ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143605 topics in this forum
-
‘கூட்டமைப்பிடம் எந்த கொள்கையும் இல்லை – அவர்களின் கைப்பாவையாக இருக்கவும் முடியாது’ மக்களின் கருத்துக்கள் மற்றும் அபிலாசைகளை மதிக்காதவர்களின் கைகளில் நான், ஒரு கைப்பாவையாக இருக்க முடியாது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் குறிப்பிட்ட எந்தக் கொள்கைகளும் இல்லை. அது ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல. அதனிடம் பொதுவான சின்னமும் இல்லை. முறைப்படி, கிரமமான கூட்டங்களை நடத்துவதும் இல்லை. எமது மக்களின் தேவைகள், அபிலாசைகளை பிரதிபலிப்பதை கைவிட்ட ஒரு குழுவினால் இயக்கப்படுகிறது. மக்க…
-
- 5 replies
- 706 views
-
-
சந்தி சிரிக்கும் இந்திய மானம்! சமஸ் சர்வதேச அளவில் இந்தியா மீண்டும் தலைகுனிந்து நிற்கிறது. இந்த முறை அவமான உபயதாரர்கள் - இந்திய ராணுவத்தினர்! அமைதி காக்கும் பணிக்காக காங்கோ வுக்கு அனுப்பப்பட்ட இந்திய வீரர்கள், அங்கு பாலியல் முறைகேடுகளில் ஈடு பட்டது அம்பலமாகி, அசிங்கமாகி இருக்கிறது! ஆப்பிரிக்க உலகப் போர் ஆப்பிரிக்க நாடுகளுக்கே உரிய வறுமை யும் அறியாமையும் சூழ்ந்த நாடு காங்கோ. கனிம வள அரசியலின் பின்னணியில், 1998-ல் தொடங்கி அங்கு நடந்துவரும் போர், நவீன உலகம் சந்தித்த போர்களி லேயே மிக மோசமானது. 8 ஆப்பிரிக்கநாடு கள், 25 ஆயுதக் குழுக்கள் இந்தப் போரின் பின்னணியில் மனித வேட்டையாடின. இதுவரை 54 லட்சம் பேரின் உயிர்களை காங்கோ போர் பறித்துள்ள…
-
- 5 replies
- 1.9k views
-
-
தொடரும் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்!- அரியாலையில் வீடும் வாகனமும் பலத்த சேதம் யாழ்ப்பாணம் அரியாலையில் முகமூடி அணிந்த மர்ம வாள்வெட்டுக் கும்பலின் அட்டகாசத்தினால் அப்பகுதியின் வீடொன்றும், காரொன்றும் சேதமாக்கப்பட்டுள்ளன. வங்கி முகாமையாளர் ஒருவரின் வீடே இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இவ்வாறு அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட வாள்வெட்டு கும்பல் வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்து நாசக்கார செயலில் ஈடுபட்டுள்ளனர். நாசக்கார கும்பலின் செயற்பாட்டிற்கு அஞ்சி வீட்டில் இருந்தவர்கள…
-
- 5 replies
- 796 views
-
-
யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் உரும்பிராய் பிரதேசத்தில் 80 கிலோகிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்துள்ளனர். இன்று புதன்கிழமை (10) யாழ்ப்பாண இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய இவர் கைது செய்யப்பட்டார் . இந்த கேரள கஞ்சா தொகையானது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்வதற்கு தயாராக இருந்த வேளை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது. யாழ். உரும்பிராயில் 80 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகபர் கைது! | Virakesari.lk
-
- 5 replies
- 776 views
-
-
கிழக்கு மாகாணத்தின் ஐந்து துறைகளுக்கான நியமனங்களை வழங்கி வைத்தார் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ஐந்து துறைகளுக்கான தலைவர்களும் பணிப்பாளர்சபை உறுப்பினர்களும் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.எம்.பி.அசங்க அபயவர்தன தலைமையில் நேற்று மாலை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்திலேயே இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம், கிழக்கு மாகாண போக்கு வரத்து அதிகார சபையினுடைய தலைவராக ஜீ.கரீதரன், கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் தலைவராக எம்.எஸ்.உதுமான் லெவ்வை, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக எம்.எஸ்.சுபை…
-
- 5 replies
- 1.2k views
-
-
Share [ வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011, 07:07.09 AM GMT ] ‘கடந்த வாரம் கனடிய அரசு அறிவித்துள்ள “சுப்பர் விசா” திட்டமானது ஏற்கெனவே தேங்கிக் கிடக்கும் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கே ஆகும். இவ்வாறு கடந்த சனிக்கிழமையன்று கனடிய தமிழ் பத்திரிகைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் கனடிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் ஜெய்சன் கென்னி தெரிவித்தார். இந்த புதிய முறையை நாம் அறிமுகம் செய்யாவிட்டால் இன்னும் சில வருடங்களில் பெற்றோர் மற்றும் உறவினர்களை “ஸ்பொன்சர்” செய்யும் விண்ணப்பங்கள் மூன்று இலட்சத்திற்கும் அதிகமாக தேங்கிக் கிடக்கும் நிலை ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்தார். ஒட்டாவா மாநகரிலிருந்து தொலைபேசி மூலமாக குடிவரவு அமைச்சர் திரு ஜெய்ச…
