ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142699 topics in this forum
-
வெள்ளவத்தையில் தமிழ் யுவதிகளிடம் சேஷ்டைபுரியும் நிர்வாண ஆசாமிகள் கொழும்பு வெள்ளவத்தைப் பொலிஸ் பிரிவில் வாகனங்களில் வரும் கும்பலொன்று வீதிகளில் தனியாக செல்லும் பெண்களிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. காலிவீதி தவிர்ந்த இப் பொலிஸ் பிரிவிலுள்ள குறுக்குத்தெருக்கள், மற்றும் ஒழுங்கைகளில் தாம் வந்த வாகனத்தை நிறுத்தும் இக் கும்பல் வாகனக் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு பெண்கள் தனியாக வரும் போது தமது உடைகளை களைந்து நிர்வாணமாக இருக்கின்றனர் அத்துடன் ஆபாசமாக சைகைகளையும் காண்பிக்கின்றனர். நேற்று திங்கட்கிழமை மாலை வெள்ளவத்தை பசல்ஸ் லேனில் இவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த பஜுரோ ஜீப் வண்டியிலிருந்த அக் கும்பல் அவ்வழியால் தமிழ் யுவதிகள் சென்ற…
-
- 20 replies
- 4.7k views
-
-
வைகோ போட்ட வழக்கும்... புலிகளால் கிளம்பும் பீதியும்! - இரா.தமிழ்க்கனல் 'தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்தது சரிதான்!’ என நவம்பர் 12-ம் தேதி, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்கிரமஜித் சென் தீர்ப்பாயம் உறுதிசெய்தது. அதை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். கடந்த 14-ம் தேதி, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய அமர்வு முன்பு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தானே வாதிட்ட வைகோ, "சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 9-வது பிரிவின் கீழ், சிவில் நடைமுறை சட்டப்படி என்னையும் விசாரணையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தேன். ஆனால், சிவில்…
-
- 20 replies
- 2.2k views
-
-
மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் பணி தொடரும் அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சு அலுவலகத்தில் இன்று (13) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அமைச்சர் என்கின்ற வகையில் நாடளாவிய ரீதியில் சுமார் 15 மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற கடற்றொழிலாளர்கள் தொடர்பான விவகாரங்களில…
-
- 20 replies
- 1.8k views
-
-
வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை... முதலீட்டிற்கு பயன்படுத்த, அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் அமுலானது! வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை முதலீட்டிற்கு பயன்படுத்த அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் உறுதிப்படுத்தலுடன் இந்த சட்டமூலம் இன்று(வியாழக்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை முதலீட்டிற்கு பயன்படுத்த அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் திருத்தங்களுடன் கடந்த 7 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவாக 134 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1239562
-
- 20 replies
- 1.4k views
- 1 follower
-
-
எங்களின் வீடுகளையும், கோயில்களையும் அழித்து இராணுவம் விகாரைகளைக் கட்டி வைத்திருக்கிறது. எங்களின் காணிகளைப் பார்க்க விடாமல் இடையிலேயே மறித்து முள்கம்பி வேலி அமைக்கின்றனர். முகாம்கள் இருக்கிற வீடுகள் மட்டுமே இருக்கின்றன. மற்ற வீடுகள் இருந்த இடம்கூட தெரியவில்லை என்று வயாவிளான் பகுதியை இன்று பார்வையிட்டுத் திரும்பிய மக்கள் தெரிவித்தனர். உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் ஆயிரத்து 100 ஏக்கர் காணி விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வலி. கிழக்குப் பிரதேசமான வளலாயில் 233 ஏக்கர் காணி கடந்த வாரம் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று 197 ஏக்கர் காணி வயாவிளான் கிழக்குப் பகுதியில் விடுவிக்கப்பட்டது. முன்னதாக இப்பகுதியில் 223 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என அறிவ…
