Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இணைத் தலைமை நாடுகளை எதிர்த்து பரப்புரை நடத்த ஜே.வி.பி.க்கு மகிந்த "நள்ளிரவு" யோசனை: கொழும்பு ஊடகம் [திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 05:07 ஈழம்] [ச.விமலராஜா] அமைதிப் பேச்சுக்களை நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்ட இணைத் தலைமை நாடுகளை எதிர்த்து பரப்புரைகளை மேற்கொள்ள ஜே.வி.பிக்கு மகிந்த ராஜபக்ச யோசனை கூறியுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: இணைத் தலைமை நாடுகளின் பிரசெல்ஸ் அறிக்கைக்குப் பின்னர் அரசாங்கம் முன்பாக ஜே.வி.பி. வைத்த நிபந்தனைகள் தொடர்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இணைத் தலைமை நாடுகளின் அறிக்கை மற்றும் சர்வதேச ஊடகங்களில் நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மின் ந…

    • 4 replies
    • 1.5k views
  2. துருக்கிய அரசின் ஆசீர்வாதத்துடன், இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுதக் குழுவான ஐ. எஸ் அமைப்பு வடக்குச் சிரியாவிலுள்ள குர்திஸ் இனமக்களின் சுயாட்சிப் பிராந்தியமான கோபேனின் மீதான தனது மூர்க்கத்தனமான மும்முனைத் தாக்குதல்களை கடந்த மாதம் 15 ஆம் திகதியிலிருந்து அதிகப்படுத்தியிருக்கிறது. கோபேனைக் கைப்பற்ற ஐ. எஸ் தீவிரவாத அமைப்பு நடத்திவரும் கொடூரமான தாக்குதல்களினால் சுமார் இரண்டு லட்சம் குர்திஸ் மக்கள் அகதிகளாக துருக்கிய நாட்டு எல்லையை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். குர்திஸ்கள் மீதான இஸ்லாமிய அடிப்படைவாத ஐ. எஸ்ஸின் தாக்குதல்களை ஊக்குவித்து தனது எல்லைகளை அந்த அமைப்பிற்காகத் திறந்துவிட்ட துருக்கிய அரசு, துருக்கியில் வசிக்கும் குர்திஸ்கள் கோபேனைத் தக்கவைக்கும் யுத்தத்தில் பங்குகொள்வதைத் த…

    • 4 replies
    • 804 views
  3. இலங்கை இராணுவத் தளபதி யாழ் விஜயம் இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சலம்பத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் எறிகணைத் தாக்குதலில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் இதில் காயமடைந்துள்ளனர். அதேவேளை வாகரையை நேற்று கைப்பற்றிய இலங்கை இராணுவத்தினர், இன்று தாம் கதிரவெளி வரை முன்னேறியுள்ளதாக அறிவித்துள்ளனர். அதேவேளை இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள் இன்று யாழ் குடாநாட்டுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அவர் இராணுவத தளபதிகளுடன் உரையாடியதாகக் கூறப்படுகிறது. பிபிசி. தமிழ். ---------------------------------------…

  4. மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதல் - ஆறு சிங்கள காவல்துறையினர் பலி Wednesday, 31 January 2007 11:33 மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலைப் பகுதியில் வைத்து சிங்களக் காவல்துறையினரின் ஊர்தியை இலக்கு வைத்து இன்று நண்பகல் கிளைமோர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போது ஆறு சிங்களக் காவல்துறையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 12பேர் படுகாயமடைந்துள்ளனர். வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்கு அருகிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விடுமுறையில் வீடு சென்ற காவல்துறையினரே இத்தாக்குதலுக்கு இலக்கானதாக சிங்களப் படைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சங்கதி

