Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுத்த நாளின் கனத்த நினைவுகள்....

Featured Replies

அண்று முழுவதும் நல்ல மழை. இப்படி சொல்லத்தான் மன துடிக்குது. ஒருவேளை மழை பெய்திருந்தால் இந்த கதை வேற மாதிரி இருந்து இருக்கும்... என் குடும்பம் அப்ப கொழும்பு "சிலேவைலன்" பகுதியில் "பரக்ஸ் லேனிலை" வசித்து வந்தது. முன்னாலை பொலீஸ் குவாட்டஸ், பின்னாலை "வத்தை", இல்லை "தோட்டம்" எண்று சொல்லும் சேரி பகுதி. கொழும்பு-2 கொம்பனி தெருவின் ஒரு ஒழுங்கை எண்ட வகையில் சுறு சுறுப்புக்கும் வாகன நெரிசலுகும் பஞ்சமே இல்லை. அதிகமாய் தமிழர் வசிக்கும் பகுதி, அனேகமானோர் இந்திய வம்சாவளிகள். அங்கை வெட்டு குத்து குழுக்களுக்கும் பஞ்சம் இல்லைத்தான்...

'காலை வேளை' நான் வெள்ளனவே தூக்கத்தால் எழுந்து குளித்து பள்ளிக்கு வெளிக்கிட்டு தயார்... வழமை போலவே காலை ஏழு மணிக்கு படசாலை, ஆறு மணி பஸ்ஸை பிடிக்க வேணும்... சொல்ல மறந்திட்டன், "அண்டைக்கு என் பிறந்த நாள்". அதுதான் அவசரமாய் சுறுசுறுப்பாய் நானே எழும்பீட்டன். அம்மா (அப்பாவும்தான்)வாங்கி வைத்த சொக்கலேற் எல்லாம் எடுத்து வச்சுக்கொண்டு நான் பள்ளிக்கு போக தயார். அம்மா அரசாங்க உத்தியோகத்தர், இறைவரி திணைக்களத்தில் அதிகாரி , அப்பா தனியார் வைத்திய சாலையில் மருந்தகத்தில் மேற்பார்வையாளர்.... எனக்கு அன்பாய் ஒரே ஒரு அக்கா. "பிஸப்ஸ்" கல்லூரி மாணவி. நான் ""பம்பலபிட்டி இந்து கல்லுரிலை" படிக்கிறேன் எண்று மேசையை தேய்க்கிற வேலை. வரிசையில் எப்பவுமே முன்னுக்கு போய் இருந்துடுவன். நான் கொஞ்சம் உயரம் குறைவு வாத்தியார் எப்பவுமே முன்னாலை வா... எண்டு கூப்பிட்டு விடுகிறதை தவிர்க்க, நானாய் போய் எப்பவுமே இருந்து விடுவன்..

என்னை பள்ளிக்கு கூட்டிக்கொண்டு போறதுக்கு பக்கத்து வீட்டு அண்ணா நந்தா..! நந்தன் என்பதை எல்லாருமாய் சேர்ந்து சுருக்கி விட்டார்கள்.. அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த மலையாளி. நல்லவர் எனது பள்ளிக்கூடத்துக்கு பக்கத்திலைதான் வேலை, என்னை பள்ளிக்கு கூட்டி போக அவருக்கு அம்மா சீசன் ரிக்கட் வாங்கி கொடுத்து, செலவுக்கு காசும் கொடுத்து இருந்தார். இது வளமையான ஒண்று. அவரே அவரது மதிய இடைவேளையில் என்னை வீட்டுக்கு கூட்டி வந்து விட்டுவிட்டு போவார்.

பள்ளிக்கு போக நான் தயார்.. வெளியில் வந்து நந்தா அண்ணா வரும் வரை வாசலில் காத்திருக்க, காலை பேப்பரோடை அமர்ந்து தேனீர் பருகி கொண்டு இருந்த அப்பா "தின்னவேலியிலை பொடியள் அடிச்சவங்களாம் ஆமிக்காறருக்கு எந்த சேதமும் இல்லையாம்". அப்பா அம்மாவுக்கு சொல்லுறது கேட்டுக் கொண்டு இருக்கு... அதுக்குள்ளை நந்தா அண்ணா வந்துவிட, கொம்பனிதெரு பஸ் தரிப்புக்கு நாங்கள் நடக்க தொடங்கீட்டம்.... 'எனக்கு தேரியாது' எனது குடும்பம் ஒண்றாக இருக்கும் கடைசி வினாடிகள் அது எண்று... நாங்கள் போன சில நிமிடங்களில் 134ம் நம்பர் தெகிவளை பஸிலை ஏறி பம்பலப்பிட்டி பள்ளிக்கூடத்துக்கு வெள்ளனவே போய் விட்டன்...

