ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
உண்மைகள் சுடும் - யதார்த்தமும் கனவுலகும் [ சனிக்கிழமை, 01 சனவரி 2011, 00:04 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம். "போர் அழிவுகளைக் கொண்டுவரும் - போராட்டம் அழிவிலிருந்து மீட்சியைக் கொண்டுவரும்" இவ்வாறு தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர்களில் ஒருவர் மேடையில் பேசும் போது, அதனை பார்வையாளர் வரிசையில் அமர்ந்தவாறு மயிர்கூச்செறிய கேட்ட அனுபத்தை இப்போது நினைத்துப் பார்க்கும் போது எங்குமே வெறுமை மட்டும்தான்.. சமீபத்தில் கிளிநொச்சிப் பக்கம் சென்றபோது நான் அவதானித்த சில விடயங்களால் மேற்படி வாசகத்தையே மீண்டும் ஒரு முறை அசை போட்டுக்கொள்ள நேர்ந்தது. போராட்டம் மீட்சியைக் கொண்டுவரும் உண்மைதான் ஆனால் அது வெற…
-
- 10 replies
- 1.7k views
-
-
கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு; கட்சியிலிருந்து வெளியேறினார் ஜெயா சரவணா தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி ஊழல் நிறைந்தது என கட்சியிலிருந்து வெளியேறிய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அரசியல் பயணத்தில் முக்கியமான ஒரு முடிவை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் பதவியில் இருந்தும் அக்கட்சியின் அடிப்படை உரிமை பதவியில் இருந்தும் கடந்த 17.08.2024 அன்று விடுவித்து கொண்டுள்ளேன். அக்கட்சியில் நீண்ட த…
-
-
- 10 replies
- 764 views
-
-
40,000 மக்கள் கொலை!; கோடன் வைஸ் பொய்களை பரப்புகின்றார் - இலங்கை அரசு கொழும்பு நிருபர் சனிக்கிழமை , பெப்ரவரி 13, 2010 Rohitha கோடன் வைஸ் வன்னியில் 40,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறி இருப்பது பொய் எனவும் அவர் பொய்களை பரப்பிவருவதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. முன்னதாக ஐக்கிய நாடுகளின் கொழும்பு பேச்சாளர் அவுஸ்ரேலிய ஏ.பி.சி. ஊடகத்திற்கு இலங்கைப்படைகளால் இறுதி போரில் 40,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் முகமாகவே இலங்கை அரசு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை வெளி நாட்டமைச்சர் ரோஹித போகொல்லாம அவர்கள் கோடன் வைஸ் இன் கருத்தை முற்றாக மறுதலிப்பதாக கூறியுள்ளார். அடுத்து தேசிய பாதுகாப்பு ஊடக ப…
-
- 10 replies
- 1k views
-
-
நாங்கள் அரசிடமிருந்து பணம் பெறவில்லை ; மாவை எம்.பி தெரிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெற்குக்கு அழைக்கப்பட்டு அரசாங்கத் தரப்பினரால் நிதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பு, தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெற்குக்கு அழைக்கப்ப…
-
- 10 replies
- 627 views
-
-
பெயரிடாத நட்சத்திரங்கள்: ஈழப் பெண்போராளிகளின் கவிதைகள்” அறிமுகவிழாவில் வாசித்த கட்டுரை) பெயரிடாத நட்சத்திரங்கள் என்கிற பெயரில் ஈழத்துப் பெண் போராளிகளின் கவிதைகள் தொகுக்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன என்று அறிந்தபோது, அந்தப் புத்தகம் என் கைக்கு கிட்டும் முன்னர் அந்தப் புத்தகம் எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்று ஒருமுறை யோசித்துப் பார்த்தேன். புலி எதிர்ப்பு எதிர் புலி ஆதரவு என்கிற தீர்மாணிக்கப்பட்ட பார்வைகளோடே பிரதிகள் அணுகப்படும் இன்றைய சூழலில் இப்புத்தகம் முழுக்க முழுக்க புலிகளின் பெண் போராளிகளின் கவிதைகளுடன் வெளிவந்திருப்பது எவ்வாறு அணுகப்படும் என்ற சந்தேகமே எனது யோசனைக்குக் காரணம். இன்றைய தினம், நவம்பர் 13 இந்நிகழ்வு நடைபெறுவது கூட ஒரு எதிர்பாராத அனுகூலத்தைத் த…
-
- 10 replies
- 2.5k views
-
-
தம்புள்ளை பள்ளிவாசல் அகற்றப்பட முடியாது : முஸ்லிம் காங்கிரஸ் தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார். இது தொடர்பான முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களின் முடிவுக்கு கட்சியின் உயர் பீடமும் இன்று அங்கீகாரம் வழங்கியதாகவும், அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் உண்மையில் விசமத்தனமாகக் கிளப்பப்பட்டது என்று கூறிய அமைச்சர், காணிகளை அபகரித்து, பள்ளிவாசல்களை கட்டுகிற ஒரு கூட்டமாக முஸ்லிம்களை காண்பிக்கும் ஒரு முயற்சியே இது என்றும் குறிப்பிட்டார். இந்த விடயத்தில் அரசாங்க உயர்மட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு தடுமாற்றம் காணப்பட்டதாக கூறிய அமைச்சர…
-
- 10 replies
