Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் ஆக்கள் எல்லாரும் இந்தமுறை வெளிநாடுகளில பொங்கல் கொண்டாடுறீங்களோ?

தமிழ் ஆக்கள் எல்லாரும் இந்தமுறை வெளிநாடுகளில பொங்கல் கொண்டாடுறீங்களோ? 34 members have voted

  1. 1. தமிழ் ஆக்கள் எல்லாரும் இந்தமுறை வெளிநாடுகளில பொங்கல் கொண்டாடுறீங்களோ?

    • ஆம் - விமரிசையா கொண்டாடுறம்
      6
    • ஆம் - சிறிய அளவில அடக்கமா கொண்டாடுறம்
      18
    • இல்லை - இந்தமுறை கொண்டாட இல்லை
      0
    • இல்லை - ஊரைவிட்டு வெளிக்கிட்டபின் ஒருதடவையும் கொண்டாடுவது இல்லை
      9
    • வேறு ஏதாவது பதில்?
      1

Please sign in or register to vote in this poll.

Featured Replies

அனைவருக்கும் வணக்கம்,

ஒரு சின்ன கருத்துக்கணிப்பும், விவாதமும். அதாவது என்ன எண்டால் இந்த முறை வெளிநாட்டில வாழுற தமிழராகிய நீங்கள் எப்படி பொங்கலை கொண்டாடுறீங்கள் எண்டு ஒரு கருத்தாடல்.

யாழ் முகப்பில வேற பொங்கல் பானை ஒண்டு கீறி அதுக்கு பக்கத்தில தமிழர்க்கு ஒருநாள் - இது தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவநாள் எண்டு எழுதி கரும்பு, நெற்கதிர்களிண்ட படம் கீறி சுவரொட்டி போட்டு இருக்கிறீனம். இந்தவருசம் பானையில பொங்கப்போறது பாலா இல்லாட்டி இரத்தமா எண்டு வருசமுடிவிலதான் தெரியும்.

நான் கடைசியாக சந்தோசமா கொண்டாடிய பொங்கல் என்றால் ஆமி ஊரில ரவூடீசம் செய்ய முன்னம் ஊரில் இருந்தபோது நான் சிறுவயதில வெடி, புஸ்வானம் எல்லாம் கொளுத்தி கொண்டாடிய பொங்கல். அதுக்குபிறகு பொங்கல் எண்டால் வெடிகள நாங்கள் சுடவேண்டிய தேவை இருக்க இல்லை. ஷெல்லுகள், குண்டுகள், சூடுகள் எண்டு தாராளமா அரசாங்கமே தங்கட செலவில பொங்கல் அண்டைக்கு வெடிகொளுத்துவாங்கள்.

அதுக்கு பிறகு வெளிநாடு எண்டு வந்து ஒரு ஓரமா ஒதுங்கியாச்சிது. பெரியாக்கள் எங்களுக்கு பொங்கல் தேவை இல்லை எண்டாலும், வெளிநாடுகளில குழந்தைகளுக்காக நாங்கள் பொங்கல் செய்யவேண்டிய ஒரு முக்கிய தேவையும் இருக்கிது.

இப்ப ஜெயா டீவியிலையும் பொங்குறாங்கள். சன் ரீவியிலையும் பொங்குறாங்கள். மதிப்புக்குரிய சனாதிபதி மகிந்தவும், அமைச்சர் தேவ ஆனந்தனும் கூட வெள்ளை மாளிகையில.. மன்னிக்கவும் அலரிமாளிகையில பொங்கல் விமரிசையா கொண்டாடப் போறீனம். இத மகேஸ்வரன் எம்.பிய போட்டு தள்ளினதுக்கான வெற்றிவிழாவாகவும் அவேள் கொண்டாடலாம். சிறீ லங்கா சனாதிபதி தமிழ் மக்களிற்கு விடப்போகும் பொங்கல் வாழ்த்துச்செய்திய ஆவலோட கேட்க நான் ரூபவாஹினி சனல சட்டலைட்டுக்கால சப்ஸ்கிரைப் பண்ணலாம் எண்டு இருக்கிறன்.

