கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஒரு தமிழனாய் -------------------------- என் மனதைப் போலவே கூதிரின் காத்தும் கூவிச் சில்லிடுகின்றது பனியைப்போல உறைக்காவிட்டாலும் மனதை குடையும் வெம்மையின் சூடு என்னைப் போலவே இன்னும் உறையாமல் எல்லாவற்றைப் பற்றியும் பாடும் என் பாடல்கள் பாட முடியாது தோற்கும் இடம் என் சந்ததிகள் என்னைப்போலவே முறையறியாது குழம்பித் தவிக்கும் அவள் தமிழ் சிரிப்பாய் சித்திரமாகப் பதிகின்றது மறந்து போன இன்பங்களைப் போல உன் ஊரில் பாம்புண்டா ? அவள் பயங்கள் பாம்பாய்ச் சுற்றுகின்றன. "பெக்கர்ஸ்" அகதியாய் வந்தவர்களும் பெக்கர்ஸ் தானே வாழ்க்கையை யாசித்தவர்கள் தானே எல்லாவற்றையும் தாண்டி மூவேந்தர் பற்றியும் பாரி முல்லை தேர் ஒளவை தமிழ்ச…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்! கடுமையான உழைப்பினால் உன் ஆயுள் ரேகை அழிந்தது....... அரசியல் வாதிகளின் ஆரவாரப் பேச்சுக்கு கை தட்டியே உன் அதிர்ஷ்ட ரேகை கலைந்தது...... எண்ணற்ற சினிமாக்களால் உன் புத்தி ரேகை மழுங்கியது........ லாட்டரிச் சீட்டுகளைச் சுரண்டியதாலேயே உன் உழைப்பு ரேகை உருக்குலைந்தது........ தங்கைகளின் திருமண ஏற்பாட்டில் அலைந்து திரிந்ததில் உன் திருமண ரேகையும் தொலைந்து போனது..... முதுமை ரேகை மட்டுமே முறியாமல் உள்ளது....... கொஞ்ச நாட்கள் கழிந்தால் உன் குறையெல்லாம் போய் விடும் போ! -கவிஞர் கலைவேந்தன்
-
- 3 replies
- 2.4k views
-
-
ஒரு துளி இறுக்கியணைத்த விறைப்பு இறங்க ஓடத்தொடங்கிய ஒரு இலட்சம் வீரியங்கள் விழ விழ எழ முடியாமல் ஒன்று மட்டும் திரும்பி பார்த்து வீழ்வேன் என நினைத்தாயோ? உட்புகுந்தது :lol: :lol: வேறையார் நான்தான். சும்மா ஏதோ தோன்றியது கனக்க யோசிக்க வேண்டாம்
-
- 4 replies
- 676 views
-
-
ஒரு தூக்கு கைதியின் கடிதம் http://youtu.be/tsiZx9omDjo
-
- 1 reply
- 419 views
-
-
ஒரு தூறல் மழை போலே என் நெஞ்சில் விழுந்தாயே என்நெஞ்சின் ஓரத்தில் ஏதோ ஞாபகம் பெண்ணே நீ போகாதே ஏக்கத்தில் தள்ளாதே உன்னால் என் நிமிடங்கள் வருடம் ஆனதே நெஞ்சுக்குழியினிலே பல்லாங்குழி ஆடுகிறாய் இதய அறைகளிலே ஏன் ஒளிந்து ஓடுகிறாய் சிலநேரத்தில் தொலைவில் போகின்றாய் சிலநேரத்தில் அருகில் வருகின்றாய் ஓரக்கண்ணாலே கோபங்கள் காட்டாதே உன் மௌனப்புன்னகையில் மௌனித்து கொள்ளாதே உன்பாத தடங்கள் இங்கே தேடுகிறேன் என்பாதைகள் மறந்து எங்கோ ஓடுகிறேன் மேகம் பொழியாமல் மழை வந்து வீழ்ந்திடுமோ உன்னைக்காணாமல் என் ஜீவன் வாழ்ந்திடுமோ http://www.youtube.com/watch?v=Lbx5zdgjgwA
