Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம்-23)

Featured Replies

மச்சான்! நீ வெளிநாடு போறதுக்காக நாட்டைவிட்டுப் போனாப்பிறகு... கொஞ்ச நாளில் உன்ர தொடர்பு எதுவுமே கிடைக்காமல் போயிட்டுது. பிறகு நானும் மலேசியா வந்திட்டன். அதுக்குப் பிறகு என்ன நடந்தது எண்டு உனக்குத் தெரியாதுதானே..?!சொல்லுறன்" என்றவன் ஆவலுடன் அவனுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த விமலிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தெளிவாக விபரிக்கத் தொடங்கினான்.
 

அவன் சொல்லச் சொல்ல... நடந்த நிகழ்வுகள் அனைத்தும் விமலின் மனக்கண் முன்னால் காட்சிகளாக விரியத் தொடங்கின.    

 

2007 செப்டெம்பர் 08
அவன் மலேசியாவிற்கு வந்து மூன்று நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. கட்டிலில் சாய்ந்திருந்தவனின் விரல்கள்

அவனது செல்போனின் பட்டன்களை அழுத்திக்கொண்டிருந்தன. 'அஞ்சலி' என்ற அவனது செல்லத் தேவதையின்

20வது பிறந்தநாள் அன்றுதான். அவனது வாழ்த்துக்களுக்காகவே காத்துக்கொண்டிருப்பாள்.

 

தனது பிறந்தநாளிற்கு "முதன் முதலில் அவன்தான் வாழ்த்த வேண்டும்" என்பது அஞ்சலியின் எதிர்பார்ப்பு என்பதனைவிட... அது அவளது செல்ல உத்தரவாகவும் இருந்தது. அவன் வாழ்த்தும் வரைக்கும் எவருடைய அழைப்புக்களையும் அவள் எடுக்கமாட்டாள். அது யாராக இருந்தாலும் சரி.

 

அஞ்சலிக்கு அழைப்பை எடுத்து செல்போனை காதில் வைத்துக்கொண்டான். மறுமுனையில்... "ஹலோ செல்லம்...." என செல்லமாக இழுத்தபடியே அஞ்சலியின் இனிமையான குரல். குழந்தைத்தனமான அவளது குரலில் கொஞ்சம் குறும்புத்தனமும் கலந்திருக்கும். அதனை இவன் எப்பொழுதும் ரசிப்பான்.

 

"ஹலோ செல்லம்.... என்ன செய்யுறீங்கள்..?" என செல்லக்குரலில் தொடர்ந்தவளிடம், "Wish you a Happy Birthday and Many More Happy Returns of the Day" என வழக்கமான ஆங்கில வார்த்தைகளால் வாழ்த்துக்களைக் கூறினாலும் மனதார வாழ்த்திய அந்த வார்த்தைகளில் காதலும் பாசமும் நிரம்பியிருந்தது. வாழ்த்துக்களைக்கூறி அவன் முடித்த கையோடு,
அதுசரி செல்லம்! வாழ்த்தெல்லாம் இருக்கட்டும், பெண்டாட்டிக்கு பிறந்தநாள் பரிசெல்லாம் இல்லையா? எனக் குறும்பாகக் கேட்டாள் அஞ்சலி.

 

அவள் வேண்டுமென்றே குறும்பாகக் கேட்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தாலும்...

அவள் அப்படிக் கேட்டது அவனைக் கொஞ்சம் சங்கடப்பட வைத்தது.
அஞ்சலியும் அவனும் கொழும்பில் இருந்த காலத்தில் எப்பவுமே தவறாமல் பிறந்தநாள் பரிசு கொடுப்பான்.

ஆனால்.... முதற்தடவையாக அதுவும் கணவன்-மனைவி என்ற நிலையை அடைந்த பின்னரான முதல் பிறந்த நாளிற்கு பரிசு எதையும் இவன் அனுப்பி வைத்திருக்கவில்லை.

அனுப்பி வைக்கவேண்டும் என்ற நினைப்பு அவனுக்குள் இருந்திருந்தாலும், அதற்கு முந்தைய சில நாட்களாக ஏற்பட்ட குழப்பங்களும் அவனது பயணங்களும் அதனை மறக்கடித்திருந்தன.

தன்னைத் தானே நொந்துகொண்டான்.

 

ச்சீ.... Sorry ma பயணத்தில இருந்தபடியால் அனுப்ப முடியேல. இண்டைக்கே அனுப்பிவிடுறன். என்ன வேணும் செல்லத்துக்கு? என ஆயிரெத்தெட்டு Sorry கேட்டபடி கேட்டவனிடம்....,

 

"செல்லம்...! " என  செல்லமாகக் கோபித்தபடி "நான் சும்மா கேட்டனான் . எனக்கு பிறந்தநாள் பரிசா முக்கியம்? செல்லத்தின்ர அன்பே போதும்! நீங்கள் வாழ்த்தினதே எனக்கு சந்தோசந்தான்! ஆனால்...." என இழுத்தவளிடம்
"ஆனால்.... என்ன?" என ஆர்வமாகக் கேட்டான் அவன்.
 