-
- 20 replies
- 1.7k views
-
-
வடக்கு மாகாண சபையில் இன்று பரபரப்பு அமர்வு வடக்கு அமைச்சர்கள் இருவர் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்த விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பான சிறப்பு அமர்வு பெரும் பரபரப்பான – எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று காலை 11.30 மணிக்கு, கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் நடை பெறவுள்ளது. கொழும்பிலிருந்து இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த அமர்வில் கலந்து கொண்டு சிறப்புக் கூற்று விடுத்து உரையாற்றவுள்ளார். வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை, ஜூன் 6 ஆம் திகதி சபையில் சமர்ப்…
-
- 20 replies
- 2.1k views
-
-
ஊடகஅறிக்கை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகியவறின் அடிப்படையிலான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். 2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு மேற்படி கொள்கைகளுக்காக உழைப்போம் என்ற உறுதிப்பாட்டுடன் த.தே.கூ இனால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தினை ஏற்றுக் கொண்டு தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகளின் மூலம் ‘22’ பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். கூட்டமைப்பின் அரசியல் வேலைத்திட்டங்களை இலகுபடுத்தும் நோக்கில் கிளிநொச்சியில் இடம் பெற்ற கலந்துரையாடல்கள் மூலம் வேலைத்திட்டங்களின் அடிப்படை…
-
- 20 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பில் தமிழர் காணிகளை அபகரிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குப்பட்ட மட்.தளவாய் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவர்கள், பெற்றோர் இன்று (7) காலை 9.30 மணியில் இருந்து 11 மணிவரை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். குறித்த பாடசாலைக்கு முன் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்தத்தை ஆரம்பித்து பாடசாலை மைதானம் வரை சென்றனர். குறித்த பாடசாலையிலுள்ள விளையாட்டு மைதானத்திற்குரிய காணியின் ஒரு பகுதியினை வேற்றினத்தார் அத்துமீறி சுற்றுவேலி அமைத்தமையை கண்டித்து மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், ஏறாவூர் தளவாய் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியோர் இணைந்து ஆர்ப்பாட்டத…
-
- 20 replies
- 1.6k views
-
-
சரத் இப்பிடி சொல்கிறார் என்பதல்ல செய்தி. ஆனால் இப்பிடிச் சொல்லித்தான் சிங்கள மக்களிடம் ஓட்டுக் கேட்கவேண்டுமெனில் இப்படி சொன்னால்த்தான் சிங்கள மக்கள் ஓட்டுப் போடுவார்கள் எனில் என்ன மயிருக்கு இன ஐக்கியமும் மண்ணாங்கட்டியும் --------------- தென் இலங்கை மக்களிடையில் சிங்கள மொழியில் பிரசுரிக்கப்பட்ட கை ஏட்டின் தமிழாக்கம் இரண்டாம் போர்.... என் அன்பார்ந்த இலங்கை மக்களே, முப்பது வருட காலமாக இலங்கையில் நிலைத்திருந்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து மக்களுக்கு சுதந்திரமாக, மகிழ்ச்சியாக வாழ்வதற்காக இருக்கும் அதிர்ஷ்டம் இன்னும் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் எமது நாட்டில் சர்வாதிகாரம் பெற்ற ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட எல்லையில்லாத அதிகாரத்தை அவர் தவறான செயலில் ஈடுபடுவதனா…
-
- 20 replies
- 2.9k views
-
-
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள் ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று(21.11.2025) ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. புலம்பெயர் நாடுகளிலும்.. 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளியான லெப். சங்கர் முதல் வித்தாக வீரமரணமடைந்தார். அந்த நாளையே மாவீரர் நாளாக 1989 ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. …