-
- 5 replies
- 1.3k views
-
-
தேர்தல் முடிவுகள் வௌியாகும் நேரம் அறிவிப்பு! தற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் தொகுதி வாரியான முடிவுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் நிலையங்களிலும் இரவு 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் உள்ள வாக்குப்பெட்டிகள் கிடைக்கப் பெற்றதன் பின்னர், வாக்குகளை எண்ணும் பணிக…
-
-
- 5 replies
- 540 views
- 1 follower
-
-
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர். இன்று இரவு 7.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வாகனத்தில் வருகை தந்துள்ளார். இதன் போது கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் இளைஞர் குழுவோன்று அவரின் வாகனத்தினை வழிமறித்துள்ளனர். அதனையடுத்து வாகனத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கீழே இறங்கி அவ் இளைஞர்களுடன் கலந்துரையாட முற்பட்ட சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்த அந்த இளைஞர் குழு முயன்றுள்ளது. அவரின் வாகனத்திற்கும் சேதம் விளைவித்துள்ளனர். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக பாத…
-
- 5 replies
- 822 views
-
-
“எனக்கு கோபமூட்டாதீர்கள்’’ (படம்: தமித் விக்கிரமசிங்க) நாம் தவறு செய்யவில்லை. எனக்கு கோபமூட்டாதீர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் இன்று (11) தெரிவித்தார். சிறைத் தண்டனைப் பெற்று,சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும், மகிந்த ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்கவையும், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்டவையும் பார்வையிடுவதற்காக சென்றிருந்த வேளை ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்துக்கொண்டிருந்தபோதே கோபத்தில் ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். “சில் ஆடைகளை வழங்குமாறு நானே பணிப்புரை விடுத்தேன். அது தவறல்ல. மக்களிடமிருந்து கிடைத்த வேண்டுக…
-
- 5 replies
- 614 views
-
-
இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணும் பொருட்டு சமாதானப் பேச்சுக்களை உடன் ஆரம்பிக்க வேண்டுமானால் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும். ஆயுதங்களை கீழே வைக்காமல் சமாதானப் பேச்சுவார்த்தை சாத்தியமாகாது என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்சமாதானம் என்ற சொல்லை நான் கூற மாட்டேன் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் நாம் கடல், தரை, வான் வழிகளில் செல்கின்ற போது எமக்கு அச்சுறுத்தலோ இடையூறோ இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றோம். எம்மை தாக்குகின்ற போது நாம் மீண்டும் தாக்காமல் இருந்திருந்தால் இன்று இந்த பூமியும் இல்லை நாடும் இல்லை. ஆனால் பல உயிர்களைப் பலி கொடுத்து நாம் அதனை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றோ…
-
- 5 replies
- 1.6k views
-
-
-
- 5 replies
- 2.3k views
-
-
Published By: RAJEEBAN 30 APR, 2024 | 01:02 PM இலங்கையில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.. நெருக்கடியின் போது அச்சமடைந்து ஓடாதவர் என்ற தனது சமூக ஊடக பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 18 மாதங்களிற்கு முன்னர் நாடு முன்னொருபோதும் இல்லாத மிக மோசமான நெருக்கடி நிலையில் சிக்குண்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக மின்சார துண்டிப்பு காணப்பட்டது, எரிபொருளிற்காக நீண்ட வரிசைகள் காணப்பட்டன - பணவீக்கம் மிகவேகமாக அதிகரித்துக்கொண்டிருந்தது. அனேக வர்த்தகங்கள் வீழ்ச்சியடையும் நிலையில் காணப்பட்டன என தெரிவ…
-
-
- 5 replies
- 480 views
- 1 follower
-
-
“அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழருக்குதை(சுறவம்) முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு” பாவேந்தர் பாரதிதாசன்: “தையே முதற்றிங்கள்; தைம்முதல் ஆண்டு முதல் பத்தன்று நூறன்று; பன்னூறன்று பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில் புத்தாண்டு தைம்முதல்நாள் பொங்கல் நன்னாள்” “நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே” “அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு” தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை அல்ல தை முதல் நாளே! சித்திரை முதல் நாள் ஆண்டுப் பிறப்பென்பதும், பிரபவ முதல் அட்சய வரையிலான…
-
- 5 replies
- 38.5k views
-
-