    • 4 replies
    • 2.6k views
  5. சிறிலங்காவின் ராடார்கள் 1,000 அடிக்கு கீழ் தொழிற்பட முடியாதவை: கொழும்பு ஊடகம். தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையின் தாக்குதலின் பின்னர் கொழும்பு மிகப்பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. கடந்த ஞயிறு இரவு வந்த அவர்களின் வானூர்திகள், தளத்தின் வான்பகுதியை இரு மணிநேரங்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளன. இந்தச் சம்பவம் அரசாங்கத்தையும், அதன் பாதுகாப்பு நடைமுறைகளையும் தொங்கு நிலையில் விட்டுள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்று தனது பாதுகாப்பு ஆய்வு நிலவரப் பத்தியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அதன் சில பகுதிகள் வருமாறு: "போர் நிறுத்தம் அமுலில் உள்ள போதும் நாளாந்தம் தாக்குதல்கள் அதிகரித்த படி உள்ளன. இது போர் நிறுத்த உடன்பாட்டை மேலும் நெருக்கடிக்குள் இட்டுச் செ…

  6. இந்தியாவிடம் அவசர ஆயுத உதவி கோரியுள்ள சிறிலங்கா: கோத்தபாய டில்லியில் முக்கிய பேச்சு வான் புலிகளால் உருவாகியிருக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்தியாவிடம் சிறிலங்கா அரசாங்கம் அவசரமான ஆயுத உதவிகளைக் கோரியிருப்பதாக பி.ரி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இடத்துக்கிடம் எடுத்துச்செல்லக்கூடிய ராடார்கள், தரையிலிருந்து வானூர்திகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகள் உட்பட பல ஆயுதங்களையே உடனடியாகத் தமக்குத் தந்துதவுமாறு சிறிலங்கா அரசாங்கம் அவசர கோரிக்கையை இந்தியாவிடம் விடுத்திருக்கின்றது. விடுதலைப் புலிகளிடமிருந்து வரக்கூடிய வான்தாக்குதல்கள் உட்பட ஏனைய புதிய தாக்குதல்ககளுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையிலேயே இந்த 'அவசர ஆயுத உதவிகளை' சிறிலங்கா அரசாங்கம் கோ…

  7. 21 DEC, 2023 | 08:53 PM யாழ்தேவி கடுகதி புகையிரதம் தடம்புரண்டதால் வடக்கிற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கல்கிஸை நோக்கி புறப்பட்ட யாழ்தேவி கடுகதி புகையிரதம் இன்று வியாழக்கிழமை (21) மாலை 07மணியளவில் மஹவ புகையிரத நிலையத்தில் தடம் புரண்டதால் வடக்கு புகையிரத பாதையின் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு மலையகத்துக்காக நாளை முதல் விசேட புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/172246

  8. அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் செய்தியாளர் ரகுராம் அவர்கள் ஊடகத் துறையில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளதை இங்கு கள உறவு ஒருவரால் இணைக்கப்பட்ட விடயத்தில் இருந்தும் இன்றைய வானொலி நிகழ்ச்சிகளின் மூலமும் அறிய முடிகின்றது. மிகவும் வருந்தத்தக்க ஒரு முடிவினை அவர் எடுத்திருந்தாலும் அவ்வாறான ஒரு முடிவினை எடுக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளார் என்றே அறிய முடிகின்றது. திரு.ரகுராம் தனது முடிவினை மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும் என யாழ் இணையம் வேண்டிக் கொள்வதோடு இந்த முடிவினை எடுக்கத் தூண்டியவர்கள் மீது கண்டணத்தினையும் இத்தால் பதிவு செய்து கொள்கின்றோம். திரு.ரகுராம் தனது முடிவினை அறிவித்தபின்னர் வானொலிக்கு வழங்கப்பட்ட செவ்விகள் திரு.ரகுராமினை ஊடக…

    • 4 replies
    • 1.4k views
  9. (ஆர்.விதுஷா) அமைச்சர்களான மனோகணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் மேல்மாகாண ஆளுனர் அசாத் சாலி ஆகியோர் வெலிகடை சிறைச்சாலை வைத்திய சாலையில் பொதுபலசேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை சந்தித்தனர். சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய கோரி பொது பலசேனா அமைப்பினால் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அத்துடன் இதன்போது ஜனாதிபதி கொலை சதி விகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா மற்றும் துமிந்த சில்வா ஆகியோரை சந்தித்து கலந்…

