Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டிஷ் மகாராணியாரின் உதாரணத்தைப் பின்பற்றுக! இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்.

Featured Replies

பிரிட்டிஷ் மகாராணியாரின் உதாரணத்தைப் பின்பற்றுக! இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்.


[Wednesday, 2013-05-08 19:48:40]

tHIRUMAVALAVAN_150kl.jpg

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என பிரிட்டிஷ் மகாராணியார் முடிவுசெய்துள்ளார். காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து மாநாடுகளிலும் கலந்துகொண்ட அவர் இலங்கை மாநாட்டைப் புறக்கணித்திருப்பது வரவேற்புக்குரியதாகும். பிரிட்டிஷ் மகாராணியாரின் இந்த அறிவிப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்று பல்வேறு நாடுகளிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ள நிலையில் இந்தியா அம்மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்று நாம் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும் இதைக் கூறி வருகின்றன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் திரு. ஜி.கே.வாசன் அவர்களும், அக்கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஞானதேசிகன் அவர்களும்கூட இந்தக் கோரிக்கையை வழிமொழிந்துள்ளனர்.

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வ தென்பது அங்கு நடைபெற்ற இனப்படுகொலையை அங்கீகரிப்பதாகிவிடும். அது மட்டுமின்றி, காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள அத்தனை நாடுகளும் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கையின் தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவல நிலை ஏற்படும்.

எனவேதான் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாதெனவும் அவ்வாறு நடத்தப்பட்டால் அதில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது எனவும் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் என இந்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்

தொல்.திருமாவளவன்

 

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=82240&category=TamilNews&language=tamil

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
பிரிட்டிஷ் மகாராணியாரின் உதாரணத்தைப் பின்பற்றுக!
அப்ப மனமோகன்சிங் தன்னுடய மகனை அனுப்ப வேணுமோ?சிறுத்தையரே
  • கருத்துக்கள உறவுகள்

மகாராணி போகாமைக்கு காரணம் உடம்புக்கு முடியாமை அதை முறையாக அறிவித்தும் விட்டார்கள் :D

 

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவனின் கூற்றை இந்திய அரசும் மற்றவர்களும் கூர்ந்து நோக்குவது நன்று.

 

மகாராணி விரும்பி இருந்தால் அவர் போக எத்தனையோ வழிகள் இருக்குது. உடம்புக்கு முடியாமை என்பது ஒரு காரணமாக இருக்கக் கூடிய நிலையில் மகாராணியின் உடல்நிலை இருப்பதாகத் தெரியவில்லை.

 

வெளிப்படையாகக் கூறாவிட்டாலும்.. மகாராணி மீதான சனல் 4 இன் குற்றச்சாட்டுக்கள்.. மற்றும் சிறீலங்கா மீதான மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் என்பனவும் மகாராணியின் முடிவில் செல்வாக்குச் செய்திருக்க வாய்ப்புள்ளது. அதனை அடியோடு மறுக்க முடியாது.

 

மகிந்த லண்டனிலும்.. ஒக்ஸ்பேட்டிலும் பேச முடியாமல் போன போதும் சொல்லப்பட்ட காரணங்கள் வேறு. ஆனால்.. அதனை தீர்மானித்தவை வேறு..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எழுதி,எழுதி எங்களை நாமே திருப்தி படுத்திக்க வேண்டியது தான் <_<

 

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் தாங்களும் ஒன்றும் செய்யாதுகள் செய்யுறவனையும் ஊக்குவிக்காதுகள்..! சும்மா வெட்டிக்கு மாற்றிப் பேசி.. ஒவ்வாததைச் சொல்லிக்கிட்டு இருக்கிறதால மட்டும் ஏதோ நடந்திடப் போகுதாக்கும்..! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள நீங்களே சுய விமர்சனத்திற்கு :D  உள்ளாக்கிறீங்கள் பாருங்கோ :)  அங்கே தான் நீங்க நிற்கிறீங்கள் :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

அவசியம். உங்களை விட பல மடங்கு திறம்..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எழுதி,எழுதி எங்களை நாமே திருப்தி படுத்திக்க வேண்டியது தான் <_<

இதற்குள் நான் தலை காட்ட வேண்டிய அவசியம் ஏதும் இல்லை தான்.

இருந்தாலும் ஒரு நேர்த்தியான கருத்தாடலை செய்யலாமே  எனும் எண்ணம்.
 