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயைக் கொலைசெய்யவந்த தற்கொலைக் குண்டுதாரி முஸ்லிம் நபர் ஒருவர் போலவே அந்த இடத்துக்கு வருகைதந்துள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அந்த நபரிடமிருந்த தேசிய அடையாள அட்டையும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளைத்தம்பி மொஹம்மது அமீன் என்ற பெயர் அந்த அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரந்துருன்சேனை, வாழைச்சேனை என்ற முகவரியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாம். அடையாள அட்டையில் காணப்பட்ட அனைத்து விவரங்களும் பொய்யானவை எனத் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அந்த நபர் பிறவுண் நிற "சேட்' அணிந்திருந்தார் என்றும் அமைச்சருக்கு சில அடி தூரம் பின்னாலிருந்து குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார் எனவும் விசாரணைகளிலிருந்…
-
- 5 replies
- 2.7k views
-
-
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அகதிகளுக்கு உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லவிருந்த லொறிகளில் ஒன்றுக்குள் இருந்து 2.5 கிலோ எடையுள்ள அதிசக்திவாய்ந்த வெடிபொருள்கள் நேற்றுப் பிற்பகல் 3.30 மணிக்கு மீட்கப்பட்டன என்று பாதுகாப்பு அமைச்சு நேற்று இரவு அறிவித்தது.வவுனியா செயலகத்தால் வாடகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 30 லொறிகளில் ஒன்றிலிருந்தே வெடி பொருள்கள் மீட்கப்பட்டன. இது குறித்து பாதுகாப்பு அமைச்சு பின்வருமாறு விவரித்துள்ளது. ஓமந்தைச் சோதனை நிலையத்தில் படையினர் லொறிகளை சோதனை செய்தபோது குறிப்பிட்ட ஒரு லொறியிலிருந்து வெடிபொருள் மீட்கப்பட்டது. அதனையடுத்து மேலதிக விசாரணைக்காக லொறியின் சாரதியை படையினர் தடுத்துவைத்துள்ளனர். லொறியும் தடுத்துவைக்கப்பட்டுள்ளது. நாளை …
-
- 5 replies
- 1.3k views
-
-
தமிழக அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளனர் – கோதபாய: தமிழக அரசியல்வாதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு குறித்த அரசியல்வாதிகளுக்கு புலிகள் லஞ்சம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தமிழக அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கோதப…
-
- 5 replies
- 1.5k views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் முன்னாள் போராளிகள் யுத்தம் முடிந்ததன் பின்னர் பல வகையான இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தங்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உதவி கரமாக இருக்கவில்லையெனவும் முன்னாள் போராளிகள் கவலை தெரிவித்துள்ளதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில், நேற்று (19) நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், கடந்த ஆட்சிக் காலத்தில், முன்னாள் போராளிகளுக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் வரவு - செலவுத்…
-
- 5 replies
- 1.1k views
-
-
தமிழ் கட்சிகள் ஒன்றிணையவிட்டாலும் ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் வேண்டுகோள் கஜேந்திரகுமார் அணியும் விக்னேஸ்வரன் அணியும் தம்மோடு ஓன்றிணையவிட்டாலும் தமிழ் மக்கள் நலன் சார்ந்து அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.கட்சியுடன் இணையுங்கள் என்று அவர்களுக்கு ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை மாறாக மக்கள் நலனுக்காக தற்போதைய சூழ்நிலையில் ஒற்றுமையாக செயற்பட முன்வாருங்கள் என்றே அழைப்பு விடுப்பதாக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.வெறுமனே மக்களுக்கு முன்பாக நான் ஒற்றுமையாக செயற்பட தயாராக இருக்கின்றேன் என ஒருவருக்கு ஒருவர் காட்டிக்கொள்ளாமல் உண்மையிலேயே ஒன்ன்றிமையாக பயணிக்க வேண்டும்.தமிழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி…
-
- 5 replies
- 707 views
-
-
நியூசிலாந்திடம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் அதிகமுள்ளன : பிரதமர் நியூசிலாந்தின் அரசியல் முறைமையில் இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் அதிகம் காணப்படுகின்றதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை நியூஸிலாந்தை சென்றடைந்தார். அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட அரசதலைவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பு திருத்தம் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அந்நாட்டு பிரதமர் ஜோன் கீ உடனான இருதரப்பு பேச்சுவார்த்தையையடுத்து இரு நாட்டு தலைவர்களும் இண…
-
- 5 replies
- 766 views
- 1 follower
-
-