"வாழ்த்துச் சொன்னால் மட்டும் போதாது! இன்னொரு விஷயம் கேப்பன் தருவியளோ? என வெட்கத்துடன் அவள் கேட்டபோதும், அவள்கேட்க வந்தது என்னவென்று அவனுக்கு சட்டென்று புரியவில்லை.

"என்னவேணும் அஞ்சலி ?" என அப்பாவித்தனமாக அவன் திரும்பக் கேட்கவும்,
அஞ்சலி வெட்கத்தில் குழைந்தபடியே.... "ஒண்டும் வேணாம். நான் சும்மா கேட்டனான்" என்றபோதுதான் அவனது 'ரியூப்லைற்' மண்டைக்கு அவள் எதைக் கேட்க வந்தாள் என விளங்கியது.
 

தன் கொடுப்புக்குள் சிரித்தபடியே.... "அதுக்கென்ன தந்தாப் போச்சு!" எனக் கூறியவன்...  அவள் பதிலுக்குக் காத்திராமல் சடுதியாக  தன் அன்பான முத்தங்களை கொடுக்க ஆரம்பித்தான். "காணும்! காணும்!" என அஞ்சலி சொல்லும் வரைக்கும் அந்த "உச் உச்" சத்தங்களில் நனைந்துபோனது அவனது செல்போன்.

 

இருக்கும் இடங்களால் பிரிந்திருந்தாலும் அந்த இரு காதல் உள்ளங்களும்  நன்கு நெருக்கமாயிருந்த 

அத்தகைய பொழுதுகள் மிக இனிமையானதாகவே அமைந்தன.

அஞ்சலியின் அடுத்த பிறந்தநாளிற்கு அவளுடன் கூடவே இருக்கவேண்டும் என மனதிற்குள் நினைத்துக்கொண்டான். அஞ்சலியின் விருப்பமும் எதிர்பார்ப்பும் நிச்சயமாக அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.

 

              - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

 

இலங்கை புலனாய்வுப் பிரிவினரின் நான்காம் மாடி உபசரிப்பின் பின்னர்....

சிங்கப்பூர் வந்து பின்னர் மலேசியாவிற்குள் நுழைந்த பொழுதில் அவனது மனதில் எந்தவொரு திட்டமும் இருந்திருக்கவில்லை. நாட்டைவிட்டு வெளியேறியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் தன்னிச்சையாக நடந்த சம்பவங்கள் அவை.
 

இப்போது... பாதுகாப்பாக  மலேசியா வந்தாயிற்று. 'இனிமேல் என்ன செய்வது?' என்ற எண்ணங்கள் தானாகவே

அவனது மனதிற்குள் எழ ஆரம்பித்தன. புதிய இடம், புதிய மொழி, புதிய மனிதர்கள் என  அவனுக்கு எல்லாமே புதிதாய் இருந்தன. அவன் தங்கியிருந்த இடம் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர். அதுவும்  இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதனால் மொழிப் பிரச்சினை என்பது பெரிதாக இல்லை. சில இடங்களில் ஆங்கிலத்தில் சமாளித்துக் கொண்டான்.
இன்னும் சில மாதங்களுக்கு மலேசியாவில் தங்கிவிட்டு அடுத்து அஞ்சலியிடம் போய்ச் சேரவேண்டிய வழியைப் பார்க்கவேண்டும் என  மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

 

இப்படியே சில நாட்கள் நகர்கையில்....
அவனது நண்பர் ஒருவர் மூலமாக அவனுக்கு வேலையொன்று தேடிவருகின்றது. வேலை எதுவும் செய்யும் எண்ணத்தில் அப்பொழுது அவன் இல்லாவிட்டாலும், அதிக நேரம் வீட்டுக்குள்ளேயே இருக்கும் சலிப்புத் தன்மையைப் போக்கவும் நண்பரின் அன்பான வற்புறுத்தலுக்கு இணங்கவும் மலேசியாவைவிட்டு வெளியாகும்வரைக்கும் அந்த வேலையைச் செய்வதற்கு ஒத்துக் கொள்கின்றான். அதற்கான விஸாவையும் ஒரு ஏஜென்ட்டின் உதவியுடன் பெற்றுக்கொண்டான். இப்படித்தான் ஆரம்பித்தது அவனுடைய மலேசிய வாழ்க்கை.
 

இந்த ஆரம்பம்  அவனது வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டுவரும் என அவன் அப்பொழுது நினைத்துக்கூட பார்க்கவில்லை. நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே....... !
 

