கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
குழந்தைகள் பலிவாங்கப்படுகிற நகரம் இங்கும் ஒரு தாயின் அழுகைதான் நகரத்தை உலுப்புகிறது குழந்தைகள்தான் ... பலியிடப்பட்டு அடுக்கப்படுகின்றனர். பேரீட்சைமரங்களின் கீழே பாலஸ்தீனக் குழந்தைகள் தென்னை மரங்களை தேடுகின்றதை நான் கண்டேன். எனது அம்மாவே நீ எங்கும் குருதி சிந்துகிறாய் நமக்காய் குழிகளைக்கூட வழங்க பிடிக்காத அதிகாரத்திடம் குழந்தகைள் திரிகிற நகரம் பலியிடப்படுகிறது. காஸா எல்லைகளில் இலங்கைப்படைகள் மோத வருகின்றன கிளிநொச்சியை இஸ்ரேல்படைகள் முற்றுகையிடுகின்றன. குழந்தைகள் என்ன செய்தார்கள்? நமது குழிகளில் கிடக்கிற குழந்தைகள் அங்கு அடுக்கப்பட்டிருக்கிறார்கள் மேலும் மேலுமாய் சனங்கள் தோற்றுப்போக அதிகாரத்தை கடக்க இயலாதிருக…
-
- 1 reply
- 517 views
-
-
தந்தையர் தின வாழ்த்துக்கள் சுயத்தை விற்று உழைப்பை இரைத்து உதிரம் வறண்டு குடும்பத்தை கரையேற்றும் கட்டு மரம் ! தன்னம்பிக்கை தைரியம் தெளிவு- இவை தோய்ந்த மூன்றெழுத்து மந்திரம் தந்தை ! கண்டிப்பு காட்டிடும் கண்கள் - முள்ளாய் அன்பு வழிய அக்கறை கொஞ்சும் அழகு மனம் - மலராய் ! அப்பா ! உந்தன் வியர்வை நாற்றத்தில் உழைப்பு மணக்குது ! நேர்மை மணக்குது ! புகழும் மணக்குது ! ரேகைகள் தேய்ந்து மரத்துப் போன விரல்களின் ஸ்பரிசத்தில் வாழ்வின் சோதனைகளை சொல்லாமல் உணரவைத்தாய் !
-
- 4 replies
- 813 views
-
-
பெற்றால் தான் பிள்ளையின் பெருமை தெரியும் என்பார்கள் உண்மைதான் நாங்கள் எல்லாம் உனக்கு தெருவில் கிடந்து கரையை சேர்ந்தவர்கள் தானே அது தான் உயிர் வாழ உன் மீது வலை வீசிய எம் உயிர் பறிக்க அலை வீசினாய் அழித்த நீ எம்மை அடியோடு அளித்திருக்கலாம்,ஏன் அங்கொன்று இங்கொன்று விட்டு வைத்தாய் நீ அழியா வரம் பெற்றவள் என்ற திமிரிலையா எம்மை வதைக்கிறாய் தாயே ??? கொன்றுவிடு எம்மை மீதமின்றி கொன்றுவிடு,,, கொன்று விட்டு திரும்பி பார் உன்னை கண்டு கொள்ள ஒரு நாய் கூட வராது, அன்றாவது உணர்வாய் அர்த்தமற்ற உன் செயலின் விளைவால் நாம் பட்ட வேதனையை......... *எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது.
