Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. n எனக்கு மிகப் பிடித்திருந்தது பேட்டியின் இறுதிப் பகுதி தான்.. முக்கியமாக கடவுள், மதம் சம்பந்தமான கேள்விக்கான பதில் .. பகுதி 1 http://www.youtube.com/watch?v=66WuNg0XplE பகுதி ௨ http://www.youtube.com/watch?v=VDS__mpTxQo பகுதி 3 http://www.youtube.com/watch?v=7hbr-h-tc1w மிச்ச பகுதிகள் இன்னும் தரவேற்றப் படவில்லை போலிருக்கு... வந்தவுடன் இணைக்கின்றேன்

  2. ரஜினி அஜித்தின் அதிகாரவர்க்கம்: சிதைக்கப்பட்ட "சிகை" நடிகர் கதிர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது சிகை. இந்த படம் இன்று வெளிவந்துள்ளது என்பதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் பேட்ட , விஸ்வாசம் என தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைக்கும் இரு பெரும் ஜாம்பவான்கள் மோதிக்கொண்டுள்ள இந்த பொங்கலில் தெரிந்தே தேவையில்லாமல் வந்து மாட்டிக்கொண்டது சிகை. சினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் மக்களிடம் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறுவது உறுதி. அப்படி நல்ல வித்தியாசமான கதையம்சம் கொண்டிருந்தும் அதிகாரவர்க்கத்தால் ஏழை நீதிக்காக வாதாடுவது போன்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது கதிரின் சிகை படத்திற்கு. தியேட்டர் சிக்கல்கள், பட வியாபாரம் என பல விசயங்களை கடந்து படத்தை வாங்கக்கூட…

  3. "களவாணி", 12 ஆண்டுகளை... நிறைவு செய்திருக்கிறது. பொதுவாக... திரைப்பட விமர்சனம் என்பது, கேலிக் கூத்தாக்கும் காலத்தில், விதிவிலக்காக அவ்வளவு நெருக்கம் இந்த படம். ஒரு மதிய காட்சிக்கு.. எந்தவித எதிர்பார்ப்புமின்றி சென்ற எனக்கு, இரண்டரை மணிநேரத்தை அவ்வளவு ரசிக்கவைத்தது சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, போன்ற பெருநகர வாழ்வியலையும்... வட்டார மொழிகளையுமே பார்த்தழுத்த எனக்கு, முதன் முறையாக எங்கள் பகுதி மொழிவழக்கை திரையில் கேட்கையில் அவ்வளவு உற்சாகமாயிருந்தது . ஆயி, அத்தாச்சி, ஐயா, தம்பி... நம்ம ஊரு வயல், சொசைட்டி, நாத்துநட சாமிகாசு, டயர்வண்டி, என... தஞ்சையின் வாழ்வியலோடு வந்த …

  4. மாடியில் இருந்து தவறி விழுந்து சினிமா நடிகர் குட்டி பலி பரமக்குடி : டான்சர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் குட்டி. இவர் பரமக்குடியில் உறவினர் வீட்டு மாடியில் போன் பேசி கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. சிகிச்சை அளிப்பதற்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் பலியானார். சம்பவம் குறித்து பரமக்குடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தினமலர்.கொம்

  5. [size=2] செல்வராகவனை பிரிந்த சோனியா தனியாக சென்னையில் வசித்து வருகிறார். வாழ்க்கையில் நடந்த, பழைய கசப்பான சம்பவங்களை எல்லாம் மறந்துவிட்டு ‘நடிகையின் வாக்குமூலம்’ படத்தில் நடித்தார். [/size] [size=2] ஆனால் படம் ஒடவில்லை.தற்போது 2 படங்களிலும் நடித்து வருபவர் சொந்தக் காலில் நிற்கும் முடிவோடு, மும்முரமாக சினிமாவில் நடிக்க துவங்கி உள்ளார் சோனியா அகர்வால். இதுநாள் வரை, தமிழ்மொழியை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டாவில்லை சோனியா. தற்போது, தமிழ் கற்று கொண்டார். [/size] [size=2] "தற்போது நான் விவேக்குடன் நடிக்கும், "பாலக்காட்டு மாதவன் படம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும். பாலக்காட்டில் இருந்து, தமிழகத்திற்கு வரும் ஒரு இளைஞன், வாழ்க்கையில் போராடி ஜெயிப்பது தான் கதை. இதற்கு முன…