மற்றது இன்னொரு முக்கிய செய்தி.. யாராவது பெரிய தலைகளா இருந்தால் இந்தமுறை பொங்கல் தினமன்று கோயிலுகளுக்கு போகாம வீட்டுக்க இருங்கோ. பொங்கல் அன்றைக்கு கோயிலுக்க வச்சு போட்டு தள்ளுறதுக்கு யார் யார உவங்கள் பிளான் பண்ணி வச்சு இருக்கிறாங்களோ தெரியாது. பொங்கல் அன்றைக்கு சூடு விழுந்தால் சனம் யாரோ வெடி சுடுறாங்களாக்கும் எண்டு நினைச்சுப்போட்டு அவசரத்துக்கு உதவிக்கும் வராதுகள். எண்டபடியால் சிறீ லங்காவில இருக்கிற பெரிய தலைகள் பொங்கல் அண்டைக்கு கொஞ்சம் கவனமா இருங்கோ.

மற்றது பொங்கல் அண்டைக்கு நிறைய, ஏராளம் பொங்கல் (புக்கை) மற்றது வாழைப்பழம் பலகாரம் எண்டு திண்டுபோட்டு (விழுங்கிப்போட்டு) அண்டைக்கு முழுவதும் மப்பில விழுந்து விழுந்து தூங்கிக்கொண்டு இராமல் அளவாக நிதானமாக கொஞ்சமா உண்டு சந்தோசமா இருங்கோ. பொங்கல காலம்பற கொஞ்சமா சாப்பிட்டுபோட்டு மிச்சத்த பிரிஜ்ஜுக்க வச்சு இரவைக்கு தாராளமாச் சாப்பிட்டா இன்னும் வசதியா இருக்கும். இரவு நித்தாவும் நல்லா அடிக்கும்.

நீங்கள் இதுபற்றி எல்லாம் என்ன என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பொங்கல் 2008 எண்ணங்கள கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கோ.

உங்கள் கருத்துக்களிற்கு நன்றி!

Edited by கலைஞன்

  • Replies 92
  • Views 12.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்துக்கணிப்பு கலைஞன்!!!

சரியோ! தப்போ இப்படியொரு நாள் வருவதால்தான் வருடத்தில ஒரு நாளைக்கெண்டாலும் வெண்பொங்களும் கத்தரிக்காய் பால்கறியுமாகச் சுவைக்க முடிகிறது. பிறகெங்க நேரம் கிடைக்குது!!!

ஊரிலயெண்டால் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில பொங்கிச் சாப்பிடலாம்!!! :lol::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கலைஞனே நல்ல கருத்து கணிப்பு.நான் கட்டாயம் கொண்டாடுவேன் சிட்னி வாழும் இந்து தமிழர்களும் கொண்டாடுவீனம் கார் இருக்கு,பணம் இருக்கு,கோயில் இருக்கு கொண்டாடுவதிற்கு ஏது குறை இது ஒரு கேள்வியா?ஒ ஒ ஒ நாட்டில பிரச்சினை அதால கொண்டாட மாட்டோம் என்று நினைக்கிறீங்களோ?அது நடப்பது எத்தனையோ மைல்களிற்கு அப்பால் ஆனால் பொங்கல் நடப்பதோ எமது வீட்டில் அதுவும் எமது இந்துகள் வீட்டில் எப்படி தமிழ் கிறிஸ்தவர்கள் வீட்டில் கிறிஸ்மஸ் கொண்டாடினார்களோ அது போல் தமிழ் இந்துகள் வீட்டிலும் நாங்கள் கொண்டாடுவோம் இதில எது தப்பு?

"மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்திலும் பார்க்க மததிற்கு கொடுக்கும் காலம் இந்த யுகம்"

மொழியால் மதம் வளர்ந்தது (அதாவது இந்து,இஸ்லாம்,கிறிஸ்தவம்) ஆனால் மதத்தால் தமிழ் மொழியை வளர்ப்பார்களா?புத்தனின் கேள்வி

புலம்பெயர்ந்த ஆரம்பத்தில், மண்ணை, உறவுகளைப் பிரிந்த வருத்தத்தில் கொண்டாடுவதற்குரிய மனநிலை இருக்கவில்லை. படிப்படியாக இவ்வாழ்விற்குப் பழகிக் கொண்டாலும் பண்டிகைகளை விமரிசையாகக் கொண்டாடப் பழகவில்லை. அதுவும் நல்லதாகி விட்டது. இப்போது, தாயகத்தில்தான் இனிக் கொண்டாடுவது என இருக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர், தாயகம் சென்றபோது, பொங்கலுக்கும் அங்கிருந்து விட்டு வருவதாகப் பிளான் செய்திருந்தேன். ஆனால், அதற்கு முன்னரே திரும்ப வேண்டிய கட்டாயமாகிவிட்டது. இனிமேல், தாயகத்தில்தான் எந்தப் பண்டிகையையும் கொண்டாடுவதாக இருக்கிறேன். ஆனால், தாயகத்தில் இருப்பவர்கள் இதனைக் கட்டாயம் கொண்டாடவேண்டும். பல இன்னல்களுக்கு மத்தியில் வாழும் அவர்களுக்கு இவைதான் புத்துனர்வைக் கொடுக்கும். ஆகவே, தாயகத்தில் கொண்டாடுவதை வரவேற்கிறேன்.

வழமைபோல், வீட்டில் அம்மா இயந்திர அடுப்பில் பொங்கல் செய்வா. அதனை பின்னேரம் வேலையால் வந்தபின்பு, மைக்ரோ ஓவனில் சூடாக்கிவிட்டுச் சாப்பிடுவதுதான் வழமை. இதுதான் எங்கள் வீட்டுப் பொங்கல். :lol::rolleyes::rolleyes:

Edited by Thamilachchi

ஓஓ இப்படி இடைக்கிடை கருத்துக் கணிப்பு நடாத்தி உங்கள் தேசியப் பற்றையும் காட்ட விளைகின்றீர்கள். இப்ப நீங்கள் எதைச் சொல்ல வருகின்றீர்கள் என்பதை தெளிவாக புரிஞ்சுக்கவும் முடியலை. காரணம் பொங்கலுக்காக எங்கள் தேசியவாதிகள் (நீங்கள் உட்பட தேசியவாதிகளாலும் தமிழ்ச்சமூகத்தை சீரழிக்கும் இந்திய சினமாக் கலாச்சாரம் என்று குறிப்பிட்ட) நடிகர்கள், நடிகைகள், பாட்டுக்காரர்கள் என்று அழைத்து நாட்டு அவலங்களை மறந்து குத்தாட்டம் போட்டு கொண்டாட்டம் நடத்தும் போது உங்க கணிப்பு எப்படீங்க எனக்குப் புரியும். இலண்டன், பாரீஸ், சுவிஸ் என பரந்துபட்டு நடக்கும் குத்தாட்ட நிகழ்வொன்றில் பங்குபற்றி அவர்களுடன் படமெடுத்து முடிந்தால் லஞ்சோ, டின்னரோ அவர்களுடன் சாப்பிட்டு முடிக்க வேண்டுமென்பது தான் இந்தச் சாமானியனின் சிந்தனையிலுள்ளது. தயவுசெய்து இப்ப போய் ஊர் நிலைமையை நினைப்பூட்டி என் சந்தோசத்தைக் கெடுக்காதீங்க. :rolleyes::rolleyes:

நிறைய எழுத நேரமில்லை. நிகழ்ச்சிக்கு நேரமாகுதுங்க!!!! :lol::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் கடைகளில் பொங்கல் பொதி விற்பனைக்குள்ளது. just 15$ தான் :lol:

என்ன நீங்க எல்லோரும் பொங்கல் கொண்டாடாமல் கவலையை மற்க்க பியர் அடிப்பிங்க அவ்வளவு தானே. :rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பெயர் நாடுகளில் நடக்கும் அனைத்து தமிழர் பண்டிகைகளும் ஒரு நினைவு தினம் மாதிரியே கொண்டாடப்படுகின்றது. உணர்ச்சிகள்,உறவுகள் ,அந்த காலைநேர சூரியோதயம், அந்த மண்வாசனை இல்லாத கொண்டாட்டங்கள் எல்லாம் ஒரு உப்புசப்பில்லாத நினைவு தினங்களே.

என்னமோ தெரியவில்லை கடவுள் அந்தந்த மண்ணுக்கேற்ற மாதிரி அந்தந்த மக்களுக்கேற்றமாதிரி வாழ்க்கையையும் பண்டிகைகளையும் வகுத்துள்ளான்.

ஆனால் எம் வருங்கால சந்ததியினருக்குக்காவது நாம் இதனை கடைப்பிடிக்க வேண்டும்.ஏனெனில் ஒருசில நாத்தீகவாதிகளால் தமிழ்கலாச்சாரம் மற்றும் இந்து கலாச்சாரம் மறக்கடிக்கப்பட்டு விடும்.

சிங்களவன் எம்மை அழிக்கின்றானோ இல்லையோ அது வேறு விடயம். அதற்கிடையில் எமக்குள் இருக்கும் தமிழ் நாஷிகளிடமிருந்து எம் இனத்தை எம் மொழியை எம் கலாச்சாரத்தை எம் அரும்பெரும் பண்டிகைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏராளம்.

அநேகமான புலம்பெயர் தமிழர்களுக்கு தினசரி கொண்டாட்டங்களும் பண்டிகைகளுந்தான் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன இதில் தைப்பொங்கல் சித்திரைப்பொங்கல் தீபாவளி சும்மாய் சேட்டை விட்டுக்கொண்டு.........

  • கருத்துக்கள உறவுகள்

"மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்திலும் பார்க்க மததிற்கு கொடுக்கும் காலம் இந்த யுகம்"

மொழியால் மதம் வளர்ந்தது (அதாவது இந்து,இஸ்லாம்,கிறிஸ்தவம்) ஆனால் மதத்தால் தமிழ் மொழியை வளர்ப்பார்களா?புத்தனின் கேள்வி

புத்தன்,

மொழியையெல்லாம் வளர்த்து என்ன வாழும் நாடுகளிலை போராடவோ போறம். ? எங்கடை பிள்ளைகள் புலத்தில பிறந்ததுகள் அதுகளுக்கேன் மொழி ? அதெல்லாம் பிழையான காரியம். இன அடையளாத்தை தாவணியாலும் மதத்தாலும் மட்டுமே பேணலாம். உங்கடை மொழியென்ன மொழி ? :lol:

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு பிறகு வெளிநாடு எண்டு வந்து ஒரு ஓரமா ஒதுங்கியாச்சிது. பெரியாக்கள் எங்களுக்கு பொங்கல் தேவை இல்லை எண்டாலும், வெளிநாடுகளில குழந்தைகளுக்காக நாங்கள் பொங்கல் செய்யவேண்டிய ஒரு முக்கிய தேவையும் இருக்கிது.

கலைஞன் நீங்கள் சொன்னது போல பிள்ளைகளுக்கு பொங்கல் தமிழர் திருநாள் உழவர் திருநாள் என்று பாடத்தை மட்டும் சொல்லிக்குடுத்துவிட்டு பொங்கலை முடித்துவிட முடியாது. நிச்சயமாக குழந்தைகளுக்காக பொங்கல் பொங்க வேண்டிய தேவையிருக்கிறது.