-
- 20 replies
- 654 views
- 1 follower
-
-
தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை December 26, 2024 11:42 am இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை கதிரையை முன்னாள் அவைத்தலைவரிற்கு வழங்கப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தரப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றது. இதன்மூலம் கட்சியை சீரழிப்பதற்கு சதிவலை பின்னப்பட்டுள்ளதென்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதானது துரதிஸ்டவசமானது. தமிழரசுக் கட்சிக்கு எதிராக நான்கு வழக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையான நோக்கமானது கட்சியை செயற்பாடுகளில் இர…
-
-
- 20 replies
- 1.4k views
- 1 follower
-
-
பலாலி மற்றும் திருகோணமலை விமான நிலையங்களிலிருந்து இந்தியாவிற்கு நேரடி விமானசேவை நடத்தப்படவேண்டும் என வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்படடுள்ளது. வடமாகாண சபையின் 6 ஆவது அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற போதே இந்த பிரேரணை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை மற்றொரு உறுப்பினரான கந்தையா சர்வேஸ்வரன் வழிமொழிய தீர்மானம் ஏகமனதாக சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. 'வடக்கிலுள்ள பலாலி கிழக்கிலுள்ள திருமலை விமான நிலையங்களிலிருந்து இந்தியாவிற்கு நேரடி விமானசேவை நடத்தப்படவேண்டும். காங்கேசன்துறை துறைமுகம் வர்த்தகத்துறைமுகமாக மாற்றப்படவேண்டும். அத்துடன், தலைமன்னார் வரையில் ரயில்சேவை ஆரம்பிக்கப்பட்ட…
-
- 20 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை பெரிய மகாமேரு என நாம் நினைத்தோம் ஆனால் அவர்கள் ஒரு புஸ்வாணம் என்பதை நாம் இப்போது உணர்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றிற்கிடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இவ்வாண்டிறுதிக்குள் நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படல் வேண்டும் என்பதே எனது பேரவாவாகும் என கண்டி மல்வத்த பௌத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே சிறீ சுமங்கள தேரர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று காலை கண்டி சிறீ தலதா மாளிகைக்கு அல்லி மலர்களை கொண்டு சென்று வழிபட்டார். ரணில் விக்கிரமசிங்கவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ருக்…
-
- 20 replies
- 3.3k views
-
-
புலம்பெயர் முன்னணித் தமிழ் தொழிலதிபருக்கு புலனாய்வுத் துறையால் நெருக்கடி! முதலீட்டாளர்கள் அச்சம் புதிய இணைப்பு சர்வதேச தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருப்பது முதலீட்டாளர்களிடையே அச்சத்தை தோற்றுவிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில், இலங்கை அரசாங்கம் புலம்பெயர்ந்து இருக்கும் முதலீட்டாளர்களை இலங்கைக்கு வருமாறும் முதலீடு செய்யுமாறும் அழைப்பு விடுத்திருக்கின்றது. இப்படியான சூழலில், புலம்பெயர் நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து முதலீடு செய்யும் தொழிலதிபர்களையும் அவர்களது ஊழியர்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கும் வகையில் புலனாய்வாளர்களின் செயற்பாடு இருப்பதன் கா…
-
- 20 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஈபிடிபி கொலைக் கும்பல் வவுனியாவில் செய்த வெறியாட்டத்தில் ஒரு இளைஞரை (வவுனியா நகரில் வர்த்தம் செய்து வந்தவர்) காட்டுமிராண்டித்தனமாக அடித்துக் கொலை செய்துள்ளது. தேர்தல் பிரச்சார நிலைப்பாடு மற்றும் ஈபிடிபி தொடர்பாக எழுந்த மாற்றுக் கருத்து காரணமாக இந்தக் கொடூரக் கொலை நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்ட நபர் தங்கராசா கிருஷ்ணகோபால் (வயது 24) என்று இனங்காணப்பட்டுள்ளார். பேச்சுக்கு ஜனநாயகம் மாற்றுக் கருத்து அரசியல் என்று சொல்லி கொண்டு சிங்கள எதிரிகளோடு சேர்ந்து நின்று தமிழினத்தை கருவறுத்து வரும் இந்த கும்பல்கள் இவ்வளவு காலமும் புலிகளை வைத்து போலி அரசியல் செய்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். செய்தி ஆதாரமும் மேலதிக செய்திகளும்.. Young man beaten to death in Vavuni…
