Jump to content

கல்வித் தரத்தில் இறுதி நிலையை அடைந்தது வடமாகாணம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

North-100x100.jpg

அண்மையில் வெளியான சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை வீழ்ச்சி கண்டுள்ளமை தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களிலும் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் வீதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையில் வடக்கு மாகாணம் கடைசி இடத்தை 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.பரீட்சை முடிவுகள் தொடர்பாக பரீட்சைத் திணைக்களத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான பிரிவு மேற்கொண்டுள்ள பகுப்பாய்வு அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பரீட்சைக்குத் தோற்றியோர், சித்தியடைந்தோர் வீதத்தை நோக்கும்போது முதல் இடத்தில் மேற்கு மாகாணமும் இரண்டாம் இடத்தில் தெற்கு மாகாணமும் மூன்றாமிடத்தில் வடமேற்கு மாகாணமும் உள்ளன.

சப்பிரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம், வட மத்திய மாகாணம், ஊவா மாகாணம், வடக்கு மாகாணம் என்பன முறையே 4 ஆம், 5 ஆம், 6ஆம், 7ஆம், 8ஆம், 9 ஆம் இடங்களைப் பெற்றுள்ளன.

பரீட்சைத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையில் கிடைத்த புள்ளி விவரத் தரவுகளின் விவரம் வருமாறு:

மேற்கு மாகாணத்தில் 69 ஆயிரத்து 614 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இவர்களில் 46 ஆயிரத்து 337 பேர் சித்தியடைந்துள்ளனர். இரண்டாயிரம் பேர் ஒன்பது “ஏ’ தரச் சித்தி பெற்றுள்ளனர். இரண்டாயிரத்து 692 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.

தெற்கு மாகாணத்தில் 34 ஆயிரத்து 908 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். 21 ஆயிரத்து 944 பேர் சித்தியடைந்துள்ளனர். 507 பேர் ஒன்பது பாடத்திலும் “ஏ’ தரச் சித்தி பெற்றுள்ளனர். ஆயிரத்து 891 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.

வடமேற்கு மாகாணத்தில் 30 ஆயிரத்து 689 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். 19 ஆயிரத்து 237 பேர் சித்தியடைந்துள்ளனர். 291 பேர் ஒன்பது பாடங்களிலும் “ஏ’ தரச் சித்தி பெற்றுள்ளனர். ஆயிரத்து 104 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.

சப்பிரகமுவ மாகாணத்தில் 25 ஆயிரத்து 253 பேர் தோற்றி அதில் 15 ஆயிரத்து 262 பேர் சித்தியடைந்துள்ளனர். 226 பேர் ஒன்பது பாடங்களிலும் “ஏ’ தரச் சித்தி பெற்றுள்ளனர். ஆயிரத்து 325 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.

மத்திய மாகாணத்தில் 35 ஆயிரத்து 265 பேர் தோற்றி அதில் 20 ஆயிரத்து 309 பேர் சித்தியடைந்துள்ளனர். 462 பேர் ஒன்பது பாடங்களிலும் “ஏ’ தரச் சித்தி பெற்றுள்ளனர். ஆயிரத்து 930 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் 20 ஆயிரத்து 848 பேர் தோற்றி அதில் 11 ஆயிரத்து 755 பேர் சித்தியடைந்துள்ளனர். 148 பேர் ஒன்பது பாடங்களிலும் “ஏ’ தரச் சித்தி பெற்றுள்ளனர். 798 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.

வடமத்திய மாகாணத்தில் 16 ஆயிரத்து 797 பேர் தோற்றி அதில் 9 ஆயிரத்து 422 பேர் சித்தியடைந்துள்ளனர். 84 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடைந்துள்ளனர். ஆயிரத்து 329 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.

ஒன்பதாவது இடத்திலுள்ள வடக்கு மாகாணத்தில் 18 ஆயிரத்து 21 பேர் தோற்றியுள்ளனர். இதில் 9ஆயிரத்து 778 பேர் சித்தியடைந்துள்ளனர். 103 பேர் அனைத்துப் பாடங்களிலும் “ஏ’ தரச் சித்தியடைந்துள்ளனர். 646 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.

