ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
இலங்கையில் தொடரும் யுத்தத்தில் கடந்த செப்ரம்பர் மாதம் படைத்ததரப்பில் 200 பேர் கொல்லப்பட்டு 997 பேர் காயமடைந்துள்ளதாகவும் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டு 29 பேர் காயமடைந்ததாகவும் பிரதமர் ரட்ணகசிறி விக்கிரமநாயக்கா நாடாளுமன்றத்தில் இன்று (ஒக்07) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட பினனர் அவசரகாலச்சட்டம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு நிலமைகள் தொடர்பாக ஆற்றிய உரையின் போதே பிரதாமர் இந்தப் புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 7 replies
- 1.5k views
-
-
பாராளுமன்றில் இன்று உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொவிட்-19 காரணமாக இறப்பவர்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதியளிப்பதாக அறிவித்தார். கொவிட் -19 கழிவு நீரில் பரவ முடியாது என்று அமைச்சர் சுதர்ஷினி பெர்னாடோபுள்ளேயின் கூற்றைத் தொடர்ந்து கொவிட்-19 நோயாளிகளின் தகனம் குறித்து அறிக்கை வெளியிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதே பிரதமர் மேற்கண்டவாறு பதில் கூறினார். Thinakkural.lk
-
- 7 replies
- 652 views
-
-
யாழ். நகரின் கடைகளில் கைவிசேடம் வாங்குவதற்கு இன்று காலை மக்கள் கூட்டம் முண்டியடித்துக்கொண்டிருந்ததை காணமுடிந்தது. தமிழ் - சிங்கள புத்தாண்டு தினமான இன்று கைவிசேடம் வாங்குவதற்கு மக்கள் ஒவ்வொரு கடைக்கு முன்னால் காத்திருந்து முண்டியடித்துக்கொண்டு கைவிசேடம் வாங்கினர். ஒவ்வொரு கடைக்கு முன்னாலும் 20 மேற்பட்டவர்கள் காத்திருந்தனர். தமிழ்- சிங்கள வருடப்பிறப்பன்று கைவிசேடம் வாங்குவது தமிழர்களுடைய பண்பாடு. அந்தவகையில் தமக்கு பிடித்தவர்களிடம் முதல் தடவையாக கைவிசேடம் பெற்றுக்கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=169982873214539494
-
- 7 replies
- 1.9k views
-
-
திருகோணமலைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலம் ஒன்றினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன் மற்றும் கப்டன் சிவகாமி ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய்நாட்டின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.
-
- 7 replies
- 817 views
-
-
சர்வேந்திர சில்வா வீட்டுக் கதவை தட்டிய தமிழர்கள் : அதிர்ந்த சர்வேந்திர சில்வா (Video in ) Friday, September 30, 2011, 13:32 சமீபத்தில் அமெரிக்காவில் தங்கியுள்ள சர்வேந்திர சில்வாவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டமை யாவரும் அறிந்ததே. 58ம் படைக்கு தளபதியாக இவர் இருந்த கால கட்டத்தில் யுத்தக்குற்றங்கள் இழைத்தார் என இவர்மேல் வழக்கு தொடரப்பட்டு நஷ்ட ஈடும் கோரப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு விடுத்த அழைப்பாணையின் பிரதியை சர்வேந்திர சில்வாவின் வீட்டிற்குச் சென்று சிலர் வழங்கியுள்ளனர். நியூயோர்க்கில் உள்ள தொடர்மாடி ஒன்றில் வசித்துவரும் அவர் வாசல்ஸ்தலதைத் தட்டி அங்கே இருந்த அவரது உதவியாளிடம் இந்த அழைப்பாணையின் பிரதி கையளிக்கப்பட்டுள்ளது. இதனை இவர் இனி மறுக்க …
-
- 7 replies
- 1.7k views
-
-
இந்தியா நிராகரித்ததால் சீனாவை அழைத்தோம் --மகிந்த
-
- 7 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளியுறவு அமைச்சரை சந்திக்கவுள்ளார். மஹிந்த இராஜபக்ஷ மீதான அதிருப்தியினால் சிறிலங்கா மீதான வெளியுறவு கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டாம் என்றும், சிறிலங்காவில் உள்ள பிரச்சினைகளை இந்தியாவுடன் இணைந்து தீர்க்க முடியும் எனவும் ரணில் கோருவார் என இராஜ தந்திர வட்டாரங்கள் எதிர்வு கூறியுள்ளன. http://www.seithy.co...&language=tamil
