கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அள்ளி எடுப்ப தூஉவும் இன்பம் எள்ளித் தடுப்ப தூஉவும் இன்பம் பள்ளி கொடுப்ப தூஉவும் இன்பம் தள்ளிப் படுப்ப தூஉவும் இன்பம் (பெண்ணே உன்னை அள்ளி எடுத்து அணைக்கும் போது இன்பமாகின்றது, அவ்வேளை நீ எள்ளி நகைசெய்து தடுப்பது இன்பமாகின்றது, பள்ளியறையில் நீ கொடுக்கின்றதெல்லாம் இன்பமாகின்றது, இருந்தும் ஊடலுற்று நீ தள்ளிப் படுப்பது கூடவும் அல்லவா இன்பமாகின்றது!) -அன்பு மனைவிக்காக 14பெப்பிரவரி2016-
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்பம் துன்பத்தைத் தாண்டித் தருவான் தூயவன். ------------------------------------ (கடவுள்) துன்பமும் இன்பமும் சமம் என ஞானவான் --------------------------------- (அறிவாளன்) சவம் செய்வான் யாவர் அறிய பயன் பெருவான் சர்ந்தப்பவாதி இரண்டிலும் ---------------------------------- (சர்ந்தப்ப வாழ்க்கை கொண்டவன்) மாயவர் காலில் மண்டியிடுவார் தும்பத்து மக்கள், இன்பம் பெற. ---------------------------- (வாக்கு கொடுப்பவர் காலின் ஆண்டிகள்) மாண்டவ்ர், நெஞ்சினில் துன்ம விதை…
-
- 0 replies
- 778 views
-
-
யூலை 1983... படித்துக்கொண்டிருந்த என்னை தெருவில் ஓடத்துரத்தியநாள் இலங்கையனாக இருந்த என்னை தமிழனாக மாற்றியநாள் இலங்கை என் தாய்நாடு என்பதை வடக்கு கிழக்கு என்றநாள் தமிழன் என்று அடையாளமிட்டு கொல்லப்படவேண்டியவனாக்கியநாள்.. இசுலாமிய சகோதரர்களின் சுயரூபத்தை நான் தரிசித்தநாள் அகப்பட்டிருந்தால் இன்று 31வது நினைவஞ்சலி நாள்............
-
- 5 replies
- 1.5k views
-
-
இன்று சாந்தி அக்காவின் பழைய புளொக் ஒன்றைப் பார்த்தேன்...2006 ஆம் ஆண்டின் பின்னர் எந்த அப்டேற்றும் அங்கு இல்லை...சாந்தி அக்காவுக்கே இந்த புளொக் நினைவு இருக்கோ தெரியலை...ஆனால் அழகான கவிதைகள் பலவற்றை அங்கு கண்டெடுத்தேன்....இவை சாதாரணமாக எழுதப்பட்டவையாக தெரியலை..ஏதோ ஒரு வலியை எழுதித் தீர்க்க எழுதப்பட்டவையாக தெரிகின்றன....அவற்றில் இருந்து எனக்கு மிகப் பிடித்த சில கவிதைகளை உங்களுக்காக இணைக்கிறேன்.... இப்படியே ! உன்னை மறந்து நெடுநாளாயிற்று. என் நினைவுகளிலிருந்து - நீ இன்னமும் விடுபடாமல்.....! உன் பெயரைக்க கேட்டால் அல்லது யாராவது உன் பெயரில் இருந்தால் நான் நானாயில்லை..... உன்னை உடன் பார்க்க வேண்டும் போல்.... பேசவேண்டும் போல்....., ஆயிரம் அதிர…
-
- 10 replies
- 4k views
-
-
