நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
இறால் பிரியாணி தேவையானவை: பாஸ்மதி அரிசி - அரை கிலோ இறால் - கால் கிலோ வெங்காயம் - கால் கிலோ தக்காளி - 3 பச்சை மிளகாய் - 4 பூண்டு - 10 பற்கள் இஞ்சி - 2 அங்குலத் துண்டுகள் மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி அளவு கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு புதினா - ஒரு கைப்பிடி அளவு உப்புத் தூள் - 2 தேக்கரண்டி பட்டை - 2 துண்டுகள் பிரிஞ்சி இலை - 2 செய்முறை: முதலில் பாஸ்மதி அரிசி உடன் பிரிஞ்சி இலை சேர்த்து உதிரி உதிரியாக வேக வைத்து வடித்துக் கொ…
-
- 9 replies
- 1.9k views
-
-
இங்கு எந்தவொரு இந்திய உணவகத்திற்கு சென்றாலும் எப்போதும் கிடைக்க கூடியது பாலக் பன்னீர். பன்னீரும், ஸ்பினச் கீரையும் சேர்த்து செய்திருப்பார்கள். சின்ன வயதில் எனக்கு பாலக் பன்னீரை கண்ணிலும் காட்டக் கூடாது. அதற்கு காரணம் பக்கத்து வீட்டு கிழவி தான். என் பெரியண்ணனும், அவரின் பேரனும் நண்பர்கள். ஆக அடிக்கடி கிழவியின் சமையலை சாப்பிட வேண்டிய கட்டாயம் இருந்தது. பச்சை களியில் பன்னீரை பார்த்தாலே எனக்கு பிடிக்காது. வளரும் பிள்ளைக்கு தேவை என சாப்பிட வைத்து வைத்து பின்னாளில் பலக் பன்னீர் பழகிப்போனது. அம்மம்மா, அப்பாச்சி என யாரும் கூட இல்லாததால், கிழவி மேல் அன்பு அதிகம் தான். கிழவி இப்போ இல்லை. நினைவு வரும் போதெல்லாம் பாலக் பன்னீர் நிச்சயம் செய்வேன். பொதுவாக கீரையும், பன்னீரும் சேர்ப்பார்…
-
- 9 replies
- 4.3k views
-
-
அறுசுவையுடைய அச்சாறுகள் இலையில் ஒரு சுண்டல், தேங்காய்ச் சம்பல், பருப்புக் கறி, மரக்கறி அச்சாறுடன் ஒரு சமவிகித உணவு விபரம்: பவானி பாலா படங்கள்: தமித் விக்கிரமசிங்க சுவையரும்புகளைச் சுண்டியிழுக்கும் புளிப்பும் காரமும் நிறைந்த வித விதமான அச்சாறுகள்! காய்கறிகளில்...பழங்களில்... பலவித நிறங்களில்...! பார்க்கும்பொழுதே நாவில் நீர் ஊறும். ஊறுகாயைப் போன்றே அச்சாறும் ஒருவகை உணவு பதனிடும் முறை. செய்முறைகளில் சற்றே வேறுபாடுகள் உண்டு. இலங்கையில் தயாரிக்கப்படும் அச்சாறு தனித்துவமானது. மரக்கறி வகைகள் மட்டுமன்றி முற்றிய பழ வகைகளிலும் அச்சாறு செய்யும் வழமை இலங்கையில் மட்டுமே உள்ளது. மாங்காய் அச்சாறு, அம்பரெல்லா அச்சாறு, அன்னாசி அச்சாறு, …
-
- 9 replies
- 6.1k views
-
-
-
பீட்ரூட் இலை ரசம் பீட்ரூட் இலை ரசம் கர்ப்பிணிகளுக்கு நல்லது. தேவையானப் பொருட்கள் பீட்ரூட் (இலையுடன் கூடியது) - 2 ரசப்பொடி - 2 தேக்கரண்டி தக்காளி 1 பூண்டு - 4 பல் காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம் - தாளிக்க பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை ' மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை கொத்தமல்லி, கறிவேப்பிலை உப்பு செய்முறை பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் வைத்து வேகவிடவும். அதன் இலைகளை கழுவி நறுக்கி வைக்கவும். குக்கரை இறக்கி அதில் ரசப்பொடி, தக்காளி, நசுக்கியப் பூண்டு, தேவையான அளவு உப்பு, மஞ்…
-
- 9 replies
- 1.6k views
-
-
