கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
-
கல்லினில் இரு துளைவைத்து கண்ணென்று சொல்லி உலகையும் காப்பான் இவன், தன் கண் கொண்டு என கற்பனை வளர்த்த எமை மூடராய் ஆக்கி கயவனாய் போனாயே - கடவுள் இல்லை நீ கல் என்றே சொல்வேன் உனை.. கைலையில் உள்ளாயா - இல்லை போதியின் கிளையில் கீழுள்ளாயா? காமுகன் கையில் கணையாய் ஆனாயா. என்குல மங்கையர் கச்சை களைகையில் எங்கே ஒழித்தாயோ? களத்தினில் எம்மக்காள் கருணையின்றி கொலையுறுகையில் கழிவறையில் இருந்தாயோ?? கல்விப்பசி கொண்டு துள்ளித்திரிந்த கயல்விழிகளெல்லாம் அசுரர்கள் கலவிப்பசி தீர்க்க கையிழுத்து கழுத்தறுத்த வேளை - நீ கண்டு ரசித்தாயோ கொண்டு நடத்தினாயோ கல்லில் புதைந்த கடவுளே. கடல் கடந்தவன் மெய்யுரைக்க-மனம் கல்லானவன் பொய்யுரைக்க காலடியில் காலன் இன்று எ…
-
- 26 replies
- 8k views
-
-
சர்ச்சுக்குப் போனேன்! கடவுள் அங்கில்லை! சலிக்கவில்லை! மசூதிக்குப் போனேன்! அங்கும் அவனில்லை! விடவில்லை! விகாரைக்குப் போனேன்! எவனும் அங்கில்லை! முடியவில்லை! மயங்கிப் போனேன்! விழித்துப் பார்த்தேன்!! மனைவி மடியிலே!!!
-
- 9 replies
- 778 views
-
-
கடவுள் என் கனவில் வந்தார் எப்படி இருக்கிறது பூமி என்றார் உங்களுக்கு தெரியாத என்று கேட்டேன் வேலைப் பழு எல்லாவற்றையும் கவனிக்க முடியவில்லை என்றார் என்னிலும் கொஞ்சம் கோபமாகத்தான் இருந்தார் ஏதோ தேவைக்காய் அவரிடம் அடிக்கடி போய் வந்தேன் எல்லாமே வந்த பின் அவரையும் மறந்தேன் இருந்தபோதும் அனைத்தும் அறிவார் எவன் கள்ளன் எவன் நல்லவனென மனிதர்கள் மனிதர்களாக இல்லை என்றேன் மானிடத்தை ஏன் கொன்றீர்கள் என்றேன் தான் இல்லை அது நீங்களே என்றார் அழிவுகள் தொடர்ந்து கொண்டே போகிறதே என்ன செய்வதாய் உத்தேசம் என்றேன் கட்டுக்கு அடங்காமல் போய் விட்டது அதிகாரம் என் கைகளை விட்டு என்றார் மதமும் …
-
- 17 replies
- 2.7k views
-
-
அம்மா முகம் தெரியாது அகரவரியும் தெரியாது ஆண்டவனும் கைவிட்ட அநாதைகளாய் தமிழர் நாம் அகதிமுகாம்களிலே வாடுகிறோம்.. குளிப்பதற்குக் கூட கும்பலாய் தான் போகவேணும் குடிதண்ணீர் பெறுவதற்கும் குழந்தை முதல் குமரி வரை குத்துக்கல்லாய் நிக்கவேணும் கட்டிக்கொள்ள மாற்றுச்சேலையில்லை காலுக்கொரு செருப்புமில்லை கழிவறைக்குப் போவதற்கும் காவலுக்குச் சிங்கள நாய்கள் ரண்டு கன்னியரின் கற்பு எல்லாம் காடையரால் சூறையாட காட்டிக்கொடுக்கும் நாய்களும் கண்டபடி குதறிவிட கண்ணிரண்டால் பார்த்தும் கூட காதிரண்டால் கேட்டும் கூட கன்னியவள் கற்பை காப்பாற்ற முடியவில்லை எம்மால் நாலுசுவருக்குள் நடப்பதெல்லாம் நடுவெளியில் நடக்குதைய்யா தட்டிக்கேட்க யாருமில்லை …
-
- 8 replies
- 1.5k views
-
