ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143593 topics in this forum
-
யாழுக்கு சந்திரிகா விஜயம் எஸ்.நிதர்ஸன் யாழ்ப்பாணத்துக்கு இன்று (25) வருகைதரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நான்கு பிரதேச செயலகங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்ளவுள்ளார். ஐனாதிபதி தேசிய ஒருமைப்பாட்டுக்கும்; நல்லிணக்கத்துக்குமான பணியகத்தினால் தெல்லிப்பளை சங்கானை கரவெட்டி மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகங்களின் ஊடாக நடமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காகவே, அவர் இங்கு வருகைதருகின்றார். வருகைதரும் அவர் தெல்லிப்பழை பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட பளை வீமன்காமம் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைக்கவுள்ளார். மேலும்…
-
- 6 replies
- 1k views
-
-
புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு..! மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் வைத்து நேற்றிரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய சந்திரன் விதுஷன் எனும் இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுவதாக புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்ட இளைஞனே இன்று இவ்வாறு சடலமாக மீட்கப்படுள்ளார். மேலும், தனது மகனை நேற்றிரவு கைது செய்து கொண்டுசென்று, அடித்து சித்திரவதை செய்து கொலை செய்திருக்கலாமென உயிரிழந்தவரின் தாயார் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், சம்பவ இடத்து வருகை தந்த மாவட்ட நீதவான் நீதிபதி கருப்பையா செல்வராணி சம்பவம் தொடர்பாக ஏறாவூர…
-
- 6 replies
- 798 views
-
-
மயிலிட்டித்துறை விடுவிப்புக்கு நிகழ்விற்கு என்னை ஏன் அழைக்கவில்லை? 27 வருடங்களின் பின்னர் மயிலிட்டித் துறைமுகம் மக்களிடம் கடந்த 3 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்குத் தன்னை ஏன் அழைக்கவில்லை என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்ப்பாண மாவட்டச் செயலரிடம் விளக்கம் கோரிக் கடிதம் அனுப்பியுள்ளார். காணி விவகாரம் தனக்குரியது எனவும், இதனால் மயிலிட்டிக் காணி விடுவிப்பு நிகழ்வுக்குத் தன்னை ஏன் அழைக்கவில்லை என்றும், இதற்குரிய விளக்கத்தை வழங்குமாறும் தனது கடிதத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். இதேவேளை, இந்…
-
- 6 replies
- 492 views
-
-
சிறீலங்காவிற்கு, இந்தியா உதவியாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கல் திகதி: 04.02.2010 // தமிழீழம் சிறீலங்கா அரசிற்கு இந்தியாவின் உதவியாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுக்கொண்டிருப்பதாக இந்திய அதிகாரி அசோக்கே.காந்தா தெரிவித்துள்ளார். மன்னாரின் மடுவில் இருந்து தலைமன்னார் வரையான தொடருந்துப்பாதை புனரமைப்பிற்கு இந்தியா நிறுவனத்துடன் சிறீலங்கா அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்தாயக பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ள நிலையில் பலஅபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்தியாவின் நிறுவனங்கள் காலூன்றியுள்ளன. இந்நிலையில் மன்னார் மடுவில் இருந்து தலைமன்னார் வரையான 63 கிலோ மீற்றர் தூரம் க…
-
- 6 replies
- 788 views
-
-
செவ்வாய்க்கிழமை, 14 ஒக்டோபர் 2014 16:53 0 COMMENTS –வடிவேல் சக்திவேல் தமிழ் மக்களோ, முஸ்லிம் மக்களோ வாக்களிக்காவிட்டாலும், நிட்சயம் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷவே மீண்டும் ஜனாதிபதியாக வருவார் என மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். ஏனெனில், 90 சதவீதமான சிங்கள மக்கள் அவர் பக்கமே நிற்கின்றார்கள் எனவும் அவர் கூறினார். போரதீவுப்பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட 27 மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம்; 27 இலட்சம் ரூபாய் நிதி அந்தப் பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூ…
-
- 6 replies
- 1k views
-
-
வடக்கில் வாழும் முஸ்லிம் மக்களது பிரச்சினைகள் சவால்கள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் எடுத்துரைக்கும் ஒரு முக்கிய நிலையமாக இயங்க உள்ள வடமாகாண முஸ்லிம் பிரஜைகளுக்கான குழுவின் Northern Muslim Citizens Committee (NMCC) பிரதான காரியாலயம் ஏ.எச்.எம்.முபாரக் மௌலவி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை(10) ,மன்னாரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைமைக் காரியாலயத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றினார். இதன் போது குறித்த நிலையத்தின் பணிப்பாளர் நிஹ்மத்துல்லா,தலைவர் ஏ.எச் எம்.முபாரக் மௌலவி, செயலாளர் ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் ஹிதாய…