இலங்கை தமிழர் பிரச்சனை தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் ஆகியன தொடர்பாக நாளைய தினம் கருத்து வெளியிப்படும் என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் யஷ்வந் சின்ஹா இதனை தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கான வாழ்வு நிலை சுய கௌரவத்துடனும் சம உரிமையும் வாழ வழியேற்படுத்தல் மறுவாழ்விற்கான உதவி என்பன தொடர்பாகவே கருத்துக்கள் வெளியிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையேஇ பாரதீய ஜனதா கட்சி இலங்கை தமிழர் தொடர்பாக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதாகவும் பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் யஷ்வந் சின்ஹா தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/56423
-
- 5 replies
- 3.1k views
-
-
மக்கள் வாக்களிப்பதை தடுப்பதற்காக அரசாங்கம் இராணுவத்தை பயன்படுத்தலாம் என மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து அச்சம் வெளியிட்டுள்ளார். பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனவரி 9 ம் திகதி அமைதியான முறையில் பதவிவிலகுவார் என்பதை என்னை போன்ற பலரால் நினைத்துப்பார்க்க முடியாதுள்ளது. இதன் காரணமாக என்ன நடக்கும் என்பது குறித்து கரிசனைகள் உள்ளன. வடகிழக்கில் வாக்களிப்பு வீதத்தை குறைப்பதற்காக இராணுவத்தை பயன்படுத்துவார்கள் என எதிபார்க்கிறேன். 2013 மாகாணசபை தேர்தலிலும், அதற்கு முந்தைய தேர்தல்களிலும் இது இடம்பெற்றுள்ளது. 2005 இல் இது இடம்பெற்றது …
-
- 5 replies
- 494 views
-
-
அமைதி முயற்சிகளை நிறுத்துங்கள்- விடுதலைப் புலிகளை சிதறடியுங்கள்: ஜே.வி.பி ஜசெவ்வாய்க்கிழமைஇ 27 மார்ச் 2007இ 06:25 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ போர் நிறுத்த உடன்பாடே விடுதலைப் புலிகள் வானூர்திகளை கொள்வனவு செய்வதற்கும்இ வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்துவதற்கும் காரணமாக அமைந்தது. அரசாங்கம் தவறான அதிகாரப்பகிர்வு என்ற கொள்ளையை விடுத்து விடுதலைப் புலிகளை நசுக்க வேண்டிய தருணம் இதுவே என்று ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பொரளையில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அரசாங்கம்இ ஒரு காலை அமைதி முயற்சிகளிலும் மறுகாலை விடுதலைப் புலிகளை ஒழிக்கும் நடவ…
-
- 5 replies
- 1.4k views
-
-
10 JAN, 2024 | 03:27 PM யாழ். குடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட மனித எச்சங்களில் இதுவும் ஒன்றாகும் என தெரிவிக்கப்படுகிறது. இத் தரவுகளைக் கொண்ட தொல்லியல் மையம் வேலணை தீவின் சுற்றுலாத் தலமான கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தெற்கே அமைந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ் ஆய்வுத் தொடர்ச்சி 2009 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் கரையோர வளங்களின் வரலாற்றுப் பயன்பாடு மற்றும் குறிப்பாக கடல் ஓடுகள் தொடர்பான பயன்பாட்டுப் போக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ் அகழ்வாய்வில் வேட்டையாடி உணவாக உட்கொள்ளப்பட்ட விலங்குகளின் எச்சங்கள், கரு…
-
- 5 replies
- 960 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்திய பிரபல பாடகர் ஹரிகரனின் மாபெரும் இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட அமைதியின்மையால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்ட, ஆள் அடையாளத்தை உறுதி செய்துக்கொள்ள முடியாத ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இதைத் தவிர, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும் போலீஸார் குறிப்பிடுகின்றனர். யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பிரபல தென்னிந்திய நடிகையான ரம்பா, இலங்கையின் யாழ…
-
- 5 replies
- 1k views
- 1 follower
-
-
http://youtu.be/e5kBqutAcio The Asian Human Rights Commission (AHRC) and its partner organisation, the Banglar Manabadhikar Suraksha Mancha (MASUM), have been documenting and reporting cases of extreme forms of brutality committed by the Border Security Force (BSF) stationed along the Indo-Bangladesh border in West Bengal state. The latest is a video of extreme torture by the BSF of a civilian that reportedly happened on 16 January 2012. The video shows blood-chilling torture, committed by the BSF. The incident is a shame and the brutality documented alarming, suggesting that the officers require psychiatric assistance, a condition that challenges their very legitim…
-
- 5 replies
- 1.6k views
-