கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
வேப்பம் பூ வாசம் ஸ்மெல் பண்ணிருக்கியா ?? வெயில் கால இரவின் நிலா பார்த்திருக்கியா ??? உதிர்ந்து கிடக்கிற மாம் பூவ எப்பவாது பொறுக்கி எடுத்த அனுபவம் இருக்கா உனக்கு ??? கலர் கலரா சேமியா ஐஸ் உறிஞ்சி இருக்கியா ??? வரிசையாக கேட்டு கொண்டே போகிறான். “இல்லை” என்ற என் ஒற்றை தலையாட்டலுக்கு பின் சொன்னான்…. “இதெல்லாம் தெரிஞ்சுக்கனும்னா வெயில் பழகனும். வெயில் அப்படி, வெயில் இப்படின்னு புலம்ப கூடாது. ஓகே வா ? என்று மெல் புன்னகையிட்டவன்… சட்டென்று சொன்னான் “வெயில்தான் அழகு. வெயில்தான் நம்மோட அடையாளம். வெயில் ஒரு இனத்தின் குறியீடு. வெயிலை பழகு…. சரியா ???? என்று. அவன் தலையில் தட்டி சொல்ல தோன்றியது “பக்கி…..மழை படிடா முதல்ல” என்று. அனால் சொல்லவில்லை. அவனுடனான முதல் சந்திப்பே எனக்கு …
-
- 4 replies
- 1.1k views
-
-
எங்கே அந்த சொர்க்கம்? வற்றாத கடல், வாகான பாலம், வாசல் திண்ணை, வளைந்து கொடுக்கும் அப்பா, வாஞ்சையே வடிவான அம்மா, எளிய வாழ்க்கை, எதிர் வீட்டு மனிதர், அமைதியான தெரு, ஆலய மதில்கள், அறிவு புகட்டும் கலைக்கூடங்கள,; அலை உரசும் கடற்கரை, படகுச் சவாரி காலையில் கலகலக்கும் ஊர்ச்சந்தை, சோழகத்தில் சுழன்றாடும் பனைமரங்கள், பூமணத்தைச் சுமந்து வரும் தென்றல், விடலைகள் துள்ளி விளையாடும் கடற்கரை, குமரிகளின் கும்மாளச் சிரிப்பொலி, என்றென்றும் மனதை விட்டகலா மண்ணின் மணம் இவையனைத்தும் இன்று போரின் வடு சுமந்து, புன்னகையின் பொலிவிழந்து, வீதிகளில் வெறுமை படர்ந்து, நீர் வற்றிப்போன குளங்களை விட்டு பறவைகள் விலகிச் செல்வது போல எங்கள் ஊரின் எழில் குலைந்த பின் எச்சங்களாக மிச்சமிருக்கும் ஒரு சிலர். இன்னும் …
-
- 5 replies
- 1.1k views
-
-
*****************மானசீகன்**************** நான் முதன்முதலாக சர்ச்சுக்குப் போனது ஒரு காதல் விவகாரமாகத்தான்.என்னுடைய நண்பன் மணிகண்டன் ஒரு கிறிஸ்டியன் பெண்ணைக் காதலித்தான். அவள் பெயர் கேத்தரின். பேரழகி, தேவதை என்பதெல்லாம் அவளைப் பொறுத்தவரை குறைப்பிரசவ வார்த்தைகள். அவள் முகபாவனைகளும், உடலசைவும், உடைகளின் சரசரப்பும் யாரும் அறியாத ஒரு மலரின் வாசனையை இந்த மண்ணில் பரப்பிக் கொண்டிருந்தன.. எல்லாவற்றையும் விட அவள் அழகாகப் பாடுவாள். மைக் முன்பாக அவளைப் பார்க்கையில் , ஒரு நீர்வீழ்ச்சி காலத்தின் கட்டளையால் உறைந்து நிற்பதைப் போலிருக்கும். பெரும்பாலும் எஸ். ஜானகியின் பாடல்கள்.அவள் குரலில் எப்போதும் ஒரு மென்சோகம் இழையோடும். எதிர்பாராத தருணங்களில் அதுவே ஒரு சிறுத்தையாக உரு…
-
