கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
பல வருடங்களாக ஆயத்தப்படுத்தி ஆவலுடன் நாட்களை எண்ணிக் காத்திருந்த பயணம் அது. போவதென்று முடிவெடுத்து வேலைத்தளத்திலும் அனுமதிபெற்று, பிள்ளைகளை உசுப்பேத்தி, அவர்கள் நாள்தோறும் அந்த நாமத்தை உச்சரிக்க (எதுவென்று கேட்கிறீர்களா? அட நம்ம கண்டாவைத்தான் சொல்கிறேன்!) வைத்து விட்ட பயணம். பயணிக்கும் தேதியும் முற்றாகிவிட, சுமார் 4 மாதங்களுக்கு முன்னதாகவே விமானச் சீட்டுக்களையும் வாங்கிவிட்டோம். தென்கொரியாவின் தலைநகர் சியோலினூடாகப் பயணிக்கும் பயணம் அது. அதுவும் பயணச் சிட்டுக்களை மிகவும் குறைந்த செலவில் வாங்கிக் கொண்டதால், இரட்டிப்பு மகிழ்ச்சி. பயணச் சீட்டுக்கள் வாங்கிய நாளிலிருந்து அனைவரையும் கணடாக் "காய்ச்சல்" பற்றிக்கொள்ள அதுவே எங்கள் எல்லோருக்கும் தியானம் என்று ஆகிவிட்டது. பயணிக்…
-
- 69 replies
- 8.6k views
-
-
8நாளில எப்பிடியும் 3லட்சத்துக்கான மிச்சத்தை சேர்க்க வேணும் கிட்டத்தட்ட 5மாதம் அவனுடன் பேசியிருக்கிறேன். இதுவரையில் தனக்காகவோ தனது மனைவிக்காகவோ தனது 3வயது மகனுக்காகவோ ஒரு சதம்கூடக் கேட்கவில்லை. ஒவ்வொருமுறை கதைக்கிற போதும் தன்கூட இருக்கிறவர்கள் தன்போல சிறைகளில் அடைபட்டவர்கள் புனர்வாழ்வு பெற்று வெளியில் போன குடும்பங்கள் ,தன்னோடு களமாடி வீரச்சாவணைத்த தோழர்களின் குழந்தைகள் குடும்பங்களைளையே நினைவு கொள்வான். அவர்களுக்கான உதவிகளின் அவசியத்தை ஞாபகப்படுத்துவதும் அதற்கான ஒழுங்குகளைத் தேடுவதிலுமே இதுவரை நாளும் உரையாடியிருக்கிறான். மனசுக்குள் தானும் விடுதலையாகிப்போக வேண்டுமென்ற ஆசையிருப்பினும் அதனை வெளியில் சொல்வதில்லையோ என்னவோ தனது விடுதலைக்காக எவ்வித முயற்சிகளையும் எடுக்கவ…
-
- 62 replies
- 8.5k views
-
-
படிப்பு தவிர்ந்த நேரத்தில் ரொம்ப யாலியாக இருப்பது எனது வழக்கம். நன்றாக தூங்குவேன். நன்றாக சாப்பிடுவேன். நன்றாக ஊர் சுத்துவேன். நல்ல படங்கள் அதிலும் ரஐனி படம் முதல் காட்சி பார்ப்பேன். பாடசாலை கட் பண்ணாமல். அண்ணருடைய வீடு ஐம்பெற்றா வீதியில். மதியம் பாடசாலை முடிய அப்படியே 155இலோ 101 இலோ வந்திறங்கி 167 எடுப்பேன். சிலவேளை அப்படியே 167இல் போவேன் அல்லது கடைக்கு வந்து சைக்கிளில் சென்று சாப்பிட்டுவிட்டு வருவேன்.. (கலருகள் ஏறுவதைப்பொறுத்தே போக்குவரத்து வாகனம் தெரிவு செய்யப்படும் உள்ளே போவதா வெளியில் தொங்குவதா என்பதுதும் அவர்கள் உளள்ளே இருக்குகும் இடத்தைப்◌ாறுத்தேத ததீர்மானிக்கப்படும் ) அதன் பின் ஐயாவைப்பிடிக்கமுடியாது. ஒன்றில் ஊர் சுற்றுவது. அல்ல…