  6. ஒரு முத்தமும் பல கேள்விகளும் .. ‘பம்பாய்’ படத்துக்குப் பின் மறுபடியும் மணிரத்னம், ராஜீவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியுடன் எழுத ‘அறம்’ புகழ் எழுத்தாளர் ஜெயமோகன், நடிக்க கார்த்திக்கின் மகன், ராதாவின் மகள், மறுபடியும் அரவிந்த்சாமி, முதல்முறையாக மணிரத்னம் படத்தில் அர்ஜுன் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் பல விளம்பர அம்சங்களுடன் வரவிருக்கும் ‘கடல்’ படத்தின் முதல் டிரெய்லர் பார்த்தேன். பார்க்கச் சொன்னவர் திரையுலகில் பணி புரியும் ஒரு நண்பர்தான். படத்தில் நடிக்கும் ராதாவின் மகள் துளசிக்கு 15 வயதுதான் ஆகிறது. அந்த சிறுமியை இப்படி முத்தமிடும் காட்சியில் பயன்படுத்தியிருப்பது சரிதானா என்ற கேள்வியை அவர் ‘பேஸ்புக்’ சமூக இணைய தளத்தில் எழுப்பியதாகவும் யாருமே …

  7. 90 எம்எல்: திரை விமர்சனம்! பாலுறவு உள்ளிட்ட சிக்கல்களைப் பெண்களின் பார்வையில் பேசும் இந்தப் படம் எப்படி உள்ளது? பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஓவியா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் 90 எம்.எல். அனிதா உதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கும்படியாக ஏ சான்றிதழுடன் வெளியாகியுள்ளது. நிவிஸ் என்டர்டெய்ன்மென்ட் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. அபார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் நான்கு தோழிகளுடன் புதிதாக வந்த ரீட்டா நட்பாகிறார். அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக வலம் வரும் ரீட்டாவை மற்ற பெண்களுக்குப் பிடித்துப் போகிறது. அவளைப் போல் தம்மால் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. ரீட்டாவின் குணநலன்கள் அவர்களையும் மாற்ற, துணிச்சலுடன் சுதந…

  8. காதல் என்பது விடுவித்தல். தன் துணையின் தேர்வை நோக்கி அவரைச் செல்ல அனுமதித்தல். தீர்க்க முடியாத பிரச்சினைகளைச் சுமந்து பாரமாக வாழ்வதிலிருந்து மீள்தல் என்கிறது ‘காதல் - தி கோர்’. ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் மூலம் சம்பிரதாய சடங்குகளால் சிறகொடித்து கிச்சனுக்குள் சிதைக்கப்படும் பெண்களின் பெருந்துயரை விமர்சித்த இயக்குநர் ஜியோ பேபி, இம்முறை காதலுக்குள் இருக்கும் வரையறைகளை புதிய பரிமாணங்களில் அணுகும் படைப்பை கொண்டு வந்திருக்கிறார். கேரளத்தின் டீகோய் கிராமத்தில், நடுத்தர வயது தம்பதிகளான மேத்யூ தேவஸி (மம்முட்டி) ஓமணா (ஜோதிகா) மற்றும் மேத்யூவின் தந்தையும் வசித்து வருகின்றனர். இத்தம்பதிகளின் ஒரே மகளான ஃபெமி (அனகா மாயா ரவி) கல்லூரி படிப்பை விடுதியில் தங்கிப் படித்து வ…

  9. 1:49 AM IST பதிவு செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 25,2015, 1:49 AM IST மும்பை, நடிகை அசின் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை மணக்கிறார். இவர்கள் திருமணம் ஜனவரி 23–ந் தேதி நடக்கிறது. திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு அசின் விலகுகிறார். தமிழ் படங்கள் ஜெயம் ரவி ஜோடியாக எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமானவர் அசின். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்தார். விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்றோருடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அசின் நடித்த ‘கஜினி’ படம் வசூலில் சாதனை படைத்தது. இந்த படம் அமீர்…

