வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
அசாத்திய டைரக்டர்... அசால்ட் நடிகர்! டபுள் சவாரியில் அசத்திய மணிவண்ணன்! இயக்குநர், நடிகர் மணிவண்ணன் தொழில் கற்றுக்கொண்டதை செம்மையாகச் செய்வதின் மூலமே உணர்த்தமுடியும். அப்படி உணர்த்துவதால், இரண்டு விஷயங்கள். ஒன்று... தொழிலை யாரிடம் கற்றுக்கொண்டோமோ அவர்களுக்கு நல்லபெயர் வாங்கித் தருவது. அடுத்தது... இவன் தொழில்காரன் என்று எல்லோரிடமும் பெயரெடுப்பது! அப்படி குருவுக்குப் பெயர் வாங்கிக்கொடுத்தவர்... தொழில்காரன் என்று பேரெடுத்தவர்... இயக்குநர் மணிவண்ணன். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றினார். அவரை விட்டு வெளியே வந்ததும் தானே படத்தை இயக்கினார். அவ…
-
- 2 replies
- 2k views
-
-
பேசாமல் விருது நாயகன் என்ற பட்டத்தை கமலுக்கு கொடுக்கலாம். வருடத்திற்கு மூன்று விருதாவது இவர் பாக்கெட்டுக்கு வந்து விடுகிறது. பதினைந்து முறைக்குமேல் பிலிம்பேர் விருது. மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது. கணக்கில் இல்லாத அளவுக்கு தமிழக அரசு விருதுகள். இவை தவிர டாக்டர் பட்டம் வேறு. அகில இந்திய வர்த்தக சங்கமான எப்.ஐ.சி.சி.ஐ. கமலுக்கு 'வாழும் வரலாறு' என்ற விருதை அறிவித்துள்ளது. இந்தியாவின் மெகா தொழிலதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்கும் இச்சங்கம் இவ்விருதினை இம்மாதம் 28-ந் தேதி மும்பையில் நடைபெறும் விழாவில் கமலுக்கு அளிக்கிறது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள எப்.ஐ.சி.சி.ஐ., கமல் தனது வாழ்நாளில் ஒரு வரலாறாக திகழ்ந்து வருவதாக புகழ…
-
- 2 replies
- 1.1k views
-
-
லால் சலாம் Review: ரஜினியின் ‘ஆளுமை’யில் மதநல்லிணக்கம் பேசும் படம் எப்படி? ட்ரெய்லர் வெளியானபோதே, ‘விளையாட்டில் மதத்தை கலந்துருக்கீங்க’ என்ற வசனத்தின் மூலம் சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்ற படம். கூடவே ரஜினியின் சிறப்புத் தோற்றம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கம் என்ற எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம், அந்த எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்ததா என்று பார்க்கலாம். இஸ்லாமியர்கள் பெரும்பானமையாக வாழும் முரார்பாத் என்ற கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் அண்ணன், தம்பியாக பழகி வருகின்றனர். அந்தக் கிராமத்தில் இருந்து இளம் வயதில் மும்பைக்கு சென்று அங்கு பெரிய தொழிலதிபராக வலம் வரும் மொய்…
-
- 2 replies
- 631 views
-
-
54வது தேசிய திரைப்பட விருதுகள் - ஒரு பார்வை! வெள்ளி, 13 ஜூன் 2008( 14:21 IST ) 54வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விமர்சனங்களுக்கு இடம்தராத விருதுகள் இந்த பூமியில் இல்லை. ''எனக்கு சிறந்த நடிகருக்கான ஜுரி அவார்டு தந்திருக்கிறார்கள். இதே ஜுரிகள்தானே இன்னொருவரையும் சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தார்கள்'' என்று விருதுகள் வழங்கப்படும் அடிப்படையையே கேள்விக்கு உட்படுத்தியிருக்கிற
-
- 2 replies
- 965 views
-
-
