கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பாற்கடலில் பாவை குளிக்க அதைப்பார்த்துக் கண்கள் களிக்க நனைந்த தேகத்தில் அங்கங்கே மின்னிச் சிரிக்கின்றன மொட்டுக்கள்! மெல்ல மெல்லப் பாலாடை விலக சின்னச் சின்னதாய் சிந்தனை சிதற முழுதான நிர்வாணத்தின் அழகில் சொக்கிப்போகிறது மனசு! பாவையவள் பார்வையாலே எட்டிப்பார்க்கிறது அந்தரங்கம்! ஒளிந்து கிடந்த ஒற்றைத் தென்னைகூட இப்பொழுது ஒளிர்ந்து எழுந்திடுதே! கொஞ்சங்கொஞ்சமாய் முன்னேறி தன் அவசரத்தைக் காட்டுகிறாள்! ஜன்னலைத் திறந்துவைத்தால் என் கட்டில் வரை வருவாள்! காலையில், அவள் கணவன் வரும்வரைக்கும் என் இரவு.... இவளோடு கழியும்! அழகான, இவள் தேகம் புணர்வதினால் என் இதயம்.... இதமாகக் களிக்கும்! காலடியில் கிடக்கும் ஈரமான புல்வெளியை காலையில் பார்க்கும்போது... நேற்ற…
-
- 9 replies
- 3.8k views
-
-
எமது தாயகப்பாடலான 'ஒர் இரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்" பாடலினுடைய வரிகள் யாருக்காவது தெரியுமா? அந்த பாடலை இணையத்தில் எங்கு கேட்கலாம் என்று கூறமுடியுமா?
-
- 9 replies
- 1.7k views
-
-
பல வருடங்களுக்கு முன்னர் எழுதிக் கைவிடப்பட்ட கவிதையொன்று இன்று தட்டுப்பட்டது. உங்கள் பார்வைக்கு. உயிர்த்தேன் வ.ஐ.ச.ஜெயபாலன் காலப் பாலை நடுவினிலே வினோதங்கள் வற்றி உயிர்ப் பம்பரம் ஓய்கையிலே வாழும் கனவாக என் முன்னே வளரும் சிறு நதியே. உன் தோழமையின் பெருக்கில் துயர்கள் கரையுதடி வாழத் துடிக்குதடி கண்ணம்மா என் வார்த்தைகள் காவியமாய் * கூதிர் இருட் போர்வை உதறி குவலயம் கண் விழிக்க போதியோடு இலை உதிர்த்த இருப்பும் புன்னகைத்தே துளிர்க்க மனிதருக்கிடையே நாணற்றுச் சூரியன் மண்ணைப் புணருகின்றான். மூதி எழுந்திடென்றாய் கண்ணம்மா மூச்சால் உயிர் மூட்டி. * கடைசித் துளியும் நக்கி காலி மதுக் கிண்ணம் உடைத்து என் வாழ்வின் ஆட்டம் முடிந்ததென்றேன். நீ கள்நதியாக நின்றாய். உயிர்த்தும் புத்துயிர…
-
- 9 replies
- 1.3k views
-
-
என்னை நம்பவைத்து என் கழுத்து நரம்புகளை நறநற வென அறுக்கும் உன்னை எனக்கு பிடிக்கும். எதிர்பார்த்து காத்திருந்த என் கண்களை கூரிய முனையால் குத்தியிழுத்தெடுக்கும் உன்னை எனக்கு பிடிக்கும். நா நுனியில் நட்பென்று பேசி நீ நிலைநாட்டும் நயவஞ்சகம் எனக்கு பிடிக்கும். கனிவாய் நீ பேசி கன்னத்தில் தடவி கண்களால் சைகை செய்து என் கணங்களை நீ எண்ணிக் கொண்டிருப்து பிடிக்கும் உன் வலையில் நான் வீழ்ந்து விட்டதை உணர்ந்தும் உண்ணாமல் உறங்குவது போல் இரசிப்பது பிடிக்கும் உன்குலமே அழிந்தாலும் உன் காலம் கனிந்து வரும்வரை உள்ளுக்குள் நகைத்தபடி என்னை போட எத்தனிக்கும் உன் குணம் பிடிக்கும் என் முதுகை தடவியபடியே எந்த இடத்தில் குத்தலாமென சர…
-
- 9 replies
- 1.1k views
-
-
-
- 9 replies
- 781 views
-
-
