Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எங்கள் தெருக்களில் ஓடிய தேர்கள்

    • 3 replies
    • 1.2k views
  2. [size=3]அவன் கொடுத்த ரோஜாவை திருப்பி எறிந்ததால்[/size] [size=3]ரோஜாக்கொத்துக்கள் அவன்காலடியில்[/size] [size=3]கல்லறையில் அவன்.[/size]

  3. நரம்பு நாடிகள் துடித்து இரத்தம் கசிந்து உறவுகளின் உயிர் பிரிந்தாலும் தளர்ந்து விடதே தமிழா... வருவான் புலி வீரன் பொங்கி எழுவான் உமை காக்க.. உம்மை கொன்ற சிங்கள காடையர்களை கொன்று குவிக்க... கண்ணீரை சிந்தாதே தமிழா உன் கண்ணில் மகிழ்ச்சியை உரு வாக்க புலி வீரன் இருப்பன் உன்னுடன் உன் இறுதி முடிவிலும் நம்பிக்கையை இழந்து விடாதே தமிழா.. உம் மக்களையும் நாட்டையும் காப்பாற்ற புலி வீரன் இருப்பான் தமிழிழம் ஒரு நாள் மலரும் சோகம் கொள்ளாதே தமிழா...

  4. நேற்றுத்தான் மொட்டானேன்.. ஆயிரம் கனவுகள் தாங்கி விடிகாலை சூரியத் தழுவலில்.. பூவானேன்..! பனிக் குளியலில் மலர்ந்த என் தளிருடல்.. கூவி வரும் சிங்களத்தான் வீசும் செல்லுக்குக் கருகிய ஈழத்தமிழ் பிஞ்சாய்.. பெப். 14 நாளில் கசங்கிக் கருகிப்போகும். மனித விதி சமைத்த வேளை வரும் பரிசுப் பொருளாக பறித்துப் பரிமாற பாடையேறும் என் உடல்..! சோடி சோடியாய் அலையும் மனிதப் பதர்களின் கரங்கள் கசக்க.. கால்களில் மிதிபடும்..! மனசெல்லாம் கள்ளம் வைத்து நடக்கும் காதல்.. குத்தாட்டம் என் இறுதி யாத்திரையில்…! அது தான் வலண்டைன்ஸ் டே என் சாவுக்கு குறித்த நாள்..!! எங்கோ ஒரு மூலையில…

    • 40 replies
    • 6.6k views
  5. மனிதம் இறந்து கிடந்த போது கண்ணை மூடி இருந்தவர்களுக்கு ஏதோ காய் நகர்த்தல்களில் கணக்குப் பிழைத்து விட்டது கட்டிப் போட வருகிறார்கள் ஜனநாயகவாதிகள் இந்து சமுத்திரத்தில் வந்து குதித்த கம்யூனிச றகனை. பா.உதயன் ✍️

  6. என் அன்னை கலைப்பொழுதினிலே என் கடமை முடிக்க முன்னே சேலைத்தலைப்பை தூக்கிச்சொருகி பின்னே வேலைப்பழுவை தன் தோளில் சுமந்து மூலை முடுக்கெல்லாம் தேய்த்துக்கழுவி பாலைக்காய்ச்சி பதம் பார்த்துச்சமைத்து- பாட சாலைக்குச்செல்லும் தன் சேய்க்கு- வாழை இலையில் வதக்கிய கறியுடன் சாதம் இட்டு சாலைவரை தன் கரம்பற்றி வழியனுப்பி- பின்னே காலை விரைந்து வைத்து கடைவீதி சென்று வந்து மாலை வருமுன்னே மதியமும் உண்ணாது நூலைப்போல் இழைத்து என் முகம் காண ஓலைவேலிக்குள் ஒளிந்திருப்பாள் என் அன்னை.

  7. துள்ளி எழும் நீரலை எட்டி நோக்க அது கண்டு நாணல்கள் நாணிக் குனிய தமிழ் நங்கையர் நளினம் பண்ண வன்னி மண்ணெடுத்து நயந்தது ஓடியது பாலி ஆறு. தங்கத் தலைவன் சேனையது வீரச் சமர் முடித்து இளைபாற தாகம் தீர்க்க நாலு துளி நீர் வழங்கி பெருமை கண்டது அது..! காட்டிடை நகரும் அன்ன நடையில் அழகு கண்டு வன்னியனின் வீரமதில் வரலாறு கண்டு தம்பி சேனையதன் வெற்றியில் சுதந்திர மூச்சிழுத்து வாழ்ந்த ஆறு இன்று.... ஈனர்களின் ஒற்றர்களின் காக்கவன்னியச் சகோதர்களின் காட்டிக் கொடுப்பில் வறண்டே போனது..! தமிழ் விளையாடிய நிலமதில் சிங்களம் அரங்கேறுது. நாரைகளும் நாணல்களும் கூடி விளையாடிய நீரதில் புத்தம் சிலை வைக்குது..! பிறை பங்கு பிரிக்குது..! பாலி ஆறு நாளை வரைபடத…

