ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143499 topics in this forum
-
ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் தாயகத் தமிழ் மக்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் இணைந்து தமிழீழத்தில் சிங்கள அரசால் நடத்தப்பட்டது இனப்படுகொலையே என்பதை ஒரே குரலாக எடுத்துரைக்க முற்பட்டவேளையில், கனடாவில் வசித்துவரும் திரு. கரி ஆனந்தசங்கரி அவர்கள் தலைமையிலான ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டும் இனப்படுகொலை எனும் பதத்தினைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஏனையோருக்கு பாரியளவில் அழுத்தம் கொடுத்திருந்தனர். இதன்போது ஐ.நா.வில் உரையாற்ற வந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. அனந்தி சசிதரன் அவர்களும் பல அழுத்தங்களை திரு. கரி ஆனந்தசங்கரியினால் எதிர்நோக்கியிருந்தார். இதுபற்றி அண்மையில் கனடா சி.ரி.ஆர். வானொலியில் திருமதி. அனந்தி சசிதரன் அவ…
-
- 33 replies
- 2.9k views
-
-
http://www.tamilnaatham.com/pdf_files/soos..._2006_10_24.pdf
-
- 1 reply
- 2.9k views
-
-
தென்மராட்சி 52வது படைத் தலைமையகம் மீது ஆட்டிலறித் தாக்குதல். யாழ் தென்மராட்சியின் மந்திகைப் பகுதியில் அமைந்துள்ள சிங்களப் படைகளின் 52வது படைப்பிரிவின் தலைமையகம் மீது செவ்வாய்க்கிழமை நண்பகல் விடுதலைப் புலிகள் ஆட்டிலறிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளால் ஏவப்பட்ட எறிகணைகள் இரண்டு படைத்தளத்திற்கு உள்ளேயும் ஒன்று படைத்தளத்திற்கு வெளியேயும் வீழ்ந்து வெடித்துள்ளன. இதனைத் தொடர்ந்து குறித்த படைத்தளத்திலிருந்து மருத்துவ காவு வண்டிகள் பலாலிப் பகுதி நோக்கிச் சென்றதாக பொது மக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான இந்தப் படைபிரிவு தலைமையகம் சில மாதங்களிற்கு முன்னர் வரணிக்கு மாற்ற…
-
- 17 replies
- 2.9k views
-
-
ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து இலங்கையில் தமிழர்கள் துன்பத்தில் மூழ்கியுள்ள நிலையில் தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். ரஜினி ரசிகர் மன்ற புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள சுதாகர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரஜினிகாந்தின் பிறந்தநாள் அடுத்த மாதம் 12ம் தேதி வருகிறது. இந்த ஆண்டு பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். ஆனால் இலங்கை தமிழர்கள் துன்பப்படும் வேளையில் பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்க்கும்படி ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இதுபற்றிய முறையான அறிக்கை அவரே நேரடியாக வழங்க இருக்கிறார். இதனை ரசிகர்கள் புரிந…
-
- 9 replies
- 2.9k views
-
-
இலங்கையின் வடக்கு கற்பிட்டி கடற்பரப்பில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண் திமிங்கலங்கள் கடந்த சனிக்கிழமை காணப்பட்டதாக இலங்கையின் கரையோர பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கரையிலிருந்து சற்று தூரத்தில் இந்த திமிங்கலங்கள் காணப்பட்டது முன்னொரு போதும் நடக்காத காரியம் என அந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார். கடலில் நீர்மட்டத்திற்கு கீழ் உள்ள பாறைகளிலிருந்து இவை மேல் கிளம்பி வந்திருக்கலாம் என்றும், கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம், மற்றும் மன்னார் பகுதி கடலில் மேற்கொள்ளப்படும் எண்ணெய் ஆராய்ச்சி ஆகியவற்றால் இவை கரையை நோக்கி வந்திருக்கலாம் என கரையோர பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திமிங்கலம் 67அடி நீளமாக வளரக்கூடியது என்றும், இவை ஆண் இனத்தை சேர்ந்தவை என…
