Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் பிரபாகரன் என்ன செய்தார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படைகளுக்கு சம்பளம் கொடுக்கவில்லை.ஆனால் உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது.விடுதலை போராளிகளுக்கு என்ன சம்பளம்?சம்பளத்துக்கு வேலை செய்யும் சிங்கள படையை  தான் கூலிப்படை என அழைத்தோம்.

புலம் பெயர்ந்து மாபெரும் முப்பெரும் படை நடத்திய  புலித்தலைகளே ஆளுக்கு ஆள் ஒன்று சொல்லுகின்றீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்து மாபெரும் முப்பெரும் படை நடத்திய  புலித்தலைகளே ஆளுக்கு ஆள் ஒன்று சொல்லுகின்றீர்கள் ?

சாதாரண விடயத்தை அறிய ஏன் புலித் தலையை இதற்குள்  இழுக்கிறீர்கள்? 
 
இல்லை ஒருக்கால் சீண்டி பார்ப்பம் என்ற நோக்கமோ?
  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண விடயத்தை அறிய ஏன் புலித் தலையை இதற்குள்  இழுக்கிறீர்கள்? 
 
இல்லை ஒருக்கால் சீண்டி பார்ப்பம் என்ற நோக்கமோ?

இப்ப தான்... ஆளை கஸ்ரப் பட்டு ஜாமீனிலை.... வெளீலை... எடுத்திருக்கிறம்.

அர்ஜுனுக்கு... குளிர் விட்டுப் போச்சுது போலை.... கிடக்குது  நுணா..... :lol:  :icon_idea:  :D

Edited by தமிழ் சிறி

நுணாவிற்கு நான் எழுதியது விளங்கவில்லை போலிருக்கு அவ்வளவு விபரமான ஆள் .

நான் என்ன எழுதியிருக்கின்றேன் என்று திரும்ப வாசிக்கவும் .

விசுகு எழுதியதற்கும் அதற்கு நான் கேட்ட கேள்வியிலும் என்ன பிழை இருக்கு ,அதற்கு பின்னர் ஏன் பல மொக்கை பின்னூட்டங்கள் .

"செய்வன திருந்த செய்" என்று தமிழில் தெளிவாக சொல்லியிருகின்றார்கள் .

விசுகு எழுதியதைப் பார்த்தேன். அவர் தான் பிழையான விளக்கத்தைக் கொடுத்திருந்தார். அதற்கு ஏன் நுணாவும் அர்ஜுன் அண்ணாவும் சண்டை போடுகின்றீர்கள்??

நுணா நீங்களே உங்களதும் அர்ஜுன் அண்ணாவினதும்  கருத்துக்களை அகற்றி விடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

------

"செய்வன திருந்த செய்" என்று தமிழில் தெளிவாக சொல்லியிருகின்றார்கள் .

அர்ஜூன்..... விசுகின் பதிவு 22.

உங்களின் பதிவோ.... 27.  அதற்கிடையில்.... 5 பேர் கருத்து எழுதியுள்ளார்கள்.  நீங்கள், விசுகின் பதிவை.... மேற்கோள் காட்டி எழதாமல்.... மொட்டையாய் எழுதி  விட்டு....

மற்றவர்களில்... பிழை பிடிப்பதும் காணாதென்று,  பழமொழியுடன்... உபதேசமும் செய்வது,  நல்லாயிருக்கா...... :D

பதிவு  23 கண்ணுக்கு தெரியவில்லையோ ?

அரசியலும் அப்படி தமிழும் தெரியாது இப்ப கணக்கும் கண்ணை கட்டுது

விளங்கின மாதிரித்தான். இதற்குள் இந்து கல்லூரி என்று வேறு சொல்கின்றீர்கள் :icon_mrgreen: .

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு  23 கண்ணுக்கு தெரியவில்லையோ ?

அரசியலும் அப்படி தமிழும் தெரியாது இப்ப கணக்கும் கண்ணை கட்டுது

விளங்கின மாதிரித்தான். இதற்குள் இந்து கல்லூரி என்று வேறு சொல்கின்றீர்கள் :icon_mrgreen: .

