நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கார பக்கோடா தேவையான பொருட்கள். கடலை மா (மூன்று கப் ) செத்தல் மிளகாய் (3) வெங்காயம் கடுகு பெ.சீரகம் கறிவேப்பிலை உப்பு பொரிக்க தேவையான எண்ணெய் செத்தல் மிளகாய் வெங்காயம் என்பவரை சிறிதாக அறிந்து வைத்து கொள்க . நீரை கொதிக்க விடுக, கடலை மாவை கட்டிகள் இல்லாமல் அரித்து கொள்க . வெட்டிய வெங்காயம் ,மிளகாய் தாளினை சாமான்கள் யாவற்றையும் போட்டு தாளித்து கொள்க ,இவற்றுடன் அரித்தமாவை சேர்த்து கொள்க . பின் சுடு நீரை மெதுவாக சேர்த்து கிளறி , உதிரியாக வைத்து கொள்க. நன்றாக கொதித்த , எண்ணயில் போட்டு பதமாக பொரித்து எடுக்கவும் ஆறிய பின் பரிமாறலாம் .ஆறிய பின் காற்று புகாத கொள்கலனில் சேமித்து வைக்கலாம் குறிப்பு . காரம் அதிகம் தேவையெனில் ,ஒரு கரண்டி மிள…
-
- 47 replies
- 9.8k views
-
-
சுவையான தேனீர்.... தேனீர் பிரியர்களுக்கு தேனீர் போடும் பொழுது கேத்தலில் முதன்முதலில் கொதிக்கும் தண்ணீரில் தேனீர் போட்டால் ரொம்ப் சுவையாக இருக்கும். திரும்ப திரும்ப, அதாவது முதலில் கொதித்து ஆறிய தண்ணீரை திரும்பவும் கொதிக்க வைத்து தேனீர் போட்டால் அதன் சுவை குறைந்துகொண்டே போகும். காரணம் திரும்ப திரும்ப கொதிக்கவைக்கும் போது நீரிலிருந்து ஒக்சிஜன் அகற்றப்படுவதினால் தேனீரின் சுவை குறைந்துகொண்டே பொகும். பின் குறிப்பு: கேத்திலில் தண்ணீர் கொதிதவுடன் தேனீர் போடாமல் சில நிமிடங்கள் நீரை ஆறவிட்டு பின்னர் போடவும். மேலும் 2...3 நிமிடங்களுக்கு மேல் தேயிலை பையை கொதி நீருக்குள் விடவேண்டாம். இளங்கவி
-
- 56 replies
- 9.7k views
-
-
தேங்காய், கத்தரி கார குழம்பு தேவையான பொருட்கள்: சின்ன கத்தரிக்காய் - 15 பெரிய வெங்காயம் - 1 தேங்காய் எண்ணெய் - 15 மேசைகரண்டி புளி - 1 தேசிக்காய் அளவு கறிவேப்பிலை - 3 கடுகு - 1/2 தேக்கரண்டி உழுந்து - 1/2 தேக்கரண்டி பெருவெங்காய தூள் - 1/4 தேக்கரண்டி உப்பு அரைக்க தேவையான பொருட்கள்: கடலை பருப்பு - 2 தேக்கரண்டி மல்லி - 1 தேக்கரண்டி செத்தல் - 6 துருவிய தேங்காய் - 1/2 கப் ஏலக்காய் - 2 கறுவா - 1 1. கத்தரிக்காயை 4 துண்டுகளாக கீறி எண்ணெயில் அரைவாசி வதக்கி எடுக்கவும். 2. அரைக்கவேண்டியதை அரைத்து எடுங்கள். (அனைத்து பொருட்களையும் வறுத்த பின்னர்) 3. வெங்காயத்தை சிறிதாக வெட்டி, சிறிதளவு எண்ணெஇயில் போட்டு வதக்கவும். 4…
-
- 32 replies
- 9.7k views
-
-
உறவுகளே வட்டிலப்பம் செய்வது எப்படி என்று தெரிந்தால் சொல்லுவீர்களா? நன்றி
-
- 6 replies
- 9.5k views
-
-