- 0 replies
- 1.4k views
-
-
நாம் வாழ்வும் பண்பாடும் கலாச்சாரம் என எமக்கான தனி அடையாளங்களுடன் வாழ்ந்த இனம் இப்பொழுது பயணிக்கும் பாதை மிக கவலையானது எமக்கான அடையாளங்களை தொலைத்து நாம் என்ன லாபம் அடைய போகிறோம் ஒரு சாதாரண கைபேசியில் தொடங்கி வீட்டு கழிவறைக்கு போடும் செருப்பு வரை என்னுடையது விலை மதிப்பாக இருக்க வேணும் என்பதே எமது எண்ணம் ஆகி இருக்கு கலக்சி போனில் அல்லது ஐபோனில் என்ன இருக்கு அதை பயன் என்ன பாவனை திறன் என்ன என்றுகூட அறியாது நான் மார்க்கான ஒரு போன் வைத்துள்ளேன் என்பதில்தான் என் கௌரவம் அடங்கி இருக்க என போகிறது வாழ்க்கை வருமானத்துக்கு மேலக செலவுகளும் பிழைகளுக்கு நாங்கள் ஊரில பில்கேஸ் என நீட்டி முழங்கி கதைகள் சொல்லி எங்கள சுயங்களை அவர்களுக்கு விளக்காது ஒரு கனவு உலகத்தில் பயணிக்க செய்வதால…
-
- 5 replies
- 1.5k views
-
-
எங்கோ… யாரோ… யாருக்காகவோ….!? … முருகபூபதி. “ சேர்… வவுனியா வந்திட்டுது.” சாரதி அருகில் அரைத்தூக்கத்திலிருந்த மூர்த்தியை தட்டி எழுப்பினான். அதிகாலை கொழும்பிலிருந்து புறப்படும்போது, ‘எப்படியும் காலை ஒன்பது மணிக்குள் வவுனியாவை வந்தடைந்துவிடலாம்’ என்று சொன்ன சாரதி சொன்னபடி நிரூபித்தும்விட்டான். அந்த வாகனத்தையும் சாரதியையும் வெள்ளவத்தையில் அறிமுகப்படுத்திய நண்பனுக்கு மனதிற்குள் நன்றி சொல்லிக்கொண்டார் மூர்த்தி. போர் முடிந்து இரண்டுவருடங்களின் பின்னர் இலங்கை வந்திருந்த மூர்த்திக்கு இலங்கையில் பார்ப்பதற்கு சொந்தபந்தங்கள் என்று குறிப்பிடும்படியாக எவரும் இல்லை. பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு நாட்டில் புகலிடம்பெற்று, கடைகள் நடத்தலாம். சங்கங்களில் இணைந்திருக்கலாம். கோயில…
-
- 1 reply
- 1.1k views
-
-
எச்சரிக்கை!!! பயந்த சுபாவம் உள்ளவர்கள், தயவு செய்து... இதை படிக்க வேண்டாம். கிளிநொச்சி நகரில் உள்ள ஒரு கிராமம்... தென்னந்தோப்புகளும் பாக்கு தோட்டங்களும், மாமர தோட்டங்களும் நிறைந்தபகுதி அது! நிலத்தை ஒட்டிய பகுதியில் வீடுகட்டி ஒரு சிறிய குடும்பம் வாழ்ந்துகொண்டு இருந்தது! நடுத்தர வயதை ஒட்டிய ஒரு கணவன் மனைவி, அவர்களுக்கு பத்து வயதில் ஒரு பெண் குழந்தை! ஒரு நாள் அந்த வீட்டை சேர்ந்த பெண் தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, மாடு களுக்கு புல் அறுப்பதற்காக தென்னந்தோப்புக்கு செல்கிறாள்! அவள்…
-
- 24 replies
- 2.5k views
-
-