-
- 91 replies
- 8.3k views
-
-
மனைவியின் பதினாறாம் நாள் காரியங்கள் நடந்து முடிந்து, வந்த உறவுக்காரர்கள் கிளம்பிச் செல்ல, மனைவியின் படத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் கதிரேசன். அப்பாவைப் பார்க்க, யமுனாவுக்கு பாவமாக இருந்தது. அம்மா இல்லாமல், இனி அப்பா எப்படி தனியாக வாழப்போகிறார். தோட்டத்தில் அண்ணி நிற்பது தெரிய, அவளை நோக்கிச் சென்றாள். ""அண்ணி, உங்ககிட்டே மனசுவிட்டு பேசணும்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். உறவுக்காரங்க புறப்பட்டுப் போனதால இப்பத்தான் தனிமை கிடைச்சிருக்கு.'' என்ன விஷயம் என்பது போல, அவளைப் பார்த்தாள் வித்யா. ""அம்மாவும், அப்பாவுமாக இருந்தவரைக்கும், அடுத்தவங்களுக்கு தொந்தரவு தராமல் இரண்டு பேருமாக இருந்துட்டாங்க. இனி, அப்பாவின் நிலைமையை நினைச்சா கவலையா இருக்கு அண்ணி. இனி, அவ…
-
- 5 replies
- 8.3k views
- 1 follower
-
-
கி-பி 17ஆம் நூற்றாண்டு - தமிழ்நாட்டில் ஒரு கிராமம் அந்த மூன்று பெண்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். பின்னால் சிலர் குதிரைகளில் அந்தப் பெண்களை துரத்திக் கொண்டு வந்தார்கள். அவர்களின் முகங்களில் தாடி வளர்ந்திருந்தது. தமிழ் மண்ணிற்கு அந்நியமான ஆடைகளையும் மொழியையும் கொண்டிருந்தார்கள். கைகளில் வாளோடும் கண்களில் காமவெறியோடும் அவர்கள் அந்தப் பெண்களை துரத்திக் கொண்டிருந்தார்கள். குதிரைகளின் வேகத்திற்கு அந்தப் பெண்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்கள் அந்தப் பெண்களை பிடித்து விட்டார்கள். ஒரு பெண் அழுது கொண்டு ஏதோ சொல்ல அவளை மட்டும் விட்டுவிட்டு மற்ற இரண்டு பெண்களையும் தூக்கிக் கொண்டு போனார்கள். இதை எல்லாம் தொலைவில் இருந்து இரண்டு அழகான விழிகள் மிரட்ச…
-
- 50 replies
- 8.3k views
-
-
குப்பைகளை தெருவோரம் எறிந்துவிட்டுபோவது, அதிலும் இப்போ குப்பை கட்டி எறிவதற்கு வசதியாக பிளாஸ்டிக் பைகள் தாரளமாக கிடைகின்றது......சாப்பாடு கட்டுவதிலிருந்து..(சொதி,சம்பல்..)...ஷாப்பிங் வரை எல்லாமே பிளாஸ்டிக் பைதான்...பல இடங்களில் குப்பைகளை கட்டி தண்ணீர் ஓடும் கானிட்குள் (Canal: இதை சுருக்கமாக “கான்” இப்படிதான் யாழ்ப்பாணத்தவர் கூறுவர்) எறிந்துவிட்டிருந்தார்கள், சில காலியாக இருக்கும் வளவுக்கு முன் குவிந்து கிடந்தது......காலியாக வளவு இருந்தால் (வளவின் சொந்தகாரர் வெளிநாட்டில் இருந்தால் பக்கதுவீட்டுகாரர்கள் அந்தவளவை குப்பைபோடும் இடமாக மாற்றிவிடுவார்கள் (இது என் சொந்த அனுபவமும் கூட)..... மாநகரசபை குப்பைகளை வெளியில் வைக்குமாறும்....பின் அவைகளை எடுத்துச்செல்லுவதாக கூறியும்.…