இந்தத் சுட்டியில் எப்போதும் வீட்டில் செய்யும் செய்த உணவுகளை மாத்திரமே பகிர்ந்து கொண்டு வருகின்றேன்.அந்த வகையில் இன்று மூங்கில் கறியைப் பற்றி எழுதலாம் என எண்ணுகிறேன். தேவையான சாமான்——கறுப்பு கண் அவரைக்கொட்டை மூங்கில் வெட்டிய துண்டுகள் நிரம்பிய ஒரு தகரம் முதலில் அவரைக்கொட்டையை தனியே கொஞ்ச உப்பு தூள் போட்டு வேகவையுங்கள். இன்னொரு சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு வழமையில் தாழிப்பது போல வெண்காயம் மிளகாய்(செத்தல் மிளகாய் முழுதாக 10)சீரகம் கொஞ்சம் வெந்தயம் போட்டு தாழித்து அரைவாசி வந்ததும் மூங்கில் துண்டுகளை நீர் இல்லாமல் வடித்து அதையும் போட்டு தாழித்து விட்டு ஏற்கனவே அவிந்த அவரைக்கொட்டையுடன் போட்டு சிறிது நேரம் பிரட்டி அடுப்பு நிற்பாட்டியதும் ஒரு தேசிக்காய் பிழிந்து …
-
- 9 replies
- 1.1k views
-
-
பிரியாணி... தென் இந்தியாவில் பல வீடுகளில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் கமகம ரெஸிபி. குழம்பு, பொரியல் செய்வதைவிட, பிரியாணியை சீக்கிரம் டேஸ்டியா செய்ய முடியும். பிரஷர்பேன், பிரஷர் குக்கர், எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், மைக்ரோவேவ் ஓவன், எதுல வேண்டுமானாலும் பிரியாணி செய்யலாம். ஆனால் அது பிரியாணியாக இருக்கணும்கிறதுதான் முக்கிய பாயிண்ட். "பிரியாணி பாஸ்மதி அரிசியில்தான் சூப்பரா வரும். எம்.ஜி.ஆருக்கு சரோஜாதேவி மாதிரி, பிரியாணிக்கு பாஸ்மதி அரிசிதான் பெஸ்ட் காம்பினேஷன். ஆனால், பாஸ்மதியில் சமைக்கும்போது, கவுண்ட்டிங் ரொம்ப முக்கியம். சாதா அரிசி மாதிரி பாஸ்மதியை ஹேண்டில் பண்ண முடியாது. 'சாதம் குழைஞ்சிடுது, ரொம்ப வெரவெரன்னு வருது. 'இதெல்லாம் கவுண்ட்டிங் தவறும்போது ஏற்படும் …
-
- 9 replies
- 12.2k views
-
-
போர் காலத்தில் , பொருளாதார தடைக்குள் வாழ்ந்தவர்களுக்கு, அனுபவம் இருக்கலாம். பொருளாதார தடைக்குள் உருளை கிழங்கு கிடைக்காத பொது, உள்ளூர் பயிர் செய்கையில் கிடைப்பதும் பங்குனி சித்திரையுடன் முடிந்துவிடும். ஏனைய காலத்தில் உருளை கிழங்கை பாவித்து செய்த ரோல்ஸ் , பற்றிஸ் போன்றவருக்கு மரவள்ளி கிழங்கு , வாழை காய் என்பவை பயன்படுத்த பட்டன. சில உணவகங்களில் கூட வாழை காய் ரோல்ஸ்களை சாப்பிட்டு இருக்கிறேன். யாருக்காவது அந்த அனுபவம் ? பொருளாதார தடை காலத்தில் எனது பிறந்த நாள் ஒன்றுக்கு என்னுடைய வீட்டில் மரவள்ளி கிழங்கில் பற்றிஸ் செய்து தந்தார்கள். கடந்த வாரம் இங்குள்ள தென் கிழக்காசிய கடை ஒன்றுக்கு வல்லாரை வங்க சென்ற பொது எங்களூர் வாழைக்காய் இருந்தது . வாங்கி வந்து வாழைக்காய் பற்றிஸ்…
-
- 9 replies
- 5.5k views
-
-
மீன் முருங்கைக்காய் குழம்பு தேவையான பொருள்கள் மீன் - 1/2 கிலோ முருங்கைக்காய் நறுக்கியது - 150கிராம் மல்லித்தூள் - 100கிராம் சிவப்பு மிளகாய் - 8கிராம் மஞ்சள் தூள் - 2கிராம் மிளகுத்தூள் - 4கிராம் வெந்தயம் - 2கிராம் தேங்காய் எண்ணெய் - 50மிலி தேங்காய் - 1 வெங்காயம் - 300கிராம் கொடும்புளி(Cocum) - 15கிராம் உப்பு - தேவையான அளவு தக்காளி - 80கிராம் இஞ்சி, பூண்டு கலவை - 10கிராம் கடுகு - 3கிராம் கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு சமையல் குறிப்பு விபரம் செய்வது: எளிது நபர்கள்: 4 கலோரி அளவு: NA தயாராகும் நேரம்: 20 (நிமிடம்) சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்) முன்…
-
- 9 replies
- 4.7k views
-
-
Please like and share also subscribe to my channel to support me. Thanks https://youtu.be/R0ocHqqx-SA