எஞ்சிக்கிடப்பது ஞாபகங்கள் மட்டுமே... - சாந்தி ரமேஷ் வவுனியன் - நேற்று முதல் ஒரு தொலைபேசியழைப்பு வந்து வந்து துண்டிக்கப்படுகிறது. யாரென்று அறிய முடியாமல் அந்த அழைப்பு மனதைக் கலவரப்படுத்துகிறது. 'please call me' என வந்த அந்த எஸ்எம்எஸ் யாரென்பதை இனங்காண முடியாமல் தொடர்பை ஏற்படுத்துகிறேன். அது யாழ்ப்பாணத்திலிருந்து வந்த அழைப்பு. 19வருடத்துக்குப் பின்னான தொடர்பாக அழைத்த அந்த அழைப்பு, ஒருபுறம் மகிழ்வும் இன்னொருபுறம் துயருமாக இருந்தது. 21வருடம் முதல் இறந்து போன சித்தப்பாவின் மகன் அவன். உறவுகளிடம் தேடி என்னை அழைத்திருந்தான். இந்திய இராணுவம் கொன்ற எனது சித்தப்பாவும் 5வயதில் நான் கண்ட என் சித்தப்பாவின் மகனும் நினைவில் வந்தார்கள். 1987 மழைக்கால நாளொன்றி…
-
- 15 replies
- 2.8k views
-
-
எட்டாப் புத்தகம்! பொன்னம்பி அவனிடம் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தான்."நீ (அரசியல்)அமைப்பிலே வேலை செய்யாமல் வெளியிலே போய் பயிற்சி எடுக்கணும் என்று அவசரப்படுகிறாய்.உனக்குத் தெரியுமா, இங்கே(தளத்திலே) வேலை செய்வது தான் முக்கியமானது,ஒரு காலத்தில் உணர்வாய்!"என்றான். இதையெல்லாம் நின்று நிதானிக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை.. .மனோவும் ,சதிஸும் ...கிராமத்திலிருந்து பயிற்சிற்குச் சென்ற பிறகு இவனுக்கு மன அலைகள் அடிப்பது அதிகமாகியிருந்தன. .மனோ,அவனுடன் சிறு வயதிலிருந்து படித்த நல்ல நண்பன்.சதாசிவம் வாத்தியாரின் பல பிள்ளைகளில் ஒருத்தன். ரமேஸினுடைய அம்மாவும் அங்கே படிப்பிக்கிற சந்திரா ஆசிரியை தான். சதிஸ் கிராமத்தில் இருந்து வட்டுக்கோட்டையில் படித்திருக…
-
- 0 replies
- 1.1k views
-
-
எட்டாவது திரை - தெய்வீகன் அடைமழை பொழிவது எல்லாத் திரைகளிலும் தெரிந்தது. ஒரு சில துளிகள் கமராக்களின் கண்களில் தெறிந்து விழுந்து வீங்கிப் பின் வடிந்தன. நகரத்தின் வாகன நெரிசல் பெரும்பாலும் அத்தனை திரைகளிலும் நிறைந்திருந்தது. எனக்கருகிலிருந்த தொலைத்தொடர்பு ரேடியோ கருவண்டு போல அவ்வப்போது இரைந்து முனகியது. பாதுகாப்பு அதிகாரிகளின் குரல்கள், அந்த ரேடியோவில் விழுவதும் ஓய்வதுமாயிருந்தன. களத்திலிருந்து உத்தியோகத்தர்கள் அறிவித்த சங்கேதக் குரல் வழியான செய்திகளுக்குப் பதில் கொடுத்தேன். அதனை பதிவேட்டில் நேர விவரத்தோடு எழுதினேன். “Spring Street Security vehicle moving” கட்டுப்பாட்டு அறையிலுள்ள பெருந்திரைக்கு மேலுள்ள மணிக்கூட்டில் சரியாக மாலை ஐந்து மணி காண்பித்தது. முன்னைய இரவுப் பணியின் …
-
- 1 reply
- 455 views
-
-