-
- 6 replies
- 704 views
-
-
முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் மீண்டும் ஒரு போர்ச்சூழல் போன்ற நிலைமை தாயகத்தில் உருகியுள்ளது. மக்கள் மீது சிங்கள அடக்குமுறை மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்த அடக்குமுறை அதிகரித்து செல்லுகின்றது. அவர்களின் பொருளாதார வாழ்வாதாரம் மறுக்கப்பட்ட நிலையில் அந்த மக்கள் மீண்டும் ஒரு சூனிய வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த மக்கள் செய்ததாக குற்றம் எதுவும் இல்லை. ஆனால் இவர்கள் அனாதைகளாக விடப்பட்டது போன்ற ஒரு உணர்வே உள்ளது. இந்த அவலத்தில் இருந்து மக்களை மீட்க வேண்டிய கடமை, பொறுப்பு புலம்பெயர் மக்களுக்கு, அமைப்புக்களுக்கு நிறையவே உண்டு.
-
- 6 replies
- 1.2k views
-
-
இலங்கையின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் ஆறுமுக தொண்டைமான் கோவையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். அவர் வெள்ளிக்கிழமை இரவு ஹோட்டலில் தங்கியிருந்தபோது, மது அருந்தியுள்ளார். போதை அதிகமானதால், அவர் அங்குள்ள ஹோட்டல் ஊழியர்களுடன் தகராறு செய்துள்ளார். அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. பிறகு ஹோட்டல் பகுதியில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்திற்கு, ஊழியர்கள் தகவல் கொடுத்துள்ளனர். உடனே, இலங்கையில் இருந்து வந்திருக்கும் அமைச்சர் என்பதால், அந்த ஹோட்டலுக்கு அசிஸ்டெண்ட் கமிஷனரே நேரில் சென்றார். அவர், அங்கு போய் பார்த்தபோது, போதையின் உச்சத்தில் இருந்த அந்த அமைச்சரை, வெகு நேரம் பேசி, அவரை சாந்தப்படுத்தி... ''நீங்கள் ஒரு விஐபியாக கோவைக்கு வந்துள்ளீர்கள். இ…
-
- 6 replies
- 1.1k views
-
-
இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவ வழியில் தீர்வினைக் காணமுடியும் என்று தான் நம்பவில்லை என இலங்கை ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சரும், முப்படைகளின் தளபதியுமாகிய மஹிந்த ராஜபக்க்ஷ இன்று தெரிவித்திருக்கிறார். செவ்வாய்க் கிழமையன்று அலரி மாளிகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பத்திரிகையாசிரியர்கள் ஆகியோருடன் நடத்திய விசேட சந்திப்பொன்றின்போது கருத்துவெளியிட்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றே காணப்படவேண்டுமென்று கூறியுள்ள அதேவேளை நாட்டில் பயங்கரவாதத்தினை முற்றாக ஒழிக்க தனது அரசு தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுக்குமென்றும் தெரிவித்தார். அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவிடம் இனப்பிரச்சினைத் தீர்விற்கான ஒரு …
-
- 6 replies
- 2.1k views
-
-
தமிழ் மக்களுக்கு சுயாதீன தமிழ் ஈழமொன்று வழங்கப்பட வேண்டும் என நோர்வே அரசாங்கத்தின் ட்ரொன்ட் ஜென்ஸ்ட்ரெட் வெளியிட்ட கருத்துக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எந்த வகையிலும் தமிழீழம் வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. வன்னியில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட மாட்டாதென குறிப்பிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை நோர்வேயில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே குறித்த நோர்வே அரசியல்வாதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
-
- 6 replies
- 2k views
-
-
ஈழத்தில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை நிறுத்தப்பட்டு அமைதி காண சென்னையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரமாண்ட மனித சங்கிலி அணிவகுப்பு நடத்தப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சி, பூநகரிக்குப் பின்னரும் நீளப்போகின்ற மரபுவழிப் போர் 09/11/2008 -------------------------------------------------------------------------------- விடுதலைப் புலிகள் மரபுவழியில் போரிடும் திறனை இழந்து விட்டதாக சில மாதங்களுக்கு முன்னர் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். ஆனால் இப்போதும் அவர்கள் மரபுவழியிலான தற்காப்புச் சண்டைகளையே நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதை நிரூபிக்க வேறு ஆதாரங்கள் ஏதும் தேவையில்லை. அரசாங்கம் தரும் போர்க்கள நிலைவரப் புள்ளிவிபரங்களே போதும். மன்னாரின் வடபகுதியில் புலிகள் சண்டையின்றி பின் விலகிக் கொண்டபோது தான் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா அவ்வாறு கூறியிருந்தார். அவரது கூற்று நூற…