-
- 20 replies
- 2.1k views
-
-
வேற்று நாட்டவர்கள் மதமாற்ற எண்ணத்துடன் செயற்பட்டால் விரட்டியடிக்கப்படுவார்கள்- மறவன்புலவு சச்சிதானந்தம் எச்சரிக்கை March 25, 2023 சைவ சமயத்தவர்களை மதமாற்றம் செய்யும் நோக்குடன் கிறிஸ்தவர்களோ, முகமதியர்களோ அல்லது வேறு சமயத்தவர்களோ நடவடிக்கைகள் மேற்கொண்டால் விரட்டியடிக்கப்படுவார்கள் என மறவன்புலவு சச்சிதானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று (25) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் அவர் குறிப்பிடுகையில் , இராவணன் ஆண்ட சிவ பூமியில் பத்தாயிரம் ஆண்டுகளிற்கு மேலாக சைவ சமயத்தினை பின்பற்றுகின்ற மக்களின் மரபுகளை அழித்து இல்லாதொழிப்பதற்காக கடந்த 400 ஆண்டுகளாக வேறு நாடுகளிலிருந்து வருகை தருகின்றன…
-
- 20 replies
- 1.1k views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலுடன் ஜனாதிபதி ஆலோசனை சபையை சந்திக்கத் தயாராகிறார் சுமந்திரன் ஆர்.ராம் நாடாளவிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பட்டிலுடன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான ஆலோசனை சபையை சந்திப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தயாராகி வருகின்றார். கடந்த 25ஆம் திகதி 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 13ஆவது பிரிவுக்கு ஏற்ப, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆலோசனை சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹ…
-
- 20 replies
- 964 views
-
-
எம்.டி.வி, எம்.பி.சி கலையகங்கள் மீது தாக்குதல் , பாரிய அளவில் சொத்துக்கள் சேதம் தெபானம பன்னிப்பிட்டியவிலுள்ள எம்.டி.வி, எம்.பி.சி கலையக கட்டிடங்களின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குலில் கலையக கட்டிடங்கள் மற்றும் சொத்துக்களிற்கு பாரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு ஊழியர்களை அச்சுறுத்தி 20பேர் அடங்கிய குழு ரி-56 ரக துப்பாக்கி மற்றும் வாள்களுடன் அத்துமீறி கலையக கட்டிடத்தின் கண்ணாடிகளை உடைத்து உள்நுழைந்துள்ளது.கலையகத்தில
-
- 20 replies
- 2.1k views
-
-
மாஸ்டர் திரைப்படத்தால் யாழ் திரையரங்கு முடக்கம்! by News Deskabout 5 hours ago379Views சுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ்ப்பாணம் நகர திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள திரையரங்கே இன்று (13) நண்பகல் முதல் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டது. நாட்டின் திரையரங்குகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதித்து இயங்க அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது. எனினும் யாழ்ப்பாணம் நகரில் மூடப்பட்ட குறித்த திரையரங்கு முழுமையான இருக்கைகளுக்கு பார்வையாளர்களை மாஸ்டர் திரைப்படத்தை பார்வையிட அனுமதித்து ரிக்கெட்டுக்களை விற்பனை செய்திருந்தமை சுகாதாரத் த…
-
- 20 replies
- 2.4k views
- 1 follower
-
-
இலங்கையின் கொலைக்களங்களை பார்த்த என் மகன், இலங்கையர் என்றுகூற வெட்கம் என்றார்: சந்திரிகா பிரித்தானிய தொலைக்காட்சியில் இலங்கையின் கொலைக்களங்கள் எனும் ஆவணப்படத்தைப் பார்த்த 28 வயதான தனது மகன், தான் ஓர் இலங்கையர் எனவும் பௌத்தர் எனவும் கூறுவதற்கு வெட்கப்படுவதாக தெரிவித்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நிகழ்த்திய, முன்னாள் நீதியரசர் கே.பாலகிட்ணர் நினைவுச் சொற்பொழிவின்போதே அவர் இவ்வாறு கூறினார். இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் 'பொருளாதார அபிவிருத்தி, உள்ளடக்கிய சமூகங்கள் மற்றும் சமாதானம்' என்ற தலைப்பில் திருமதி சந்திரிகா குமாரதுங்க பிரதான உரையாற்றினார். …