-
- 13 replies
- 2.9k views
-
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது July 21, 2025 10:17 pm விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் ராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியாகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து டி- 56 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் குறித்த நபர் துப்பாக்கியொன்றைத் தம் வசம் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர் சிவப்பு நிறக் கார் ஒன்றில் வந்தவர்கள் அவரிடம் துப்பாக்கியைக் கையளித்து தங்களிடம் இருந்து தகவல் வரும் வரை ஹோட்டல் அறையில் ரமேஷ…
-
-
- 48 replies
- 2.9k views
- 3 followers
-
-
இந்திய கம்னிசியக் கட்சியின் கோரிக்கைக்கு அமைய விடுதலைப்புலிகள் தமது நல்லெண்ணத்தைக் காட்ட விடுத்த போர் நிறுத்தத்துக்கு தாம் தயார் என்ற அறிவிப்பை எள்ளி நகையாடியுள்ள சிறீலங்காச் சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசு தாம் போர் நிறுத்தத்துக்கு தயார் இல்லை என்று அறிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு.. வன்முறைகளைக் கைவிட்டுவிட்டு சரணடைந்தால் மட்டுமே போர் நிறுத்தத்துக்கு அரசு உடன்படும் என்று ஆண்டாண்டு காலமாகச் சொல்லி வருவது போல மீண்டும் வேதாளம் முருங்கை மரமேறிய கதையாக சிறீலங்கா கூறி இருக்கிறது. Govt. dismisses LTTE call for truce By Sunil Jayasiri The government yesterday dismissed the latest LTTE claims for a ceasefire, saying that “p…
-
- 7 replies
- 2.9k views
- 1 follower
-
-
இந்தியாவின் தற்போதைய நிலைகுறித்து விடுதலைப் புலிகள் பகிரங்கமாக அறிய விரும்புகின்றனரா? யுத்தநிறுத்தம் தொடர்பில் விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு குறித்து சர்ச்சைகள் எழுப்பப்பட்டுவரும் நிலையில் இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர்மேனனை சந்திப்பதற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் டெல்லி பயணமாகின்றனர். சிவ்சங்கர் மேனனைச் சந்திப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இழுபறிகள் காணப்படுகின்ற போதிலும் தற்போதைய யுத்த நெருக்குவாரங்கள் குறித்து இந்தியா என்ன கூற விரும்புகிறது என்பதை விடுதலைப் புலிகள் தரப்பு அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் உயர்மட்டத் தலை…
-
- 9 replies
- 2.9k views
-
-
கொழும்பு: கிளிநொச்சியைப் பிடிக்க முயலும் ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கடும் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம் கடுமையாக முயன்று வருகிறது. விமானப்படையின் துணையுடன் கடந்த பல நாட்களாக ராணுவம் போராடி வருகிறது. முதலில் கிளிநொச்சி நகருக்கு அருகில் வந்து விட்டோம் என்று கூறினர். ஆனால் இதுவரை அப்படி நடந்ததாக தெரியவில்லை. விடுதலைப் புலிகள் அதிரடியான போர்த் திட்டங்களை வகுத்து இலங்கை ராணுவத்தினரை தற்போது நிலை குலைய வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 முனைகளில் ராணுவம் தாக்குதலை தொடுத்து வருகிறது. கிளிநொச்சிக்கு வடக்கில் இருந்து ஒரு படையும், தெற்கில் இருந்து ஒரு படையும் மேற்கு பகுதியில்…
-
- 6 replies
- 2.9k views
-
-
இன்று எனது தோழியுடன் பேசிக்கொண்டிருதபோது தேசம் பற்றி பலவும் சொன்னாள் ஆனால் ஒன்று மட்டும் தாங்க முடியவில்லை, யாழ்பாணத்தில் மற்றும் வடக்கில் இருந்து மக்கள் பெருவாரியாக வெளியேறி வருவதாக சொன்னாள் உண்மையா? இது உண்மைஎன்றால் தயவு செய்து இது பற்றி மக்களுக்கு தெரியபோடுதவும். மற்றும் மக்களை வேறு எங்கும் போகாமல் தமிழ்நாட்டுக்கு வரச்சொல்லவும்.