-
- 6 replies
- 2.3k views
-
-
“அப்பா சிறையில் வருமானத்திற்காக கச்சான் விற்கிறோம்” – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:- புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யபட்டு உள்ள பிரதான சந்தேக நபர்களில் ஒருவரின் பிள்ளைகள் வறுமை காரணமாக யாழ். நகரில் கச்சான் விற்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் முன்னதாக கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களில் ஒருவரின் பிள்ளைகளே குடும்ப வறுமை காரணமாக கச்சான் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்.நகர் பகுதிகளில் கச்சான் விற்கும் சிறுவன் ஒருவன் தனது அப்பா புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தான். …
-
- 6 replies
- 1.4k views
- 1 follower
-
-
தமிழ் மொழிக்கு இடமில்லை சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படும் : கோட்டாபய அரசு சுதந்திரதின நிகழ்வில் தனிச்சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவித்துள்ளது கோட்டாபய அரசு. அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் உடனான சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சிக் செயலாளர் கமல்குணரட்ன இன்று இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய கீதம் இசைக்கப்படுவது ஜனாதிபதி சுதந்திர தின வைபத்தில் கலந்துக்கொள்ளும் வேலையில் தேசிய கொடியை ஏற்றும் பொழுது தேசிய கீதம் இசைக்கப்படும். சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இடம்பெறும். கடந்த காலம் முதல் தேசிய கொடி தொடர்பில் உள்ள குறைபாடுகள் குறித்து பேசப்பட்டு வந்தது. இந்நில…
-
- 6 replies
- 637 views
-
-
யாழிலேயே அதிக ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் ; ஏன் விசாரணை இடம்பெறவில்லை - சுமந்திரன் கேள்வி (நா.தனுஜா) ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் பேசுகையில் லசந்த விக்ரமதுங்க, கீத் நொயார், பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் பற்றியே பேசப்படுகின்றது. அவர்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் கடந்த 20 வருட காலப்பகுதியில் அதிக ஊடகவியலாளர்கள் யாழ் மாவட்டத்திலேயே கொள்ளப்பட்டுள்ளனர். ஒரு ஊடக நிறுவனம் மீது 33 தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதே போல் 14 தமிழ் ஊடகவியலாளர்கள் கொள்ளப்பட்டுள்ளனர். இவை தொடர்பில் எதுவித விசாரணைகளும் இடம்பெறாமை வெட்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது…
-
- 6 replies
- 1.4k views
-
-
திருகோணமலையில் 1,000 கிலோ வெடிபொருட்களுடன் பார ஊர்தி: கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது திருகோணமலை பனிக்கர் பகுதியில் 1,000 கிலோ வெடிபொருட்களை ஏற்றிச்சென்ற பார ஊர்தியை சிறிலங்கா கடற்படையினர் பறிமுதல் செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பார ஊர்தியின் சாரதியும், உரிமையாளரும் என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை கடற்படை முகாமில் பார ஊர்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் கடற்படையினர் தெரிவித்தனர். -Puthinam-
-
- 6 replies
- 2.2k views
-
-
இலங்கை சென்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா அலரிமாளிகையில் தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டார்: இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்றுள்ள இந்தியாவினது வெளிவிவகார அமைச்சர் எஸ்.என். கிருஷ்ணா, நேற்றையதினம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஷிராணி ராஜபக்ஷ ஆகியோர் ஏற்பாடு செய்திருந்திருந்த தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டார். நேற்றைய தினம் திங்கட்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற தைப் பொங்கல் கொண்டாட்ட நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கை பிரதமர் தி.மு.ஜயரட்ன, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் துணைவியார் ஷிரந்தி ராஜபக…
-
- 6 replies
- 908 views
-