இங்கு தமிழாலங்கள் (இந்து ஆலயங்கள் என்று பொருள் அல்ல - பிள்ளைகள் தமிழ் கற்கும் தமிழாலயம்)

பொங்கல் விழாவை ஏற்பாடு செய்து பிள்ளைகளை அந்த விழாவில் பங்கெடுக்க வைப்பது வழமை. அவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் கலை நிகழ்வும் நடைபெறுகிறது. இவை வரவேற்கப்பட வேண்டியவை.

Edited by shanthy

ஊரில முத்தத்தில கோலம் கோட்டு.. தப்பா நினைக்காதீங்க.. முற்றத்தில கோலம்போட்டு 84 வரை கொண்டாடினதுதான்.. பிறகு இங்கை வந்து ஒரு நாலு வருடம் நம்ம தோஸ்துகளோட தனி வாழ்க்கை.. பொங்கலென்ன.. வருசமென்னா.. பிரிவினை காட்டாமை பியர் நுரை அந்தமாதிரிப் பொங்கும்.. :lol:

அதுக்கு பிறகு குடும்பம்.. அப்பிடி இப்பிடீன்னு ஏதோ கரண்ட் அடுப்பில பொங்கும்.. நமக்கும் இனிப்பு என்றால் கொள்ளை விருப்பமா.. அதுக்காகவே பொங்கல் வருதென்று முதல்லையே அறிவிச்சுடுவன்..

இப்ப பொங்கலோட சில அயிட்டங்ககளும் செய்தாக வேண்டிய நிலை.. ஏன்னா இலவச ரெலிபோன் வசதி வந்த பிறகு.. இந்த தாய்க்குலங்கள் தங்களுக்குள்ள 'பொங்கலுக்கு என்ன விசேசம்?' என்று ஆரம்பிச்சு வடை முறுக்கு என்று அடுக்குறதையே பெருமையா நினைச்சு லிஸ்ட்டை வளர்த்துக்கொண்டே போகுங்கள்.. அதுக்காக நம்ம வீட்டிலயும் பொங்கலோட வேற அயிட்டங்களும் தடபுடல்.. நமக்கென்ன.. அன்று வருத்தங்களை மறந்து சுதந்திரமா ஒரு பிடி பிடிக்க சுதந்திரம்.. அதனால பொங்கலோ பொங்கல்!! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் மூக்குமுட்ட பிடிக்கிறதுக்கு ஒருநாள் அது பொங்கல்நாள்

ஏன் உங்க வீட்டுல் மத்த நாள் எல்லாம் உங்கள பட்டினியா போடுறாங்கள் .

சோழியன் மூக்குமுட்ட பிடிக்கிறதுக்கு ஒருநாள் அது பொங்கல்நாள்

ஏன் உங்க வீட்டுல் மத்த நாள் எல்லாம் உங்கள பட்டினியா போடுறாங்கள் .

இனிப்பு பொருட்களை எல்லாம் ஒழிச்சு வைச்சுடுறாங்க.. இரவிரவா தேட வேண்டி இருக்கே திருடனைப் போல! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் மூக்குமுட்ட பிடிக்கிறதுக்கு ஒருநாள் அது பொங்கல்நாள்

ஏன் உங்க வீட்டுல் மத்த நாள் எல்லாம் உங்கள பட்டினியா போடுறாங்கள் .

அதுக்காக நம்ம வீட்டிலயும் பொங்கலோட வேற அயிட்டங்களும் தடபுடல்.. நமக்கென்ன.. அன்று வருத்தங்களை மறந்து சுதந்திரமா ஒரு பிடி பிடிக்க சுதந்திரம்.. அதனால பொங்கலோ பொங்கல்!! :lol:

பொசுக்கெண்டு போகாமல் நீண்ட ஆயுள்வேண்டி அண்ணி அண்ணை சோழிக்கு மற்றநாள்களில் அவியலும் மரக்கறியும் குடுக்கிறா. ஆனால் இடைக்கிடை பொங்கலோ பொங்கலோ குடுக்கிறா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வெளிநாட்டில் வாழும் தமிழரால் ஏதோ இதை கொண்டாடினால் தீமை அல்லது ஈழ விரோத போக்கு என்று சொல்லுறிங்க. ஆனால் ஈழத்தில் நிலைமை அப்படியல்ல.

