கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
தமிழமுதத்தில் முதன் முதலாக என் கதை... கண்விழித்து பார்க்கிறேன். அப்பாச்சி மெதுவா கதைக்கிற சத்தம். கொஞ்ச நாளா இப்படித்தான். கொஞ்சம் தள்ளி நாய் குலைக்கும். அப்பாச்சி எல்லாரையும் சத்தம் போடாம படுக்கச் சொல்லுவா. அம்மா எண்ட வாயை தன் கையால மூடிட்டு சொல்லுவா, “ரதி சத்தம் போடக் கூடாது.” இப்படிச் சொன்னாலே தெரியும் ‘ஆமிக்காரன்’ வாறான் என்று. அம்மா சொன்னதும் பயமா இருக்கும். பக்கத்து வீட்டு ஆச்சி அடிக்கடி சொல்லுவா “கோதாரி பிடிச்சவங்களோட பெடி பெட்டையளை வச்சிட்டு இருக்க முடியுதே?” அந்த ஐந்து வயதில் நான் பார்த்தவை, அனுபவித்தவை மனதை கீறியபடி இன்றும். ஊரில் எங்கள் வீடு இருக்கும் காணியில்தான் அம்மாவின் மூன்று சகோதரிகளின் வீடும், இரண்டு சகோதரர்களின் வீடும். அம்மாவி…
-
- 21 replies
- 7.3k views
-
-
பிரியாணி - சிறுகதை மலையாள மூலம்: சந்தோஷ் ஏச்சிக்கானம், தமிழில்: கே.வி.ஜெயஸ்ரீஓவியங்கள்: அனில் கே.எஸ் கோபால் யாதவ் செருக்களையில் இருந்து இப்போதுதான் பஸ் ஏறியிருக்கிறான். கூடவே கதிரேசனும் மூன்று வங்காளிப் பையன்களும் வருகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது. பஸ் தீயாய்ப் பாய்ந்துவந்தாலும் பொய்நாச்சியை அடையக் குறைந்தது இருபது நிமிடங்களாவது ஆகும். அதுவரைக்கும் நாம் கலந்தன் ஹாஜியாரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கலாம். கடந்த ஜனவரியில் எண்பத்தாறு வயதைக் கடந்திருக்கும் ஹாஜியார், அந்தக் காலத்தில் தளங்கரையில் இருந்து துபாய்க்கு மரக்கலம் ஓட்டிப்போன பலசாலி. அவருக்கு நினைவு தவறிவிட்டது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. நான்கு மனைவிகளில் குஞ்ஞீபியை மறந்துவிட்டது …
-
- 1 reply
- 7.3k views
-
-
அம்மா நான் போயிட்டு வாறன்.. புன்னகை தந்து விடைபெற்றான் சங்கர். இப்ப தான் வந்தாய்.. அதுக்குள்ள எங்கையடா போறாய்.. தாயின் பதில் கேள்வி அவசர அவசரமா வெளி வர, கொஞ்சம் திக்குமுக்காடிப் போன சங்கர் சுதாகரித்தபடி.. ஒரு இடமும் இல்ல அம்மா.. உவன் சிவா வீட்டடிப் பக்கம் சைக்கிளில ஒரு நாலு மிதி மிதிச்சு வட்டமடிச்சிட்டு வரப் போறன். உந்த உச்சி வெய்யிலுக்க உலாத்தாமல் கெதியா வந்து சேர்.. பாசமிகு எச்சரிக்கையோடு அம்மா விடை தர சங்கரின் சைக்கிள் லண்டன் வீதிகளில் காதலிகளோடு பறக்கும் பி எம் டபிள்யு வாகப் பறந்தது ஊர்ப் புழுதியில் குளித்தபடி. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சைக்கிள் நேராக காயத்திரி வீட்டு வாசலில் போய் நின்றது. காயத்திரி.. அழகான பள்ளித் தோழி. சிரிப்பழகி சின…