-
- 14 replies
- 891 views
-
-
ஈமத்தாழி - கவிஞர் தீபச்செல்வன் மஞ்சளும் சிவப்புமான ஏதேதோ பொருட்களெல்லாம் தோரணங்களாக துயிலும் இல்ல நினைவுப்பாடலை முணுமுணுக்கிறான் யாரோ ஒரு சிறுவன் அழ முடியாதவர்களுக்காய் வானம் உருக விளக்குகளின் ஒவ்வொரு துளி நெருப்பிலும் தெரிந்தன களம் சென்ற வீரர்களின் புன்னகை மற்றும் இறுதிக் கையசைப்பு துயிலும் இல்லங்களின்மேல் முகாங்கள் கல்லறைகளின் மேல் காவலரண்கள் சிதைமேடுகளின் மேல் துப்பாக்கிகள் மண்ணுக்காய் மாண்டுபோனவர்கள் உறங்கும் மயானங்களைகளிலும் துப்பாக்கிகள் புதையுண்ட சிதைகளோடான யுத்தம் இன்னும் முடியவில்லை வாழ்தலும் இல்லை நினைவுகூர்தலும் இல்லை கண்ணாடிகளெங்கும் தெறிக்கின்றன தடைசெய்யப்பட்ட முகங்கள் சிதைக்கப்பட்ட கல்லறையை சுற்…
-
- 0 replies
- 598 views
-
-
நம்பிக்கைகள் உனக்காய் துளிர்விடுகிறது... நம்பிக்கைகள் அறுபட்டு நீ இருப்பாயின்னும் என்ற நினைப்பும் விடுபட்டுப் போன ஒரு அந்திப் பொழுதில் அழைத்தாய்.... "அக்கோய் சுகமோ" ? நினைக்காத பொழுதொன்றின் நினைவுகளில் வந்து நிரம்பினாய்.... "எப்படியிருக்கிறாய்" ? எப்போதும் போலான கேள்வியில் அப்போதும் சிரித்தாய்.... "அக்கா இருக்கிறேன்" அதிஸ்டமோ இல்லை ஆயுள் நீளமோ ? அறியேன் என்றாய்.... ஐந்து நிமிடமோ அதற்கும் சில நொடியோ " அக்கா போகிறேன்" தொடர்பறுத்து விடைபெற்றாய்.... கடைசிச் சிரிப்பும் கலகலத்த பேச்சும் கனவிலும் மாறாமல் நீ.... வீரச்செய்திகளுக்குள் நீயும் வித்தாய்ப் போனாயோ ? காலம் அள்ளி வரும் களச் செய்திகளில் காவ…
-
- 5 replies
- 1.5k views
-
-
நம் தலைவன் வரவுக்குகாய் காத்திருப்போம் கவிதை - இளங்கவி தமிழினத்தின் இன அழிப்பின் உச்சமான இவ்வருடத்தில் வைகாசி பதினெட்டு; வழமைபோல் மகிழ்வின்று விடிகிறது..... உலகத்தின் குரலொன்று தமிழனுக்காய் ஒலிக்காதா; எனும் சின்னஞ்சிறு நம்பிக்கையில் காலை கடனுமின்றி கணனியை தட்டுகிறேன்..... அதிர்ச்சி செய்தியொன்றில்; என் அனைத்துலகும் இருள்கிறது...! ஆம்..! தளபதிகள் நால்வர் மண்ணுக்காய் மரணிப்பு...! பதைபதைக்கும் நெஞ்சுடனே நண்பனும் நானுமாய் பாராளமன்ற சதுக்கம் விரைகின்றோம்..... கையடக்கத் தொலைபேசியில் மறுபடியும் கவலையுடன் ஓர் செய்தி..... எம் தலைவனையும் கொன்றுவிட்டார் அவன் சடலமுமெடுத்துவிட்டார்..... ஆம்...! இதுதான் அச்செய்தி தமிழர் உலகெல்லாம்…
-
- 18 replies
- 4.4k views
-
-
உயிரை நெருப்பாகி உடலை வெடியாக்கி உதாரணமானோரே..! உயிரென மதித்த மண்ணின் உடனடித் தடைகள் நீங்க உருகி வீழ்ந்த கண்மணிகளே... பதவியும் வேண்டாம் பட்டமும் வேண்டாம் தாரமும் வேண்டாம் தராதரமும் வேண்டாம் விடுதலை ஒன்றே வேண்டும்.. கட்டளை கேட்டு துள்ளிக் குதித்து தேச எல்லையில் ஆக்கிரமிப்பாளனை ஆக்கிரமித்த வீரரே... தலைவனைக் காத்திடுங்கள் தாய் தேசத்தை மீட்டிடுங்கள் நாங்கள்.. சாவிலும் வானிருந்து நோக்குவோம் நட்சத்திர ஒளிகளாய் சுதந்திர தமிழீழத்தை ஒளிர்விப்போம் ஆசை வளர்த்துச் சென்ற ஆருயிர்களே.. இன்று நாம் கண்பது உங்கள் கனவினின்றும் உருமாறிய உண்மைகளையே..! உங்கள் உயிர் மூச்சிழுத்த தோழர்கள் சிலர் உருமாறித் தடம்மாறி உலாவர... உங்கள் காற்தடம் பற்…
-
- 6 replies
- 1k views
-
-