இந்த அடிப்படையில் நோக்கும்போது நாட்டில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 32 பேர் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 191 பேர் சித்தியடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 908 பேர் அனைத்துப் பாடங்களிலும் “ஏ’ தரச் சித்தி பெற்றுள்ளனர். 12 ஆயிரத்து 795 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.

பாடசாலைப் பரீட்சார்த்திகள் மூலமே இந்த விடயங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.saritham.com/?p=56245

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுதலைப்புலிகளின் ஆட்சிக் காலத்தில்... மேல் மாகாணம் (கொழும்பு).. மத்திய மாகாணம் (கண்டி).. அடுத்து வட மாகாணம் (3ம் நிலை) என்றிருந்த மாகாணம் இன்று இறுதி நிலையை அடைந்திருப்பது.. சன நாய் அகத்தின் அதி உச்ச பிரதிபலிப்பின் பயன்களில் ஒன்று. ஒட்டுக்குழு அரசியலினதும்.. இராணுவ ஆக்கிரமிப்பு ஆட்சிகளினதும் பலாபலன் இது தான்..! வாழ்க ஆயுத சன நாய் அகமும்.. ஆக்கிரமிப்பு அரசியலும்..! சமூகச் சீரழிவு நல்லிணக்கமும்.. இன ஐக்கியமும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

விடுதலைப்புலிகளின் ஆட்சிக் காலத்தில்... மேல் மாகாணம் (கொழும்பு).. மத்திய மாகாணம் (கண்டி).. அடுத்து வட மாகாணம் (3ம் நிலை) என்றிருந்த மாகாணம் இன்று இறுதி நிலையை அடைந்திருப்பது.. சன நாய் அகத்தின் அதி உச்ச பிரதிபலிப்பின் பயன்களில் ஒன்று. ஒட்டுக்குழு அரசியலினதும்.. இராணுவ ஆக்கிரமிப்பு ஆட்சிகளினதும் பலாபலன் இது தான்..! வாழ்க ஆயுத சன நாய் அகமும்.. ஆக்கிரமிப்பு அரசியலும்..! சமூகச் சீரழிவு நல்லிணக்கமும்.. இன ஐக்கியமும்..! :icon_idea:

Posted

விடுதலை புலிகளின் காலத்திற்கு முதல் வடமாகாணம் முதலாம் நிலையில் இருந்தது ,அதுவும் தரப்படுத்தலுக்கு ஒரு மிகப்பெரிய காரணம்.

இது முப்பது வருட போர்செய்த கோலம்.

Posted

விடுதலை புலிகளின் காலத்திற்கு முதல் வடமாகாணம் முதலாம் நிலையில் இருந்தது ,அதுவும் தரப்படுத்தலுக்கு ஒரு மிகப்பெரிய காரணம்.

இது முப்பது வருட போர்செய்த கோலம்.

இன்று மாணவர்கள் படிப்பதை திட்டமிட்டு யாழ் ஆளுநர் தலைமையில் சிங்களம் தடுக்கின்றது.

ஆயுதப்போராட்டம் தொடங்குவதற்கு தரப்படுத்தல் ஒரு காரணமாக இருந்தது, இன்றும் உள்ளது. எனவே போராட்டம் தொடரவேண்டிய தேவையுள்ளது, அரசியல் போராட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுதலை புலிகளின் காலத்திற்கு முதல் வடமாகாணம் முதலாம் நிலையில் இருந்தது ,அதுவும் தரப்படுத்தலுக்கு ஒரு மிகப்பெரிய காரணம்.

இது முப்பது வருட போர்செய்த கோலம்.

3 வருட ஆக்கிரமிப்பின் விளைவை.. 30 ஆண்டுகால போரின் தலையில் திணிக்கும் உங்கள் புத்தியோ புத்தி.

வட மாகாணம்... போருக்கு முன்னரே இரண்டாம் நிலைக்கு இறங்கிவிட்டது. குறிப்பாக வன்னி மாணவர்கள் பெருமளவில் பிந்தங்கி இருந்தனர். இதற்கு யாழ்ப்பாண அமிர்தலிங்கங்களினதும்.. பொன்னம்பலங்களினதும்.. தர்மலிங்கங்களினதும்.. சங்கரிகளினதும்.. கல்வித் திமிரும்.. ஒரு காரணம்.