உடல் நிலை சுகமாக இருந்திருப்பின்.........
மகாராணியார் அங்கே போய்  இருப்பார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
ஆம், என்றால் எந்த அடிப்படையில் உங்கள் நம்பிக்கை இருக்கிறது?
அல்லது ஏன் அப்படி நம்புகிறீர்கள்???
 
இது உங்களுடைய தனிபட்ட நம்பிக்கை மட்டுமா? அல்லது ஆதாரங்கள்  உடன் நம்ப கூடிய இங்கிலாந்தின் அரசியல் நகர்வுகளில் ஒன்றா???
  • கருத்துக்கள உறவுகள்

மகாராணியார் போகவில்லை என்பது இராஜதந்திர ரீதியில் வெற்றி என்று சொல்லி எங்களை நாங்களே ஏமாற்றக்கூடாது.

மகாராணியார் போகாததற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது அவரால் நீண்ட தூரப் பிரயாணம் மேற்கொள்ள முடியாது என்பதே. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் பற்றி ஒரு சொல் கூட காரணமாகச் சொல்லப்படவில்லை என்பதைக் கவனிக்கவேண்டும்.

முடிக்குரிய இளவரசர் சார்லஸ் இலங்கைக்கு மகாராணியாரின் பிரதிநிதியாகப் போவதும், அவர் மகாராணியாரின் அண்மைய பிரித்தானிய பாராளுமன்ற உரையின்போது சமூகம் அளித்திருந்ததும் மகாராணியாரின் கடமைகளை அவர் கையேற்க ஆரம்பித்துள்ளமையாகத்தான் கருதமுடியும்.

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடத்தப்படுவது இலங்கையரசைப் பொறுத்தவரை பெரிய இராஜதந்திர வெற்றியாகும். சீனா, ரஷ்யா, யப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளின் செல்வாக்கு இல்லாத பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தைக் கூட இலங்கையில் நடப்பதைப் தடுக்க முடியாத இராஜதந்திரிகள்தான் தமிழர் தரப்பில் உள்ள அமைப்புக்களில் உள்ளனர். கனடா ஒன்றுதான் சற்று சலசலப்பை உருவாக்கியது. ஆனால் பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தமிழர் தரப்பு இராஜதந்திரிகளின் சொல்லைக் காதில் போடவில்லை.

இந்த நிலையில் இருக்கும் தமிழர் அமைப்புக்கள் தங்கள் செயற்பாடுகளை பரிசீலனைக்கு உட்படுத்துவது நல்லது. இல்லாவிடில் மிக மோசமான செய்திகளையும் positive spin ஆக்கி தமிழர்களைக் குறிவைத்து மாத்திரம் இத் தலைப்பில் உள்ள செய்தி போன்று வெளியிட்டு எங்களை நாங்களே தொடர்ந்து மகிழ்வூட்டிக் கொண்டிருப்பதுதான் நடக்கும்.

மகாராணியார் தான் போகவில்லை என்பதுடன் விட்டிருந்தால் பரவாயில்லை ,மிக தெளிவாக காரணமும் சொல்லி சார்லசும் கமிலாவும் போவதாக மிக விளக்கமாக வேறு சொல்லியிருந்தார் .

உப்படியான விடயங்களில் திருமா சீமானின் ஒன்றுவிட்ட அண்ணன் தானே .

  • கருத்துக்கள உறவுகள்
மகாராணி வராமைக்கு காரணம் மோசமான மனித உரிமை நிலைதான்: ஐதேக

 

maharan.jpg

 

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாததன் மூலம் பிரித்தானிய மகாராணி இலங்கைக்கு உறுதியான செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. 

 

மகாராணி பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாமைக்கு காரணம் இலங்கையின் மோசமான மனித உரிமை நிலை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஏஎப்பி ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். 

 

"மகாராணி இலங்கைக்கு உறுதியான அரசியல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். ´மனித உரிமை நிலைமையை மேம்படுத்துங்கள்´ என்பதே அந்த செய்தியாகும். இலங்கையில் இன்னும் பல ஆட்சி பிரச்சினைகள் காணப்படுகிறன. அதற்கும் பதிலளிக்க வேண்டும்" என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

 

இலங்கையில் மனித உரிமை மேம்படுத்தப்படாவிட்டால் அங்கு நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என கனடா முன்னதாக எச்சரித்தது. இதனை அடுத்து இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடாத்துவது குறித்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எதிர்ப்புக்கள் கிளம்பின. 

 

எனினும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளன. 