    • 4 replies
    • 699 views
  10. வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்று தமிழ்க் கூட்டமைப்பினர் கூறுகின்றனர். இணைவதால் கிழக்கு மாகாணத்திற்கு என்ன இலாபம் என்று அவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கேள்வியெழுப்பியுள்ளார். பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தில் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு தொழில் முயற்சிப் பொருட்களும் தொழில் முயற்சிக்கான காசோலைகளும் வழங்கும் நிகழ்வு பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,வடக்கும் கிழக்கும் தனித் தனியாக இருப்பதால் இரண்டு மாகாணங்களுக்கும் இரண்டு முதலமைச்சர் வருவர். அவ்வாறு இல்லாமல் தமிழ் க…

  11. அதிகாரப் பகிர்வை வழங்க சிறிலங்காவுக்கு அழுத்தங்களை ஏற்படுத்துக! - புதுடில்லிக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் ஆலோசனை! இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கான அழுத்தங்களை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்படுத்துவதற்கு இந்தியா பங்களிப்பு வழங்க வேண்டிய தேவையுள்ளதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேசக் கற்கைகளுக்கான கல்லூரியின் பேராசிரியர் அனுராதா எம்.செனோய் தெரிவித்துள்ளார். 'தமிழ் மக்கள் வாழும் வடக்குக் கிழக்குப்பகுதிகளுக்கு அரசியல், பொருளாதார அதிகாரங்களுக்கான உத்தரவாதம் தேவைப்படுகிறது. இந்நிலையில் இவ்விகாரம் தொடர்பில் இந்தியா அதிகளவுக்கு ஆதரவான பங்களிப்பை வழங்க வேண்டும். சுய நிர்வாகத்துடன்…

    • 4 replies
    • 799 views
  12. கூட்டை முறிக்க யோசிக்கிறதா?; ரெலோவும் தனி வழியில்? மக்களிடத்தில் ஆதரவு அற்ற கட்சிகளை ஒன்றிணைத்து கொண்டு நாங்கள் தொடர்ந்தும் பயணிப்பதா?அல்லது தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ இனி வருகின்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா?என்பது குறித்து கட்சியின் உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டியுள்ளது என மன்னார் மாவட்ட ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளருமான டானியல் வசந்தன் தெரிவித்தார். பாராளுமன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் ரெலோ கட்சிக்காக பல்வேறு வகையிலும் உதவி புரிந்த கட்சியின் உறுப்பினர்களுடன் சந்திப்பும் மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை(24) மதியம் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இட…

  13. வடக்கு - கிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் இயக்குநரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் படுகொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.2k views
  14. சிங்களவர்களுக்கு 35000 ரூபா சம்பளம்! தமிழர்களுக்கு 6000 ரூபா சம்பளம்! இந்த இனப்பாகுபாடு மைத்திரி நல்லாட்சியிலும் மறையவில்லை? சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக தீர்ப்பதற்காக நல்லாட்சிக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தல்களுக்கமைவாக அங்குள்ள சிங்களவர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணங்களுக்கமைவாக 35000 ரூபா சம்பளத்துடன் ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதேநேரம் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நீண்ட காலமாக ஆசிரியர் வெற்றிடங்கள் இருந்துவருகின்றன. அங்கு ஆசிரியராகக் கடமையாற்றுவதற்காக வெறும் 6000 ரூபா மாதச் சம்பளம் வழங்கி ஆசிரிய உதவியாளர்களாக தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். …

  15. ராஜபக்சே இதனால்தான் தோற்றார்- கோத்தபயவின் அடேங்கப்பா காரணம்! இந்தியாவைத் திருப்திப்படுத்தக் கூடிய வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடிக்காமையால், அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "வெளிவிவகாரக் கொள்கைகளில், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவை எம்மால் திருப்திப்படுத்த முடியவில்லை. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் குறித்து இந்தியா அச்சம் கொண்டிருந்தது. இந்தியாவின் பாதுகாப்புக்கு எம்மால் அச்சுறுத்தல் ஏற்படாது என்றும், சீனாவுடனான தொடர்புகள் முற்றிலும் பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாக கொண்டது என்றும் நாம் அவர்களுக்கு உறுதியளித்திருந்தோம். ஆனால…

