அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
"பொறுத்திருந்து பாருங்கள்" மகிந்த ராஜபக்ஸ - விசேட தமிழாக்கம் ரஜீபன் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தேர்தலில் போட்டியிட எண்ணியுள்ளார் என்கின்றனர் அவரது உதவியாளர்கள். இவ்வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் எதிர்பாராத தோல்வியை தழுவிய பழுத்த அரசியல்வாதியான ராஜபக்ச அரசியலில் ஈடுபடுவதை தவிர்த்து வருகின்றார், தேர்தலில் போட்டியிடுவது குறித்த தனது முடிவை அவர் இன்னமும் அறிவிக்கவில்லை. எனினும் அவர் தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டைக்கு விஜயம் மேற்கொள்ளும் நூற்றுக்கணக்கான ஆதராவாளர்களை சந்தித்துவருகின்றார், மேலும் அவர் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சென்று மாகாணசபை மற்றும் ஊள்ளுராட்சி அமைப்புகளின் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர…
-
- 2 replies
- 485 views
-
-
இலங்கையை நடத்துகிறது இராணுவம் 1958 ஜுன் மாதம் 3ம் தேதி இலங்கைப் பிரதமர் பண்டாரநாயகாவின் வாயிலிருந்து ஒரு உண்மை வெளிவந்தது. 1956-ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழிச் சட்டம் வந்தபின் தமிழ்ப் பிரதேசமெங்கும் கொந்தளிப்பில் இருந்தது. 1936-ல் பண்டாரநாயகாவுக்கு கூட்டாட்சிக் கொள்கை பற்றி தெளிவான கருத்து இருந்தது. கூட்டாட்சி அமைப்பு பற்றி அப்போது அவரின் பேச்சுக்களும் எழுத்துக்களும்தான் இப்போது தமிழ் அரசியல்வாதிகள் கூட்டாட்சிக் கோருவதற்குக் காரணம் என்று தமிழ்த் தலைவர்களில் ஒருவரான வி.நவரத்தினம் சுட்டிக் காட்டினார். S_W_R_D_Bandaranayaka”அச்சமயத்தில் அது எனது கருத்தாக இருந்தது. இப்போது 1956-ம் ஆண்டுத் தேர்தலில் மக்களின் ஆணையை நிறைவேற்ற வேண்டுமே” பண்டாரநாயகா பதில் அ…
-
- 2 replies
- 1.4k views
-
-
ராஜபக்ஷ எனும் ‘கோலியாத்’தும் தமிழ்த் தேசியம் எனும் ‘டேவிட்’டும் என்.கே. அஷோக்பரன் / 2020 ஓகஸ்ட் 10 தேர்தல் முடிந்துவிட்டது; ராஜபக்ஷக்கள் பெரும்பான்மைப் பலத்தோடு நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள். புதிய கட்சி தொடங்கி, நான்கு வருடங்களில், இலங்கையின் பாரம்பரிய தேசிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும், இருக்குமிடம் தெரியாமல் செய்து, ‘மொட்டுக் கட்சி’ என்று விளிக்கப்படும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைக் கைப்பற்றி இருக்கிறது. இதற்கு, மஹிந்த ராஜபக்ஷ என்ற தனிமனித அடையாளமும் கோட்டாபய ராஜபக்ஷவின் ‘செயல்வீரர்’ என்ற முகமும் பசில் ராஜபக்ஷ என்ற மிகச்சிறந்த அமைப்பாளரின் தலைமைத்துவமும் முக்கியக் காரணங்கள். இ…
-
- 2 replies
- 623 views
-
-