உலகின் அத்தனை தட்டுக்களிலும் சம்மணம்போட்டு உட்கார்ந்திருந்த அத்தனை கிண்ணங்களும் பலவித எண்ணங்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன! வாழ்வெனும் விருந்துக்கு அங்கிருந்த அனைவரும் கட்டாய விருந்தாளிகள்! பித்துப் பிடித்து தேடியலையும் சுயநல விரல்களுக்கு... அப்படியொரு வெறி! போட்டிபோட்டு முண்டியடித்து... ஏந்திக்கொள்கின்றன கிண்ணங்களை! சில வாய்கள் சிரித்தபடியே செங்குருதியை பருகிக்கொண்டிருக்கின்றன! வேண்டாமென ஒதுங்கிப்போகும்... ஒவ்வொரு நொடியிலும், எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும், மானிட விரல்களுக்குள்... திணிக்கப்படுகின்றன கிண்ணங்கள்! எந்தக் கிண்ணம்...? எப்பொழுது...?எவர் கரங்களில்...? என்பதெல்லாம்....... எவருக்கும் தெரிவதில்லை! அவசியமுமில்லை...!! எதை ஏந்துகிறோமோ…
-
- 9 replies
- 1.4k views
-
-
காதலித்ததற்கு பிறகு காத்திராமல் கால் வலிக்கும்-- கதைத்திராமல் கண்கள் பேசும்-- தூக்கம் தூரத்திலிருக்கும்-- நினைவுகள் மலர்ந்திருக்கும்-- தேங்கித் தேங்கி அன்பு ஊற்றெடுக்கும்-- வானம் வெளித்திருக்கும் பூமி நனைந்திருக்கும்-- தினம் தோறும் ஆவாரம் பூ மலரும்-- காணும் முகமெல்லாம் காதலனைப் போலிருக்கும்-- பொல பொல வென்று பாசம் பெருக்கெடுக்கும்-- தூங்காமல் கனவு வரும்-- ஆக மொத்தத்தில் பைத்தியம் பிடித்து விடும்--. நன்றி :P
-
- 9 replies
- 1.9k views
-
-
கருத்தடைக்கு முயலும் ஒரு தாய்க்கு... நிறுத்து! நீ உட்கொள்வது மருந்தல்ல கருவறையில் கல்லறை கட்ட கச்சிதமாய் அனுப்பும் செங்கட்டிகள்! வளையே வலையாவது கடுமை! கூடே கூண்;டாவது கொடுமை!! குற்றம் செய்தது நீ தண்டனை மட்டும் குழந்தைக்கா? ஆபத்து என்றால் பிள்ளை அம்மாவை நாடும் அம்மாவே ஆபத்து என்றால் அதன் மனம் வாடும். நீ கம்சனிலும் கொடியவள் கம்சன்கூட குழந்தைகளை பிறந்தபின்தான் கொன்றான். நீ பிறக்கும் முன்னமே அழிக்கின்றாய். பிறப்புச்சான்றிதழை எதிர்பார்த்திருக்கும் குழந்தைக்கு இறப்பைச் சான்றிதழாகக் கொடுப்பது என்ன நியாயாம்? பிறந்தவுடன் சுதந்திரம் பறிபோவது வழமை பிறப்பதற்கே சுதந்திரம் மறுக்கப்படுவது கொடுமை ஆட்சி கலைந்தால் அம…
-
- 9 replies
- 2.4k views
-
-
(கரும்புலித்தினம் நினைவாக ......) லட்சியம் வெல்வோம் சத்தியம் செய்வோம்....... உயிரை பாலாக்கி உரமூட்டி அனுப்பிவைத்தோம் உயிரினும் மேலாம் தமிழ் ஈழ விடுதலைக்கு உரமாகி போனாயோ உயிர் மீண்டு வந்திடுவாய் .. களமாடும் படையினிலே கரும்புலியாய் ஆகு மட்டும் கருத்துடனே காத்திருந்து கண்ணியமாய் வாழ்ந்த வரே காவியமாய் போனீரோ காலன் அவன் நாடினிலே கரை தெரியாக் கடலினிலே கப்பல்களை களையெடுக்க காட்டாற்று வேகமுடன் களமாடிய காளைகளே கன்னியர் காவிய வீரர் தினம் நினைப்போம் லட்சியம் வெல்வோம் சத்தியம் செய்வோம்
-
- 9 replies
- 1.8k views
-
-