  8. மிகத்தெளிவாகத்தான் இருக்கிறேன்- ஆனால் குழப்பங்களுக்கு நடுவில் இருக்கிறேன். ஆயிரம் கேள்விகள் என்னை துரத்துகின்றன, ஓடிக்கொண்டிருக்கிறேன் பதில்களை நோக்கி...!!! சில பதில்களும் கேள்விகள் ஆக மாறி குழப்புகின்றன..!!!! எது சரி? எது பிழை? நேற்று பிழைகள் என்று தெரிந்தவை இன்று சரியாகலாம். இன்று சரியானவை என்று சொன்னவை நாளை பிழையாகலாம். சரியான வழிகளில் சென்றால் சில சமயம் பிழையான இடங்கள் வருகிறது. பிழையான பாதைகள் சில சிலநேரம் சரியான இடங்களுக்கு மாற்றுவழிகளாகிறது. ஆரம்பத்தில் அருகில் இருப்பது முடிவில் தொலைந்துபோகிறது. தொலைந்ததை தேடி வந்தால் மீண்டும் "ஆரம்பம்" தெரிகிறது. முடிவை காணமுடியவில்லையெனில் ஆரம்பத்தில் பிழை என்கிறார்கள் ஆனால் ஆரம்பத்தில் பிழையானது…

  9. அ. எலும்பும் தோலுமாக தூரத்தில் முட்கம்பி ஒனறில் அம்மா கொழுவப்பட்டிருந்தாள். இருவரது முகங்களையும் முட்கமபி கிழித்துத்கொண்டிருக்கிறது. மெலிந்த கைகள் முட்கம்பிகளுக்குள புகுந்து கலந்துகொண்டிருக்க நடுவில் இரண்டு முட்கம்பிச் சுருள்கள் ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கப்பட்டிருக்கிறது. அம்மா புன்னகையை இழந்துபோயிருக்கிறாள். தாழ்ந்து மறைந்துவிட்ட கண்களுக்குள் படிந்த புழுதியை கண்ணீர் கரைக்கிறது. காலத்தின் பெருந்துயர் நிரம்பி பிள்ளைகளுக்காக ஏங்கும் அம்மாக்கள் பலர் என் அம்மாவின் பின்னால் வரிசையில் நிற்கின்றனர். எல்லா அழுகைகளும் எல்லா விசாரிப்புக்களும் பரிமாறல்களின் துயரங்களும் ஓலைக்கொட்டிலினுள் நிரம்பிக்கொண்டிருக்கிறது. அம்மாவி…

  10. =====> என்னவள் <===== விண்வரை வியாபித்த அன்பில்ஈடு இணையில்லாதவள்... வசந்தங்களால் வசப்படுத்த முடியா தென்றலவள்... தூரிகைகளில் தீட்ட முடியா தீண்டலவள்... ஏழுஸ்வரங்களில் இயற்ற முடியா இசையானவள்... தமிழின் இனிமையை தன்னகத்தே கொண்டவள்... தன்வேர்களை பூமியில் ஆழமாய் பதிந்தவள்... மனச்சிறையின் எல்லைகளை உடைத்து சிறகடித்து பறப்பவள்... காதலிலும் காதலுக்குள்ளும் உள்ளதையெல்லாம் கற்பிப்பவள்... சிறு பொழுதுகளில் நீராய் நிறைந்திருப்பவள் பெரும் பொழுதுகளில் நினைவாய் மலர்ந்திருப்பவள்... விடைபெறாமல் விடைபெறும் கேள்விகளையே தொடுப்பவள்... பின்னிரவின் மென்தூக்கத்தில் மெல்ல என்பெயரை சொல்பவள்... தீ சூரியனிலும் நீர் சம…