பள்ளிக்கூடத்துக்கு போனாபிறகுதான் தெரியுது, ஏதோ அனர்த்தம் நடந்த மாதிரி.. வந்த எல்லாரும் பரபரப்பாய் பிள்ளைகளோட வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள்... யாழ்ப்பாணத்தில் சண்டையாம் சிங்களவர் தமிழரை அடிக்கிறாங்களாம்... மற்றவர்கள் பேசுவது கேட்கிறது. "யாழ்ப்பாணத்திலை சண்டை எண்டால் இங்கை ஏன் தமிழர்களை அடிக்க வேணும்.?" எனக்கு ஒண்டுமாய் விளங்க இல்லை. அதுக்கு பிறகும் கன காலத்துக்கு விளங்க இல்லை... இவர்கள் ஏன் பதட்டமாய் நிக்கிறார்கள் யோசனையோடு நான் நிக்க, என்னை விட்டு போன நந்தா அண்ணாவும் வேகமாய் திரும்பி வாறது தெரியுது, என்னை அவரிடம் ஓடி வரச்சொல்லுறார்... நானும் ஓடிப்போக என் கையை இறுக்கி பிடிச்சவர்தான், 'தர தர'.. எண்டு இழுத்து கொண்டு வேகமாக நடக்க ஆரம்பிச்சிட்டார். என்னாலை அவருக்கு இணையாய் நடக்க முடியேல்லை. அவரின் அவசர நடைக்கு என்னாலை ஓட்டத்தாலைதான் இணை கொடுக்க முடியுது..

கதிரேசன் கோயில் தாண்டி, காலி ரோட்டை குறுக்காய் தாண்டி, அடுத்த பக்கத்திலை அடுக்குமாடி பக்கத்திலை நடக்க ஆரம்பிக்கிறார்... நாங்கள் வரேக்கை இருந்ததை விடவும், வளமையை விட காலி ரோட் வெறுமையாய் இருக்குது, மக்கள் நடமாட்டமும் குறைவு. துரத்திலை 106ம் நம்பர் பஸ் வாறது தெரியுது. வேகமாய் இருவருமாய் ஓடிப்போய் பஸ்தரிப்பில் நிண்டு கையை காட்டுகிறம், எனக்கு பஸ்ஸுக்கு கை காட்டுறது எண்டால் நல்ல விருப்பம். பஸ்ஸும் நிக்க, நாங்கள் இருவருமாய் ஏறுகிறோம்.. அதிசயமாய் பஸ்ஸில் இருக்கைகள் கிடைக்க இருவரும் அமர்கிறோம்... அப்பவும் நந்தா அண்ணா என் கையை விட இல்லை. இறுகின முகத்தோடை அமர்ந்து இருக்கிறர். என்னுடன் ஒண்றும் பேச இல்லை. பஸ் பம்பல பிட்டி சந்தியை நெருங்குகிறது பஸ்ஸில் இருந்தவர்களுக்குள் ஒரே பரபரப்பு, ஒரே அல்லோல கல்லோலம் . வண்டியின் சாரதியும் வண்டியை வேக படுத்துவது போல ஒரு உணர்வு...