நடிகையாகிறார் வீரப்பன் மனைவி வீரப்பன் திரைப்படத்தில் முத்துலட்சுமி : ராஜ்குமார் வேடத்தில் நாகேஸ்வரராவ் விஜயகுமார் வேடத்தில் அர்ஜூன் பெங்களூரு: "வீரப்பன்' திரைப்படத்தில் முத்துலட்சுமி, ராஜ்குமார் வேடத்தில் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ், போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடத்தில் அர்ஜூன் நடிக்கின்றனர். "வீரப்பன்' வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ரமேஷ் திரைப்படமாக இயக்க முடிவு செய்தார். இதற்கு தடை விதிக்க கோரி முத்துலட்சுமி நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றத்திலிருந்து முத்துலட்சுமி வழக்கை வாபஸ் பெற்றதால், இந்த பிரச்னை தற்போது சுமூக நிலையை அடைந்தது. எனவே படப்பிடிப்பை தொடங்க முழு மூச்சில் இறங்கியுள்ளார் இயக்குனர் ரமேஷ். ராஜிவ் காந்தி கொலையில் தொடர்புடைய சிவராசன…
-
- 2 replies
- 1.9k views
-
-
சினிமாவின் வயது நூறையும் தாண்டிவிட்டது! இன்று உலகின் பொழுதுபோக்கு சாதனங்களில் முதல் இடத்தில் இருப்பதும் சினிமாதான்! இந்தச் சினிமாதான் இன்று தமிழ் கலாச்சாரங்களை அழிக்கும் புதிய நோயாக உருமாறியிருக்கின்றது!. இப்பொழுது உருவாகின்ற சினிமாக்கள் எல்லாம் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு தமிழர் சமுதாயத்தை அழித்தே தீருவோம் என சபதமெடுத்து செயல்படுவதைப்போலவே வெளிவருகின்றன!. இந்தக் குற்றச்சாட்டு எங்கோ ஒரு மூலையில் இருந்து எழுந்தது அல்ல? தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வின்மீது அக்கறையுள்ளவர்களால் நாலா பக்கங்களில் இருந்தும் குவிந்தவண்ணமே இருக்கின்றது. முன்னர் வந்த திரைப்படங்களில் இப்படியான கலாச்சாரச் சீரழிவுகள் இருக்கவே இல்லை. இப்பொழுதுதான் மேலை நாட்டு நாகரீகங்களைப் பின்பற்றி ஆடை…
-
- 2 replies
- 1.5k views
-
-
ரஜினி - லதா தம்பதியின் இளைய மகள் சௌந்தர்யா, 2010ல், தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை, திருமணம் செய்தார். இந்நிலையில், நான்கு மாதங்களாக, அஸ்வின் - சௌந்தர்யா இடையிலான உறவில் கசப்பு ஏற்பட்டு, பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை, சேத்துப்பட்டில் தனியாக வசிக்கும் சௌந்தர்யா, விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக, சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இது தொடர்பாக, ரஜினி குடும்பத்தினர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை; அதேநேரத்தில், மறுக்கவும் இல்லை. http://www.tamilmirror.lk/181997/ரஜ-ன-ய-ன-இள-ய-மகள-வ-வ-கரத-த-
-
- 2 replies
- 764 views
-
-
பாலா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெய்பாலா தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம்Â சுவடுகள்ஜெய்பாலாவே இதில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். ஒளிப்பதிவும் செய்கிறார். இவர் ஹாலிவுட் திரைப்பட கல்லூரியில் பயின்றவர். நாயகியாக மோனிகா நடிக்கிறார். உன்னதமான காதல் உறவுகளையும் குடும்ப உறவுகளையும் யதார்த்தமான முறையில் சித்தரிக்கும் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது. இதில் சரண்யா, ராஜேஷ், கே.ஆர்.விஜயா, மோகன் சர்மா ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்கிறார். ஐம்பது இசைக் கலைஞர்களுடன் 1960 மற்றும் 70-களில் நடந்தது போல் பாடல்கள் லைவ்வாக பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் 'சுவடுகள்' படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந…
-
- 2 replies
- 537 views
-
-