  11. அத்தியடிக் குத்தியரும் ஆனந்த சங்கரியரும் சிங்களக் குகையினில் கூடு கட்டி வாழ்ந்து கொண்டு விட்ட அறிக்கைகள் மறக்கவில்லை. குத்தியன் சொன்னான் கொடுத்திடுவேன் வடக்கும் கிழக்கும் இணைந்த மாநிலம்.. மத்தியில் அங்கும் கூட்டாட்சி என்று. சங்கரியன் சொன்னான்... சம உரிமையோடு தமிழருக்கும் அங்கு ஓர் வாழ்வு இந்திய பாணியில் ஒரு மாநில சுயாட்சி என்று. இவர் தம் மூதாதை இந்தியப் பேயரசின் எச்சம்.. வரதராஜப் பெருமாளும் ஒரிசா ராஜஸ்தான் டெல்லி என்று பதுங்கிக் கிடந்து பார்த்துச் சொன்னான் ராஜீவ் - ஜே ஆர் ஒப்பந்தமே நல்ல தீர்வென்று. சித்துகளின் மன்னன் வவுனியாவின் சிற்றரசன் சித்தார்த்தனும் சொன்னான் 13ம் திருத்தம் அமுலுக்கு வந்தால…

  12. உரிமை குரல் பாடல் ஒலி வடிவில் http://www.alaikal.com/voice.smil

    • 5 replies
    • 2.3k views
  13. Started by இலக்கியன்,

    ஏன் படைத்தாய் இறைவா என்னை ஏன் படைத்தாய் ஏன் வதைத்தாய் இறைவா என்னை ஏன் வதைத்தாய் பாவி ஜீவனாக என்னை ஏன் இறைவா நீ படைத்தாய் பரலோகத்தில் ஏன் என்னை ஏற்கமறுத்தாய் ஏன் இந்த பூலோகத்தில் என்னைப் படைத்தாய் நான் உன்மீது கொண்ட அன்பினாலா என்னை உதைத்தாய் பாவம் அறியாத என்னை ஏன் இந்த சாத்தானின் பூமியில்படைத்தாய்

  14. Started by thamilmaran,

    அன்னதானம் தாய் மண்ணிலே குஞ்சும் குருமானும் குமரியும் கர்பிணியும் பெற்ரவளும் வழர்த்தவனும் உடல் அவயவங்களை இழந்தவர்களும் தள்ளாடும் வயோதிபமும்.......... தினம் தினம் கையிலே வெற்றுத் தட்டேந்தி ஒட்டிய வயிற்றுடன் ஒரு நேர உணவு கேட்டு தெருத்தெருவாய் கால் வலிக்க கை கடுக்க அலைந்து திரியும் போது............... புலத்திலே அன்னதானம் என்ற பெயரில் குப்பைத் தொட்டிகளுக்கும் கறுப்பு பைகளுக்கும் உணவு திணிக்கப்படுகின்றன!!!!!!!! அன்புடன் தமிழ்மாறன்

  15. Started by putthan,

    1)ஆதிமூலத்தில் ஆண்டவனை அடியேன் தொட தீட்டு 2)தியாகராஜார் விழாவில் தித்திக்கும் தமிழ் பாட்டு தீட்டு 3)தெய்வத்தின் பூசையில் தேன் தமிழ் தீட்டு

    • 15 replies
    • 2.3k views
  16. பக்கத்துவீட்டுக்காரன் செத்து புழுத்து மணந்தாலும் எட்டிப்பார்த்து ஏன் எண்டு கேட்கா தேசத்தில் வாழ்ந்தாலும்... இப்போதும் ஈழத்தமிழராய்த்தான் வாழ்கிறோம். எனக்கொண்டெண்டால் பத்துமைலுக்கப்பால் வாழும் என் நண்பன் ஓடி வருவான் அவனுக்கு ஒண்டெண்டால் நான் ஓடிப்போவன் கிழமையில் ஒருநாள் எண்டாலும் அவன் வருவான் இல்லையெண்டால் நான் போவன் பிறந்தநாள் மண்டபத்தில் கதிரை காணாமல் வருது கொத்துரொட்டியும் பாணும் பருப்பும் ரோல்சும் வடையும் உடன் ஆட்டிறைச்சியும் புட்டும் இடியப்பமும் சொதியும் சம்பலும் ஒடியற்கூழும் இன்னும் தமிழ்க்கடைகளில் விற்பனைக்கு இருக்கு கோயில்களும் திருவிழாவும் தேரும் தீர்த்தமும் கும்பாபிசேகங்களும் …

