Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜிலிங்கம் எம்.பி தன்னிச்சையாக தேர்தல் கட்டுப்பணம் செலுத்தினார்

Featured Replies

கூட்டமைப்பு எம்.பி சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். ரெலோ கட்சியின் எம்பியான இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். ஜனாதிபதி தேர்தலில் தனியாக போட்டியிடுமாறு மஹிந்தவினால் பல கூட்டமைப்பு எம்பிக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

டெலோ கட்சியின் உறுப்பினர்களான செல்வம் அடைக்கல நாதன், சிவாஜி லிங்கம் ஆகியோருக்கும் இந்த ஆலோசனை வழங்கப்பட்டது. இதே நேரம் இந்தியாவும்கூட்டமைப்பினரை தனியாக கேட்டால் நல்லது என ஆலோசனை தெரிவித்ததாக கூறப்பட்டது.

எனினும் தனி வேட்பாளரை நிறுத்துவதில் மஹிந்த முனைப்பாக இருப்பது பெரும் சூழ்ச்சி திட்டங்களின் அடிப்படையிலேயே என பலர் கூறினர்.

அதாவது தனித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய அரசமைப்பினை முற்று முழுதாக ஏற்றுகொள்வது என நிரூபித்தல்.

தனி நபராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் ஊடாக தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் பங்குபற்றினார்கள் என்ற தோற்றப்பாட்டினை உலகத்திற்கு காட்டுவது.

எப்படித்தான் தனியாக போட்டியிட்டாலும் மொத்த தமிழர் வாக்குகளில் ஆக கூடியது 25 வீதத்தினையே தமிழ் வேட்ப்பாளர் இப்போ பெற முடியாத நிலை. ஆகவே இதன் மூலம் கொள்கை ரீதியாக தமிழர்களை தோற்கடித்து உலகத்திற்கு காட்டுவது.

தமிழ் வேட்பாளர்களை கேட்கவைத்து அவர்களிற்கு இடையே பிரிவினைகளை அதிகரிப்பது. என பல திட்டங்களுடன் தான் மஹிந்த கூட்டமைப்பினரின் சிலரை அழைத்து தமக்கு வாக்களிக்குமாறும் இல்லாவிடில் தனியான ஒரு வேட்பாளரை நியமிக்குமாறும் கேட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் அம்பாறையில் ஒரு முஸ்லிம் எம்பி இனை தனி வேட்பாளராக இறக்கி மஹிந்த தன் முயற்சியில் வெற்றியடைந்துள்ளார். தமிழர் தரப்பிலும் மஹிந்த வெற்றியடைந்துள்ளாரா?

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கம் தனித்துக் கேட்பது பிழை என்பது போன்ற தோற்றப் பாடு செய்தியை எழுதியவரால் கெடுக்கப்பட்டுள்ளது.சரியா பிழையா என முடிவு எடுக்க வேண்டியது. தமிழ்மக்களே.கூட்டமைப்பு முடிவு எடுக்க முடியாமல் தடுமாறியதன் விளைவே இது.சிவாஜிலிங்கம் ஏற்கெனவே இதுபற்றி அறிவித்துள்ளார்.மக்களின் முடிவுக்கு விட்டு மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் கள்ள வாக்குப் பதிவுக்கு வழி திறப்பதன் முலம் இந்த மக்களும் இந்த அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்றும் பிரச்சாரப் படுத்தலாம்.சிவாஜிலிங்கம் தன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக தமிழரின் தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமைக்கான மீள் வாக்குப் பதிவு என்று தெளிவாக குறிப்பிட வேண்டும்.

சிவாஜிலிங்கம் MP ஆனதும் கூட்டமைப்பு கடர்ந்த தேர்தலில் போட்டியிட்டு 22 இடங்களை வென்றதும் அரசமைப்புக்கு எதிராகவா?

இந்த செய்தியை எழுதியது யார் முலத்தை ஏன் இணைக்க வில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

.

கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுத்து ,

ஜனாதிபதி தேர்தலில் சரத்தை வெற்றி பெறச்செய்து .....

சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களுக்கும் ,

இருபது வருடங்களுக்கு மேலாக சொந்த இடங்களில் குடியேற முடியாமல் இருக்கும் மக்களை ,

அரசியல் காய்நகர்வின் மூலம் அவர்களுக்கு நிம்மதியான வாழ்வை கொடுக்க முன்வரவேண்டும்.