-
- 10 replies
- 8.3k views
-
-
இந்த மூட்டைப் பூச்சி பற்றிய விடயம் ஒரு சிறியதே என்றாலும், இன்றுவரை அதன் நினைவு என் நெஞ்சை விட்டு அகல மறுத்து ஆழப் பதிந்ததனால் கட்டாயம் இது பற்றியும் எழுத வேண்டும் என்றுமுடிவெடுத்தேன். ஆனால் பலருக்கு மூட்டைப் பூச்சி பற்றித் தெரிந்தே இருக்காது. எங்கள் வீடு மிகச் சுத்தமானது என்பதால் வீடுத் தளபாடங்களும் சுத்தமாகவே இருக்கும். நான் நான் வேம்படிக்குப் படிக்கப் போனதன் பின்னர் எனக்காகப் படிப்பதற்குத் தனி மேசை கதிரை கட்டிலுடன் தனி அறை இருந்தது. அது எனக்குப் பதவி உயர்வு கிடைத்தது போன்றது. எனக்குப பல நண்பிகள் இருந்தனர். அவர்கள் வந்தால் நாம் வீட்டு முற்றத்தில் இருந்து கதைப்போம். முற்றத்தில் வேறு யாராவது வந்தால், ஏதாவது பகிடியாகக் கதைப்பதெனில் என் அறைக்குள் போய் இருந்து கதைப்போம…
-
- 13 replies
- 8.2k views
-
-
ரேணுகா எழும்பு பிள்ளை வேலைக்கு போக நேரமாகி விட்டதல்லவா எழும்பு என்று அவளின் அம்மா சாந்தி அவளை எழுப்ப அவளோ அம்மா எனக்கு இன்று உடம்பு சரியில்லை யென்று மீண்டும் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு படுத்து விட்டாள் அவள் அம்மாவோ விட வில்லை என்னடி சொல்கிறாய் உடம்பு சரியில்லையா இல்லை அங்க ஏதாவது பிரச்சினையா எனகேட்க அப்படி ஒன்றும் இல்லை சொல்கிறாள் இல்லை நீ எதையோ மறைக்கிராய் என்று அம்மா சொல்ல ஓம் அம்மா என்கிறாள் ரேணுகா..அவளின் அண்ணனோ குறுக்கால வந்து இவா வேலைக்கு போய்த்தான் நாங்கள் சோறு தின்ன வேணுமாக்கும் என்று சொல்ல அந்த வேலையை விடு என்றான் அவள் அண்ணன் ஆனால் அவள் அம்மாவோ நீ சும்மா இரடா என்று பொம்பிளை பிள்ளை வேலைக்கு போனால் உனக்கு என்ன என்று கேட்க அவனோ உனக்கு என்ன அம்மா தெரியும் …
-
- 26 replies
- 8.2k views
-
-
-
அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது அங்கு பிடித்ததும், பிடிக்காததும் பற்றிய எனது அனுபவத்தை பற்றி எழுதவேண்டும்போல் இருந்தது....முதலில் பிடிக்காததை எழுதுகின்றேன்... . இரவு கொழும்பிலிருந்து புறப்பட்டு காலை ஏழுமணியளவில் யாழ்ப்பாணத்திற்குள்ளே....வந்து சேர்ந்ததுமே முதலில் பார்த்தது நாய்களைத்தான் பல ரோட்டில் அலைந்து திரிந்தன....மனிதரைவிட நாய்களே பெருமளவில் தென்பட்டன....அதில் பல குட்டைநாய்கள்...சிலவற்றிகு உடம்பில் மயிர் முழுதும் கொட்டிப்போய் புண்ணாகி இருந்தது....வீடு போய் சேர்வதற்குள் ஏகப்பட்ட நாய்களை கண்டுவிட்டேன்...ஏற்கனேவே நாய் என்றால் எனக்கு அலர்ஜி, கடித்தால் இருபத்தியொரு ஊசி போடவேண்டும்.....அதுவும் யாழ்ப்பாணத்து ஊசி என்றால் சொல்லதேவையில்லை. ஒரு தடவை நடந்து போய்கொண…