உங்களை மாதிரி ஆட்கள் நடமாடும் இடங்களில் .............
தமிழே தெரியாது என்று சொன்னால். நேரம் என்றாலும் மிச்சம் 

தமிழர் எந்தக் காலத்தில் தனியரசாகவும் அதுசார்ந்த நிர்வாகத்துடனும் இருந்திருக்கின்றார்கள்? அல்லது அவை சார்நத பண்பு எங்கேனும் இருந்திருக்கின்றதா? நிர்வாகம் என்றுபார்த்தால் ஆகக் கூடியது கோயில் நிர்வாகம். அதற்குள் நான்பெரிது நீ பெரிதென்று குத்துப்படுவது. அலலது ஊர்ச்சங்கங்கள் அதற்குள் குத்துப்படுவது. தமிழ் தேசீயம் கலாச்சாரம் என்றபோர்வையில் ஆழுக்கொரு அமைப்பு அதற்குள் குத்துப்பாடுவது பின்பு இரண்டு மூன்றாக பெருக்குவது. நிர்வாகம் சார்ந்த பண்பு என்பது சாதிய பிரதேசவாத ஏற்றதாழ்வுகளால் கட்டியமைக்கப்பட்ட ஒரு ஜனநாயகத்துக்கு நேரெதிரான சமுதயாத்தில் எப்படி இருக்கும் என்பதற்கு முதலாவது உதாரணம் தமிழர்கள். இதற்குள் ஒரு நிழல் அரசநிர்வாகத்தை முயற்சித்த புலிகளின் செயற்படு விமர்சனத்தை கடந்து செல்லாது. இனத்தேசீய அடிப்படையில் தனியான நிர்வாக அலகை உருவாக்குவது  சாத்தியமில்லாத சமூகத்தில் அதை சாத்தியப்படுத்த முயற்சித்து அதில் பலன் ஏதும் இன்றிப்போனது.

இரண்டு உழவு மாடுகள் ஆழுக்கொரு பக்கம் இழுத்தால் உழவு சாத்தியமில்லை. ஆயிரமமாயிரம் நகம் புரட்டும்  மாடுகளை வைத்து  உழுது பயிர்செய்ய முயற்சித்தது ஒரு அதிசயம் தான். அப்படி முயற்சித்தால் கடசியில் கோவணமும் மிஞ்சாது என்பதையும் வரலாறு பதிவு செய்துள்ளது. ஆகவே, நிர்வாகம் கைக்கு வரமுன்னர் விக்கி சம்மந்தன்போல சிம்மாசனத்தில் அமர்ந்து கீரீடத்தையாவது அணிந்துவிடவேண்டும்.

கடவுள் இல்லை என்பது பெரியாரை விட கடவுளை வைத்து சமூகத்தை கூறுபோட்டு பிழைப்புநடத்தும் பார்பானுக்கே தெளிவாகத்தெரியும். அதுபோல் இந்த இனத்தைவைத்து ஆக்கபூர்வமாக ஒன்றும் புடுங்க முடியாது ஆகவே முடியோ பதவியோ பட்டமோ அடயாளமோ ஆதாயமோ எதையாவது அனுபவிக்கவேண்டும் என்பதை புலிகள் ஒரு காலத்திலும் உணரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிற்கு நான் எழுதியது விளங்கவில்லை போலிருக்கு அவ்வளவு விபரமான ஆள் .

நான் என்ன எழுதியிருக்கின்றேன் என்று திரும்ப வாசிக்கவும் .

விசுகு எழுதியதற்கும் அதற்கு நான் கேட்ட கேள்வியிலும் என்ன பிழை இருக்கு ,அதற்கு பின்னர் ஏன் பல மொக்கை பின்னூட்டங்கள் .

"செய்வன திருந்த செய்" என்று தமிழில் தெளிவாக சொல்லியிருகின்றார்கள் .

