Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யுத்தம் முடிந்து ஒன்றரை வருடங்களை காலம் அள்ளிக்கொண்டு போயிற்று. குண்டுச் சத்தங்கள் ஓய்ந்து போயிற்று. ஆனால் நூற்றாண்டுகளைக் கடந்த வடுக்கள் நிறைந்து போயிருக்கிறது நிலம். அழுகையும் பசியும் வலிகளுமாய் அன்றாடப் பொழுதுகள் அவலங்களின் பதிவுகளாய் அன்றாடம் வருகின்ற கண்ணீர் நிறைந்த கடிதங்களும் காப்பாற்ற வேண்டிய குரல்களும் நீண்டு கொண்டே போகிறது.வாழ்வதற்கு ஏதாவதொரு சிறு உதவியை வேண்டிய குரல்களே இப்போது எமது தொலைபேசியில் நிறைகிறது. இந்தக் குரலுக்குரிய 32வயது இளைஞன் 22வயதில் களமொன்றில் காயமடைந்து இடுப்பின் கீழ் உணர்விழந்து சுழல்கதிரைக்குள் 10 வருடங்களாக வாழ்கிறான். படுக்கைப்புண்ணோடு நிமிர்ந்து படுக்க ஒரு கட்டில் வசதிகூட இல்லாது இருக்கின்றான். கிளிநொச்சி மாவட்டத்தின் ஓர் ஒதுக…

    • 7 replies
    • 1.2k views
  2. மீன்பிடி அமைச்சின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மீன்சந்தை ஒன்று மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் இன்று முற்பகல் 10.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. அரியாலை தபாற்கட்டை சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த நிலையத்தை திறந்துவைக்கும் நிகழ்வு கடற்றொழில் நீரியல்வளத்துறை அபிவிருத்தி அமைச்சின் பொது முகாமையாளர் ருவான் லங்ககோன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் உட்பட மீன்பிடித் திணைக்கள உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் http://malarum.com/articl…

  3. முட்டை மாஃபியாவுடன் அமைச்சர்களுக்கு தொடர்பு? முட்டையை அதிக விலைக்கு விற்கும் மாஃபியாவுக்கு சில அமைச்சர்கள் துணைபோவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டுகிறது. குளிர்சாதன அறைகளில் சேமித்து வைக்கப்படும் முட்டைகளை குறைந்த விலைக்கும், மீண்டும் அதிக விலைக்கும் விற்கும் மோசடி கும்பல் நடப்பதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் எச். எம். பீ. ஆர் அழஹகோன் தெரிவித்துள்ளார். அதற்கு சில அரசியல்வாதிகளினதும் ஆதரவு இருப்பதாக அழஹகோன் மேலும் குற்றம் சாட்டினார். “உண்மையில் முட்டை வர்த்தக சங்கங்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அன்று வர்த்தமானியில் 43 ரூபாவுக்கு விற்கலாம் என்று கூறியவர்கள் தற்போது 65, 60 ரூபாவுக…

    • 7 replies
    • 781 views
  4. அம்பாறையில் விடுதலைப் புலிகளுடன் இணைய வந்த 18 வயதிற்கும் குறைவான 14 பேரை, ஐ.நா.சிறுவர் நிதியத்திடம் (யுனிசெவ்) ஒப்படைப்பதற்காக நேற்று திங்கட்கிழமை மாலை அழைத்து வந்த போது அவர்கள் மீது விஷேட அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். பொத்துவில் - திருக்கோவில் வீதியில் தாண்டியடிப் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது; அம்பாறையில் அண்மைக்காலத்தில் தங்களுடன் இணைந்த 18 வயதுக்கும் குறைவான 14 சிறுவர்களை (9 ஆண்கள், 5 பெண்கள்) யுனிசெவ்விடம் ஒப்படைக்க புலிகள் முன்வந்தனர். இது தொடர்பாக ்யுனிசெவ்ீ அதிகாரிகளுக்கும் ஒரு வாரத்திற்கு முன் அறிவிக்கப்பட்டது. அவர்களும் இந்த சிறுவர்களை இன்று…