ஒருகணம் வழித்தடம் திரும்பி... வீறுகொண்டெழுவோம்! 2010.. இது புத்தாண்டு! வாசல் திறந்து வரவேற்கின்றோம். ஆனால்... வண்ணக்கோலமிட முடியவில்லை. வளைதோரணம் கட்டவும் இயலவில்லை. வாசல் தொலைத்து வாடிக்கிடக்கின்றோம். அந்நியன் வாசலில் யாசகம்செய்து – ‘புத்தாண்டே வாராய்!’ என்று இரு கரம்நீட்டி அழைக்கின்றோம். பத்தோடு பதினொன்றாக ஆண்டுகள் வருவதுண்டு. வந்தவழியே திரும்பிப் போவதுமுண்டு. நாங்களும் வரவேற்போம் - முந்நூற்றறுபத்தைந்து நாட்கழித்து ஒவ்வோராண்டும் கடந்து சென்றுவிடும். 2009 வந்தது. உள்ளம் பட்டாம் பூச்சியாக சிறகு விரித்துப் பறந்தது. கண்கள் அகலத்திறந்து வாசல் நோக்கி விரிந்தது. இது எங்கள் ஆண்டு! இது எங்களுக்கான ஆண்டு! என்றன்றோ அப்பொழுது திளைத்தோம்?…
-
- 3 replies
- 1.5k views
-
-
கவியல்ல இது ஒரு காவியம் தேடியும் கிடைத்திடா தேவதையாய் எண்ணியது தேய்ந்து கட்டெறும்பான கதை சொல்லும் ஜீவகாவியம்…! ஊரின் ஓரத்தில் ஒரு தோப்பு தோப்பிலே குருவியொன்று சிங்காரச் சிறகு விரிக்க சுதந்திர வானம்….! சுதந்திரமாய்க் குடியிருக்க சின்னக் கூடு சுமை தாங்கியாய் சின்ன மாமரம்…! சுந்தரக் கானமிசைக்க தென்றல் போடும் தக திமி தாளம்..! இவை சேர தப்பாமல் தன்பாட்டில் வாழ்ந்தது மனதோடு மகிழ்ச்சி பொங்க….! அன்றொரு வேளை அந்திசாயும் மாலை நெருங்க அருமையாய் வசந்தம் பூத்திருக்க பூமி மகள் அழகு காட்டியிருக்க கண்ணினைக் காட்சிகள் காந்தமாய்க் கவர களம் ஏகியது குருவி….! கண்கொள்ளாக் காட்சிகள் விருந்துகள் படைக்க வாயோடு வந்த கீதம் இசைத்துப் ப…
-
- 16 replies
- 1.6k views
-
-
1957ல் களபலியான திருமலை நடராசனில் இருந்து விடுதலைகாக உயிர்நீத்த அனைத்துப் போராளிகளுக்கும் என் அஞ்சலிகள் - வ.ஐ.ச.ஜெயபாலன் 1957ல் ஈழத் தமிழர் விடுதலைக்கான போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்துத் தியாகிகளுக்கும் அஞ்சலி மரியாதை செய்யவேண்டும் என்கிற கருத்தை கால்நூற்றாண்டுகளுக்கும் முன்னிருந்தே நான் கேட்டு வருகிறேன். வன்னியிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நான் கலந்துகொண்ட நிகழ்வுகளில் ”திருமலை தியாகராசன் முதல் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் கழபலியான அனைத்து அமைப்பு தியாகிகளுக்கும் அஞ்சலி” செலுத்தியே ஆரம்பித்திருக்கிறேன். எங்கும் எனக்கு எதிர்க்குரல் எழுந்ததில்லை. . இந்த கருத்தியலை போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் இருந்தே பலர் வாயிலாக நான் கேட்டிருக்கிறே…
-
- 0 replies
- 1.1k views
-
-
மாவிலாற்றுக்காக மரணித்த மாவீரர்களே மகிந்தா சிந்தனையை மழுங்கடித்தவர்களே மகிந்தபுர மந்திகளை மதிகெட்டு ஒடவைதீர்களெ மங்களசமரவீரவை ஒடவைத்தீர் மனமோகன் சிங்கிடம் மனிதாபிமானம் மதித்தான்_தமிழ் மக்கள் தலைவன் மதவு திறக்க அனுமதித்தான் மக்கள் நலன் கருதி மகாவம்சவாரிசுகளோ மதிக்கவில்லை மனிதபிமானத்தை,தம்மக்களையும் மக்கள் விடுதலை முன்னனியாம் மடையர்களுக்கு வேனுமாம் போர் மகிந்த சிந்தனை கவ்வியது மண் ஆனாலும் மண் படவில்லையாம் மீசையில் சமாதானத்துக்கான போர் அன்று சந்திரிகா மதவுக்கான போர் இன்று மகிந்தா பணத்துக்கான போர் நாளை யாருக்கோ -ஆனாலும் உரிமைக்கான போர் எமது வெற்றி நிச்சயம்...