இந்தியத் தேர்தலில் பா.ஜ.கவின் பெரு வெற்றி உணர்த்துவதென்ன? – அ.மார்க்ஸ் பாரதீய ஜனதா கட்சியினரே நம்ப முடியாத அளவிற்கு அவர்களுக்கு வெற்றிகள் குவிந்துள்ளன. அறுதிப் பெரும்பான்மையையும் தாண்டி 282 இடங்களைப் பெற்றுள்ளனர். கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளாகிய சிவ சேனா, தெலுகு தேசம், பிஜு ஜனதா தளம் முதலியனவும் தத்தம் பங்கிற்கு அதிக பட்ச இடங்களைக் குவித்துள்ளன. இது இவர்களுக்கு வரலாறு காணாத வெற்றி. இதற்கு முன் அவர்கள் பெற முடிந்த அதிக பட்ச இடங்கள் 198 தான் (1998 / 99). அது மட்டுமின்றி இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் அவர்களால் இம்முறை கால் பதிக்க முடிந்துள்ளது. இதன் மூலம் உண்மையான ஒரு ‘தேசிய’க் கட்சியாகவும் இம்முறை அவர்கள் தம்மை நிலை நிறுத்திக் கொண்டுள்ளனர். இந்தி பேசும் மாநில…
-
- 2 replies
- 850 views
-
-
இலங்கை விவகாரத்தில் யதார்த்தபூர்வமான உண்மைகளை உணர்ந்து இந்திய அரசு புதிய அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் -பழ. நெடுமாறன்- * ஒப்புக்கொண்டவற்றை நிறைவேற்ற மறுக்கும் இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சர்வதேச நாடுகள் விடுதலை புலிகளை அவசர அவசரமாகத் தடை செய்கின்றன இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலைகள் சிங்கள இராணுவத்தினாலும் துரோகப் படைகளாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருகோணமலையிலிருந்து தமிழர்களை முழுமையாக விரட்டி அடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் படுகொலைகள் நடத்தப்படுகின்றன. இவற்றின் விளைவாக 5,000 இற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் உயிர்தப்பி ஓடிவந்து தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். இன்னும் பல்லாயி…
-
- 2 replies
- 1.3k views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது? யதீந்திரா முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. மகிந்த ராஜபக்ச காலத்தில் இந்த நினைவு கூர்தலை அப்போதிருந்த பாதுகாப்பு அமைச்சு ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இதனால் ஆங்காங்கே தீபம் ஏற்றுவதுடன் நினை கூர்தல் முடங்கிப் போனது. ஆனால் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை புதிய அரசாங்கம் தடுக்கவில்லை. இதனை வேண்டுமானால் ஆட்சி மாற்றத்தின் பெறுபேறு என்று சிலர் வர்ணிக்கக் கூடும். ஒன்றை தடுப்பது அதன் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும். அந்த ஈர்ப்பே எப்போதும் விடயத்தை சூடாக வைத்திருக்கப் பயன்படும். ராஜபக்ச நிர்வாகம் அதனைத்தான் செய்தது. முக்கியமாக கோத்த…
-
- 2 replies
- 641 views
-
-
"விடியலுக்கு காத்திருக்கிறேன்" இலங்கைக்கு 1948 ஆண்டு பெப்ரவரி மாதம், நாலாம் திகதி சுதந்திரம் கிடைத்ததாக நான் வரலாற்றில் படித்துள்ளேன். அன்று இலங்கை வாழ் தமிழர்கள் தமக்கு விடியல் கிடைக்கும் என்று அதை மகிழ்வாக, பெரும்பான்மையான சிங்களமக்களுடன் சேர்ந்து வரவேற்றனர். ஆனால், எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால், 1956 ஆம் ஆண்டு கொண்டு வந்த சிங்களம் மட்டும் என்ற சட்டம் [ Sinhala Only Act] அவர்களின் விடியலை, இனக்கலவரத்துடன் சுக்கு நூறாக்கியது. அதை தொடர்ந்து தரப்படுத்தல் வந்து, மேலும் பல இனக்கலவரங்கள், யாழ் நூலக எரிப்பு என தமிழர்கள் எதிர்பார்த்த விடியல் இன்றுவரை ஏற்படவில்லை! சொல்லளவில் பிரித்தானியா அரசிடம் இருந்து சு…