என்னதான் நடக்குது கண்ணாடிக்குள்ளாலை எட்டி பாக்கிறேன். பம்பலப்பிட்டி சந்தியில் அமைந்து இருந்த மஜிஸ்ரி திரையரங்கு பக்கமாக நாங்கள் (இப்ப அது இல்லை) அதுக்கு எதிர்பக்கம் ஒரு பஸ் எரிந்து கொண்டு இருக்கு.. யாரோ ஒருவர் கீழ விழுந்து கிடக்கிறார்... அவரை இருவர் எரியும் பஸ்ஸை நோக்கி இழுத்து கொண்டு இருக்கிறார்கள்... ஒரு பத்து பதினைந்து பேர் இரண்டு மூண்றுபேரை போட்டு அடிக்கிறார்கள்.. பாத்த நான் திகைச்சு போனேன்.. எனக்குள்ளை ஒரு பதட்டம். என்ன செய்யுறது.? வழமையாய் எனக்கு எதுக்கேடுத்தாலும் வரும் அழுகைகூட வரூது இல்லை... நெஞ்சு மட்டும் படபடப்பாய் அடிக்க ஆரம்பிக்க எங்கட பஸையும் சிலர் நிப்பாட்ட ஓடி வருவது தெரியுது. பஸ்ஸின் வேகம் கூடியதாலோ என்னவோ அவர்களால் பஸ்ஸை நெருங்க முடியவில்லை. என்னை கீழை பிடிச்சு அமத்தி நந்தா அண்ணா இருந்த, எனது பார்வை தூரம் கட்டுக்குள் வந்து விட வெளியில் நடகிறது ஏதும் கண்ணுக்கு தெரிய இல்லை.. கனபேர் கத்துற சத்தம் மட்டும் காதுகளுக்கை கேக்குது அடிக்கிறவனும் கத்துறான் அடிவாங்கிறவரும் கத்துறார்... எனக்கு பயத்தை தவிர வேற உணர்ச்சியே வேலை செய்ய வில்லை...

அதுக்கு பிறகு பஸ் எங்கயும் நிக்க இல்லை. ஓரிருவர் இறங்குவதுக்காக நிப்பாட்டினாலும் பஸ் வேகமாக போய்க்கொண்டே இருக்கு... பெற்றாவுக்குள் பிரச்சினையாம். பொலீசை அங்கை அப்பதான் கண்டேன் பஸ்ஸை மறிக்கை, கடைசியா தன்னை பற்றி கவலை பட்டாரோ என்னவே பஸ் சாரதியும். கொள்ளுப்பிட்டி "கோள்பேஸ்" பக்கமாக அதிலேயே பஸ்ஸை நிப்பாட்டி விட்டு தன்னாலை இதுக்கு மேலை ஏலாது எண்டுட்டார்..! அதுக்கு பிறகு கொம்பனி தெரு 2 கிலோமீற்றர் வேக நடை.. வீட்டை போறது ஒண்றுதான் என் குறிக்கோள். நந்தா அண்ணாவின் தற தற இழுவை இப்போ இன்னும் வேகமாகி இருந்தது.... அவருக்கை இருந்த பட படப்பு தெரிந்தது... இப்ப எனக்கு அம்மாவை பாக்க வேணும். அப்பாவை பாக்க வேணும். அக்காவை பாக்க வேணும் எண்ட நினைப்பு மட்டும்தான்...! ரெயில்வே கடவை தாண்டி யானைமார்க் சோடா கொம்பனி அதாங்க நீங்க விரும்பி குடிக்கும் நெக்டோ சோடா.. தாண்டியாச்சு இதோ வந்துட்டுது கொம்பனிவீதி...!

கொம்பனி வீதிக்கு வரும்போதுதான் அங்கை இன்னும் ஒரு கொலைக்களம் .. தமிழர் ஒருவருக்கு சொந்தமான "றியோ" திரையரங்கு சூறையாடல் அப்பதான் ஆரம்பமாகி இருக்கு.. முன்னாலை இருந்த கண்ணாடிகளை கொட்டன்கள் கோடாலிகளால் உடைத்து கொண்டு இருக்கிறார்கள். கையிலை கிடைத்தவர்களோடை எல்லாம் சிங்களத்தாலை ஏதோ கேட்கிறாங்கள். சிலரை போட்டு மிருகத்தனமான தாக்குதல் "ஐயோ, ஐயோ" எண்ற சத்தம் கொஞ்சம் அதிகமாகவே கேக்குது... சிங்கள சத்தத்தோடை இரண்டும் சேர்ந்த கலைவையாய் நெஞ்சுக்கை எதையோ பிசைய ஆரம்பிக்க, எனக்கு அங்கை பாக்கவே பயம் பிடிக்க ஆரம்பிக்கிறது.. "றியோ திரயரங்குக்கு" பின்னாலை இருந்த "நவா திரயரங்கு" பக்கமும் சிலர் ஓடுவது தெரிகிறது... தமிழ் ஆக்கள்தான் அங்கை வேலை செய்து கொண்டு இருந்தவர்கள். அவர்களையும் அடிக்க போறாங்கள்.. கொல்லப்போறாங்கள்... கொல்லுவது எண்டு காலையில் பேசிக்கொண்டது என்ன எண்டது எனக்கு இப்ப நண்றாகவே விளங்குகிறது...! யார் அடிச்சாலும் வாங்கிறது தமிழனின் தலை எழுத்து போல, தட்டி கேக்க யாருமே இல்லை... அடிச்சா அடி வாங்கி பதுங்குற கோழைகளாய், ரோட்டோரம் அனாதையாய் ஆதரவில்லாமல் தமிழ் சொந்தங்கள் செத்து கொண்டு இருக்குது...!

