அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
கொமன்வெல்த் மாநாட்டை ‘நெலும் பொக்குண மஹிந்த ராஜபக்ஷ அரங்கில்‘ நடத்தும் இலங்கை அரசின் திட்டம் அவ்வளவு இலகுவாக கைகூடும் போலத் தெரியவில்லை. காரணம் இன்றுவரைக்கும், இந்த மாநாட்டை கொழும்பில் தான் நடத்துவது என்ற உறுதியான அறிவிப்பு ஏதும் உரியதரப்பில் இருந்து வெளியாகவில்லை. 2011 பேர்த்தில் விடுக்கப்பட்ட அறிவிப்புக்குப் பின்னர் - வரும் நவம்பர் 15 தொடக்கம் 18 வரை கொமன்வெல்த் உச்சி மாநாடு நடைபெறும் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்ட போதிலும், கொமன்வெல்த் உறுப்பு நாடுகளின் நிலைப்பாடு இன்னமும் சந்தேகத்துக்குரியதாகவே இருந்து வருகிறது. பேர்த் மாநாட்டின் முடிவில், அடுத்த மாநாடு இலங்கையில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் தொடக்கம், கனடா இதனை எதிர்த்தே வந்தது. மனித உர…
-
- 1 reply
- 754 views
-
-
யாழ்ப்பாண நூலக எரிப்பின் நாற்பதாண்டுகள்: கற்றுக் கொள்ளாத பாடங்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு, 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் அதன் அவலத்தை, நாங்கள் ஒப்பாரியாக ஆண்டுதோறும் நினைவுகூர்ந்தபடி கடத்துகிறோம். திரும்பிப் பார்க்கையில் இந்த நூலகமும் அதன் எரிப்பும் அதைத் தொடர்ந்த சிதைவும், வலி நிறைந்த கசப்பான உண்மை ஒன்றைச் சொல்கின்றன. ஒரு சமூகமாக நாம் வரலாற்றைப் பதிதலிலும் ஆவணப்படுத்தலிலும் முழுமையாகத் தோற்றிருக்கிறோம். நாம், சிலவற்றை வெளிப்படையாகவும் சுயவிமர்சன நோக்கிலும் பேசியாக வேண்டும். இப்போது, இதுபற்றிப் பேசுவதற்கான காலமா என்று கேட்காதீர்கள். இவ்வாறு கேட்டுக்கேட்டே, நான்கு தசாப்தங்களைக் கடந்துவிட்டோம். யாழ்ப்பா…
-
- 1 reply
- 627 views
-
-
அனுர செய்யக்கூடிய மாற்றம்? - நிலாந்தன் இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு நசுக்கப்பட்ட ஒரமைப்பு, இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட ஓரமைப்பு, அதன் தலைவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இன்றி என்கவுண்டரில் கொல்லப்பட்டவர். அப்படிப்பட்ட ஓரமைப்பின் தலைவர் இப்பொழுது நாட்டின் அரசுத் தலைவராக வந்திருக்கிறார். ஆயுதப் போராட்டத்தில் தொடங்கி அரசுத் தலைவர் பதவி வரையிலுமான இந்த வளர்ச்சியை ஏற்கனவே ஓர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களாகிய தமிழ் மக்கள் ஆர்வத்தோடு பார்க்க வேண்டும். அதன் பொருள் அனுரவின் மாற்றம் என்ற கோஷத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ, அல்லது இனப்பிரச்சினைக்கான அவருடைய தீர்வை நம்ப வேண்டும் என்பதோ அல்ல. ஆயுதப் போராட்டத்தில் தொடங்கி அரசுத் தலைவர் வரையிலு…
-
- 1 reply
- 523 views
- 1 follower
-
-
கொரோனா அச்சுறுத்தலிலும் ஆதாயம் தேடும் ராஜபக்ஷக்கள் புருஜோத்தமன் தங்கமயில் உயிரிழப்பு ஏதுமின்றி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை இலங்கை கடந்துவிடும் என்ற நம்பிக்கை, நாட்டு மக்களிடம் பரவலாகக் காணப்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்திருக்கின்றது. இதுவரை இரண்டு பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணித்திருக்கிறார்கள். அந்த இருவரின் உடல்நிலையில் ஏற்கெனவே காணப்பட்ட சிக்கல்கள் குறித்து வைத்தியத்துறையினர் விளக்கமளித்து, கொரோனா மரணங்கள் தொடர்பிலான மக்களின் பயத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்தி இருக…