-
- 23 replies
- 1.4k views
-
-
ஒரு தேநீர் விடுதியும் இரு நாற்காலிகளும் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 324, காலி வீதி , வெள்ளவத்தை, கொழும்பு -06 சில வேளைகளில்.... சில இடங்களையும் சில சம்பவங்களையும் கூட காதல் தொற்றிக்கொள்கிறது! அதன் இனிய நினைவுகளால்... மனம் கொஞ்சம்... தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறது!! காத்திருப்புக்களும் சந்திப்புகளும் கைகுலுக்கிக்கொள்ளும் அழகான இடம்தான்.... அந்த தேநீர்விடுதி! வழமையான அந்த மேசையும் நாற்காலிகளும் அந்த இருவருக்காகவே காத்திருக்கும்...! காதலர்களை அமரவைத்து அழகுபார்ப்பதில் அதற்கும் கொள்ளைப் பிரியம்...!! அங்குள்ள பணியாளரைப்போலவே இவற்றிற்கும் இவர்கள் நன்கு பரிட்சயம்!!! அவளுக்காகக் காத்திருந்த பலதடவைகளில் நான் பார்த்திருக்கிறேன்.....…
-
- 11 replies
- 1.4k views
-
-
Feb 10 2005, 08:49 PM இதயத்து சேகங்களை இறக்கிவைத்து சுமக்கும் சுமைகளையும் சொல்லிட வார்த்தைதேடி கலைந்துபோகும் என் கனவுகளை கலைத்து பிடித்து கட்டிவைக்க விழையும் வாலிபன்நான் வசந்தத்தை அனுபவிக்கும் வயதில் வறுமையை தாங்கலாம் வெறுமையை...........?? முடியவில்லை வீதியில் வீசப்பட்டடோ விக்கப்பட்டவனே இல்லை சொந்தம் சுற்றம் எல்லாம் உண்டு உற்றாருக்கும் பெற்றாருக்கும் உதவி உதவியே உதிரிபாகங்கள் தேய்ந்துபோய் உடலும் மனமும் சோர்ந்து.....என் துக்கங்களை தூக்கம்மட்டும் அவ்வப்போது தத்தெடுத்து கொள்ளும் இதோ என்னை தத்து கொடுத்துவிட்டேன் நிதந்தரமாக (ஒரு நண்பனின்உண்மை கதையிது
-
- 13 replies
- 2.8k views
-
-
அடர்ந்த பனிக் கூதலில் நட்சத்திரங்களின் மெல் ஒளியின் படர்தலில் இரவின் நிசப்தத்தை இரசித்துக்கொண்டு இரண்டு இதயங்கள் தொலை தூரப் படபடப்பில் இமைகளை மூடிவிட சாளரம் வளியே முத்மிடும் சாரல் காற்றின் ஸ்பரிசத் தக தகப்பில் மூச்சுக்காற்றின் சுகந்தம் அறிதல் உற கொம்பொன்றில் கொடிபடரும் பேரழகாய் கரை தடவும் மெல்லலையில் மணல்க் கோடாய் மாண்ட நடு இரவின் பொழுதுகள்தான் பொய்த்தனவே ஏக்கத் துடிப்பான எண்ணங்கள் இணைந்துவிட
-
- 1 reply
- 640 views
-
-
விளையாட்டா விளையாட சின்னவர்கள் ... பொம்மை கேட்டனர் .. கொடுக்கப்பட்டதோ பொம்மை துப்பாக்கி .. ஆண்டுகளா பல சிறார் விளையாடி போன .. அதே குருதி தேய்த்த பழைய துவக்கு .. இதை வைத்திருந்தவன் இறந்து போய் .. ஒருவருடமும் இல்லை அப்ப நாலு வயது .. அப்பொழுது இவன் பிறந்து இருந்தான் .. இவன் அருகில் நான் இருக்கும்போதே .. அவன் வெளியில் விளையாடியபடி