Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதனை ஐக்கிய நாடுகளும், சர்வதேசமும் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றது. இவ்வாறு கூறியுள்ளார் பான் கி மூனின் பேச்சாளர் மாட்டின் நெர்ஸ்கி. . இலங்கை அரசின் தற்போது வெளியிடப்பட்ட அறிக்கை உங்களுக்கு கிடைத்ததா என கேள்வி எழுப்பப்பட்டது. அந்த அறிக்கைக்கு ஐக்கிய நாடுகளின் பதில் என்ன எனவும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் வழங்கிய மாட்டின்; . ஐக்கிய நாடுகளுக்கு அறிக்கை உத்தியோக பூர்வமாக கிடைக்கவில்லை ஆனால் அது வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் அந்த அறிக்கையில் உள்ளனவா என்பது பற்றி எமக்கு இன்னமும் தெரியாது. என்றாலும் இலங்கையின் செயற்பாடு தொடர்பில் நாம் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் …

    • 6 replies
    • 1k views
  2. கோட்டே ரஜமஹா விகாரையில் தங்கியிருந்த பௌத்த பிக்குகள் இருவர் இனந்தெரியாத நபர்களால் இன்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா பொலிஸார் தெரிவித்தனர். வண. பொரலஸ்கமுவ குணரட்ன தேரர் (65), வண பிட்டிகல தினசிறி தேரர் (75) ஆகியோரே பலியானவர்களாவர். இவ்விரு பிக்குகளும் நீண்டகாலமாக இவ்விகாரையில் வசித்து வந்தவர்களாவர். இப்பிக்குகளில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது உயிரிழந்தார். இப்பிக்குகள் இருவருக்கும் கடும் காயங்களுக்குள்ளாகியிருந்தனர். இச்சம்பவத்தினால் கோட்டே பகுதிமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்த நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டனர். இக்கொலைகளை புரிந்த குழுவினர் வான…

    • 6 replies
    • 1.4k views
  3. சிறிலங்கா சுகாதார அமைச்சரின் செயற்பாடுகளை சகிக்க முடியாமல் சிறிலங்காவை விட்டு வெளியேறுவது என்று அந்நாட்டின் புகழ்பெற்ற 6 மருத்துவர்கள் முடிவு செய்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  4. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கில் புலிகள் வலிந்த தாக்குதலை நடத்தத் திட்டமிட் டிருப்பதால், குடாநாட்டில் பாதுகாப்பு நடை முறைகளை இறுக்கமாகப் பேணவுள்ளதாக யாழ். படைகளின் கட்ட ளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி அறிவித்துள்ளார். கடந்த புதனன்று பலாலியில் உள்ள யாழ். படைத் தலைமையகத்தில், குடாநாட்டில் இருந்து வெளியாகும் நாளிதழ்களின் ஆசிரிய பீடப் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தச் சந்திப்பின்போது குடாநாட்டின் பாது காப்பு நடைமுறைகள் எந்தளவுக்கு இறுக்கப் படவுள்ளன என்பது குறித்தும் அவர் விவரித் திருந்தார். ஊரடங்குச் சட்டம் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறைப் படுத்தப்படும். இதற்கு முன்னர் இரவு 9 மணி முதல் அதிகாலை 4.30 மண…

    • 6 replies
    • 1.9k views
  5. உயிரிழந்த இராணுவ உயர் அதிகாரியான மேஜர் ஜென்ரல் ஜானக பெரேராவுக்கு அரசாங்கம் உரிய மரியாதையை வழங்கவில்லையென ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. உயிரிழந்த ஜானக பெரேரா மற்றும் அவருடைய மனைவியின் பூதவுடல்கள் மக்கள் அஞ்சலிக்காக அநுராதபுரம் எடுத்துச்செல்லப்படுகின்றன. உலங்குவானூர்தி மூலம் அநுராதபுரத்துக்கு எடுத்துச்செல்வதற்காக இரண்டு பூதவுடல்களும் இரத்மலானை விமானநிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும், பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லையெனக் கூறி இரண்டு பூதவுடல்களையும் விமானநிலையத்துக்குள் அனுமதிக்காமல் வீதியோரத்தில் வைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது. நண்பகல் வரை இருவரின் பூதவுடல்களை விமானநிலையத்துக்குள் கூட அனுமத…