அங்கை அடிச்சு, உடைச்சு கொண்டு இருந்தவங்கள் அனேகமானவர்களின் நல்ல பழக்கமான முகங்கள்... எங்கட வீட்டுக்கு பின்னாலை இருந்த "வத்தைக்குள்" வசிப்பவர்கள் பலர் அந்த கூட்டத்திலை... இதுக்கு முன் வரைக்கும் அம்மாவை "அக்கே, அக்கே" எண்டு எங்கட வீட்ட வந்து தங்கட :"வெட்டு காயங்களுக்கு" அப்பா கொண்டு வந்து குடுக்கிற மருந்துகளை போட்டு கொண்டு போறதுகள்.. நல்ல மிருகங்களுக்கு தான் அம்மா சேவை செய்து இருக்கார்.. அப்பாவுக்கு உதுகளை கண்டாலே பிடிக்கிறது இல்லை.. அம்மாதான் கூப்பிட்டு சாப்பாடு வேற குடுக்கிறவ.. கடனாய் எண்டு காசு வேற வாங்கிக்கொண்டு போறதுகள். திருப்பி குடுக்கிறதுதான் இல்லை..! முன்னம் எல்லாம் இவர்களை கண்டால் நான் பயந்தது இல்லை... ஆனா இப்ப நிலைமை தலைகீழ்.... எனக்கு என்னையும் அடிக்க போறாங்கள் எண்டு ஏனோ உள்மனதுக்கை சொல்ல ஆரம்பிக்கிறது.. நந்தா அண்ணாவை நான் பார்க்க அவர் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்த மாதிரி... அவங்களை அவருக்கும் நல்லா தெரியும்.. அதாலையோ என்னவோ... எண்டாலும் அவர் என்னை "தற தற" எண்று அவங்களும் எங்களுக்கு எந்த பிரச்சினையும் செய்யாமல் அவர்களின் வெறித்தனதை வெளியில் காட்டியவாறு நிக்க. நாங்கள் வீட்டுக்கு வந்திட்டம்...!

அம்மாவும் உந்த இடம் எல்லாம் சுத்தி அக்காவை கூட்டிக்கொண்டு அப்பதான் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட மனதுக்கு அப்பதான் கொஞ்சம் நிம்மதி.. "இப்ப தண்ணி வெறி இல்லாமல் கொஞ்சம் நல்ல நிலைமையில் இருக்கிறாங்கள் அதாலை எங்களை பாத்து அடையாளம் கண்டும், விட்டுட்டாங்கள்.. தண்ணியை போட்டுட்டு வந்து கண்மண் தெரியாமல் அடிச்சாலும் அடிப்பாங்கள் " அம்மாவும் அக்காவும் பேசிக்கொள்ளகிறார்கள்." அம்மா ரீவியை போட எங்கட ஜனாதிபதி ஜே.ஆர் ஜேவர்த்தனா, " சிங்கள மக்கள் தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள் எல்லாம் ஒற்றுமையாக ஒண்றாக இருக்க வேணும்" எண்று பேசிக்கொண்டு இருக்கிறார்...! அதுகை தேசிய ஒற்றுமை பாடல் வேற ஒலித்து சோதிக்குது...!