-
- 9 replies
- 987 views
-
-
பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும். ________________________________________ வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும். ________________________________________ சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும். ________________________________________ சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். __________________________________…
-
- 9 replies
- 3k views
-
-
உ சிவமயம் முன் குறிப்பு1 : முதலில் sugar என்றால் என்ன என்று பார்ப்போம். நாம் உட்கொள்ளும் உணவை புரதம், கொழுப்பு, காபோகைதரைட்டு (கார்ப்ஸ்) என்று பிரிப்பார்கள் (இதுக்கு மேலும் பிரிவுகள் உண்டு - மேலதிக தகவல் தேவைப் படுவோர், நீங்களாகவே தேடிப்படியுங்கள் ) கார்ப்சை மேலும் வகை படுத்தும் போது உருவாகும் சிறிய அலகே சுகர். அதாவது எல்லா கார்ப்சும் சுகர் இல்லை, ஆனால் எல்லா சுகரும் கார்ப்ஸ். சுகர் என்பது ஒரு வழக்குச் சொல். டெக்னிகல் டேர்ம் அல்ல. உண்மையில் சுகரும் குளுக்கோசு (குளுக்கோசு பொடியில் உள்ளது), சுக்ரோசு (பழங்களில் உள்ளது), லக்டோசு (பால்) மேலும் சில வகைகளாய் வகைப் படுத்தப்படும். சுகர் என்பது யாதென விளங்கிறாதா? மிக அடிப்படையான விளக்கமே இது. நான் கெமிஸ்ரிக்கான நொபெ…
-
- 9 replies
- 1.4k views
-
-
குளிர்சாதனப் பெட்டியில் வைத்த அசைவ உணவா? - சாப்பிடாதீங்க! உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாமல் பதுகாப்பாக வைத்திருக்க கண்டுபிடிக்கப்பட்டதே ஃப்ரிட்ஜ். ஆனால் சமைக்க சோம்பேறித்தனம் கொண்டவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் போல் ஆகிவிட்டது ஃப்ரிட்ஜ். நம்மவர்களில் பலருக்கு எது எதையெல்லாம் வைப்பது என்றே வரைமுறையே கிடையாது. எதையும் வீணாக்காமல் சிக்கனமாக இருக்கிறோம் என்ற நினைப்பில் முந்தா நாள் சாம்பார், போனவாரம் வைத்த ரசம், புளித்து போன இட்லி மாவு, பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள், என சகலத்தையும் உள்ளே வைத்து ஃபிரிட்ஜை கதற அடித்துவிடுவார்கள். இது மிகவும் தவறானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். காய்கறி,கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வார…
-
- 9 replies
- 3.9k views
-
-
பச்சை பயறு தானியத்தை ஊற வைத்து, முளைகட்டிய பின்பு சுவையான பச்சடி தயார் செய்யலாம். தேவையான பொருட்கள் : பச்சை பயறு- 1 கப், கொத்தமல்லி – இலை, தேங்காய் துருவல் – தேவையான அளவு, கடுகு – அரை தேக்கரண்டி, உளுந்தம் பருப்பு மற்றும் எலுமிச்சம் பழச்சாறு – சிறிதளவு, உப்பு – தேவைக்கு செய்முறை:- * பச்சைபயறை இரவில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் தண்ணீரை வடிகட்டிவிட்டு, ஒரு துணியில் கொட்டி கட்டி வைக்கவும். * அதற்கு அடுத்த நாள் காலையில் பார்த்தால், பயறு முளைகட்டி இருப்பதை அறியலாம். அதை எடுத்து பச்சடி தயார் செய்ய வேண்டும். * முளைகட்டிய பயறுடன் தேங்காய் துருவல், கொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும். * பின்பு கடுகு, உளுந்தம் பருப்பு கொண்டு …
-
- 9 replies
- 1.5k views
-
-
வத்தகைப் பழமும் தித்துள் கட்டியும் // இந்த அகோர வெயிலுக்கு ஒரு வரப்பிரசாதம்.