-
- 6 replies
- 1.8k views
-
-
வட்ட நிலவே முகமெனச் சொல்மின் மதி மாதம் தேய்ந்திங்கு வளரும் பிறை காண் அதுபோலவள் வதனம் ஆவது நிதம் கண் கொள்வதற்கு நானிலனே ஒடியுமிடை தனைக்கொடி யென்று கூறிடினும் மழைகாணாப் பயிரினம் கருகி நிலம் வீழும் அதனால் அதுவுமவளிடைக்கு உவமையிங்கிலையே செவ்விதழ்ழிரண்டிற்கும் ரோஜா மலரதனைச் சொல்லொப்பி நிற்கேன் அது சூறாவளிக் காற்றில் சிக்கும் உயிரிழந்துதிர்ந்தும் போகும் அவள் வெண் பல்லுக்குவமை சொல்ல முத்துக்குமிங்கே திருடர் பயம் அவளருகில் நானிக்கும் ஆயுள் நிறைந்து வர தினந் துதிப்பேன் கருங்கூந்தல் கண்ட மனம் கார்முகிலை நினைப்பதுண்டால் கதிரொளியில் வெந்ததுவிண்ணேறும் கலைந்ததுபார் காற்றுடனே கோதையவள் கருவிழிக்கிங்கே கயல்மீன் கண்டுவமை சொல்ல கறி…
-
- 9 replies
- 1.4k views
-
-
அன்பினில் விளைந்த ஆசை ஆசையை மறைத்த நாணம் இச்சை அறியா நேசம் ஈகம் செய்யும் உழைப்பு உண்மைக்கு வருகின்ற கோபம் ஊமையாய் ரசித்த காதல் என்னிலும் மேலான நாணம் ஏழ்மையில் சிரிக்கின்ற வேதம் ஐயம் எழுந்திட்ட போதும் ஒரு பக்கம் சாரா நீதி இத்தனை இருந்திட்ட போதும் ஊமையாய் விலகியேன் போனாய் இங்கு நான் என்னதானேன் - மழை ஈசல் போல் சிறகினை இழந்தேன்- - தயா ஜிப்ரான் -
-
- 1 reply
- 1.1k views
-
-
பாதைக்கு பழக்கப்படாத பாதங்களாகவே பயணங்கள் தொடர்கிறது எதிர்படும் எல்லா முகங்களிலிருந்தும் எல்லோருக்குமான முகமொன்றை தேடியலைகிறேன் நாட்காட்டியின் கிழிபடாத நாளொன்றின் மூன்றுவேளை உணவிற்கான கனவுடன் மாற்றுமொரு தாள் கிழிபட துவங்குகிறது வசப்பட்டாக வேண்டிய வாழ்க்கையை வரவேற்க வாயிற் படியிலேயே வாழ பழகிக் கொள்கிறேன் நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்குமான தோழமையின் வருகைமீதான நம்பிக்கையில் தனிமையை எதிர்கொள்ள தயாராகிறேன் நாளைய யன்னல்களில் உட்புகும் ஒளியில் எனது இருண்ட அறையெங்கும் வைகறையை நிரப்பி கொள்வேன் புத்தக பைகளை வீசி எறிந்துவிட்டு சுமைதூக்கிகளுக்கு அழகின் வானவில் வர்ணங்களை வரைய கற்றுத் தருவேன் விலைமாதொருவளின் ஒர்நாளின் ஒரிரவின்…
-
- 15 replies
- 1.4k views
-
-
அன்றாட நிகழ்வுகள் என்னை அழ வைத்துக் கொண்டிருக்கின்றன. கூண்டோடு மாண்டு போவதாய் கனவு கண்டேன்; அது கொஞ்சம் பலித்தது போலும். அடுப்படியில் அம்மாவும், அரை உடலாய் அப்பாவும், அக்காவை காணவில்லை, அண்ணனாக யாருமில்லை. ஆனாலும் நான் தனியாகி விட்டேனா? - அதுவுமில்லை! ஊரில் என்னைப் போல் பல்லாயிரம் பேர் உண்டாம். எண்ணைக் கொள்ளைக்காக என்னை, மண்ணைத் தின்னச் செய்தார்கள் இந்த மாயாவிகள். உயிரியல் ஆயுதம் மறைத்து வைத்தோம் எனக் கூறி என் உடன் பிறப்புகளை அனுதினமும் உயிரோடு புதைத்து விட்டார்கள் இந்த கொடுங்கோலர்கள். பழமொழிகள் பலவற்றை உண்மை என்றிருந்தேன். "அழுத பிள்ளைக்கு பால்" என்றான். நான் அழாமலே அன்று என் தாய் தந்தாள். இன்று நான் அழுகின்றேன். இந்த அன்னியர…