    • 4 replies
    • 582 views
  16. இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்! இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயரை (Eric Meyer) நியமிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதன்படி, ஜூலி சுங்கின் வெற்றிடத்திற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் நியமிக்கப்படவுள்ளார். கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் சிரேஷ்ட பணியக அதிகாரியாக செயல்படுகிறார். அத்துடன் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் அமெரிக்க அரசி…

  17. [size=4]சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இ‌ந்‌தியா வருமாறு அழை‌க்க‌வி‌ல்லை எ‌ன பா.ஜ.க. மூ‌த்த‌த் தலைவரு‌ம், ம‌க்களவை எ‌தி‌ர்‌க்‌க‌ட்‌சி‌த் தலைவருமான ‌சு‌‌ஷ்மா சுவரா‌ஜ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சியில் செப்டம்பர் 21ஆம் திகதி புத்தமதம் தொடர்பான கல்வி மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் ப‌‌ங்கே‌ற்க இந்தியா வருகை தருமாறு மஹிந்தவுக்கு சுஷ்மா சுவராஜே அழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளதாக ம.‌தி.மு.க. பொது‌‌ச் செயல‌ர் வைகோ வெ‌ளி‌யி‌ட்ட அ‌றி‌க்கை‌ ஒன்றில் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர். ‌இ‌ந் ‌நிலை‌யி‌ல், வை.கோவின் இந்தக் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்துள்ள சுஷ்மா சுவராஜ், சிறிலங்கா ஜனாதிபதியை இ‌ந்‌தியா வருமாறு தா‌ன் அழை‌க்க‌வி‌ல்லை எனவும் ‌ம‌த்‌திய அரசு அழ…

    • 4 replies
    • 1.1k views
  18. கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை. கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு அதிக வர்த்தக அல்லது சந்தை பெறுமதி (commercial or market value) இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அதிகார சபை, குறித்த பாறையின் தாய்ப் பாறைக்குள் “லெப்ரடோரைட்” (Labradorite) எனப்படும் கனியத்தின் சிறிய அளவு படிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. லெப்ரடோரைட் கனியம், ஒரு வகையிலான அரை-பெறுமதி வாய்ந்த இரத்தினக்கல் பாறையாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த பாறைக்கு அதிக வர்த்தக அல்லது சந்தை பெறுமதி இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை மேலும் …

  19. திருக்கோவில் சாகாமம் பிரதேசத்துக்குள் நுழைந்த 40 காட்டு யானைகள் அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாகாமம் கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் படையெடுத்து வந்தன. இதன்காரணமாக அந்தப் பிரதேச மகக்ள் அச்ச நிலைக்கு உள்ளாகினர். இது தொடர்பில் திருக்கோவில் பிரதேச வன ஜீவராசிகள் அலுவலக பொறுப்பாளர் டி.ஜெகதீஸனிடம் கேட்டபோது தற்போது யானை வேலி அமைக்கும் பணிகள் தாண்டியடி பிரதேசத்தில் நடைபெறுவதாகவும் அந்தப் பணிகள் இரண்டு மாதங்களில் பூர்த்தியடையும் எனவும் அதுவரைக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். - See more at: ht…

    • 4 replies
    • 920 views
  20. Another humanitarian tragedy that fails to hit the prime time While the war on Gaza preoccupies the attention of international media, human rights organisations international community and public at large another humanitarian tragedy of equal gravity unfolds largely unnoticed in the northern part of Sri Lanka. The battle front is closing-in from all directions for over 400, 000 Tamil civilians in the North-Western part of Sri Lanka. The Sri Lankan government has imposed a crippling economic, food, medical & fuel blockade for almost a year. The NGOs including various functions of UN such as WFP, UNICEF and UNHCR were ordered to leave the region by the Sri Lan…