- 928 views
-
-
இலங்கை: உள்ளூராட்சி தேர்தலில் முதல் முறை வென்ற குறவர் இன இளைஞர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஏராளமான அவமானங்கள், புறக்கணிப்புகளுக்குப் பின்னர் இரண்டாவது தடவையாகவும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எனப்படும் உள்ளூராட்சி துணைத் தலைவர் பதவி ஏற்றுள்ளார் விக்டர் ஜெகன். இந்தியாவிலிருந்து நீண்டகாலம் முன்பு இலங்கைக்கு குடிபெயர்ந்ததாக சொல்லப்படும் தெலுங…
-
- 10 replies
- 1.3k views
-
-
இலங்கையின் அமெரிக்க தூதரகத்திற்கு குண்டுதாக்குதல் நடத்தப்போவதாக தொலைமடல் அனுப்பிய ஜே.வி.பி உறுப்பினர் கைது. அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த போவதாக தொலைமடல் அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரை கல்கிஸ்சை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்சை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்ஷர் விலி அபயநாயக்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது குண்டுதாக்குதல் நடத்தப்போவதாக தெஹிவளையிலுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து இச் சந்தேகநபர் நேற்று பகல் இத் தொலை மடலை அனுப்பிவைத்தார். 52 வயதுடைய இச்சந்தேகநபர் அனுப்பிய மடலையடுத்து அமெரிக்க தூதகரத்திலுள்ள அதிகாரியொருவர் கல்கிஸ்சை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்தே இச் சந்தேக நபர் பொலிஸ…
-
- 10 replies
- 2.4k views
-
-
Published By: VISHNU 05 JAN, 2024 | 03:18 PM மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது. எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் அதிகாரப் பகிர்வு என்பது ஒரு அரசியல் எண்ணக்கருவாக மாத்திரம் அன்றி, பொருளாதார அடிப்படையிலும் யதார்த்தமாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதேபோல், மாகாண மட்டத்தில் சுயாதீன பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பிலான தெரிவை ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும், 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட…
-
- 10 replies
- 679 views
- 2 followers
-
-
சீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக பெறுகின்றது இலங்கை அரசாங்கம். உலகளாவிய அளவில் பரவிவரும் கொரோனா தொற்றுநோய் இலங்கையையும் பாதித்துள்ள நிலையில் சீன அரசாங்கதின் ஆதரவுடன் சீன அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு உதவும் வகையில் இந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சலுகைக் கடன்களை வழங்க தீர்மானித்துள்ளது. நாட்டின் அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு இந்த சலுகைக் கடன்களை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ள பின்னணியில் அதற்கான பத்திரங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது. அத்துடன் அரைவாசிக்கும் குறைவான சர்வதேச பங்கு சந்தை வட்டி வீதத்தில் நீண்டகால கடன் திட்டமாக இந்த தொகை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் தேர்தல் அறிவிக்கப்ப…
-
- 10 replies
- 788 views
-
-
வார்த்தைகளால் சொல்ல முடியாத உண்மைகள் http://www.pagegangster.com/p/2Lweq/ எனது மின்னஞ்சலுக்கு வந்த இணைப்பு..ஈழத்துப் படுகொலைகள் பற்றிய சிறிய நூல் நீங்களும் பாருங்கள். ஆங்கிலத்திலிருப்பதால் உங்கள் பிறமொழி நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாம்
-
- 10 replies
- 3.6k views
-
-
இலங்கை கடன் குழியில் விழுந்து சிக்கித் தவிக்கிறது; திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு சர்வதேச நாணய நிதியத்தில் தொடர்ந்தும் கடன் வாங்கப்போவதில்லை என மத்திய வங்கி அறிவித்தாலும் உண்மையான கதை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்க மறுத்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அரசு சர்வதேச நாணய நிதியம், சீனா மற்றும் தனியார் வங்கிகளில் வேண்டிய அளவு கடன் பெற்றுள்ளதாகவும் அதனால் நாடு சிக்கலில் விழுந்துள்ளதாகவும், எனவே கடன் குழியில் விழுந்து சிக்கித் தவிக்கும் இலங்கை சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்காது என்பதால் தப்பித்துக் கொள்ள கடன் பெற மாட்டோம் என அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியதுடன் பிரச்சினையில் இருந்து தப…
-
- 10 replies
- 735 views
-
-
காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கு மாத்திரமே என உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தின் படி மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் வழங்க முடியாது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காணி உரிமை தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சு தாக்கல் செய்த மனுவொன்றிற்கு தீர்ப்பு வழங்கும்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையில் நீதியரசர்களான எஸ்.ஸ்ரீபவன் மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோரை கொண்டு குழவினரே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/83776-2013-09-26-05-26-31.html
-
- 10 replies
- 940 views
-
-
ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள கடுமையான பிரேரணை விவகாரத்தில் எத்தகைய நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது தொடர்பில் இந்தியா தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகின்றது என்று டில்லி இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அதேவேளை, காங்கிரஸ் அரசு, இந்த விடயம் சம்பந்தமாக அமைச்சரவை மட்டத்திலும் கருத்துகளைக் கேட்டறிந்து வருகின்றது.இந்திய அரசியல் பிரமுகர் ஒருவர் நேற்று மாலை இந்தத் தகவலை "உதயனி'டம் உறுதிப்படுத்தினார். இதற்கு முன்னர் இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த இரண்டு தீர்மானங்களையும் இந்தியா ஆதரித்திருந்தது. எனினும், "மதில் மேல் …
-
- 10 replies
- 559 views
-
-
எம்.றொசாந்த் 'இந்த நாட்டைப் பிரிக்கத் தேவையில்லை. அதற்காக எமது உரிமைகளை விட்டுக்கொடுக்கவும் மாட்டோம். அரசியல் தீர்வை ஏற்படுத்தவும் அதனை நடைமுறைப்படுத்தவும் நாங்கள் தயாரான நிலையில் இருக்கின்றோம்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) தெரிவித்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34ஆவது மாநாட்டின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் மற்றும் தோழமைக் கட்சிகளை ஒன்றிணைக்கும் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில…
-
- 10 replies
- 815 views
-
-
தையிட்டி விகாரை விவகாரம் : அத்துமீறல்கள் இடம்பெற்றிருந்தால் ஏற்றுக்கொள்ள முடியாது – அமைச்சர் டக்ளஸ் Published By: Digital Desk 5 05 May, 2023 | 10:44 AM தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பான ஆவணங்களை ஆராயவுள்ளதுடன் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அத்துமீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். வியாழக்கிழமை (04) இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தினை தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 10 replies
- 890 views
- 1 follower
-
-
அமெரிக்காவுக்கு எதிராக உள்நாட்டில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து கடுமையான எதிர்ப்பை வெளியிடும் அரசு, ஜெனிவாவில் அந்நாட்டின் கோரிக்கைக்குப் பணிந்து மண்டியிட்டுள்ளது. அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் உரை இதனை அம்பலப்படுத்திவிட்டது என்று பரபரப்பான குற்றச்சாட்டொன்றை அதிரடியாக முன்வைத்துள்ளது ஜே.வி.பி. வடக்கில் ஈ.பி.டி.பி. சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றது என்றும், ஆயுதங்கள் வைத்திருக்கின்றது என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில், அமைச்சர் டக்ளஸை அரசு ஜெனிவாவுக்கு அனுப்பியது உலகில் மிகப்பெரிய நகைச் சுவை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. ஜெனிவா மாநாடு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் நாட…
-
- 10 replies
- 1.2k views
-
-
ஸ்ரீலங்கா அரசின் முழுமையான அணுசரனையுடன் 33 வருடங்களுக்கு முன்னதாக தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட தமிழினப் படுகொலையின் அதி உச்சகொடூரங்களில் ஒன்றான கறுப்பு ஜூலையின் போது இடம்பெற்ற வெலிகடை சிறைச்சாலை படுகொலை நாள் இன்று தமிழர்களால் மிக உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் பூர்வீகப் பிரதேசங்களில் ஒன்றான வடக்கில் தமது ஆதிக்கத்தை விஸ்தரித்திருந்த ஸ்ரீலங்கா அரச படையினரில் 13 பேரின் உயிரைப் பறித்ததற்காக பழிதீர்க்கும் வகையில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் முழுமையான அனுசரணைக்கு அமைய 1983 ஆம் ஆண்டுஜுலை 23 ஆம் திகதி முதல் ஜூலை இனப்படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன. 1983ஆம் ஆண்டு ஜூ…