-
- 7 replies
- 1k views
-
-
கனடா... குழப்பம், தொடர்பில்... விளக்கம் கோரியுள்ள மாவை! கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கட்சியின் கனடா கிளையின் கருத்தை கோரியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பப்பட்ட போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் கடந்த வாரம் கனடாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது அங்கு வருகைதந்த சிலரால் குழப்பம் ஏற்படுத்…
-
- 7 replies
- 682 views
- 1 follower
-
-
இவ்வாண்டிற்கான தேசியத் தலைவரின் கொள்கைப்பிரகடண உரை என்னவாக இருக்கும்? யாருக்காவது ஏதாவது யோசனைகள்???? *தமிழீழப்பிரகடணம் *ஒப்பந்தத்தை கிளித்தெறிந்து முழுமையான போர் *மீண்டும் பேச்சுகள் பெறுமையிளந்து காத்திருக்கிறோம்........
-
- 7 replies
- 2.4k views
-
-
கிழக்கில் போர் உத்திகள் மாற்றப்பட்டுள்ளன இனி என்னவென்பதை பொறுத்திருந்து பாருங்கள் - இளந்திரையன் கிழக்கில் பல வாரங்களுக்கு முன்னரே கொரில்லா போர்முறைக்கு எங்களுடைய போர் உத்தியை மாற்றிவிட்டோம் எனவே, எதிர்காலத்தில் எங்களுக்கும் அவர்களுக்கும் என்ன நடக்கப்போகின்றது என் பதைப் பொறுத்திருந்துபாருங்கள். இவ்வாறு விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். கிழக்கில் அரச படையினர் தொப்பிகலவை கைப் பற்றியது தொடர்பாக நேற்றுப்பி.பி.ஸிக்கு கருத்துக் கூறும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அரசு, கிழக்கில் நடத்துகின்ற போர் முடிவுக்கு வந்துவிட்டது எனக் கூறுகின்றது. ஆனால், அது உண்மை அல்ல ஏன் என்றால் எங்களுக்…
-
- 7 replies
- 2.5k views
-
-
தளபதி சூசை அவர்களின் பேச்சு( குரலில்) http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23385 சிறகு விரித்த புலிகள்"- பாடல் குறுவட்டு வெளியீடு: கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை பங்கேற்பு [புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2007, 21:44 ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறகு விரித்த புலிகள் பாடல் குறுவட்டினை தமிழீழ கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை இன்று வெளியிட்டார். புதுக்குடியிருப்பில் மாவீரர் மண்டபத்தில் இன்று புதன்கிழமை மாலை தொடங்கிய நிகழ்விற்கு புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல் பொறுப்பாளர் இளம்பருதி தலைமை தாங்கினர். பொதுச்சுடரை லெப்டினன்ட் கேணல் கிட்ட அவர்களின் துணைவியார் ஏற்ற ஈகச்சுடர் திலீபனின் திருவுருவப்படத்துக்கு லெப்.கேணல் குஞ…
-
- 7 replies
- 4.9k views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரன் நேற்று முன்தினம் ஆற்றிய உரை வெறும் ஓலங்களும், கெஞ்சல்களும் நிறைந்ததுதான். நேற்று நாடாளுமன்றில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய வேளை விமல் வீரவன்ஸ இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் :- புலிப் பயங்கரவாதத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் வெளியிடப்பட்ட 'நம்பிக்கையின்மையின் வெளிப்பாட்டின் மீது' ஒரு சில காரணங்களுக்காகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். எந்த முறையிலாவது நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தாலும் பிரபாகரனுடைய மாவீரர் தின அறிக்கை, அவரது நம்பிக்கையின்மையின் வெளிப்பாடாகவே தெரிகிறது. அது வேதனை தரக்கூடிய படுதோல்வியிலிருந்து மீள்வதற்காக, வெளியிலிருந்து உதவிக்காகக் கெஞ்சும் நிர்காகதியான ஒருவரது ஓலமேயல்லாது வேறோன்றுமல்ல. ந…