நின்றான் .. டும் என சத்தம் வந்தால் ஓடி வரும் அவன் .. அன்று மட்டும் வரவில்லை ஏனோ .. சீறி வந்த ஏவுகணைக்கு தெரியுமா .. அவன் ஆசைப்பட்டது பொம்மை.. துவக்குக்கு என்று .. ஏவுகணை ஏவுறவன் பார்வையில்.. அவன் தீவிரவாதி... ஆனால் அவனுக்கு பொம்மை மேல் .. தீராத காதல் வியாதி ... பிஞ்சா கருகி விழும்போது மனம் .. துண்டா வெடித்து போவதை யார் அறிவர் .. …
-
- 0 replies
- 865 views
-
-
என் ஆக்கங்களை எல்லாம் ஒரு புளொக்கில் இணைப்பம் என்று கூகிள் ஆண்டவரின் உதவியுடன் தேடும் பொழுது நான் எழுதி சரிநிகரில் வெளிவந்த கவிதை ஒன்று கண்ணில் பட்டது. 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதியில் எழுதிய கவிதை இது இக் கவிதையை யாழில் இதுவரைக்கும் இணைக்கவில்லை என்று நினைக்கின்றேன் (சில பழைய கவிதைகளை முன்னர் இணைத்து இருந்தேன்). நூலகம் தளத்தில் இருந்து PDF வடிவில் இருப்பதால் அதனை படமாக மாற்றி இணைத்துள்ளேன். பழைய கவிதை என்பதால் 'இதெல்லாம் கவிதையா' என்று கோபிக்க கூடாது ------------
-
- 14 replies
- 1.7k views
-
-
கூடு திறந்தால் காடு ----- அந்த மரண வீட்டில் .... அப்படி ஒரு சனக்கூட்டம் .... ஆராவாரமான மரணவீடு .... ஓலமிடுபவர்கள் ஒப்பாரி ... சொல்பவர்கள் நிறைந்து ... காணப்பட்டனர் ..... மூன்று நாட்களாக ... கண்ணீர் விழா ....!!! சடலம் இருக்கும் பெட்டி ... அலங்காரத்தால் ஜொலிக்கிறது .... குளிரூட்ட பட்ட ஊர்தியில் ... சடலம் வைக்கப்படுகிறது .... மந்திரி வந்து அஞ்சலி செலுத்த .... வீதியெங்கும் வாகன நெரிசல் .... வீதி எங்கும் நிறுத்தி நிறுத்தி ... பறை சத்தம் காதை கிழித்தது ....!!! சடலம் போகும் பாதையில் .... விபத்தில் இறந்த எருமைமாட்டு ... சடலத்தை நாய்களும் காகங்களும் .... குதறி எடுத்தபடி இருந்தன ... இறந்தபின்னும் மற்றவைக்கு ... உதவும் அந்த எருமைய…
-
- 6 replies
- 2.3k views
-
-
ஒரு நிமிடம் தனித் தனி.... என்னன்பே.. நீயெங்கே.. ஒரு நிமிடம் தனித் தனி.... என்னன்பே.. நீயெங்கே.. அலைகளிலே வலி வலி என்னுயிரே ... நீயெங்கே.. சின்ன அலைகள் கண்டே ஓடிடும் உன் கொலுசுப் பாதமே.. பேரலைகள் வந்தே மூடிய என்னழகே நீயெங்கே.... இந்தக் கடலன்னை -என் தாயென தினம் மணல்மடி து}ங்குவாய்..... அந்த அலைகளில் வரும் நுரை கண்டு - பால் பொங்குதே ஏங்குவாய்...... அள்ளித் தந்த கைகளே.. இன்று அன்பைக் கொல்வதா.... சீற்றம் கொண்டு சீறியே.. - எம் செல்வம் பறிப்பதா.... ஐயோ... நம் விடியலின்னும் து}ரமில்லை -என்ற காதலியை இன்று காணவில்லை ஒரு நிமிடம் தனித் தனி.... என்னன்பே.. நீயெங்கே..