இருட்டி விட்டுது அப்பா இன்னும் வந்து சேர இல்லை... ஆளாலுக்கு ஒரு மூலையில் இருந்து கொண்டு இருக்கிறம்... வெளிக்கதவு தட தட எண்டு வேகமாய் தட்டுகிற சத்தம்.. யாரும் அசைய இல்லை திருப்பவும் தட தட எண்டு பெரிய அழவிலை தட்டுகிறார்கள்.. விட்டா உடைச்சு போடுற மாதிரி சத்தம்.. அம்மாதான் மெதுவாய் எழும்பி போக. பின்னாலையே நானும் ,அக்காவும் அம்மாவோடை ஒட்டிக்கொண்டே போறம்.. கதவு திறப்பு இடுக்கால அம்மா பார்க்கிறா வெளியிலை வெளிச்சம் குறைவாய் இருந்ததாலோ என்னவோ ஒண்றுமே தெரிய இல்லை.. வெளியிலை அக்கே... அக்கே எண்று சிங்கள பாணியில் கூப்பிடுவதும் தட தட எண்று தட்டுவது கேட்குது... இங்கையும் வந்திட்டாங்கள்.. எனக்கு உடம்பு எல்லாம் இரத்தம் சூடாய் ஓடின உணர்வு.. நான் அழ ஆரம்பிச்சிட்டன்...! அம்மா மெதுவாய் கதவை திறக்கிறது தெரியுது.. சிங்களம் சாரளமாக பேசும் அம்மா அவங்களோடை பேச முற்படும் முன்னமே அங்கை ஒருத்தன் இரத்தம் தோந்த கைகளுடன் நிக்கிறது தெரியுது...! அம்மாவிடம் மருந்துபோட சொல்லி கேக்கிறதும் அவர்கள் பேசியதை வைத்து உணர முடிந்தது.. வெளியிலை ஒரு ஐந்து பேர்தான் நிக்கிறாங்கள்.. ஒருத்தனுக்கு கையிலை பெரிய வெட்டு காயம்.. அவனுக்கு மருந்து கட்ட வேணும்..!

அம்மா தயங்கிய வாறு நிக்கிறா... என்ன நடந்து அம்மா கேட்க கண்ணாடி ஒண்டு கையை வெட்டி போட்டுது... அவங்கள் சொல்லுறாங்கள். கொச்சையாய் தமிழிலையும் சிலர் நண்றாகவே பேசுறாங்கள்... "கண்ணாடி வெட்டினதோ..??? அப்ப கொஸ்பிட்டலுக்கு போறதுதான் நல்லது" இல்லாவிட்டால் ஏற்பாக்கி விடும் அம்மா சொல்லுகிறார்... இல்லை "அக்கே" கொஸ்பிட்டல் எல்லாம் பிரச்சினையாலை பூட்டு நீங்கதான் மருந்து போட வேணும் எண்டுறாங்கள்.. வெட்டுப்பட்டவனுக்கு நல்லா இரத்தம் போய் கொண்டு இருக்கு... அம்மா வேற வளியே இல்லாமல் முளிக்க வாசலிலை எல்லாரையும் நிப்பாட்டிபோட்டு காயப்பட்டவன் வீட்டுக்கு உள்ளேயே வந்திட்டான்...

எங்கட தமிழாக்களை சூறையாடின ஒருத்தன்.... கொலைவெறியோடை தாக்கின ஒருத்தன்.. அதனாலை காயப்பட்ட ஒருத்தன்.. தனக்கு மருந்து போடச்சொல்லி கேக்கிறான்... அவனுக்கு மருந்து போட அம்மாவுக்கு விருப்பமே இல்லை. அம்மாவின் முகத்திலை தெரியுது.. ஆனால் அவங்கள் விடுகிறதாயும் இல்லை...! ஒரு சாறத்தாலை சுத்தி பிடிச்ச கை பெரிய வெட்டுத்தான்... அம்மாவுக்கு கை நடுங்கிறது . குரலிலையும் தளர்ச்சி... விட்டா அம்மா அழுது விடுவா போல.. மருந்து பெட்டியை எடுத்து பக்கதிலை வச்சு அவனின் காயத்தை மருந்தை போட்டு கழுவ ஆரம்பிக்கிறார்... காயத்துக்குள் அதிகமான கண்ணாடி துண்டுகள்.. அவங்கள் வைத்து இருந்த ரோச் லைட்டை பிடித்து போதுமான வெளிச்சத்தோடை கண்ணாடி துண்டுகளை ஒண்டு ஒண்டாய் வெளியாலை எடுத்து மருந்து கட்டி அனுப்ப சாமம் கடந்து விட்டுது...