மத்திய கல்லூரிக்கு நீச்சல் தடாகம் கட்டும் ஒட்டுக்குழு தலைவன் டக்கிளசும்.. படுகொலையாளி மகிந்தரும்.. வன்னியில் மாணவர்களை மர நிழலில் நிறுத்தி வைத்துள்ளர். புனர்வாழ்வு என்ற போர்வையில்.. முகாம்களில் இன்றும் அடைத்து வைத்துள்ளனர்.

1983 க்கும் முன்னரே காட்டிக் கொடுத்துவிட்டு.. நாட்டை விட்டு ஓடிய நீங்கள் அதிகம் தெரிந்தது போல் கதைக்க அளக்க வெளிக்கிடக் கூடாது.

விடுதலைப்புலிகளின் காலத்தில் கிளிநொச்சி முல்லை மன்னார் வவுனியா சிறந்த பெறுபேறைக் கண்டது. வவுனியாவில் கல்வி கற்ற இடம்பெயர்ந்த மாணவ மாணவிகள் நல்ல உயர் கல்விப் பெறுபேறுகளைக் குவித்தனர். அதேபோல்... கொழும்பு இந்துக் கல்லூரியிலும் பெரும் பெறுபேற்று வளர்ச்சி காணப்பட்டது. காரணம் இடம்பெயர்ந்த மாணவர்கள் அதே ஊக்கத்தோடு கல்வி கற்றது தான். இப்போ பழைய படி வீழ்ச்சிப் போக்கை காண்கிறோம்.

வன்னி மாணவர்கள்.. கடந்த காலங்களை விட விடுதலைப்புலிகளின் கையில் சமாதான காலம் இருந்த காலத்தில் சாதித்ததே அதிகம். இதை எல்லாம் இதய சுத்தியுள்ள ஒரு மனிதனால் தான் ஏற்றுக் கொள்ள முடியுமே தவிர உங்களால் அது முடியாது.

உங்களின் நோக்கின் படி.. 30 வருட போரின் விளைவுகளில் உங்களுக்கு கனடாவில் அரசியல் தஞ்சம் தான் அதிகம் கிடைத்துள்ளது. அதை உதறித்தள்ளிட்டு ஊருக்குப் போகலாமே.. பெரியவர். இப்ப அங்க தேனும் பாலும் ஓடுவதாக நீங்கள் கருதினால்..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுதலை புலிகளின் காலத்திற்கு முதல் வடமாகாணம் முதலாம் நிலையில் இருந்தது ,அதுவும் தரப்படுத்தலுக்கு ஒரு மிகப்பெரிய காரணம்.

இது முப்பது வருட போர்செய்த கோலம்.

என்ரை சிவனே!!!!!! புராணம் பாட வந்திட்டினம்.....ஐயோ கடவுளே இப்ப அங்கை போர் முடிஞ்சுது.... இதை அங்கை போயிருந்து பீப்பீ ஊதலாமெல்லே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுதலை புலிகளின் காலத்திற்கு முதல் வடமாகாணம் முதலாம் நிலையில் இருந்தது ,அதுவும் தரப்படுத்தலுக்கு ஒரு மிகப்பெரிய காரணம்.

இது முப்பது வருட போர்செய்த கோலம்.

உண்மையில் அர்ஜுன் விஷயம் புரியாது எழுதுகின்றீர்களா ? அல்லது புலிகளின் மேல் உள்ள வெறுப்பால் திரிவுபடுத்தி எழுதுகின்றீர்களா ?

போதைப்பொருட்கள் ஆபாசப்படங்கள் கொடுத்து மாணவர்களின் படிப்பை சீரளித்ததில் முற்று முழுதான பங்கு ஒட்டு குழுக்களையே சேரும்.

Posted

யாழ் மாணவர்கள் கல்வியில் பின் தங்கியிருப்பதற்க்கான எல்லாக் காரணங்களையும் புலம் பெயர்ந்த எம்மால் தீர்க்க முடியாது.

1.) படிக்கக் கூடிய ஆனால் பிந்தங்கிய மாணவர்கள் இப்போதும் அங்கே உள்ளார்கள் என்பதையும்,

2.) வெளிநாட்டுப் பணத்தை வைத்து விலை உயர்ந்த கைத்தொலைபேசி, 'மோட்டர்பைக்' என்று சுற்றும் 'சுழட்டல்' இளையவர்களால் அவர்களுக்கும் தீங்கு மற்ற மாணவர்களுக்கும் தொல்லை என்பதையும் வைத்து சில யோசனைகள் சொல்ல விருப்பபடுகிறேன்.