 

இந்த நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என பிரித்தானிய மகாராணி அண்மையில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

http://www.deepamnews.com/details.php?nid=3&catid=2702

  • கருத்துக்கள உறவுகள்

ராஜாக்களுக்கும் ராணிகளுக்கும்  பின்னால் நின்று  வியர்க்காமல்

சாமரம் வீசிக்கொண்டு  இருப்பவன் மனதில் எப்போதும் ஒரு நினைப்பு இருக்கும் 

 

அந்த சிம்மாசனத்தில் ஒரு நாளாவது அமர்ந்து விட வேண்டும்  

என்பதே அவன் நினைப்பது.

 

ஆசையின் வேகத்தில் ராஜா ராணிகளின் வாரிசுகளை அவன் மறந்து விடுகின்றான்

 

 



மகாராணியார் தான் போகவில்லை என்பதுடன் விட்டிருந்தால் பரவாயில்லை ,மிக தெளிவாக காரணமும் சொல்லி சார்லசும் கமிலாவும் போவதாக மிக விளக்கமாக வேறு சொல்லியிருந்தார் .

உப்படியான விடயங்களில் திருமா சீமானின் ஒன்றுவிட்ட அண்ணன் தானே .

சும்மா படுத்திருக்கின்ற சிங்கத்தை நீங்கள் என் தட்டி எழுப்பிறீங்கள் 

  • தொடங்கியவர்

விவாதங்களைத் திசை திருப்புவது யாழில் இப்போது வழமையாகிறது. இது தமிழருக்கு தமிழர் சொல்வது பற்றியல்ல. எங்கே என்ன பிழை இருந்தாலும் காலை தூக்காமல் இருப்பது நல்லது. 

 

இதில் புலம் பெயர் மக்கள் பிரச்சாரம் வரவில்லை.

 

இது திருமா மத்திய அரசை நோக்கி விடும் கோரிக்கை. மத்திய அரசு, இராணி உடல் நலக்குறைவால்தான் போகவில்லை என்று இன்னும் பதில் சொல்லவில்லை. அல்லது மன்மோகன் சிங் தானும் உடல் நலக்குறைவால் போகாமல் விடுவதாக இலங்கையிடம் சொல்லவா  என்ற கேள்வியை திருமாவுக்கு அனுப்பி வைக்கவில்லை. மத்திய அரசுக்குக்காக சிலர் பதில் அளிக்க முந்தாமல் இருப்பது நல்லது.  இது புலம் பெயர் மக்கள் தங்களைத் தாங்கள் மகிழ்வூட்ட சொல்லவில்லை. எப்படி வலிந்து வலிந்து சிலர் எதிர் பிரசாரம் வைக்கிறார்களோ அதே மாதிரி நேர்பிர்சாரம் வைப்பதை மீளாய்வு செய்ய வேண்டியதில்லை.

 

 எனவே இதில் புலம் பெயர் மீளாயவும் ஒன்றும் இல்லை. 

 

திருமா கனிமொழியுடன் இலங்கை வந்து போனவுடனும் மகிந்தாவை பற்றி தமிழ் நாட்டில் ஒன்றும் நல்லது சொல்ல இல்லை. அவரை தாக்க இப்போது ஒரு அவசியமும் எழ இல்லை. 

 

சிலருக்கு தமிழ்நாட்டில் இருந்து யார் எமக்காக கதைத்தாலும் அல்லது எந்த பிரச்சாரத்தை எடுத்தாலும்  வலிக்கிறது. இவ்வளவு பயம் தமிழ் நாடு மீது யாரும் வைக்க வேண்டியதில்லை.  

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எந்தத் திசை திருப்பலுமில்லை.

பொதுநலவாய நாடுகளின் கூட்டம் இலங்கையில் நடப்பதைத் தடுத்த நிறுத்த இந்திய அரசை வற்புறுத்தி பணியவைக்க முடியாமல் போய்விட்டது. அது போன்றே பொதுநலவாய நாடுகளில் இருக்கும் மேற்கு நாடுகளையும் இராஜதந்திர ரீதியில் தமிழர்களின் பக்கம் திருப்ப முடியாமல் போய்விட்டது. நிலைமையை சிறிதுகூட மாற்றமுடியாத இந்த வேளையில் இப்படியான கண்துடைப்பு அறிக்கைகளால் ஒரு பயனும் தமிழர்களுக்கு இல்லை. திருமாவுக்கு வேண்டுமானால் அவர் இப்போதும் தமிழர்கள் மீது அக்கறையுள்ளவர் என்று காட்டவேண்டிய தேவை இருக்கலாம். அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய நாடுகளும் கனடாவை பின்பற்ற தமிழர்கள் குடும்பி பிடி சண்டையை விட்டு விட்டு மிகக்கடுமையாக உழைக்க வேண்டும். எல்லா வேளைகளிலும் மேற்கு நாடுகள் எமக்கு சாதகமாக நடக்கும் என எதிர்பார்க்க முடியாது.