-
- 22 replies
- 7.3k views
-
-
ஊரிலை சின்னவயிசிலை பள்ளிக்கூடத்திலை பாரதிதாசனின்ரை தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்கு போவென்று சொன்னாள் உன் அன்னை எண்டொரு பாட்டுச் சொல்லித் தருவினம். அது உண்மையிலை பெண்குழந்தையளிற்கான பாட்டு அதையேன் பெடியளிற்கும் படிப்பிச்சவையெண்டு தெரியாது ??..ஆனால் அதிலை ஒரு வரி வரும் கடிகாரம் ஓடுமுன் ஓடு எண்டு. அதற்கான அர்த்தம் அண்டைக்கு எனக்கு உண்மையா விளங்கேல்லை ஆனால் வெளிநாடு வந்தால் பிறகுதான் அதன் உண்மையான அர்த்தம் புரிந்தது இங்கு தமிழாக்களின்ரை நிகழ்வுகளைத் தவிர மற்றையபடி எல்லாமே நேரம்..நேரம்.. நேரம்.. நேரத்தை பிடிக்க ஓடிக்கொண்டிருக்கின்றோம்.. ஊரிலையெண்டால் வீடுகளிலை வரவேற்பறையிலை மட்டும் ஒரு மணிக்கூடு இருக்கும்.அப்பிடி எங்கை வீட்டிலையும் ஊரிலை ஒரு பெரிய மணிக்…
-
- 31 replies
- 7.3k views
-
-
போதமும் காணாத போதம் – அறிவிப்பு மெய்த்தலம் மூண்டெழுகிறது நெருப்பு முடுகி முடுகி எரிகின்றது ஒருபொறிதான் உள்விழுந்தது உலகே பற்றி எரிவதென ஓங்கி எரிகின்றது கீழிருந்து மேலெழுகிற சோதி ஆளுகின்றதா ?எனது போக்கும் வரவும் புணர்வுமெரிகின்றதா? சிற்றறிவாளும் நினைவுகளை சீண்டியழித்துச் செயலை முடுக்கி தூண்டும் சுடரொளியான சுதந்திரப் பிழம்பாய் மூண்டெழுகிறது நெருப்பு மேலே மேலே இன்னும் மேலே வாலின் நுனியை ஊன்றியெழுந்து வளர்பிறை நிலவைக் குறிவைத்து தூவெளி வானில் சோதி சுடர்த்தி நீலநிறத்துச் சுவாலையை வீசி சீறியெழுகின்ற அரவென நெளிதரு நடனம் நடனம் தீயளி நடனம்! நர்த்தனமாடும் அக…
-
-
- 54 replies
- 7.3k views
- 2 followers
-
-
போத்தல் பித்தளை அலுமினியம். இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது. பேத்தில் பித்தளை அலுமினியம். இந்த சத்தத்தை ஊரில் கேட்காதர்களே இருந்திருக்க மாட்டீர்கள். ஒரு சைக்கிளில் பின்னால் இரண்டுபக்கமும் சாக்கு அல்லது உரப்பையை கட்டியபடி போத்தில் பித்தளை அலுமினியம் இருக்கா என்று கத்தியபடியே வருவார்கள்.வீடுகளில் உள்ள பழைய உபோகிக்க முடியாத இரும்பு பித்தளை சாமான்களை நிறுத்து வாங்கி கொண்டு போவார்கள்.சிலர் பண்டமாற்று முறையில் வாங்கிய பொருட்களிற்கு பிளாஸ்ரிக் அல்லது அலுமினிய பாத்திரங்களை தருவார்கள். முன்னர் யாழ்சோனதெருவில் வசித்துவந்த சோனகர்களே பெரும்பாலும் இந்த வியாபாரத்தை செய்தனர்.இப்படி வேறு சில வியாபாரிகளின் கூவல் சத்தங்களையும் ஊரிலை கேட்கலாம் ஆடு இரிக்கா ஆடு.பழையகோட்.இ…
-
- 27 replies
- 7.2k views
-
-
மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் சல சலப்புடன் இருந்த வகுப்பு அறை அமைதியாகின்றது. ஆனாலும் நம்மிடையே அடக்க முடியாத சிரிப்பு. அந்த மாணவனோ ஏதும் அறியாத மாதிரி எழும்பி நின்று "குட் மோர்னிங் சேர்" என்று கூற வாயை பொத்தியபடி நாமும் எழுந்து நின்றோம். பதில் வணக்கத்துடன் வந்தவர் இருங்கள் என்று சொல்லாமல் தான் மட்டும் கதிரையில் இருந்தார். எல்லோரையும் வடிவாக பார்த்தார். அவரின் பூனைக்கண்ணை பார்க்க நமக்கு பயம் என்றபடியால் தலையைக் குனிந்து கொண்டு இருந்தோம். கடைசியாக எல்லோரையும் இருத்திவிட்டு "நீ மட்டும் நில்லு" என்று என்னை சுட்டிக்காட்டிச் சொன்னார். என் மனதுக்குள் போராட்டம் என்ன இந்த வாத்தி என்னை மட்டும் எழுப்பி விட்டிருக்கு, நான் ஒன்றுமே செய்யலையே என்று யோசித்தபடி குழ…
-
- 41 replies
- 7.2k views
-
-
முகப்புத்தகம் என்றைக்கும் விட இன்றைக்கு மாறுதலாய் இருக்கும் என்று எண்ணவில்லை, எப்போதும் போலவே உள்நுழைந்த போது நண்பராய் சேர விண்ணப்பித்த மனு ஒன்று எட்டிப்பார்த்தபடியே இருந்தது,திறந்து பார்த்தால் நிலா, என்னுடைய பள்ளித்தோழி,தூரத்து உறவும் கூட பெயரைப்போலவே வட்ட முகம்,பெரியகண்கள் சிவந்தும் இல்லை,கருப்பும் இல்லை பொது நிறம் அழகானவள். உரிமையுடன் சண்டை பிடிப்பவள் அன்றிலிருந்து இன்று வரை "டா" "டி" முதல் பேய்,பிசாசு வரை செல்லச்சண்டைகள் கைகலப்புவரை போக வட்டவாரி கொண்டு குத்தும் வரை வந்திருக்கிறாள். ஆண்டு ஒன்று முதல் ஆறு வரை ஊர்பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்த காலங்கள் எல்லாம் பசுமரத்தாணி போல் பதிந்தவை பள்ள்ளிச்சட்டை போலவே மனதும். காலமை எழும்பி வீட்டை குளிக்க பஞ்சியிலை தோட்டத்துக்கு…
-
- 66 replies
- 7.2k views
-
-
எனக்கு அவவை பார்க்கும் போது திக் என்றது. அவவுக்கும் அந்த அதிர்ச்சி ஏற்பட்டது என்பதை அவவின் முகத்தில் தெரிந்து கொண்டேன். முந்தைய நாள் இரவு தான் எனக்கு அவவை அறிமுகம் செய்து வைத்தார்கள். பார்த்தவர்களை திரும்ப பார்க்க செய்யும் அழகு அவ. எனது அக்காவின் உயிர் நண்பி அவ. பழைய நினைவுகளை ஒருமுறை மீட்டி பார்க்கிறேன். தலையை பின்னியபடி, கைகளிலே சொக்கிலேட்களுடன், நெஞ்சிலே கோல்சரும், கைகளிலே இறுக்க பிடித்தபடி சுடுகருவிகளும் அவர்கள் நடந்துவரும் அழகே தனி அழகுதான். அக்கா ஏ எல் படிக்கும்போது, ஒரு நாள் அம்மாவிடம் பயித்தம் பணியாராம் சுட்டு தர சொல்லிவிட்டு, எப்படியும் அம்மா எடுப்பா என்று மா பேணிக்குள் கடிதம் எழுதி வைச்சிட்டு இயக்கத்துக்கு போனவ தான். அன்றைய நாள் வ…
-
- 10 replies
- 7.2k views
-
-