தேவையான பொருட்கள் பன்றி இறச்சி – 1 கிலோ மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி நல்ல மிளகு தூள் – 1 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு மசாலாவுக்கு வெங்காயம் – 2 கப் உப்பு – தேவையான அளவு பூண்டு – 3 தேக்கரண்டி இஞ்சி – 2 தேக்கரண்டி கரமசாலா தூள் – 2 தேக்கரண்டி மல்லித் தூள் – 2 தேக்கரண்ட…
-
- 2 replies
- 9.5k views
-
-
தோசையோ தோசை.. இது ஒருவிதமான உடனடி தோசை...முதலில் யாரேனும் பதிந்தார்களோ தெரியாது. ஆனால் என்னை பொறுத்தவரையில் சத்தியமாய் நான்தான் கண்டு பிடித்தனான். 1 . 1 சுண்டு / ரின்பால் பேணி (ஹி ஹி) உளுத்தம் மா ( கவனம் வறுக்காதது) 2 . 1 சுண்டு / ரின்பால் பேணி அவித்த கோதுமை மா ( கவனம் அவித்தது). (ஒரே அளவு மாவும், உளுத்தம் மாவும் ) 3 . கொங்சம் வெந்தயம் பவுடர் ஆக்கினது ..1 - 2 தேக்கரண்டி போதும்..கூட போட்டால் கைக்கும், குறைய போட்டால் தோசை சுவது கடினம் ஒட்டும் 4 . தேவையான அளவு உப்பு, தண்ணீர்... 5 . master blaster .........ஈஸ்ட் மிக்ஸ்...தயாரிக்கும் முறை..ஹிஹி ..ஒரு பெரிய கிளாஸ் இல் ஒரு (பீர் கிளாஸ் மாதிரி) முக்கால் வாசிக்கு இளம் சூடான தண்ணீர் விட்டு, ( சயின்ஸ் படித்…
-
- 14 replies
- 9.3k views
-
-
நேற்று எனது அம்மா எனக்கு புதுசா ஒரு சமையல் சொல்லித் தந்தா. இன்று நான் அதை உங்களுக்கு சொல்லித் தரலாம் என்று நினைக்குறன். என்ன எல்லோரும் ரெடியா? சரி குறுக்க பேசாமல் கவனமாக கேட்டு செய்யுங்கோ :wink: எள்ளுச்சம்பல் செய்முறை தேவையான பொருட்கள் எள் - 2 சுண்டு உள்ளி - 4 முழு உள்ளி நற்சீரகத்தூள் - 2 கரண்டி மிளகுதூள் - 1 கரண்டி உப்பு - சுவைக்கேற்ப புளி- ஒரு பெரிய தேசிக்காய் அளவு செத்தல் மிளகாய் - காரம் குறைவாக என்றால் 50 காரம் கூட என்றால் 75 கருவேப்பிலை செய்முறை முதலில் எள்ளை பொன்னிறமாக வரும் வரையும் வறுக்க வேண்டும். அதன் பின் கருவேப்பிலை, மிளகாய், உள்ளையை தனித்தனியாக பொரிக்க வேண்டும். பொரித சட்டியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு பு…
-
- 44 replies
- 9.3k views
-
-
சமையல்:முருங்கைக்காய் கூட்டு ஆ.... ஊனா... முருங்கைக்காயை சாம்பார், புளிக்குழம்புலதான் போடுவோம்... ஆனா.. அதையே கொஞ்சம் வித்தியாசமா கூட்டாகவும் வைக்கலாம் தெரியுமா? வச்சு பாருங்க.. அதோட சுவையும் மணமும் சும்மா சுண்டியிழுக்கும் பாருங்க...... தேவையான பொருட்கள்: சிறிது நீளமாக நறுக்கிய முருங்கைக்காய் - 2 கப் கடலைப்பருப்பு - கால் கப் பாசிப்பருப்பு - கால் கப் தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 காய்ந்த மிளகாய் - 2 சீரகம் - கால் டீ ஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீ ஸ்பூன் தாளிக்க: எண்ணெய் - ஒரு டீ ஸ்பூன் கடுகு - கால் டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு - கால் டீ ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: * குக்கரில் பாச…
