இரவு பகல் வேலை வட்டிக்கு எல்லாம் கொடுத்து குட்டி போடுது காசு காசு மட்டும் மாமிக்கு கடவுள் போல காணும் சீட்டு கீட்டு என்று சேர்த்து வைச்சு காசை போட்டு போட்டு பாங்கிலா காட்ட மாட்டா வெளியில மாளிகை போல் வீடு மனது மட்டும் சிறிது யாரும் உதவி கேட்டால் வாரும் பிறகு பார்ப்பம் என்று நைசா மாமி நழுவிப் போடுவா வெறும் கசவார மாமி கை இறுக்கம் பாரும் காசை வச்சு மாமி என்ன செய்யப் போறா கட்டிக் கொண்டா போவா. பா .உதயன்

  7. காதலும் நட்பும் என் விரல் நகம் கூட என் காதலியின் உடல் மீது படாமல் எவ்வளவு கண்ணியமாகக் காதலிக்கிறேன் என்பதை என் தோழியிடம் கூறிக் கொண்டிருந்தேன் அவளது தோளில் சாய்ந்தபடி.

    • 19 replies
    • 4.3k views
  8. இடமொன்று தருவாயா? ஈர்பத்து ஆண்டுகளாய் இடறாத என்மனதை அசைத்தவளே அகிலத்தை அழகாக்க வந்தவளே வாசமில்லா மலராகி வாடி நிலம்தொட்டு கசங்கிக் கிடந்தவனை கவர்ந்திழுத்த காரிகையே கானல் நீரென்று கனவெல்லாம் களைந்தகற்றிக் கடிமனதைத் திடப்படுத்தும் காலம்வரை காத்தனையோ ஆண்டைந்து பொறுத்(து)அன்னை அகிலத்தில் போட்டிருந்தால் துணையாக வாவென்று துணிவோடு கேட்டிருப்பேன் விதிவந்து விளையாடி விரிசல்கள் செய்யாமல் கற்றவனாய் இருந்திருந்தால் கன்னியுனைக் கேட்டிருப்பேன் எட்டாத கொப்பென்று என்மனது சொன்னாலும் என்னவளே உன்நினைவை எடுத்தெறிய முடியலையே அன்பென்ற வார்த்தைக்கு அழகூட்ட வந்தவளே - உன் இதயத்தில் உட்கார இடமொன்று தருவாயா?

  9. இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு அரசியல் எண்ணம் இதில் வாழும் தெய்வம் மைத்திரி நீ(நீங்கள்) உயிரில் கலந்து பேசும் பொழுது எதுவும் அரசியலே அரசியல் பேச்சுக்கள் எதுவும் புதிதல்ல ஒப்பந்தங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல எனது இதயம் ஒன்றுதான் புதிது நீயும் நானும் போவது அரசியல் என்ற பாதையில் சேரும் நேரம் வந்ததும் தமிழன் வாக்கு போட்டு கவுத்தானே ஒற்றையாட்சியில் ஒரு தீர்வை சிங்களவன் தடுத்தானே சிங்களவனின் நாடு சிங்களவர்க்கே எனதாருயிர் ஜீவன் என்னை ஆண்டாயே வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே எந்த தலைவனிடமும் இல்லாத ஒன்று உன்னிடம் உள்ளது அது எதோ அதை அறியாமல் விட மாட்டேன்....

  10. Started by Thamilthangai,

    "வெற்றிக்கனி" எட்டுத்திக்கும் முட்டட்டுமே பகை!! உடைத்தே எறிவோம் எம் கைவிலங்கை! அடிமையாய் வாழ்வது ஈனம்! வீரம் தமிழரின் மானம்!. எட்டடா! எட்டு வெற்றிக்கனி!- பகை ஓட்டி வெல்வோம்! நாங்கள் புலி! கட்டுண்டு கிடப்பதோ இன்னும்?! எழுந்துவிட்டால் எம்கொடி விண்ணில்! ஈழம் எங்கள் உடமை தமிழா காப்பது நம் கடமை! உரிமை மறுக்கும் சிங்களத்தின் வேரை அறுத்தே நாட்டு உந்தன் பேரை! 'விதி வசம் என்பதை விட்டு! தடை உடைத்தே புறப்படு இது நம்நாடு! எரிமலையாய் இருடா! தமிழா! இருட்டினை விரட்டத் தீயாய் எழடா!.