கஷ்ரப்பட்டு படித்து முன்னுக்கு வர பாடுபடும் பின் தங்கிய தமிழ் மாணவர்களை ஊக்குவிக்க பண உதவி, மற்றும் பொருள் உதவி செய்வது நல்லது. பாடப் புத்தகங்கள் வாங்க, சைக்கிள் வாங்க மற்றும் இன்னோரன்ன கல்விக்கான தேவைகளை இனங்கண்டு உதவுவது நல்லது.

மிகவும் திறமையுள்ளவர்களை வெளிநாட்டு மேல் படிப்புக்கு கடனடிப்படையில் உதவி செய்யவேண்டும். பரீட்சைப் பெறுபேறுகளை வைத்து அவர்களை தெரிவு செய்து அவரவர் தேவைகளுக்கு ஏற்ப உதவுவது நல்லது. இதனை உதவுங்கரங்கள் போன்று பதிவுசெய்யப்பட்ட, அங்கீகரிக்கப் பட்ட நிறுவனமாக செய்தால் விருப்பமுடையோர் உதவி செய்வார்கள்.

தவிரவும் பழைய மாணவர் சங்கக் கூட்டங்களில் இது பற்றி பேசி இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம். தனியே காசு சேர்த்துக் கொடுத்து விடுவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடப் போவது இல்லை.

இன்னுமொரு முக்கியமான யோசனை... இங்குள்ள ஆசிரியர்கள் தொண்டு அடிப்படையில் ஸ்கைப் மூலம் அங்குள்ள வசதியற்றவர்களுக்கு படிப்பிப்பதோடு அங்குள்ள பல்கலைக் கழக மாணவர்களையும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக படிப்பிக்க கேட்பதுவும் நல்லது. இதனை இங்கிருந்து பண உதவி செய்யும் போது கேட்கும் நிபந்தனைகளில் ஒன்றாக இருப்பது நல்லது.

இதன் மூலம் அங்குள்ள தமிழ் மாணவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு படிப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

இறுதியாக, பன்னிரண்டு வயது தமிழ்நாட்டு தமிழ் மாணவர்கள் உயர்தர மாணவர்களுக்கான தாவரவியில் பாடத்தினை எப்படி மிகக் குறுகிய காலத்தில் ஆங்கிலத்தில் பயின்றார்கள் என்பது உட்பட, புதிய முறை படிப்பித்தல் தொடர்பாக நியூக்காசில் பல்கலைகழகத்தில் விரிவுரை செய்யும் திரு சுகற்றா மிற்ரா என்ற பேராசிரியரது அரிய கருத்துக்களயும் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

Sugata Mitra's new experiments in self-teaching

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுதலை புலிகளின் காலத்திற்கு முதல் வடமாகாணம் முதலாம் நிலையில் இருந்தது ,அதுவும் தரப்படுத்தலுக்கு ஒரு மிகப்பெரிய காரணம்.

இது முப்பது வருட போர்செய்த கோலம்.

அப்பட்டமான, புலிக்காய்ச்சல் கருத்து இது. அர்ஜூன்.

மிக, வன்மையாக கண்டிக்கின்றேன். :(

Posted

அப்பட்டமான, புலிக்காய்ச்சல் கருத்து இது. அர்ஜூன்.

மிக, வன்மையாக கண்டிக்கின்றேன். :(

நான் என்ன எழுதியுள்ளேன் என பின்னோட்டமிட்ட யாராவது விளக்கினால் நல்லது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுதலை புலிகளின் காலத்திற்கு முதல் வடமாகாணம் முதலாம் நிலையில் இருந்தது ,அதுவும் தரப்படுத்தலுக்கு ஒரு மிகப்பெரிய காரணம்.

இது முப்பது வருட போர்செய்த கோலம்.

நான் என்ன எழுதியுள்ளேன் என பின்னோட்டமிட்ட யாராவது விளக்கினால் நல்லது

நரி எப்பவும்... வடக்குப் பக்கமாகத் தான்.. போகும். என்ற பழ மொழி தான்... காரணம்.