எனது பாடசாலை நாட்களில் எழுதிய சிறுகதை (பாடசாலை மலர் ஒன்றில் வெளிவந்தது) கதையும் பாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனையே என்று நான் சொல்லுவேன் என்று எதிர்பார்காதீங்க.... (அப்ப... ???) ------------------------------------------------------------------------------------------- கண்களை கட்டிப் போட்டுவிட்டு கருத்தினுள் போதையை வார்த்துக் கொண்டிருந்தாள் இயற்கை நல்லாள். இதுவரை நாளும் செயற்கைத் தனத்தின் செழிப்பைச் செம்பு செம்பாக பருகிய எனக்கு இயற்க்கைத் தனத்தின் அந்தக் குறும்பு... புட்டி புட்டியாக மது கிடைத்தது போல் போதையை ஊட்டியது. கொழும்பு பஸ் சற்று முன் தான் கம்பளைக்கு வந்து சேர்ந்திருந்தது. ஒரு வித உற்சாகமும்... ஒரு வித குறும்புத்தனமும் பள பளக்க என் கண்கள் மின்னின.…
-
- 31 replies
- 7.2k views
-
-
மனச்சிறையில் சில மர்மங்கள் - 1 டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர் மீதமிருக்கும் காதல்கள் கல்பனா ஒரு பக்திமான். முருகன்தான் அவளுடைய இஷ்ட தெய்வம். அந்த ஊரின் பிரபல முருகன் கோயில்களில் இவள் ஒரு முக்கியப் புள்ளி. அவள் வீட்டு பூஜை அறையே ஒரு மினி முருகன் கோயில் மாதிரிதான் இருக்கும். ஆனால், திடீரென்று அவளுடைய 20 வயது மகன் அன்பு, அருள் வந்து சாமி ஆடியதைப் பார்த்து அவளுக்கு பெரும் கவலை ஏற்பட்டது. அன்பு, ஆ... ஊ... என்று கத்தினான். ஏ... என்று எகிறினான். சில நிமிடங்கள் சிலை மாதிரி இருந்தான். அப்புறம் ஓ... என்று அழுதான். உடனே ஈ... என்று பல்லைக் காட்டி ஓவராய் சிரித்தான். கல்பனாவுக்கு இவனுடைய நடத்தை பயத்தைக் கிளப்பியது. சத்தம் கேட்டு வந்த அண்டை அயலார்…
-
- 19 replies
- 7.2k views
-
-
குருபீடம் - சிறுகதை ஜா.தீபா - ஓவியங்கள்: ரமணன் பேருந்து கிளம்பிவிட்டது. சென்னை எல்லையைத் தாண்டியதும் நடத்துநர் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்பாக வந்து நின்றார். பேருந்தின் உட்புறம் அமைதியானது. சிவகாமியின் இருக்கை, தொலைக்காட்சிப் பெட்டிக்குக் கீழே முதல் வரிசையில் அமைந்திருந்தது. பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கை அது. திரையில் நீலம், பச்சை என வண்ணங்கள் மாறி மாறித் தெரியத் தொடங்கின. பிறகு, தெளிவான சித்திரங்களோடு திரைப்படம் ஆரம்பமானது. அது திரையரங்கில் அப்போது ஓடிக்கொண்டிருந்த பரபரப்பான ஒரு திரைப்படம். சிவகாமிக்கு நீளமான கொட்டாவி வந்தது. தலைக்கு மேல் அலறப்போகும் வசனங்களை மீறித் தூங்குவதற்கு, அவசியம் பயிற்சி இருக்க வேண்டும். அது சிவகாமிக்குக் கொஞ…
-
- 0 replies
- 7.2k views
-
-
வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்க்கையின் பொருள் பற்றி சமீபத்தில் நான் படித்த ஒரு கதை இங்கே. ஒரு கல்லூரியில் ஒன்றாக படித்த சில மாணவர்கள், படித்து முடித்து சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கல்லூரியில் சந்திக்கின்றனர். அப்போது, கல்லூரி வாழ்க்கையைப் போல வெளி உலக வாழ்க்கை சந்தோசமானதாக இல்லை என்றும் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கின்றது என்றும் அலுத்துக் கொள்கின்றனர். அப்போது அங்கு வந்த அவர்களது முன்னாள் பேராசிரியர் அவர்களை தன் வீட்டிற்கு தேநீர் விருந்துக்கு அழைக்கிறார். சுவையில் சிறந்த அவர் வீட்டு தேநீர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தமானது. அவரது வீட்டில் தேநீர் பல்வேறு விதமான கோப்பைகளில் பரிமாறப் படுகின்றது. சில கோப்பைகள் சாதாரணமானவை, சில கோப்…
-
- 12 replies
- 7.1k views
-
-
-
என் காதலன்.. மதுசா அவளின் செல்ல பெயர் மது...மது இரவு எல்லாம் கண் முளித்து படித்ததில் விடிந்தும் துங்கினாள்.. மது என்று அம்மாவின் குரல் கேட்க துடி துடித்து எழும்பினாள்..மது நீ கோலம் போடலாயா? சாரிம்மா..கொஞ்சம் துங்கி விட்டேன்..இதோ வாறேன். மது வெளியில் வந்து பாத்தாள்..இயர்கை எவ்வளவு அழகாய் இருக்கு..என்று நினைத்து கொண்டே கோலம் போட்டாள்.. அம்மா நேரத்தோட போகணும் கல்லுரியிக்கு.. சரி மது சாப்பிட்டு இட்டு போட.. சரிம்மா.. மது என்றாள் கல்லுரியில எல்லாருக்கும் தெரியும்..மது குணத்தில் அவள் நடை வடிக்கயில் சீதை மாதிரி.. மது கல்லுயிரிக்கு வந்தாள்.. மது நீ இங்க வர முதல்லாயே நம்ம பசங்கள் சொல்லிடுறங்கள் மது வாறாள் என்று..ஹே சும்மா இருக்கடி …
-
- 0 replies
- 7.1k views
-
-
பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம் ஆற்றங்கரையடியில் ஒருவர் மரம்வெட்டிக்கொண்டு இருந்தாராம்.அப்ப அவற்ற கோடரி தண்ணிக்குள்ள விழுந்திட்டுதாம்.அவருக்கு மரம் வெட்டுறதுதான் தொழில் அப்ப கோடரி இல்லாமல் வாழ்க்கையே பெரும்பாடாயிடுமே அதால கடவுளிட்ட முறையிட்டாராம்.கடவுள் டாண் என்று வந்து நின்றாராம் அந்த விறகு வெட்டுறவருக்கு முன்னால.(ம் ம் நானும்தான் இண்டைக்கு எக்ஸாம் ஹோல்ல ஒருக்கா கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.) பக்தா ஏன் அழுகிறாய்? கடவுளே என் கோடரி ஆத்தில விழுந்திட்டுது.அது இல்லாம நான் எப்பிடி விறகு வெட்டுவன் எப்பிடி என்ர குடும்பத்தைக் காப்பாற்றுவன். சரி அழவேண்டாம் நான் இப்பவே கோடாரியோட வாறன் என்று தண்ணிக்குள்ள குதிச்சு ஒரு பொற்கோடாரியோட வந்தாராம். இதுவா…
-
- 61 replies
- 7.1k views
-
-