உதாரணமாக இது யுத்த காலத்தில் தான் நடக்கின்றது. (தமிழரின் வரலாற்றை உணர்த்த என்று இப்போ சொல்ல வேண்டாம்)

கிளிநொச்சியில் குரும்பசிட்டி இரா.கனகரத்தினத்தின் நூறு ஆண்டுகால ஆவணச் சேகரிப்புக்களின் கண்காட்சி

http://www.puthinam.com/full.php?2bWSnde0d...d424XX3b026Mn3e

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞா,

ஊரை விட்டு வெளிக்கிட்ட பிறகு கொண்டாட்டம் என்று எதுவுமே இல்லை பனிக்குளிர்...வேலை பள்ளிக்கூடம்...இப்படியே ஓட்டம் தான்..ஆனால் வீட்டில் அம்மா பொங்கி சாமிக்குப் படைப்பா. ஊரில் எத்தனை பெரிய நிகழ்வு அது...பெரிய முற்றம் வீட்டில்...சாணியால் மெழுகி கோலம் போட்டு தென்னோலைத் தோரணங்கள் கட்டி...மாவிலை கட்டி அடுத்த வீட்டில் பால் பொங்க முன்னர் எங்கள் வீட்டில் பொங்கும் போது வெடி சுட்டு...ம்ம்ம்...இப்ப என்னதான் செய்யிறது.?

பொங்கி வைச்ச சர்கரைப்பொங்கலை வேலை விட்டு வந்து ஆறரை மணிக்குச் சாப்பிட வேண்டியதுதான்..

இனி தனித்தமிழீழம் கிடைத்த பின்னர் தான் எந்தக் கொண்டாட்டங்களும்

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் சிறிய அளவில் அடக்கமா கொண்டாடுவோம்.

சிறீ லங்கா சனாதிபதி தமிழ் மக்களிற்கு விடப்போகும் பொங்கல் வாழ்த்துச்செய்திய ஆவலோட கேட்க நான் ரூபவாஹினி சனல சட்டலைட்டுக்கால சப்ஸ்கிரைப் பண்ணலாம் எண்டு இருக்கிறன்.

ஒரு புல்லட் ரவையாவது வாங்க உதவி செய்யிறீங்க!!! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பெயர் நாடுகளில் நடக்கும் அனைத்து தமிழர் பண்டிகைகளும் ஒரு நினைவு தினம் மாதிரியே கொண்டாடப்படுகின்றது. உணர்ச்சிகள்,உறவுகள் ,அந்த காலைநேர சூரியோதயம், அந்த மண்வாசனை இல்லாத கொண்டாட்டங்கள் எல்லாம் ஒரு உப்புசப்பில்லாத நினைவு தினங்களே.

என்னமோ தெரியவில்லை கடவுள் அந்தந்த மண்ணுக்கேற்ற மாதிரி அந்தந்த மக்களுக்கேற்றமாதிரி வாழ்க்கையையும் பண்டிகைகளையும் வகுத்துள்ளான்.

ஆனால் எம் வருங்கால சந்ததியினருக்குக்காவது நாம் இதனை கடைப்பிடிக்க வேண்டும்.ஏனெனில் ஒருசில நாத்தீகவாதிகளால் தமிழ்கலாச்சாரம் மற்றும் இந்து கலாச்சாரம் மறக்கடிக்கப்பட்டு விடும்.

சிங்களவன் எம்மை அழிக்கின்றானோ இல்லையோ அது வேறு விடயம். அதற்கிடையில் எமக்குள் இருக்கும் தமிழ் நாஷிகளிடமிருந்து எம் இனத்தை எம் மொழியை எம் கலாச்சாரத்தை எம் அரும்பெரும் பண்டிகைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏராளம்.