-
- 4 replies
- 2.9k views
-
-
புலிகள் நின்றடிப்பார்கள், விட்டடிப்பார்கள் – 40000 சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்றவர்களை அம்பலப்படுத்திய அமைச்சர் December 11, 20206:29 am இந்த செய்தியை பகிருங்கள்! இறுதி கட்ட யுத்தம் நடைபெற்றபோது நாடாளுமன்றத்திலிருந்த போலி தமிழ் தேசியவாதிகள் புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்றே விரும்பியிருந்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், பேரினவாத தீயிற்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசியவாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர். சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை …
-
- 36 replies
- 2.9k views
- 1 follower
-
-
மகிந்த சிந்தனையில் அப்துல் கலாம் ! சமாதானத்தைக் கட்டியெழுப்புவதே எனது சிறிலங்காவுக்கான பயணத்தின் நோக்கமென, இந்தியாவின் முன்னார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார். சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் சிந்தனை முழக்கத்தின் வடிவமாக, சிங்களம்- தமிழ் – ஆங்கிலம் மொழியை யைப்படுத்தி, மும்மொழி ஆண்டாக 2012ஐ சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. பிரகடனத்த்தின் உத்தியோகபூர்வ நிகழ்வில் இந்தியாவின் முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பங்கெடுத்துள்ளார். http://naathamnews.c...21/abdul-kalam/
-
- 8 replies
- 2.9k views
-
-
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் புதிதாக 130 பில்லியன் ரூபாய்களை அச்சடித்துள்ளதாகவும், இந்த திட்டமானது இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்போவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சபையில் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டை விடவும் 2021 ஆம் ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமையப்போகின்றதாகவும், பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடி ஏற்படப்போவதுடன், கடன் நெருக்கடியில் நாடு விழப்போகின்றது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி நாள் விவாதமான நிதி அமைச்சு மற்றம் நிதி இராஜாங்க அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் …
-
- 27 replies
- 2.9k views
-
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் முன்மொழியப்பட்ட தீர்மான வரைவை இலங்கை நிராகரித்துள்ளது. 51/1 தீர்மானத்திற்கு நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் யுத்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்த தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் நகல்வடிவை நிராகரிப்…
-
-
- 42 replies
- 2.9k views
- 1 follower
-
-
வீரகேசரி நாளேடு 8/27/2008 8:09:38 PM - கடற்படையினரின் தாக்குதல்களையடுத்து தப்பிச் செல்லும் போதே புலிகளின் விமானம் இரு குண்டுகளை வீசிவிட்டுச் சென்றுள்ளது. விமானத் தாக்குதலில் 10 கடற்படை வீரர்கள் காயமடைந்துள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். திருகோணமலை கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானம் ஒரு முறையே தாக்குதல் நடத்தியது. இதன் போது குறித்த விமானத்திலிருந்து இரு குண்டுகள் படைத்தளத்தை நோக்கி வீசப்பட்டுள்ளன. அவ்விரு குண்டுகளில் ஒன்று குறித்த தளத்தின் ஓதுக்குபுறமொன்றில் வீழந்து வெடித்தமையினாலேயே 10 கடற்படையினர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். திருகோணமலை கடற்படை தளம் மீதான புலிகளின் விமானத் தாக்குதல் குறித்து இர…
-
- 7 replies
- 2.9k views
-
-
இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்ற மோதல்கள் காரணமாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் நாடு திரும்புவதற்கான காலம் கனிந்துள்ளது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது சுதந்திரதின உரையில் தெரிவித்தார். உலகில் எவ்வளவு எண்ணிக்கையான தேசங்கள் இருப்பினும் ஒருவருக்கு தான் பிறந்த நாட்டைப் போன்று பாதுகாப்பான இடம் வேறொன்றும் கிடையாது என்று குறிப்பிட்ட அவர், 20 வருடங்களுக்கு மேலாக நீடித்துச் சென்ற துரதிர்ஷ்டவசமான மோதல்கள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய அனைத்து இலங்கையர்களும் நாடு திரும்பவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கொழும்பு காலி முகத்திடலில் இன்று காலை இலங்கையின் 61வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் நிகழ்வுகள், முப்படையினரின் அணிவகுப்பு மரியாதைகள், கனரக இராணு…
-
- 22 replies
- 2.9k views
- 1 follower
-
-
முன்னாள் யாழ் மாவட்ட முன்னணி மண்ணெண்ணை பதுக்கல் வியாபாரியும் பின்னாள் ஐ தே க அமைச்சருமான மகேஸ்வரனின் மனைவியும் தற்கால யாழ் மாவட்ட ஐ தே க எம்பியுமான விஜயகலா மகிந்தரோடு கூடி இருந்து பொங்கல் கொண்டாடும் அற்புதக் காட்சியையே தற்போது கண்டு கொண்டிருக்கிறீர்கள். இவரின் கணவர் கொழும்பில் வைத்து அதுவும் கோவிலில் வைத்து இதே மகிந்தரின் ஆட்சியில் போட்டுத்தள்ளப்பட்டதை அக்காச்சி தமிழ் மக்களின் "அதி உன்னத" நலன் கருதி மறந்திட்டாவாமெல்லே...??! காலமடா சாமி. தமிழக அரசியல்வாதிகளை தூக்கிச் சாப்பிட்டிடுவாங்க போல இருக்கு நம்மட ஆக்கள்..! எதுஎப்படியோ அக்காச்சி தாடிக்கார அண்ணாச்சிக்கு ஆப்படிக்க தயாராகிட்டா என்றது மட்டும் விளங்குது. படம்: முகநூல்.
-
- 3 replies
- 2.9k views
-
-
காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைச் சார்ந்த தோழர் செங்கொடி என்ற பெண் தீக்குளித்து மரணம். 28 ஆகஸ்ட் 2011 பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரணதண்டனையை ரத்துச் செய்யக் கோரி இந்தப் பெண் தீக்குளித்து மரணமானதாக சற்று முன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். மரண தண்டனையை குறைக்குமாறு அனுப்பப்பட்ட கருணை மனுவை இந்திய உள்துறை அமைச்சும் ஜனாதிபதியும் நிராகரித்த நிலையில் மக்கள் மன்றத்தின் முக்கியஸ்த்தர் செங்கொடி பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் இன்று தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக தகவல் எதிர்பார்க்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/66290/lan…
-
- 24 replies
- 2.9k views
-
-
"எல்லாளன் நடவடிக்கை ஓர் எதிர்கால முன்னறிவுப்பு" ஜெயராஜ் அநுராதபுரம் வான்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் குறித்து பல ஆய்வாளர்களும் விமர்கசர்களும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருக்கும் நிலையில், அரசியல்வாதிகளும் தமது பங்கிற்குத் தமது கருத்துக்களைத் அபிப்பிராயங்களையும் வெளியிட்டுள்ளனர். :மேலும்
-
- 0 replies
- 2.9k views
-
-
சில பிரதேசங்களில் பரவலாக இவ் அதிர்வு உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கொக்குவில், நல்லூர், பருத்தித்துறை மற்றும் அதை அண்டிய பகுதிகளிலுள்ள வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சில செக்கன் நேரத்துக்குள் அதிர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியிலுள்ள மக்கள் அச்சத்துடனும் பீதியுடனும் காணப்படுகின்றனர். மேலதிக செய்திகள் விரைவில்..... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 7 replies
- 2.9k views
-
-