ஆடு ஜீவிதம்.. 14 வருட காத்திருப்புக்குப் பின் வெளியாகும் படம்..! March 11, 2024, 1:18 pm IST பிருத்விராஜ் நடிப்பில் பிளெஸ்ஸி இயக்கியிருக்கும், ஆடு ஜீவிதம் (தி கோட் லைஃப்) திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவராக பிருத்விராஜ் நடித்திருக்கும் காட்சிகள் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. ஒளிப்பதிவு, கதைக்களம், எடிட்டிங், இசை, நடிப்பு, இயக்கம் என அனைத்தும் ட்ரெய்லரில் உலகத்தரத்தில் அமைந்துள்ளது. 2008 ல் பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த நஜீப் முகமது சவுதி அரேபியாவுக்கு ஆடு மேய்க்கும் வேலைக்குச் சென்று அங்கு மாட்டிக் கொள்வதை அடிப்படையாக வைத்து ஆடு ஜீவ…
-
-
- 2 replies
- 816 views
-
-
சிறந்த பாப் இசை ஆல்பங்களுக்காக ஆண்டு தோறும் 'பிரிட்டிஷ் போனோகிராபிக் இண்டஸ்ட்ரி' எனும் அமைப்பு 'பிரிட் விருது' வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று லண்டனில் உள்ள 'ஓ2 அரேனா' எனும் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பாப் பாடகி மடோனா கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார். 2001 மற்றும் 2006ம் ஆண்டுகளில் சிறந்த பெண் பாப் இசைக் கலைஞர் பிரிவில் மடோனா வென்றிருக்கிறார். கடைசியாக 1995ம் ஆண்டில் இதே பிரிட் விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சி நடத்தினார். அதன்பின் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் பாப் பாடகி மடோனா கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் மடோனா மேடையில் நடனமாடும்போது திடீரென சரிந்து விழுந்தார், …
-
- 2 replies
- 736 views
-
-
டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன், தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணை திருமணம் செய்கிறார். இதற்காகத்தான் குறளரசன் சமீபத்தில் தானும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய காரணம் என்பது தெரிய வந்துள்ளது. டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன், இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சிம்பு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கினார். 2016-ல் இந்தப் படம் ரிலீஸானது. அதன்பிறகு வேறெந்த படத்துக்கும் இசையமைக்காத குறளரசன், தற்போது ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், குறளரசனுக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணையே திருமணம் செய்யவுள்ளார் குறளரசன். அதற்காகத்தான் கடந்த பிப்ரவரி …
-
- 2 replies
- 906 views
-
-
சிவகுமாரின் 75-வது பிறந்த நாள் சிறப்பு ஓவியக் கண்காட்சி தந்தை சிவகுமாரின் 75வது பிறந்த நாளை, சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். 1965ம் ஆண்டு 'காக்கும் கரங்கள்' மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சிவகுமார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகனாக நடித்தார். வரும் அக்டோபர் 27ம் தேதி தனது 75வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் சிவகுமார். இதனை சிவகுமாருடைய மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் 'மார்க்கண்டேயனுக்கு வைரவிழா' என்ற தலைப்பில் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். சிவகுமார் வரைந்துள்ள பல்வேறு ஓவியங்களில் இருந்து 140 ஒ…
-
- 2 replies
- 1.8k views
-
-