-
நீ இல்லை என்று தான் எனக்கு சொல்லிக் கொள் (ல்) கிறார்கள் நானும் இல்லை என்றே சொன்னேன் உன்னையல்ல அவர்கள் சொன்ன சொல்லை இன்று ஏனோ என் மனம் தவிக்கிறது இத்தனை நாளாய் தேடியும்...???? உள்மனம் சமூகச் சொல்லை ஏற்க விளைகிறது. இந்த மண் - உன்னை விழுங்கிய நாளை மறந்திருக்கும் ஏனென்றால் அது உன்னை மட்டும் விழுங்கலியே. ********************************* ஊரறிந்த ஒரு நாளில் ஒரு தீபமேற்ற வழியில்லை தெருவில் சிலர் உன்னை சூடு வைத்த எழுத்தாணியுடன் பார்த்து நிற்கிறார்கள். நான் பொதுவாய் ஒரு தீபமேற்றுவேன் “அம்மா பெரியறை விளக்கை நானே வைக்கிறேன்” யாரோ என்றோ கண்டதாய் சொன்ன கடவுளுக்கு என்றும் தீபம் வைக…
-
- 4 replies
- 971 views
-
-
தபால் காரனுக்கு என் மீது இரக்கம் அதுதான் எவர் வீட்டு கடிதத்தையோ என் வீட்டில் போடுகிறான் நீ தான் இரக்கமில்லாம இருக்கிறாய் எனக்கு தர வேண்டிய கடிதத்தை இன்னும் எழுதாமல் எழுது எனக்கொரு கடிதம் என்னை நேசிக்கின்றாய் என்றல்ல நீ வேறு எவரையும் நேசிக்கவில்லை என்று அதுவும் உன்னால் முடியாதுவிடில் கையொப்பத்தை மட்டும் நீ போடு கடிதத்தை நானே எழுதுகிறேன் நண்பண் ஒருவனின்ட காதல் சக்சஸ் இல்லாம போச்சு அவன் என்னிடம் ஒரு கவிதை எழுதி தரும்படி கேட்க நம்மளுக்கு தெரிந்த அளவில இதை எழுதி கொடுத்து 2பேரும் சேர்ந்து விட்டார்கள் அது தான் யாழிலையும் போட்டேன் கவிதை மாதிரி தெரியுதா,இல்லாட்டி நக்கல் அடிக்க வேண்டாம்.
-
- 28 replies
- 4k views
-
-
சிதறி கிடக்கும் நாங்கள் … குப்பைகள் – அல்ல …. உங்கள் மீது … தொற்ற இருக்கும் … பெயர் வைக்கப்படாத .. நோய்கள் ….!!! ++ குப்பை கடுகு கவிதை
-
- 2 replies
- 443 views
-
-
சோழப் பெருமன்னர் சிந்தனையில் உதித்த கொடி குமரி முதல் இமயம் வரை பறந்த கொடி தமிழன் இராய்ச்சியம் இந்து முதல் பசுபிக் வரை நின்ற கதை சொன்ன கொடி.. எங்கள் பெருந்தலைவன் பிரபாகரன் தானை தாங்கி நின்ற கொடி... நம் தமிழர் உயிர் மூச்சில் அசையும் கொடி.. தமிழீழத் தேசியக் கொடி..! முள்ளிவாய்க்கால்தனில் சாட்சியங்கள் இன்றி... மண்ணோடு புதைந்திட்ட மண்ணின் புதல்வர்கள் மானம் காத்த கொடி... புலம்பெயர் மண்ணில் ஈழத்தமிழன் அடையாளம் காட்டும் கொடி...! நாம் தமிழராய் ஓரணியில்.. தமிழகம் தாங்கி நிற்கும் கொடி எங்கள் புலிக்கொடி..! இத்தனை பெருமையும் இருந்து என்ன பயன்... 1948 முதல் 2009 வரை சிங்களம் எமை வெறியாட தூண்டிய கொடியாம்... இன்று எம் …
-
- 21 replies
- 2.3k views
-
-