மன்னிக்கவும், அர்ஜூன். உங்கள் எழுத்து (புலி) மயக்கத்தில்... சிவப்பு குத்திப் போட்டேன் :) .

Posted

இது அண்மையில் வந்த உயர்தர பெறுபேறுகள், இதில் வட பகுதி மாணவர்கள் நன்றாகவே சித்தி பெற்றிருந்தனர்.

உ/த பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் யாழ். மாணவர்கள் சாதனை : http://www.yarl.com/forum3/index.php?showtopic=96028

எனவே இந்த இன்றைய பெறுபேறுகள் கவலை தரும் செய்திகளாக இருப்பினும் பெற்றோரும் மாணவர்களும் ஆசிரியர்களும் நிலைமையை மேம்படுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலில் அர்சுணுக்கு எனது நன்றிகள், காரணம் இந்தவிடையத்தை கிளறிவிட்டு பல நல்ல விடையங்களை ஏனைய உறுப்பினர்களால் எழுத வைத்ததுக்கு. உறவுகள் இன்னுமொரு விடையத்தை குறிப்பிட மறந்துவிட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளது காலத்தில் வன்னியில் எந்தவொரு தனியார் கல்வி நிறுவனங்களும் காலநேரம் பார்க்காது இயங்கவில்லை யாழ்குடாநாடுபோல். மாணவர்களது திறனில் அவர்கள் கருசனை காட்டியே இருந்தார்கள். மற்றும் தற்போதைய குடாநாட்டு உள்ளூர் பத்திரிகைகளைப் பார்த்தால் தெரியும் பல்வேறு தனியார் கல்விநிலையங்களதும் விளம்பரங்கள் எப்படியேல்லாம் கேவலமான முறையில் தம்மை விளம்பரப்படுத்துகின்றனவென. முதலில் பாடசாலைக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை முறையாகக் கல்விகற்பிக்க ஆவனசெய்திடல் வேண்டும். இன்னுமொன்று தனியார் கல்வி நிறுவனங்களைத் தடைசெய்திடல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வட மாகாணம் தனியே யாழ்ப்பாணம் மட்டுமல்ல. இறுதிப் போரில் பேரழிவுகளைக் கண்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் வவுனியாப் பகுதி மாணவர்களின் பெறுபேறுகளும் வடமாகாணத்தினுள் அடங்கும். சீரான பாடசாலை வசதிகளற்ற, ஆசிரியர்கள் தட்டுப்பாடுள்ள பகுதி மாணவர்கள் படிப்பில் ஆர்வமிருந்தாலும் குறைந்த பெறுபேறுகளை எடுக்கவே வாய்ப்புக்கள் அதிகம். தமிழ்ர்களின் கல்விச் சொத்தை பாழடிக்க வேலைத்திட்டங்களை வகுக்கும் அரசு கல்வித் தரத்தை மேம்படுத்த எதுவும் செய்யாது. எனவே தமிழ் அமைப்புக்கள்தான் கல்வித் தரத்தை முன்னேற்ற விடாமுயற்சியுடன் பாடுபடவேண்டும்.

Posted

........நம்மவர்களின் நிலை தாழ்வாக இருப்பதுடன் கிளிநொச்சியில் பள்ளிப்படிப்பு மிகவும் கவலைக்கிடமாகவும் இருக்கிறது.

ஆகவே நாங்கள் முதலில் கிளிநொச்சித் தொகுதியிலிருந்து சில நிவாரண நடவடிக்கைகளை ஆரம்பிக்க இருக்கிறோம். இந்தச் சிறார்களுக்கு, தற்சமயம், பலவிதமான தேவைகள் இருப்பதாக நமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. சில பிள்ளைகள் தமது கல்வித்தேவைக்கு ஒரு பள்ளியை சென்றடைய, காலையும், மாலையும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இந்த விடையத்தில் இவர்களுக்கு உதவயாரும் இல்லையானால் இவர்களால் இனிமேல் பள்ளி செல்ல முடியாத நிலையொன்றிருக்கிறது. ஆனால் நாங்கள் இவர்களுக்கு ஒவ்வொரு மிதிவண்டி கொடுத்துதவ முன்வந்தால், இவர்களால் தங்கள் படிப்புக்களைத் தொடர முடியும். மேலும் இந்தச் சிறார்கள் பலரிலேயே, அவர்களின் குடும்பங்கள், தங்கள் வாழ்வூதியத்திற்கும் தங்கியிருப்பதால், இந்த மிதிவண்டிகளைப் பயன்படுத்தி தங்கள் குடும்பங்களுக்கும் அவர்களால் உதவ முடியும்.