அம்மா செய்தது எங்கட சனத்துக்கு செய்த துரோகம்தான்.. அனால் எங்களை காப்பாத்த வேற வளி இல்லை....

ஆனா "அப்பா இன்னும் வீட்டுக்கு வந்து சேர இல்லை"

Edited by தயா

தல, உங்கள் சொந்தக்கதையோ? :)

  • தொடங்கியவர்

தல, உங்கள் சொந்தக்கதையோ? :)

ம்ம்...

:)

கதை இடைவழியில நிக்கிது. மிச்சத்தையும் எழுதுங்கோ. அப்பாவுக்கு என்ன நடந்தது? பிறகு எப்பிடி கலவரத்துக்கால தப்பி வந்தியள்? இவற்றையும் எழுதினால், இந்த விசயங்களை பற்றி அறியாத ஆட்கள் அறிந்துகொள்ள உதவியா இருக்கும். எங்களில் பலர் அடிக்கடி சிங்களவன் எவ்வளவு கொடூரமானவன் என்பதை மறந்துவிடுகின்றார்கள். இப்படியான கதைகளை இவர்களிற்கு திரும்பவும், திரும்பவும் சொன்னாத்தான் இவர்கள் சிங்களவனுக்கு *** கழுவுவதை ஓரளவுக்காவது குறைக்க முடியும். நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா செய்தது எங்கட சனத்துக்கு செய்த துரோகம்தான்.. அனால் எங்களை காப்பாத்த வேற வளி இல்லை....

ஆனா "அப்பா இன்னும் வீட்டுக்கு வந்து சேர இல்லை"

என்ன தல

இப்படிக் கொண்டு வந்து முடித்திருக்கின்றீர்கள். அப்பாவைக் காணவில்லை என்பது எங்களுக்குப் படபடப்பை ஏற்படுத்துகின்றது. ஏதாவது நல்ல மாதிரிச் சொல்லுங்கள்.

காலம் காலமாகத் தமிழனுக்கு அப்படியான சம்பவங்கள் நடந்தாலும் 83ம் ஆண்டில் அப்படி நடந்த சம்பவங்கள் தான் நாம் எம்மைப் பலப்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் உதிர்த்த உணர்வுகளுக்குக் காரணமாக அமைந்திருந்தது. குள்ளநரி என்று பெயர் பெற்ற ஜேஆர் அந்த விடயத்தில் தன் இரத்தப்பசியை வெளிப்படையாகக் காட்டித் தோற்றுப் போனார்.

யூலை மாதத்தின் பாதிப்புத் தானா உங்களின் மின்னஞ்சலிலும் இருக்கின்றது???

துரத்திலை 106ம் நம்பர் பஸ் வாறது தெரியுது. வேகமாய் இருவருமாய் ஓடிப்போய் பஸ்தரிப்பில் நிண்டு கையை காட்டுகிறம், எனக்கு பஸ்ஸுக்கு கை காட்டுறது எண்டால் நல்ல விருப்பம்.

106ம் பாஸ் கதிரேசன் வீதியால் போவதில்லை நான் நினைக்கின்றேன். சிலோவைலன் போறது என்றால் 101 பஸ்சில் தான் போகவேணும் போல

அம்மா செய்தது எங்கட சனத்துக்கு செய்த துரோகம்தான்.. அனால் எங்களை காப்பாத்த வேற வளி இல்லை....

ஆனா "அப்பா இன்னும் வீட்டுக்கு வந்து சேர இல்லை"

..........................

கற்பனைக்கு எட்டாத நிஜங்கள் தான் எத்தனை !! அம்மாவின் சந்தர்ப்ப சூழலை தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது. இங்கே துரோகம் என்ற வார்த்தை நெஞ்சை நெருடுகின்றது. அப்பா வீடு வந்து சேரவில்லை என்று முடிவதை என்னவென்று சொல்வது.. இது உங்கள் சொந்தக்கதை என்னும் போது ஆறுதல் சொல்ல கூட முடியாத ஒரு நிலை இருக்கின்றது அது வேதனை. எனக்கு கடவுள் நம்பிக்கையும் கிடையாது அதை இழுத்து போட்டு இரண்டு வார்த்தை சொல்ல. சொல்லக்கூடியதெல்லாம் ஒன்றுதான் எழுதுங்கள், தொடர்ந்து எழுதுங்கள்.. இந்த நிஜத்தை படித்து கவலைப்படுகின்றேன் நீங்கள் எழுதியதை நினைத்து உங்களை வாழ்த்துகின்றேன்.