-
- 7 replies
- 2.6k views
-
-
[size=3] [size=4]பிறேசிலில் றியோ பிளஸ் 20 மாநாட்டின் போது தனியாகச் சந்தித்துப் பேசிய ஈரானிய அதிபர் மஹ்முட் அகமட்நியாட்டும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், புதிய உலக ஒழுங்கு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக ஈரானிய செய்தி நிறுவனமான ‘இர்னா‘ செய்தி வெளியிட்டுள்ளது. “சுதந்திரமான நாடுகள் தமது முன்னேற்றத்துக்கு, தமக்குள் ஒத்துழைப்பை அதிகரிப்பது அவசியம். நீதியைத் தேடும் நாடுகள் புதிய உலக ஒழுங்கை வடிவமைக்க ஒத்துழைக்க வேண்டும். இன்றைய பிரச்சினைகளுக்குப் பின்னால் இருப்பவர்கள், புதிய ஒழுங்கை வகுக்கத் தகுதியற்றவர்கள். மேலாதிக்க சக்திகளிடம் இருந்து சுதந்திரமான நாடுகள் கடும் அழுத்தங்களை சந்திக்கின்றன. ஆனால், உண்மையில் இந்த பொருளாத…
-
- 7 replies
- 1.1k views
-
-
மூவின மக்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றார் ரணில் அமைச்சர் மனோ கணேசன் புகழாரம் (ஆர்.யசி) சிங்கள பெளத்த பெரும்பான்மையினர் மட்டுமல்லாது தமிழ், முஸ்லிம் மக்களும் சம உரிமைகளைப் பெற்று வாழவேண்டும் என நினைக்கும் ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்கவேயாவார். புதிய அரசியலமைப்பின் மூலமாக சகல இன ஒற்றுமையையும் உறுதிப்படுத்த அவர் முயற்சிக்கின்றார் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். புலிகளிடம் ஒப்பந்தத்தை எழுதிக் கொடுத்திருந்தால் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி ஆகியிருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் ரணில் விக்கிரம…
-
- 7 replies
- 647 views
-
-
பத்தாயிரம் பேரின் தற்காப்பு பயிற்சி இன்று எழுச்சியுடன் நிறைவு பத்தாயிரம் பேர்வரை பங்குகொண்ட தற்காப்புப் பயிற்சி நிறைவு நிகழ்வு இன்று வன்னி புதுக்குடியிருப்பில் எழுர்ச்சிபுூர்வமாக இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசர்Pதியாக பங்குகொண்டவர்களே இந்த தற்காப்பு பயிற்சி நிறைவில் பங்கேற்றனர். தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு உந்து நத்தியாக விளங்கும் மக்கள் சக்தியின் உந்து சக்தியாக விளக்கும் மக்கள் சக்தியின் வெளிப்பாடாக இந்த நிகழ்வு எழுர்ச்சியுடன் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆண்கள் பெண்கள் என கிராம மட்டத்தில் தற்காப்பு பயிற்சினை பெற்ற இவர்களுக்கு பயிற்சியின் நிறைவு நிகழ்வாக இந்த நிகழ்வு நடைபெற்றது. புதுக்குடியிருப்பை அண்மித்தபகுதியில் இருந்து அணிவகுத்து…
-
- 7 replies
- 2k views
-
-
தாயக மக்களின் கனவு நனவானது; நாட்டின் மிகப்பெரும் காகித ஆலை யாழில் உதயம்! ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பின் அனுசரணையில், யாழ்ப்பாணம் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாரிய கைத்தொழிற்சாலையாக அச்சுவேலி காகித உற்பத்தி ஆலை இன்றைய தினம் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மூன்றாவதும் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் இரண்டாவதுமான காகித உற்பத்தித் தொழிற்சாலையாக இந்த ஆலை இன்று உதயமாகியுள்ளது. இன்று காலை ஒன்பது மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்வில், USAID நிறுவனத்தின் சார்பில் எலிஸபெத் டாவேர்ன் மற்றும் மூத்த ஊடகவியலாளர் ராதையன் ஆகியோர் காகித ஆலையினைத் திறந்துவைத்தனர். நிகழ்வின் விருந்தினர்களாக USAID நிறுவனத்தி…
-
- 7 replies