நிசிக்கு ஒரு கலியாணத்தை செய்து வைச்சால் நான் நிம்மதியாக இருக்கலாம் என்றால் அவளும் ஒன்றுக்கும் சம்மதிக்கிறாள் இல்லையே ,ஒவ்வொன்றுக்கும் ஒரு குறை சொல்லி கொண்டிருக்கிறாள் என்று புறுபுறுத்தபடியே வந்த அமர்ந்தாள் ஏன்னுடைய பத்தினி.நேற்று பார்த்த பெடியனைப்பற்றி என்ன சொல்லுகிறாள் உன்ட மகள் என்றேன்.அவனையும் பிடிக்கவில்லையாம்,சரியான" வொப் " என்கிறாள். அது என்னடி வொப் என்றால் ,உங்களுக்கு ஒரு நாசமறுப்பும் தெரியாது ,இந்த காலத்து பெட்டைகள் பெடியன்களைப்பற்றி கதைக்கிற கதைகளைப்பற்றியும் தெரியாது ,சரி எனக்கு ஒன்றும் தெரியாது உனக்கு தெரிஞ்சதை சொல்லப்பா என்றேன். வொப் என்றால் fresh on boat(FOB) அதாவது பெடியனை பார்த்தால் ஊரில இருந்து இப்பதான் வந்த பெடியன் மாதிரி இருக்காம் கன்ன உச்சிபி…
-
- 60 replies
- 7k views
-
-
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்......... ஏதாவது எழுதுவோம் என்று உட்கார்ந்தால் மூளை நரம்பு மண்டலம் ஏதோ ஒரு அமுக்கத்திற்குள் சிறைப்பட்டதுபோல் விடுபட முடியாத.. வார்த்தைகளால் புனைய முடியாதவையாக மூழ்கடித்துவிடுகின்றன. எழுத்து வெளிகளில் அப்பட்டமாக தோல்விகளைச் சந்திக்கும் பொழுதுகளாகவே இக்காலம் நகர்கிறது. மனதின் ஆழத்தில் புதையுண்டிருக்கும் ஒரு பேரவா முறுக்கெடுத்து சிலசமயங்களில் தொண்டைக்குழியை திருகுவதுபோல் உயிரையே உலுப்பி விடுகிறது. அடடா கதைகதையாம் பகுதில் வந்து என்னுடைய புலம்பலை எடுத்துவிடுகிறேன் மன்னிக்கவும். தொடர்கிறேன், இனி, இங்கு எழுதப்போது எழுத்துக் குவியலுக்கு பொதுத் தலைப்பாக "தொலையா முகம்" இருக்கும் மற்றப்படி அதற்கு உட்பட்டுவரும் ஆக்கங்கள் அதனதற்குரிய தலைப்புகளு…
-
- 27 replies
- 7k views
-
-
தேவகியையும் கணவரையும் அவர்களது இரண்டு பிள்ளைகளோடு மற்றையவர்களையும் சுமந்தபடி சிட்னியிலிருந்து சிங்கப்பூர் விமானசேவை சிங்கப்பூரை நோக்கி கிழம்புகின்றது சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் தங்கி அங்கு சுற்றி பார்த்து விட்டு பரிசு பொருட்கள் சிலவற்றை அங்கு வாங்கிக் கொண்டு சிறீலங்கா செல்வதுதான் அவர்களது திட்டம். தேவகி மட்டுமல்ல அவளது கணவரும் 23 ஆண்டுகளிற்கு பிறகு முதல் முதலாக ஊருக்கு போகிறார்கள். இந்த 23 வருடங்களில் என்னவெல்லாமோ நடந்துவிட்டது ஊரில் தேவகியின் தாயை தவிர அவளின் சொந்தமென்று யாரும் இல்லை அவளது கணவனின் குடும்பம் மொத்தமாகவே அவுஸ்ரேலியாவில் குடியேறி விட்டிருந்தனர். தேவகியின் தாய் பல தரம் அவுஸ்ரேலியா வந்து போனாலும் தன்ரை உயிர் மனிசன் கட்டின வீட்டிலை என…
-
- 32 replies
- 7k views
-
-