    • 4 replies
    • 668 views
  10. சமூக வலைத்தளங்களில் தனது அழகான குரலை வெளிப்படுத்தியிருந்த ஜோதி என்ற கண் தெரியாத இளம் பாடகிக்கு ஜி.வி.பிரகாஷ் தனது இசையில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். ஜோதி, பேஸ்புக் இணையதளத்தில் தனது குரலில் பாடல்களை பாடி வெளியிட்டுள்ளார். இவரின் குரலை கேட்ட அனைவரு பாராட்டிவந்தனர். இதைப் பார்த்து வியந்துபோன ஜி.வி.பிரகாஷ் அடுத்ததாக தான் நடிக்கும் அடங்காதே படத்தில் ஒரு பாடல் பாட வாய்ப்பு வழங்கியுள்ளார். இந்த பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்று முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பாடல் படத்தில் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது ஜி.வி.பிரகாஷ் அவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர் http://www.manithan.com/news/20170225125298?ref=tamilwin-…

  11. தமிழ்நாட்டில் அயலார்க்கு இனி என்ன வேலை? தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை பேசும் பல பகுதிகள் ஒன்றாக இணைக்கப் பட்டு சென்னை மாகாணம் என்ற பெயரில் வெள்ளையர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக மேற்கண்ட நான்கு மொழி களிலும் திரைப்படங்கள் சென்னையில் உள்ள திரைப் பட தயாரிப்பு நிலையங்களில் உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக நான்கு மொழி பேசும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைப்படத் தொழிலில் உள்ளவர்கள் சென்னை யில் வாழவேண்டி இருந்தது. எனவே தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம் போன்றவை உருவாக்கப் பட்டன. 1956ஆம் ஆண்டு மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டுவிட்ட பிறகு தெலுங்கு பேசும் நடிகர்கள் ஆந்திராவுக்குச் செ…

  12. தெற்காசியாவின் மைக்கேல் ஜாக்‌ஷன் எனப்புகழப்படும் பிரபுதேவா, ஸ்ரீதேவியுடன், கடல் கடந்து நடத்தப்படும் இந்தியப்படங்களின் விருதுவிழாவில் ஜோடி போட்டு ஆடியதுதான் டாக் ஆஃப் த டவுனாக இருந்தது! தற்போது மறுபடியும் சம்பள விவகாரத்தில் செய்தியில் அடிபட ஆரம்பித்திருக்கிறார் பிரபுதேவா! ஒரு பாட்டுக்கு ஆடி, நடன நடிகராக இருந்து பிறகு டான்ஸ் மாஸ்டராக உருவெடுத்த பிரபுதேவா, ஒரு கட்டத்தில் கதாநாயகனாகவும் உயர்ந்தார். தனது ஹீரோ மார்க்கெட் டவுனானபோது திடுதிப்பென்று இயக்குனர் அஸ்திரத்தை கையிலெடுத்தார். ஆரம்பத்தில் அவரது இயக்கத்தின் மீது இங்குள்ள ஹீரோக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால், தெலுங்கில் அவர் அதிரடி ஹிட் கொடுத்ததையடுத்து தமிழில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஓரிரு படங்களை…

  13. பெரும்பாலான கலைஞர்கள் உணர்ச்சிப்பூர்வமானவர்கள். நடிகர் சங்கத்தில் நுழைய மாட்டேன் என்று சபதம் செய்த சிவாஜி முதல் பெரிய ஹீரோக்களுடன் மோதும் சேட்டன் ‘திலகன்’ வரை எல்லோருமே எதிர்வினையாற்றுவதில் வல்லவர்கள் தான். வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளும் நடிகர்களும் இதில் அடக்கம் தான். அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்தே உணர்ச்சிப் பூர்வமான நடிகராக திகழ்ந்தவர் வடிவேலு. காளி மார்க் போன்ற உள்ளூர் குளிர்பான நிறுவனங்கள், பெப்சி/கோக்ககோலா போன்ற அந்நிய நிறுவனங்களால் ஒழித்துக்கட்டப்பட்டதை மதுரை வட்டார மக்கள் அறிவர். மதுரை மண்ணில் இருந்து வந்தவர் என்பதாலோ என்னவோ சில நிமிட விளம்பரளுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் தர அவர்கள் முவந்தும், நடிக்க மறுத்தவர் வடிவேலு. இம்சை அரசன் 23-ம் புலிகேசியில் அக்…