அன்பே: ஏன் பிரிந்தாய்? நம் பிரிவை உயிர் மட்டும்தான் பிரிக்கும் என்றுதானே நானிருந்தேன். எப்படி பிரிந்தாய்? நீ இல்லாமல் வாழத்தெரியாத நான் நீ இருந்தும் இல்லாமல் எப்படி வாழ்வேன். சொல் கண்ணே சொல் நீ இல்லாத உலகத்தில் நான் பிணமாய் வாழ்வதைவிட நீ இருக்கும் உலகில் நான் கல்லறையாய் வாழலாம். எங்கே நீ சொல் அன்பே சொல்.. உனக்கான என் காதல் மரத்தில் இருந்து தினமொரு கவியிலையாய் விழுந்து கொண்டிருக்கிறது என் கண்ணீர் எனும் மழையாலும் உன் நினைவெனும் புயலாலும். வா அன்பே வா... நீ என்னை வாழ வைக்க வேண்டாம் வாழ விடாமல் வைத்துவிடு அது போதும் உனக்காய் வாழ்ந்து உன்னால் இறந்…
-
- 1 reply
- 887 views
-
-
கடைசிப் பாலகனின் இரத்தம் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தீபச்செல்வன் மூட மறுக்கும் பாலகர்களின் கண்களில் குற்றங்களின் முடிவற்ற காட்சிகள் அசைகின்றன இறுதியில் எதையோ சொல்ல முயன்றபடியிருக்கும் மூடாத வாய்களில் மறைக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஒலிக்கின்றன இரத்தத்தில் பிறந்து இறுதிவரையில் இரத்தம் காயாமல் பிசுபித்தபடி உடல் எங்கும் வழிய குண்டுகளால்சிதைக்கப்பட்ட பாகங்கள் உதிர எனது நிலத்து பாலகர்கள் திரிகையில் இலையான்கள் காயங்களை அரித்து அவர்களைத் தின்று முடித்தன எல்லோருடைய கண்களின் முன்பாகவும் எனது தேசத்திற்கெதிரான போரில் பாலகர்களை பலியிடும் பொழுது தாய்மார்களை நோக்கி அவர்கள் அழுகையில் தாய்மடிகளில் இரத்தம் பெருகியிருந்தது பெண்…
-
- 6 replies
- 1.6k views
-
-
உன் பார்வை கல்லைக் கரைக்கும்-நான் கள்வன் இல்லையடி.... நீ காதல் முல்லையடி.... உன் விரல்கள் வீணை இசைக்கும்-நான் கலைஞன் இல்லையடி.... நீ அன்புக் கிள்ளையடி... ஊரும் பேரும் நாலும் சொல்வார்.. நீதானன்பே எந்தனுயிரே.. ஜென்மங்கள் தோறும் கைகள் இணைவோம்.. காதல் வந்து சேரும் வழி கண்களல்லவா... நம்போல் காதலர்கள் பேசும் மொழி மௌனமல்லவா... கனவுகள் நாளும் வந்து.. கவிதைகள் தருமே... கண்மனியுனை நினைக்க குளிருது மனமே.. இதழ்களில் தேன் குடிக்க இன்றேன் சொல் தாமதமே.. இரவுகள் தனித்திருக்க நிலா உலா போய் வருமே... மெத்தை மடி தந்தவளே மெல்லத்தூங்கவா....நீ நிம்மதியில் புன்னகைத்தால் காதில் பேசவா... கருவிழி பார்த்துத்தான்.. …
-
- 43 replies
- 6.1k views
-
-
கட்டபொம்மன் காலத்தில் மட்டுமல்ல எட்டப்பர்கள் இன்றும் இருக்கின்றனர் தமிழனே! இன்னும் எத்தனை காலத்துக்கென்றுதான் கண்ணீர் வடிப்பாயோ? விழிநீர் உப்புடன் விருந்துண்பவனே நரகிற் கிடந்துழலும் விதியை எவனடா எழுதினான் உன் தலையில்? விடுதலைக்காக நீ விழி திறக்கும் போதெல்லாம் கூடப்பிறப்பொன்றே உனக்குக் குழி பறிக்கும். நீ படை வைத்து அரசாண்ட காலத்தில் இன்று சந்திரனுக்குச் சென்று சாதனை படைத்தானே, அவன் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தான். செவ்விந்தியனைக் கொன்று