கோல் பேஸ் (Galle face) என்று நாம் அழைக்கும் காலிமுகத்திடலை அனுபவித்திராத இலங்கையர் அபூர்வம் எனலாம். இலங்கையின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவரும் கொழும்பில் காலிமுகத்திடலுக்கு ஒரு தடவையாவது சென்று வரவேண்டும் என்று நினைப்பார்கள். கொழும்பில் பிரதான மையப் பகுதியில் மிகப்பெரிய விஸ்தீரணம் கொண்ட கடற்கரைப் பகுதியாக அது இருப்பதாலும், பழைய பாராளுமன்றக் கட்டிடம், கொழும்பு துறைமுகம் உள்ளிட்ட பல முக்கிய கேந்திர மையங்களை ஒருங்கே அருகாமையில் உள்ள பகுதியாக இருப்பதாலும் அது மேலும் முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்திய சமுத்திரத்தின் பக்கமாக மாலை சூரிய அஸ்தமனத்தை கண்கொள்ளாமல் பார்ப்பதற்காக பின்னேரம் பலர் நிறைந்திருப்பார்கள். அதிகாலையில் உடல் அப்பியாசத்துக்காக ஓடுவது, உடற் பயிற்சி செய்வது, கடு…
-
- 34 replies
- 6.9k views
- 1 follower
-
-
வங்கி முறிந்துவிட்டது என்ற செய்திகேட்ட மஞ்சுளா உண்மையில் அதிர்ச்சிஅடைந்துவிட்டாள். அவள் அப்பா குருவி சேர்த்ததுபோல சேர்த்துவைத்த பணம் அந்த வங்கியல்தான் உள்ளது. இந்தச்செய்தியை தந்தையிடம் சொல்லத்தான் முடியுமா? அவருக்கு கேட்டால் நோய்முற்றிவிடலாம். எதுவும் சொல்லாமல் வங்கிக்கு சென்று கிடைக்கின்ற பணத்தை முதலில் எடுத்துவந்துவிடுவதுதான் நல்லது என்று தோன்றிது. கோவில் சென்று வருவதாக சொல்லிவிட்டு வங்கிநோக்கி நடையைக்கட்டினாள். தெருவில் இராணுவத்தினரும் பொலிசாரும் காவலில் ஈடுபட்டிருந்தனர். மங்சுளா கலவரமாக நடந்துசெல்வது அவர்களுக்கு சந்தேகத்தை வரவளைத்திருக்கவேண்டும். அழைத்து அடையாள அட்டையை பரிசோதித்து கொழும்பு முகவரி இருக்கவும் விட்டுவிட்டார்கள். பஸ்ஸில் ஏறி வேர்வையைத்துடைத்தபோதுதான் தான…
-
- 7 replies
- 6.9k views
-
-
ஓணான் கோட்டை தான் இருப்பது எந்த இடம்? என்று சசிக்குப் புரியவில்லை. உள்ளே ஒரே இருட்டு. கொஞ்ச நேரத்தில் அவனைச் சுற்றி ஜோடி ஜோடியாய் விளக்குகள் முளைத்தன. சுற்றிலும் பார்த்த அவன் பயத்தில் கத்தியே விட்டான். அவனைச் சுற்றி ஓணான்களின் கூட்டம்! எல்லாம் கண்களை உருட்டிச் சுழற்றி அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. பார்த்துவிட்டுத் தலையை ஆட்டிக் கொண்டு மெல்லச் சிரித்தன. சசி எழுந்து ஓடிவிடலாம் என்று நினைத்தான். ஆனால் அவன் ஓணான்களை விடச் சின்னதாக, குட்டியூண்டாக மாறிவிட்டானே! அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. எப்படி இங்கே வந்தான்? பள்ளிக்கூட விடுமுறை நாள்களில் ரமேசும், அவனும் சேர்ந்து ஓணான் வேட்டைக்குப் போவார்கள். ஊருக்கு வெளியே உள்ள கருவேலஞ்செடிகளில் உட்கார்ந்து …
-