  14. கோல்டன் குளோப் விருதுகள் அறிவிப்பு! திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான 75-வது கோல்டன் குளோப் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. த்ரீ பில்ட்போர்ட்ஸ் அவுட்சைட் எபிங் மிசோரி, லேடி பேர்ட் ஆகிய படங்கள் சிறந்த படங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த இயக்குநருக்கான விருது தி ஷேப் ஆப் வாட்டர் படத்துக்காக டெல் டோரோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக, டார்கஸ்ட் ஹவர் படத்தில் நடித்த கேரி ஓல்ட்மேனும் சிறந்த நடிகையாக த்ரீ பில்ட்போர்ட்ஸ் அவுட்சைட் எபிங் மிசோரி படத்தில் நடித்த ஃபிரான்செஸ் மெக்டோர்மண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தி ஹேண்ட்மெயிட்ஸ் டேல் சிறந்த …

  15. எம்.ஜி.ஆர். சிலைகள் உடைப்பு: நடிகர் சத்யராஜ் கண்டனம் [வியாழக்கிழமை, 31 ஓகஸ்ட் 2006, 05:35 ஈழம்] [புதினம் நிருபர்] யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் எம்.ஜி.ஆர். சிலைகள் உடைக்கப்பட்டமைக்கு நடிகர் சத்யராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: இலங்கையில் எம்.ஜி.ஆர் சிலை உடைக்கப்பட்டதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை தமிழர்கள் மீது பற்றும், பாசமும் கொண்டிருந்தவர், எம்.ஜி.ஆர். அவர் நடித்த எங்க வீட்டு பிள்ளை படம் திரைக்கு வந்தபோது, அவரை இலங்கைக்கு வரவழைத்து, உற்சாக வரவேற்பு கொடுத்தது இலங்கை அரசாங்கம். மிகப்பெரிய வள்ளலாக வாழ்ந்து காட்டியவர், அவர். மனிதாபிமானம் மிகுந்தவர். அவர் சில…

    • 4 replies
    • 1.6k views
  16. நயன்தாராவுடன் அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன் நானும் ரௌடிதான் இயக்குனர் விக்னேஷ் சிவன், தன்னுடைய பிறந்த நாளை நயன்தாராவுடன் அமெரிக்காவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. இப்போது 3 மொழி படங்களிலும் ‘பிசி’யாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் நயன்தாராவும், சிம்புவும் காதலிப்பதாக கூறப்பட்டது. பின்னர் பிரபுதேவாவுடன் நெருங்கி பழகினார். அவரை திருமணம் செய்து கொள்வதற்காக நயன்தாரா மதம் மாறியதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்…

    • 4 replies
    • 515 views
  17. படுத்துக் கிடக்கும் மார்க்கெட்டை, தூக்கி நிறுத்த விரும்பும் நயன்தாரா... சென்னை: டோலிவுட்டில் மீண்டும் முன்னணி நடிகையாக வேண்டும் என்று விரும்புகிறாராம் நயன்தாரா. கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. தெலுங்கு திரை உலகிலும் ஒரு காலத்தில் நயன்தாரா முன்னணி நடிகையாக இருந்தார். ஆனால் தற்போது டோலிவுட்டில் அவரது மார்க்கெட் நிலைமை சரியில்லை. தெலுங்கு படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க மாட்டேன் என்கிறது. இந்நிலையில் அவர் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கிராந்தி மாதவ் இயக்கும் இந்த படம் காதலை அடிப்படையாகக் கொண்டது. இந்த படம் தெலுங்கில் படுத்துக் கிடக்கும் தனது மார்க்கெட் தூக்கி நிறுத்தும் என்று நம்புகிறார் நயன்தாரா. இந்த படம் கைகொடுத்தால் கோல…