சிம்மாசனம் பிடித்தவன் இன்று "சர்வதேசப் பொலிஸ்காரன்" ஆகிவிட்டான். கோட்டைகட்டியாண்ட குலத்துக்குரிய நீ மட்டும் மாட்டைப் பூட்டியே இன்றும் மண்ணைக் கிளறுகின்றாய். நீ கப்பலேறிக் 'கடோரம்' வென்றபோது ஜப்…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஈழப் பண்ணையில் கந்தன் என்ற கமக்காரன் கட்டி வளர்த்த காளை மாடுகள்.. பண்பட்டு மண் பண்படுத்தி மக்களுக்காய் உழைத்தன ஓர் காலம். இன்றோ.. கட்டறுத்து சொந்த நிலங்கள் மேயும் கட்டாக்காலிகளாய்..! வளர்த்தவரையே மூர்க்கம் கொண்டு முட்டி மோதி சாகடிக்கும் நிலையும் காணீர். விசமிகளும் கரடிகளும் விசயத்தோடு பழி தீர்க்கும் படலம் தொடர்பில்.. எதிரிகளின் கைப்பாவைகளாய் மூர்க்கம் கூட்ட கட்டாக்காலிகளிடம் சாராய வெறியூட்டும் நிலையும் காணீர்..! எச்சரிக்கை..! எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
-
- 11 replies
- 1k views
-
-
கட்டழகி தந்த காயம்.... கவிதை...... என் பார்வையில் மயங்கி பதிலுக்கு சிரித்தாள் நானும் சிரித்தேன்........ பக்கத்தில் வந்தாள் நானும் மகிழ்ந்தேன்...... தன் பெயர் கூடச் சொன்னாள் என் பெயர் நானும் சொன்னேன்..... ஓர் நாள் பழக்கத்தில் ஓர் உடல் ஆனோம்...... ஒன்றாகக் கை கோர்த்து பூங்காவில் நடந்தோம்..... சந்தோசத்தில் நாம் எமை மறந்து நடக்க.... கால் தடம் புரண்டு அவள் ஆற்றினில் விழுந்தாள்...... எனக்கு நீச்சல் தெரியாது இருந்தும் என் உயிரைக்காக்க ஆற்றினில் குதித்தேன்... என்னால் நீச்சல் முடியாமல் நீரின் மேலுக்கு வந்தேன்... தண்ணீரில் விழுந்த வலியும் தாங்காமல் என் மூக்கிலிருந்து நீரை எடுத்தேன்... என்னால் முய…
-
- 16 replies
- 2.4k views
-
-
கட்டிலில் நான் கன்னியிடம் கண்ட சுகம் கடைசிவரை வருமா கனவு மெய்பட கடவுள் அருள் தர வேண்டும்😂
-
- 2 replies
- 751 views
-
-
கட்டுண்டு கிடக்கும் காலச்சக்கரம் தன்னியக்கம் பெறுக கண்கள் சிவப்பேறிக் கிடக்கின்றன. அழுகின்றேனா? அனல்கின்றேனா? விழியோடையில் உலர்ந்த திரவத்தின் சாட்சியமாக இமையோரத்தில் பிசுபிசுப்பு. பிம்பங்களற்ற எழுதுகோல் நட்பின் கவிதைப் பேச்சும், தோழமைக் கடிகளும் இருண்ட துயருக்குள்… எழுதும்போதே எண்ணங்கள் தோற்கின்றன மீளாத் துயரின் வடுக்களாக ஒளித்தெறிப்புகள் மங்கிக் கலங்குகின்றன. எல்லையற்ற கற்பனை வெளிகள் வெறுமைப்பட்டதாய் ஆங்காங்கே சுமைதாங்கிகளின் படிமங்களாய்…. உன்னில், என்னில் ஆழப்படிந்து, உயிர்ப்பின் மூச்சுவரை உட்கார்ந்து விட்டன. வானம்பாடிகள் ஊமையான வரலாறு ஒன்று தோற்றம் கொண்டுள்ளது. பிராணவாயு இல்லாவிடத்தில் …
-
- 3 replies
- 1.1k views
-
-
கட்டுப்பாடில்லா என்கவி கேட்பின், குளிர்நிலா வானில் ஓவியம் கீறும்.