-
- 26 replies
- 8k views
-
-
சிறகுகள் வேண்டும் எனக்கு என் மேசையில் இருந்த கடிகாரம் மணி 7 என காட்டியது. வேலைக்கு காலை 6 மணிக்கு வந்தேன். வேலையும் இன்று அதிகம் தான். இப்பொழுது வேலை அனைத்தும் முடிந்தும் வீடு செல்ல மனம் வரவில்லை. போனால் என்ன புதிதாக நடக்கும்? வழமையான புராணம். அதே கேள்விகள். அதே சந்தேகங்கள். இந்த 2 வருடத்தில் நடந்த விடயங்கள் "இப்படி ஒரு வாழ்க்கையா?" என சலித்துக்கொள்ள வைத்துவிட்டது. பெரியம்மா, மாமா, மாமி , சித்தப்பா, சித்தி என்று குடும்பத்தில் அனைவருமே என்னை தான் குறை சொல்கின்றார்கள். அம்மா அப்பா சொல் கேட்பது இல்லையாம்! இவர்கள் கேட்டார்களா என அப்பப்பாவிடம் கேட்க வேண்டும். நான் என்ன சின்ன பிள்ளையா? எனக்கு யோசிக்கும் சக்தி கூட இல்லையா? இத்தனை வருடங்களில் ந…
-
- 30 replies
- 8k views
-
-
இந்தக்காதல் இருக்கே...சீ அப்பிடியெல்லாம் டிஆர் மாதிரி விளக்கம் சொல்லமாட்டன் நான். ஏனென்றால் எனக்கே இந்தக்காதலைப் பற்றி ஒன்றுமே விளங்கேல்ல.காதல் என்றால் உண்மையா என்ன?அது யாருக்கு வரும்? எப்ப வரும்? ஏன் வரும்? எத்தpனை முறை வரும்? அப்ப அது எப்பிடி தோற்றுப்போகும்? ஏன் எப்பிடித் தோற்கும்? இதெல்லாம் யாருக்காவது தெரியுமா?இல்லாட்டா நீங்களும் என்னைப்போலத்தான் யோசிக்கிறீங்கிளோ? சத்தியமா எனக்குக் காதல் என்னென்று தெரியாது. கூட விளையாடின பக்கத்து வீட்டுப்பெடியன்ல ஒரு தனிப்பாசம் இருக்குமே. நமக்குள்ள என்னதான் சண்டை போட்டுக் கொண்டாலும் மற்ற நண்பர்கள் மத்தியில் அவனை விட்டுக்கொடுக்காம அவன் உண்மையாவே ஏதும் தப்புச் செய்திருந்தால்கூட அவனுக்காக வாதாடுவமே அது காதலா? அல்லது 10 வயசில எங்களோட…
-
- 67 replies
- 8k views
-
-
சுது மாத்தையாவும் சுடுபாணும். பாண் எண்டதும் பலரின் நினைவுகள் கட்டாயம் ஊருக்கு ஒருக்கால் போய்வரும்.வெளிநாட்டில் விதம் விதமாய் வகை வகையாய் பாணை சாப்பிட்டாலும். ஊரில் முன்னர் இருந்த ஒரு இறாத்தல் அச்சுப்பாண் றோஸ் பாண் அடுத்ததாய் வித்தியாசமாய் சங்கிலிப்பாண் சீனிப்பாண் மாலுப்பாண் எண்டும் இருந்தது . ஊரில் சாப்பிட்ட பாண் என்பது பலருக்கும் பல சம்பவங்களுடனும் ஒரு தொர்பை கொண்டருக்கும் எனவே பல நினைவுகளை கட்டாயம் ஒரு முறை கொண்டுவரும்.இலங்கை அரசியலையே மாற்றக்கூடிய வல்லமை இந்தப் பாணுக்கு இருக்கு அதாலைதான் ஒவ்வொரு தேர்தல்களிலையும் வேட்டபாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணின்விலையை குறைப்போம் எண்டு தேர்தல் வாக்குறுதி குடுக்கிறவை ஆனால் பிறகு அவை ஆட்சிக்கு வந்ததும் பாண் இருக்…