    • 6 replies
    • 3.7k views
  6. எங்களுடைய நிலத்திற்கு செல்ல வேண்டும். இல்லையெனில் உயிரை துறப்போம்: வடக்கு மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்பு: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:- யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மீள் குடியேற்றம் தொடர்பில் சாதகாமான பதிலினை அளிக்காத பட்சத்தில் 22ம் திகதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தீர்மானித்து உள்ளனர். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் , முகாம் தலைவர்கள் மற்றும் மக்களுடனான சந்திப்பு வெள்ளிக்கிழமை மாலை யாழ்.பாடி விடுதியில் நடைபெற்றது. அந்த சந்த…

    • 6 replies
    • 558 views
  7. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழக ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் சோதனைகளில் பாரிய தவறுகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கையின் மருத்துவ ஆய்வக விஞ்ஞான கல்லூரி சுட்டிக்காட்டியுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இலங்கையின் மருத்துவ ஆய்வக விஞ்ஞான கல்லூரியின் தலைவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழக ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் சோதனைகளில் நோயாளிகள் என அறிவிக்கப்பட்ட பலர் பின்னர் நோயாளிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக மருத்துவ ஆய்வக விஞ்ஞான கல்லூரியின் தலைவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழக ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகள் குறித்த அறிக்கைகள் சரியானவையா என்பது குறித்து பலத்த சந்தே…

    • 6 replies
    • 762 views
  8. குடும்பத்துடன் தப்பிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் இறுதிவரை புறமுதுகு காட்டாமல் தன் மக்களுடன் இருந்து; உயிர் நீத்த பிரபாகரனை விமர்சிக்கும்; உரிமை உலகிலுள்ள எவருக்கும் இல்லை - வீ. ஆனந்தசங்கரி “மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்” என்ற பழமொழி இன்றையை சூழ்நிலையில் எனக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமென நான் என்றும் எண்ணியவன் அல்ல. அவர்கள் கையாண்ட சில வழி முறைகளை ஒழிவு மறைவின்றி சுட்டிக்காட்டியும் கண்டித்தும் வந்துள்ளேன். அவ்வாறு நான் நடந்து கொண்டமைக்கு முக்கிய காரணம் நான் வன்முறையை எதிர்க்கும் காந்தியவாதியாக ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தவன் என்பதாலேயாகும். நான் யாரையும் அடையாளம் காட்டி குற்றம் சாட்டு…

  9. யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை நாட்டில் ஏற்பட்டுள்ள கனமழையின் காரணமாக இன்று யாழ். மாவட்ட பாடசாலைகள் நிறுத்தப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அறிவுறுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் கனமழை பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் அறிக்கையிட்டுள்ளது.அதனால் மாவட்டத்தில் பெரும் பகுதி வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுகிறது.இதனால் மாவட்டத்தில் இன்றைய தினம் பாடசாலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதோடு குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நீர்நிலைகளுக்…

  10. மட்டக்களப்பு நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்! மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் நிலவுகின்றது. இலங்கைக்கு தென்கிழக்காக தற்போது நிலை கொண்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழைபெய்துவருகின்றது. இதன்காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று தொடக்கம் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்து செய்வதில் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர். அத்துடன் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச ச…

  11. புதுக்குடியிருப்பில் விமானக் குண்டுத் தாக்குதல்: குழந்தை உட்பட இருவர் பலி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் ஒரு வயது குழந்தை மற்றும் 12 வயது சிறுமி பலியாயினர். மேலும் 15 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 5.15 முதல் 5.45 வரை இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. புதுக்குடியிருப்பு பரந்த வீதியில் மக்கள் குடியிருப்புக்கள் மீது 4 கிபீர் விமானங்கள் மூலம் 16 குண்டுகள் வீசப்பட்டன. இத்தாக்குதலில் ஒரு மாத கைக்குழந்தை உயிர் தப்பியது. 11 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் படுகாயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் ஆறு ப…