என்ன விளங்கவில்லை?  உங்களின் விசுகு அண்ணாவின் பதில் கருத்துக்கு நான் #27 இல் விடை கொடுத்துள்ளேன். பிறகென்ன புலிகளின் தலைகளுக்கே என நக்கல்? செய்வன திருந்தச்செய் என பழ மொழி வேறு? நான்  எழுதிய பதில் விளங்கியதா?
நான் எழுதிய பதில் உங்களுக்கு மொக்கையாக தெரிகிறதா?
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேண்டுமென்றே ஒன்றை  மறைத்துவிட்டீர்கள்.

அவர்களுக்கு

முப்படையும் இருந்தது

அலுவலகங்கள்

வங்கிகள்

ஏன் காவல்துறையும் இருந்தது

அதற்கு அவர்கள்  சம்பளம்   கொடுத்தார்கள்

இது அவர்களது வருமானத்திலிருந்து கொடுக்கப்பட்டது தானே.

இன்னொன்று 

சிறீலங்கா அரசு  தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்காகவே கொடுப்பனவுகளைச்செய்தது.

அதையும் நிறுத்தத்தான்  விருப்பம்

ஆனால் நாடு தனது இல்லை என்றாகிவிடும்.... :(

சரி  இப்படி வாசியுங்கோ.

அவர்களுக்கு

முப்படையும் இருந்தது.

அவர்களுக்கு முப்படையும் இருந்தது

அவற்றில்

குடும்பமாக இருந்த தளபதிகள்

போராளிகள்  மற்றும்  குழந்தையுடையவர்களுக்கும்

காயமடைந்த மற்றும்  வலுவிழந்த போராளிகளுக்கும் 

கொடுப்பனவுகள் இருந்தன.

மற்றும் முப்படைக்குமான அத்தியாவசிய செலவுகள் இருந்தன

காற்றைச்சுவாசித்துத்தான்  சண்டைபோட்டார்கள் என்றும் எழுதுவீர்கள் போலுள்ளது.

.

அலுவலகங்கள்

வங்கிகள்

ஏன் காவல்துறையும் இருந்தது

அதற்கு அவர்கள்  சம்பளம்   கொடுத்தார்கள்

இது அவர்களது வருமானத்திலிருந்து கொடுக்கப்பட்டது தானே.

(இதில்  முப்படைக்கும்  சம்பளம் கொடுக்கப்பட்டது என்று எழுதவில்லை.  முப்படையும் இருந்தது என்று அந்த வசனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காதது குறையாக இருக்கலாம்.

மேலும் சம்பளம் என்ற சொல் தப்பாக இருந்தால் கொடுப்பனவுகள்  என்று மாற்றிக்கொள்ளுங்கள்)

  • கருத்துக்கள உறவுகள்

போரினால் ஒருபோதும் பாதிக்கப்பட்டாத என்னை போன்ரோர் கூட தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரினை உச்சரிக்கும்போது ஒரு சந்தோசம் கிடைக்கிற‌து!

போரினால் ஒருபோதும் பாதிக்கப்பட்டாத என்னை போன்ரோர் கூட தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரினை உச்சரிக்கும்போது ஒரு சந்தோசம் கிடைக்கிற‌து!

வாருங்கள் நண்பா அரிச்சுவடியில்  பார்த்தேன் .....................இங்கே வரவேற்கிறேன் ...........சரியான அடிப்படை அறிவுடன்  சுய புத்தியுடன் சிந்திக்கும் உங்களை போன்றவர்களை இந்த கள உறவு என்ற வகையில் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் எந்தக் காலத்தில் தனியரசாகவும் அதுசார்ந்த நிர்வாகத்துடனும் இருந்திருக்கின்றார்கள்? அல்லது அவை சார்நத பண்பு எங்கேனும் இருந்திருக்கின்றதா? நிர்வாகம் என்றுபார்த்தால் ஆகக் கூடியது கோயில் நிர்வாகம். அதற்குள் நான்பெரிது நீ பெரிதென்று குத்துப்படுவது. அலலது ஊர்ச்சங்கங்கள் அதற்குள் குத்துப்படுவது. தமிழ் தேசீயம் கலாச்சாரம் என்றபோர்வையில் ஆழுக்கொரு அமைப்பு அதற்குள் குத்துப்பாடுவது பின்பு இரண்டு மூன்றாக பெருக்குவது. நிர்வாகம் சார்ந்த பண்பு என்பது சாதிய பிரதேசவாத ஏற்றதாழ்வுகளால் கட்டியமைக்கப்பட்ட ஒரு ஜனநாயகத்துக்கு நேரெதிரான சமுதயாத்தில் எப்படி இருக்கும் என்பதற்கு முதலாவது உதாரணம் தமிழர்கள். இதற்குள் ஒரு நிழல் அரசநிர்வாகத்தை முயற்சித்த புலிகளின் செயற்படு விமர்சனத்தை கடந்து செல்லாது. இனத்தேசீய அடிப்படையில் தனியான நிர்வாக அலகை உருவாக்குவது  சாத்தியமில்லாத சமூகத்தில் அதை சாத்தியப்படுத்த முயற்சித்து அதில் பலன் ஏதும் இன்றிப்போனது.