    • 1 reply
    • 904 views
  17. கார்த்திகைப்பொழுதுகளில் ஆவியாகும் கண்ணீர்த்துளிகள்.... மெல்லக்கடந்து போகும் கார்த்திகைப்பொழுதுகளின் துடிப்பில் எழுந்து அடங்கிப்போகின்றன மாவீரர்களின் ஞாபகங்கள் சூரியத்துளிகளில் ஒளிரும் போராளித்தோழர்களின் நினைவுகளில் ஊறிப்போய் பாரமாய்க்கனக்கின்றன இந்த மாலைப்பொழுதுகள் இடிந்து தூர்ந்துபோய்க்கிடக்கும் கல்லறைகளின் நடுவே பூத்திருக்கும் புற்களின் இடையே பறந்து திரியும் வண்ணாத்திப்பூச்சிகளின் சிறகடிப்பில் சிலிர்த்துக்கொள்கின்றன கார்த்திகைமேகங்கள் வரலாற்றை எழுதிவிட்டு நிரையாகப்போய்விட்ட தோழர்தோழியரின் ஞாபகங்களில் தோய்ந்தொழுகும் கண்ணீர்த்துளிகளில் இருந்து ஆவியாகின்றன பல கதைகள் பறவைகளின் சிறகுகளில் இருந்து உதிர்ந்துவிழும் இறகுகள…

  18. காதலின்,,,, வாழ்நாள் மூலதனம்....நினைவுகள் தான் ....!சுகமான நினைவுகள் ...இதயத்தில் தென்றல் ...!சோகமான நினைவுகள் ...இதயத்தின் முற்கள் ...!காதலில் நினைவுகளின் வலியே அதிகம் ....!!! +காதல் நினைவுகளின் வலி என் கற்பனை வலிகள் ( 01)

  19. இக்கவிதையை எழுதியவர் யார் என்பதை யாராவது அறிந்து கூறுங்கள் பார்க்கலாம் ? நட்புடன் வாசுதேவன். ---------------------------------------------------- கவிதை என்பது சுதந்திரம்: கவிதை என்பது சுதந்திரம் அப்போது தெரிந்தது நான் இன்று வரையிலும் எழுதியிருப்பவை கவிதைகள் அல்ல என்பது என் நண்பர்கள் எழுதியிருக்கக்கூடும் கவிதை என்பது கட்டுப்பாட்டின் அட்டகாசம் என் நண்பர்கள் எழுதியிருக்கக்கூடும் கவிதை என்பது பூஜ்ஜியம் உளறல்கள் பேரர்த்தம் கவிதை என்பது ஊடுருவி உருக்குலைப்பது கவிதை என்பது பற்றுக்கோலின் கண்கள் கவிதை என்பது உடலுறவின் உச்சக்கட்டம் நான் எழுதியிருப்பவையல்ல கவிதைகள் என் நண்பர்கள் எழுதியிருக்கக்கூடும். ****

  20. தைத்திருநாள் இல்லமெல்லாம் தளிர்த்திடும் தைப்பொங்கல் இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ்ப்பொங்கல் கூவி அழைத்திடும் சேவல் குதித்தெழுவோம் குளிப்போம் பூவெடுப்போம் புதிதணிவோம் பொங்கலன்று நாங்கள் கோலமிட்டு விளக்கேற்றிக் கும்பிடுவாள் அம்மா பாலெடுத்துப் பொங்கலுக்குப் பானை வைப்பார் அப்பா விரும்பிய மா வாழை பலா விதவிதமாய்க் கனிகள் கரும்பிளனீர் படைத்து மனம் களித்திடுவோம் நாங்கள் வெண்ணிறப்பால் பொங்கி வர வெடி சுடுவோம் நாங்கள் இன்னமுதப் பொங்கலுண்ண இணைந்து நிற்போம் நாங்கள்

    • 1 reply
    • 5.3k views
  21. வான் பரணி -வ.ஐ.ச.ஜெயபாலன் மழையே வா என்கிறது என் தாய் மண். வருணா வருணா என்ற பாடல்களுடன். ஓடைகள் வற்றி வரால் மீன்கள் மூக்குளிக்கும்போது எதிரி தாங்கிகளில் நுழைந்துவிட்டான். ஜாதிய அரக்கனுக்கெதிராக நானும் தோழர்களும் எழுந்த ஊர்களில் காவல் தெய்வங்களாய் எம் பிள்ளைகள், நாம் தரத் தவறிய இரத்ததுக்கு அவர்களிடம் கந்து வட்டியும் கேட்கிறது வரலாறு, கூந்தலுட் பேனாய் யானைகள் ஊருமென் வன்னிக் காட்டு வழிகளில் தூங்கும் மலைப்பாம்புகளாய் கிடக்கும் கோடை ஆறுகள் மீது அதிருது வானம், தட்டி எழுப்புது மின்னல். இனி பறங்கி, பாலி ஆறுகள்கூட விழித்திடும். போர்கள் வென்ற கும்பகர்ணனாய் வாகைகள் பூத்த கனகராயன் ஆறு சோம்பல் முறிப்பதை போருக்கெழுமென் பிள்ளைகள…