-
- 1 reply
- 584 views
-
-
விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா… இல்லை விடுதலைப் போராளிகளா? · விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இறுதி யுத்தத்தில் நிராயுதபாணிகளாக அந்த யுத்த களத்திலே நின்றிருந்த போராளிகளையும், பொதுமக்களையும் இனம் காண முடியாத சிங்கள இராணுவம், அங்கே தலைமுடி கத்தரிக்கப்பட்டிருந்த சில பெண் போராளிகளை இனம் கண்டு கைது செய்துதான் அவர்களூடாக அவர்களுக்குத் தெரிந்…
-
- 1 reply
- 434 views
-
-
-
அதிகரிக்கும் அமெரிக்க ஈடுபாடு By DIGITAL DESK 2 13 NOV, 2022 | 03:48 PM (ஹரிகரன்) “ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவின் வருகையினால் அமெரிக்கா முழுத் திருப்தியடைந்திருக்கிறதா என்ற கேள்வி உள்ளது. எனினும் அவர் போன்ற ஆட்சியாளர் ஒருவர் இருப்பது அமெரிக்காவுக்குப் பாதுகாப்பானது தான்” தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்களும், அந்த நாட்டின் இராஜதந்திரிகளும் கொழும்பில் இரவுபகலாக பணியாற்றிக் கொண்டிருந்தது போலவே, பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், பல நாடுகளின் தூதரக மற்றும் இராஜதந்திரச் செயற்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. முக்கியமாக அமெர…
-
- 1 reply
- 536 views
- 1 follower
-
-
கொழும்பின் சூழ்ச்சி வலைக்குள் சிக்கி சீரழியப்போகிறதா கூட்டமைப்பு? யதீந்திரா பல்லாயிரக்கணக்கான உயிர்களின் பலியிடலால் உருப்பெற்ற தமிழ்த் தேசியவாத அரசியல் இன்று அத்தனை இழப்புக்களையும் கேவலப்படுத்துவாத தன்னை வெளிப்படுத்தி வருகிறது. வெறும் தன்முனைப்பு வாதங்களுக்குள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணமாக அண்மைய நாட்களாக இடம்பெற்றுவரும் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான விவாதங்களை சுட்டிக்காட்டலாம். வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான கருத்துக்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, அதற்குப் பொருத்தமான இடம் எது என்பது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்தன. இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஓமந்தையை …
-
- 1 reply
- 520 views
-
-
மாவை மீதான விக்கியின் திடீர்ப் பாசம்! சுயநலவாதிகளின் நாடகம் புருஜோத்தமன் தங்கமயில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து, பரந்துபட்ட கூட்டணியை அமைக்க வேண்டும் என்று, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருக்கின்றார். மாவையை “தலைமைத்துவ ஆளுமையற்றவர்” என்று தொடர்ச்சியாகக் கூறி வந்த விக்னேஸ்வரன், திடீரென்று மாவையின் தலைமையில் கூட்டணி அமைப்போம் என்ற அறிவித்தலை விடுக்கிறார் என்றால், அதன் பின்னணியை ஆராய வேண்டி ஏற்படுகிறது. வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பால், விக்னேஸ்வரன் நேரடி அரசியலுக்கு அழைத்துவரப்பட்டு 10 ஆண்டுகளாகப் போகிறது. விக்னேஸ்வரன், …
-
- 1 reply
- 478 views
-
-
