துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
-
நல்லூர் எசமானி காலமானார் January 28, 2024 நல்லூர் எசமான் அம்மா சுகிர்தா தேவி குமராதாஸ் மாப்பாணமுதலியார் குகபதமடைந்தார். நல்லூர் கந்தசாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்களது துணைவியாரும் தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியார் அவர்களது தாயாருமாகிய அமரர் சுகிர்தாதேவி குமாரதாஸ் மாப்பாண முதலியார் இன்று (28) குகபதமடைந்தார். அன்னாரது இறுதிகிரிகைகள் யாழ்ப்பாணம் நல்லூர் மாப்பாணர் வளவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்று தகனகிரிகைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்க்கு எடுத்துச் செல்லப்படும். https://globaltamilnews.net/2024/20…
-
- 3 replies
- 922 views
-
-
கழுத்தில் தங்கச்சங்கிலி கிடையாது கையில் தங்க மோதிரமும் கிடையாது. எளிமையான மனிதர் மட்டுமல்ல அவரிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை இன்னும் நிறையவே உண்டு என்பதையும் விட்டுச்சென்றிருக்கிறார். எந்த மன்னாதிமன்னனாயினும் மேலங்கி இல்லாமல்த்தான் கோவிலுள் நுழையலாம் என சட்டம் வைத்தவர் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
- 35 replies
- 3.6k views
- 2 followers
-
-
நல்லை ஆதீன குருமுதல்வர் இறையடி சேர்ந்தார். adminMay 2, 2025 நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார். https://globaltamilnews.net/2025/214928/
-
-
- 4 replies
- 291 views
-
-
12வருடங்களிற்க்கு முன்னர். சமாதானா வேடம் பூண்டு வந்த சந்திரிக்காவின் அரக்க படைகலாள் புனித இடமான நவாலி தேவாலையத்தில் 147 அப்பாவி தமிழ்ரகள் கொடுரமாக சதைத்துண்டங்களாக்கப்பட்டு கொலை செய்ய பட்டனர். அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள். அவர்களின் ஆதமா சாந்தியடைய பிரார்த்திப்போமாக
-
- 7 replies
- 2.1k views
-
-
9.7.2006 சிங்களத்து சமாதானப் புறா வேடமிட்டு வந்த சந்திரிக்க அரசால், 141 அப்பாவித் தமிழ்மக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்ட நாள் ஆகி இன்றோடு 11 வருடங்கள் கழிந்து விட்டன! தேவாலயமாக இருந்தபோதும், அங்கே பாதுகாப்பிற்கு மக்கள் தங்குவார்கள் என்று தெரிந்தபோதும், குண்டு வீசி அவ்வுறவுகளைச் சின்னபின்னமாக்கிய நாளை எப்படி மறக்க இயலும்!! தமிழன் என்பதற்காக கொல்லப்பட்ட, அந்த உறவுகளுக்காக கண்ணீர் அஞ்சலிகள்!!