மகிந்த வெற்றி பெற்றால் எமது அவல வாழ்க்கை தொடர்கதையாக இருக்கும்.

இந்த கருத்தை எழுதியதால் .... பலர் என் மீது பாய்ந்து பிறாண்டக் கூடும்.

ஆனால்.... இதனை விட வேறு தெரிவு இப்போதைக்கு இல்லை.

தமிழர்களின் வாக்கு சரத்துக்கு போக கூடாது என்பதற்காக மகிந்தாவின் கோரிக்கையை ஏற்று தான் இந்த கட்டுப்பணம் கட்டியதாக கொழும்பில் கதைக்கிறார்கள். ஒரு பொது மன்னிப்பை பெற்று மகிந்தாவை மீழ ஆட்சியல் அமைக்க தமிழர் கூட்டணியின் சதி இது! மீண்டும் மகிந்தா! வாழ்க தமிழ் அரசியல்!

சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக போட்டியிட ...... பின்னணியில் இந்தியா ஊக்கம் கொடுத்திருக்கும்.

நமக்கு எப்பவும் அவலத்தை தருவதற்குத்தானே ..... இந்தியா கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது.

மற்றும் சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக போட்டியிட்டால் 3,000 வாக்குகள் பெற்றாலே அதிகம்.

... வரவர ரோதனை தாங்கமுடியல....

... நாய்க்கு எங்கை அடிபட்டாலும், ஏதோ ஒரு காலைத்தானாம் தூக்கி ஓடும்!!! ... அப்படித்தான் இன்று எம் அரசியலும்!!! .... என்ன செய்தாலும் ...இந்தியா!!!!

1) சிவாஜிலிங்கம் கேட்கிறதால் இந்தியாவிற்கு என்ன இலாபம்?

20 இந்தியா மகிந்தவை ஆதரிக்கிறது என்கிறார்கள், அப்படியாயின் தமிழர்களின் வாக்கை மகிந்தவிற்கு போடாமல் செய்ய இந்தியா முற்படுகிறதா??(இலங்கையில் செயற்படும் தமிழ் ஒட்டோ,ஒட்டில்லாததோ கட்சிகளில் பெரும்பான்மையானவை மகிந்தவிற்கு ஆலவட்டம் ஏற்கனவே பிடிக்கத் தொடங்கி விட்டது!!!)

யாருக்குத்தெரியும் நாளை.... பரிஸ் ஈநாடு ... சிவாஜிலிங்கத்துக்கு பட்டம்(புலத்தின் இன்று எம்மத்தியில் மலிந்ததை) அளித்து கவுரவிக்கக்கூடும்!!

Edited by Nellaiyan

... வரவர ரோதனை தாங்கமுடியல....

... நாய்க்கு எங்கை அடிபட்டாலும், ஏதோ ஒரு காலைத்தானாம் தூக்கி ஓடும்!!! ... அப்படித்தான் இன்று எம் அரசியலும்!!! .... என்ன செய்தாலும் ...இந்தியா!!!!

1) சிவாஜிலிங்கம் கேட்கிறதால் இந்தியாவிற்கு என்ன இலாபம்?

20 இந்தியா மகிந்தவை ஆதரிக்கிறது என்கிறார்கள், அப்படியாயின் தமிழர்களின் வாக்கை மகிந்தவிற்கு போடாமல் செய்ய இந்தியா முற்படுகிறதா??(இலங்கையில் செயற்படும் தமிழ் ஒட்டோ,ஒட்டில்லாததோ கட்சிகளில் பெரும்பான்மையானவை மகிந்தவிற்கு ஆலவட்டம் ஏற்கனவே பிடிக்கத் தொடங்கி விட்டது!!!)

என்னதான் எனக்கு உங்களை பிடிக்காவிட்டாலும்

உங்களின் இன்றைய கருத்து நல்லா இருக்கு.