அனைவருக்கும் இனிய திருட்டு வணக்கங்கள், இண்டைக்கு (நேற்று) நான் பள்ளிக்கூடம் போனால் என்ன நடந்திச்சிது தெரியுமோ? ரெண்டு அதிர்ச்சிகள் எனக்கு காத்து இருந்திச்சிது. ஒண்டு எனக்கு படிப்பிக்கிற வாத்திக்கு மாரடைப்பு. இனி அவர் படிப்பிக்க மாட்டாராம். புது வாத்தி ஒருத்தர பள்ளிக்கூடம் தேடிப்பிடிக்கவேணும். மற்றது, என்னோட படிக்கிற சக மாணவியிண்ட காரை உடைச்சு களவு. இதில ரெண்டாவது கதைய மாத்திரம் சொல்லிறன் சுருக்கமா. நேற்று என்னோட படிக்கிற சக மாணவி ஒருத்தி தன்ர காரை (car - மகிழூர்தி?) பள்ளிக்கூடத்திற்கு அருகில இருக்கிற ஒரு தெருவில விட்டுப்போட்டு அங்கால எங்கையோ போட்டு வாறதுக்கு இடையில யாரோ ரெண்டு திருட்டுப் பசங்கள் கார் கண்ணாடிய கல்லால குத்தி உடைச்சு காருக்க இருந்த பொருட்கள த…
-
- 20 replies
- 4k views
-
-
எண்ணும்பொழுது - ஜெயமோகன் “தெற்குதிருவீட்டில் கன்னியின் கதை” என்று அவன் சொன்னான். அவள் கூந்தலைத் தூக்கிச் சுருட்டி முடிந்துகொண்டிருந்தாள். அவன் சொன்னதை அவள் கேட்கவில்லை. அவன் அவளுடைய புறங்கழுத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அவள் நல்ல வெண்ணிறம். கழுத்து மென்மையான சருமப் பளபளப்புடன், சுருண்ட பிசிறுமயிர்ச்சுருட்களுடன், இரு சிவந்த மென்வரிகளுடன் தெரிந்தது. அவள் கண்ணாடியில் அவனைப் பார்த்தாள். கண்ணாடியிலேயே உதட்டைச் சுழித்து “என்ன பார்வை?”என்றாள் “சும்மா” ”பாத்துப்பாத்துதான் கெடக்கே” என்று அவள் உதட்டைச் சுழித்தாள் “பாக்கிறதிலே என்ன?”என்றான். “பாக்கிறதுக்காகத்தானே?” “பாக்கிறது மட்டுமா?” “பாக்கிறதுதான் முதல்லே… கண்ணாலேதான் மனசு… மத்ததெல்லாம…
-
- 1 reply
- 885 views
-
-
எதிரி ஓய்வு நிலையிலிருந்த உலகம் மெல்ல மெல்லச் சோம்பல் முறித்துச் செயற்பட ஆரம்பிக்கும் காலை நேரம். சூரியனும் தன் பொற் கிரணங்களை அள்ளி வீசத் தொடங்கி விட்டான். அவசர உலகத்தின் வேகத்திலே மனிதனை விஞ்சிவிட வேண்டுமே என்ற ஆவேசத்துடன் பறவைகள் தம் உறக்கம் கலைத்து இரை தேடக் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. வெள்ளைச் சிறகு கட்டிய பள்ளிக் குழந்தைகள், தம் தோட்டத்தைப் பார்க்கச் செல்லும் கமக்காரர்கள், சந்தை வியாபாரிகள், அலுவலக ஊழியர்கள்... என வீதிகள் சுறுசுறுப்படையத் தொடங்கி விட்டன. வழமையாக வசுமதி வீட்டில் பொழுது புலர்வதில் சற்றுச் சுணக்கந்தான். அவர்களுக்கென்ன? கடைகளைக் கவனிக்கக் கணக்கப்பிள்ளைமார், பொருட்களை வாங்குவதற்கும் வீட்டு அலுவல்களைக் கவனிப்பதற்கும் ஏகப்பட்ட வேலையாட்கள், சமையல்…
-
- 11 replies
- 3.6k views
-
-