-
-
- 2 replies
- 566 views
-
-
ஜனாதிபதியும் மணல் மாபியாக்களும், - வ.ஐ.ச.ஜெயபாலன் . இ.லங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கு, தயவுசெய்து நாட்டை தங்கத்தட்டில் வைத்து மணல் மாபியாக்களிடம் கையளிக்கும் தவறான முயற்ச்சியை உடனடியாகக் கைவிடுங்கள். அதற்க்குள் தமிழ் மணல் மாபியாக்கள் சுண்டிக்குழம் இறவை வெட்டி யாழ்ப்பாணத்தை இலங்கை பெருநிலத்தீல் இருந்து துண்டிக்கும் முயற்ச்சியில் ஈடுபடுகின்றனர். தயவுசெய்து மண் மணல் ஏற்ற்றிச் செல்வது தொடர்பான உங்கள் ஆபத்தான சட்டத்தை ரத்துச் செய்யுங்கள். - வ.ஐ.ச.ஜெயபாலன் . உங்கள் அரசின் புதிய மண் மணல் எற்றிசெல்லும் சட்டம் இலங்கையின் கரையோர கடல் ஏரிகளையும் ஆற்றுப்படுகைகளையும் நிலத்தடி நீராதாரங்களையும் அழித்துவிடும். மண்ணை உவரக்கிவிடும். இது இலங்கை அடங்கி…
-
- 2 replies
- 640 views
-
-
இமாலயப் பிரகடனம்: தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு? நிலாந்தன்! December 17, 2023 நோர்வீஜிய மத குருவாகிய அருட் தந்தை. ஸ்டிக் உட்னெம்-Fr.Stig Utnem- இலங்கைத தீவின் நல்லிணக்க முயற்சிகளில் மதத்தலைவர்கள் பங்களிப்புச் செய்யலாம் என்று சிந்திப்பவர். அதற்காக உழைப்பவர். 2014இல் நான் நோர்வேக்குச் சென்றபொழுது அவரைச் சந்தித்தேன். இலங்கையில் திருச்சபைகளின் பங்களிப்போடு இன நல்லிணக்க முயற்சி ஒன்றினை முன்னெடுக்கவிருப்பதாக அவர் என்னிடம் சொன்னார். அதற்கு நான் சொன்னேன், நல்ல விஷயம். ஆனால் நல்லிணக்க முயற்சிகளை திருச்சபைகளில் இருந்து தொடங்குவதற்கு பதிலாக விகாரைகளில் இருந்து தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று. ஏனென்றால் யுத்தம் அங்கிருந்துதான் தொடங்குகின்றது. எனவே அங்கிருந்துத…
-
- 2 replies
- 477 views
-
-
கிழக்கில் ஓரங்கட்டப்படும் தமிழ்த் தேசியவாதிகள்… மட்டு.நகரான் September 27, 2021 யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் , தமிழர்களின் போராட்டமானது இராஜதந்திரப் போராட்டமாக மாற்றம் பெற்றது. யுத்தம் முடிந்த நிலையில், புலம்பெயர் தமிழர்களும் இங்குள்ள தமிழ்த் தேசியப் பற்றாளர்களும் இணைந்து தமிழ் மக்களுக்கான நீதியை கோருவதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும், தமிழர்களின் உரிமையினை அங்கீகரிக்குமாறும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இவ்வாறான போராட்டங்கள் காரணமாக, தமிழர்களின் போராட்டமானது சர்வதேச மயப்படுத்தப்பட்டதுடன், இன்று உலக நாடுகள் இலங்கைத் தமிழர்கள் மீதான கரிசனையினையும் ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. இவற்றினை நாங்கள் சாதாரண ஒரு விடயமாக…
-
- 2 replies
- 517 views
-
-