இது பதிவு இணைத்தளத்தில் இருந்து பெற்றது: http://www.pathivu.com/news/4616/54/.aspx

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு இரு பிரதான வேட்பாளர்களுக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை: எஸ்.ஜெயானந்தமூர்த்தி

எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரு பிரதான வேட்பாளர்களுக்கும் நிட்சயம் ஆதரவு வழங்கப்போவதில்லை. தமிழ் மக்களின் உணர்வை மதித்தே இறுதி முடிவெடுக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஐனாதிபதி தேர்தல் தொடர்பாக அவரிடம் சர்வதேச ஊடகமொன்று கருத்துக் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

”தமிழ் மக்களைக் கொன்று குவித்தும், அகதிகளாக்கியும் தேசிய விடுதலைப்போராட்டத்தை சதியின் மூலம் பின்னடைவை ஏற்படுத்தியவர்களான ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய இருவரும் தற்போது தேர்தலில் எதிரும் புதிருமாகக் குதித்துள்ளனர். அவர்கள் தமிழ் மக்களின் அழிவையும் போர் வெற்றியையும் தட்டில் ஏந்திக் கொண்டே சிங்கள மக்களிடம் வாக்குக் கேட்கின்றனர். தமிழர்களின் குருதி காயமுன்னர் தமிழ் மக்களிடம் எல்லாவற்றையும் மறந்து ஆதரவு கேட்கின்றனர். இவர்களுக்கு எவ்வாறு தமிழ் மக்கள் வாக்களிக்க முடியும்.

பெரும்பான்மையான தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்களிக்க முடியாது என்ற கருத்திலேயே உள்ளனர். எனவே தமிழ் மக்களின் விருப்புக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கப்போவதில்லை என ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துளளார்.

மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து ஒன்றாகவே செயற்படும். ஆனால் ஐனாதிபதி தேர்தல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் பல்வேறுபட்ட கருத்துவேறுபாடுகள் உண்டு. அவையாவும் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும். கட்சியில் உள்ள குறிப்பிட்ட ஒருசிலர் தாம் எடுக்கும் முடிவுகளை அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் திணிக்கவோ மக்களை விருப்புக்கு மாறாக வழிநடத்தவோ முடியாது. அவ்வாறு செயற்பட யாராவது முற்பட்டால் அவர்களை வரலாறு மன்னிக்காது. இவ்வாறுதான் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை இவர்கள் எழுதிவிட்டு ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது திணிக்க முற்பட்டனர். ஆனால் அதில் ஏற்பட்ட கருத்துமுரண்பாடுகள் காரணமாக தற்போது அது பிசுபிசுத்துப்போயுள்ளது.

சுயநல அரசியலுக்காக எமது உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது, இந்த ஐனாதிபதியின் ஆட்சிக் காலத்தின்போது எமது மக்கள் பட்ட துன்ப துயரங்களை எவரும் மறந்துவிட முடியாது. இதை மறந்துவிட்ட நிலையில் கூட ஒரு சிலர் நடந்து கொள்வது வேதனை தருகின்றது. இவர்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலை நோக்காகக் கொண்டு செயற்பட்டாலும் மக்களின் வலியைப் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறானவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இந்தியாவின் நலனுக்காக நாம் அரசியல் செய்ய முடியாது. இந்தியாவின் சதிமுயற்சியினாலேயே நாம் இன்று இந்நிலைக்கு வந்துள்ளோம். இந்த ஐனாதிபதி தேர்தலிலும் இந்தியா தனது நலனைக் கருத்தில் கொண்டு யாருக்கு ஆதரவு வழங்க வேண்டுமென கூட்டமைப்புக்கு உத்தரவிடலாம். ஆனால் நாம் அதற்கு இணைந்துபோக முடியாது. எனினும் இந்தியாவின் சொல்லைத் தட்ட முடியாது எனத் தெரிவித்து அல்லது இராஐதந்திர காய் நகர்த்தல் எனக் கூறி எமது கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒரு சிலர் இந்தியாவின் உத்தரவுக்கு இணைந்துபோக முற்படலாம். ஆனால் அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமானால் அது பாதகமான நிலையையே ஏற்படுத்தும்.