    • 4 replies
    • 1.3k views
  18. என் கால்கள் மட்டுமே.... இந்தியாவில், 15 பொருட்களை விற்கிறது : பிரியங்கா சோப்ரா. மும்பை: தனது கால்கள் மட்டுமே இந்தியாவில் 12 முதல் 15 பொருட்களை விற்பனை செய்வதாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்டார். பே வாட்ச் என்ற ஹாலிவுட் படத்தில் வில்லியாக நடிக்கிறார். மேலும் குவான்டிகோ என்ற ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார். ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்து வரும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... நான் பதின்வயதில் இருக்கும்போது பையன்கள் போன்று தான் இருந்தேன். என் உடம்பில் தழும்புகள் இருந்தன. அடிக்கடி விழுந்து எழுந்திரிப்பேன். இதனால் காலில் அடிபடும். கால்க…

  19. தமிழில் புதிய படம் ஒன்றில் நடிகர் சிவ கார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார் ஹன்சிகா மோத்வானி. தமிழ் திரையுலகில் சிவ கார்த்திகேயனுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது இவர் தமிழில் அதிகளவு படங்களை பண்ணாவிட்டாலும் இவர் கொடுத்த அனைத்துபடங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். இதனால் தான் என்னமோ, தமிழ் ரசிகர்களால் சின்ன குஷ்புவென கொண்டாடும் முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது சிவா கார்த்திகேயனுக்கு தமிழில் சிங்கம் 2 ,தீயா வேலை செய்யணும் குமாரு . இந்த படங்களத் தொடர்ந்து ஒரு சில ஸ்கிரிப்ட்களை கேட்டு வந்த ஹன்சிகாவுக்கு ஏ.ஆர்.முருகதாஸுடன் பல ஆண்டு காலம் அசோஸியேட் டைரக்டராக பணி புரிந்த திருக்குமரன் இயக்கும் படத்தில், முருகதாஸின் ஸ்க்…

  20. ஆகாத வேலையில் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. நடிகர் அப்பாசுக்கு இது தெரியவில்லை. ஆர்வக் கோளாறில் இடது கையை உடைத்துக் கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் அப்பாஸை பார்ப்பது அரிது. தெலுங்கு பக்கம் அடிக்கடி இவர் தலையை காண முடிகிறது. 'ருத்ரமணி' என்றொரு தெலுங்கு படம், அப்பாஸ் ஹீரோ. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. சண்டைக்காட்சியொன்றில் அப்பாஸ் வில்லன் நடிகர் சத்யபிரகாஷுடன் மோத வேண்டும். ஸ்டண்ட் மாஸ்டர் பிரகாஷ் அப்பாஸ் பல்டி அடிக்க வேண்டிய ஒரு காட்சியில் டூப்பை பயன்படுத்தலாம் என்றிருக்கிறார். அப்பாஸ் அதனை மறுத்துள்ளார். படத்தின் இயக்குனர் கலீல் கூறியதையும் அப்பாஸ் கேட்கவில்லை. நானே பல்டி அடிக்கிறேன் என அடம்பிடித்திருக்கிறார். விளைவு ரொம்ப மோசம். அப்பாஸ் அட…

    • 4 replies
    • 1.5k views
  21. சென்னையில் கத்தி திரைப்படம் வெளியாக இருந்த தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சென்னையில் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படம் வெளியாக இருந்த தியேட்டர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல்நடத்தினர். இதையடுத்து தியேட்டருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராஜபக்சேவின் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறி 'கத்தி' திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனத்தை எதிர்த்து வரும் தமிழ் அமைப்புகள் ''கத்தி' படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என போராடி வருகின்றன. மேலும், தங்களின் எதிர்ப்பை எழுத்துப் பூர்வமாக திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தீபாவளிக்கு வெளியாக இருக்கும் "…