இலங்கை தேசத்தின் மதிப்பிலும், பண்பாட்டிலும் அதன் இனங்களும் ,கலாசார பாரம்பரியங்களும் செல்வாக்குச் செலுத்துகின்றன, அந்தவகையில் இலங்கையின் பெரும்பான்மை இனமாக சிங்களவர்கள் இருந்தாலும் அவர்களிடம் " குலய" என்ற சாதி முறை செல்வாக்குச் செலுத்துவதுடன் ,அதனை அவர்கள் தமது பாரம்பரிய அடையாளமாகவும் கொண்டுள்ளனர், அவ்வாறான அடையாளத்திற்கு உதவி புரிந்த முஸ்லிம் முன்னோர் பற்றிய பதிவே இதுவாகும், #அறிமுகம், பேருவளைப் பிரதேசத்தின், களு கங்கையைச் சுற்றி உள்ள "களுமோதர" பிரதேசத்தின் வளர்ச்சி, பண்பாடு, வாழ்வியல் ,பனசல, பிக்குகளின் நடைமுறை என்பதில் "சலாகம" என்ற குலத்தினரின் பங்கு மிக அதிகமாகும், இவர்கள் இன்று நாட்டின் பல பாகங்களில் பரவி வாழ்ந்தாலும், வரலாற்றில் இத் தேசத்திற்கான…
-
- 16 replies
- 2.9k views
-
-
தற்போது வந்த செய்தியாம்( தட்ஸ்தமிழ்) http://thatstamil.oneindia.in/ இந்த செய்தியை தான் தமிழ்நெற் குறிப்பிடிகிரதோ தெரியவில்லை... Sri Lanka's air force jets bombed a house in the northern jungles believed to be frequented by the leader of the Tamil Tiger rebels on Wednesday, while infantry clashes killed 23 rebels and one soldier, the military said. It was not clear what damage or casualties were caused by the raid targeting Velupillai Prabhakaran with bombings of a house in Vattakachchi, a village in the rebel stronghold, said air force spokesman Wing Commander Janaka Nanayakkara. http://www.axilltv.com/bkpost-2.php?newsid=341577
-
- 10 replies
- 2.9k views
-
-
மயிலிட்டிப் பகுதி 683 ஏக்கர் காணி விடுவிப்பு மயிலிட்டிப் பகுதி 683 ஏக்கர் காணி விடுவிப்பு யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் காணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி அம்மன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் இக் காணி கையளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவால் யாழ் மாவட்டச் செயலர் நா. வேதநாயகத்திடம் உத்தியோகபூர…
-
- 23 replies
- 2.9k views
-
-
வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் – தெரிந்ததும் தெரியாததும் [ திங்கட்கிழமை, 07 ஒக்ரோபர் 2013, 01:04 GMT ] [ கார்வண்ணன் ] வடக்கு மாகாணசபையின் முதலாவது முதலமைச்சராக, இன்று காலை 9 மணியளவில் பதவியேற்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன். கடந்தமாதம் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், யாழ்.மாவட்டத்தில் 132,255 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட, சி.வி. விக்னேஸ்வரன் பற்றிய சில குறிப்புகள் - *கொழும்பு புதுக்கடையில் ஒக்டோபர் 23, 1939ம் நாள் பிறந்தார் விக்னேஸ்வரன். *இவரது தந்தை, கனகசபாபதி விசுவலிங்கம், தாய் ஆதிநாயகி, இருவரும் மானிப்பாயில் பிறந்தவர்கள். *இரு சகோதரிகளுடன் பிறந்த விக்னேஸ்வரனின் பேரன், சேர் பொன்.இராமநாதன், சேர்பொன். அருணாசலம் ஆகி…
-
- 45 replies
- 2.9k views
-
-
அமெரிக்காவின் அடுத்த தடை U.S. imposes sanctions on Tamil Foundation 11 Feb 2009 17:52:08 GMT Source: Reuters WASHINGTON, Feb 11 (Reuters) - The U.S. Treasury imposed sanctions on Wednesday on a Maryland foundation it accused of being part of a support network for the Tamil Tiger rebel group battling the Sri Lankan government. The sanctions against the Tamil Foundation, which Treasury said was a front for the Sri Lanka-based Liberation Tigers of Tamil Eelam, allows the U.S. government to freeze assets the foundation may have in the United States and prohibits U.S. banks and consumers from conducting business deals with it. "The LTTE, like other terrori…
-
- 13 replies
- 2.9k views
-