ஐனாதிபதி வேட்பாளர்களுடன் நான்கு அம்சக் கோரிக்கை ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து ஆதரவு வழங்கலாம் எனக் கூறுவதெற்கெல்லாம் பின்னணிக் காரணங்கள் உண்டு. இவ்வாறான உறுதி மொழிகளுக்கு கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை மக்கள் மறந்துவிடவில்லை. தேர்தலின் பின்னர் எல்ல உறுதிமொழிகளும் காற்றில் பறந்துவிடும். எனவே இப்போதும் இவ்வாறான பசப்பு வார்த்தைகளைக் கூறி மக்களை ஏமாற்ற முடியாது “ என்றார் ஜெயானந்தமூர்த்தி

மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் “கனகரெத்தினம் எம்.பி தற்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனினும் அவரின் விடுதலையில் கூட்டமைப்பு உரிய நடவடிக்கையோ முறையான அழுத்தமோ கொடுக்கவில்லை என்றே கூறவேண்டும். அவரை கட்சி ரீதியில் உரியவர்கள் சென்று பார்வையிட முயற்சிக்கவில்லை. என்றும் அவர் தெரிவித்தார்.

இப்பிடி ஜெனாமூர்த்தி சொல்லும்போது

சிவாஜிலிங்கம் இதேபோல் நினைத்து தனித்து போட்டியிடுவதில் என்ன தவறு?

கூட்டமைப்பு தமக்குள்ளான கருத்து முரண்பாட்டை முதலில் தீரகக்கவேண்டும்.

தமிழ் மக்கள் சார்பாகவே முடிவுகளை எடுக்க வேண்டும். குறைந்த பட்சம் தாம சார்ந்த மக்களிடம் வெளிப்படையாக என்றாலும் இருக்கவேண்டும்.

தமக்குள் உள்ள முரண்பாட்டை காரணம் காட்டி முடிவை தள்ளிப்போட முடியாது... இது மேலும் பிளவுகளை உருவாக்கும்.

இது இவர்கள் சம்பந்தப்பட்டதில்லை ஒரு சமூமகம் சப்பந்தப்பட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்....இன்னுமெரு கருவேப்பிலை, லெக்சன் முடிய தூக்கி எறியலாம். :unsure:

வேட்பாளரை நிறுத்துவதற்கு இன்னும் ஒருநாளே உள்ளதால் தமிழ்தேசிய கூட்டமைப்பால் முடிவு எடுக்க முடியாத நிலையில் சிவஜிலிங்கம் கட்டுபணம் கட்டி நிலை நிறுத்தி கொண்டது சரியான வழி.

தமிழ்தேசிய கூட்டமைப்பு இரு சிங்கள வேட்பாளருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்தால் சிலவேளை சிவாஜிலிங்கம் தேர்தலில் விலகி கொள்ளலாம்.

அல்லது தமிழ்தேசிய கூட்டமைப்பு சிவாஜிலிங்கத்தை வேட்பாளராக ஏற்று தேர்தல் பணி செய்யலாம்.

சிங்களவனுக்கு சேவகம் செய்வதை விட இது மேல் என்றுதான் நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

... வரவர ரோதனை தாங்கமுடியல....

... நாய்க்கு எங்கை அடிபட்டாலும், ஏதோ ஒரு காலைத்தானாம் தூக்கி ஓடும்!!! ... அப்படித்தான் இன்று எம் அரசியலும்!!! .... என்ன செய்தாலும் ...இந்தியா!!!!

1) சிவாஜிலிங்கம் கேட்கிறதால் இந்தியாவிற்கு என்ன இலாபம்?

20 இந்தியா மகிந்தவை ஆதரிக்கிறது என்கிறார்கள், அப்படியாயின் தமிழர்களின் வாக்கை மகிந்தவிற்கு போடாமல் செய்ய இந்தியா முற்படுகிறதா??(இலங்கையில் செயற்படும் தமிழ் ஒட்டோ,ஒட்டில்லாததோ கட்சிகளில் பெரும்பான்மையானவை மகிந்தவிற்கு ஆலவட்டம் ஏற்கனவே பிடிக்கத் தொடங்கி விட்டது!!!)

------

உங்களைப் போலை ஆட்கள் ..... அணில் ஏற விட்ட நாயைப் போல விளக்கம் குறைவாய் இருக்கிறதாலை தான் ......

மற்றவன் இன்னும் ஏமாத்திக் கொண்டிருக்கிறான்.

1) சிவாஜிலிங்கம் கேட்பதால் சரத்துக்கு கிடைக்கும் வாக்கை பிரித்து மகிந்தவை வெற்றி பெறச் செய்யலாம்.