அன்று வீடு திரும்பாதோர் எத்தனை பேர்...

அன்று நாம் பட்ட வேதனையை உணர்த்தி நிற்கும் கடைசி வசனம் கதைக்குப் பொருத்தமான முடிவே.

பாராட்டுக்கள்.

தமிழன் டயரில் பொசுக்கப்பட்டு வீடுகள் சூறையாடப்பட்டு..

சிங்கள காடையரிடம்..சிக்குண்டு சின்னாபின்னமாகிய..அன்றைய அப்பாவித் தமிழர்களை இந்தக் கறுப்பு யூலை நினைவு படுத்த வேண்டியதில்லை

தமிழன் வீரத்திற்கும் விஸ்வரூபத்திற்கு அடித்தளமான அந்த சம்பவத்தின் ஒருதுளியை கனத்த இதத்துடன் படைத்த "தல" யுடன் எங்கள் வேதனையையும் பகிருகின்றோம்

  • தொடங்கியவர்

தமிழனுக்கு தனியா நாடும் இல்லை கேட்க நாதியும் இல்லை.... எனக்கு தெரிய 1983 வருட கலவரம் சொன்ன நீதி அது...! அடிச்ச உடனை எல்லாரும் யாழ்ப்பாணம் தான் ஓடினாங்கள்... எங்களுக்கு பாதுகாப்பு தந்த யாழ்ப்பாணம் தானே என் தாயகம்...

யூலை மாதத்தின் பாதிப்புத் தானா உங்களின் மின்னஞ்சலிலும் இருக்கின்றது???106ம் பாஸ் கதிரேசன் வீதியால் போவதில்லை நான் நினைக்கின்றேன். சிலோவைலன் போறது என்றால் 101 பஸ்சில் தான் போகவேணும் போல
106 நம்பர் பஸ் சிலேவைலன் அப்பவும் போறது இல்லை நேராக சிலிங்கோ, காபர், அப்பிடியே கொச்சிக்கட எண்டு நினைக்கிற்றன்...!!

பொம்பர், புக்காரா வந்தாலோ இல்லை ஆமி கதவை தட்டினாலோ வரும் அந்த படபடப்பு..பயம்..

(ஆனா கண்ணீர் வாறதில்லை) எல்லாம் நானும் அனுபவித்திருக்கிறேன்.

உங்க கதையை வாசிக்கும் போது உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நன்றாக புரிகின்றது.

அதுவும் இப்படியான வெறியர்களை நேரில கண்டால்...அது இன்னும் கஷ்டமானது.

......

அப்பாக்கு என்னாச்சு?கதையை மிச்சம் தொடருங்கள்..

தயா அண்ணா உங்கள் பிறந்த தினம் அதுவுமா இபப்டி எல்லாம் நடந்துபோச்சுது. உங்கள் கவலையை கதை வடிவில் சொல்லுறீங்க. என்றும் சந்தோஷாமக இருக்க இறைவனை வேண்டுகின்றேன்.

அதுசரி அப்பாக்கு என்னாச்சு? அதையும் சொல்லுங்கோவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயா அண்ணா அப்பவுக்கு என்ன நடந்தது????

கதையில வேற " இன்டைக்கு தான் நாங்க எல்லாரும் குடும்பத்தோடு சந்தோசமாக இருந்த நாள்" என்டு வேற எழுதீட்டிங்க ஒரே டென்சனா இருக்கு.

உந்த 83 தான் எம்மையும் கொழும்பில இருந்து யாழ்ப்பாணத்திற்கு கையில ஒன்டும் இல்லாம கலைத்து விட்டது

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனது குடும்பம் ஒன்றாக இருக்கும் கடைசி வினாடிகள் அது என்று தயா குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் அவருடைய அப்பாவை மீண்டும் தயா பார்க்கவில்லை. கொடுமை. வாசிக்கும் போதே கவலையாக இருக்கிறது.