ஜெனிவாவில் மீண்டும் கால அவகாசமா? தமிழர்களிடமுள்ள மாற்று வழிமுறை என்ன? யதீந்திரா மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத் தொடர் ஆரம்பமாகியிருக்கிறது. இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை ஒன்றை கொண்டுவருவது தொடர்பில் எதிர்வரும் 5ம் திகதி விவாதிக்கப்படவுள்ளது. இந்தப் பிரேரணையை பிரித்தானியா கொண்டுவரவுள்ளது. மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியிருக்கின்ற நிலையில், அந்த இடத்தை இம்முறை பிரித்தானியா நிரப்பவுள்ளது. அது எவ்வாறான பிரேரணையாக அமைந்திருக்கும் என்பதுதான் இங்குள்ள கேள்வி? 2015 செப்டம்பரில் இடம்பெற்ற ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத்தொடரில் உரையாற்றிய சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மீள நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில்…
-
- 2 replies
- 985 views
-
-
நேற்று உணவு மேசையில், ஈழப்பிரச்சினை குறித்து பேச்சு வந்தது..அங்கே நடைபெறும் மனித அவலம் பற்றியும், மருத்துவமனைகளில் எறிகணைகளை வீசும் நாஜி இலங்கை அரசு பற்றியும் எதிரே அமர்ந்திருந்த பலநாட்டவர்களிடம் கவலையுடன் விவரித்துக்கொண்டிருந்தபோது, ஒரு இந்தி'யர் எதிரே வந்து அமர்ந்தார்.. வந்தமர்ந்தவர், படீரென ஒரு கருத்தை தெரிவித்தார். நான் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தேன்.. ஓ ஸ்ரீலங்கா இஷ்யூ ? அங்கே விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள் தெரியுமா ? அதனால் தான் அப்பாவி மக்கள் சாகிறார்கள்...என்றார்.. மருத்துவமனையை நோக்கி பல்குழல் எறிகளைகள் மூலம் பாஸ்பரஸ் குண்டுகளையும், மீயொலி விமானங்களின் மூலம் கொத்து குண்டுகளையும் இலங்கை அரசாங்கம் வீசுவதை புதினத்தையும்…
-
- 2 replies
- 853 views
-
-
இது முடிவல்ல… முடிவின் தொடக்கம்! -என். சரவணன் படம் | Groundviews தொடக்கம் 1: மியான்மார்: திகதி – 20 மார்ச் 2013 முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஒரு நகைக்கடையில் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் வாய்த்தகராறு நடக்கிறது. வாய்த்தகராறில் ஈடுபட்டவருக்கு ஆதரவாக பௌத்த மதத்தைச் சேர்த்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள். சில மணித்தியாலங்களில் அந்த கடை அடித்து சேதமாக்கி அழிக்கப்படுகிறது. இதன் விளைவாக ஒரு பௌத்த பிக்கு எரிக்கப்பட்டுவிடுகிறார். இதை சாட்டாக வைத்து முஸ்லிம்கள் மீது மோசமான இன அழித்தொழிப்பு நடந்தேறியது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தேடித்தேடி கொல்லப்பட்டார்கள். அவர்களின் சொத்துக்கள் உடைமைகள் சூறையாடப்பட்டன. பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கா…
-
- 2 replies
- 1.2k views
-
-