சினிமா... என்னைக் கைவிடாத அம்மா: பிறந்தநாளில் சிவகுமார் நெகிழ்ச்சி பிறந்த நாள் விழாவில் சிவகுமார் பேசும் போது... சினிமா என் அம்மா. அவள் என்னைக் கைவிடமாட்டாள் என பிறந்த நாள் விழாவில் சிவகுமார் பேசினார். நடிகர் சிவகுமாரின் 75வது பிறந்த நாள் விழா மற்றும் 'Golden Moments of Sivakumar in Tamil Cinema' புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, தனஞ்ஜெயன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். மேலும், சிவகுமாரைப் பற்றி 'தி இந்து' மாலதி ரங்கராஜன், தேவிமணி, சுதாங்கன், மோகன்ராமன், பயில்வான் ரங்கநாதன் மற்றும் ராம்ஜி உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் தங்களுடைய பார்வைகளைப் பகிர்ந்து க…
-
- 2 replies
- 1.5k views
-
-
வலுவில்லாத ஒரு திரைக்கதையின் மூலம் எந்தவொரு அதிஉயர் கன்சப்டையும் சிதைத்துவிட முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு உதாரணம். இருந்தாலும் படத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட Concept நவீன யுகத்தின் அதி உன்னத கண்டுபிடிப்பாக போற்றப்படும் இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இவற்றின் பாரதூரம் பற்றிய ஒரு சீரியஸ் அலசலை படத்தின் இயக்குனர் Wally Pfister மேற்கொண்டிருக்கிறார். இவர் கிறிஸ்டோபர் நோலனின் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். ஒளிப்பதிவுக்காக ஆஸ்கார் விருதையும் வென்றிருக்கிறார். நோலனின் பாதிப்பு படத்தில் நிறைய இடங்களில் தெரிவது தவிர்க்க முடியாததாகிறது. திரைப்படத்தில் பல இடங்களில் நிறைய விஞ்ஞான புனைவுத் திரைப்படங்களை நினைவூட்டுவதை தவிர்க்க முடியவில…
-
- 2 replies
- 1.6k views
-
-
அமலாபாலும், நாட்டுக் கோழி பிரியாணியும்... நாட்டுக்கோழி பிரியாணியை ஃபுல் கட்டு கட்டும் அமலாபால் இனி பிரியாணியை கண்ணால் கூட பார்க்க முடியாதாம். காரணம் அவர் சைவத்திற்கு மாறிவிட்டாரம். வேண்டுதல் நிறைவேற்ற சாமிக்கு கோழியை பலியிடுவது பாவம் என்ற கருவுடன் ‘சைவம்‘ படத்தை இயக்கினார் விஜய். கிருஸ்துமஸ் தினத்தன்று விஜய் டிவியில் இந்தப் படம் ஒளிபரப்பானது. அசைவம் சாப்பிடும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கடைசியில் சைவத்திற்கு மாறிவிடுவார்கள். அதேபோல இயக்குநர் விஜய்யின் மனைவி அமலாபாலும் கிருஸ்துமஸ்க்கு பின்னர் சைவத்திற்கு மாறிவிட்டாராம். சைவம். அமலாபாலுக்கு, கோழி பிரியாணி என்றால் உயிர். அம்மாவின் சமையலை ரசித்து ருசித்து சாப்பிடுவாராம். ஆனால் அவரை சைவத்துக்கு மாறு…
-
- 2 replies
- 762 views
-
-
பொதுவாக தமிழ் திரையுலகில் ஹீரோயினுக்கு திருமணம் ஆகிவிட்டால் சினிமாவில் இருந்து விலகிவிடுவார். அல்லது டிவி சீரியல், அக்கா, அண்ணி வேடங்களில் நடிகக் போய்விடுவார்கள். ஆனால் ஹாலிவுட்டில் திருமணம் ஆனாலும் ஹீரோயின்களாக வலம் வருவார்கள். இந்த கலாச்சாரம் பாலிவுட்டில் வந்துவிட்டது. கரீனாகபூர், ஐஸ்வர்யாராய் போன்றோர் திருமணம் ஆனபின்பும் ஹீரோயின்களாக அதுவும் கிளாமராக நடிக்க தயங்கியதில்லை. தற்போது இந்த கலாச்சாரத்தை சினேகா கோலிவுட்டில் முதன்முதலாக ஆரம்பித்து வைத்துள்ளார். திருமணத்திற்கு முன்பே கவர்ச்சி வேடங்களில் அக்கறை காட்டாத சினேகா, தற்போது படு கவர்ச்சியாக நடிக்க முன்வந்துள்ளார். இவரது முடிவு பிரசன்னாவிற்கு அதிர்ச்சியாக இருந்தாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு மிகவும் …
-
- 2 replies
- 1k views
-
-