2) சரத் வெற்றி பெற்றால் ....... நடந்து முடிந்த தமிழின அழிப்பின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவரான இந்தியாவின் பங்களிப்பு வெளிச்சத்துக்கு வரும் என்ற அச்சத்தில் தான் இந்தியா சிவாஜிலிங்கத்தை களத்தில் இறக்கியுள்ளது. ( மகிந்தவுக்கு ஆலவட்டம் பிடிக்கிறதெல்லாம் ..... ஏற்கெனவே ஆலவட்டம் பிடிச்ச உங்கடை கோஷ்டி ...... கருணா , பிள்ளையான் ,டக்கிளஸ் ,சங்கரி போன்றோர் தான்.)புதுக்க ஒருவரும் வந்து ஆலவட்டம் பிடிக்கவில்லை .

Edited by தமிழ் சிறி

.

கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுத்து ,

ஜனாதிபதி தேர்தலில் சரத்தை வெற்றி பெறச்செய்து .....

சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களுக்கும் ,

இருபது வருடங்களுக்கு மேலாக சொந்த இடங்களில் குடியேற முடியாமல் இருக்கும் மக்களை ,

அரசியல் காய்நகர்வின் மூலம் அவர்களுக்கு நிம்மதியான வாழ்வை கொடுக்க முன்வரவேண்டும்.மகிந்த வெற்றி பெற்றால் எமது அவல வாழ்க்கை தொடர்கதையாக இருக்கும்.

இந்த கருத்தை எழுதியதால் .... பலர் என் மீது பாய்ந்து பிறாண்டக் கூடும்.

ஆனால்.... இதனை விட வேறு தெரிவு இப்போதைக்கு இல்லை.

தமிழ் மக்களைக் காக்க வந்த சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்காது நடுநிலைமை வகிக்கும் கூட்டமைப்பினர் அனைவரும் துரோகிகள். சரத்தை எதிர்த்துப் போட்டியிடும் சிவாஜிலிங்கம் மிகப்பெரும் துரோகி.

2) சரத் வெற்றி பெற்றால் ....... நடந்து முடிந்த தமிழின அழிப்பின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவரான இந்தியாவின் பங்களிப்பு வெளிச்சத்துக்கு வரும் என்ற அச்சத்தில் தான் இந்தியா சிவாஜிலிங்கத்தை களத்தில் இறக்கியுள்ளது.

என்னவொரு கண்டுபிடிப்பு!!!!!!!

இப்படியான கண்டுபிடிப்புக்களிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டால் இந்தக் கண்டுபிடிப்பிற்காக மட்டும் உங்களிற்கு நான்று ஐந்து ஆண்டுகளிற்கு உங்களிற்கு நோபல் பரிசு கிடைச்சுக் கொண்டேயிருக்கும்.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவோ அல்லது சரத்தோ சிங்கள இனவாதிகள்.இருவரும் தமிழர் கொலையில் பங்களித்தவர்கள். யாராவது ஒருவர் தமது தேர்த்தல் விஞ்ஞாபனத்தில் சிறையில் வாடும் தமிழ் இளைஞர்கள்,இடம் பெயர்ந்த அகதிகள் அல்லது தமிழர் பிரதேசத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்றல் போன்ற தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அன்றாட பிரச்சனை பற்றி ஒரு வரி கூட பேசவில்லை.மாறாக வெளிநாட்டில் உள்ள புலிகளின் வலை பின்னலை அழிப்போம் என சிங்கள மக்கள் முன் மார்தட்டுகிறார்கள்.இவர்களுக்கு ஏன் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

ஒரு வேளை தமிழர்களது வாக்கால் தான் தான் வெற்றி பெற்றதாக உலக நாடுகளுக்கு பறைசாற்றி தனது இனவளிப்பு விசாரணைகளுக்கு முற்று புள்ளி வைத்து விடுவார்.ரனில் பற்ற சொல்லவே தேவையில்லை. தான் வாழ்நாழில் வெல்ல முடியாத தேர்த்தலை சரத்தை வைத்து வெல்ல பகீரதபிரயதனம் எடுக்கிறார்.

கூட்டணியினர் தம்மில் உள்ள முட்டுப்பாடு காரணமாக தேர்த்தலில் யாரையும் நிறுத்த முடியவில்லை.சிவாஜிலிங்கம் தான் கேட்பதாக சொன்னாலாவது யாராவது கூட்டணியில் கேட்பார்கள் என நினைத்தார்.கடைசியில் தானே நிற்பதாக முடிவு எடுத்துள்ளார் என நினைக்கிறேன்.இன்னும் ஓரிரு நாளே வேட்பாளரை நிறுத்த இருக்கும் நிலையில் சம்மந்தர் ஐயாவுக்கு அப்படி என்ன அவசரமான பேச்சு வெளிநாட்டில் என விளங்கவில்லை.