[size=1]இது தான் காதலா ..........[/size] [size=4]மணமேடையில் சமய முறைப்படி கட்டிய தாலி கழற்றி எறியும் உலகிலே கணவன் இறந்ததும் உண்டியலில் போட்டு அடுத்த கணவனை தேடிபோகும் காலம் இங்கே இருப்பினும் இது போன்ற காதலும் வாழ்கிறது நாட்டிலே [/size] [size=1]படமும் பகிர்வும் [/size]
-
- 9 replies
- 1.1k views
-
-
வானம் வஞ்சகமின்றி வெள்ளைப் பூக்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றது! நானும் இந்த கடுங்குளிர் தேசத்தில் என் மவுனச் சாளரங்களினூடே அந்த அழகியை ரசித்துக் கொண்டிருக்கின்றேன்! அவளும் மெல்ல என்னை நோக்கித் தன் காதல் தேசத்தின் பாரிய படையெடுப்பொன்றை தன் மலர்விழிகளால் மட்டுமே நடத்திக்கொண்டிருக்கின்றாள்! என் இதயக் கோட்டையின் மதில்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் சரிந்து விழுந்துகொண்டிருக்கின்றன! இன்னும் சில நொடிகளுக்குள் அவை முற்றாகவே தகர்ந்து விழுந்துவிடப் போகின்றன! நான் தோற்றுவிடுவேனோவென்று மெல்லக்கூறி பட்சி நகைத்துக் கொண்டிருக்கின்றது! இல்லை நடுங்கிக்கொண்டிருக்கின்றது! தோற்றேதான் போய்விட்டேன்!!! இப்போது என் இதயப் பேரரசின் முடிசூடா ராணி அவள்!!!!!! என் மனைவியின் …
-
- 9 replies
- 902 views
-
-
-
என்ர பைரவிக்கு அனைத்தும் வரும் இருந்தும் எனக்கும் “சிந்து”க் கிறக்கம் . பௌதீகம் இதுவரை பைரவி மட்டும். சித்தத்தில் மட்டும் சிந்து சிலநேரம்! பச்சசைக்கிளி முத்துச்சரம் இரயிலிற்குள் எனைக் கட்டும் படிச்ச பாவபுண்ணியம் என் கனவினில் எனைக் கட்டும் பிடிச்ச பைரவி நொந்திடக்கூடாது என, சரிக்க முடியாது இதுவரை என் பயணம் என் பைரவி என் உசிர்... சொல்லிச் செய்தது போல் அப்பிடி ஒரு பொருத்தம் நான் கொஞ்சிக் கொஞ்சி அவள் சொக்கிலும் புதுக் குழி உதட்டு முத்தமும் கன்னத்துமுத்தமும்...கன்னமே அதிகம்! ...பைரவி என் உசிர்! எந்தன் இரசிகை, விவாதக் காரி, விளையாட்டும் காரி சில்மிசம் சிருங்காரம்... அவள் சிரிப்புச் சில்லறை போல் சிதறும் என் அகந்தை உடைத்துச், சிறுமை திருத்திச…
-
- 9 replies
- 1.6k views
-
-
விமான தாக்குதலில் உயிர் நீத்த குழந்தை செல்வங்களுக்கு கொடிய காடையர்களே உங்களுக்கு என்ன வேண்டும் அப்பாவி சிறுவர்கள் உங்களுக்கு என்ன பாவம் செய்தார்கள் பாவிகளே பாவிகளே கொஞ்சம் நில்லுங்கள் பாலர்கள் மனதை தான் கொஞ்சம் பாருங்கள் இன்று இறப்போம் என்றா சீருடையில் சென்றனர் உங்களுக்கும் குழந்தைகள் இருக்கின்றன அல்லாவா இதே நிலை உங்களுக்கு வராதென்ற திமிரா..... பொறுத்திருங்கள் மிருகங்களே உங்களுக்கும் அழிவுகள் நடக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை பாவம் பாலகர்கள் ஆயிரம் கனவோடு பள்ளி செல்ல பாவி நீ இந்த வேலை செய்தாய் உன்னையும் தாய் தானெ பெற்றெடுத்தாள் ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை என்று நினைப்பா நாயே உனக்கு சிங்களவன…