-
- 42 replies
- 8k views
-
-
ஊரில்.. வீட்டு முற்றத்தில்.. ஆகாயத்தை அண்ணார்ந்து பார்த்தபடி.. நான்... திடீர் என்று.. பெரிய விமானம் ஒன்று அதன் முதுகில்.. நாசாவின் விண்ணோடம் ஒன்றை தாங்கிய படி.. பறந்து வருகிறது. இதனை அவதானித்த நான்... அதனை வியப்போடு வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். என்னைக் கடந்து சென்ற விமானம்.. நான் எதிர்பார்க்காத வகையில்.. மீண்டும்.. திரும்பி வந்து.. வட்டமிட்டு வட்டமிட்டு நான் நின்ற பகுதியில் பறக்கிறது.. இந்தக் காட்சிகள் எல்லாம் அப்படியே மனதில் பதிவாகின்றன..! எந்தப் பெரிய விமானம்..அதன் முதுகில் பெரிய விண்ணோடம்... இந்தப் பறப்புப் பற்றி முன்னர் கேள்விப்பட்டிருந்தாலும்.. பார்த்ததில்லை. ஆனாலும்.. நேற்றிரவு தூக்கத்தில்... அதுவும் கனவில்..பார்த்தது வியப்பாகவே இருந…
-
- 60 replies
- 7.9k views
-
-
பக்கத்து வீட்டு இளைஞன் !! : மொழி பெயர்த்தவர்: சுரா நன்றி: www.lekhabooks.com/ சுராவின் முன்னுரை ‘பக்கத்து வீட்டு இளைஞன்’ (Pakkathu veettu ilaignan) - இளமை ததும்பும் இந்தக் கதையை மலையாளத்தில் படித்த நிமிடத்திலேயே அதைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். கெ.கெ.சுதாகரன் (K.K.Sudhakaran) ஒரு நூலகர். இந்த நாவலைத் தவிர, வேறு சில நல்ல நூல்களையும் இவர் எழுதியிருக்கிறார். இந்தப் புதினத்தின் கதாநாயகி ரேகா நம்மை ஆச்சரியப்பட வைக்கும் கதாபாத்திரம். அதை முழுமையாகச் செதுக்கியிருக்கிறார் சுதாகரன். அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆர்வம் இந்தப் புதினத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தைப் படிக்கும்போதும் நமக்கு உண்டாகும். இதன் இற…
-
- 19 replies
- 7.9k views
-
-
ஒரு நண்பன் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... அசோகமித்திரன், ஓவியங்கள்: அனில் கே.எஸ். ஹரிகோபால் என்னை எச்சரித்தான்: ''இதோ பார், நீ ரொம்ப 'ரெட்’ ஆகுற. போலீஸ் பிடிச்சா என்ன ஆகும் தெரியாது!'' அவன் சொன்னதில் தவறு கிடையாது. ஆனால் இவன் யார், எப்போது பார்த்தாலும் என்னை இதைச் செய்யாதே அதைச் செய்யாதே என்று சொல்வது? விவிலியத்தில் கெய்ன், கர்த்தரிடம் சொல்வான்: 'நான் என்ன, என் சகோதரனைக் காவல் காப்பவனா?’ இதை அவன் சகோதரன் ஏபல்லைக் கொன்ற பிறகு சொல்கிறான். என்ன நெஞ்சழுத்தம்! ஹரிகோபால், இந்த மாதிரி என் விஷயங்களில் தலையிடுவது இது முதல்முறை அல்ல. நான் இன்ஸ்பெக்டர் செண்பகராமனுடன் சினிமாவுக்குப் போனது, அவர் ஒரு மாடி வீட்டுக்க…