நாங்கள் அளிக்க இருக்கும் முதல் தொகுதியான 50 மிதிவண்டிகளிலும், குறைந்தது 30 வண்டிகளையாவது, அமெரிக்கா வாழ் உறவுகளிடமிருந்து நன்கொடையாக எதிர்பார்க்கிறோம். இதற்கான செலவு $3000-$4000 வரையிலாகும். நாம் எல்லோரும் மனதார சிறு சிறு உதவிகள் செய்ய முன்வந்தால் இது ஒரு பெரிய சுமையாக இருக்கமுடியாது. இதில் உங்கள் பிள்ளைகளையும் இணைத்து நீங்கள் அவர்களுக்கும் இந்த தொண்டு வாழ்க்கை பயிற்றுவிக்கலாம். எப்படி நீங்கள் இந்த உதவியைச் செய்தாலும், இது வருங்கால தமிழீழத்தின் இளம் தளிர்கள் கருகிவிடாது நீர்வார்க்கும் அரிய கைங்கரியம் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன். இதில் நீங்கள் எவ்வளவு கொடுக்கலாம் என்று இல்லாவிட்டாலும், உங்கள் குடும்பத்திலிருந்து, தயவுசெய்து, ஒரு மிதிவண்டியாவது தந்துதவுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எமது இந்த மிதிவண்டி இலக்குக்கு மேலாக பணங்கொடுத்து உதவப்பட்டால் அதில், பாடப்புத்தகங்கள், எழுத்து உபகரணங்கள் போன்றவையும் அன்பளிப்பு செய்யலாமென்றிருக்கிறோம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100557

நல்லதொரு பயனுள்ள முயற்சி. வாழ்த்துக்கள்.

Posted

பெறுபேற்று வீழ்ச்சி கண்டோம் காரணத்தைக் கண்டோமா?

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-04-06 10:46:16| யாழ்ப்பாணம்]

2011 டிசம்பரில் நடைபெற்ற க.பொ.த. சாதா ரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பகுப்பாய்வின் முடிபு வெளியாகியுள்ளது. நாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், யாழ்ப்பாண மாவட்ட த்தின் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் வீழ்ச்சி கண்டு ள்ளதை அறிய முடிகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பரீட்சைப் பெறு பேறுகள் மிகவும் பின்த ங்கிய நிலையில் இருப்பதைப் பகுப்பாய்வுகள் சுட்டி நிற்பதற்க யுத்தத்தின் கொடூரமே அதற்குக் காரணம் என்று சான்றுபடுத்த முடியும்.

ஆனால், யாழ்ப்பாண மாவட்டத்தில் பரீட்சைப் பெறுபேறுகள் வீழ்ச்சி யடைவதற்கான காரணம் என்னவென்பதை கண்டறிவது கட்டாயமானதாகும்.இது விடயத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு, வடக்கு மாகாணக் கல்வித் திணைக்க ளம், யாழ். மாவட்டத்தில் இயங்கும் கல்வி வலயங்கள் மற்றும் கல்வி அபிவிருத்திக் குழு என்பன இந்த ஆய்வில் ஈடுபட வேண்டும்.

ஆய்வின் முடிபுகள் பகிரங்கப்படுத்தப்படுவதுடன், அவை சீராக்கப்ப டுவதும் கட்டாயமானதாகும்.அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் ஏனைய மாவட் டங்களுக்கு விட்டுக்கொடுத்து இந்தளவு தூரம் வீழ்ச்சி கண்டதென்ப தன் பின்னால், திட்டமிட்ட கல்விச் சீரழிப்புகள் உண்டென்றே எண் ணத் தோன்றுகிறது.