-
- 20 replies
- 1.7k views
-
-
மல்லாகத்தில் இன்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார். இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர் குழு மாணவனின் வீட்டுக்குள் நுழைந்தே அவரை வெட்டிக் காயப்படுத்தியது. இந்த சம்பவத்தில் மல்லாகம் மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் க.பிரசன்னா (வயது 19) என்பவரே தலையில் பலத்த காயமடைந்தார். இதேவேளை மல்லாகம், சுன்னாகம் பகுதியில் தொடர்ச்சியாக தினமும் இளைஞர் குழுக்கள் மோதல்களில் ஈடுபடுகின்றன. இதனால் இப்பகுதியில் அச்ச நிலை காணப்படுகின்றது.தவிர மோதல்களைக் கட்டுப்படுத்துவதில் சுன்னாகம் பொலிஸார் போதுமனாளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் இதனாலேயே இவ்வாறான மோதல்கள் அதிகரிக்கின்றன என்றும் மக்கள் தெரிவித்தனர் http://www.…
-
- 20 replies
- 1.3k views
-
-
யாழில் மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் சுட்டுப் படுகொலை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் சகாதேவன் நிலக்சன் (வயது 24) இன்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் தொடரூந்து வீதியில் உள்ள சகாதேவன் நிலக்சனின் வீட்டுக்குச் சென்ற துணை இராணுவக்குழுவினர் இன்று புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் அவரை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடக வள நிலையத்தின் மாணவரான சகாதேவன் நிலக்சன், யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரும் ஆவார். யாழில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்பட்டிருந்த நேரத்தில் இப்படுகொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. -புதினம்
-
- 20 replies
- 4.7k views
-
-
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த பிக்கு ஒருவர் தீ குளித்துள்ளார். குறித்த பிக்கு மிருகங்களை கொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனக்குத் தானே பெற்றோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார். வெசாக் தினத்தையொட்டி கண்டி தலதா மாளிகையில் விசேட மத நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் குறித்த பிக்கு தீ குளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் குறித்த பிக்குவை பிடித்து தீயை அணைத்து கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் கண்டி வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=4773
-
- 20 replies
- 2k views
-
-
இராணுவம் மரக்கறிகளை விற்பனை செய்வதால் விவசாயிகள் பாதிப்படைவது தொடர்பில், விரைவில் நல்லதொரு தீர்வை வழங்குவதாக யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட விவசாய சம்மேளனங்களின் தலைவர்களை நேற்றுமுன்தினம் புதன்கிழமை யாழ்.இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா, பலாலி கட்டளைத் தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது விவசாயிகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் தெரிவித்தனர். இராணுவத்தினர் தமது விவசாய உற்பத்திப் பொருள்களைச் சந்தைகளில் கொண்டு வந்து விற்பனை செய்வதால், தமக்குப் பெரும் நட்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தளபதியிடம் சுட்டிக்காட்டினர். இதற்குப் பதிலளித்த இராணுவத் தளபதி, இராணுவத்துக்குத் தேவையான மரக்கறிகளில் 20 ச…
-
- 20 replies
- 3k views
-
-
2019ம் ஆண்டு மே மாதம் இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை செயற்படுமென எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் வௌிப்படுத்தப்பட்டதாகவும் நாட்டின் தலைமை அது தொடர்பில் அறிவித்திருந்ததாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையின் அமைச்ச…
-
- 20 replies
- 2.6k views
- 1 follower
-