(தொடரும்....)

 

***எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டுள்ளன ***


                 

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை இன்னும் கொஞ்சம் கூட எழுதியிருக்காலாமே. தொடருங்கள் விரைவில் எங்களை அதிக நாட்கள் காக்க வைக்காது.

இந்த ஆரம்பம்  அவனது வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டுவரும் என அவன் அப்பொழுது நினைத்துக்கூட பார்க்கவில்லை.

 

நம் மாற்றங்கள் என்பதனையும்.... மாறும் களங்கள்தான் தீர்மானிக்கின்றன!

 

என்ன............. உங்களிட்டை இருந்து லவட்டினதுதான் :lol: .  ஆறுதலாய் பொறுமையாய் எழுத்துப்பிழை விடாமல் காதலை விற்றுத் தீருங்கோ . உங்கள் சோகத்தில் வாழ்த்துச் சொல்ல விரும்பவில்லை :( :( .

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் கவி அண்ணா ஆவலுடன் படிக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கதை யுடன் காண்பதில் மகிழ்ச்சி. தை பிறந்தால் நல்ல வழி பிறக்குமாம்.

தொடருங்கள் கவிதை ..... பொறுத்திருந்து பார்ப்போம் .. கால தேவதை உங்களை எப்படியெல்லாம் சோதிக்கிறாள் என்று..
அதை அறிய மிக ஆவல் ....
  • தொடங்கியவர்

கருத்துத் தெரிவித்து தொடர்ந்து வாசித்துவரும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி.
நான் இப்போது இருக்கும் சூழ்நிலையில் இணையம் பாவிக்கக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு.

அதனால்தான் கொஞ்சம் சிரமமாக உள்ளது. இயன்றவரை அதிகம் எழுத முயற்சி செய்கின்றேன்.

 

'மாற்றங்கள் அனைத்தையும் மாற்றும்'.

நல்மாற்றங்கள் வரவேண்டும் என்பதே என் விருப்பமும். மிக்க நன்றி உறவுகளே! :)

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவிதை கதைக்க .

 

.  யாழில் .(கவி) .விதைக்க வேண்டும் . மனதில் பாரம் குறையும்.

  • கருத்துக்கள உறவுகள்

கதையை தொய்ய விடாமல் முடிந்தவரைக்கு தொடர்ந்து எழுதுக்கொண்டு போங்கள்...

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை,
இடையில்  தொடர்பற்றுப் போனதோடு இனி யாழ் பக்கம் வரமாட்டீங்களெண்டே நினைச்சேன். திரும்பியும் கதையை தொடர்கிறீர்கள். எழுதி முடியுங்கோ. நடந்தவையும் கடந்தவையும் தந்த படிப்பினைகளிலிருந்து புதிய வழிகள் பிறக்கும் உங்களுக்கும் அத்தகையதொரு வழி வர இறவைனை பிரார்த்திக்கிறேன்.

ஒரு பழைய பாடல் இது எக்காலத்துக்கும் பொருந்தும் பாடல் இது கேளுங்கோ:-

https://www.youtube.com/watch?v=mpKL2F52S5g
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை


ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது

ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை


எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்


 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கவிதை,

இடையில்  தொடர்பற்றுப் போனதோடு இனி யாழ் பக்கம் வரமாட்டீங்களெண்டே நினைச்சேன். திரும்பியும் கதையை தொடர்கிறீர்கள். எழுதி முடியுங்கோ. நடந்தவையும் கடந்தவையும் தந்த படிப்பினைகளிலிருந்து புதிய வழிகள் பிறக்கும் உங்களுக்கும் அத்தகையதொரு வழி வர இறவைனை பிரார்த்திக்கிறேன்.

ஒரு பழைய பாடல் இது எக்காலத்துக்கும் பொருந்தும் பாடல் இது கேளுங்கோ:-

https://www.youtube.com/watch?v=mpKL2F52S5g

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை

நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை

நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே

தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை

நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்

யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது

ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை

ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை

நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்

இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது

பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும்

மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்

 

பாடல் இணைப்புக்கு மிக்க நன்றி அக்கா. மீண்டும் யாழுக்குள் வர வாய்ப்புக் கிடைத்ததே தெய்வம் தந்த வரந்தான் என நினைக்கின்றேன். இல்லாவிட்டால் இவ்வளவு ஆபத்துக்களையும் தாண்டி மீண்டும் யாழுக்குள் வர வாய்ப்புக் கிடைத்திருக்காது.

 

இனிவரும் காலங்கள் நல்லபடி அமையும் என எண்ணுகின்றேன். புதிய இடம், புதிய சூழல் புதிய மாற்றங்களையும் எனக்குள் கொண்டுவரலாம்.

பார்க்கலாம்...... :) நன்றி அக்கா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.