ஜனாதிபதித் தேர்தல்! - காலங்கள் மாறும், காட்சிகள் மாறும்! முத்துக்குமார் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வழங்கத் தொடங்கிவிட்டன. மாரிப் பருவநிலைபோல இரு தரப்பினதும் செல்வாக்குத் தளங்களும் நாள் தோறும் ஏறி இறங்குகின்றது. மைத்திரிபால சிறிசேனா களமிறக்கப்பட்டதும் மகிந்தர் ஆடிப்போய்விட்டார். எதிரி தனது கோட்டைக்குள் இருந்து வந்திருக்கிறார் என்பதுதான் அவர் ஆடிப்போனமைக்குக் காரணம். எனினும் சிறிய சேதாரங்களுடன் வியூகங்களை வகுத்து நிலைமைகளை ஒருவாறு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான பகீரதப் பிரயத்தனத்தில் இறங்கியுள்ளார் போல தெரிகின்றது. பலர் எதிர்த்தரப்பிற்கு மாறுவர் என எதிர்பார்க்கப்பட்ட போதும் இவரது கட்டுப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
வரலாற்றுப் பிழையை திருத்துமா இந்தியா ? 2009-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்ற ஈழப்படுகொலைகளுக்குப் பின்னர் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே மாதங்கள் கொடுங்கனவுகளைத் தரும் மாதங்களாக மாறிப் போய்விட்டன. மனிதாபிமானம் கொண்ட, ஈர மனம் கொண்ட எவரது நினைவுகளும் அந்த ரத்தத்தில் தோய்ந்துதான் போயிருக்கும். ஈழத்து மகளிரும், குழந்தைகளும், பதுங்கு குழிகளும்தான் கனவுகளின் உருவங்கள். ஈழத்துப்போரில் இந்தியா நடந்து கொண்ட விதமும், மனிதாபிமானமற்ற முறையில் அமைதி காத்த விதமும் நமக்கு எரிச்சலை மட்டுமல்ல, கடுங்கோபத்தையும் ஏற்படுத்தியது. அசோகரின் தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்ட தேசியக் கொடியை ஏற்றவோ, கொண்டாடவோ நமது ஆட்சியாளர்களுக்கு எவ்வித உரிமையும், அருகதையும் கிடையாது. பிரபாகரனை பழிவாங்குகி…
-
- 1 reply
- 1.1k views
-
-
அமெரிக்காவுடன் நெருங்கும் மஹிந்த கே. சஞ்சயன் / 2019 மார்ச் 24 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:02 Comments - 0 மேற்குலகத்துக்கு எதிரான, குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிராக வெறுப்புணர்வை வெளிப்படுத்தி வந்த மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் திடீரென அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்சை சந்திக்கச் சென்றிருந்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸையும் மஹிந்த ராஜபக்ஷவையும் அமெரிக்கத் தூதுவரிடம் அழைத்துச் சென்றவர் பசில் ராஜபக்ஷ. மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும், அவரை அமெரிக்கத் தூதுவரிடம் இன்னொருவர் அழைத்துச் செல்லும் அளவுக்கு, இருதரப்பு உறவுகள் எட்டத்தில் இருந்தன. பசில் ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருப்பவர் என்ற…
-
- 1 reply
- 1.1k views
-
-
நிலத்தடியில் புதைந்த கடந்தகாலமும், அகழப்படும் உண்மைகளும் 2019 - ராஜன் குறை · கட்டுரை உண்மைகள் தங்களைத் தாங்களே என்றும் நிறுவிக்கொள்வதில்லை. அதிகாரத்தின் கரங்களே அவற்றை நிறுவகின்றன. புலனாகும் உண்மைகள், ஆங்கிலத்தில் ஃபாக்ட்ஸ் எனப்படுபவைகூட கருத்துசார் உண்மைகள் உருவாகும்போது அவற்றுள் புதையுண்டுவிடுகின்றன. ஜெயந்தன் ‘மனுஷா மனுஷா’ என்ற நாடகத்தில் எழுதியதுபோல, மன்னனின் புத்தாடைகள் என்ற கதையில் வருவதுபோல கண்ணுக்குப் புலனாகாத மன்னனின் ஆடைகளை அனைவரும் பாராட்டும்போது மன்னவனின் நிர்வாணத்தைக் கேள்வி கேட்பவனே பைத்தியக்காரன், முறை தவறிப் பிறந்தவன். சுருக்கமாகச் சொன்னால் அனைவரும் ஏற்றுக்கொள்வதே உண்மை. அனைவரும் ஏற்றுக்கொள்ளும்போது பிறப்பதுதான் அதிகாரமும். பொது ஏற்பின் இர…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை! 