-
- 0 replies
- 817 views
-
-
-
- 0 replies
- 698 views
-
-
நகர்ந்து-போன-நாட்க்கள், ஓலிவடிவில்............. நட்பாய் என்னில் அமர்ந்து காதலாய் என்னில் உறங்கி இன்று கானலான எனது நாட்குறிப்பின் நனைந்து போன பக்கங்கள் கண்ணீரில்.... இனியும் மறக்கவில்லை .. உனை பார்த்த அந்த முதல் நாளை ... நல்ல நட்பு... நல்ல நண்பன் ... இப்படிதானே இறுமாப்போடு இருந்தேன் நானும்... நல்ல தோழியாய் நானும் உன்னில்... நடை பயில்கையில் ... நாளொரு நாடகம் பொழுதொரு கவிதையென . நீயும் என்னை சுற்றி.. பூமியும் நிலவை சுற்றுமென எனக்கும் காட்டி தந்தாயே ... உன்னோடு பேச ஆரம்பித்த பின்தானே . பூக்கள் உதிரும் ஓசை கூட கவிதையாய் தெரிந்தது என் கண்களுக்கு ... உனது தோழனின் காதலுக்கு …
-
- 12 replies
- 2.4k views
-
-
-
எம் கரும்புலிகள்! சருகாகி மிதிபடோம் தமீழீழப்பயிருக்கு உரமாவோம் என்றெழுந்த உயிர்கள் காற்றாகிக் கரைந்து களமாடி வென்ற எம் கரும்புலிகள் மண்மீட்க உயிரம்பாய் பாய்ந்த எம் புலிகள் தம்மையே கொடுத்து தமிழீழத்தாய்க்கு வலுச்சேர்க்கும் உயிர்பூக்கள் ! உயிர்கொடுத்து வளர்த்த பெற்றோரை விடவும் மண் மீட்பே தன்மானம் என்று உணர்ந்த உன்னதங்களே! தீயிலே எரிந்தாலும் சுடராகி ஒளிர்கின்ற தங்கங்களே!! உங்களை எப்படிப் பாடுவோம் எங்கள் வேங்கைகளே காற்றாகி கடலாகி களத்திலே எரிமலையாகி ஒளித்தீபம் ஏற்றும் சூரியச் சுடர்களே! அச்சமது துச்சமென்று துணிவு ஒன்றே ஆடையென்று கொண்டு மானம்விட்டு உயிர் வாழ்வதுவா என்று சொல்லிச் சென்றீர்களே பாடம் இங்கு நன்று! விதையாகி விழுந்தவர் எ…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழா வெளிநாட்டில் தமிழனுக்கு தமிழில் பேச வெக்கம் நாகரீகம் முத்திப்போய் நடை உடையிலை மாற்றம் பிள்ளைகளின் பெயரைக்கேட்டால் தமிழனோ எனத் தடுமாற்றம் தமிழ் இனத்தின் தலை எழுத்தில் இப்படி ஏன் மாற்றம் இன்னும் இரண்டு தலைமுறையில் இவனின் நிலை இங்கு சோகம் அரசாங்க இலவசப்பணத்தில் ஆடம்பர ஆட்டம் அதை எடுத்து சிலதுகள் இங்கு சூது ஆட்டம் அகதியாகி வந்தும் இங்கே சண்டியர் கூட்டம் கோவில்களில் சிலதுகள் நர பலியாட்டம் காசுக்காக குடும்பம் பிரிந்து இருப்பது இது என்ன கோலம் பிள்ளைகள் வாழ்க்கை பாழகப் போவதுதான் மிச்சம் ஊரில சுவாமிக்கு ப…
-
- 4 replies
- 1.4k views
-
-