என்னங்க இன்றைக்கு அம்மா ஊரில இருந்து போனில கதைச்சாங்க. என்னவாம். காசு கேட்டா போல. இல்லைங்க.. தங்கச்சிக்கு கனடாவில இருந்து ஒரு சம்பந்தம் பேசி வந்திருக்காம். அதுதான் விசாரிச்சுப் பார்க்கச் சொல்லிச் சொன்னா. நல்ல விசயம் தானே. விசாரிச்சாப் போச்சுது. உங்கட ஆக்கள் தானே கனடாவில புழுத்துப் போய் இருக்கினம். ஒருக்கா சொல்லி விசாரிக்கச் சொல்லுங்களன். அதென்ன உங்கட ஆக்கள் எங்கட ஆக்கள் என்று பிரித்துப் பேசிறீர். உம்மைக் கட்டினது துவக்கம் நான் எப்பவாவது உங்கட எங்கட என்று பிரிச்சுப் பார்த்திருக்கிறனே. இல்லையப்பா.. சும்மா சொன்னன். அப்படிச் சொன்னா தான் செய்வியள் என்று. அதுக்கேன் கோவிக்கிறியள். சரி சரி.. இப்ப நான் வேலைக்குப் போகப் போறன். இரவு வந்து கனடாவில இ…
-
- 10 replies
- 1.6k views
-
-
அன்றைய காலைப்பொழுது அவளுக்கு அதிகாலை நான்கு மணிக்கே விடிந்து விட்டது இடியப்பம் அவிக்க நேரம் ஆகிவிட்டதே என அடுப்படியை வெளியாக்கி கொண்டிருக்கும் போது அதில் இருந்த விறகு கட்டைக்குள் பாம்பைக்கண்டவள் கொஞ்சம் அதிர்ந்து போனாள் . என்ன பாம்பு என பார்ப்போம் என விளக்கு எடுத்து வருவதற்குள் அந்த பாம்பு மாயமாய் மறைந்து விட்டது . அவள் மனதிற்குள் எப்பதான் நான் ஒரு வீடு ஒன்றைக்கட்டி நிரந்தரமாக குடி இருக்கிறதெண்டு தெரியலையே முருகா என மனதிற்குள் புறு புறுத்துக்கொண்டு பாம்பை தேடினாள் அவள் . அவளின் அந்த ஓலைக்குடிசைக்குள்….. வெளியில் வந்து தேடிப்பார்த்த போது அது போன தடம் தெரியவே மனதுக்கு நிம்மதியாக இருந்தாலும் அப்படியே நிமிர்ந்து பார்த்தாள் அந்த கோவில் கோபுரத்தை ஆண்டவா இன்றைய நாள் எல்லோருக…
-
- 9 replies
- 1.7k views
-
-
எதிர்ப்பு "...இந்தக் கதைக்கும் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல..." காட்டிலே கூடியிருந்த மரங்களிலிருந்து தனியாக,கிளையும் கொப்புமாக பரப்பி பசுமையோடு நின்றிருந்தது அந்த மரம். அதனைக் கடந்து போகும் பறவைக் கூட்டங்கள் கூட சிறிது நேரம் தங்கிப் போக விரும்பின அந்தளவு வனப்பும் வளமும் கொண்டு விளங்கியது அந்த மரம் காலங்காலமாக பலவித பறவைக் கூட்டங்கள் கிளைகளில் கூடமைத்துத் தங்கின,கிளைகளின் உச்சியில் கூட்டமாக வாழ்ந்து வந்த காகம்,மரப் பொந்துகளில் வசித்த ஆந்தை இவை தவிர சிறு குருவிகள் அணில்கள் எல்லாவற்றிற்கும் மரம் நிழலும் பழமும் கொடுத்தது. காகங்களின் கூடு மரத்தின் …
-
- 2 replies
- 2.4k views
-
-