-
- 0 replies
- 7.7k views
-
-
டைகர் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் மற்றுமொரு திரைகாவியம் "புதிய சிவப்பு ரோஜாக்கள்"... (கண்டிப்பா வயது வந்தவர்களிற்கு மட்டுமே குழந்தைகள் மற்றும் கர்பிணி பெண்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம்...) கதாநாயகன் - இளைய தளபதி சுண்டல் (டைகர் பிலிம்சின் தனித்துவ கதாநாயகன்) இவருடன்..... *மக்கள் திலகம் திரு.கலைஞன்.. *நடிகர் திலகம் திரு.கந்தப்பு.. *கெளரவவேடத்தில் கனவுநாயகன் மருமோன்.. மேலும் புதுமுக நடிகர்களின் அட்டகாசமான நடிப்பில் மலர்ந்துள்ள திரைகாவியம்... வெளுறிய முகபரப்பில் உறைந்து போனது விழி! பூக்களும்,நிலவும்,கனவுகளும் கையூடு உதிர்ந்து கொட்ட கிடிநடுங்கி ஒரத்தே ஒதுங்கி உயிருக்காய் இறைஞ்சியது வாழ்க்கை!! "புதிய சிவப்பு ரோ…
-
- 50 replies
- 7.6k views
-
-
'என் ஞாபகப் பதிவிலிருந்து' என்ற தலைப்பில் 'சுதந்திரா' ஒரு பேப்பருக்கு வழங்கிய உண்மைச்சம்பவம். குப்பிளானில் இலங்கை அரஜகாத்தினால் 86ல் நடந்த உண்மைச் சம்பவம். http://www.orupaper.com/issue47/pages_K__Sec3_34.pdf
-
- 28 replies
- 7.6k views
-
-
அம்மா - சிறுகதை வழக்கறிஞர் சுமதி, ஓவியங்கள்: ம.செ., எனக்குக் கல்யாணம். மாப்பிள்ளை பிடித்திருக்கிறது. அப்பா எனக்காக ரொம்பப் பிரயத்தனப்பட்டு இந்த மாப்பிள்ளையைத் தேடிக் கண்டுபிடித்தார். நல்ல படிப்பு - பெரிய வேலை, பெரிய படிப்பு - நல்ல வேலை என்ற வழக்கமான தேடல் தளங்களுக்குப் போகாமல், நான், என் ரசனை, என் எதிர்பார்ப்பு; அதுபோலவே மாப்பிள்ளை, அவர் ஆசைகள், கற்பனைகள் எல்லாவற்றையும் அலசித் தேடிப்பார்த்து எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தினார். நாங்கள் தீவிரமாக நம்பும் விஷயங்கள், எந்தக் காரணத்தைக்கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாத எங்கள் விருப்பங்கள் மற்றும் எங்கள் லட்சியங்களை ஒளிவு மறைவு இல்லாமல் பேசச் சொன்னார். நாங்கள் இருவரும் தேவைகளுக்கும் சந்தர்…
-
- 0 replies
- 7.5k views
-
-