1956: (10) – என்.சரவணன் Bharati பண்டாரநாயக்க இந்திய வம்சாவளியினரை நாடு கடத்த வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்து வந்த சூழ்நிலையில் தான் 1939ஆம் ஆண்டு நாவலப்பிட்டி கலவரம் நிகழ்ந்தது. இலங்கையின் முதலாவது தமிழ் சிங்கள இனக்கலவரமாக இதைக் கொள்வது வழக்கம். சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாச்சலம் போன்றோர் இலங்கைக்கான தேசியம், இலங்கைக்கான தேசிய ஒருமைப்பாடு என உழைத்து களைத்து, தோற்று அவ்வொருமைப்பாடு காலாவதியாகியாகி வந்த காலம் 1930கள் எனலாம். அவர்களின் சகாப்தமும் முடிவுற்று சிங்களத் தேசியவாதத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தமிழர்களுக்கான தனித்தேசிய அடையாளத்தின் தேவை உணரப்படத் …
-
- 1 reply
- 1.4k views
-
-
பயங்கரவாத தடுப்புச்சட்டம்: நெருக்கடியில் இலங்கை சிறை கைதிகள் அம்பிகா சற்குணநாதன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் 28 டிசம்பர் 2020 (இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள். பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.) பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கைதிகள் நடத்தப்படுகின்ற முறை மற்றும் அவர்களின் நிலைமைகள் குறித்து முதன்முதலான தேசிய ஆய்வொன்றை 2018 பெப்ரவரி தொடக்கம் 2020 ஜனவரி வரை எனது தலைமையில் நடத்தியது. அந்த ஆய்வின் அறிக்க…
-
- 1 reply
- 485 views
-
-
ஜெனிவா அரசியல் குற்றம்சாட்டுக்களால் பயனுண்டா? - யதீந்திரா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இலங்கை விவகாரம் தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான கலந்துரையாடலின் போது, அங்கு பேசியிருக்கும் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் தங்களின் அதிருப்திகளை வெளியிட்டிருக்கின்றனர். இந்தியாவின் நிலைப்பாடு என்ன ? – என்னும் கேள்வியிருந்த நிலையில், தற்போது இந்தியா தனது நிலைப்பாட்டை வெளியிட்டிருக்கின்றது. அதாவது, தமிழ் மக்களின் நீதி, சமத்துவம் கௌரவம், சமாதானம் ஆகியவற்றின் மீது, இந்…
-
- 1 reply
- 565 views
-
-
வல்லரசுகளைத் தோற்கடித்த 4 ராணுவ சாகசங்கள் ராமச்சந்திர குஹா உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறான நான்கு பெரிய ராணுவப் படையெடுப்புகளைப் பற்றி என்னைச் சிந்திக்க வைத்தது. மிகப் பெரிய நாடுகள், ராணுவரீதியில் வலிமையும் வாய்ந்தவை, உலக அரங்கில் தங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாகக் கருதி, பெரும் அவமானத்தில் முடிந்த அந்த நான்குப் படையெடுப்புகளை மேற்கொண்டன. அத்தகைய பழைய வரலாறுகளை, நம் வாழ்நாளில் நிகழ்ந்தவையாகச் சுருக்கிக்கொள்ள வேண்டும் என்றால், இது - அந்த வரிசையில் நான்காவது படையெடுப்பு. வியட்நாமிலும் இராக்கிலும் அமெரிக்கா நடத்திய இருவேறு தனித்தனி படையெடுப்புகள், ஆப்கானிஸ்தான் மீது அன்றைய சோவியத் ஒன்றியம் தவறான கணிப்பின்பேரில் நிகழ்த்திய பட…