-
- 11 replies
- 1.8k views
-
-
ஒரு நிலவாய்!! இரு கரங்கள் நடுவே குலுங்கிய வளையலிடை ஒரு இடி ஜனனம் கொள்ளுமென்று எவர் கண்டார்? அடுக்களையில்...... அக்கினி சீண்டலின் மடியில்...... இதுதான் வாழ்க்கை என்று கிடந்தவள் எரிமலையாய் வெடிப்பாள் என்று எவர் கண்டார்?! பசு என்றே பாடினர் புலவர்.. காளைக்கும் சேர்த்தே ஒரு கனவுலகம் காண செத்தேதான் போவாளென்றே எவர் நினைத்தார்? நங்கை என்றார்.. நாணல் என்றார் மெல்ல நட.. அல்லி இடை ... மிடுக்காய் நடந்தால்... அது முறியுமென்றே இனிப்பாய் சொல்வார்... அவர்க்காய் புனை கதை !! போகட்டும் விடடி..! சூரியன் தான் ஆணா ...? ஆனாலும்தான் என்ன ? சொல்லடி கிளியே அவர்க்கு...... பூமியி…
-
- 9 replies
- 1.8k views
-
-
அடிக்கடி நீ இமைசிமிட்டுவதால் என் விழிகள் வலிக்கிறது விம்பம் தெரியாத கண்ணாடியில் உன் உருவம் ஓடி மறைகிறது ஒரு நொடி உன்னைப் பாராவிட்டால் மறுநொடியே என்னுள் ஆயிரம் கனவுகள் படர்கிறது...
-
- 0 replies
- 585 views
-
-
காகம் இருந்தும் கற்றுக்கொள்ள கிளிகளுக்கு கர்வம் அதிகம் நிறம் சரியில்லை என்றது ஆந்தைக்கு முழி சரியில்லை என்றது பிலக்கொட்டை குருவிக்கு துள்ளல் துடிப்பு அதிகம் என்றது உன் சத்தம் மெத்தக் கூடிப்போச்சு என்று செண்பகம் சொன்ன போது உனக்கு சோர்வு அதிகம் என்றது அடக்கி வாசி என்று அடைக்கலக் குருவி சொன்ன போது உடைத்து விடுவேன் மூக்கை என்று பேச்சுரிமை பேசியது பொந்துக்குள் கிளிகள் பத்திரமாக தனித்தனியே குந்தியிருக்கின்றது பொழுது சாயும் நேரத்தில் மட்டும் கூட்டம் கூட்டமாக தென்னோலைகளை கிழித்து விடுவதுடன் அடங்கி விடுகின்றது அது மார்கழியின் கெற்போட்டம் இல்லை கார்த்திகையின் கனமழை காற்றும் வேகமாக வீசி முன் வேலி முருங்கை முறிந்து விழ…
-
- 9 replies
- 2.8k views
-
-
(அடியேனுக்கு கவி மணத்துக்கும் வராது, இரசித்தவைகளை கத்தரித்து காவி வரமட்டும் முடிகிறது.)
-
- 0 replies
- 593 views
-
-
ஒரு பிடி ................................வேண்டும் தலைவனின் மண்மீட்பில் ஒரு பிடி மண் வேண்டும் மண்கொண்ட அன்னையின் நினைவாக ஒரு பிடி முத்து மண்ணில் நான் போட்ட கோல மண் முன் வீட்டு மாமியின் வேலிக்கும் ஒரு பிடி மாமர நிழாலில் மண் வீடு கட்டிய என் தோழி மலர்விழி மண் மீட்பில் மாண்டு விட்டா மாமா வின் கடைசி மண் மீட்க போய்விட்டான் நான் நட்ட மாங்கன்று கிளை விட்டு பழ்ம் கொடுத்து என் பிள்ளை ருசிபார்த்து ,பசியாற மண் வேண்டும் கோமத்யின் இரு நாள் பசுகன்று பார்க்க வேண்டும் கோழியும் குஞ்சுமாக ஒரு கூட்டம் காணவேண்டும் கோவில் மணி ஒலி என் துயில் எழுப்ப வேண்டும் . வயல் வரம்பில் காலரா நடை பயில வேண்டும் விளைந்துநிட்கும் நெற்கதிர் அளைந்து வரவே…
-
- 4 replies
- 1.7k views
-
-