-
- 14 replies
- 3.5k views
-
-
முள்ளிவாய்க்கால் மருத்துவமனையின் மீது 13.05.2009 அன்று காலை 7:00 மணியளவில் சிறீலங்கா படையினரால் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தனர். அதன் போது கந்தசாமி தருமகுலசிங்கம் எறிகணைத் தாக்குதலில் சாவைத் தழுவிக்கொண்டார் .இவர் நாட்டுப்பற்றாளராக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டார் . நாட்டுப்பற்றாளர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் இறுதியாக முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனை பற்றி புலம்பெயர் மக்களுக்கு காணொளி வழியாக தகவல்களை வழங்கியிருந்தமை நினைவூட்டத்தக்கது. http://meenakam.com/2011/05/13/24672.html அன்று நான் உங்களோடு இன்று நீங்கள் என்னோடு அழியாத நினைவாய் என் இதயத்தில் உங்கள் தியாகம் நிச்சயம் வென்று தரும் தமிழீழம்
-
- 1 reply
- 945 views
- 1 follower
-
-
டென்மார்க் கிளையின் முனைப்பான செயற்பாட்டாளர் திரு. செபஸ்ரியான் செல்வராஜா 17.08.2006 அன்று அகாலமரணம் அடைந்துவிட்டார்.டென்மார்க்க
-
- 4 replies
- 1.8k views
-
-
நாதஸ்வரமேதை இசைப்பேரறிஞர் சாவகச்சேரியூர் கே.எம்.பஞ்சாபிகேசன் 26.06.2015 இன்று அதிகாலை 12.20 மணியளவில் கொழும்பில் காலமாகிவிட்டார். இறக்கும் போது அவருக்கு வயது 91. அவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை சாவகச்சேரியில் நடைபெறவுள்ளன. ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இருந்து சாவகச்சேரிக்குப் பூதவுடல் எடுத்துவரப்படவுள்ளது. திங்கட்கிழமை அவரது சாவகச்சேரி சங்கத்தானையில் உள்ள வீட்டில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன. தென்மராட்சியின் இசை முகவரியாகத் திகழும் இசைப்பேரறிஞருக்கு எங்கள் இதயபூர்வமான அஞ்சலி உலகளாவிய ரீதியில் புகழடைந்த பஞ்சாபிகேசன் அவர்கள் 01.07.1924 ஆம் ஆண்டு தவில்வித்துவான் முருகப்பாபிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதியினரின் மூத்த புதல்வராய்ப் பிறந்தார். இவரது சகோதரன் நடராஜ சு…
-
- 4 replies
- 1.1k views
-
-
வீரகேசரி இணையம் 9/11/2008 4:22:49 PM - யாழ்ப்பாணத்தின் பிரபல நாதஸ்வர வித்துவான் வி. கே. காணமூர்த்தி நேற்று இரவு 11 மணிக்கு காலமானார். இவர் இறக்கும் போது வயது 65 ஆகும். இவர் தனது 15 வயதில் இருந்து நாதஸ்வர வாத்தியத்துறையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சுவிட்ஸர்லாந்து ஆகிய இடங்களில் இவர் தமது திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்.
-
- 10 replies
- 2.4k views
-
-
வணக்கம்., நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரும்,பெரியாரியத்தை தன் வாழ்நாள் முழுவதும் சிறப்பாக பின்பற்றியவருமானதமிழீழச்செல்வன் என்ற முருகேசன் தனது 28 வது வயதில் எதிர்பாராதவிதமாகமாரடைப்பால் 10.1.2011 காலை 10.00 மணிக்கு உயிர் நீத்தார். தமிழ்ச்சமூகப்போராளி தமிழீழச்செல்வன் வாழ்நாள் குறிப்புகள்தனது தொழிற்கல்வியை முடித்து விட்டு, தனது மாமாவுடன் சாதாரணமின்பழுதுபார்ப்பு பணியாளராக அனைவருக்கும் அறிமுகமானார். அப்போதுஅவருக்கு வயது 15. படிப்படியாக பெரியாரியலை கற்றார். திராவிடர் கழகத்தில்தன்னை இணைத்துக் கொண்டார். பின்பு, பெரியார் திராவிடர் கழகத்தின்களப்பணியாளராக மாறினார். 2004-ல் தாராபுரத்தில் நடைபெற்ற தமிழர் உரிமைமுழக்க மாநாட்டின் மிக முக்கிய பங்காளராக ப…
-
- 15 replies
- 1.2k views
-
-
பிரிகேடியர் தமிழேந்தி, தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம், (15.02.1950 – 10.03.2009). தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையில் திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களினதும் போராளிகளினதும் நன் மதிப்பு பெற்றிருந்தவர். 10.03.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார்.
-
- 15 replies
- 1.6k views
-
-
கட்டுநாயக்கா விமானப்படைத் தளத் தாக்குதல் நடைபெற்று இன்று 5வது வருடம். இத்தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகளை நினைவு கூருவோம்.