-
- 13 replies
- 9.3k views
-
-
உலகில் பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணும் மற்றொரு இறைச்சி இது. ஆட்டு இறைச்சியில் கொழுப்பு (Fat) சற்று அதிகம். ஆட்டின் அனைத்து பாகங்களுமே உணவாக உட்கொள்ளப்படுகின்றது. மருத்துவ ரீதியாக ஒவ்வொரு பாகமும் உடலுக்கு ஒவ்வொரு பலனைக் கொடுக்கின்றது. ஆட்டிறைச்சி வாங்கும் போது மிகவும் பார்த்து வாங்குதல் அவசியம். இளம் ஆட்டின் கறி சுவையாக இருக்கும். மிருதுவாகவும் இருக்கும். கறியின் கொழுப்பு வெண்மை நிறமாக இருத்தல் வேண்டும். மஞ்சள் நிறமாக இருந்தால் சற்று முற்றின ஆடு என்று கொள்ளலாம். கறியின் நிறம் சற்று மங்கிய சிவப்பாய் இருக்க வேண்டும். முற்றின கறியாக இருந்தால், சிறிது வினிகர், எலுமிச்சை சாறு சேர்த்து வேக வைப்பதின் மூலம் சற்று மிருதுவாக்கலாம். ஆட்டு இறைச்சி 100 கிராம் உண்பதில் அடங…
-
- 1 reply
- 9.2k views
-
-
போன்டா என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிற்றுண்டி. இந்த வசனத்தை எப்படி இத்தனை உறுதியாக சொல்கின்றேன் என கேட்பவர்களுக்காக: 1. சின்ன வயதில் பள்ளியில் போன்டா சாப்பிடாதவர்கள் உண்டோ (குறிப்பாக ஆண்கள்). அதிலும் வகுப்பு வேளையில் போய் வாங்க, அதை ஒரு ஆசிரியர் பார்க்க. அப்புறம் என்ன, கன்னத்துக்கு வெளியிலும் போன்டா, உள்ளும் போன்டா. 2. ஏன் சொல்கின்றார்கள் என்றே புரியவில்லை. ஆனால் வலைப்பூ மக்கள் ஒன்றுகூடலில் இவ்வுணவு பற்றி பேசுகின்றார்களாமே! 3. லக்கிண்ணா கூட போன்டா செய்முறை எழுதியிருக்கின்றார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்!! (இதை விட ஒரு காரணம் வேண்டுமா) 4. யம்மு அடிக்கடி துங்காபியில் போன்டாவுடன் காணப்படுவார். 5. நான் போன்டா செய்முறை எழுதுவது (சோதனை மேல் சோதனை) …
-
- 40 replies
- 9.2k views
-
-
மிகவும் இலகுவாக, உடனே தாயாரிக்க கூடிய பக்க உணவு என்றால் அது வெங்காய சம்பல் தான். இதையே onion salad / onion raita என்றும் அழைக்கிறார்கள். நாங்க வெங்காய சம்பல் என அழைப்போம். "சம்பல்" என்ற வார்த்தையை மொத்தமா குத்தகைக்கு எடுத்திருக்கமே! அசைவ உணவு வகைகளுக்கு இந்த வெங்காய சம்பல் சுவையை அதிகமாக்கும். பிரியாணி, சப்பாத்தி, ரொட்டி, பூரி என எதுவாகினும் சேர்த்து உண்ண அசைவம் இருக்கும் வேளையில், இந்த வெங்காய சம்பல் போல ஒரு உற்ற தோழன் கிடைக்கமாட்டுது. தேவையானவை: வெங்காயம் 1 மிளகாய் 1 மிளகு தூள் 1 தே.க தயிர் 3 மே.க உப்பு தேவைக்கேற்ப செய்முறை; 1. வெங்காயத்தின் தோலை உறித்து, நீரில் கழுவி, நீளவாக்கில் மெல்லியதாக அரிந்துகொள்ளுங்கள். [என் நேரம் இதையெல்லாம் எழுதிட்டு…