  5. செவ்வாய் 04-09-2007 17:36 மணி தமிழீழம் தாயகன் சிறீலங்காப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகத்தில் கடந்த மாதம் மட்டும் 43 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுஇ 27 பேர் காணாமல்ப் போகச் செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ சமாதானச் செயலகம்இ புள்ளிவிபரத் தகவல்களுடன் இது பற்றிய அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள நிலையில்இ அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த மூன்று வாரங்களில் 34 பேர் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளதுடன்இ 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவங்கள் எந்தெந்தப் பகுதியில் நிகழ்ந்தன என்பது பற்றிக்கூட அந்த அறிக்கையில் தெளிவான விபரங்களை எது வெளியிடப்படவில்லை. இதேபோன்று போர் நிறுத்தக் கண்காணிப்பு…

  6. புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம், கங்கை அமரனின் இசைக்குழுவோடு, ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதியன்று முதல் தடவையாக யாழ்ப்பாணத்துக்கு வரவிருகின்றார் http://www.onlineuthayan.com/news/16203

  7. பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு அவசர அவசரமாக பல பணிகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தது. இதன் ஒருகட்டமாகவே கட்டுநாயக்க - கொழும்பு நெடுஞ்சாலையும் அவசரமாக திறந்துவைக்கப்பட்டது. அந்த அவசரத்தில் என்னவோ தெரியவில்லை. அங்கு வைக்கப்பட்டுள்ள ''எச்சரிக்கை'' பலகையும் அவசரமாக எழுத்தப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. குறிப்பாக பாதசாரிகளுக்கான அறிவித்தல் பலகையில், பிரவேசிப்பதற்கு தடை என்பதற்குப் பதிலாகவே ''விரவேசிப்பதற்டு தலட'' என எழுதப்பட்டுள்ளது. அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் கீழ் உள்ள அமைச்சின் மும்மொழிக் கொள்கை விஸ்தரிப்பின் அடையாளமாக இந்த அறிவித்தல் பலகை அமைந்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலை பெயர் பலகையில் தமிழ் இவ்வாறு மெல்ல செத்துக் கொண்ட…

  8. தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் பொது ஆவணம் தயார் ! தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் பொது ஆவணத்தைத் தயாரிக்கும் முயற்சியில் புதிய நகல் ஒன்று இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஆவணம் தமிழ்த் தரப்புக் கட்சித் தலைவர்களின் பரிசீலனைக்கு வழங்கப்பட்டதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) புதிய நகல் ஆவணம் தயாரிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய ஆவண நகல் தயாரிப்புக்காக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அனுப்பிவைத்த …

  9. சீனத் தூதுவர்... அடுத்த மாதம், கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம். இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த சீனத் தூதுவர் Qi Zhenhong அடுத்த மாதம் நாட்டின் கிழக்குப் பகுதிக்கும் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்கள் குழுவுடனான கலந்துரையாடலில்போது சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார். மேலும் திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற மாவடங்களில் இருந்து மக்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்தும் கோரிக்கைகள் கிடைக்கபெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1278492

    • 7 replies
    • 467 views
  10. இவ் வாரம் நம்மை எல்லாம் நிலைகுலைய வைத்து பெருவலி தந்த நிகழ்வுகள் நடந்தேறிய வாரம். நாம் கற்பனையில் என்றுமே எண்ணியிருக்காத பேரவலம் தொடர்ச்சியாக நடந்தேறி நமது நெஞ்சையெல்லாம் கசக்கிப் பிழிந்து, நம்மை அழுது குழற வைத்து ஆற்றுவாரின்றி அந்தரிக்க வைத்த இறுதி நாட்களின் ஓராண்டுப் பூர்த்திக் காலம். முள்ளிவாய்க்காலில் எஞ்சியிருந்த நமது விடுதலை இயக்கத்தின் அனைத்துச் சுவடுகளும் சிங்கள இனவாதப்பூதத்தால் உறிஞ்சி எடுக்கப்பட்டு சிங்களம் ஈழத்தமிழர் தாயகத்தின்மீது வெற்றிக்கொடி நாட்டிய காலத்தின் ஓராண்டு நினைவு வாரம். முள்ளிவாய்க்கால் தற்போது ஒரு ஊரின் பெயர் அல்ல. இது உலகத் தமிழ் மக்கள் மனதெங்கும் உறைந்திருக்கும் தார்மீகச் சீற்றத்தின் குறியீடு. சிங்களம் ஈழத் தமிழர் தேசத…