இரண்டு உழவு மாடுகள் ஆழுக்கொரு பக்கம் இழுத்தால் உழவு சாத்தியமில்லை. ஆயிரமமாயிரம் நகம் புரட்டும்  மாடுகளை வைத்து  உழுது பயிர்செய்ய முயற்சித்தது ஒரு அதிசயம் தான். அப்படி முயற்சித்தால் கடசியில் கோவணமும் மிஞ்சாது என்பதையும் வரலாறு பதிவு செய்துள்ளது. ஆகவே, நிர்வாகம் கைக்கு வரமுன்னர் விக்கி சம்மந்தன்போல சிம்மாசனத்தில் அமர்ந்து கீரீடத்தையாவது அணிந்துவிடவேண்டும்.

கடவுள் இல்லை என்பது பெரியாரை விட கடவுளை வைத்து சமூகத்தை கூறுபோட்டு பிழைப்புநடத்தும் பார்பானுக்கே தெளிவாகத்தெரியும். அதுபோல் இந்த இனத்தைவைத்து ஆக்கபூர்வமாக ஒன்றும் புடுங்க முடியாது ஆகவே முடியோ பதவியோ பட்டமோ அடயாளமோ ஆதாயமோ எதையாவது அனுபவிக்கவேண்டும் என்பதை புலிகள் ஒரு காலத்திலும் உணரவில்லை.

இப்படி ஒரு பெருத்த வெறுப்புணர்வு ஒன்று எனக்கு 1990ஆண்டளவில் இருந்தது.
தமிழனுக்கு விடுதலை கிடைக்கும் என்று நான் 1 வீத நம்பிக்கை கூட வைக்க முடியாமல் இருந்தது. 
கோவில் கட்டுவோர் பக்திமான்களின் அடாவடி தனங்களை பார்த்தே கடவுள் இல்லை என்ற முழுதான முடிவுக்கு வந்தேன்.
 
முள்ளிவாய்க்கால்  முடிவு சோகமானது என்றாலும். எனக்கு ஒரு சின்ன சந்தோசம் அதில் உண்டு. புலிகள் இருந்தால் நற்பண்பு உடையவர்களும் தேச நலன் உள்ளவர்களும் இறந்து கொண்டு இருப்பார்கள்.
பித்தலாட்ட கார்கள் மட்டும் பிழைத்து  கொண்டிருப்பார்கள்.
இனி நல்லவர்களும் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது.
 