நான் அப்போது அகதியாய் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில கொக்குவிலில இருந்தன். அது போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டு இருந்த காலம். அன்று ஒரு நாள் பிரவுன் வீதியால யாழ்நகர் நோக்கி துவிச்சக்கரவண்டியில போய்க்கொண்டு இருக்கேக்க எதிராக இன்னுமோர் துவிச்சக்கரவண்டியில சென்ற ஒருத்தன் திடீரெண்டு என்ர பெயரைச் சொல்லி கூப்பிட்டான். நானும் ஆச்சரியப்பட்டு யார் என்று திரும்பிப் பார்த்தன். அது எனது பழைய நண்பன். முந்தி பாடசாலைக்கு நாங்கள் இரண்டுபேரும் ஒன்றாய் போவம். வகுப்பிலையும் பக்கத்தில பக்கத்திலதான் இருக்கிறது. ஆரம்பத்தில அவன் எனக்கு உயிர் நண்பன் மாதிரி. ஆனால்.. நாங்கள் நாலாம் வகுப்பு படிக்கேக்க இரண்டுபேருக்கும் ஒரு சண்டை. அவன் எனக்கு அடிச்சுப்போட்டான். அதுக்கு பிறகு நாங்கள் ஆளோட ஆள் இரண்ட…
-
- 26 replies
- 7.5k views
-
-
வாங்கோ.. தம்பியவை.. பிள்ள.. ரஞ்சினி.. இந்த நாய்களைப் பிடிச்சு வைச்சிரு.. தம்பியவையை உள்ள வர விடுகுதில்ல... அயலில் இருந்த அந்த ஆன்ரியின் வீட்டு கேற்றடியில்.. வரவேற்பில் நெகிழ்ந்த படி.. நானும் என் உடன்பிறவாத தம்பியும்.. நாங்கள் என்றுமே போயிராத அந்த வீட்டுக்குள் நுழைகிறோம்.. சுற்றும் முற்றும் இருந்த வகை வகையான பூமரங்களை.. விடுப்புப் பார்த்தப்படி... வீட்டு வாசலை அடைந்த நாங்கள்.. ஆன்ரி.. இந்த என்வலப்பை அம்மா உங்களட்ட கொடுக்கச் சொல்லி தந்து விட்டவா என்று சொல்லி நான்.. அதை நீட்ட.. நாங்கள் வந்திருக்கின்ற நோக்கத்தை அறிந்து கொண்ட ஆன்ரி.. நீங்களே அதை அக்காட்டை கொடுங்கோ.. என்று சொல்லி.. எங்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்றா. என்ன.. அக்காவோ.. எங்கட வயசை ஒத்தவா.. பள்…
-
- 72 replies
- 7.4k views
-
-
சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் பிறக்கும்பொழுது பூமியில் தன் இடத்தை அறிந்துகொள்ள முடியாத மனிதன் இறக்கும்பொழுதும் செல்லும் இடத்தைக் கணிக்க முடியாதவனாக இருக்கிறான். ""கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்'' என்பதற்கு ஏற்றார்போல சொர்க்கம், நரகம் என்பது எல்லாம் கண்டு வந்து சொன்னவர் என்று எவரும் இலர் என்பதே உண்மை. இப்படிப்பட்ட ஆரம்பமும், முடிவும் அறிய முடியாத உலக வாழ்க்கையில் அடுத்த கணம் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல முடியாத நிலையில் மனிதர்கள் எதிர்கொள்ளும், வேதனைகளும், சோதனைகளும் ஓய்வில்லாத அலைகளுக்கு ஒப்பாக இருக்கிறது. இன்பம் என்பது எட்டிப்பார்த்துவிட்டு போகும் வானவில்லாக இர…
-
- 29 replies
- 7.4k views
-
-