ஆம்.. இன்றளவும் தமிழ் திரை உலகின் முதல் கவர்ச்சி கதாநாயகி என்ற அடைமொழிக்கு சொந்தக்காரரிவார்… இத்தனைக்கும் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தந்தை கதிரேச சுப்பிரமணியன் கண்டியில் நீதியரசராக இருந்தவர்… தனது மகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்த்து சீனியர் பி.ஏ., பட்டம் பெற செய்தவர்… ஆனாலும் நடிப்பில் உள்ள மோகத்தால் தந்தையின் அனுமதியை போராடிப் பெற்று சினிமாவில் நடிக்க தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டவர். எல்லிஸ் ஆர்.டங்கன் தனது ‘சதி அகல்யா’(1937) படத்தில் கதாநாயகியாக தவமணிதேவியை அறிமுகம் செய்தார்… உடுத்தியிருக்கும் பாவாடை நிலத்தைக் கூட்ட, மண் பார்த்துப் பெண்கள் நடந்த காலம் அது. அந்தக் கால கட்டத்திலேயே கால் சட்டையுடன் துணிச்சலாக நடிக்க வந்த பெண்மணி இவர். அழகா…
-
- 2 replies
- 832 views
-
-
பட மூலாதாரம்,MOVIE TRAIN MOTION PICTURES/GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள '800' என்ற திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகைச் சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் இந்தப் படத்தில் பணியாற்றி உள்ளனர். இந்தப் படத்தின் பெரும்பகுதி இலங்கையில் படமாக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று வெளியாகியுள்ளது. படத்தின் கதை சுருக்கம் பட மூலாதாரம்,MOVIE TRAIN MOTION PICTURES இந்தியாவிலிருந்து, இலங்கையில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய பலரும்…
-
- 2 replies
- 293 views
- 1 follower
-
-
ஸ்டார் டைரி 1 - கமல்ஹாசன் | துல்லிய 'அப்டேட்' நாயகன் "உன் நண்பன் யார் என்று சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்" என்று சொல்வது உண்டு. இது, தமிழ்த் திரையுலக நட்சத்திரங்களுக்கு மட்டும் பொருந்தாது. நண்பர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்களிடம் பெயரளவுக்கு மட்டுமே பழகும் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் பெரும்பாலானோர் தங்களது மேனேஜர், பி.ஆர்.ஓ. ஓட்டுநர், ஒப்பனைக் கலைஞர் முதலானோரிடம்தான் நெருக்கமாக இருக்கிறார்கள். நம்பிக்கையின் அடிப்படையில், இவர்களில் யாரோ ஒருவர்தான் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் டைரியாகவும் மாறுகிறார்கள். இத்தகைய உள்வட்டாரங்கள் மூலமாக அதிகாரபூர்வமாக கிடைத்தத் தகவல்களின் சுவாரசிய தொகுப்புதான் இந்த 'ஸ்டார் டைரி' தொடர். நிழலில் மட்டுமல்ல... நிஜத…
-
- 2 replies
- 1.9k views
-
-
மகாபாரதத்தில், கர்ணன் துரியோதனனின் நட்பின் உயர்வை விளக்கி 'தளபதி' திரைப்படத்தை எடுத்த மணிரத்னம், இலங்கையரசன் ராவணனின் உயர்வை விளக்கும் வண்ணம் இயக்கியிருக்கும் திரைப்படம்தான் 'ராவணன்'. வரலாற்றில் நடந்த ஒரு சில சம்பவங்களோடு ஏராளமான கட்டுக்கதைகளையும், பத்துத்தலை ராவணன் போன்ற பகுத்தறிவுக்குப் புறம்பான கற்பனைகளையும் கொண்டு எழுதப்பட்ட ஒரு Fiction தான் ராமாயணம். அப்படியானால் வரலாற்றில் நடந்த அந்த சம்பவங்கள் என்ன? இந்து மதத்தின் புராண இதிகாசங்கள் அனைத்தும் ஆரியரின் பண்பாட்டுப் படை எடுப்புக்களின் தொகுப்புக்கள்தாம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினை ஆய்வு செய்த ராகுல் செங்கிருத்யாயன், ஜவகர்லால் நேரு போன்றவர்கள், ஆரியர்களுக்கும் தமிழர் மற்றும் சில பழங்குடியினருக்கும் …
-
- 2 replies
- 6.3k views
-
-
கருத்து சுதந்திரம் இருக்கு என்பதற்காய்...! ஒரு நடிகனை இப்படியும் விமர்சிக்கலாமா?