 

  • கருத்துக்கள உறவுகள்

கிருபண்ணா நீங்கள் இதில் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு அதிக முக்கியம் கொடுத்துப் பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அண்மையில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு முக்கிய விடயம்.. சிறீலங்காவில் பிரிட்டிஷ் பிரஜையின் கொலை.அதற்கு சரியான நீதி கிடைக்காமை. மேலும் அதையிட்டு பிரிட்டன் தனது நாட்டினருக்கு பயண எச்சரிக்கையும் வழங்கியுள்ளது. இவை கூட மகாராணியாரின் விஜயத்தில் செல்வாக்குச் செய்திருக்க முடியும். மேலும்.. ஐநா மனித உரிமைகள் அமைப்பில் சிறீலங்கா தொடர்பில்.. பிரிட்டனின் நிலைப்பாடு தொடர்பில் மகாராணி அக்கறையோடு செயற்பட வேண்டிய தேவையைக் கொண்டிருக்கிறார்.

 

நேரடியாக தமிழர்கள் இவர்கள் மீது செல்வாக்குச் செய்ய முடியாது. ஆனால் தமிழர்களின் பல்வேறு நகர்வுகளின் சிறிதளவான தாக்கமாவது இதில் நிச்சயம் இருக்கும்..! அதனை நீங்கள் முற்றாக நிராகரிக்க முடியாது.

 

சார்ள்ஸைப் பொறுத்தவரை அவர் போர் நடக்கும் போதும்... சிறீலங்காவிற்கு விசிட் அடிச்சு கும்மாளம் அடிச்ச ஒருவர் தான்..! போரின் பின் மகாராணி கடந்த ஆண்டு யுபிலிக்கு.. மகிந்தரை கூப்பிட்டு.. விருந்தும் கொடுத்தவா தானே. வெறுமனவே தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் தான் காரணம் என்று சொல்ல முடியாவிட்டாலும்.. அதன் தாக்கமும் இதில் இருக்க வாய்ப்புள்ளது என்பதே இங்கு வைக்கப்படும் வாதம் ஆகும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இதில் எந்தத் திசை திருப்பலுமில்லை.

பொதுநலவாய நாடுகளின் கூட்டம் இலங்கையில் நடப்பதைத் தடுத்த நிறுத்த இந்திய அரசை வற்புறுத்தி பணியவைக்க முடியாமல் போய்விட்டது. அது போன்றே பொதுநலவாய நாடுகளில் இருக்கும் மேற்கு நாடுகளையும் இராஜதந்திர ரீதியில் தமிழர்களின் பக்கம் திருப்ப முடியாமல் போய்விட்டது. நிலைமையை சிறிதுகூட மாற்றமுடியாத இந்த வேளையில் இப்படியான கண்துடைப்பு அறிக்கைகளால் ஒரு பயனும் தமிழர்களுக்கு இல்லை. திருமாவுக்கு வேண்டுமானால் அவர் இப்போதும் தமிழர்கள் மீது அக்கறையுள்ளவர் என்று காட்டவேண்டிய தேவை இருக்கலாம். அவ்வளவுதான்.

 

அதுதான் தேவை. அதுதான் காங்கிரசுக்கு எதிரான தமிழ் நாட்டுப் பிரச்சாரம். அதேயே செய்ய நினைத்து அவர் செய்யும் போது அதில் புலம் பெயர் மக்கள் திருத்த ஒன்றும் இல்லை.

 

புலம் பெயர் மக்கள் இலங்கையில் பொதுநலவாய மகாநாடு வைக்கக்கூடாது என்று ஒரு போதும் இந்தியாவை மிரட்டவில்லை. அது அநாவசியமான, தொடர்பில்லாத அனுமானம். கிட்டத்தட்ட புலம் பெயர் மக்களின் எந்த அமைப்பும் இந்தியாவுடன் ஒரு உறவை ஏற்படுத்த முடியவில்லை. உருத்திரா அங்கு போவதை நினைக்க கூட இல்லை. இமானுவல் அடிகளார் சென்னையில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டவர். அந்த நிலையில் புலம் பெயர் மக்கள் யாரும் அவர்களை மிரட்டப் போகவில்லை.