எதிர்ப்பு - ஈழநாதன் "...இந்தக் கதைக்கும் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல..." காட்டிலே கூடியிருந்த மரங்களிலிருந்து தனியாக,கிளையும் கொப்புமாக பரப்பி பசுமையோடு நின்றிருந்தது அந்த மரம். அதனைக் கடந்து போகும் பறவைக் கூட்டங்கள் கூட சிறிது நேரம் தங்கிப் போக விரும்பின அந்தளவு வனப்பும் வளமும் கொண்டு விளங்கியது அந்த மரம் காலங்காலமாக பலவித பறவைக் கூட்டங்கள் கிளைகளில் கூடமைத்துத் தங்கின,கிளைகளின் உச்சியில் கூட்டமாக வாழ்ந்து வந்த காகம்,மரப் பொந்துகளில் வசித்த ஆந்தை இவை தவிர சிறு குருவிகள் அணில்கள் எல்லாவற்றிற்கும் மரம் நிழலும் பழமும் கொடுத்தது. காகங்களின் கூடு ம…
-
- 1 reply
- 559 views
-
-
இரவு நேர புழுக்கம் நித்திரையை தாலாட்டாமால் எழுப்பியது.இப்படி கொஞ்சநாளாக ..கொஞ்ச காலமாக ஏதோ எனக்கு வந்து கதை சொல்லுவது போல பிரமை .அதுவும் மற்ற நேரம் காலம் இல்லாது இரவு பன்னிரண்டு மணி அடித்து முடிந்த கையோடை தொடங்கி விடும்.காலில் இருந்து உடம்பில் வழியாக ஊர்ந்து வந்து தலை வழி ஏறி பிடரி பக்கம் சென்று இனம் புரியாத சங்கீத மொழியில் ஏதோ சொல்ல தொடங்கி விடும். இதோ தொடங்கி விட்டது.அக்கம் பக்கம் என்னையறியாமால் புரள்கிறேன் ,கவிழ்கிறேன் நிமிர்கிறேன் பிறகு படுக்கிறேன்..தலையை ஆட்டுகிறேன்.பிறகு புரள்கிறேன்..ஏதோ றிமோட் கருவியினால் யாரோ இயக்க அவர்களின் கட்டளைகளை உடனுக்குடன் நிறேவற்றுவது போல் நிறேவேற்றி கொண்டிருக்கிறேன். எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது .நான் செய்து கொண்டிருப்பதை நானே மூன…
-
- 1 reply
- 900 views
-
-
நேற்று முதல்… நேரிலும், தொலைபேசியிலும், ஈமெயிலிலும், இன்பாக்ஸிலும் 100க்கும் மேற்பட்ட வாசகவாசகிகள் தொடர்பு கொண்டு, எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள், ஏழைக் குழந்தைகளுக்கு உதவும் சிமிர்னா தொண்டு நிறுவனம் வெளியிட உள்ள “மனிதம்” நூலுக்காக பகிர்ந்து கொண்ட, இந்த உன்னத நிகழ்வினை, எளிதில் படிப்பதற்கு வசதியாக தட்டச்சு செய்து வெளியிடச் சொல்லி கோரிக்கைகள் வைத்ததைத் தொடர்ந்து இதோ இங்கே அனைவரின் விருப்பப்படியே பதிவாகிறது : எது மனிதம்? அழுகிற விழிகளைத் துடைக்க விரல்களை நீட்டுவதா? பசிக்கிற குழந்தைக்கு பன் வாங்கித் தருவதா? துக்க வீட்டில் பிணம் தூக்கி பூ வீசுவதா? கோடையில் வாசலில் தண்ணீர் பந்தல் வைப்பதா? கிழவி பாதை கடக்க கரம் பிடித்து போக்குவரத்தை நிறுத…
-
- 0 replies
- 1.4k views
-
-