ஒரு பிரகடனத்தின் எதிர்வினை - சஹானா எங்களுடைய புன்னகையை சந்தேகிக்கும் எல்லோருக்கும் சொல்கிறோம்……. எங்கள் கடல் அழகாயிருந்தது எங்கள் நதியிடம் சங்கீதமிருந்தது எங்கள் பறவைகளிடம் கூட விடுதலையின் பாடல் இருந்தது….. எங்கள் நிலத்தில்தான் எங்கள் வேர்கள் இருந்தன… நாங்கள் நாங்கள் மட்டும்தான் இருந்தோம் எம்மூரில்… அவர்கள் எங்கள் கடலைத் தின்றார்கள்… அவர்கள்தான் எங்கள் நதியின் குரல்வளையை நசித்தார்கள்… அவர்கள்தான் எங்கள் பறவைகளை வேட்டையாடினார்கள்…….. எங்கள் நிலங்களைவிட்டு எம்மைத் துரத்தினார்கள் அவர்கள்தான் எங்கள் குழந்தைகளின் புன்னகைகளை தெருவில் போட்டு நசித்தார்கள்….. நாங்கள் என்ன சொல்வது நீங்களே தீர்மானித்து …
-
- 3 replies
- 1.3k views
-
-
ஒரு புலம்பெயர்ந்தவனின் புலம்பல் தை பிறந்தால் வளி பிறக்கும் பயிர்கள் எல்லாம் தழைத்தோங்கும் மாசியில் மாம்பழம் மறக்கேலா நினைவு அது பங்குனியில் கதியால் வெட்டு பரபரப்பாய் நாட்கள் நகரும் சித்திரையில் வேம்பு பூத்து சிறப்பாய் சிலிர்த்து நிற்கும் வைகாசியில் விசாகம் தமிழர் வரலாற்றுப் பாரம்பரியம் ஆனியில் அனல் வெயில் அப்பப்பா என்ன புழுக்கம் ஊரெல்லாம் வெப்பத்தால் உறங்கிவிடும் வீட்டுக்குள் எங்களுக்கோ கொண்டாட்டம் எவ்வளவு சந்தோசம்........... பின்னேரம் கிளித்தட்டு காலையில் பாட்டுக்குப்பாட்டு கனவுகளில் கவலையின்றி களிந்தது எம் இழமைக்காலம் இடையில் வீடு வந்தால் இருக்கும் சாப்பாடு இடையிடையே அம்மாவின் வசைப்பாட்டும் வழமையங்கே உப்பிடியே பு…
-
- 1 reply
- 945 views
-
-
உன் மகன் தமிழீழ விடுதலைப் புலி வீரன்….. பார் முழுவதும் இவளைப் பார்ப்பதால் பார்வதியானாளா..? ஐயாயிரம் ஆண்டு தமிழன் வாழ்வை அழித்தெழுதிய ஆற்றல் வீரன் பிரபாகரனைப் பெற்றதால் பார்போற்ற நின்றாளா..? வீரத்தமிழன் வரலாறு செத்துப்போகா தியாகத்தை எழுதிய புலிகள் பாய்ந்தெழுந்த தாய் நிலமானதால் புகழ்பெற நின்றாளா… ? அன்று.. தாயிறந்த செய்தி கேட்டு துறவியாய் தொலைந்த பட்டினத்தாரே துடிதுடித்து ஓடிவந்தார் தாய் படுத்த சுடலைக்கு.. நீ பெற்ற பிள்ளை.. மானமுள்ள தமிழனுக்கெல்லாம் நீயே தாயென்று போற்றி.. இன்று உன் பிள்ளைகள் உலக முழுதும் உன் சவக்கட்டில் ஏந்தி ஊர்வலமாய் போகக் கண்டான் போய் வா தாயே.. தன்மானம் குலையா தலைமகன் வேலுப்பிள்ள…
-
- 0 replies
- 813 views
-
-
ஒரு பெண்ணின் அழுகை...... மணம் முடிச்சு இன்னுடனே மாசம் மூணு ஆகி போச்சு.... ஆனாலும் மனசதிலே சங்கடமே சூழ்திருச்சு.... காலம் எல்லாம் கண்ணீரிலே வாழும்படி ஆகிருச்சு.... ஏறி வந்து ஆட்டம் போட்ட இன்பமெல்லாம் ஓடிருச்சு..... கட்டி வைச்ச கற்பனையும் கணப்பொழுதில் உடைஞ்சிருச்சு... நல்ல வாழ்வு தேடி நாம நாடு மாற முனைகயிலே... எவனோ வந்து என்னவனை எங்கோ கடத்தி போனாங்களே....??? என்ன ஏதோ தெரியவில்லை இன்னு வரை பதில் இல்லை.... காணவில்லை பட்டியலில் கணக்கு சேர்த்து போட்டாங்களே.... ஜயோ ராசா கண்ணு முன்னே அவலம் வந்து சூழ்ந்திருச்சே..... ஆண்டு பல வாழ வேண்டி ஆசை பட்ட …