-
- 11 replies
- 9.1k views
-
-
ஸ்பெசி சிக்கன் பக்கோடா செய்ய தேவையான பொருட்கள் சிக்கன் துண்டுகள் - 1கிலோ கடலை மாவு - 1/4 கிராம் கான்ப்ளவர் மாவு- 2ஸ்பூன் அரிசி மாவு - 3 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்(தனியாக மாங்கு மாங்கு என உரித்து அரைக்க தேவையில்லை இப்போ பாக்கெட்டுகளிலே கிடைக்குது..) சின்ன வெங்காயம் 100கிராம் பச்சமிளகாய் - 1 மஞ்சள் பொடி 1/4ஸ்பூன் மிளகாய்த்தூள் 2ஸ்பூன் தனியாத்தூள் - 1 ஸ்பூன் சீரகத்தூள் 1/2ஸ்பூன் உப்பு - தேவைக்கு எண்ணெய் - தேவைக்கு செய்முறை சிக்கனை சுத்தம் செய்து மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட்,தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறி 1 மணிநேரம் ஊற வைக்கவும் ஒரு பாத்திரத்…
-
- 20 replies
- 9.1k views
-
-
சுவையான சுண்டைக்காய் கறி செய்வது எப்படி என யாருக்காவது தெரிந்தால் இணைத்துவிட முடியுமா? இப்பதான் காய்க்க தொடங்கியிருக்கு, பிடுங்கி சேகரிக்கத் தொடங்கிவிட்டேன், ஒரு கறிக்கு இப்ப காணும் கொண்டையுடன் சமைக்கலாமா? ================ வேறுபெயர்: மலைச்சுண்டை, கடுகி தாவரவியற் பெயர்: Solanumver verbascl folium ஆங்கிலம் பெயர்: Unarmed night shade இது பெரும்பாலும் மலைகளில் பயிராகும் செடி, ஆனைச் சுண்டை என வேறொரு வகையுமுண்டு. இதை பச்சையாக சமையல் செய்து உண்பது அரிதாக இருப்பினும் இக்காயை வெய்யிலில் உலர்த்தி பின்பு புளித்தமோரில் சிறிது உப்பை சேர்த்து அதில் மேற்கூறிய சுண்டங்காயைப் போட்டு ஊறவைத்து உலர்த்தி எடுத்துக் கொள்வது நமது வழக்கம். இதில் சிறிது கைப்புத் தன்மை உண்டு. …
-
- 9 replies
- 9.1k views
-
-
1- சுண்டு சோளம் மா 2- சுண்டு தண்ணீர் 1 or (3/4)- சுண்டு சீனி 6- மேசைக்கரண்டி நெய் தேவையான அளவு மஞ்சள் கலர்ப்பொடி தேவையான அளவு ஏலக்காய்ப்பொடி தேவையான அளவு மஞ்சள் முந்திரிகைவத்தல் தேவையான அளவு சிறிதாக்கப்பட்ட கசு நெய்யில் பொரித்தது ஒரு சுண்டு சோளன் மாவை இரண்டு சுண்டு தண்ணீரில் நன்றாகக்கலக்கி ஒரு மணித்தியாலம் ஊறவிடவும் பின் ஒரு சுண்டு சீனியை நெய்யினில் இட்டு பொன்நிறமாகும் வரை வறுக்கவும் அதன் பின் மாவில் இட்ட தண்ணீரை முதலில் வறுக்கப்படும் சீனியுள் ஊற்றி நன்றாக கரையும்வரை கலக்கவும். பின் சோளன் மாவை கரைத்து அதனுள் உற்றி நன்றாக கிண்டவும் உறுண்டு திரண்டு வரும்வரை கிண்டவும் பின் கசு, முந்திரிகை வத்தல் எலக்காய்ப் பொடி போடவும். நன்றாக கிண்டியபின் தட்டில் கொ…
-
- 26 replies
- 9k views
-
-
தக்காளி சாதம் செய்வது எப்படி ? எங்கே எங்கள் சமையல் தேவதை தூயா ?