நேற்று என் தோழனும் தோழியும் கடத்தப்பட்ட பின்.. காதலர்களாய் மடிந்தனர் இன்று அவர்களுக்காக காதலர் தினம் வேற்று நாட்டில் அவனும் விம்மிய படி அவளும் விதி செய்த சதியால் பிரிந்திருக்க இன்று இவர்களுக்காக காதலர் தினம் கூற்றுகள் தவறியதால் காதல் கும்மாளம் போட்டவரும் குறுகிய காலத்தில் பிரிந்தனர்... இன்று அவர்களுக்காக காதலர் தினம் நாற்றுக்களுக்கு நடுவே நல்லதாய் காதல் செய்தவர் நேற்றிந்த சிங்களன் போட்டகுண்டில் நொடியினில் மடிந்து போயினர் இன்று இவர்களுக்காய் காதலர் தினம் ஏற்று தலைவன் ஆணை அணி வகுத்தார் புலியாய் வாட்டும் பகை கொன்று வந்தார் மீட்டும் காதலது நெஞ்சில் கொண்டார் கொள்கையால் கதலரானார் -இவர் கொள்கைக்காய் மாண்டார்... …
-
- 2 replies
- 1.1k views
-
-
-
இன்று கனடாவில் குடும்ப தினம் நன்றி தர்சினி.(CMR)
-
- 1 reply
- 1.1k views
-
-
புத்தாண்டே நீ புதிதாய் வருகின்றாய் அத்தனை பேரும் ஆவலுடன் உனக்காய் அகமகிழ்ந்து எங்கும் காத்திருக்க எத்துனையும் அலுக்காது எப்படி நீயும் எழில் பொங்க வருகின்றாய் சாதிமத பேதமின்றி சண்டைகள் ஏதுமின்றி சமத்துவத்தோடு நீயும் சரிநிகராக சகலருக்குமாக எப்படி வருகின்றாய் புத்தாண்டிலாவது புதுவழி பிறக்குமென நம்பிக்கை கொண்டோரின் கனவை நனவாக்க நாடுகள் தோறும் நீ நளினத்துடன் வருகின்றாய் எத்துன்பம் வந்தாலும் அத்தனையும் களைய ஆவலுடன் உன்னை அத்தனை பேர் பார்த்திருக்க ஏற்றமுடன் நீயும் எப்படியோ வருகின்றாய் ஆனாலும் நாமும்தான் ஆசையுடன் உன்னை ஆண்டாண்டாய்ப் பார்த்திருந்தோம் ஆறுதல் தேடி ஊரூராய் அலைந்திட்டோம் ஆழக்கடல் கடந்து அகதியாய் அலைந்திட்டோம் ஊரெல்லாம் கூடி ஒப்பாரி வைத்த…
-
- 10 replies
- 740 views
-
-
இன்று தமிழ் தேசம்... பக்தர்களும்.. பாதிரியாரும்..பல பச்சிளங் குழந்தைகளும்.. சிங்களக் குண்டில் சிதறுண்ட தேசம்.. தமிழ்தேசம்.. மூலஸ்தானம் ஏறி இறைவன் துயிலை புூட்சுக்கால்கள் சத்தத்தால் எழுப்பிப் பார்த்தான் சிங்கள ராணுவன்.. எழவில்லையாம்... சாமிகள் கூட மவுனித்த தேசம்... தமிழ் தேசம்.. தினசரி பத்துக்கு மேல் பலி ஒரு பகலிரவுக்குள்ளே... இளைய உயிர்களெல்லாம் ஜாதகப்பலனுக்கு எதிர்மாறாய் இறந்து போகும் தேசம்... தமிழ் தேசம்.. பசிக்கு பச்சைத்தண்ணீர்.. பச்சிளங்குழந்தைக்கு பால் சுரக்கா மார்பு விம்ம அன்னையின் அழுகை... ஒரு இறாத்தல் பாணே... முப்பது ரூபாய்கள் மாவுக்கே வழியில்லை...வெதுப்பக போறணைகளில் தீயி…
-
- 8 replies
- 1.3k views
-
-
இன்று திலீபனின் நினைவு நாள். புலிகளுக்கு ஆயுதமும் தெரியும் அகிம்சையும் தெரியுமென உலகுக்கு உணர்த்திய நாள் உலகில் காந்தி என்ற பெயர் அடிபட்டுப்போனநாள். அரக்கர்களின் காலடியில் எல்லாமே கனவாகிப்போனதுவோ என கலங்கி நின்ற தமிழரை தன் வயிறை முடக்கி எழச்செய்தநாள் அவனை நாம் மறக்கமாட்டோம் அவலங்களை மன்னிக்கமாட்டோம் அவனை மீள் நிறுத்தி இன்று மீண்டும் தமிழர்களின் எழுச்சி காணும் நாள்.. வீரவணக்கம் திலீபனே...