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,HANDOUT ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புத்தளம் - வென்னப்புவ பகுதியில் வாழும் 25 வயதான இளைஞரே சுபுன். ருமேனியாவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நிறுவனம் ஒன்றின் ஊடாக அவர் விண்ணப்பித்துள்ளார். ''இங்கிருந்து பயனில்லை. வெளிநாடு சென்று எவ்வளவானாலும் உழைக்க வேண்டும். இல்லையென்றால் முன்னேற முடியாது," என சுபுன் தெரிவிக்கின்றார். இத்தாலி செல்லும் நோக்கத்திற்காகவே, அவர் ருமேனியா செல்லும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். நீர்கொழும்பு முதல் சிலாபம் வரையான கரையோர பிரதேசம் மற்றும் அதை அண்மித்த பகுதிகளில் வாழ்வோரில் அதிகளவானோர் இத்தாலியில…
-
- 7 replies
- 782 views
- 1 follower
-
-
குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் பயங்கரவாதம் பற்றி பேச இலங்கை வருகிறார் [19 - April - 2007] - புதிய இடதுசாரி முன்னணி கண்டனம் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் பயங்கரவாதம் பற்றி இலங்கையில் பேசுவதற்கு முன்வந்துள்ளதாக புதிய இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புதிய இடதுசாரி முன்னணி வெளியிட்ட அறிக்கையில்; போல்க் றொவிக் எனும் நோர்வே நாட்டு பயங்கரவாத எதிர்ப்பாளர், வெள்ளிக்கிழமை கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் `இலங்கையிலும், மூன்றாம் மண்டலநாடுகளிலம் பயங்கரவாத வளர்ச்சி' என்ற தொனிப் பொருளில் உரையாற்றவுள்ளார். உலக சமாதான அமைப்பினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் எனக்கூறப்படுகின்றபோதிலும் உண்மையில் இதன் பின்னணியில் பாதுகா…
-
- 7 replies
- 2.5k views
-
-
தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே பாட வேண்டும் என சிங்கள தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் ஏற்பாட்டில் இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சொற்ப அளவான பிரதிநிதிகள் சமூகமளித்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், சிங்கள தேசிய முன்னணியினரால் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. அதில், இந்தியாவில் 200 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தாலும், பெங்காளி மொழியிலேயே அவர்களின் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது. தேசிய கீதத்தை தமிழில் பாடக்கூடாது. இலங்கையின் பிரதான மொழியான சிங்களத்திலேயே பாடவேண்டும். இன்று தமிழில் தேசிய கீதத்தை இசைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால், நாள…
-
- 7 replies
- 626 views
-
-
13 ஆவது திருத்தத்தை, ரத்துச்செய்ய முயன்றால் இந்தியப்படை பிரவேசிக்கும்; விக்கிரமபாகு. அரசாங்கம் 13ஆவது திருத்தத்தை இரத்துச்செய்ய முனைந்தால் இந்தியப் படையினர் பலாத்காரமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் ஆபத்து ஏற்படும் ௭ன்று நவ சம சமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். மக்களின் காணிகளை அபிவிருத்தி ௭ன்ற பெயரால் அரசாங்கம் கொள்ளையடிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற பொது ௭திர்க்கட்சி கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே நவ சம சமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையில்…
-
- 7 replies
- 2.3k views
-
-