  12. ''ஊடக அறிக்கைகளில் தமிழ் அரசியல்வாதிகள் சர்வதேச விசாரணை வேண்டும் என கேட்கிறார்கள்'' என்று தற்போதைய பாதுகாப்பு செயலரும் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியுமான கமால் குணரட்ன கூறி வருவதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்று (14.07.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில் கூறிள்ளதாவது, கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு சர்வதேச நிபுணர்கள் முன்னிலையில் நடந்தால் இறுதிப் போரில் முக்கிய தளபதியாக வன்னிப் போர்க்களத்தில் நின்ற கமால் குணரட்ன மாட்டிக் கொள்ள வேண்டி வரும் என்ற பயத்தினால் உளற ஆரம்பித்துள்ளார். நம்பத் தயார் இல்லை தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக அரச படைகளினாலும் ஆ…

    • 6 replies
    • 503 views
  13. விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் ஓயவில்லை : கோத்தபாய முழக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் இன்னமும் முழுமையாக ஒயவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமது இலக்குகள் நிறைவேறும் வரையில் ஓயப்போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் உறுதியுடன் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெப்பிலியான சுனேத்திராதேவி விஹாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களின் மனோ நிலை தொடர்பில் நடத்திய சோதனையின் போது இந்த விடயங்கள் தெரியவந்தது என அவர் சுட்டிக்காட்டிய…

    • 6 replies
    • 738 views
  14. யாழில் மாற்றுவலுவுடையோருக்காக விசேட திட்டம் இலங்கையில் முதன் முறையாக யாழ் மாவட்டத்தில் மாற்றுவலுவுடையோருக்காக விசேடமாக உள்ளூரிலேயே தயாரிக்கபட்ட மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் யாழ் மாவட்டத்தில் இன்று மாலை வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு யாழ் மாவட்ட மோட்டார் வாகன திணைக்களத்தினால் இலங்கையில் முன்னுதாரணமான முறையில் முதன்முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு வடமாகாண மாகாண மோட்டார் வாகன திணைக்களத்தின் நடமாடும் சேவை நடாத்தப்பட்டது. https://www.facebook.com/LankasriTv/videos/1166145185015299/?ref=embed_video&t=42 சாரதி அனுமதி பத்திரம் இதன் பொழுது உள்ளூரில் மாற்றுதிறனாளிகளுக்கு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு பயணிப்பது மற்றும் அவ…

  15. பிரதான கட்சிகள் யாழில் வேட்புமனுத் தாக்கல் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் முக்கிய தமிழ்க் கட்சிகள் பலவும் இன்று (18) தாக்கல் செய்யதுள்ளன. இதற்கமைய யாழ். கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வேட்பு மனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன யாழ். மாவட்டச் செயலகத்தில் தாக்கல் செய்தன இதே போன்று ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவும் தத்தமது கட்சிகளின் வேடபுமனுக்களை தாக்கல் செய்துள்ளன. …

    • 6 replies
    • 766 views
  16. இலங்கைத் தீவு பொருளாதார ரீதியாக மேலும் பலவீனமான நிலையை அடைந்திருக்கின்ற சூழலில் தான், கொரோனாவின் இரண்டாவது அலை தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. இப்போது நிலவுவது, இரண்டாவது அலையே இல்லை என்றும், இன்னமும் சமூகத் தொற்றாக மாறவில்லை என்றும் விஞ்ஞானபூர்வமான விளக்கங்களை அரச அதிகாரிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், முதல் அலையை விட மூர்க்கத்தனமானதாக இப்போதைய அலை காணப்படுகிறது. நாட்டில் நிலைமை படுமோசமான கட்டத்தை அடைந்து கொண்டிருக்கிறது என்பதை சாதாரண மக்களால் ஊகிக்க முடிகிறது, உணர முடிகிறது. முதல் அலை தாக்கிய போது, நாடு பொருளாதார ரீதியாக பலவீனமான நிலையில் இருந்தது. அந்நியச் செலவாணிக் கையிருப்பு தேய்ந்து போயிருந்தாலும், சமாளிக்கக் கூடிய நிலையில் அரச…