மேற்குலக ஏகபோக அரசுகள் தமிழர்களுக்குப் போதிக்கும் இலங்கை அரசின் ஜனநாயகம் :செங்கோடன் தமிழ்த் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையைப் புறக்கணித்து தமிழர்களை ஒன்றிணைந்த இலங்கைக்குள்ளேயே திணித்து இலங்கைக்கு போலிச் சுதந்திரத்தை வழங்கிய பிரித்தானிய அரசாங்கம், காலனியத்திற்குப் பிந்திய காலப்பகுதி முழுவதும் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல்வாதிகளாலும் பௌத்த மதகுருக்களாலும் பௌத்த தீவிரவாதம் வளர்க்கப்பட்டு ஈழ தமிழின மக்கள் அரச படைகளாலும் பிக்குகள் மற்றும் தென்னிலங்கை இனவாதிகளாலும் கொடுமைப்படுத்தப்பட்டு, பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி, எரிக்கப்பட்டு, கடத்தி சித்திரைவதைகளிற்கு உள்ளாக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்படும் போதும் அவர்களுடைய வரல…
-
- 2 replies
- 583 views
-
-
நிச்சயம் கேட்க வேண்டிய பேச்சு http://www.youtube.com/watch?v=xycN1kpUfgQ
-
- 2 replies
- 742 views
-
-
மும்முனைப் போட்டியா? நான்கு முனைப் போட்டி? – நிலாந்தன். ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களின் பொது வேட்பாளராகக் களம் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ராஜபக்சக்களின் வேட்பாளராக களமிறங்குவதை விடவும் ராஜபக்சக்களின் ஆட்களுக்கு தான் தலைமை தாங்குவது என்று முடிவெடுத்து விட்டது போல் தெரிகிறது.ரணில் ராஜபக்சக்களின் கட்சியைச் சாப்பிடத் தொடங்கி விட்டார். கட்சியைக் காப்பாற்றவும் ரணிலுடன் தமது பேரத்தைப் பலப்படுத்தவும் இளைய ராஜபக்சவாகிய நாமல் களமிறக்கப்படுகிறாரா? அவர் இக்கட்டுரை எழுதப்படும் வரையிலும் கட்டுப் பணம் செலுத்திதியிருக்கவில்லை. ராஜபக்சக்களின் வேட்பாளராக களம் இறங்கினால் தனக்கு பின்வரும் பிரதிகூலங்கள் உண்டு என்பது ரணிலுக்கு நன்றி தெரியும். முதலாவத…
-
- 2 replies
- 434 views
-
-
பிரித்தானியாவும் பிரெக்சிட்டும் Britain and brexit பா.உதயன் பிரித்தானியாவில் இன்று அனைவராலும் பேசப்படும் ஒரு மிக முக்கியமான செய்தியாக இன்று பிரெக்ஸிட் (brexit) இருப்பதை காண முடிகின்றது .சுமார் மூன்று வருடத்திற்கு முன்பு பிரித்தானிய ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து தனித்து இருக்கவேண்டுமா அல்லது சேர்ந்து இருக்க வேண்டுமா என்ற பொது வாக்கு எடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து இருக்க வேண்டும் என்று பெரும் பான்மை மக்களால் தீர்ப்பு வழங்கபட்டது . இதை தொடர்ந்து எந்த வித பொருளாதார ஒப்பந்தமும் செய்யப்படாமல் ஒரு இழுபறி நிலைமையே காணப்படுகின்றது .இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் பழமைவாத தேசிய நரிகளோடு நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார் . இதை தொடர்ந்து எ…
-
- 2 replies
- 1.3k views
-
-
வரதரின் மீள்வரவும் பின்னணியும்…..! July 16, 2025 — அழகு குணசீலன் — இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் பிரசவமான, வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் மீள்வருகை தமிழ்த்தேசிய அரசியலிலும், ஊடகங்களிலும் பெரும் பேசு பொருளாகியிருக்கிறது. இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் அரசியல் தஞ்சம் பெற்று வாழும் வரதர் இந்திய படைகளுடன் கப்பலேறிய பின்னர் இதற்கு முன்னரும் சில தடவைகள் இலங்கை வந்துள்ளார். ஆனால் அப்போதெல்லாம் இந்த அளவு முக்கியத்துவத்தை தமிழ்த்தேசிய அரசியலும், ஊடகங்களும் அவருக்கு வழங்கவில்லை. அப்படியானால் இப்போது மட்டும் ஏன்? இதன் பின்னணி என்ன? திடீரென்று கடந்த சில தினங்களாக மாகாணசபை தேர்தல் ‘மந்திரம் ‘ கொழும்பு அரசியலிலும், தமிழ்த்தேசிய அரசிய…