-
- 14 replies
- 2.5k views
-
-
"லிபரேசன் ஒப்பரேசன்"..... வடமராட்சி மக்களால் எனதூர் நிறைந்தது இளவட்டம் நிறையவே வந்தது பு+சாவைத் தப்பிய பெருமூச்சு எங்கும். எங்கள் வளவிற்கும் வந்தார்கள். காய்த்துக் குலுங்கிய மரமுந்திரிகை, அது முற்றத்தில் முன்னிற்கு நின்றது. கனியாதனவும் உண்டார்கள்! ஐயோ தம்பி பழமே கடினம் காயாய் வேணாம் சமைக்கிறோம் பொறுங்கள் முடியாது போனால் கொல்லையில் மாமரம்..… "முந்திரி தானே உடனே எட்டுது" பசியில் தோய்ந்த பதிலே கேட்டோம். ரூபவாஹினிச் செய்தியின் நேரம் வீட்டிற்குள் குறைந்தது நூறு பேர் இருக்கும் பு+சாக்குப் போகும் கப்பலைப் பார்த்து அடையாள அணிவகுப்பு அன்றங்கு நடந்தது! புங்கடிக் குளமும், ஈட்டி எறிஞ்சானும் கொட்டிகை வெளியும், கட்டுவரம்பும் காட்டினேன், …
-
- 6 replies
- 1.4k views
-
-
ஒரு நாளில் நாலில் ஒரு பங்கை நான் ஒவ்வொரு நாளும் கணணிக்கு படையல் செய்கிறேன் பதிலுக்கு கணணி பாடல்களையும் பல்சுவைத்தகவல்களையும் பரந்துபட்ட செய்திகளையும் பரிசளிக்கின்றது. என்னவென்று சொல்ல ஜங்கரனின் அருளை! பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் அளித்த ஒளவையாருக்கு ஆனை வடிவில்! எனக்கு எலி உருவில்.!!