 

கருணாநிதி இரண்டாவது ஐ.நா பிரேரணை நேரம் மிரட்டுவதாக கூறினார். அவர்களும் தாங்கள் அதற்காக பிரேரணையை திருத்துவதாக கடைசி நேரம் கூறினார்கள். திருமா ஒரு தொகுதி மட்டும் உள்ள் ஆள். கருணாநிதி மாதிரி மிரட்ட போவதில் ஒரு பலனும் இல்லை. இப்படி மட்டும்தான் கோரிக்கை விட முடியும். 

 

சில மேற்கு நாட்டு NGOஅமைப்புகள் இன்னமும் பொதுநலவாய மகாநாட்டை இலங்கையில் நடப்பதை தடுக்கலாம் என்று கூறி முயற்சிக்கின்றன. அவர்கள் முன்னர் ஒருதடவை மகாநாடு நடக்க  இரண்டு கிழமைகளுக்கு முன்னர் தடுக்கும் முயற்சிகள் வெற்றி அளித்து மகாநாடு நடத்தப்படுவது தவிர்க்கப்பட்டத்தாக கூறுகிறார்கள்.  மேலும் பிருத்தானியாவின் டேவிட் கமறூன் போவார் என்று எங்கும் அடித்து வைத்து சொல்லவில்லை.

 

மாற்று சிந்தனை வைப்பதில்லை தவறில்லை. தங்களிடம் புதிய கற்பனையோ , சிந்தனோ ஒன்றும் சொல்ல இல்லாமால் ஒன்று முயசிப்பவர்களை அவநம்பிக்கை கொள்ள செய்வது மாற்றுச் சிந்தனை அல்ல.  

 

திருமா சீமானின் சகோதரமாக இருந்தாலும் சரி அல்லது சித்தார்தனால் பயிற்சி கொடுக்கபட்ட  தொண்டனாக இருந்தாலும் சரி அவர் பிரதமரை எந்த ஒரு காரணமும் சொல்லி இலங்கைக்கு போக வேண்ட்டாம் என்று கேடகலாம். அதில் எந்த குற்றமும் இல்லை. 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா பிரதிநிதிகள் சொன்னவர்கள் தாங்கள் சிறிலங்காவை புறக்கணித்தால் சிறிலங்கா தனிமைப்படுத்தப்பட்டுவிடுமாம்...மனித உரிமை மீறல்களை விட பொதுநல நாடுகளின் கூட்டு பிரதானமானது என்பது இதிலிருந்து தெரிகிறது. மகாராணி அடுத்த பொதுநலநாடுகளின் கூட்டதில் பங்கு பற்றினால் நாங்கள் சொல்லலாம் மனித உரிமை மீறல்கள் நடந்தபடியால் சிறிலங்காவில் பங்கு பற்றவில்லை என்று. எது எப்படியோ சார்ள்ஸ் பங்குபற்றும் முதலாவது பொதுநலநாடுகளின் மாநாடு மனித உரிமை மீறல் நடந்த ஒரு நாட்டில் நடைபெறுகிறது.....அது சரி பன்டாரவன்னியன் ராஜராஜசோழன்,விக்கிரசிங்கன் அவர்களின் மக்களை கொலை செய்து மனித உரிமை மீறல்களை செய்தவர்கள் இவர்களின் பாட்டன், பூட்டன்மார்தேனே....

  • கருத்துக்கள உறவுகள்

திருமா சீமானின் ஒன்றுவிட்ட அண்ணன் என்று காழ்ப்புணர்ச்சிக் காமடி.. பண்ணுறவை... இப்ப திமுக தலீவர் சொல்லிட்டார் என்ன சொல்லப் போகினம் என்று பார்ப்பம்... இவர்களின் காமடிக்கு ஒரே அளவே இல்லை. தலீவரின் கோரிக்கையை அடுத்து தலீவர் சீமானின் ஒன்றுவிட்ட தாத்தா என்று சொன்னாலும் சொல்வார்கள். :lol:

 

 

------------------------------

 

kalaigar-10-05-0001.jpg

 

 

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது  என்று திமுக தலைவர் கலைஞர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

 

இது குறித்து கலைஞர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திமுகவும், ‘டெசோ’ அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த வேறு பல கட்சிகளின் தலைவர்களும், ஏன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் கூட காமன்வெல்த் மாநாட்டினை இலங்கையிலே நடத்தக் கூடாது என்றும், அதற்கு இந்திய அரசு தன்னாலான முயற்சிகளை எடுக்க வேண்டுமென்றும் தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் இன உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் இந்திய அரசு அதைப் பற்றி எந்தவிதமான நடவடிக்கையையும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை.