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முதல் கட்டமாக குரங்கு, மந்தி, மர அணில் மற்றும் மயில் ஆகியவற்றை மட்டுமே இந்த கணக்கெடுப்பில் உள்வாங்கப்படுகின்றன கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் பயிர் செய்கைகளுக்கு சேதம் விளைவிக்கும் வன மிருகங்களை கணிப்பிடும் நடவடிக்கையை 5 நிமிடங்களில் நடத்த அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். நாடு முழுவதும் காணப்படுகின்ற பயிர்களை, வன மிருகங்கள் கடுமையாக சேதப்படுத்தி வருவதாக கடந்த காலங்களில் கூறப்பட்டு வந்தன. குறிப்பாக குரங்கு, யானை, மர அணில் உள்ளிட்ட பல்வேறு மிருகங்கள் வீட்டு தோட்டங்களில் செய்யப்படுகின்ற பயிர்களை சேதப்படுத்தி…
-
- 6 replies
- 478 views
- 2 followers
-
-
அம்பாறை தெஹியத்த கண்டிய பிரதேசத்தில் வாக்கு மோசடியில் ஈடுபட முயற்சி மேற்கொண்ட அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் உள்ளிட்ட ஆதரவாளர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பரவான மத்திய மாகாவித்தியாலத்தில் உள்ள வாக்கெடுப்பு மையத்திற்கு அருகில் வைத்து காவற்துறை விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பட்டுக்குழு தெரிவித்துள்ளது. தொழில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வா, அமைச்சரின் இணைப்பதிகாரிகளில் ஒருவரான குடு லால் உள்ளிட்ட ஆதரவாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் பாதுகாப்பு உத்தியோத்தர்கள் உள்ளிட்ட ஆயுதம் தரித்த சிலரை தெஹியத…
-
- 6 replies
- 1.9k views
-
-
கொரோனா ஆபத்தை நீக்கி தேர்தலைப் பற்றி சிந்திக்குக : C.V. விக்னேஸ்வரன். கொரோனா ஆபத்தை நீக்கி இயன்றளவு விரைவாக சகஜநிலையை ஏற்படுத்திய பின்னரே தேர்தலைப் பற்றி சிந்திக்க வேண்டும் வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் C.V. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாரளுமன்றத் தேர்தலை மே 23 ஆம் திகதி நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் விடுத்த அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்களின் வாழ்வுக்கும் உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா அச்சுறுத்தலை முற்றாக நீக்குவதற்கு முன்பாக தேர்தலை நடத்தக்கூடாது எனவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் C.V. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற பதவிகளோ, அர…
-
- 6 replies
- 1.2k views
-
-
அடுத்த வருடம் ஏப்ரல் நாடு கடந்த தமிழீழ அரசு தேர்தல் Transnational Govt Press Release: Election in April 2010
-
- 6 replies
- 1.3k views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு இடம் மாற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சரத் பொன்சேகா இதுவரை காலமும் கடற்படைத் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். ஜனாதிபதியினால் 30 மாதகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படும் சிறைக் கூடத்தின் வசதிகள் குறைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சர்வதேச ஊடகமொன்றுக்கு செவ்வியளித்த போது, தேசத் துரோகிகளை துக்கில் போட வேண்டுமென வலியுறுத்தியதாகவ…
-
- 6 replies
- 1k views
-
-
இலங்கை மாணவர்கள்... 7 பேர் மீட்கப் பட்டுள்ளனர் – உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கி. கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மாணவர்கள் 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் தொடக்கம் ரஷ்யப் படையினரால் கார்கிவ் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. கார்கிவ் பிராந்தியத்தின் சில பகுதிகளை விடுவித்த பின்னர் உக்ரேனியப் படைகளால் இலங்கையர்கள், குப்யான்ஸ்க் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 7 இலங்கையர்கள் மீட்கப்பட்டதாகவும், அவர்களுக்கு உரிய மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். https://athavannews.com/2022/1299570
-
- 6 replies
- 463 views
- 1 follower
-
-
தொடர் மழைக்கான சாத்தியம் By NANTHINI 30 OCT, 2022 | 10:55 AM இலங்கையை சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டல எல்லையில் ஒரு தளம்பல் நிலை காணப்படுவதால், இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழை சற்று அதிகமாக பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (ஒக் 30) வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். வடக்கு, கிழக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி காணப்படலாம். ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவில…
-
- 6 replies
- 689 views
- 1 follower
-