-
- 2 replies
- 580 views
-
-
-
சென்னை : பிரமாண்டமாக உருவாக்கியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு கமல் 100 கோடி ரூபாய் செலவழித்துள்ளார். இதற்கு அவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என எண்ணிப்பார்க்க வேண்டும். இதனை நினைக்கும்போது மனம் கலங்குகிறது. கமலை தமக்கு 40 ஆண்டுக காலமாக தெரியும் என்றும் தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு கொண்டு சென்றவர் கமல் என்றும், அவர் யாருடைய மனதையும் புண்படுத்தும்படி நடந்து கொள்ள மாட்டார் என்றும், அவரது திரைப்படத்தை வெளியிட அமர்ந்து பேசி தீர்க்க வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். விஸ்வரூபம் திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாவதாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திரைப்படத்திற்கு மாநில அரசு தடை விதித்தது. கேரளாவில் …
-
- 2 replies
- 466 views
-
-
பொன்னியின் செல்வன்': மணிரத்னம் வசமான வந்தியத்தேவன் எம்.ஜி.ஆருக்கு சாத்தியப்படாதது ஏன்? ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MADRAS TALKIES மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது. ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் தமிழ் சினிமா வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. இந்த கதை இதற்கு முன்பு, நாடக வடிவம், அனிமேஷன் என பல வடிவங்களிலும் வந்திருந்தாலும் சினிமா வடிவில் இப்போதுதான் சாத்தியமாகி இருக்கிறது. எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் என பலரும் சினிமாவாக சாத்தியப்படுத்த நினைத்…
-
- 2 replies
- 467 views
- 1 follower
-
-
சல்மான்கானோடு இலங்கை சென்ற அசினுக்கு எழுந்த எதிர்ப்பைப் பார்த்து கோலிவுட் மீது செம கடுப்பில் இருக்கிறதாம் பாலிவுட். ‘தென்னிந்திய நடிகைகளோடு இனி நடிக்கமாட்டோம்’ என்று சல்மான்கானை வைத்து மற்ற ஹீரோக்களிடம் ஒரு சஸ்பென்ஸ் பிரசாரமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.இதன் முதல் கட்டமாக பிரியதர்ஷன்தன் இந்திப்படத்தில் சல்மான்கானையும், பிரியாமணியையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார். இது தெரிந்து சல்மான் -‘‘பிரியாவை நீக்கிவிட்டு வேறு யாரையாவது போடுங்கள்.அதுவும் பாலிவுட் ஹீரோயினாகத்தான் இருக்க வேண்டும்’’ என்று கண்டிஷன் போட்டு விட்டாராம். இது பற்றி பிரியாமணியிடம் பேசினோம். கோடம்பாக்கத்தின் மேல் அப்படியென்ன கோபம், உங்களை அதிக படங்களில் பார்க்க முடியவில்லையே? ‘‘நல்ல ர…
-
- 2 replies
- 1.3k views
-