புலத்சினி சாரா ஜெஸ்மினாக மாறியது எப்படி? தாயார் கவிதா தகவல் July 27, 2020 உயிர்த்தஞாயிறுதற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான முகமட் ஹஸ்துனின் மனைவி சாரா ஜெஸ்மின் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியின் மனைவியுடன் பெப்ரவரி முதல் ஏப்பிரல் 26 ம் திகதிவரை தங்கியிருந்தார் என சாராவின் தாயார் கவிதா தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2015ம் திகதி ஜூலை மாதம் தனியார் வகுப்புக்கு சென்ற மகள் வீடு திரும்பவில்லை, நான் அவ்வேளை அபுதாபியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன் எனது தாயார் மூலம் மகளை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்தேன் என கவிதா ராஜேந்திரன் தெரிவி…
-
- 7 replies
- 1.5k views
-
-
http://bcove.me/pip1vkav Sri Lanka Mr Speaker, the last Government agreed in late 2009 to hold the 2013 Commonwealth Meeting in Sri Lanka. That was not my decision. But I was determined that I would use the presence of the Commonwealth and my own visit to shine a global spotlight on the situation there and that is exactly what I did. I became the first foreign leader to visit the north since independence in 1948 and by taking the media with me, gave the local population the chance to be heard by an international audience. I met the new provincial Chief Minister from the Tamil National Alliance, who was elected in a vote that only happened because of the spotlig…
-
- 7 replies
- 928 views
-
-
a) யுன் 20 அன்று தவறாது வாக்களியுங்கள் b) கனடியத் தமிழருக்கு ஓர் அமைப்பு! c) தமிழர் அமைப்புகளை இணைக்கும் அமைப்பு d) நாடுகடந்த தமிழீழ அரசை வலுப்படுத்தும் அமைப்பு e) இளையோர், பெண்களை முதன்மைப்படுத்தும் அமைப்பு f) மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு g) சனநாயக விழுமியங்களுக்கமைய கட்டியமைக்கப்படும் மக்கள் மயப்படுத்தப்பட்ட அமைப்பு வாக்களிப்பு நேரம் காலை 9 மணி தொடங்கி மாலை 9 மணி வரை மேலதிக விபரங்கள் http://www.tamilelections.ca/eng/index.html http://www.tamilwin.com/view.php?2a36QVl4b44t98834bb2IPPee2311GGccd3iipD3e0dpZLuQce03g2FF2cddbjoo00 கனடியத் தமிழர் தேசிய அவைக்கு கனடா தழுவி 22 உறுப்பினர்கள் தெரிவாக உள்ளனர்.…
-
- 7 replies
- 1.3k views
-
-
13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்டால் தேசிய நல்லிணக்கமும் இல்லாமல் போகும் – கம்மன்பில 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தற்போதுள்ள தேசிய நல்லிணக்கமும் இல்லாமல் போகும் என நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். 13 ஆவது திருத்தம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்றும் அதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என என்றும் குறிப்பிட்டார். தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் ஆகியவற்றை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என உதய க…
-
- 7 replies
- 931 views
- 1 follower
-
-
“நான் கொல்வதற்குத் திட்டமிட்ட ஒரு மனிதர் என்றால் அது பிரபாகரனே” - சரத் பொன்சேகா December 25, 2018 “அமைச்சராக வேண்டுமெனில் மன்னிப்புக் கேட்க வேண்டுமென சிறிசேன என்னிடம் கோரினார்” அமைச்சுப் பதவி வேண்டுமென்றால், மன்னிப்புக் கோர வேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைக் கேட்டதாக, இலங்கையின் முன்னாள் முன்னாள் ராணுவத் தளபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாவனல்லை பிரதேசத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஓர் அமைச்சுப் பதவிக்காக ஜனாதிபதியிடம் தான் மன்னிப்புக் கோரப் போவதில்லை எனவும் இதன்போது அவர் தெரிவித்தார். இலங்கையில் அண்மையில் ஏற்பட்டிருந்த அரசிய…
-
- 7 replies
- 1.4k views
-