-
- 9 replies
- 2.1k views
-
-
விழியோரங்கள் அரும்பிய நீர் துடைத்து கயிற்று நிரைகளுக்குள் அடங்கி இருக்கும் மக்கள் கூட்டம் நடுவிருந்து கண்கள் அவனையே நோக்குகின்றன..! பின்புலத்தில் சீறிப் பாயும் புலியா யாழ் இந்துவின் உண்மைப் புதல்வனா தாய் தமிழீழத்தின் செல்லப் பிள்ளையா மக்கள் விடுதலையின் ஒற்றைக் குரலா... கேள்விகள் அவன் கோலம் கண்டெழுகின்றன..! சின்னஞ்சிறுசுகளின் மாமா.. எங்கள் அண்ணா உங்கள் தம்பி பலரின் பிள்ளை சிலரின் எதிரி சிந்தனை ஒன்றை வைத்து உண்ணா நோன்பிருந்து மக்களை துயில் எழுப்பிக் கொண்டிருந்தான்..!! கனவுகள் அவன் தனக்காக கண்டதில்லை..! சனத்துக்காக தன் சாவிலும் கூட மேலிருந்து விடுதலையை காண்பேன் என்றே மொழிந்தவன்... தேகத்தையே தேசத்தில் பிள்ளைகள் படிக்க கொடுத்தவன…
-
- 9 replies
- 937 views
-
-
படித்துச் சுவைத்த கவிதைத் தொடர்.. பாகம்-1 கதிரவன் கண்மூடி நித்திரையில் மூழ்கி கணநேரம் கழித்திருக்க... வையகம் தன்மேல் கருப்பு போர்வை போர்த்திக்கொண்டது... வானம் சாபம் பெற்ற இந்திரனாய் சாமந்திப் பூ தோட்டமதாய் தேகமெங்கும் நட்சத்திரக் கண்திறந்து மின்மினிப் பூச்சியாய் மினிங்கியது... தவழ்ந்து வந்த தென்றலின் தாலாட்டில் நறுமணம் கலந்தது மெல்ல மொட்டவிழந்த முல்லை... பகலெல்லாம் சூரிய ஆண்தனை காண நாணம் பூண்டு மறைந்திருந்த நிலவுப் பெண்ணாள் மெல்ல முகமலர்ந்தாள் விண் தாமரையாய்... தோகையவள் எழில் கூட்ட தோழியராய் தேகம் தொட்டே தொடர்ந்திட்டாள் மேகப்பெண்ணாள். விண்ணகத்து பெண்ணிவளின் அழகெல்லாம் நாணிநிற்க மண்ணகத்தில் பெண்ணொருத்தி…
-
- 9 replies
- 2k views
-
-
பாரே பார் பாரே உந்தன் இதயம் உள்ள பக்கம் கையை வைத்துப் பார் வீட்டை விதியை எண்ணித் தினமும் விழிகள் கலங்கும் எம்மைப் பார் தனியாய் வாழ்ந்த தமிழரைச் சிங்களத் தலையினில் கட்டியே விட்டவர் நீர் உரிமை இழந்த இனமாய் நாங்கள் உலகம் முழுதும் உழல்வதைப் பார் அல்லற் பிட்டியில் வழிவழி வாழ்ந்தோர் அல்லற் பட்டு மடிவதைப் பார் அகதியாய்த் தினந்தினம் இருப்பிடம் தேடி அலைபவர் துயரைக் களையப் பார் காமுகர் வெறியால் ஆவியை இழந்து கிணற்றில் கிடக்கும் பெண்ணைப் பார் கன்னியர் தங்கள் சுதந்திரம் தேடிக் கருவியை எடுத்த காரணம் பார் புனிதரின் பிறப்பில் பிரார்த்தனை செய்கையில் புலையனை ஏவியே விட்டனர் பார் சிறுமையைப் பேனா முனையால் செப்பிய சிவராம் உயிரும் போனது பார…
-
- 9 replies
- 1.7k views
-
-
ஒரு நிலவாய்!! இரு கரங்கள் நடுவே குலுங்கிய வளையலிடை ஒரு இடி ஜனனம் கொள்ளுமென்று எவர் கண்டார்? அடுக்களையில்...... அக்கினி சீண்டலின் மடியில்...... இதுதான் வாழ்க்கை என்று கிடந்தவள் எரிமலையாய் வெடிப்பாள் என்று எவர் கண்டார்?! பசு என்றே பாடினர் புலவர்.. காளைக்கும் சேர்த்தே ஒரு கனவுலகம் காண செத்தேதான் போவாளென்றே எவர் நினைத்தார்? நங்கை என்றார்.. நாணல் என்றார் மெல்ல நட.. அல்லி இடை ... மிடுக்காய் நடந்தால்... அது முறியுமென்றே இனிப்பாய் சொல்வார்... அவர்க்காய் புனை கதை !! போகட்டும் விடடி..! சூரியன் தான் ஆணா ...? ஆனாலும்தான் என்ன ? சொல்லடி கிளியே அவர்க்கு...... பூமியி…