-
-
- 2 replies
- 460 views
-
-
போரில் உயிரிழந்த சிங்களப் படைகளுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச்சென்று நிகழ்வை நடத்தமுடியும் என்றால், தமிழ் மக்களுக்காகவே தமது உயிர்களை தியாகம் செய்த உறவுகளுக்கு தமிழ் மாணவர்கள் ஏன் அஞ்சலிசெலுத்தக் கூடாது? ஐயோ அம்மா ! அடிக்காதேங்கோ சேர் ! இந்தக் காட்டுக் கத்தல்களை காதில் வாங்காத படைச்சிப்பாய்கள் தாக்குவதற்காகவே களமிறக்கப்பட்டது போல தொடர்ந்து தாக்கிக் கொண்டேயிருந்தார்கள். செத்த பாம்பை அடிப்பது போல் தனித்து மாட்டுப்பட்ட ஒருவன் மீது கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு தமது வீரத்தைக் காட்டினார்கள். தமிழர்களது உணர்வுகளைச் சீண்டிப் பார்த்து அதனால் வந்த விளைவுகளை தென்னிலங்கை மறந்து விட்டது. அதனால் மீண்டும் தமிழர்களது தமிழ் மாணவர்களது உணர்…
-
- 2 replies
- 789 views
-
-
அர்ஜுனாவும் இரும்பு மோதிரமும்- நிலாந்தன் ஒரு கனேடிய நண்பர், அவர் ஒரு பொறியியலாளர், இரும்பு மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார். அதற்குப் பின்னால் உள்ள கதையைச் சொன்னார். கனடாவில், கியூபெக் பாலம் 1907ஆம் ஆண்டு மனிதத் தவறுகளால் நொறுங்கி விழுந்தது. அதில் 75 தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள். அப்படி ஒரு தவறு இனிமேலும் நடக்க கூடாது என்ற சங்கல்பத்தோடு பொறியியலாளர்களுக்கான சத்தியப்பிரமாணம் ஒன்றைக் குறித்துச் சிந்திக்கப்பட்டது. டொரன்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பொறியியலாளர் Haultain ஹோல்டேய்ன் 1922ஆம் ஆண்டு பொறியியலாளர்களுக்கான தொழில்சார் சத்தியபிரமாணத்தை அறிமுகப்படுத்தினார். 1925ஆம் ஆண்டு அவருடைய மேற்பார்வையின் கீழ் பொறியல் பட்டதாரிகள் இரும்பு மோதிரம் அணிந்து சத்தியபிரமாணம்…
-
-
- 2 replies
- 646 views
- 1 follower
-
-
ரஜினியின் யாழ்ப்பாண வருகையை முன்வைத்து திறந்த அரங்குகள் தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த திங்கட்கிழமை (மார்ச் 27, 2017) யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று நடத்தப்பட்டது. ‘ஈழத்துக் கலைஞர்கள்’ என்கிற பெயரினால் நடத்தப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய வளவும், அதனைச் சூழவுள்ள பகுதியும் நூற்றுக்கணக்கான போராட்டங்களைக் கண்டவை. ஆலய வளவுக்குள் போராட்டங்கள் நடத்த அனுமதியில்லை என்று ஆலய நிர்வாகம் அறிவித்த பின்னரும், ஒரு சில போராட்டங்கள் அங…
-
- 2 replies
- 897 views
-
-