அநேகமான புலம்பெயர் தமிழர்களுக்கு தினசரி கொண்டாட்டங்களும் பண்டிகைகளுந்தான் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன இதில் தைப்பொங்கல் சித்திரைப்பொங்கல் தீபாவளி சும்மாய் சேட்டை விட்டுக்கொண்டு.........

ஐயா குமாரசாமி, இந்து மதத்திற்கும் தைப்பொங்கலிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

தைப்பொங்கல் தமிழர்களால் பண்டைக்காலந்தொட்டு கொண்டாடப்படுவது. இது தமிழர்களிற்கேயுரிய தனித்துவமான திருநாள். தயவு செய்து இதற்கு மதச்சாயம் பூசிவிடாதீர்கள்.

தமிழ் தேசியம் என்பது மதச்சார்பற்றது. தாயகத்திலிருந்து வந்த பழைய ஒளிவீச்சுக்களை எடுத்துப்பாருங்கள். பொங்கலை சிறப்பித்து ஒளிப்பதிவுகள் உள்ளன. தீபாவளியை பற்றி ஏதேனுமுண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா காட்டாறு

புலிகள் எப்போது தங்களை இந்து மதத்திற்கு எதிரானவர்கள் என்று சொன்னார்கள். இந்து மதம் தான் தைப்பொங்கலை இவ்வளவு நாளும் காவிக் கொண்டு வந்ததே, தவிர, திராவிடக்கும்பல்கள் அல்ல. உங்களிடம் தைப்பொங்கல் பற்றிய ஏதாவது ஆதாரம் வரலாற்றில் இருந்து தரமுடிந்தால் தந்து நியாயம் கூறவே வேண்டுமே தவிர, உங்களிட்டத்திற்கு வகைபிரிக்க முடியாது.

தைப்பொங்கல் தமிழரின் புதுவருடம் என்றால் மாட்டுப் பொங்கல் என்ன மாடுகளின் புதுவருடமா?

தயவு செய்து ஒருவரின் கருத்தை திரிக்காதீர்கள்.

புலிகள் இந்துமதத்திற்கு எதிரானவர்கள் என்று எங்காவது கூறியுள்ளேனா? அதே போல் தைப்பொங்கல் தமிழரின் புதுவருடம் என்றும் கூறியுள்ளேனா? திராவிடர்கள் தான் இதைக் கொண்டுவந்தார்களென்றேனா?

நான் கூறுவதெல்லாம் தைப்பொங்கல் தமிழரின் திருநாள். அதை மதம் சார்ந்த கொண்டாட்டமாக சாயம் பூசிவிடாதீர்கள்.

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா குமாரசாமி, இந்து மதத்திற்கும் தைப்பொங்கலிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

தைப்பொங்கல் தமிழர்களால் பண்டைக்காலந்தொட்டு கொண்டாடப்படுவது. இது தமிழர்களிற்கேயுரிய தனித்துவமான திருநாள். தயவு செய்து இதற்கு மதச்சாயம் பூசிவிடாதீர்கள்.

தமிழ் தேசியம் என்பது மதச்சார்பற்றது. தாயகத்திலிருந்து வந்த பழைய ஒளிவீச்சுக்களை எடுத்துப்பாருங்கள். பொங்கலை சிறப்பித்து ஒளிப்பதிவுகள் உள்ளன. தீபாவளியை பற்றி ஏதேனுமுண்டா?

அப்படியாயின் ஏன் கிறிஸ்தவதமிழர்களும் இஸ்லாமியதமிழர்களும் தைப்பொங்கலை கொண்டாடுவதில்லை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியாயின் ஏன் கிறிஸ்தவதமிழர்களும் இஸ்லாமியதமிழர்களும் தைப்பொங்கலை கொண்டாடுவதில்லை?

இஸ்லாமியர்கள் தமிழ் பேசினாலும் தங்களைத் தமிழர்கள் என்று ஒருபோதும் சொல்வதில்லை. ஆகவே அவர்களை விட்டுவிடுவோம்.