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழீழ போராட்டத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் ஒருவர் துரோகம் இழைத்து வெளியேறிய செய்தி படித்து கவலையாய் மூவேந்தர் புத்தக நிலையத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தேன். "கவலைப்படாதடா, நான் இருக்கிறேன் அங்கு" என்று சொன்னார் ஒரு நண்பர். எப்போதும் என்னை கிண்டலடித்து வாங்கிகட்டிக்கொள்பவர். முறைத்து பார்த்தேன். "டேய் இல்லடா; என் பேரு என்னா"னு கேட்டார் ...ம்ம் தமிழு. என்றேன். அதான் அங்க தமிழ்செல்வன் இருக்காருல ஒரு பிரச்சினையும் வாராது கவலைபடாதேன்னு சொன்னார். இருவரும் புன்னகைத்து கொண்டோம். ஒடுக்கபட்ட சமூகத்தில் பிறந்து ஈழவிடுதலை போரில் தம்மை இணைத்து களமாடி விழுப்புண் பெற்று இன்று ஈழத்தமிழ் மக்களின் அரசியற்பிரதிநிதியாய் இருந்த தமிழ்ச்செல்வன் நம்மிடையே இல்லை. உலகத்தமிழர் இதயங்களில் தன…
-
- 3 replies
- 1.8k views
-
-
61ம் ஆண்டு பிறந்த நிலாமதியின் தம்பி 28-01- 2020 ல் ஜேர்மனியில் காலமானார். 04- 02-2020ல் மதியம் ஒருமணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என்பதை யாழ் இணைய நண்பர்களுக்கு தெரிவிக்கும்படி நிலாமதி கேட்டிருந்தார். நிலாமதிக்கும் அவரது உறவுகள் அனைவருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்கள்.
-
- 44 replies
- 4.5k views
- 2 followers
-
-
நிழலியின் தாய்மாமனார் காலமாகி விட்டார். நிழலியின் தாய்மாமனார் காலமானதையிட்டு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம். உற்றார் உறவினர்களின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றோம்.
-
- 36 replies
- 2.7k views
- 1 follower
-
-
யாழிணைய கருத்துக்களப் பொறுப்பாளர் நிழலியின் மாமியார் காலமானார். நிழலியினதும் அவரது குடும்பத்தாரினதும் துயரில் யாழ் நாமும் பங்குகொள்கிறோம். மேலதிக விபரங்கள் பின்பு தரப்படும்.
-
- 53 replies
- 7.2k views
- 1 follower
-
-
இன்று வசம்பு அண்ணாவின் பிறந்த நாள் என்று யாழ் பிறந்தநாள் பகுதியில் இருக்கு...... அரசியல் ரீதியில் வேறு கொள்கைகளை கொண்டாலும் நான் யாழ் களத்தில் இணைந்த நாட்களில் யாழ் களத்தின் அசைக்க முடியாத ஒரு கருத்தாளனாக ஒரு நகைச்சுவையாக எழுத கூடியவராக அனைவருடனும் அன்புடனும் பண்புடனும் பழக கூடியவராக யாழ் களத்தை கலகலப்பாக வைத்திருக்க கூடியவராக இருந்தார்..... இந்த உலகை விட்டு அவர் பிரிந்துவிட்டாலும் இன்றும் யாழ் களத்தில் அவர் நினைவு சொல்லும் கருத்துகளும் அவர் பேரும் இருப்பது ஆறுதல்....