- 19 replies
- 6.9k views
-
-
அந்த மாதிரி பொம்பளை மனம் இறுக்கமாகவே இருந்தது. அம்மா மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இத்தனைக்கும் அப்பா போன பிறகு அம்மாதான் எல்லாமாமுமாக இருந்து என்னைப் பார்த்து கொள்கிறாள். இருந்தும் கோபத்தின் கனலில் மனம் பின்னோக்கி சென்று எண்ணிப் பார்த்தது. எங்கள் தெருவில் வசித்து வந்த பவானி அம்மாள் இறந்து விட்டாள். அம்மாவை விட நான்கைந்து வயது இளையவளாக இருக்கக் கூடும்.என் சிறுவயது பருவத்தில் இதே தெருவில்தான் வசித்து வந்தாள். குழந்தைகள் என்றால் அவளுக்கு கொள்ளைப் பிரியம். அதுவும் நானென்றால் சொல்லவே வேண்டாம். ஆனால் என் அம்மாவோ, இல்லை மற்ற குழந்தைகளின் அம்மாக்களோ அவளை எப்போதும் அருவெறுப்பாகவே பார்ப்பார்கள். அவள் எங்கள் தெருவில் வரும்போது எங்களுக்கு அதட்டல் விடப்படும். "ஏன்மா அந…
-
- 4 replies
- 6.9k views
-
-
உணர்வுகள் உறவுகள் அம்மம்மா இந்தவார ஒரு பேப்பரிற்காக சாத்திரி காலைச்சூரியன் எழும்போதே சேர்ந்து எழுந்து முற்றம் கூட்டி தண்ணீர் தெளிக்கும் போது அந்தத் தண்ணியை கொஞ்சம் அவன் மீதும் தெளித்து எழுப்பிட்டு குளித்து நெற்றி நீளத்திற்கும் இழுத்த விபூதிக்குறியோடு மாட்டில் பால்கறந்து போட்ட தேனீர் பித்தளை மூக்குப்பேணிகளில் ஊற்றி ஒன்றை அவனிடம் கொடுத்து இதை கொண்டுபோய் தாத்தாட்டை குடு என்று நீட்டி விட்டு காலைச்சாப்பாடு தயாரிப்பில் இறங்கி விடுவார்.அவனிற்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அம்மம்மாவும் தாத்தாவும் நேருக்கு நேர் கதைத்ததை அவன் பார்ததேயில்லை ஏதாவது அவர்கள் கதைப்பதென்றாலும் இதைபோய் அங்கை சொல்லு என்று அவன்தான் இடையில் மாறி மாறி கதைகாவி. இவங்கள…
-
- 54 replies
- 6.9k views
-
-
என்ன கமலரஜனி..... லண்டனில.. ஏ/எல் சோதின மறுமொழி வந்திட்டுதாம்.. மகனுக்கு எப்படி... உங்க உள்ள பிரபல்யமான ஜூவலரி கடை முதலாளிட மகளுக்கு கேம்பிரிஜ் மெடிசின் கிடைச்சிருக்காம்.. கேள்விப்பட்டினியே..??! ஓம் சுமதியக்கா. கேள்விப்பட்டனான். அதுக்குள்ள அந்தச் செய்தி யாழ்ப்பாணம் வரை வந்துட்டுதே. என்ர பொடியனும்.. நல்லா செய்ததெண்டு சொன்னான்.. ஆனால் ஒன்றிரண்டு பாடத்திற்கு எதிர்பார்த்ததை விட குறைவாத்தான் வந்திருக்குது. மற்றப் பாடங்களுக்கு நல்லா எடுத்திருக்கிறான். றீசிட் பண்ணப்போறன் எண்டான்..! இங்க தானே எத்தினை தரமும் றீசிட் பண்ணலாம். ஊர் போல இல்ல..! அதுபோக அக்கா ஒன்று சொல்லனும்.. இங்க லண்டனுக்கு வந்தப்பிறகு என்ர பெயர் கமலரஜனி இல்லையக்கா. சுருக்கி கமல்.. என்று வைச்சிருக்கிறன். எனி அப்…
-
- 59 replies
- 6.8k views
-