பெரும்பாலான கிறீஸ்தவர்கள் இதை ஒரு இந்துக்களிற்கான விழாவாக மட்டும் கருதி இதை தவிர்கின்றார்கள். அது காலத்தின் கொடுமை. ஆனால் தமிழீழத்தில் பொங்கலிற்க்கு கொடுக்கும் தேசிய முக்கியத்துவத்தின் காரணமாக நாளடைவில் தமிழீழத்தில் வசிக்கும் கிறீஸ்தவர்கள் இதனை கொண்டாடவும் கூடும்.

இந்த இணைப்பைப் பாருங்கள்:

Bay Area Tamil Catholics celebrate annual Pongal

சரி தைப்பொங்கல் இந்துக்களின் திருநாள் என்றே வைத்துக்கொள்வோம். பின் ஏன் இதை தமிழரல்லாத இந்துக்கள் (வட இந்தியர்கள், நேபாளியர்கள்) கொண்டாடவில்லை?

தைப்பொங்கலை இந்துக்களின் நிகழ்வு என்று மதச்சாயம் பூசுவது நிச்சயம் ஏனைய மதத்தை பின்பற்றும் தமிழர்களை எதிர்காலத்திலும் கொண்டாடத் தூண்டப்போவதில்லை.

தைப்பொங்கல் உழவர் திருநாள் என்றதற்கான விளக்கங்கள் காரணங்கள் என்பன மதரீதியாக இல்லை.

ஏனைய இன இந்துக்கள் ஏன் பொங்கலைக் கொண்டாடுவதில்லை?

தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக தமிழ்த்தேசியம் என்று வரலாற்றில் அண்மைய காலங்களில் எப்போ எழுச்சி பெற்றிருந்தார்கள்?

நாம் இன்று காணும் நிகழ்வுகள் கொண்டாட்டங்களிற்கு பின்வரும் காரணங்களில் ஒன்று இருக்கிறது:

ஏதோ ஒன்றின் அடிப்படையில் ஒற்றுமையை ஊக்குவிப்பது

ஒரு தரப்பை தாழ்த்தி இன்னொரு தரப்பை உயர்த்தி அதாவது ஒரு தரப்பை இன்னொரு தரப்பு வெற்றி கொண்டது

தமிழர்கள் மதபேதம் இன்றி ஒற்றுமையாக கொண்டாட ஒரு நிகழ்வே என்னமும் இல்லையாம் அதுக்குள்ளை தமிழர்கள் எல்லாரும் தமிழ்த்தேசியம் என ஒற்றுமையாக கிளம்பி தமிழீழம் காண்டு வெற்றிவிழா கொண்டாடப் போகினமாம்.

மதங்கள் பிரதேசங்களிற்கு அப்பால் தமிழர்கள் எல்லோரும் ஒன்று என்று ஒற்றுமையை ஊக்குவிக்கும் பலமான சுதந்திரமான நிர்வாக கட்டமைப்பை தமிழன் அண்மை வரலாற்றில் கொண்டிருந்தானா? தமிழ் கிறீஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் ஏன் கொண்டாடுவதில்லை என்பதற்கான காரணமும் அதில் தான் பொதிந்திருக்கிறது.

:lol::lol::lol:

கிறிஸ்தவர்களை போல், இஸ்லாமியர்கள் போல் இந்துக்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் விட்டு இருந்தார்கள் என்றால், இது தமிழர் பண்டிகையா, தமிழ் இந்துக்களின் பண்டிகையா என்று நாம் வாதம் செய்து கொண்டிருக்க பொங்கல் பண்டிகையே இருந்திருக்காது. தமிழர்களின் வசந்த விழாவை சிலப்பதிகாரத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய நிலை போல் ஏதாவது பழைய ஏடுகளில் இருந்து தான் பொங்கல் பண்டிகையை தெரிந்து கொண்டிருக்க வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.