தமிழ் பேசும் மக்கள் தமது தெரிவுகளை சிவாஜிலிங்கத்துக்கும் ,விக்ரமபாகு கருணாரட்ணாவுக்கும் பகிர்வதால் உலகுக்கும் , சிங்கள இனவாத அரசுக்கும் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை காட்டியதாக ஒரு செய்தியை சொல்லமாம்.எமது வாக்கால் தான் தமது வெற்றி நிர்ணயம் செய்யப்படும் என தெரிந்தும் எம்மோடு எந்த விதமான தொடர்பாடல்களையோ அல்லது தம்மால் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு கடைசி ஒரு மன்னிப்பாவது கேட்டார்களா? ஆக எமது வாக்கு மட்டும் அவர்களுக்கு தேவை. இவர்கள் எமக்கு ஏதாவது மனிதாபிமானமாக ஏதாவது செய்வார்கள் என நான் நம்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலமைக்கு கூட்டமைப்பே காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னவொரு கண்டுபிடிப்பு!!!!!!!

இப்படியான கண்டுபிடிப்புக்களிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டால் இந்தக் கண்டுபிடிப்பிற்காக மட்டும் உங்களிற்கு நான்று ஐந்து ஆண்டுகளிற்கு உங்களிற்கு நோபல் பரிசு கிடைச்சுக் கொண்டேயிருக்கும்.

funny%20smiley.gifwww.free-smiley-faces.de_smiley-kostenlos_01_250x250.gifnobelpreis.gif

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவோ அல்லது சரத்தோ சிங்கள இனவாதிகள்.இருவரும் தமிழர் கொலையில் பங்களித்தவர்கள். யாராவது ஒருவர் தமது தேர்த்தல் விஞ்ஞாபனத்தில் சிறையில் வாடும் தமிழ் இளைஞர்கள்,இடம் பெயர்ந்த அகதிகள் அல்லது தமிழர் பிரதேசத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்றல் போன்ற தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அன்றாட பிரச்சனை பற்றி ஒரு வரி கூட பேசவில்லை.மாறாக வெளிநாட்டில் உள்ள புலிகளின் வலை பின்னலை அழிப்போம் என சிங்கள மக்கள் முன் மார்தட்டுகிறார்கள்.இவர்களுக்கு ஏன் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

ஒரு வேளை தமிழர்களது வாக்கால் தான் தான் வெற்றி பெற்றதாக உலக நாடுகளுக்கு பறைசாற்றி தனது இனவளிப்பு விசாரணைகளுக்கு முற்று புள்ளி வைத்து விடுவார்.ரனில் பற்ற சொல்லவே தேவையில்லை. தான் வாழ்நாழில் வெல்ல முடியாத தேர்த்தலை சரத்தை வைத்து வெல்ல பகீரதபிரயதனம் எடுக்கிறார்.

எமது வாக்கால் தான் தமது வெற்றி நிர்ணயம் செய்யப்படும் என தெரிந்தும் எம்மோடு எந்த விதமான தொடர்பாடல்களையோ அல்லது தம்மால் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு கடைசி ஒரு மன்னிப்பாவது கேட்டார்களா? ஆக எமது வாக்கு மட்டும் அவர்களுக்கு தேவை. இவர்கள் எமக்கு ஏதாவது மனிதாபிமானமாக ஏதாவது செய்வார்கள் என நான் நம்பவில்லை.

இதுதான் என் கருத்தும்

  • கருத்துக்கள உறவுகள்

-----

1) சிவாஜிலிங்கம் கேட்கிறதால் இந்தியாவிற்கு என்ன இலாபம்?

20 இந்தியா மகிந்தவை ஆதரிக்கிறது என்கிறார்கள், அப்படியாயின் தமிழர்களின் வாக்கை மகிந்தவிற்கு போடாமல் செய்ய இந்தியா முற்படுகிறதா

-----

நெல்லையன், இந்த இணைப்பையும் வாசித்து ....... இந்தியாவின் இலாப, நட்டக்கணக்கை புரிந்து கொள்ளவும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=66904&pid=555910&st=0&#entry555910

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.