 

டெசோ இயக்கத்தின் சார்பில் காமன்வெல்த் நாடுகளின் தூதுவர்களையெல்லாம் சந்தித்து, இலங்கையிலே காமன்வெல்த் மாநாட்டினை நடத்தக் கூடாது என்ற வேண்டுகோளையும் அதற்கான விளக்கத்தையும் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கியிருக்கிறார்கள்.

ஆனால் காமன்வெல்த் மாநாட்டினை இலங்கையிலே நடத்திட முடிவு செய்யப் பட்டு விட்டது என்பதைப் போல இலங்கையில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற வருகின்றனவாம். ஏற்கனவே கனடா நாட்டின் சார்பில் இலங்கை காமன்வெல்த் மாநாட்டினைப் புறக்கணிப்பது எனத் தெரிவிக்கப்பட்டு விட்டது.

 

பல்வேறு மனித உரிமை அமைப்புகள் - குறிப்பாக காமன்வெல்த் மனித உரிமை அமைப்பு, ஆஸ்திரேலிய மனித உரிமை சட்ட மையம் போன்றவை இலங்கையில் இந்த மாநாட்டினை நடத்தக் கூடாதென எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

 

பிரிட்டிஷ் இராணி இரண்டாம் எலிசபெத் அம்மையார் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக இளவரசர் சார்லசை அனுப்பி வைக்க விருக்கிறார் என்றும் செய்திகள் வந்துள்ளன.

 

காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு என்று ஒன்று உருவாக்கப்பட்ட பிறகு, இதுவரை நடைபெற்ற அனைத்து மாநாடுகளிலும் கலந்து கொண்ட எலிசபெத் ராணி இலங்கை மாநாட்டினைப் புறக்கணித்திருப்பது என்பது முக்கியமான தகவலாகும்.

 

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்பதற்காக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் பிரேசர் ஆதரவு தெரிவித்துள்ளார். காமல்வெல்த் சட்ட மாநாடு ஒன்று ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்-டவுன் நகரத்தில் நடைபெற்றபோது; காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் 27 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில், காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்; தொடர்ந்து இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் காமன்வெல்த் போற்றி வரும் அடிப்படை கொள்கை மீறல்கள் ஆகியவற்றின் காரணமாக இலங்கையை நீக்குவது முக்கியமானது; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்டுக் கொண்டார்கள்.

 

இலங்கை போர்க் குற்றம் புரிந்த நாடு என்று ஐ.நா. மன்றம் அமைத்த மூவர் குழு வின் அறிக்கைக்குப் பிறகும், இலங்கையில் நவம்பர் மாதத்தில் காமன் வெல்த் மாநாடு நடைபெறுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது. இனப் படுகொலை, மனித உரிமை மீறல்கள், பல்வேறு வகையான போர்க் குற்றங்கள் ஆகியவற்றுக்கு ஆளாகியுள்ள ராஜபக்சேயை, நம்பிக்கையுடன் கூடிய சுதந்திரமான சர்வ தேச நீதி விசாரணைக் கமிஷன் முன் நிறுத்தவேண்டுமென டெசோ தொடர்ந்து கோரி வருகிறது. காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற்றால், அதன் காரணமாகவே அடுத்த இரண்டாண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் அவைத் தலைவராக ராஜபக்சே இருப்பாரென்றும்; அதனால் 54 நாடுகளைக் கொண்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரை நீதி விசாரணைக்கு உட்படுத்துவது பிரச்சினையாக ஆகி விடக் கூடுமென்றும்; வலிமையான கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா நட்பு நாடு என்று கூறிக் கொண்டு, அதிலே கலந்து கொள்ளுமேயானால், அங்கே நடைபெற்ற இனப்படுகொலைகளை இந்தியா ஆதரித்தது போலாகி விடும். எனவே இனியாவது இந்தியா, தமிழர்களும் இந்தியர்களில் ஒரு பிரிவினர் தான் என்ற உள்ளுணர்வோடு, நேசத்தோடு ஆதரவுக் கரம் நீட்ட முன் வர வேண்டும். தமிழக மக்களின் மற்றும் உலகத் தமிழர்களின் இந்த வேண்டுகோளையாவது இந்தியா ஏற்றுக்கொண்டு, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்ற அறிவிப்பினை உடனடியாகச் செய்வதோடு; காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறாத வகையில் மற்ற உறுப்பினர் நாடுகளின் ஆதரவையும் திரட்டிடும் முயற்சியையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை இந்தியா புரிந்து கொண்டு, அதற்கேற்ற வியூகம் வகுத்துச் செயல்பட வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=99013