இதற்கு மேலாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற ஆசிரிய இடமாற்றத்தின் விளைவாக யாழ்ப்பாணக் கல்வி வீழ்ச்சி கண்டு விட்டதென்ற குற்றச்சாட்டுகளும், வலயக் கல்வி அலுவலகங்களில் நிலவும் வெற்றிடங்களை உடனுக்குடன் நிரப்பாமல் இழுத்தடிப்பது, வலயக் கல்விப் பணிப்பாளர் வெற்றிடம் ஏற்படும்போது வருடக் கண க்கில் அந்தப் பதவியை அப்படியே வெறுமையாக வைத்திருப்பது மற்றும், வடக்கு மாகாண நிர்வாகம் எல்லாவற்றுக்குள்ளும் மூக்கை நுழைத்து கல்வி வலயங்களை அதிகார மற்ற அலுவலகங்களாக மாற்றியமை போன்றவற்றின் நேரடி விளைவுதான் இந்தக் கல்வி வீழ்ச்சி என்ற கடுமையான விமர்சனங்களும் உண்டு.

எதுவாயினும் எங்கள் அதிகாரிகள் வழமை போல் சலாம் போடுவதை நிறுத்தி உடனுக்குடன் பதில் கொடுக்கத் துணியவேண்டும். இல்லையேல் யாழ்ப்பாணத்தின் கல்வியை தூக்கி நிறுத்துவது முடியாத காரியமாகிவிடும். கவனம்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=27984

Posted

விடுதலை புலிகளின் காலத்திற்கு முதல் வடமாகாணம் முதலாம் நிலையில் இருந்தது ,அதுவும் தரப்படுத்தலுக்கு ஒரு மிகப்பெரிய காரணம்.

இது முப்பது வருட போர்செய்த கோலம்.

ஒரு பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகிறது.

"பண்டி தன் கனவிலும் குப்பை மேட்டைக் கிளறுவதாகத் தான் கனவு காணுமாம்".

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் உயர்தரப் பரீட்சை எழுதியகாலத்தில் மருத்துவத்துக்கு யாழ்ப்பாணம் 265 புள்ளிகள்,கொழும்பு 260 புள்ளிகள்,மொனராகலை177 புள்ளிகள்,வவுனியா 210 புள்ளிகள் ஆனால் இன்று நிலமை தலைகீழ்.யாழப்பாண மாணவர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்து வுவுனியா,கொழும்பு சென்றதும் ஒரு காரணமாக இருக்கலாம்.வடமாகாணத்தமிழ்மக்களே பேருமளவில் புலம்பெயர்ந்தும் வாழ்கின்றனர்.நிச்சயம் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வித்தரத்தில் கவனம் எடுக்க வேண்டும்.அது வடமாகாணத்தில் மட்டுமல்ல.வடக்குக் கிழக்கு முழுவதிலும் கவனம் எடுக்க வேண்டும்.வடமாகாணத்தின் கல்வி வீழ்ச்சியானது முழுத்தமிழினத்தின் கல்வி வீழ்ச்சிக்கு ஒரு அளவுகோலாகும்.

Posted

ஒரு சிறு பகுதியினரே மருத்துவம், பொறியியல், வணிக பீடங்களுக்கு செல்கிறார்கள். இவர்கள் படித்தும் சமூகத்திற்கு பெரிய பயன் என்றில்லை, சிங்கள பகுதிகளில் இல்லை புலம்பெயர் தேசங்களுக்கு செல்கிறார்கள்.

தாயகத்திலும் சரி புலம்பெயர் நாடுகளிலும் சரி உயர்கல்வி கற்றவர்கள் மாதாந்த கொடுப்பனவு வாழ்க்கைக்குள் வாழுகின்றனர்கள், இதில் தவறில்லை. ஆனால், வாழ்க்கையில் புதிய சிந்தனைகளையும் ஆளுமைகளையும் முகாமைத்துவத்தையும் வளர்த்தவர்களில் பலர் கோடீஸ்வரர்களாயும் வந்துள்ளனர்.

எனவே படிப்பு முக்கியம், ஆனால் இதில் பல காரணங்கள் காரணமாகவும் வெற்றிபெறவில்லை என்பது வாழ்க்கையின் முடிவல்ல, அவர்களுக்கு ஏற்ப புதிய வழிகளை சமூகம் திக்கவேண்டும். அவர்கள் திறமைகளை வளர்க்க சந்தர்ப்பங்களை வழங்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.