-
- 9 replies
- 5.2k views
-
-
கருணைக்கிழங்கு காரக்குழம்பு தேவையான பொருட்கள் : கருணைக்கிழங்கு -கால்கிலோ தேங்காய்-கால் முடி தக்காளி-ஒன்று வெங்காயம்-ஒன்று பூண்டு- ஒன்று புளி-எலுமிச்சையளவு மிளகாய்த்தூள் -ஒரு மேசைக் கரண்டி மஞ்சத்தூள்-அரைத் தேக்கரண்டி தனியாத்தூள் -இரண்டு தேக்கரண்டி மிளகு, சீரகத்தூள் - தலா-ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை-இரண்டு கொத்து கடுகு- ஒரு தேக்கரண்டி காய்ந்தமிளகாய்-இரண்டு எண்ணெய்-ஒரு குழிக்கரண்டி செய்முறை : கருணைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக்கி கொதிக்கும் நீரில் போட்டு அரைவேக்காடாக வேகவைத்து வடித்து வைக்கவும். தேங்காயுடன் வெங்காயத்தை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். பூண்டை நசுக்கி வைக்கவும…
-
- 9 replies
- 14.9k views
-
-
https://youtu.be/I72Z3StedXc Please subscribe to my Channel to support me. Thanks
-
- 9 replies
- 1k views
-
-
இனிப்பு அணுகுண்டு செய்முறை முதலில் கோதுமையை மிஷினில் கொடுத்து தீட்டி வந்து புடைக்க வேண்டும். புடைத்த கோதுமையை 2 மணிநேரம் ஊறவிடவும். ஊறியதும், நீரை வடித்து விட்டு தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். இத்துடன் கால் கிலோ வெல்லம் போட்டு அரைக்கவும். அரைத்து வழித்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். எள்ளை வறுத்து தண்ணீரில் கொட்டி அரித்து கல் நீக்கி, ஊறவைத்து, மேல் தோலை நீக்கி விட்டு, எள்ளு, பொட்டுக் கடலை, மீதியுள்ள அரைக் கிலோ வெல்லம் ஆகியவற்றை மிக்ஸியில் இட்டு ஒரு சுற்று சுற்றி, எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும், அதில் தேங்காயை சிறுசிறு பல்லாக கீறிப் போடவும். இவை எல்லாவற்றையும் நன்றாகப் பிசைந்து, அத்துடன் ஏலக்காயைப் பொடி செய்துப் போட்டு இத்துடன் கசகசாவை வறுத்து (லேசாக)…
-
- 9 replies
- 3.2k views
-
-
தேவையான பொருள்கள்: ரவை – 1 கப் தண்ணீர் – 2 1/2 கப் சர்க்கரை – 1 3/4 கப் நெய் – 3/4 கப் கேசரி கலர் ஏலப்பொடி முந்திரிப் பருப்பு கிஸ்மிஸ் செய்முறை: அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு கிஸ்மிஸ், முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். மீண்டும் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ரவை வாசனை போகும் வரை வறுக்கவும். இரண்டரை கப் தண்னீரைச் சேர்த்து அடுப்பை நிதானமாக வைத்து நன்கு வேகவைக்கவும். ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, கேசரி கலரைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரையால் கலவை மீண்டும் தளரும். ஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கொண்டே கிளறவும். இறக்கும் முன் மிச்சமுள்ள நெய், ஏலப்பொட…
-
- 9 replies
- 1.2k views
-
-