 

  • கருத்துக்கள உறவுகள்
காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு என்று ஒன்று உருவாக்கப்பட்ட பிறகு, இதுவரை நடைபெற்ற அனைத்து மாநாடுகளிலும் கலந்து கொண்ட எலிசபெத் ராணி இலங்கை மாநாட்டினைப் புறக்கணித்திருப்பது என்பது முக்கியமான தகவலாகும்
மகாராணி புறக்கணிப்பு என்று சொல்லவேயில்லை தலைவர் றீல் விடுகிரார் :D :D

மாணவர்கள் ஐநா தீர்மானம் பொய்னா தீர்மானம் என்று அடித்துகூறி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட நேரத்தில், திமுக அள்ளக்கைகள் அதன் முதல் வரைவை எடுத்துகொண்டு போய் அதை ஆதரிக்க சொல்லி வாங்கிகட்டிகொண்டு வந்ததைப்போல  :-) இவர் தெரிஞ்சி பேசுகிறாரா இல்ல தெரியாம பேசுகிறார ?

 

இதுல வேற உதாரணத்தை பின்பற்றனுமா.

யூ மீன் ராகுல் போயிட்டு வர சொல்றீங்களா .... ?

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா பிரதிநிதிகள் சொன்னவர்கள் தாங்கள் சிறிலங்காவை புறக்கணித்தால் சிறிலங்கா தனிமைப்படுத்தப்பட்டுவிடுமாம்...மனித உரிமை மீறல்களை விட பொதுநல நாடுகளின் கூட்டு பிரதானமானது என்பது இதிலிருந்து தெரிகிறது. மகாராணி அடுத்த பொதுநலநாடுகளின் கூட்டதில் பங்கு பற்றினால் நாங்கள் சொல்லலாம் மனித உரிமை மீறல்கள் நடந்தபடியால் சிறிலங்காவில் பங்கு பற்றவில்லை என்று. எது எப்படியோ சார்ள்ஸ் பங்குபற்றும் முதலாவது பொதுநலநாடுகளின் மாநாடு மனித உரிமை மீறல் நடந்த ஒரு நாட்டில் நடைபெறுகிறது.....அது சரி பன்டாரவன்னியன் ராஜராஜசோழன்,விக்கிரசிங்கன் அவர்களின் மக்களை கொலை செய்து மனித உரிமை மீறல்களை செய்தவர்கள் இவர்களின் பாட்டன், பூட்டன்மார்தேனே....

 

 

 

உண்மையான காரணம் அதுவல்ல. கோத்தபாய தமிழர்களிடம் காசை வாங்கி கொண்டு அவுசுக்கு அகதிகளை அனுப்புவார்.பின்னர் நடுக்கடலில் கடல்படை கைது செய்யும்.இது தமிழ் அகதிகள் அவுசுக்கு செல்வதை தடுக்கும் அல்லவா.
 
அது மட்டுமா. அவுசில் இருந்து திருப்பி அனுப்பும் அகதிகளை சித்திரவதை கூடத்துக்கு சிறிலங்கா அனுப்பி வருகிறது. இது அகதிகளை அவுசிக்கு நினைத்து பார்க்க கூட வைக்க முடியாத அளவுக்கு அவுசுக்கு சிறிலங்கா உதவுகிறது.
 
இதற்கு பிரதி உபகாரமாக மாநாட்டில் அவுஸ்திரேலியா பங்கு பற்றாமல் விடுமா??
  • தொடங்கியவர்

இங்கிலாந்து மகாராணியின் இலங்கைப் பயணம் ரத்தானது தொடர்பில் அரசு பொய்யான பரப்புரை - பிரான்ஸிஸ் போய்ல் மறுப்பு!

[Friday, 2013-05-10 12:43:11]
francis-boyle-100513-seithy-150.jpg

இங்கிலாந்து மகாராணி வயது காரணமாகத்தான் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்ற இலங்கை அரசின் பரப்புரையை பிரபல மனித உரிமைப் பேராசிரியர் பிரான்ஸிஸ் போய்ல் மறுத்துள்ளார். இலங்கையின் பரப்புரைக்கு ஏதுவாக இங்கிலாந்து ஊடகங்கள் ராணி கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பொறுப்புக்களை இளவரசரிடம் ஒப்படைத்து வருவதையும் இலங்கை சுட்டிக் காட்டியுள்ளதை மறுத்த பேராசிரியர் போய்ல் (இல்லினாய்ஸ் பல்கலை சட்டக் கல்லூரியில் கற்ப்பிப்பவர்) ஓர் அரசியல் சட்ட அரசின் தலமையில் இருக்கும் ராணி இனப்படுகொலையாளன் ராஜபக்சவுடன் சேர்ந்து காட்சியளிக்க விரும்பவில்லை.