-
- 1 reply
- 756 views
-
-
மைத்திரிக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கோரமுடியும்? by Maatram தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இதுவரை வாய்திறக்காத, பொதுவேட்பாளராகியும் இன்னும் திறவாத, தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட தமிழர் தொடர்பாக எதுவும் குறிப்பிடாத, தமிழர்களை வேண்டப்படாதவர்களாக – விரோதிகளாக எண்ணும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என எவ்வாறு கோர முடியும் என கேள்வி எழுப்புகிறார் சட்டத்தரணி வி. புவிதரன். இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்குவதை விடுத்து தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளையாவது தன்னால் வழங்க முடியும் என மைத்திரியால் உறுதியளிக்க முடியுமா என மேலும் அவர் கேள்வி எழுப்புகிறார். ‘மாற்றம்’ தளத்துக்கு வழங்கிய நேர்க்காணலின் போதே மேற்கண்டவாறு கூறினார். அ…
-
- 1 reply
- 723 views
-
-
உரிமைக்கான போராட்டம் நடைபெற்ற ஒருநாட்டில், அபிவிருத்தி மூலம் தீர்வு காணப்பட்ட ஒரு நாட்டை உங்களால் உதாரணம் காட்ட முடியுமா என பிரான்ஸ் நாட்டின் மனித உரிமைகள் செயற்பாட்டு மையத்தின் இயக்குனரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமாகிய ச.வி. கிருபாகரன் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள பகிரங்க மடலில் கேள்வியெழுப்பியுள்ளார். அவரின் பகிரங்க மடலில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கட்கு, வணக்கம்! உங்களுக்கு என்னைபற்றிய அறிமுகம் தேவையில்லையென நம்புகிறேன்! சுருக்கமாக, எது எப்படியானலும் இன்று இக் கடிதத்தை உங்களுக்கு எழுதகூடிய நிலையில் உள்ளேன்! ஸ்ரீலங்காவின் நிறைவேற்று ஜனாதிபதியாக நீங்கள் அண்மையில் பெற்ற வெற்றிக்கு, எனது உணர்வு உ…
-
- 1 reply
- 1.1k views
-
-
[தேசம் விலை பேசப்படுகிறதா? உலகம் இன்று இந்தியாவைக் கூர்ந்து கவனிப்பதற்குக் காரணம் இருக்கிறது. உலகிலேயே மக்கள்தொகை மிகுந்த ஜனநாயக நாடு இதுதான். அத்துடன் இது விரைவில் மக்கள்தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனத்தையும் மிஞ்சிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.மக்கள்தொகை மிகுந்த நாட்டை வணிக உலகம் சந்தையாகப் பார்க்கிறது. அமெரிக்கா முதலிய ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள், இந்தியாவைத் தங்கள் சொந்த சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கிறது. தேசத்தைப் பற்றியோ, மக்களின் எதிர்காலத்தைப் பற்றியோ கவலையில்லாத இந்திய அரசு தங்கள் அரசியல் எதிர்காலத்தை மட்டுமே கணக்கிட்டுச் செயலாற்றுகிறது. "இது எங்குபோய் முடியுமோ?' என்று தேசப்பற்றுடைய அறிவாளிகள் திகைத்துப்போய் நிற்கின்றனர்.இந்திய…
-
- 1 reply
- 1k views
-
-