-
- 0 replies
- 686 views
-
-
இன்று நினை நன்றே நினை ............. பிறந்து விட்டது புது வருடம் , தை பிறந்தால் வழி பிறக்கும் . வலிகளை மறந்து ஒரு புறம் தள்ளி விட்டு இறை யுணர்வுடன் வழி பிறக்க வேண்டுவோம் கோபம் கொள்வதாலோ விரக்தியடைவதாலோ கணணி வேகத்துக்கு ஈடு கொடுத்து , வெற்றி சேதிகளை பெறவேண்டும் என்று , அவா படுவதை விட்டு ,வலிகள் மூலம் தான் வழி பிறக்கும் என்று சிந்தித்து நமது கடமைகளை உணர்ந்து மற்றவர்களும் உணர வைத்து,எமது பணியை முன்னெடுப்போம் .தாயக வலிகள் மூலம் நாமும் பங்கெடுப்போம் எமக்கு முன் நீண்ட பணி காத்து இருக்கிறது சிந்திப்ப்போம் சிந்திக்க் வைப்போம். இதுவே என் கள உறவுகளுக்கு என் பொங்கல் புதுவருட வாழ்த்து .(சங்கல்பம் ). நட்புடன் நிலாமதி அக்கா.
-
- 2 replies
- 1.3k views
-
-
[size=5] எனது நண்பனைப் பற்றி [/size] [size=5] எமது மண்னிலே அதிகம் பேசுகின்றனர். [/size] [size=5] எப்படி அவன் சென்றான்… [/size] [size=5] துப்பாக்கி வேட்டுக்கள் [/size] [size=5] அவன் மார்பையும் முகத்தையும் நொறுக்கின [/size] [size=5] தயவு செய்து மேலும் விபரணம்வேண் டாம். [/size] [size=5] நான் அவனது காயங்களைப் பார்த்தேன் [/size] [size=5] அதன் பரிமாணங்களைப் பார்த்தேன் [/size] [size=5] நான் நமது ஏனைய குழந்தைகள் பற்றி எண்ணுகிறேன் [/size] [size=5] குழந்தையை இடுப்பில் ஏந்திய [/size] [size=5] ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன் [/size] [size=5] அன்புள்ள நண்பனே! [/size] [size=5] அவன் எப்போது வருவான் என்று கேட்காதே [/size] [si…
-
- 2 replies
- 831 views
-
-
வெள்ளைக்கொடியெடுத்து விலங்கிடு மறவர் படை வீரத்தை குலுக்க நீழும் கரங்களை குதறி எறி-உன் கொடூரத்தின் பாரம்பரியம் காத்து தமிழச்சி கர்ப்பம்கிழித்து சிசுவினை உருவு-அதன் செந்தளிர் மேனியெங்கும் வாலும் வரிகளும் தேடு-களைத்தபின் கொடுந்தீயின் வாயினில் போடு. வெள்ளைக்கொடி எடுத்து விரலிடுக்கின் குருதி துடை உன்.... விந்தொழுகும் வக்கிரக்கண்கொண்டு வேட்டையாடு குமரியென்ன கிழவியென்ன கிளித்துக்கிளித்து கிணறுகளில் வீசியெறி உலகின் ஊனச்செவிகளில் ஓலம் விழுந்தால் வெள்ளைக்கொடியெடுத்து-அதன் விழிகளில் விட்டு ஆட்டு-பின்னர் தம்மபதம் ஓதி பஞ்சசீலம் பழகு. உன்..... உறக்கம் பறித்தவர் உறங்கும் இடமெங்கும்-அவர் வீ…
-
- 15 replies
- 2k views
-
-