-
- 12 replies
- 9k views
-
-
ஈரப்பலாக்காய்க் கறி தேவையான பொருட்கள் நன்கு முற்றிய ஈரப்பலாக்காய் -1 வெங்காயம் -1 பச்சை மிளகாய் -1 தேங்காய்ப் பால் – ¼ கப் பூண்டு- 4 பல்லு இஞ்சி – 1 துண்டு மிளகுப்பொடி- ¼ ரீ ஸ்பூன் மிளகாய்ப்பொடி -1 ரீ ஸ்பூன் மல்லிப்பொடி – 1 ரீ ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப புளிப்பேஸ்ட் அல்லது எலுமிச்சம்சாறு – தேவைக்கேற்ப கடுகு- சிறிதளவு கறிவேற்பிலை- சிறிதளவு ஒயில் – 1 ரீ ஸ்பூன் செய்முறை பலாக்காயை பெரிய நீள் துண்டுகளாக வெட்டியெடுங்கள். உள்ளிருக்கும் சக்கையுடன் கூடிய நடுத் தண்டின் பாகங்களையும், வெளித்தோலையும் சீவி நீக்கி விடுங்கள். தண்ணீர்விட்டு அவித்து எடுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் 2அங்குல அகலத் துண்டுகளாக வெட்டி வையுங்கள். வெங்காயம்…
-
- 7 replies
- 9k views
-
-
மாங்காய் சம்பல் எங்கள் வாழ்வில் சின்ன வயசில் அம்மா சமைத்த சாப்பாட்டை விட இதை தானே அதிகம் சாப்பிட்டு இருக்கிறம்... தேவையானது: மாங்காய் மிளகாய் தூள் உப்பு வெங்காயம் (நான் யாரையும் திட்டவில்லை) மிளகாய் (நிறைய போட்டு போட்டு பிறகு....என்னை குறை சொல்ல வேண்டாம்) 1. மாங்காயை சின்னனா வெட்டுங்க. 2. வெங்காயம், மிளகாயை சின்னதா வெட்டுங்க 3. மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்றாக போட்டு கலக்கவும். 4. மற்றவர்களுக்கும் குடுத்து சாப்பிடவும். பி.கு - களவெடுத்த மாங்காய்க்கு ருசி அதிகமாம்..ஆனால் காவல்துறையில் இருந்து உங்களை வெளியே எடுக்க நாங்கள் வரமாட்டோம். நன்றி சரி சரி உங்கட மாங்காய் சம்பல் கதைகளை எழுதுங்கோ..
-
- 45 replies
- 9k views
-
-
ஆமை வடை தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு - அரை கப் உளுத்தம்பருப்பு - அரை கப் துவரம்பருப்பு - அரை கப் பச்சைமிளகாய் - 6 மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி புளி - சிறு நெல்லிக்காய் அளவு உப்பு - 2 தேக்கரண்டி எண்ணெய் - 2 கப் செய்முறை: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு இவை மூன்றையும் ஊறவைத்து, நன்றாக ஊறியபின் நீரை வடித்துவிட வேண்டும். பருப்புகளுடன், பச்சை மிளகாயையும், உப்பையும் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, சீரகம், மிளகினை இலேசாக உடைத்து மஞ்சள்பொடியுடன் அரைத்து வைத்துள்ள பருப்பில் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவினை எலுமிச்சை அளவி…
-
- 35 replies
- 8.9k views
-
-
வணக்கம் உறவுகளே, சுவையருவியில் உங்கள் செய்முறைகளையும் சேர்க்க விரும்பினால், செய்முறைகளை இங்கே விட்டு செல்லுங்கள்.. நன்றி
-
- 48 replies
- 8.8k views
-
-
. ஆட்டுக்கால் சூப். தேவையான பொருட்கள்; ஆட்டின் பின் கால்கள் இரண்டு. மூன்று பெரிய வெங்காயம். 6 செத்தல் மிளகாய். பதினைந்து உள்ளி. 50 கிராம் மல்லி. இஞ்சி . மிளகு. பெருஞ்சீரகம். தக்காளிப் பழம் ஒன்று. எலும்பிச்சம் பழம் ஒன்று. சிறிது மஞ்சள் தூள். உப்பு. செய் முறை; ஆட்டின் கால்களில் உள்ள இறைச்சியை நீக்கி விட்டு, அதன் கால்களை சிறு துண்டுகளாக பெரிய கத்தியால் வெட்டவும். அதனை ஒரு பெரிய பாத்திரத்தில் இட்டு ஒன்றரை லீற்றர் தண்ணீரும் , உப்பும் போட்டு நன்கு அவிய விடவும். வெங்காயத்தை நீளமாக சிறு துண்டுகளாக வெட்டவும். செத்தல் மிளகாயை சிறிய துண்டுகளாக வெட்டவும். மல்லி, பெருஞ்சீரகம், மிளகு போன்றவற்றை கிறைண்டரி…
-
- 31 replies
- 8.8k views
-
-