    • 7 replies
    • 2.8k views
  11. ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ரீதியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பாரிய வித்தியாசத்தில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை வகித்து வருகிறார். இந்திலையில் அடுத்த ஜனாதிபதியாக தமது கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. பதவிப் பிரமாணம் இந்நிலையில் திட்டமிட்ட வகையில் அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் வெற்றி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, செயற்குழு உறுப்பினர் சமந்த வித்யாரத்ன இதனை தெரிவித்துள்ளார். வேட்பாளர்கள் தோல்வி காலி…

  12. 19 JAN, 2025 | 05:09 PM மன்னார் நீதிமன்றத்துக்கு முன் கடந்த வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் நடுக்குடா கடற்கரை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பின்னர், மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு கடந்த வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது. இந்நிலை…

  13. [size=4]கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளினால் அந்தக் கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size] [size=4]எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், அந்த கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மூன்று பேர் கட்சியில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் தானும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும் இதுகுறித்து மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் அரசியல் செயற்பாடுகளை புரிந்து கொள்ள…

  14. நாச்சிக்குடா மற்றும் வன்னேரி அக்கராயனில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு அதில் கைப்பற்றப்பட்ட படையினரின் 29 உடலங்களில் இரண்டாவது தொகுதி இன்று வியாழக்கிழமை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 2.2k views
  15. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வின் 2ம் நாள் நேரஞ்சல் : http://naathamnews.com/?p=7901

  16. புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மற்றும் மக்கள் அமைப்புகள், எந்தவித அச்சமுமின்றிஎம்முடன் இணைந்துப் பணியாற்ற வாருங்கள்” என புலம்பெயர்ந்துள்ள சில முதலீட்டாளர்களைச் சந்தித்தபோது, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.அங்கு, இலங்கையின் முதலீடுகளை ஊக்குவித்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர், “கடந்த ஆட்சிக் காலத்தில், இலங்கையில் பல முதலீடுகளை மேற்கொள்ள வருகைதந்த புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களாகிய நீங்கள் அனுபவித்த சிரமங்களை நாம் நன்கறிவோம். குறிப்பாக, இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு, உள்ளுர் முகவர்கள் தரகுப் பணம் பெற முற்பட்டதால், நீங்கள் பலர், நாட்டில் முதலீடு செய்வதைத் தவிர்த்து வெளியேறியுள்ளமை, எமக்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.“எமது அரச…

  17. சென்னை : காங்கிரஸ் தலைவர் சோனியா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 6ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்கிறார். சோனியா, முதல்வர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகின்றனர். தமிழகத்தில் வரும் 13ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கவுள்ள நிலையில், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 'சோனியா தேர்தல் பிரசாரம் செய்ய தமிழகம் வரக்கூடாது' என, சினிமா இயக்குனர் பாரதிராஜா உட்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'சோனியா கண்டிப் பாக தமிழகத்திற்கு பிரசாரம் செய்ய வருவார்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர் வயலார் ரவி உறுதியளித்தனர். தமிழகத்தில் வரு…

  18. FacebookTwitterWhatsApp பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.யுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கியமான சந்திப்பொன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இராப்போசனத்துடன் இடம்பெற்ற இந்த சந்திப்பில், பிரதமரின் பாரியாரும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது பல முக்கியமான விடயங்கள் குறித்து, இருவரும் கலந்துரையாடினர் என அறியமுடிகின்றது. Tamilmirror Online || மஹிந்த –ரணில் முக்கிய சந்திப்பு