இன்று மீண்டும் அகதி முகாமில் கருணாகரன் அலைக்கழிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட அந்தக் காலை நேரத்தில் கொண்டுவந்து இறக்கப்பட்டோம் இலக்கங்களாக எதுவும் தெரியாது அடுத்துவரும் கணங்கள் எப்படியென நீண்டவரிசை வழங்கப்பட்ட இலக்கங்கள் அவரவரக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் அவரவர் அவரவர்க்கருகில் நகராப் பொழுதுகளோடு பிணைக்கப்பட்ட படுக்கை படுக்கையைச் சுற்றி முள்வலைகள் முப்பத்தி ஆறாவது தடவையும் இன்னொரு ஒப்பனை புதிய இடத்தில் பழைய அகதி அகதிகளின் நிழலைக் கண்காணிக்கும் முள்ளரண்கள் பழைய அகதிக்கு புதிய இலக்கங்கள் பழைய இலக்கங்களுக்கும் புதிய இலக்கங்களுக்குமிடையில் முடிவுறாத குழப்பங்களுடன் தூங்கும் கண்களில் துடித்துக்கொண்டிருக்கு…
-
- 0 replies
- 710 views
-
-
இன்று வரைக்கும் அழுகின்றோம் எங்களுக்காக கொஞ்சம் பேசுங்களேன் எங்கள் முற்றங்களில் ஓடி விளையாடிய குழந்தைகள் இன்று உடல் சிதைந்த புகைப்படங்களாக பார்க்கின்றோம்... புள்ளிக் கோலமிட்டு பிட்டு அவித்து ஊட்டிய அம்மாவின் கையில்லை -இன்று தோளில் சுமந்து பள்ளிக்கு கொண்டு விடும் அப்பாவுமில்லை... கொடியேற்றி கொண்டாடினார்கள் நாங்கள் படங்குக்குடிசையில் திண்டாடிய போது சிரித்தார்கள் எங்கள் தேசம், நாங்கள் வாழ்ந்த சொர்க்க பூமி சுடுகாடாய் தெரிந்த போது மானமென்ற ஒன்றுக்காய் மடிந்த பெண்ணின் உடலை நிர்வாண படுத்தி புகைப்படங்கள் எடுத்து புன்னகைத்தார்கள்... உயிர் தப்பி வந்த பெண்களை தெரியாத பாசையில் ஏசினார்கள் அடித்தார்கள் , உதைத்தார்கள் தங்கி…
-
- 0 replies
- 591 views
-
-
அவர்கள் மன்னம்பேரியை பாலியல் பலாத்காரம் செய்து அவளை உயிருடன் புதைத்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் கிளர்ச்சி எழுச்சிபெற்றிருந்தது. பின்னர் அவர்கள் ககவத்த பெண்களிடம் வந்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் நான் கஹவத்தையைச் சேர்ந்தவளல்ல. நுரிவத்த பெண்களிடம் வந்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் நான் நுரிவத்தவில் வாழவில்லை. பின்னர் அவர்கள் வடக்கின் மகளீரிடம் வந்தார்கள் நான் பேசவில்லை கிருஷாந்தி குமாரசாமி,கோணேஸ்வரி,இசைப்பிரியா இவர்கள் என் சகோதரிகளல்ல. பின்னர் அவர்கள் வேறு தோல் நிறம்கொண்ட பெண்ணிடம் வந்தார்கள் கூட்டாய் எட்டுப்பேர் விக்ரோறியா அலெக்ஸ்சாண்டிராவை பாலியல் பலாத்காரம் செய்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் அவள் வெளிநாட்டவள் என்பதால். அந்தக கோரக் கும…