சிம்பிள் வெஜ் புலாவ் தேவையான பொருட்கள் ; சீரக சம்பா பச்சை அல்லது பாசுமதி அரிசி - அரைகிலோ எண்ணெய் - 50- மில்லி நெய் - 50 மில்லி இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் ஏலம் - 2 கிராம்பு - 2 பட்டை - 2 சிறியதுண்டு பிரியாணி இலை அல்லது ரம்பை இலை - சிறிது புளிக்காத மோர் - ஒரு கப் வெங்காயம் - 1 தக்காளி - சிறியது-1 மிளகாய் -2 கேரட்,உருளை,பீன்ஸ்,பச்சை பட்டாணி - சேர்ந்து கால் கிலோ மல்லி புதினா - சிறிது உப்பு - தேவைக்கு செய்முறை காய்கறிகளை நறுக்கி வைக்கவும்,அரிசியை அலசி குறைந்தது அரைமணி நேரம் ஊறவைக்கவும். புலாவ் செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் காயவிட்டு ஏலம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை சேர்க்கவும்.வெங்காயம் சிவறாமல் நன்கு வதக்கி…
-
- 0 replies
- 8.8k views
-
-
-
பழைய சாதமும் பழைய மீன் குழம்பும் சாப்பிடுற சுகம் வேறு எதற்கு வரும் என்ற வரிகள் அடிக்கடி என் காதில் விழும். அட அப்படி அதில் என்ன தான் இருக்கு என முயற்சித்து பார்த்தேன். சும்மா சொல்ல கூடாது, சுவையோ சுவைதான் போங்க. (இருக்காத பின்ன, மீனை வெட்டி,சுத்தம் பண்ணுறது நாங்க தானே என வீட்டில் மாமா முணுமுணுப்பதையெல்லாம் சொல்லிட்டா இருக்க முடியும்) என்னுடைய நெடுநாள் வலைப்பூ நண்பர் தீபக் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். சமையலில் என் ஆர்வம் பார்த்து, கேரள சமையல் குறிப்புகள் பலவற்றை தந்துள்ளார். அவற்றிலிருந்து சிலவற்றை முயற்சித்து பார்த்து வருகின்றேன். (இந்த மாதம், கேரளா உணவு மாதம்) அதில் முதல் முயற்சி தான் இந்த கேரள மீன் குழம்பு. எங்களுடைய மீன் குழம்போடு ஒப்பிட்டு பார்க்கும் போது, சுவை கொ…
-
- 28 replies
- 8.8k views
-
-
எனக்கு பொழுது போகாட்டி நான் செய்வது புதுசு,புதிசாய் ஏதாவது சமைத்துப் பார்ப்பது அப்படி கண்டு பிடித்தது தான் இந்த சாம்பார்...உங்களுக்கு விருப்பம் என்டால் முதலில் கொஞ்சமாய் சமைத்துப் பாருங்கள்...ஏனென்டால் சில பேருக்கு இதன் சுவை பிடித்தது சில பேருக்கு பிடிக்கவில்லை...ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது சமைப்பதும் இலகு,எல்லாய் சத்தும் ஒரே அடியாய் கிடைக்கும். இனி செய்யத் தேவையான பொருட்கள்; கோழி 1/2 கிலோ தக்காளி 1/4 கிலோ உருளை கிழங்கு 1/4 கிலோ முருங்கங்காய் 2 கத்தரிக்காய் 2 கருவேப்பிலை றம்பை தாளிக்க தேவையான பொருட்கள்[பெ.சீரகம்,சீ.சீரகம்,கடுகு,கருவா,ஏலக்காய் போன்றன] நல்லெண்ணெய் தூள்,உப்பு வெங்காயம் உள்ளி,இஞ்சி இனி செய்முறையைப் பார்ப்போம்; முதலில் பா…
-
- 49 replies
- 8.8k views
-
-
பயத்தம் லட்டு (பணியாரம் அல்ல) தேவையான பொருள்கள்: பாசிப் பயறு 500 கிராம் சீனி 500 கிராம் ஏலக்காய் தூள் சிறிதளவு முந்திரிப் பருப்பு தேவையானது நெய் 100 கிராம் உப்பு சிறிதளவு செய்முறை: முதலில் பயறை நல்ல வாசம் வரும் வரை வறுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும் பின் சிறிதளவு நெய் விட்டு முந்திரி பருப்பை பொன்னிறமாக பொரித்து வைக்கவும் அதன் பின் பாத்திரம் ஒன்றில் அரைத்த பயத்தம் மா உப்பு சீனி முந்திரி பருப்பு ஏலக்காய் தூள் அத்துடன் மிகுதியாக உள்ள சுhடாக்கிய நெய் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்த பின் உருண்டைகளாக பிடித்து பின் உண்ணவும் இல்லையேல் பரிமாறவும்........ நான் தளத்தில சுட்டு கொடுக்க அவா தயாரிச்சு தந்தவா...... சுப்பர் தான் நான்…
-
- 22 replies
- 8.8k views
-