    • 7 replies
    • 523 views
  19. உறவுகளே உங்கள் மௌனம் எதுவரைக்கும்: யாழிலிருந்து இலங்கைப்பாராளுமன்ற தேர்தல் என்றுமில்லாதவாறு வடகிழக்கு பகுதிகளில் சிறீலங்கா பேரினவாத அரசு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை சிதைப்பதில் மிகவும் வெற்றிகரமாகவும் ,பேரினவாத சிந்தனையுடனும் செயற்பட்டுவருவதை தெளிவாக காணமுடிகின்றது. இதுவரைகாலமும் யாழ் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் சிறீலங்கா அரசிற்கு ஒத்தூதும் ஒருசில கட்சிகளுமே போட்டியிட்டு வந்தன ஆனால் இம்முறை தமிழ் தேசியத்திற்கு எதிராக போட்டியிடக்கூடிய வலு அக்கட்சிகளுக்கு இல்லாதமையாலும் அவர்களின் செல்வாக்கு குறைவடைந்து செல்வதாலும் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் பல்வேறுபட்ட பெயர்களில் ஓரளவு செல்வாக்குடைய பிரமுகர்களை பணத்துக்காக பேரம் பேசி சுயேட்சை…

  20. கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை: புகலிடம் வழங்க முன்வராத உலக நாடுகள் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அவருக்கு உலகில் எந்த நாடும் அரசியல் புகலிடம் வழங்க இதுவரை முன்வரவில்லை என தெரியவருகிறது. குடியுரிமை பெற்றிருந்த அமெரிக்கா கூட புகலிடம் வழங்கவில்லை கோட்டாபய ராஜபக்ச குடியுரிமை பெற்றிருந்த அமெரிக்கா கூட அவருக்கு புகலிடம் வழங்கவில்லை. அத்துடன் இந்தியா தனது நாட்டுக்கு வரவும் அவருக்கு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில், தற்போது சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அங்கு மேலும் 14 நாட்கள் தங்கியிருக்க விசா அனுமதி கோரியிருந்தார். இந்த கோரிக்க…

    • 7 replies
    • 545 views
  21. வன்னி மீதான படை நடவடிக்கைகள் எக்காரணம் கொண்டும் கைவிடப்படா இராணுவத் தளபதி சொல்கிறார் விடுதலைப் புலிகள் தென்னிலங்கையில் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் வன்னி மீதான படை நடவடிக்கை கைவிடப்படமாட்டாது என்று தெரிவித்திருக்கும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, வன்னியை விரைவில் மீட்டே தீருவோம் என்றும் சூளுரைத்துள்ளார். தென்பகுதியில் நடைபெறும் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவித்துள்ளவை வருமாறு வடக்கில் வன்னிப் பகுதியில் உள்ள மக்களைப் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்ற

    • 7 replies
    • 2.6k views
  22. புலிகள் அல்கொய்தா தொடர்பாம், இலங்கை ராணுவம் சார்க் தலைவர்களுக்கு அல்வா ! இலங்கையில் தனி ஈழம் கோரி போராடி வரும் விடுதலைப்புலி களுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக இலங்கை ராணுவம் திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளை எதிர்த்து போராட தெற்காசிய நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று தொடங்கி 2 நாட்களுக்கு தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பான சார்க் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி இலங்கையில் குவிந்துள்ள சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கெகலியா ரம்புக்வாலா பேட்டி அளித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கும் தெற்காசியாவில் செயல்பட்டு வரும் அல்கொய்த…

  23. மீள் வாழ்க்கையை ஆரம்பிக்கும் வன்னி மக்கள் யுத்தகாலத்தில் விடுதலைப் புலிகளால் சேதமாக்கப்பட்ட தண்ணீர் தாங்கிக்கு அருகில் வன்னி மக்கள் தற்காலிக சந்தை அமைத்துள்ளனர். தமது நாளாந்த வாழ்க்கையை கொண்டுசெல்லும் வன்னி மக்கள் விற்பனையில் ஈடுபடுவதை படத்தில் காணலாம். tamil mirror

  24. பிரதமர் பதவியிலிருந்து.. விலக தயாராகின்றார், மஹிந்த? பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அரசியல் நெருக்கடியை தவிர்ப்பதற்காக இடைக்கால அரசொன்றை அமைக்கும் நோக்கில் மஹிந்த பிரதமர் பதவியை துறக்கத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் அவசர சந்திப்பு இடம் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது நாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வு…

  25. 11.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் எழில்வேந்தன், லெப்.கேணல் திருவருள், லெப்.கேணல் வேங்கை உட்பட்ட கடற்புலி மாவீர்களினதும், லெப்.கேணல் தமிழ்மாறன் (கஜேந்திரன்) அவர்களினதும் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.