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்றுதான் பேசக்கிடைத்தது உன் தோழியிடம்... அன்று நீ என்னிடத்தில் எதிர்பார்த்த எதுவுமே, இன்று உன்னிடத்தில் இல்லையாம்! கேள்விப்பட்டேன்.....! உனக்காக அழவே கூடாது என்றிருந்தேன்... கண்கள் என்னை கைவிட்டன - உன்னைப்போல! எப்போதும் திரும்பப்பெறமுடியாத என்னுடைய நம்பிக்கைகளை உன்னிடத்தில் தொலைத்தவன் நான்! இனிமேலும் அதை நான் உன்னிடத்தில் தேட மாட்டேன்!!! இப்போது எல்லாமே இருக்கிறது என்னிடத்தில்... உன் வற்றாத நினைவுகளும் ஆற்றமுடியாத காயங்களும் ஆறாத கோபமும் கூட. உன்னையும் நீ செய்த துரோகத்தையும் எப்படி மறக்கமுடியும்??? என்னை மட்டுமா... என் தூய்மையான நேசத்தையும் கேவலப்படுத்தி... நீ தந்துவிட்டுப்போன பிரிவையும் அதன் சமுதாய அடையாளத்தையும் எப்படி மறைக்கமுடியும்??? அன்ற…
-
- 48 replies
- 4.9k views
-
-
இன்று காதலர் தினம் இன்றும் எனது காத்திருப்பு.....அவனுக்காகவே.. எனக்கொன்றும் சலிப்பில்லை ஐந்து வருடங்கள் அனுபவத்தாலோ...என்னவோ.. கொட்டும் பனிக்குள் என்ன... கோடை வெயிலில் என்ன..... வீசும் காற்றில் என்ன.... மேனி நடுங்கும் சினோவில் என்ன.... அவனுக்காகவே எனது காத்திருப்பு.. தொடர்ந்திருக்கின்றது.. வருவான்....அவன்... ம்ம்.....வருவான்... இன்றும்... நம்பிக்கை கையோடு இருக்கின்றதே... .. இன்றும் பற்கள் ஒன்றோடு ஒன்று அடித்துக்கொள்ளும் குளிர்.. கைகளை ஜக்கெற் பொக்கெற்றுக்குள்ளும்.. கண்களை பனி படர்ந்திருக்கும் வீதியிலும்.. விட்டுக்கொண்டு..வழமை போலவே.. காத்திருக்கிறேன்... நேரம் ஆக..நினைவுகள்...பறந்தன பறவையிடம் கடன் வாங்கியதோ...சிறக…
-
- 28 replies
- 4.7k views
-
-
பறவைகளின்றி வானம் இறந்து கிடக்க, இலைகள் கழற்றிய கிளைகள் காற்றோடு குலவுகின்றன, மதில்களில் பூனைகள் இல்லை. வாசல்களில் யாதொன்றினதும் அரவங்களும் இல்லை. அறைகளில் ஒளிரும் மின்குமிழ்கள் கண்ணாடி யன்னல்களில் ஒளியத்தொடங்குகின்றன. குளிர் புணர்ந்து அந்தி கவிழ்ந்துவிட்டது. இனியிருள் சூழ்ந்து அமைதி வளர்ந்துவிடும். மூச்சுக் காற்றில் வெப்பம் தெறிக்க, உள்ளங்கைகளில் குளிர் குத்தும். இரண்டுபட்டுக் கிடக்கிறது தேகம். மனதும், கிடுகுவேலிப் புலுனிக்குருவி நான் இந்தப்பனிக் குளிக்கும் மரங்களில் எனக்கேது மறைவு. செயின் நதியும் ஈபிள் கோபுரமும் மோனோலிசாவின் முகமும் உலகின் அழகான ராஜபாட்டையும் டயானாவின் கார் மோதிய தூணும் கடிகாரத்தின் இலக்கங்களாகிடச் சுற்றிக்கொண்டிருக…
-
- 11 replies
- 982 views
-
-
சமீபத்தில் நடந்த பேஸ்புக் சந்த வசந்தக் குழுமத்தின் காணொளிக் கவியரங்கத்தில் இடம்பெற்ற கவிதை.