  11. எப்போதும் நான் அப்படியே இருக்கிறேன் மற்றவரைப் புரியமுடியாது உற்றவரின் துயரம் அறியாது கற்பனை வானில் பறந்துகொண்டே கடிவாளமற்ற சிந்தனையோடு என்னைக் காயப்படுத்துவோரை கழற்றி எறிய முடியாதவளாய் மீண்டும் மீண்டும் மனதில் விழுப்புண் தாங்கியபடி விழுங்க முடியாதைதை எல்லாம் எப்படியோ விழுங்கியபடி ......... எப்படி மீண்டு வருவேன் நான் பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் எழ மனம் ஆசை கொள்கின்றது ஆனாலும் சூழ எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் வீரியத்தில் கைகொடுக்க யாருமேயற்று காணும் இடம் எங்கும் தீ நாக்குச் சூழ செய்வதறியாது தவிக்கிறேன் நான்

  12. பொய் சொல்ல வேண்டியதில்லை எதிர்பார்த்து ஏமற வேண்டியதில்லை வெட்டிக்கதைகள் பேச வேண்டியதில்லை கவலையால் தூக்கம்கெட தேவையில்லை முகத்திற்குமுன் சிரித்துப்பேசி முதுகுக்குப்பின் குறைத்துப்பேச வேண்டியதில்லை ஊருக்கு உபதேசம் செய்யவேண்டியதில்லை நாம் குழந்தையாகவே இருந்திருந்தால்...

    • 0 replies
    • 557 views
  13. ( படம் முகநூல் ) இன்பத்துக்கும் துன்பத்துக்கும் வித்தியம் தெரியாத விடலைக் குழவி நான் . இயற்கை அன்னை அள்ளித் தெளித்த அகண்ட நீர்வீழ்சியில், இன்று நான் பட்ட இன்பம் என் வாழ்வில் கண்ட முதல் இன்பம் . அம்மாவும் அப்பாவும் எனக்கில்லை இயற்கையே எனக்கு அம்மா . அவள் மடியில் செல்லக் குழவி நான் . என்ற போதிலும் !!!!!!!!! மனிதன் கையில் நான் பட்டால் என் இன்பம் தொலைந்து விடுமே !!!!!!!!

  14. " என் இதயத்தை பறித்தாள் அவள் இதயம் என்னோடு அழுதது "-------" உயிராய் காதல் செய்தேன் இதயம் இறந்துவிட்டது "-------" தோற்ற காதலின் இதயம் கல்லறையை சுமக்கும் "-------"கண்ணால் காதல் செய்தேன் இதயத்தால் அழுகிறேன் "-------"கண்ணிலும் இதயத்திலும் காதலால் காயப்பட்டு விட்டேன்"-------" கவிதைதான் காதலின் சுவர்க்கமும் இன்பமும் "-------" உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது அழகு "-------" காதலில் தோற்றேன் கவிதையில் வென்றேன் "-------"இதயத்துக்கு பயிற்சி காதலும் கவிதையும் "-------"காதலை ஆரம்பித்தேன் கவிதை நூல் பிறந்தது "-------"இரண்டு இதயம் மெல்ல சாவது காதல் தோல்வி "----"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் மெல்ல சாவது காதல் ஏமாற்றம் "-----"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் கண்ணீர் விடுவது ஒருதலை காதல் "---…