எதுவரைக்கும் எழுதுவது...:. குருணாகல் என்ற சிங்கள ஊரின் அழகு அற்புதமானது. பாறைகள் மலையாகவும், குளங்கள் ஓடைகள் போன்று நீண்டும், வயல்கள் பேராறு போன்று விரிந்தும் இருக்கும் அழகிய சிங்கள விவசாய பெரும் கிராமம். நகரம் என்று சொல்லப்பட்டாலும் கிராமியமே எங்கும் பரவி இருக்கும் ஒரு பிரதேசம் பெரும் பாறைகள் மலையாக எழுந்தும் 'வெவ' என்று சிங்களத்தில் அழைக்கப்படும் பெரும் குளங்கள் பல கொண்டும் இருக்கும் அந்த அழகிய சிங்கள அப்பாவி கிராமவாசிகளால் நிரம்பிய நகரத்தில் நான் குருணாகல் ஸகிரா பாடசாலை எனும் தமிழ் மொழியிலான முஸ்லிம் பாடசாலைக்கு போய்க்கொண்டு இருந்த 1983 இன் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் என் அப்பா அவசரமாக தன் 'ரலி' சைக்கிளை உழக்கிக் கொண்டு மத்தியானத்துக்கு சற்று பிந்திய ஒரு ந…
-
- 58 replies
- 6.7k views
-
-
வேண்டாம் அருண் ....விடுங்க ப்ளீஸ்.... நாம பழகி சில நாட்கள் தானே ஆகுது..கல்யாணத்துக்கு முன்ன இதெல்லாம் வேண்டாம் அருண்..ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க!!! ஹேய்! நம்ம காதலப்பத்தி வீட்ல சொல்லிட்டேன். அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க..அப்ரம் ஏன் கவலைப்புடுற? கண்டிப்பா உன்ன நான் கல்யாணம் பன்னிப்பேன் இது சத்தியம் என்றான் அருண்..!! மீண்டும் சிணுங்கினாள் மோனிகா.... இன்பம் முடிந்தது பொழுதும் விடிந்தது. சில நாட்களுக்கு பிறகு.. அருணின் அலுவலகத்துக்குள் புகுந்தாள் மோனிகா.. ”என்ன ஏமாத்த எப்டி மனசு வந்துது அருண்.. நான் அப்டியா பழகினேன்? இப்டி பண்ணிட்டியே” நீ நல்லாவே இருக்க மாட்டடா...பாவி. கண்ணீர் வடித்தாள் கூச்சலிட்டாள்... ஹேய் நிறுத்து ! 1000 ரூபாய் கட்டொன்றை எடுத…
-
- 12 replies
- 1.8k views
-
-
எத்தியோப்பிய எலியும் நானும் எனது எத்தியோப்பிய வதிவிடத்தில் நீண்ட காலம் எலிகளும் இல்லை அவற்றின் தொல்லையும் இல்லை. சமீபத்தில் அவனோ அவளோ தெரியாது இந்துவோ கிறிஸ்தவமோ தெரியாது எலி ஒன்று வந்து சேர்ந்தது. நிச்சயமாய் நாலுகால் எலிதான். பைட் பைப்பர் என்னும் குழலூதிக் கலைஞன் போல் எலிகளை இசையால் வசியம் பண்ணும் இசையாற்றல் எனக்கில்லை. ஜெர்மனியின் கீழச் சக்சோனியில் 13 ம் நூற்றாண்டில் தோன்றிய கிராமியக் கதையின் கதாபாத்திரமே பைட் பைப்பர். எலியை விவசாயிகளின் நண்பன் என்பார்கள். அதனாற்தான் என்னவோ பின்னே வந்த ஆரியக் கடவுள் பிள்ளையாரின் வாகனமாயும் வலம் வருகிறது. “யானை” முகக் கடவுளுக்கு எலி வாகனம் என்று சில வட இந்தியர்கள் எத்தியோப்பியர்களுக்கு “அறிவியல்” விளக்கம் கொடுக்கும் போது …
-
- 6 replies
- 752 views
-
-