-
- 9 replies
- 1.8k views
-
-
[size=3][size=4]அன்பு மகனுக்கு,[/size][/size] [size=3][size=4]உன் தந்தை எழுதுவது, இது நீண்ட கடிதம்தான் ஆனால்,[/size][/size] [size=3][size=4]இதுவே இறுதியாகலாம்.[/size][/size] [size=3][size=4]ஏனெனில் உன் நினைவுகள் நெஞ்சடைக்க இருமுறை சுவாசம் இழந்துவிட்டேன்.[/size][/size] [size=3][size=4]உனக்கு நேரமில்லை எனக்குத் தெரியும். முடியும்போது முடிந்தால் படி.[/size][/size] [size=3][size=4]இந்த நிலவினைப் பார்க்கும் போதெல்லாம் உன் ஞாபகம்தான்.[/size][/size] [size=3][size=4]மேலே தெரியும் உத்தரத்து வெண்ணிலவும், கயிற்றுக் கட்டிலும், நான் சொன்ன நட்சத்திரக் கதைகளும், உனக்கு நினைவிருக்குமோ என்னவோ...[/size][/size] [size=3]…
-
- 9 replies
- 977 views
-
-
பேய்களுக்குண்டு மனிதாபிமானம் அடிக்கும் கொல்லாது நாய்களுக்குண்டு மனிதாபிமானம் கடிக்கும் கொல்லாது :?: மனிதர்களாம் இவர்கள் :?: மனிதர்களுக்கு உதவ சென்றீர் மணி பொழுதில் உருகி போனீர் பூக்கள்,மொட்டுகள்,காய்,கனி புலிகளெனின், புலிசேனை இவர்களுக்கு :?: பூக்கள் அறுபத்தொன்றும் கருகின புலிகளேன முத்திரை இட்டனர் புண்ணகைத்து சர்வதேசம் அறிக்கையும் விட்டனர் :cry: அரச பயங்கரவாதம் அங்கீகரித்த பயங்கரவாதம் என்றனர் தலைநகரம் விடயம் பெரிதானது முல்லைநகர் விடயம் சிறிதானது :shock: களத்தில் இருக்க பயந்து புலத்திற்கு ஒடி வந்து உங்களுக்காக கண்ணீர் விட என் மணம் கூசுகிறது. :x நாலுபேர் கதைப்பார் நாற்பது பேர் கூடுவோம் சில கண்ணீர் த…
-
- 9 replies
- 1.6k views
-
-
பரம பிதாவே இறுதிச் சுற்றறிக்கையில் அவர்கள் அப்படித்தான் கட்டளையிட்டு இருந்தார்கள் கவனமாக எழுதப்பட்ட எழுத்துகளின் மூலம் எம் சாவை பற்றி அவர்கள் அறிந்து கொண்டுதான் இருந்தார்கள் நீர் அறிவீர் அதை பிதாவே அடைக்கப்பட்ட குறுநிலம் ஒன்றில் எல்லா அதிகாரங்களும் குவிந்து கொண்டன உலகின் இண்டு இடுக்குகளிலும் இருந்து அதிகாரத்தின் குரல்கள் எம் சாவை வலியுறுத்தி கட்டளையிட்டன நாம் சாவதற்காகவே அடைக்கப்பட்ட மந்தைகள் என்றனர் எம் சாவின் மூலம் உலகின் முதலாம் தர நியாயம் வலியுறுத்தப்படும் என்றனர் எம் குழந்தைகளின் இரத்தத்தினால் மட்டுமே தம் பாதைகள் செப்பனிடப்படும் என்றனர் பரம பிதாவே நீரே ஒத்துக் கொள்வீர் அந்த வார்த்தைகளில் அந்த எழுத்துகளில் அந்த எத்தனிப்புகளில் வஞ்சகம் நிறைந்து இருந்தன என்று ஆ…
-
- 9 replies
- 1.5k views
-
-