  15. சார்ள்ஸ் அன்டனிக்கள் களத்தில்தான் வீழ்ந்தார்கள் உன் பெயரை தன் மகனின் முகவரியாக்கினார் எம் தேசியத்தலைவர். அவர் வீட்டில் தினம் ஒலிக்கும்... உன் நாமம் ... சார்ல்ஸ் அன்டனி. மனம் தளர்ந்து ஒதுங்க நினைத்தவரை இழுத்து வந்து நிமிர்த்தியவன் நீ. அதைப் பெருமையாகக் கூறுவான் உன் தலைவன். அவருக்குத் தெரியாத விடயமெல்லாம் நீ கூறுவாயாம். பெருமைகொள்...அதையும் வெளிப்படையாய் கூறும் பரந்த மனமுடையோன் உன் தலைவன். உன் ஆளுமை பற்றிப் பேசுகையில் குழந்தை போலாகிவிடுவார் எம் தலைவன். நண்பனாய், தோழனாய்,சேவகனாய், மந்திரியாய், முதல் படைத்தலைவனாய் வாழ்ந்தாய். தலைவனின் போராட்ட வாழ்விற்கு சரியான அத்திவாரமடா நீ. உறுதிதளரா நெஞ்சங்கள் முதல் வித்துக்களாகி, இறுதிவரை போராடும் பேராளுமையை அளித்தீர். …

  16. (கரும்புலித்தினம் நினைவாக ......) லட்சியம் வெல்வோம் சத்தியம் செய்வோம்....... உயிரை பாலாக்கி உரமூட்டி அனுப்பிவைத்தோம் உயிரினும் மேலாம் தமிழ் ஈழ விடுதலைக்கு உரமாகி போனாயோ உயிர் மீண்டு வந்திடுவாய் .. களமாடும் படையினிலே கரும்புலியாய் ஆகு மட்டும் கருத்துடனே காத்திருந்து கண்ணியமாய் வாழ்ந்த வரே காவியமாய் போனீரோ காலன் அவன் நாடினிலே கரை தெரியாக் கடலினிலே கப்பல்களை களையெடுக்க காட்டாற்று வேகமுடன் களமாடிய காளைகளே கன்னியர் காவிய வீரர் தினம் நினைப்போம் லட்சியம் வெல்வோம் சத்தியம் செய்வோம்

  17. குழந்தைகளுக்கு மட்டுமே மழையின் மொழி புரியும் மழையே வா வா மழையே வா பூக்களின் மேலே வந்து உன் புன்னகையை கொட்டிப் போ ஒரு கவி சொல்லக் காத்திருக்கிறேன் நீ பூவோடு பேசிய காதலை மௌனமாக வந்து என் காதோடு பேசி விட்டுப் போ வா மழையே வா . -பா.உதயன்

    • 2 replies
    • 778 views
  18. இந்த வானவில்,முன்பொரு பொழுதில் வண்ணங்களற்றுப்போய் வெறுமனே நீண்டு போய் கிடந்தது. என் தூரத்துக் காதலியின்,அள்ளமுடியாக் காதலை தான் வாங்கி வந்து தருவதாய் சொல்லி போன வானவில்,என் மீதான அவளின் காதலை பெற்றதும்,அழகிய வண்ணங்களை கொண்டதாய் மாறிற்று. என் மீதான அவளின் காதலை சுமக்க முடியாமல்,வளைந்தும் போயிற்று. என்னிடம் எனக்குரிய காதலை சேர்ப்பதற்க்கு முன்னரே இவ்வனர்த்தங்கள் நிகழ்ந்து விட்டதால்,அவளுக்கு மிகப்பிடித்த மழைப்பொழுதுகளில் மட்டும் தலை காட்டி,என்னிடம் அவளின் காதலை சேர்ப்பதாய் சொல்லி, நான் காணுமுன்னரே ஒழிந்து மறைந்து விடுகிறது