இப்படியான பதிவுகள் யாழுக்கு வரவேண்டும். புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் சிலர் சிங்களவரோடு சந்தோசமாக இருக்கலாம் என்று இப்பவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சிங்களக் கொடியைப் பிடித்து சிங்கள அணிக்கு துடுப்பாட்டத்தில் ஆதரவு தருகிறார்கள்.

தயா உங்கள் அம்மா செய்தது துரோகமல்ல. அப்படிச் செய்யாது விட்டால் அவர்களினால் உங்கள் குடும்பத்துக்கு கேடு நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

யாழில் நான் சந்தித்த சகோதர சகோதரிகளுக்கு சொந்த வாழ்க்கையில் எத்தனை கொடுமைகள்.

சாத்திரியின் தகப்பனாரை இந்திய இராணுவம் படுகொலை செய்தது. தயாவின் தகப்பனார் 83 கலவரத்தில்....

சினேகிதியின் மாமா (மொரட்டுவா பல்கலைக்கழக மாணவர்) இராணுவத்தினால் கடத்தி பல வருடங்களாகி காணமல் போய் விட்ட கொடுமை.

தூயாவின் சகோதரி அமைதிக்காக வந்த இந்தியா எருமைகளினால் சிதைக்கப்பட்டு கொலை.

தமிழராகப் பிறந்ததற்காக கைது செய்யப்பட்டு சிங்களச் சிறைச்சாலையில் கொடுமைகள் அனுபவித்த கலைஞன்

இன்னும் எத்தனை எத்தனை சோகங்கள்.....

சோழியன் அவர்களின் 83 யூலை அனுபவத்தினை வாசிக்க

http://www.yarl.com/forum3/index.php?showtopic=12242

  • தொடங்கியவர்

எனது குடும்பம் ஒன்றாக இருக்கும் கடைசி வினாடிகள் அது என்று தயா குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் அவருடைய அப்பாவை மீண்டும் தயா பார்க்கவில்லை. கொடுமை. வாசிக்கும் போதே கவலையாக இருக்கிறது.

சில கொடுமையான விடயங்களை மறந்து விடுவது நல்லது... ஆனால் இதை மறப்பதும் கூட கொடுமையாக பட்டது அதுதான் மீட்டி பார்த்தேன் அண்ணா...!

  • தொடங்கியவர்

தயா அண்ணா அப்பவுக்கு என்ன நடந்தது????

கதையில வேற " இன்டைக்கு தான் நாங்க எல்லாரும் குடும்பத்தோடு சந்தோசமாக இருந்த நாள்" என்டு வேற எழுதீட்டிங்க ஒரே டென்சனா இருக்கு.

உந்த 83 தான் எம்மையும் கொழும்பில இருந்து யாழ்ப்பாணத்திற்கு கையில ஒன்டும் இல்லாம கலைத்து விட்டது

நண்றி இன்னிசை...!

வழமையான எல்லா தமிழ் குடும்பங்களும் அனுபவித்த கதைதான் எனது குடும்பத்தினதும்..... இதைவிட துன்ப பட்டவர்கள் ஏராளம்...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிஜங்களுக்கு பதில் என்று எழுத வார்த்தையில் என்ன இருக்கின்றது????

தலைவனின் சிந்தனைதான் எனது மூளையில் படுகின்றது

"அவலத்தை தந்தவனிடமே அதை திருப்பி கொடுத்துவிடு"

இலங்கையில் நடைபெறும் பல்வேறு கொடுமைகளுக்கு மத்தியில் பலருக்கு அனுபவமிருக்கிறது. தயாவின் யூலைக் கலவரத்தினைப் போல, உங்கள் வாழ்க்கைகளில் நடந்த சம்பவங்களையும் , அனுபவங்களையும்(உ+ம் 95ம் ஆண்டு இடப்பெயர்வு, இந்திய இராணுவ காலம்)யாழ்களா உறுப்பினர்கள் யாழில் எழுத வேண்டும்.

  • 6 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  தயா

 

இருவரும் ஒரே  பாடசாலை  என்பதும்

நானும் அதே 101 இல் தான்  ஆமர் வீதிக்கு வருபவன்  என்பதும்  சில  ஒற்றுமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.