  17. மலையக மக்கள் குறித்து சோனியா காந்திக்கு எடுத்துரைப்பு இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் இந்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் தலைமையிலான குழு சந்தித்துள்ளது. சந்திப்பு குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கையிலுள்ள 13ம் அரசியல் அமைப்பு, மலையக இந்நிய வம்சாவளி மக்களுக்கான தனித்தன்மை, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், என்பவற்றை கருத்திற்கொண்டு இந்திய அரசாங்கத்தால் மலையக மக்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும் எனவும் கலந்துரையாடப்ப…

  18. யாழ் போதனா வைத்திய சாலையில் கண் சிகிச்சை பிரிவில் சிங்களவர்கள் இடையே கத்திக்குத்து யாழ் நிருபர் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 23, 2010 தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண்சிகிச்சைப் பகுதிக்கு தொழில்நுட்பவியலாளராக நியமனம் பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் 26 வயதுடைய கமகே என்பவர் வந்திருந்தார். அவரைச் சந்திப்பதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரியும் 22 வயதுடைய அஞ்சலி என்பவர் வந்திருந்தார். காதலர்களான இருவரும் உரையாடிக் கொண்டு இருக்கையில் இருவருக்கும் இடையில் சண்டை மூண்டது. இருவரும் தம் கைகளில் வைத்திருந்த கத்தியினால் மாறி மாறி குத்திக் கொண்டனர். இதனால் கண்சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளர்கள் கதிகலங்கினர். கத்திக்குத்துப…

  19. உள்நாட்டு பொறிமுறை ஊடான தீர்வு: புலம்பெயர் தமிழர்களை சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி ! உள்நாட்டு பொறிமுறை ஊடான தீர்வு தொடர்பாக புலம்பெயர் தமிழ் மக்களுடன் கலந்துரையாட உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. நீதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பு ஒன்றில் இதனை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக விரைவில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் இலங்கை ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த விவாதம் வெற்றியடையும் பட்சத்தில், உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் விஜயதாச ராஜபக்ச கூறியுள்ளார். https://athavannew…

    • 6 replies
    • 304 views
  20. கருணா குழுவினரால் இளைஞர்கள் கொல்லப்படுவதையிட்டு மக்கள் விசனம். கருணா குழுவினர் அப்பாவி இளைஞர்களை வீணாக கொல்ல கொடுப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். கடத்தி செல்லப்படும் ஏழை குடும்பத்து இளைஞர்களிடம் பணம் அல்லது தமது இயக்கத்துடன் சேருமாறு மிரட்டுகின்றனர். மறுக்கும் இளைஞர்களை குண்டுகள் மற்றும் ஆயுதங்களை கொடுத்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஒரு முறை சென்ற தாக்குதல் நடாத்திவிட்டுவந்தால் உங்களை விடுதலை செய்வதாக கோரி இளைஞர்களை கொண்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றார்கள். நேற்று வியாழக்கிழமை வவுணதீவு விடுதலை புலிகளின் முன்னரங்குக்கு முன்பாக கடத்தி செல்லப்பட்ட இளைஞனிடம் குண்டு பொருத்தி மோட்டார் சைக்கில் கொடுத்து அ…

    • 6 replies
    • 2.8k views
  21. http://www.youtube.com/watch?v=pvrl71ILdHo கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஏற்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அவரது சடலம் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் பொலிஸார் இந்த தகவலை வெளியில் கசியாமல் பாதுகாக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் இரண்டு நாட்களாக கொலை செய்யப்பட்ட நபர் வீடு திரும்பாததைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் பொலிஸாரிடம் இது தொடர்பில் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தகவல் வெளியில் கசிந்துள்ளது. இதற்கிடையில் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவையும் மீறி பொலிஸார் இந்த ஆர்ப்…