-
- 6 replies
- 1.8k views
-
-
அகத்தியன் என்பவர் தற்போது சிறையில் இருக்கும் போராளி அவர் எழுதிய கவிதைகளை இந்த தொகுதியில் இணைக்கிறேன்; தேடல்...! கிழித்தெறியப்பட்ட இதயத்தாளின் ஒரு புறத்தில் அடைத்துவைக்கப்பட்ட எங்கள்-அழுகையொலியும்,வேதனையும்.., அருகதையிழந்த மக்களின் குருதிச்சாயமும் குரூரத்தின் கோரத்தனமுமே மிஞ்சிக்கிடக்கிறது.....! எடுத்தவர்கள் எவராயினும்- காணாமல் போனவர் சங்கத்தில் காட்டிப்பதியுங்கள் எங்களின் இருப்பையும் எங்களின் இழப்பையும் நாங்கள்- காணாமல் போவதற்குள்..! நன்றி அகத்தியன்
-
- 2 replies
- 1.1k views
-
-
ஊரை உறங்க செய்து நாய்களுக்கு தெரியாமல் நடந்து வெள்ளி பார்த்து திசை பிடித்து அவன் எல்லையை தொடும்போது ஆந்தைகள் முழித்து இருக்கும் அவன் மட்டும் விடிகாலை பொழுதில் குறக்கண்ணில் தூங்கி விழித்து இருக்க அவன் கால் அருகில் அரவம்போல் நகர்ந்து அவனை கடந்து போகும்போது உள்ளம் மகிழ்ந்து இருக்கும் உள்ளுக்குள் உள்ளே வந்துவிட்டோம் என இறுமாந்து நிமிர்ந்து நடந்து போகையில் எதிரே ஒரு கேள்வி வரும் யாரு நீ எங்க போறா .....பதில் யோசிக்க முன் சுடும் விசை கீழ் நோக்கி போகும் அதன் டிக் ஒலி அவன் காதிலும் விழும் இருவருக்குள்ளும் ஒரு நொடி மவுனம் பேசும் அத்துடன் கலைக்கப்படும் சொன்ன இடத்துக்கு வந்து சேர் என உரக்க கூறி விட்டு வலம் இடமா பாய்ந்து வேட்டுக்களை தீர்த்து எம்மை காப்பற்ற…
-
- 4 replies
- 696 views
-
-
"சோ"வென்ற மழையில் கூந்தலிலிருந்து நீர் சொட்டச் சொட்ட.... அந்த நிலாவை என் வீட்டுத்தாழ்வாரத்தில் பார்த்தேன்... முதன்முதலில் பார்த்தேன்... அவளோடு அவளின் குட்டி;த்தங்கை...சுட்டித்தங்க
-
- 28 replies
- 3.8k views
-
-
ஒரு மீனவ நண்பனின் ஆட்டோக்கிராவ்(f) நடு இரவின் முழு நிலவை முகில் மறைத்து, விடிகாலைத் தோற்றங் காட்டும். கடுகளவு பயமின்றி நடுக்கடலில் வலை பரப்பி விழித்திருந்து கதை பகிர்வோம். 'சிவசோதி'யில் 'படகோட்டி' 'ஜெய்ஸி'யில் 'பச்சை விளக்கு' எம்.ஜி.ஆர் - சிவாஜிக்காய் பட்டிமன்றம் தூள்பறக்கும். புறோக்கர் புலோமினா புதுவரவு மணியக்கா இவர்களுக்காய் பட்டிமன்றம் திசைமாறும். கடல் மீனின் வரவுக்காய் விண்மீன்கள் செலவாகும். செட்டியைக் கொண்டான் உச்சி வர விடிவெள்ளி முளைத்தெழும். வலை நிறைந்த மீனுக்காய் மனம் நிறைந்து எதிர்பார்க்கும். வலை வளைத்து... வலித்து கரை நோக்கி படகேகும். வெள்ளை மணற் பரப்பில் வெளிச்சவீடு எழுந்து நின்று ஒ…
-
- 10 replies
- 2.2k views
-