-
- 9 replies
- 1.3k views
-
-
ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவராகிய நீர்வை பொன்னையன், இன்று வியாழக்கிழமை மாலை காலமானார். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பன்முகப் பார்வை கொண்ட இவர், கடந்த ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலிலும் உறுதியாகத் தடம்பதித்து நின்றார். யாழ்ப்பாணம், நீர்வேலியில் 1930 ஆண்டில் பிறந்த இவர், நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி. ஏ. பட்டத்தையும் பெற்றார். http://www.tamilmirror.lk/செய்திகள்/நரவ-பனனயன-கலமனர/175-247491 ========================= நீர்வை பொன்னையன் கதைகள் http://www.noolaham.org/wiki/index.php/நீர்வை_பொன்னையன்_கதைகள் இவரது நூல்கள்[தொகு] மேடும் பள்ளமும் (1…
-
- 5 replies
- 971 views
-
-
ஆண்டொன்று போனாலும் ஆறாது எம் துயரம் . நீள் துயில் நீங்கி நீ வருவாயோ ? மாறாது மாறாது மண்ணில் உள்ள காலம் வரை ஒரு நாளும் ஓயாது சுழன்று திரியும் பம்பரமே ஆழ் துயரில் உடன் பிறப்புக்களும் உறவுகளும் உன் மனையாள்- பெண் குழந்தைகளும் தவியாய் தவித்து நிற்க உறக்கத்தில் உன் உயிர் பறந்ததென்ன ? வேலைப்பளுவிலும் "அக்கா "என அலைபேசியில் அழைத்து அத்தாரும் மக்களும் சுகமா என்பாய் உன் குரல் கேளாது தவிக்கிறேன் ஊருக்கு சென்ற நீ வந்ததும் "அழைப்பேன்" என சொல்லி காய்ச்சலில் வந்து படுத்து கண கதியில் போனதேன்?. இளையவனாய் பிறந்த நீ ஏனையவர்க்கு முன்பே ஒரு வார்த்தை சொல்லாமல் கடுகதியாய் பறந்ததேன் யாவரையும் சிரிக்க வைத்து …
-
- 0 replies
- 554 views
-
-
இன்று நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார். அவரின் பிரிவினால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
-
-
- 62 replies
- 3.9k views
- 3 followers
-
-
நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கண்ணீருடன் விடை பெற்றார் இராசநாயகம். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபரும் மகாதேவா சைவ சிறாா் (குருகுலம்) இல்லத்தின் தலைவருமான அமரர் திருநாவுகரசு இராசநாயகத்தின் இறுதி நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.நூற்றுக்கணக்கான குழந்தைகள் கதறி அழ கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள சிறுவா் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அஞ்சலி உரைகள் இடம்பெற்று பூநகரி மட்டுவில்நாடு பொது மயானத்தில் இறுதி நிகழ்வு இடம்பெற்றது. அதிகாரிகள் அரசியல் தரப்புக்கள் பொது மக்கள் என ஏராளமானவா்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி…
-
- 3 replies
- 961 views
-
-
நெஞ்சைவிட்டகலா கேணல் ராயுவின் 8ம் ஆண்டு வீரவணக்கம்! நாளை (25-08-2010) திகதி: 24.08.2010, ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயரு டைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய் ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவை கள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுர்யமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும். ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக…
-
- 17 replies
- 1.6k views
-
-
நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் ! நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் ! தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி. திலீபன் போராளி ! அன்னை பூபதி ஒரு தாய் ! போராளிக்கும் தாய்க்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. மாறாக போராளியும் தாயும் ஒன்றுபடுவதற்கும் ஓரிடம் இருக்கிறது. தன் மக்களை அழிவிலிருந்து காக்க போராளி போர்க்கோலம் பூணுகிறான் ! அதேபோல தன் குஞ்சுகளுக்கு உயிராபத்தென்றால் தாய்க்கோழிகூட போர்க்கோலம் பூணும் ! என…
-
- 0 replies
- 1.4k views
-
-
நெல்சன் மண்டேலா அவர்கள் தனது 94வது வயதில் மரணமடைந்துள்ளதாக செய்தியொன்று தெரிவித்துள்ளது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். நெல்சன் மண்டேலா Nelson Mandela 2008 இல் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அரசுத் தலைவர் பதவியில் 10 மே 1994 – 14 ஜூன் 1999 முன்னவர் பிரெடெரிக் வில்லியம் டி கிளார்க் பின்வந்தவர் தாபோ உம்பெக்கி அணி சேரா இயக்கப் பொதுச் செயலாளர் பதவியில் 3 செப்டம்பர் 1998 – 14 ஜூன் 1999 முன்னவர் அண்டிரெஸ் பாஸ்திரானா அராங்கோ பின்வந்தவர் தாபோ உம்பெக்கி அரசியல் கட்சி ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் பிறப்பு 18 சூலை 1918 (அகவை 94) முவெசோ, தென்னாப்பிரிக்கா வாழ்க்கைத் துணை எவெலின் மாசே (1944–1957) வின்னி மண்டேலா (1957–1996) கிராசா மாச்செல் (1998–இன்று) இருப்பிடம் ஹூஸ்டன் எஸ்…
-
- 5 replies
- 1.2k views
-