ஒரு குறிப்பிட்ட தொகை புலிகளே 1990 ஆண்டளவில் இருந்தார்கள் அவர்களால் முழு இராணுவ முகாம்களையும் பாதுகாக்க முடியாது இருந்தது. முஸ்லிம்களின் உதவியோடு கெலிகொப்டொர்  மூலம் பாரிய தரை இறக்கம் ஒன்றை செய்ய இராணுவம் தயாராகி கொண்டிருந்தது. வன்னியில் இருந்துவந்த புலிகளே கோட்டையை காவல் செய்யும்  அளவில் அவர்களிடம் ஆள் தட்டுபாடு  இருந்தது. 
அப்போது ஊர் மக்கள் தமது வெளியான பிரதேசங்களில் 10பேர் கூடி ஒரு காவலை செய்யும் முறையை  அறிமுக படுத்தினார்கள். ஒரு குண்டை  என்றாலும் வெடிக்க வைத்தால்  ஊர் மக்கள் விளித்து இராணுவத்திடம் மாட்டாது தப்பி ஓடினால். அவர்களது தாக்குதல் படையணி  இராணுவத்துடன் சண்டை செய்ய  எதுவாக இருக்கும் என்பதே அதன் நோக்கு. 
எமது ஊரை நாம் பாதுகாப்பது.
எதோ எதோ மாவட்டங்களில் பிறந்தவர்கள் வந்து சொன்னார்கள் . நீங்கள் தப்பி ஓடுங்கள்...........
பின்பு எமது உயிரை  பணயம் வைத்து இராணுவத்துடன் போராடி உங்கள் ஊரை மீட்கிறோம் (அப்படி  அவர்கள் சொல்லவில்லை சாராம்சம் அதுதான்).
சும்மா வீட்டில் படுக்கும் நாங்கள் கூடி ஓரிடத்தில் படுப்பது இதை தவிர நாம் வேறு ஏதும் செய்வதில்லை.
அதில் ஏதும் நன்மை வந்து விடும் என்று பயந்தார்களோ என்னமோ ...................
ஊர் முழுதும் புலிகள் வெறுப்பை சம்பாதிக்க மட்டுமே நேர்ந்தது.
அப்போதே நினைத்தேன். தமிழன் விடுதலை  பெற ஒரு வீதம் கூட தகுதி அற்றவன் என்று.
  • கருத்துக்கள உறவுகள்

அவர் செய்த மாபெரும் தவறு தனக்காக வாழாதது. அதனால் வன்னியில் மக்களோடு மக்களாக எதுமே செய்யாமல் இருந்தார்.

 நிர்வாகம் கைக்கு வரமுன்னர் விக்கி சம்மந்தன்போல சிம்மாசனத்தில் அமர்ந்து கீரீடத்தையாவது அணிந்துவிடவேண்டும்.

அவர்களை மக்கள் தானே தெரிவு செய்தனர். அவர்களது கீரிடத்தைப் பற்றிக்  கவலைப் படவேண்டியது நீங்களோ நானோ அல்ல அவர்களைத் தெரிவு செய்த மக்களே. அந்த மக்களே திருப்தியாக இருக்கையில் ........

நடு நிலமையாக நின்று கதையுங்கள்.  நாம் இங்கிருந்து என்னத்தையும் சொல்லலாம். அங்கிருப்பவர்கள் ............................ இங்கு நின்று இதை எழுதுவதிலும் பார்க்க தாயகம் போய் ஏதாவது ஒரு உதவியைச் செய்யலாம் நீங்கள், நானும் தான்.

Edited by அலைமகள்

மக்கள் வாக்களித்தால் எதையும் செய்வதற்கான அனுமதியாக அர்த்தமாகாது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130866#entry948486

அந்த மக்கள் திருப்தியாக இருக்கின்றார்கள் என்று எந்த அடிப்படையில் சொல்கின்றீர்கள் ?

வாழ்வின் அடிப்படை தேவைகளுக்கு அல்லல்படும் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் வாக்களித்து அதில் வெற்றிபெற்றவர்கள்  கிரீடமும் பட்டும் பீதாம்பரமும் என ஆடம்பரம் செய்வதும் சுய தம்பட்டமடிப்பதும் குறித்து கதைப்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை .

மூன்று தசாப்த போராட்டகாலத்தில் சிங்களம் தமிழர் மீது கட்டவிழ்த்த அத்தனை அழிவு காலங்களிலும் சிங்கள அரச இயந்திரத்தில் பாதுகாப்பாக இருந்த ஒருவர் திடீர் என்று தமிழர்களின் அவல வாழ்வுக்கு விமோசனம் தரவல்லவராக உருவாகியிருப்பதும் அவரது செயற்பாடும் விமர்சனத்துக்கும் கேள்விக்கும் அப்பாற்பட்டதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.