    • 11 replies
    • 2.8k views
  22. பட்டாம் பூச்சியின் அழகை ..... ரசித்தேன்......!!! பூத்து குலுங்கும் ... பூவை ரசித்தேன் .... ஆயிரம் கனவுகளை .... இரவில் ரசித்தேன் ..... !!! என்னவளே .... உன்னை ரசிக்கவில்லை சுவாசிக்கிறேன் .... உன்னை நினைப்பதில்லை ... துடிப்பாக வைத்திருக்கிறேன் .....!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை 01 மன்னித்துவிடு .... உன் அனுமதி இல்லாமல் .... உன்னை என் இதயத்தில் .... குடியமர்த்தி விட்டேன் .....!!! எனக்கு உன் அனுமதி .... கேட்டெல்லாம் உன்னோடு .... பேச முடியாது -நான் ... நினைக்கும் போதெல்லாம் .... உன்னோடு பேசவேண்டும் என்பதால் இதயத்துக்குள் .... உன்னோடு வாழ்கிறேன் .....!!! & கவிப…

  23. திலீபனின் நினைவுகளில்...... கவிதை.... இருபத்தொரு வருடங்கள் முன் பாரதத்திடம் நீதி வேண்டி எங்களின் இதமொன்று நல்லூர் கந்தனின் வீதியிலே அமர்கிறது... கத்தியின்றி ரத்தமின்றி ஈழக் கனவொன்றே மனதில் கொண்டு கையிலெடுத்த ஆயுதந்தான் அகிம்சை எனும் அழியா ஆயுதம்.... கனவுகளைச் சுமந்தபடி எங்கள் கண்கள் முன்னே வருகிறான் சாவை அவன் விளையாட்டாய் நினைக்கவில்லை அது வீரனுக்கும் அழகல்ல...... யுத்தம் தொடங்கிறது அவனின் உடற் பசிக்கும் அவன் கொண்ட விடுதலை உணர்வுக்கும்.... பாரதமும் பார்க்கிறது அவனை பாதியாய் கொன்றுவிட்டு... சில நாட்கள் சென்றிடவே அவனின் யுத்தத்தின் முடிவும் முன் நோக்கி வந்திடவே உணர்வ…

  24. மனதுக்குள் பெய்த மழை கண்ணோடு கலந்ததுவும் கருத்தோடு இணைந்ததுவும் என்னோடு கரம்பற்றி இணைந்தேதான் வாழ்ந்ததுவும் உள்ளான அன்போடு உயிராக இருந்ததுவும் தண்ணான நிலவாக தரணியிலே குளிர்ந்ததுவும் விண்ணோடு மேகமதாய் உறவாடி மகிழ்ந்ததுவும் தூரத்துக் காற்றினிலே தூதுசொல்லி அழைத்ததுவும் மெல்இறகாய் எனைஅணைத்து மேனியினை வருடியதும் காயமுற்ற வேளைகளில் கண்ணீரைத் துடைத்ததுவும் நேயமுற்ற நெஞ்சுடனே நிறையவே பேசியதும் வாடிநின்ற நேரமெல்லாம் தேடிஎன்னைத் தேற்றியதும் கண்மணியின் மென்இமையாய் கருத்தோடு காத்ததுவும் மழலையாய் எனைஎண்ணி மருவியே அணைத்ததுவும் நோயுற்ற வேளைகளில் தாயைப்போல் தேற்றியதும் இனிமையாய் பேசி என்னில் இறுதிவரை நிலைத்ததுவும் சீராட்டிப…

  25. காதலின் மறுபக்கம் பாழடைந்த காவலரணில் கைவிடப்பட்ட வெடிகுண்டாக காத்துக் கிடக்கிறது உன்னை குதறிக் கடித்;து உமிழ்ந்து துப்ப ஒரு கூட்டம் மன்மத பாணங்களை ஏவமுடியாமல் மனதுக்குள் பூட்டி மகிழ்ந்தவர்கள் இன்று உனக்கு கிடைத்த மண மாலையும் மலர்ப் பஞ்சணையும் கண்டு புழுங்கித் தவிக்கிறார்கள் சொல்லம்புகளால் வேள்வித்தீ செய்தவர்கள் இருந்தும் சவமாக உலவுகிறார் பூமியிலே பாவம் அவர்கள் பயித்தியக்காரர்கள் என்று அசதியாக இருந்து விடாதே கைக்கெட்டாப் பொருள் என்று தெரிந்து கொண்டதால் வெடிகுண்டையும் ஏவத் தயங்க மாட்டார்கள் கவனமாயிரு.

    • 0 replies
    • 936 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.