-
- 10 replies
- 1k views
-
-
இலங்கையில், சீதா தேவி தீயில் இறங்கிய இடத்தில், ஒருகோடி இந்திய ரூபாய் செலவில், கோவில் கட்டப்படும் என, மத்திய பிரதேசமாநில முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இதற்கான அனுமதியை இலங்கை அரசுவழங்கியுள்ளது. பன்னா மாவட்டத்தில் உள்ள குன்ஹார் என்ற இடத்தில் நடந்த விழாவில், முதல்வர் சிவராஜ் இத்தகவலை கூறினார். கோவில் கட்டுவதற்கு, மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், இதற்கான பணி துவக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். http://www.adaderana.lk/tamil/news.php?nid=39686
-
- 10 replies
- 854 views
-
-
அரச ஊழியர்களை... பணிக்கு அழைப்பதை, மட்டுப்படுத்தி உத்தரவு! அத்தியாவசிய ஊழியர்களை மட்டுமே கடமைக்கு சமூகமளிக்க அழைக்குமாறு நிறுவன தலைவர்களை வலியுறுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1283828
-
- 10 replies
- 618 views
- 1 follower
-
-
அரசாங்கப் படையினர் மீது இனிமேலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுமாயின் நாம் முகமாலை பகுதியில் ஊடறுத்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் முன்னோக்கி நகர்ந்து தாக்குதல்களை நடத்துவோம் என்று இராணுவப் பதில் பேச்சாளர் அத்துல ஜயவர்தன தெரிவித்தார். பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: அரசாங்க படையினர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுமாயின் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஊடறுத்து தாக்குதல்களை நடத்துவோம். சிறுவர்கள் பயங்கரவாதிகளாயின் நாம் என்ன செய்வது? தாக்குவதை தவிர வேறுவழியில்லை. பு…
-
- 10 replies
- 3.3k views
-
-
ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன் 1997ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சியை வென்றிருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் நினைவுகூரல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “மகாத்மா காந்தி ஆரம்பித்த உண்மை மற்றும் ஒத்துழையாமையை அடிப்படையாகக் கொண்ட சத்தியாக்கிரக போராட்டத்தை பாடமாக எடுத்துக் கொண்ட…
-
- 10 replies
- 938 views
-
-
கடந்த சில தினங்களாக pacific ring of fire என்றழைக்கப்படும் நிலநடுக்கத்திற்கு பெயர்போன பகுதிகள் மீண்டும் உயிர்பெற்றிருக்கின்றன. இலங்கைத் தீவிலோ அதை அண்மித்த பகுதிகளிலோ எந்தவித fault lines உம் இல்லை என்பது துறைசார் நிபுணர்களின் முடிவு இற்றைவரை. அப்படி இருந்தும் ஒரு கணிசமான நிலஅதிர்வு நேற்று இலங்கைத் தீவில் பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் புமியின் மேற்பரப்பிலுள்ள பல்வேறுபட்ட tectonic plates இடையிலான நகர்வுகள் ஒன்றை ஒன்று நெருக்குவதால் உருவாவது. அந்த பலப்பரீட்சையில் ஒரு tectonic plate கீழ் இன் ஒன்று அமிழ்த்தப்படுவதாலோ அல்லது மேலும் உடைவதாலோ பாரிய அளவிலான புமியதிர்ச்சியை உருவாக்குகிறது. இந்த tectonic plates இடையிலான நகர்வுகள் முயற்ச்சிகள் தொடர்ச்சியானவை ஆனால் அவ்வப்போது அவை ஒரு…
-
- 10 replies
- 3.6k views
-
-
யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை! யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை, பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார். யாழ். நகரில் புத்தாண்டிக்கு முன்னிரவு இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் தொடர்பாக கேள்வியெழுப்பிய போது மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரத்தில் யாழ். நகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் முற்ப…
-
-
- 10 replies
- 726 views
- 1 follower
-
-
[size=4]சர்வதேசத்தின் கரங்களைப் பற்றிக் கொள்வதன் மூலம் எமக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி அதிகாரிகளுக்கான தலமைத்துவம் மற்றும் ஆட்சி நிர்வாகம் பற்றிய பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்விதம் கூறினார்.[/size] [size=4]அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:[/size] [size=4]எங்களது தேசத்தில் எங்களை நாம் ஆளக்கூடியவர்களாக இருக்க வேண்டும் அனால் வடக்கில் நடப்பது என்ன? வடக்கின் ஆட்சியில் இராணுவமும் ஆளுநரும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.[/size] …
-
- 10 replies
- 863 views
-