எனக்கான முத்தம் - சிறுகதை ப்ரியா தம்பி, ஓவியங்கள்: ஸ்யாம் ஊரில் நான் படித்த பள்ளியை, என் மகளுக்குச் சுற்றிக் காண்பித்துக்கொண்டிருந்தேன். ''இங்கதான் என் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் கிளாஸ் ரூம் இருந்தது'' என்ற இடத்தில், இப்போது எட்டாம் வகுப்பு B செக்ஷன் செயல்படுவதாக கரும்பலகை சொன்னது. அரை சுவரும் அதற்கு மேல் ஓட்டுக் கூரையுமாகக் கட்டடம் அப்படியே இருந்தது. ''இதுல நீ எங்க உட்காந்திருந்த... ஃபர்ஸ்ட் பெஞ்சா?'' ''அப்பல்லாம் பெஞ்ச் இல்லை, தரையிலதான் உட்காருவோம்.'' ''அப்ப உன் ஃப்ரெண்ட் யாரு?'' எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை. என் ஞாபகத்திறனின் போதாமையை அவள் அறிவாள். மேற்கொண்டு வற்புறுத்தவில்லை. ''கால் வலிக்குது... போ…
-
- 1 reply
- 3.2k views
-
-
எனக்கு ASIA வேணும் தலைப்பை மட்டும் படிச்சிட்டு நீங்களும் ஆளாளுக்கு எனக்கு அமெரிக்கா வேணும் ஜரோப்பா வேணும் ஆபிரிக்கா வேணும் எண்டு அடம் பிடிக்க கூடாது கதையை ஒழுங்கா படியுங்கோ. சைக்கிள் என்றால் கொஞ்சம் வயசான ஆக்களுக்கு உடைனை நினைவுக்கு வாறது றலி.றாம். கம்மர். பிறகு ஏசியா.லுமாலா.றொபின்சன். சிங்கர் . இப்பிடி பல ரகம் இருக்கு. என்னட்டையும் ஊரிலை 80 களிலை படிக்கிற காலத்திலை சைக்கிள் என்கிற பெயரிலை ஒரு சிங்கர் சைக்கிள் இருந்தது இது ஒரு இந்தியா தயாரிப்பு. 80களில் தான் யப்பான் தயாரிப்பான ஏசியா சைக்கிள் சில தொழில் நுட்ப மாற்றங்களுடன் பாரமற்ற இலகுவான ஒரு கலப்பு உலோகத்தால் செய்யபட்டு பின்பக்க வீல் சின்னதாகவும் அத்துடன் மற்றைய சைக்கிள் ரயர்களை விட காற்றின் உராய்வைகுறைக்க…
-
- 20 replies
- 3.7k views
- 1 follower
-
-
எனக்கு நீ வேணும் ரிஷபன் கீழிருந்து அழைப்பு மணியை இரண்டு முறை விட்டு விட்டு அழுத்தினேன். இது தான் சங்கேதம் . பத்மா எட்டிப் பார்த்தாள். மாடிப் போர்ஷனில் குடியிருக்கிறாள். ஒரே மகன்; ஷ்யாம். "உங்களுக்கு ஃபோன்..." "தேங்கஸ்... இதோ வரேன்..." ஃபோனில் பேசும் போது பத்மாவின் குரல் திடீரென உரத்துக் கேட்டது. "அதெல்லாம் முடியாது...." "வேணாம்... எனக்குப் பிடிக்கல..." மறுபடி தணிந்து போனது யாராக இருக்கும், பத்மாவிற்கு தொலைபேசி அழைப்பு வருவது மிக அபூர்வம்.பேசி முடித்திருக்க வேண்டும். அறைக்குள் எட்டிப் பார்த்தாள். "ஸாரி. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா.." "சேச்சே... அதெல்லாம் இல்லே..." மேஜை மீது வெள்ளைத் தாள்களும். பேனாவும்.இரண்டு வாரங்களாய்…
-
- 2 replies
- 818 views
-
-
யாழ் இணைய நண்பர்களையும் உங்க்ளுக்கு பிடித்த ஆறு ப்ற்றி கூறி.. இந்த விளையாட்டை இங்கையும் தொடரும் படி இந்த சின்னக்குட்டி அன்புடன் கேட்டு கொள்ளுகி்றான் http://sinnakuddy.blogspot.com/2008/10/blog-post.html
-
- 16 replies
- 2.1k views
-