குழந்தையாய் இருந்தபோது! கொப்பனை உரிச்சு வைச்சிருக்கிறான் என்றார்கள் சிரித்தேன்! கொம்மாவபோல் என்றார்கள் சினந்தேன்! சித்தப்பன் போல் என்றார்கள் நடந்தேன்! சுப்பர் ஸ்டார் என்றார்கள் ஏது செய்தபோதும் யாரோ போல் என்றார்கள். ஒரு போதும் என்னை அவர்களுக்கு நானாய் அடையாளம் தெரியவில்லை. வருடங்களின் பின் நாடு சென்றபோது விமான நிலையத்தில் காத்திருந்தார்கள் என் குழந்தையை ஓடிவந்து வாரி அணைத்தார்கள் - அட 'அப்படியே உன்ன மாரி இருக்கிறான்" என்றார்கள் ஆக அவன் "சுயமும்'' அழிந்து போயிற்று
-
- 9 replies
- 1.6k views
-
-
1, பூனையார் பூனையார் எலி பிடிக்கும் பூனையார் பதுங்கிப்பதுங்கி எலி பிடிக்கும் பூனையார் எலிகள் எல்லாம் சேர்ந்தன திட்டம் ஒன்று போட்டன பூனையார் கழுத்தில் மணிகட்டினால் பூனை வரும் சத்தத்தில் ஓடி நாங்கள் தப்பலாம் திட்டம் நல்ல திட்டம் எலியாருக்கு கொண்டாட்டம் யார் பூனைக்கு மணிகட்டுவது? எலியாருக்குள் திண்டாட்டம் யார் பூனைக்கு மணிகட்டுவது? எலியாருக்குள் திண்டாட்டம் பூனையார் பூனையார் பதுங்கித்திரியும் பூனையார் எலியாரின் திட்டம் கேட்டு கொடுப்புக்குள் சிரித்துக்கொண்ட பூனையார் பகிடி பார்க்க மீயா மீயா சத்தம் போட்ட பூனையார் எலியாரின் கூட்டமும் போச்சு அவர் போட்ட திட்டமும் போச்சு ஓடி ஒளித்தனர் எலியார் …
-
- 9 replies
- 2.2k views
-
-
ஓடிடுவீர்..... மூவொரு நாளத முடிந்ததுவே மூடர்கள் பகுப்பு முடியலயே இதுபோலும் இதுபோலும் இவரறிவு....? இவரா உரைத்தனர் பகுத்தறிவு....?? இடியப்ப சிக்கலை கலைவாரோ இன்றதை இவரத குலைப்பாரோ...?? மதியுகியத மதியியுரையோ இவரது சிந்தையின் மதியிதுவோ...??? சேற்றில் விழுந்த வெண்ணாடை சேறாகி வராமல் என் செய்யும்...? காழ்புணர்வு தாங்கிய நெஞ்சில் கடுப்பது பொங்காமல் என் செய்யும்... எடு புத்தி மீதினில் இவர் சென்றால் எங்கனும் தானே போய் முடிவார்.... நடக்கட்டும் நடக்கட்டும் நடக்கட்டமே- நானிலம் உம்மை உமிழட்டுமே அதுவரை நீரும் ஆடிடவீர் அட்டம் கலைந்ததம் ஓடிடுவீர்....! எழுத்து பிழைகளை திருத்தி படிக்கவும்...
-
- 9 replies
- 1.5k views
-
-
காந்தாளே..! கார்த்திகை முழுதும் கணலாய் எரிக்கும் பூவே..! நாமெல்லாம் சுமந்த விதி தின்ற பெருங்கனவொன்றின் அடையாளம் நீயென்று அறிவாயா..? இரத்தம் சேறான தேசத்தின் நினைவு நூற்கையில் நதியாய் பின்னும் கண்ணீரை நீயறிவாயா..? பெருங்கோடையில் நீரற்ற நதியைப்போல வற்றிப்போனது எம் சந்ததியின் கடலாயிருந்த தாகம் சருகுகளைப்போல உதிர்ந்துபோயின எங்கள் நிழலாயிருந்த மரங்கள் ஊழிக்காலமொன்றில் உப்புமற்றுக் கடலுமற்றுப்போயிற்று எம் மிச்சமிருந்த கண்ணீரும்.. எம்மைத்தவிர யாரறிவார் சுடுகாடொன்றில் உயிரோடெரியும் பிணமொன்றின் வலியை.. காந்தாளே..! எம் கனவெல்லாம் வாங்கிப்பூத்தமலரே..! அறிவாயா.. எம்தேசத்தின் வீதிகளும் வீடுகளும் வயல்களும் காடுகளும் ஞாபகங்களின் ஞாபகங்களும் சேர்ந்தேயழும் துயரை ந…
-
- 9 replies
- 1.1k views
-