  22. பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி ஒரு காலத்தில் வெற்றிக் கூட்டணி. ஒரு கட்டத்தில் வைரமுத்துவுக்கும், இளையராஜாவுக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு பிரிந்தார்கள். அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்வது கூட கிடையாது. வைரமுத்துவின் மகன்கள் திருமணத்துக்கு அவர் இளையராஜா வீட்டுக்கே சென்று பத்திரிக்கை கொடுத்தும் இளையராஜா வரவில்லை. அவர் மனைவியே பத்திரிகை வாங்கினார். அவரே திருமணத்துக்கு வந்தார். இளையராஜாவின் மனைவி மறைந்தபோது வைரமுத்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போதும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இருவரும் ஒரே விழாவில்கூட இதுவரை கலந்து கொண்டதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கி பேசியும், எழுதியும் வருகிறார்கள். தற்போது இளையராஜாவும், வைரமு…

  23. இன்றைய வாழ்வு தரும் பார்வை, சுதந்திர உணர்வு ஆகியவற்றால் உறவின் வரையறைகளை மாற்றத் துடிக்கிறது இளைஞர்களின் மனம். இதைப் பற்றிப் பேசும் படமான ‘ஓ காதல் கண்மணி’ கல்யாணம் என்னும் கால்கட்டு இல்லாமலேயே காதல் வளர்ந்து நிலைக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆதி (துல்கர் சல்மான்), தாரா (நித்யா மேனன்) இருவரும் தனித்தன்மையை யும் சுதந்திர உணர்வையும் இழக்க விரும்பாத காதலர்கள். முதிய ஜோடியான கணபதி (பிரகாஷ் ராஜ்), பவானி (லீலா சாம்சன்) வீட்டில் தங்கியிருக்கும் துல்கர், அங்கேயே நித்யாவையும் கூட்டிவந்துவிடுகிறார். மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள லீலாவைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறார் பிரகாஷ் ராஜ். இளம் ஜோடியின் வாழ்வில் ஏற்படும் சலனங்களில் இவர்களும் பங்கெடுத்துக்கொள்கிறார்கள். …

  24. பிரபல்யமான "கொக்கு சைவக் கொக்கு" பாட்டைப் பாடிய பாட்டியார்.. தேனி குஞ்சரம்மா அவர்கள் மாரடைப்பால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 75. -அவருக்கு எமது கண்ணீரஞ்சலிகள். ------------------ நாட்டுப்புறப் பாடகி தேனி குஞ்சரம்மா மரணம் ென்னை: பிரபல நடிகையும், நாட்டுப்புறப் பாடகியுமான தேனி குஞ்சரம்மா மாரடைப்பால் மரணம் அடைந்தார். பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தில் பாடகியாகவும், நடிகையாகவும் அறிமுகமானவர் குஞ்சரம்மா. அதன் பின்னர் ஏராளமான படங்களில் நடித்தும், பாடியும் இருக்கிறார். வெண்கலக் குரலில் இவர் பாடியுள்ள பல பாடல்கள் பிரபலமானவை. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு குஞ்சரம்மாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அன…

    • 4 replies
    • 2k views
  25. ஆறுமுகம் வெளியானதுக்கு அடுத்த நாள் பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தார் பரத். இதற்காகவே காத்திருந்தது போல் எடக்கு மடக்கான கேள்விகளால் அவரை துளைத்துவிட்டனர் நிருபர்கள். கேள்விகளில் முக்கியமானது அவரது அமெ‌ரிக்க பயணம் பற்றியது. ‌ரிலாக்ஸ் செய்வது என்றால் ‌ரிட்டர்ன் டிக்கெட்டுடன் அமெ‌ரிக்கா பறந்து விடுகிறார் பரத். அங்கே அவருக்கு காதலி இருப்பதால்தான் அடிக்கடி ஒபாமாவின் தேசத்துக்கு ஓடிப் போகிறார் என இன்டஸ்ட்‌ரி முழுக்க வதந்தி. இதையே ஒரு கேள்வியாக முன் வைத்தார் நிருபர் ஒருவர். அதுவரை கூலாக பதில் சொல்லி வந்தவ‌ரிடம் ஒரு பதற்றம். அய்யோ, அப்படியெல்லாம் இல்லீங்க என்றவர், அமெ‌ரிக்கா எனக்குப் பிடிச்ச இடம். அதுதான் அங்க போனேனே தவிர, காதலியெல்லாம் கிடையாது சாமி என்றார் சத்தியம் ச…

    • 4 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.