  21. கட்சித் தலைமையை விமர்சிக்கும் சுமந்திரனுக்கு இன்று உரிய பதில் - மாவை.! கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களைத் தொடர்ந்து சுமந்திரன் பகிரங்கமாகப் பேசி வருகிறார். இரண்டாவது முறை கட்சித் தலைமைக்கு எதிராக அவர் பகிரங்க அறிக்கை விடுத்துள்ளார். இது மிகவும் பிழையானது. சுமந்திரனின் கடிதம் தொடர்பில் இன்று உரிய முறையில் பதில் வழங்குவேன்.என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தன்னிச்சையான, ஜனநாயக விரோத, சட்டவிரோதமான மாவை சேனாதிராஜாவின் செயற்பாட்டினால்தான் யாழ். மாநகர சபையை இழந்தோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் கடிதம் ஒ…

    • 4 replies
    • 731 views
  22. பிரித்தானியாவின் Channel - 4 தெலைக்காட்சிச் சேவை இலங்கை அரசின் கொடுமைகளை வெளிக் கொண்டுவந்துள்ளது. Channel - 4 தெலைக்காட்சிச் சேவையின் ஒளிப்பதிவு கீழுள்ளது. <embed src="http://c.brightcove.com/services/viewer/federated_f8/1184614595" bgcolor="#FFFFFF" flashVars="videoId=19918256001&playerId=1184614595&viewerSecureGatewayURL=https://console.brightcove.com/services/amfgateway&servicesURL=http://services.brightcove.com/services&cdnURL=http://admin.brightcove.com&domain=embed&autoStart=false&" base="http://admin.brightcove.com" name="flashObj" width="486" height="412" seamlesstabbing="false" type="application/x-shockwave-flash" swLiveConne…

  23. இறுதிப் போரில் இலங்கை ராணுவத்தினருக்கு, பயிற்சி கொடுத்த அமெரிக்கா: திடுக்கிடும் சாட்சியம். பிரீமன்: இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவத்தினருடன் அமெரிக்க ராணுவத்தினர் தினமும் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர் என்று திடுக்கிடும் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரோம் நகரை தளமாகக் கொண்ட மக்கள் தீர்ப்பாயத்தில் தற்போது இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கப்பட்ட போரில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி சாட்சியம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் நிலைப்பாடு குறித்து சாட்சிகள் பதிவு செய்யப்பட்டன. மக்கள் தீர்ப்பாயத்தில் திங்களன்று நடைபெற்ற விசாரணையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் "வானவில்" …

  24. இராணுவத்திற்கு இயந்திரத்தை வழங்க நல்லூர் பிரதேச சபைத்தவிசாளர் மறுப்பு 2014-09-01 10:12:46 யாழ். நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள கழிவுகளை அகற்றுவதற்கு, நல்லூர் பிரதேச சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரத்தைத் தரும்படி இராணு வத்தினர் கோரிய போதும் தான் அதனை மறுத்து விட்டதாக, நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பா.வசந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, நல்லூர்ப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அகற்றப்படும் கழிவுகள் இதுவரைகாலமும், கோண்டாவில் டிப்போவிற்கு அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலேயே போடப்பட்டு வந்தன. இந்நிலையில், மேற்படி காணியில் கழிவுகள் நிரம்பியதாலும், மேலும் கழிவுகள் போடுவதற்கு காணி உரிமையாளர் மறுத்தமையால் அங்கு கழிவ…

  25. கனடாவில் அகதி அந்தஸ்து கோருவோருக்கு பாதகமானதொரு புதிய கொள்ளையை கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கனடாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்களுக்கு அவர்கள் தமிழர் என்பதற்காக உயிராபத்து ஏற்படப்போவதில்லை என அந்தப் புதிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேசமயம், இந்த புதிய வழிகாட்டலை ஏற்க வேண்டுமென்ற கட்டாயம் அகதிகள் சபை விசாரணையாளர்களுக்கு இல்லை. ஆயினும் தேவைக்கேற்ப ஒரு உறுதியான ஒரு மாதிரியுருவாக இந்த வழிகாட்டல் அமையலாம் என குடிவரவு மற்றும் அகதிகள் சபை கூறியுள்ளது. இந்தப் புதிய கொள்கை பின்பற்றப்படுமிடத்து ஓஷன்லேடி, எம்.வி. சன்சீ ஆகிய கப்பல்களில் வந்தோருக்கு இது பாதகமாக அமையும். ஆனால் இந்தப் புதிய வழிகா…

    • 4 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.