எங்கள் நிலைகள் காக்கப் படுவதற்காய் எழுச்சியுடன் புறப்பட்டீர்கள்.. உங்களுக்காய்ச் சிலைகள் ஊர் தோறும் எழுந்துள்ளன.. எங்கள் இடங்கள் கவரப் படுவதைத் தடுக்க விளைந்தீர்கள் உங்கள் படங்கள் சுவர்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.. நீங்கள் வீழ்ந்ததனால் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. நீங்கள் சருகாகிச் சாய்ந்ததால் நாங்கள் இன்னும் கருகாதிருக்கிறோம்.. நீங்கள் மெழுகாகி உருகினீர்கள் நாங்கள் ஒளியை அனுபவிக்கிறோம்.. உங்கள் உடல்கள் சாய்ந்ததால் எங்கள் தலைகள் நிமிர்ந்தன.. இன்று.. நாங்கள் வெறும் கவிதை பாடிக் கொண்டிருக்கிற…
-
- 1 reply
- 496 views
-
-
இந்த பிஞ்சு வயதினிலே உனக்கு நேர்ந்த கொடுரம் நினைக்கும் போது வாழ்வே வெறுகுதே நெஞ்சு முழுதும் சோகம் கண்களில் எல்லாம் ஈரம் இமைகள் மூடித் தூங்கும் வேளை பகை மீது கோபம் (முகநூல்)
-
- 0 replies
- 482 views
-
-
இரவாய் இருந்த எம் வாழ்க்கை பகலாய் விடிய வந்துதித்த தலைவா வாழீ நீ! முதலாய் வந்த குடியின் முதுகெலும்பு ஒடிக்கப்பட்ட போது உனக்கு மீசை கூட முளைக்கவில்லை! ஆசை அரும்புகின்ற அந்த வயதில் ஆயுத பாஷையன்றி வேறெதுவும் இவர்க்குப் புரியாதென உணர்ந்தவன் நீ! துவக்கை கைகளில் எடுத்தவன் நீ! தமிழின விடுதலைக்குப் புது துவக்கம் கொடுத்தவன் நீ! உலகில் தமிழின இருப்பை எதிரொலிக்கச் செய்தவன் நீ காந்திய வழியில் நடந்து சோர்ந்தவர்களுக்கு நீ பிறந்தது பெரும் தெம்பு! ஏந்திய துவக்கின் வாய் திறந்து பேசிய வார்த்தையால் தான் பேச்சு வார்த்தை கூட நடந்தது! உன் வேர்கள் ஆழமானது நீ பரப்பி…
-
- 3 replies
- 1.3k views
-
-
கடலின் கரையில் மணிலில் மாளிகை கட்டிட விரும்புகின்றேன் கதிரின் பிழம்பைக் கையால் தழுவிடக் காதல் கொள்ளுகின்றேன் உடலின் கூடுவிட்டு உயிரால் ஓடி உலவிட விழைகின்றேன் ஊருணி நீர்மேல் ஓவியம் தீட்டும் உரத்தை வேண்டுகின்றேன். வெண்முகிலுக்குள் படுத்துக் கிடக்க, வேட்கை கொள்ளுகிறேன். நன்றி கவிஞர் மீரா
-
- 1 reply
- 601 views
-
-
நான்கு வருடங்களுக்கு முந்தைய பதிவு இது. ஒரு பெருங் கவிஞனின் வாயில் உதிர்ந்த ‘துருப்பிடித்துப் போனவளோ?’ என்ற ஒற்றைக் கேள்விக்கு எழுதுகோல் உதிர்த்த பதில் இக்கவி வரிகள். மீண்டும் மானுட வாழ்வின் அசை போடலில் மீட்பித்துப் பார்க்கிறேன். இங்கு கீழ்க்காணும் கவிவரிகள் நேற்றைய காலங்களுக்கு உரியன. இருப்பினும் இன்றும் சில விடயங்கள் மாற்றமடையாமல் தொக்கி நிற்கின்றன. தூர தேசத்திலிருந்து துருப்பிடிக்கா மடல். கட்புலன் அறியாக் காற்றே! உட்புலன் அசைக்கும் உந்து பொருளே! உயிர்ப்பில், இயற்கை அணைப்பில் நின்னை உணர்த்தும் உயிர் மூலமே! தூரதேசத்திலிருந்து துருப்பிடிக்கா மடல் தந்தேன். தாயகக் கவிஞனவன் உலைக்களப்புலவனிடம் உரியபடி சேர்த்து விடு! - இல்லாவி…
-
- 16 replies
- 3k views
-