  19. மகரந்தங்களின் கண்ணீரும் பருவம் தப்பிப்போன பாலணுக்களின் திட்டைக்களும் நிறைந்து கிடக்கின்றன தேன்களில்கூடுகளில், சுடர் தின்ற விட்டிலின் கனவுகள் கருகி பரவுகின்றன அழகோடு இயைந்த நிலவினைப் புணர தேடியலைகிறான் சூரியன் இரவினை கொன்றும் பிறக்கிறது இரவும் நிலவும். இலைகளை வெறுத்த கிளைகள் காத்திருக்கின்றன, பறவையொன்றின் விரல்களின் தீண்டலுக்காக, சாம்பல்மேடுகளில் மேய்ந்த மாடுகளின் மடிகள் கறக்கின்றன ஆசை தீய்ந்துபோன வெப்பத்தோடு, அன்பு... ஒருவர் மனம் நெகிழும்படி மற்றொருவர் வெளிப்படுத்தும் பாசமும் நேசமும் நட்பும் என்று தெளிவாக வரையறை செய்கிறது அகராதி. அநேக நாக்குகளில் வழிகிறது துர்நாற்றம் சிலவேளைகளில் விசமாகவும். அடங்க மறுத்து ஆர்ப்பரிக்கும் விடைகள…

  20. மடியில் கிடத்தி இப்போதும் தலை கோதுகிறாள் அம்மா தன் செல்லப் பிள்ளையென குழந்‌தையென உறங்குகிறேன் நான் கைவிரல் பதியும் அப்பாவின் முரட்டு அடி இப்போதும் பயம் தான் எப்போதும் ஓரடி தள்ளியே நிற்கிறேன் அன்பாய் சொல்கையிலும் அதட்டலாய் தொனிக்கும் பாட்டியின் சொல்லை இப்போதும் மறுப்பதில்லை பழுத்து தழுத்த போதும் நரைத்த என் தலைக்கு பின்னிருந்‌து கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்கும் என் பிள்ளை பிறந்‌தது நேற்றெனவே தோன்றும் ஆனால் ஒரு நமட்டுச் சிரிப்பில் சட்டென உணர்த்தி விடுகிறாள் மனைவி எனக்குக் கழுதை வயதாவதை கழுதையின் வயதென்னவோதான் தெரிவதில்லை லோ.கார்த்திகேசன்

  21. விரிந்த எனது தேசத்தின், பரந்து படர்ந்த வெளியெங்கும், அறைந்து நிற்கிறது வெறுமை! நான்கு வருடங்கள் நகர்ந்து போனதை, நம்பக்கூட முடியவில்லை! உங்கள் நினைவுகள் சுமந்த, உயிர்க்கூடுகள் மீது. கோரை படர்ந்திருக்க, எருக்கிலை சிந்தும் கள்ளிப்பால், உங்களுக்கு நிவேதனமாகின்றது! அரவங கேட்டுச் சத்தமிடும், ஆட்காட்டிக் குருவிகள், உங்களுக்காகக் கீதமிசைக்கின்றன ! எங்களுக்கெல்லாம் இப்போது, இரண்டு விலாசங்கள்! பிறந்த இடமொன்று, மறையும் இடம் இன்னொன்று! கிழக்கே உதித்து, மேற்கில் மறைகின்ற, சூரியன்களாக, எங்களை நாங்களே, உருவகித்துக் கொள்கிறோம்! அரேபியப் பாலைவனங்களிலும், உருகும் பனிப் டலங்களிலும், எங்களால் வாழமுடிகின்றது! நகருகின்ற ஒவ்வொரு வினாடியும், எங்கள் தேசம்…

  22. "நீயும்" பிழை செய்தாய் "நானும்" பிழை செய்தேன் இனி..!!! "நாங்கள்" பிழை செய்யவேண்டாம்!!!! காத்தான்குடிக்கும் காங்கேசன்துறைக்கும் "உறவும்பாலம்" கட்ட நான் "ரெடி" உன் கைகளில் இருக்கும் "வெண்பொங்கலையும்" "பொல்" சம்பலையும் களுவி விட்டு வா!!! ஒற்றுமையாய் கரம் பிடிப்போம்!!!!

    • 4 replies
    • 881 views
  23. Started by இலக்கியன்,

    பத்துமாதம் சுமந்து பத்திரமாக பெற்றதாய்க்கு பத்து ஜென்மம் எடுத்தாலும் அந்தக்கடன் தீர்ந்துடுமா எந்த ஜென்மம் என்றாலும் நீதான் எனக்கு தாயாக வேண்டும் அம்மா

  24. https://www.youtube.com/watch?v=LaINo30pO8o&feature=youtu.be

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.