அதிகாலை லண்டனில் இருந்து ரவிராஜ் போன் ,அடுத்த கிழமை கனடா வருகின்றேன் ஒரு வார இறுதி நாளை ப்ரீ ஆக வைத்திரு,மற்றது உன்ரை பழைய ஆளின் கணவர் மண்டையை போட்டுவிட்டார் ,எனக்கும் துரத்து சொந்தம் தானே போக இருக்கின்றேன் என்றான் . நான் போனை வைத்துவிட்டு திரும்ப படுத்துவிட்டேன்.பின்னர் அதுபற்றி மறந்தும் விட்டேன். ஏனோ பின்னேரம் போல பழைய படம் ஓடத்தொடங்கியது.அப்போ தான் O/L PASS பண்ணி A/L போன காலம், சோட்ஸ்சும் பான்ஸ்சும் மாறி மாறி போட்ட வயது.பாடசாலை முடிந்ததும் எந்த அலுவல் இருந்தாலும் அதைவிட்டு ஓடிவந்து 3.45 பஸ்ஸை பிடித்து வீடு வந்து ஊரில் இருக்கும் மைதானத்திற்கு ஓடும்காலம்.என்னால் ஏழு நாட்களும் அந்த மைதானத்திற்கு போகாமல் இருக்க முடியாது .CRICKET,FOOTBALL இதுவே எனது LIFE .இரவு வந்து ப…
-
- 50 replies
- 7.4k views
-
-
நீண்ட காத்திருப்பின் பின்.. டபிள்டெக்கர் வந்து சேர்ந்தது. அதில் ஏற முண்டி அடிக்கும் கூட்டத்திடம்.. இதுகளுக்கு ஒரு ஒழுங்கு வரிசையில வரத்தெரியாதா... என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியபடி.. மேல் தட்டை பார்த்தேன். அது காலியாகக் கிடந்தது.. நான் டெக்கரில் ஏறுவதில் போட்டி போடுவதை விடுத்து மேல இடம் இருக்குத்தானே கடைசியா ஏறுவம் என்று பின்னடித்தேன். அழகிய பூப்போட்ட மேற்சட்டையும்.. ஸ்கேட்டும் அணிந்தவளாக அவள்.. சமர் உடுப்பில் கலக்கினாள். அவளின் எலுமிச்சம் கலர் தோலுக்கு அந்த உடுப்பு எடுப்பாக இருந்தது. அவளும் என்னைப் போலவே அதே டபிள்டெக்கரில் ஏறப் போனவள்.. பின்னர்.. பின்னடித்தவளாய் பின்னகர்ந்து வந்து என் முன் நின்றாள். என்ன ஒரு வேவ் லென்த்.. ஒரே விதமாய் சிந்திக்கிறாளே என்று என் மனசு தனக…
-
- 17 replies
- 7.4k views
-
-
செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கட் - ரிஷபன் கிழவி பஸ்ஸில் ஏறியதிலிருந்து அத்தனை பேரின் கவனமும் அவள் மீதுதான். பித்தளை அண்டா, எவர்சில்வர் குடம் இரண்டையும் என்ஜினுக்கு அருகில் காலியாயிருந்த இடத்தில் பத்திரப்படுத்திவிட்டு தானும் மருமகளும் அமர இடம் தேடினாள். டிரைவர் இருக்கைக்குப் பின்புறம் மூன்று பேர் அமர்கிற சீட்டில் கணவன், மனைவியாய் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். "ஏம்ப்பா.. நீ இப்படி வந்தா.. பொம்பளைங்க நாங்க அங்கே ஒக்காருவோமுல்ல" கணவனுக்கு ஏழு மணி நேரப் பயணத்தில் மனைவியை விட்டுப் பிரிந்து அமரத் துளியும் மனசாகவில்லை. "வேற எடம் பாரு" என்றான் முறைப்பாக. "பஸ்ஸுல எடம் இருந்திச்சுன்னா.. நான் ஏன் ஒங்களைப் பிரிக்கப் போறேன்.. தயவு பண்னுப்பா..…
-
- 5 replies
- 7.3k views
-