இந்த பசங்களுக்கு கல்யாணம் பண்ணி குடுத்தாலே கஸ்டம் தாங்க. தெரியாத்தனமா எங்கண்ணாக்கு கல்யாணம் பண்ணி குடுத்திட்டம். இப்ப கஸ்டபடுறம்…பின்ன என்ன….நானே இந்த கீரைக்காக 1 ½ மணித்தியாலம் காரில போய் வாங்கி வந்தேன். என்னோட பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவரிடம் பெரிய தோட்டம் இருக்கு. ரொம்ப நாளாவே கீரை வளர்க்கணும் என்று ஆசை..ஆசிரியர் கீரை முளைக்க போட விதைகள் தருவதாக சொல்லவும்..உடனே சென்று வாங்கி வந்தேன். வந்த உடனே கீரைக்கு பாத்தி கட்டியாச்சு…அடுத்த நாள் போடலாம் என வைச்சிருந்த விதைகளை எனக்கு தெரியாம எடுத்து கொண்டு போய் தன்ட வீட்டில போட்டுட்டார் அண்ணா... இதில எங்க மாமா வேற "அண்ணா பாவம், கல்யாணம் பண்ணினதும் ஏதோ ஆசை பட்டு கீரையெல்லாம் வைக்கிறார்...சண்டையெல்லாம் போடாதேம்மா" நீங்களோ சொல…
-
- 9 replies
- 4.2k views
-
-
கடையில் வேண்டிய தயிர் 5 மேசை கரண்டி எடுத்து முள்ளுக்கரண்டியால் அடித்து fridge க்கு வெளியில் வைக்கவும் (குளிரக்கூடாது). 8 கப் அல்லது அரை gallon பாலை medium heat இல் நல்ல பொங்கி வரும் வரை காய்ச்சவும் (சுண்டக்காச்சினால் நல்ல தயிர் வரும்). இளஞ்சூட்டிலும் பார்க்க கொஞ்சம் அதிகமான சூடாக இருக்கும்போது அடித்த கடை தயிரை பாலுக்குள் ஊற்றி நல்லா கலந்து விடவும். பாத்திரத்தை மூடி இன்னொரு பாத்திரத்தில் தண்ணி கொதிக்க வைத்து அதற்குள் இந்த மூடிய பாத்திரத்தை வைக்கவும். அல்லது மூடிய பாத்திரத்தை oven இல் வைத்து oven light ஐ போட்டு 6 மணித்தியாலம் வைக்கலாம். முதலாவது முறையில் செய்தால் தயிர் கெதியாக வரும். Unsalted பட்டர் ஐ எடுத்து பாரமான பாத்திரத்தில் medium to Low heat இல் தொடர்ந்து காய்…
-
- 9 replies
- 2k views
- 1 follower
-
-
கார நண்டுக் குழம்பு தேவையான பொருட்கள்: நண்டு - 500 கிராம் பெரிய வெங்காயம் - 100 கிராம் சிறிய வெங்காயம் - 5 எண்ணம் தக்காளி - 100 கிராம் மிளகாய் - 3 எண்ணம் பூண்டு - 5 பல் புளி - 25 கிராம் இஞ்சி - சிறிது மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி மல்லித்தூள் - 3 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி சோம்பு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி தேங்காய் - 1 மூடி நல்லெண்ணெய் - 50 மி.லி உப்பு - தேவையான அளவு தாளிக்க பட்டை - சிறிது கிராம்பு - சிறிது பிரிஞ்சி இலை - சிறிது கடுகு-உளுந்து, வெந்தயம் - 1 தேக்கரண்டி. செய்முறை: 1. நண்டைச் சுத்தம் செய்து சுடுநீரில் சிறிது மஞ்சள் தூ…
-
- 9 replies
- 1.8k views
-
-
ஆட்டுக்கால் குழம்பு தேவையானவை: ஆட்டுக்கால் - 4 கால்கள் பெரிய வெங்காயம் - ஒன்று தேங்காய் - ஒன்று (சிறியது) தக்காளி - 2 இஞ்சி - 2 இன்ச் நீள துண்டு பூண்டு - 5 பல் கறிவேப்பில்லை - சிறிதளவு சோம்பு - 2 டீஸ்பூன் சீரகம் - 2 டீஸ்பூன் அன்னாசிப் பூ - 2 மிளகாய்த்தூள் …
-
- 9 replies
- 3.3k views
-
-
-
ரம்ஜான் அன்று ஆப்கானிஸ்தான் ஸ்டைலில் ஒரு அருமையான சிக்கன் குழம்பை செய்து, வீட்டில் உள்ளோரை அசத்தலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சிக்கன் - முக்கால் கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஏலக்காய் - 4 பிரியாணி இலை - 4 பட்டை - 1 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) ஊற வைப்பதற்கு... …
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-