  

அதுபோன்ற கெட்ட செயல்களை இளவரசர் செய்யட்டும் என்று விட்டு விட்டார் என்பதே உண்மைக் காரணம் என்று உரைத்துள்ளார். ஏனென்றால் அரசியின் முடிவுக்கு காரணம் இளவரசர் எந்த நாட்டின் தலமைப் பொறுப்பிலும் இல்லை, ஆகவே அவரை அனுப்புகிறார் என்று மேலும் கூறியுள்ளார். ராணி ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பில் மட்டுமல்ல, பொதுநலவாய நாடுகள் அனைத்துக்கும் தலைமைப் பொறுப்பில் உள்ளார், இதுவே அவரது பயண ரத்துக்கு முக்கிய காரணம்.

அதேவேளை கனடிய பிரதமர் ஸ்டீஃபன் ஹார்ப்பர் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கப் போவது கனடாவில் விமர்சனத்தையும் வரவழைத்துள்ளது. பிரதமரின் புறக்கணிப்பு மட்டும் பெரிதாக ஒன்றும் ஏற்படுத்தப் போவதில்லை. புறக்கணித்தால் கனடாவிலிருந்து அங்கு யாருமே போகக் கூடாது. பிரதமர் மட்டும் போகாமல் இருப்பது பொருளற்றது என்று அங்கு விமர்சனங்கள் எழுகின்றன. ஐ.நா. பொதுச் செயலாளர் அண்மையில் வடகொரியாவில் நிகழ்த்தப் படும் மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரிக்க அவுஸ்திரேலிய நீதிபதி ஒருவரை கடந்த செவ்வாய்க்கிழமை நியமித்துள்ளதைக் பேராசிரியர் போயல் குறிப்பிட்டு இதுபோல பான் கி மூன் இலங்கை விடயத்தில் ஏன் செய்ய வில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

http://www.seithy.com/listAllNews.php?newsID=82359&category=TamilNews&language=tamil

 

  • கருத்துக்கள உறவுகள்

 

இதற்குள் நான் தலை காட்ட வேண்டிய அவசியம் ஏதும் இல்லை தான்.

இருந்தாலும் ஒரு நேர்த்தியான கருத்தாடலை செய்யலாமே  எனும் எண்ணம்.
 
உடல் நிலை சுகமாக இருந்திருப்பின்.........
மகாராணியார் அங்கே போய்  இருப்பார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
ஆம், என்றால் எந்த அடிப்படையில் உங்கள் நம்பிக்கை இருக்கிறது?
அல்லது ஏன் அப்படி நம்புகிறீர்கள்???
 
இது உங்களுடைய தனிபட்ட நம்பிக்கை மட்டுமா? அல்லது ஆதாரங்கள்  உடன் நம்ப கூடிய இங்கிலாந்தின் அரசியல் நகர்வுகளில் ஒன்றா???

 

 

 
இலங்கையரசு அமெரிக்கா,பிரித்தானியாவிற்கு தெரியாமல் அவர்கள் உதவி இல்லாமல் தான் யுத்தத்தை நடத்தி முடித்தது இல்லையா மருதங்கேணி அதனாலே மகாராணிக்கு ஏற்பட்ட கோபத்தினாலே அவர் இலங்கைக்கு போக மறுத்து விட்டார்.
 
பாராளுமன்றம்,அவட அரண்மனை அந்த வீதியில் நின்று ஒரு மாதம் ஆர்ப்பாட்டம் செய்யேக்குள்ள கூட திரும்பி பார்க்காத ராணிக்கு இப்பத் தான் தெரியுமாக்கும் வன்னியில் இவ்வளவு பெரிய அழிவு நடத்திருக்குது என்று :( 
 
 பிரித்தானியா அர‌ச‌ குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மகிந்தா குடும்பத்தை கண்டால் பயம் அதான் பொய்யாக ஒரு அறிக்கை விட்ட‌வர்கள் அவவால் தூர‌ப் பயணம் செய்ய முடியாது என்று இல்லையா :o
 
அவ போறாவோ இல்லையோ எங்களுக்கு அதனாலே எந்த லாபமோ,பிர‌யோச‌னமோ இல்லை என்பது தான் கருத்து :)
 

 

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.