கடந்த வாரம் நானெழுதிய கட்டுரை தொடர்பில் சில நண்பர்கள் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருந்தார்கள். முதலாவது- கடந்த அறுபதாண்டு காலமாகத் தமிழ் வாக்காளர்கள் தெளிவாகச் சிந்தித்து முடிவெடுத்துள்ளார்கள் என்பது சரியா? அல்லது அவர்கள் கற்றிந்த பாடங்களின் அடிப்படையில் தெளிவாகச் சிந்திப்பதற்கு அரசியல்வாதிகளும், இயக்கத் தலைவர்களும் அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல படித்த நடுத்தர வர்க்கமும், குறிப்பாக, ஊடகங்களும், ஆய்வாளர்களும் போதியளவு உதவவில்லையா? இரண்டாவது, கடந்த அறுபதாண்டு காலத் தமிழ்த் தேசிய அரசியலாற்பெற்ற வெற்றிகள் எவையெவை? இன்றுள்ள தேக்க நிலைக்குப் பொறுப்பேற்று இறந்த காலத்தைப் பிரேத பரிசோதனை செய்யத் தமிழ்த் தலைவர்களும், ஊடகங்களும், படித்த நடுத்தர வர்க்கமும் தயாரா? மூன்றாவது, இவ்விதம் …
-
- 2 replies
- 624 views
-
-
ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இந்தியத் தேசியப் பிரச்சினையின் அங்கமாக பார்க்கப்பட்டது – சூ.யோ. பற்றிமாகரன் . 1980களில் அமெரிக்க மேலாதிக்கம் திருகோணமலைத் துறைமுகத்தில் வேகம் பெறுவதை அன்றைய சிறீலங்கா சனாதிபதி ஜே. ஆர் ஐயவர்த்தன ஊக்கப்படுத்திய சூழ்நிலையில், இந்தியாவுக்கு இந்த உடன்படிக்கையை செய்வதன் மூலம் அதனை மட்டுப்படுத்த வேண்டிய தேவை முதன்மையானதாக இருந்தது. 1983இல் யூலை ஈழத்தமிழின அழிப்பைச் சிறீலங்கா அரசாங்க ஆதரவுடன் சிங்கள பௌத்த பேரினவாதிகள் நிகழ்த்திய பொழுது அன்றைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள், ஈழத் தமிழர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான இச்செயற்பாட்டுக்கு இந்திய அளவிலும், ஐக்கிய நாடுகள் சபையின் பாத…
-
- 2 replies
- 859 views
-
-
ஆதவன் பக்கம் - பருத்தித்துறை தரையிறக்கமும் ட்ரோலர் அரசியலும் நியூயோர்க்கில் இருந்து கப்பலில் சிங்கப்பூர் வந்து கொண்டுள்ளோம். வருகின்ற வழியில் 4 தினங்கள் முன்பு செங்கடலில் ஒருவர் கடலில் வீழ்ந்துள்ளதாகவும் (Man over board), 7 தினங்கள் முன்பு மெடிட்டரேனியன் கடலில் (ஸ்பெயினின் தெற்கு கடல் பகுதியில்) ஒருவர் கடலில் வீழ்ந்துள்ளதாகவும், அவர்களைத் தேடும் படலம் (Rescue operation) தொடர்வதாகவும், குறித்த பகுதிகளின் வழி பயணிக்கவேண்டாம் என்றும் இப்பகுதிகளில் பயணிக்கும் அனைத்துக் கப்பல்களுக்கும் அவசர செய்தி அனுப்பப்பட்டது. எனது முதல் தர அதிகாரியுடன் இதுபற்றி (அதாவது ஏன் அடிக்கடி ஆட்கள் கடலில் வீழ்கிறார்கள்) கதைத்துக் கொண்டிருந்த பொழுது, அவர் தான் அறிந்த இரண்டு சம்பவங்களை கூறின…
-
- 2 replies
- 657 views
-
-
யாராவது விளக்குவீர்களா ?.............. இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சுண்டிக்குளம் என்னுமிடத்தை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதன் மூலம் யாழ் குடாநாடு முழுமையாக இராணுவத்தினர் வசமாகியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது. [மேலும்]........... யாராவது விளக்குவீர்களா ? சுண்டிக்குளம் எங்கே இருக்கிறது . அது யாழ் மாவட்டத்தில் உள்ள சுண்டிக்குளியா ? எதி பிடித்ததென்று பறை தட்டுகிறார்கள். ஒரே குழப்பமாக் இருக்கு தயவு செய்து விளக்கவும் அன்பான நண்பர்களே .
-
- 2 replies
- 1.3k views
-