  22. சிறிலங்காவின் விளையாட்டு அணிகளை புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் வேண்டுகோள் [செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2007, 17:21 ஈழம்] [அ.அருணாசலம்] "சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அனைத்துலக மன்னிப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு போராட்டத்திற்கு அதரவு அளிப்பதுடன், சிறிலங்காவின் விளையாட்டு அணிகளை முழு அளவில் புறக்கணிக்குமாறு" தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இத்தகவலை அனைத்துலக ஊடகமான ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைப்பதற்கு ஆதரவை திரட்டும் முகமாக அனைத்துலக மன்னிப்புச் சபை 'விதிகளின் அடிப்படையில் விளையாடுங்கள்' எனும் விழிப்புணர்வு போரா…

  23. Posted on : Thu Jun 7 7:38:09 EEST 2007 கொழும்பில் பிரபல வர்த்தகரைக் கடத்தி 24 1/2 கோடி பெற்றுக்கொண்டு விடுவிப்பு! கொழும்பின் பிரபல வர்த்தகரான நிஸ்தார் என்பவரைக் கடத்திச் சென்று, அவரிடம் இருபத்திநான்கரைக் கோடி ரூபாவைக் கப்பமாகப் பெற்றுக்கொண்டு விடுவித்த சம்பவம் ஒன்று கடந்த மாத மத்தியில் இடம்பெற்றுள்ளது. இந்நத விவகாரம் நேற்று நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தெரிவித்தவர் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான லக்ஸ்மன் செனவிரட்ண. அவர் வெளியிட்ட தகவலின் பிரகாரம் வர்த்தகர் கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்ட சம்பவம் இதுதான். கடந்த மே 16ஆம் திகதி கொழும்பின் பிரபல வர்த்தகரான நிஸ்தார், பக்ஸ் அறிவித்தல் ஒன்றின் மூலம் கண்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார். "டுபாயில் பல ஆயிர…

  24. "ராஜகிரிய கிளைமோர்" நபர் விடுதியில் கைது - அதனால் தமிழர்கள் வெளியேற்றமும் சரியே: கேகலிய ரம்புக்வெல. ராஜகிரியவில் கிளைமோரைப் பதுக்கியவர்கள் கொழும்பு விடுதிகளில்தான் தங்கியிருந்தனர் என்றும் இத்தகைய செயற்பாடுகளினால்தான் கொழும்பு விடுதிகளிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர் என்றும் அந்நடவடிக்கை இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை அல்ல என்றும் சிறிலங்கா பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் தெரிவித்ததாவது: தொப்பிக்கல பிரதேசத்தை கைப்பற்றிய பின்னர் கிழக்கில் தேர்தல் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கிழக்கில் 99 விழுக்காடு பிரதேசத்தை அரசாங்கம் கைப்பற்…

  25. உலகளாவிய பயண இதழான டைம் அவுட், 2025 ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடமாக இலங்கையை தரவரிசைப்படுத்தியுள்ளது, இது அந்த மாதத்திற்கான சிறந்த பயண இடங்களின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டது. டைம் அவுட் இலங்கையை அதன் வெப்பமண்டல காலநிலை, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகுக்காகப் பாராட்டியதுடன், இப்பண்புகள் ஒக்டோபரில் பயணிகளுக்கு ஏற்ற இடமாக இலங்கையை அமைப்பதாக கூறியுள்ளது. தங்க நிறக் கடற்கரைகள் மற்றும் மலைநாட்டு நடைபயணங்கள் முதல் பண்டைய கட்டிடங்கள் மற்றும் வனவிலங்கு சஃபாரிகள் வரை, இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்தையும் வழங்குவதாக சிறப்பிக்கப்பட்டது. இலையுதிர் கால வண்ணங்கள் மற்றும் பருவகால விழாக்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இலங்கையைத் தொடர்ந்து துருக்கி மற்றும் ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.