-
- 0 replies
- 661 views
-
-
ஒரு முறை பாருங்கள் ................ என்.... கருத்துக்கள்.....! சிறுபிள்ளைத்தனமாகவோ ..... குழந்தைத்தனமாகவோ ...... ! செத்ததாகவோ...... இத்ததாகவோ........ இருக்கலாம்..... !!! என்றாலும் ஒருமுறை பாருங்கள்......! அதிலிருந்து உங்களுக்கு.... புதிய கருத்துக்கள்.. தோன்றலாம்..... !!! @ கவிப்புயல் இனியவன் கவிதைகள் தொடரும் சிலுவை சுமக்கும் மனிதன்... ----------------------------------------- மனிதனின் ...... எல்லா செயல்களும் .... சிலுவையாக மாறுகின்றன .... விளைவுகள் ஆணியாக.... அறையப்படுகின்றன....! குடும்பம் என்னும் உறவை .... சிலுவையாய் சுமக்கிறான் .... அன்பு என்னும் ஆணியால் ..... அறையப்பட…
-
- 2 replies
- 743 views
-
-
ஜாதிகளும்.... மதங்களும்..... தூக்கிப் பிடிக்கும் கொடிகளாகிவிட்ட பின்னர், "ஜனநாயகம்" என்ற போலிச்சாயம் பூசிய அழுக்குத் துணிகளுக்கு, ஏன் வெள்ளைச் சிறகுகள்....???????
-
- 0 replies
- 961 views
-
-
இன்றைய மது வ.ஐ.ச.ஜெயபாலன் உலகம் விதியின் கள்ளு மொந்தை. நிறைந்து வழிகிறது அது மதுக் கிண்ணம் தாங்கியவர்களால் எப்போதும் நுரைத்தபடி. நேற்றிருந்தது வேறு. இங்கே நுரைபொங்குவது புதிய மது. அது இன்றைய நாயகனுக்கானது. நாளை கிண்ணம் நிறைகிறபோது வேறு ஒருவன் காத்திருப்பான். நிச்சயம் இல்லை நமக்கு நாளைய மது அல்லது நாளை. எனக்காக இன்று சூரியனை ஏற்றி வைத்தவனுக்கு நன்றி. அது என் கண் அசையும் திசைகளில் சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறது. மயக்கும் இரவுகளில் நிலாவுக்காக ஓரம்போகிற சூரியனே உன்னையும் வணங்கத் தோன்றுகிறதடா. கள்ளு நிலா வெறிக்கின்ற இரவுகள்தோறும் ஏவாளும் நானும் கலகம் செய்தோம். ஏடன் தோப்பினால் விரட்டி அடித்தோமே கடவுளையு…
-
- 5 replies
- 1.2k views
-
-
படத்தைப் பெரிதாக்கி வாசிப்பதற்கு : http://www.kathala.net/gallery/albums/user...lood-Flower.jpg படம் சிறிதாக்கப்பட்டுள்ளது. - இணையவன்
-
- 12 replies
- 2.5k views
-
-
பச்சைக் குழந்தை அங்கே பாலுக்கு அழுதிருக்க பாற்குட அபிசேகம் நீயிங்கு செய்தால் என்னைக் கடவுளென்று மனிதன் வணங்குவானோ சொல்? சத்தியமாய் அந்தக் கல்லுக்குள்ளே நான் இல்லையெடா! மானிடா! நான் கருணையுள்ளவன். ஏழை நெஞ்சுக்குள் தான் எப்போதும் இருப்பேனடா! உன் இரத்த உறவுக்கங்கே பாதி உயிர் போகையிலே எப்படி நான் கொலுவிருப்பேன்? நீயமைத்த மஞ்சத்திலே! எப்போதடா நான் கேட்டேன்? இப்போது நீ எனக்கென்று செய்வதெல்லாம்.. வானமே கூரையாய் உன் உறவு வாழ்வுக்கு வரமிருக்க கோபுரக் கோயில் கட்டி என்னை குடியிருக்க நீ கேட்டால் எப்படி இருப்பேனடா சொல்? அப்படி நான் இருந்தால் மனிதன் வணங்கும் தெய்வம் எனும் தகுதி எனக்கிருக்குமோ சொல்? மானிடா! ந…
-
- 14 replies
- 2.4k views
-