-
- 4 replies
- 1.6k views
-
-
கணமொன்றில் நிகழவிருப்பவை - கவிதை கவிதை:கார்த்தி, படம்: அருண் டைட்டன் யார் முதலில் சொல்வதெனும் காத்திருப்புகள் துயரம் கண்கட்டாத உறியடிபோல் உடைக்கத்தான் வேண்டும் சில மௌனங்களை. மழையினூடான தேநீர் உரையாடலில் கரைக்கவிருப்பது கெட்டிப்பட்டுப்போய் தேங்கிக்கிடக்கும் சில கசப்புகளை. எங்கோ தூரத்தில் யாரும் பார்த்திடாதபடி காட்டுப்பூக்கள் சேகரித்திருப்பது பிரியத்தின் அடைக்கான சில வாசனைகளை. பிம்பங்களற்ற தனிமையில் ரசம் குறையும் நிலைக்கண்ணாடி இன்னும் நினைத்துக்கொண்டிருப்பது நீங்கிடாத சில முகங்களை. சிவப்பின் எரிச்சலோடு பச்சைக்கான காத்திருப்பில் சில்லறை நீட்டி ஊக்கப்படுத்தாவிடினும் கண்ணாடி இறக்கி அள்ளிக்க…
-
- 0 replies
- 877 views
-
-
பனிக்குளிரில் இதம் சேர்க்க ஓர் இழுத்தணைப்பு..! மெல்லத் தொட்டு மேனி தடவி இதழோடு இதழ் வைத்து வெப்பமூட்டி அவள் மூச்சில்.. என் சுகம்..! சுவாசம் எங்கும் அவள் வாசனை தரிக்க உடலோடு ஐக்கியமாகி சொர்க்கத்தின் வாசல் திறந்தாள் எனக்காய் மட்டும்..! நான் தொட்டுத் சுகித்து இன்புற்று பின்.. தூக்கி எறிந்தேன் அடுத்தவன் உறவானாலும் எனக்கென்ன என்ற நினைவில்..! பார்த்திருக்க வீதியால் சென்றவன் எடுத்தணைத்தான் அவளும் ஒட்டி உரசி அவனோடும்.. சீ சீ.. என்ன அசிங்கம் இதுவும் ஒரு வாழ்வா..??! விபச்சாரி.. பட்டம் வழங்கி நான் புனிதனானேன்..! கண்டவன் போனவன் சிரித்தவன் எடுத்தவன் அடுத்தவன் எல்லாம் சுகித்த பின் தூக்கி எ…
-
- 21 replies
- 2.6k views
-
-
கணையாழி ஜனவரி 2016 இதழில் வெளிவந்த எனது “கறுப்பு வெள்ளி” என்ற கவிதையை, யாழ் களத் தோழர்களுடன் தோழர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். கணையாழி ஆசிரியர் குழுவுக்கும், யாழ் களத் தோழர்களுக்கும் நன்றி! கறுப்பு வெள்ளி அந்தப் புதன்கிழமை என் நண்பனின் யாதுமாகிய காதலிக்குத் திருமணம். முகூர்த்த நேரத்தில் மலைக்கோட்டை மீதேறி அந்தத் திருமண மண்டபத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான். அவளுடன் பேசிய அலைபேசியை ஒரு பாறையில் மோதிச் சிதறிடச் செய்தான். இறங்கி வருகையில் ஒவ்வொரு படியிலும் நின்று சங்கல்பம் எடுப்பதுபோல் எதையோ முணுமுணுத்தான். திரும்பி வருகையில் திருச்சி சாரதாஸில் அம்மாவுக்கு நூல்ப…
-
- 0 replies
- 1k views
-
-
-
கண் ஒரு நாள் சொன்னது.. “பாலைவனத்திற்கு அப்பால் ஒரு பனி மூடிய மலை தெரிகிறது பாருங்கள்.. எவ்வளவு அழகாக இருக்கிறது..?” காது கொஞ்ச நேரம் உன்னிப்பாய்க் கேட்டு விட்டுப் பிறகு சொன்னது.. “மலையா?? எந்த மலை?? எனக்கு எதுவும் கேட்கவில்லையே..!!” கையும் பேசியது.. “என்னால் எவ்வளவு முயன்றும் அந்த மலையைத் தொட முடியவில்லையே.. மலை நிச்சயம் இருக்கிறதா..??” மூக்கு உறுதியாகச் சொன்னது.. “மலை எதுவும் கிடையாது.. எனக்கு எந்த வாசனையும் தெரியவில்லை..!!” கண் வேறு பக்கமாய்த் திரும்பிக் கொண்டது.. மற்ற உறுப்புக்களெல்லாம் தங்களுக்குள் பேசிக் கொண்டன.. இறுதியாய் ஒரு முடிவுக்கு வந்தன.. “கண்ணில் ஏதோ கோளாறு ஏற்பட்டு விட்டது..!!” -கலீல் கிப்ரா…
-
- 0 replies
- 664 views
-