நீரும் நெய்யும்போல் நவாலி - பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன் நவாலிக் கிராமத்தின் சிறப்புகள் குறித்து, பாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வரலாற்றுத்துறைத் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் கருத்துரைக்கும் போது கூறியதாவது: “மேலைத்தேய கலாசாரத்தை உள்வாங்கிய அதேவேளை, பாரம்பரிய கலாசார அம்சங்களைப் பேணிக்கொள்ளும் ஒரு கிராமமாக நவாலி காணப்படுகின்றது. வடபகுதியில் இருந்த யாழ்ப்பாண இராசதானி காலத்தில் வௌியிடப்பட்ட நாணயங்கள் பெருமளவில் நவாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஓர் இடமாக, நவாலி காணப்படுகிறது. அதுமட்டுமல்ல, பொலன்னறுவை இராசதானி கால வணிக நடவடிக்கைகள் நடைபெற்ற ஓர் இடமாகவும் நவாலி இருந்துள்ளதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு சிறப்புகள…
-
- 1 reply
- 1.9k views
-
-
பல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-26#page-22
-
- 1 reply
- 626 views
-
-
ரூபன் சிவராஜா ‘பொருண்மை தெரிதலுஞ் சொன்மை தெரிதலுஞ் சொல்லி னாகும் என்மனார் புலவர்’ (தொல். 158) ‘மொழி’ இரண்டு அடிப்படைக் கூறுகளின் வழிநின்று செயல்படக்கூடியது என்று வரையறை செய்கிறது தொல்காப்பியம். ஒன்று சொன்மை (சொல்) மற்றையது பொருண்மை (பொருள்). ஒலி, சொல், வாக்கிய அமைப்பு முறைகளை ஆதாரமாகக் கொண்டு சொன்மை வெளிப்படும். பொருண்மை என்பது, சொல்லின் பொருளைக் குறிக்கும் தன்மையைச் சுட்டுகிறது. அதேபோல் சொற்கள் அனைத்துமே பொருளைக் குறிக்கும் தன்மையும் - உணர்த்தும் தன்மையும் வாய்ந்தவை என்பதை, ‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’ (தொல். 157) என்கிறது தொல்காப்பியம். சொல்லுக்கும் பொருளுக்குமான தொடர்பு தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தில் நுணுக்கமாகவும் விரிவாகவும் விளக…
-
- 1 reply
- 277 views
- 1 follower
-
-
சிங்கள மக்கள் புரிந்து கொண்டார்கள்; ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லையே... ஏன்? "இப்ப தம்பி, ஆ... ஊ ... எண்டால் எல்லாரும் கொடியைப் பிடிச்சுக்கொண்டு கிளம்பி விடுறாங்கள்’' இப்படி ஒரு வசனம் சினிமாப் படத்தில் வடிவேல் காமெடியில் வருகுது பாருங்கோ... வரும் ஆனா... வராது... என்ற அந்த காமெடியில் வரும் இந்தக் காட்சியும் எல்லாரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்ததோடு ஒரு நாட்டின் அரச நிர்வாக ஆட்சி எப்படி உள்ளது என்பதை எடுத்துக் காட்டி சிந்திக்கவும் வைத்தது பாருங்கோ ... இப்படியானதொரு நிலைவரம்தான் இப்ப இலங்கையிலும் நடந்து கொண்டிருக்குப் பாருங்கோ... அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல எப்பவுமே தமிழ் மக்களை சந்தேகத்துடனேயே பார்த்துவரும் படையினரும் பொலிஸாரும் யா…
-
- 1 reply
- 812 views
-
-
தேசத்தின் வீழ்ச்சி – கேடு விளைவிக்கும் ஆட்சிக்கு மாற்றிடு எங்கே உள்ளது? ரங்க ஜெயசூரிய ——————————— தேசமொன்றின் பாரியதொரு அழிவில் ஒப்பந்தம் ஒன்று உள்ளதென்று ஆடம் ஸ்மித் ஒருமுறை கூறியிருந்தார் – அதாவது நவீன அரசுகள் வெளிப்புற மற்றும் உள்மட்ட அழுத்தத்தைத் சிறப்பாக கையாளும் அளவுக்கு உள்ளார்ந்த வலிமையானவை. ஒரு தேசத்தை சிதறடிக்க கொள்கை வகுப்பாளர்களால் தீவிரமானதும் தொடர்ச்சியானதுமான குழப்பங்கள் தேவை. கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நாட்டை எப்படி வேகமாக அழிக்க முடியும் என்பதை காட்டியுள்ளார். இந்த எண்களைக் கவனியுங்கள். 2020 ஆம் ஆண்டில் இலங்கையின் பெயரளவிலான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 3600 அமெரிக்க டொ…
-
- 1 reply
- 407 views
-