Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வளரும் பயிர்கள் வாடாதிருக்க ...

Featured Replies

குழந்தைப்பருவம் ,பதின்மம் ,முதுமை இப்படி எல்லா வயதிலும் இன்னொரு மனிதனின் அன்பு ,பாசம், நேசம் ,ஆதரவு நமக்குத் தேவைப்படுகிறது. அம்மாவாக, அப்பாவாக, சகோதரமாக, நண்பனாக, வாழ்க்கைத்துணையாக இப்படி ஏதோ ஒருவடிவில் எல்லாமனிதனும் பல சந்தர்ப்பங்களில் இன்னொருவரின் துணையை எதிர்பார்க்கிறான். அன்புக்காக ஏங்குகிறான்.அது உரிய நேரத்தில் கிடைக்காது போனால் சமூகத்துக்குப் பயன்படாதவனாக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிவனாக கொடியவனாக மூர்க்கனாக மாறுகிறான். எல்லாரும் எங்களை நேசிக்க வேண்டும் என்றுதான் எல்லாரும் விரும்புகிறோம். யாருமே கெட்டவனாக வேண்டுமென்று தவமிருப்பவதில்லை.ஆனால் இன்று யுத்தபூமியில் பிறந்து சித்திரவதைகளையும் இரத்தக்காயங்களையும் பார்த்து அனுபவித்து மரணத்தின் வாசத்தை சுவாசித்து பசி பட்டினியோடு வாழும் நம் சிறார்கள் நாளை வன்முறை நிறைந்தவர்களாக மாறிவிடுவார்களோ என்ற அச்சம் தோன்றுகிறது.குண்டு, செல், துவக்கு, இரத்தம், தசைப்பிண்டங்கள், சடலங்கள், பசி, பட்டினி இவையெல்லாம் இந்தச் சிறார்களின் தினசரி வாழ்வின் அங்கங்களாக உள்ள இந்த நிலை இவர்களுக்குப் பழகிப்போனால் உயிரிழப்புகள் இனி இவர்களைப் பெரிதாகப் பாதிக்காமல் போய்விடில்......???????

வீட்டில் பசியால் துடிக்கின்ற பிள்ளைகளுக்காக வரிசையில் நின்று அரிசி கிடைத்தவரிடமிருந்து அதைக் கிடைக்காதவர் அடித்துப் பறித்துக்கொண்டதை நாங்கள் செய்தியாகப் படித்திருப்போம். மற்றவர்களுக்கும் குழந்தைகள் இருக்கும், குடும்பமிருக்கும் அவர்களுக்கும் பசியிருக்கும், வலியிருக்கும், உணர்வுகளிருக்கும் என்று சிந்திக்கத்தெரிந்த பெரியவர்களுக்கே இந்த நிலமை என்றால் சிறுவர்களின் மனநிலை எப்படியிருக்கும்? பிறந்ததிலிருந்தே இந்தச்சிறுவர்களால் கைதுகளும், காணாமல் போதலும், ஆட்கடத்தல்களும், ஆயுதப்பிரயோகங்களும், பாலியல் வல்லுறவுகளும், உயிரிழப்புகளும்தான், ஐம்புலன்களிலும் உணரப்படுகிறது. ஆசையாகக் கதைசொல்லிச் சோறூட்ட அம்மா இல்லை. அரவணைக்க அப்பா இல்லை.கூட விளைாயட சகோதரர்களுமில்லை, நண்பர்களுமில்லை. குதூகலிக்க உறவினர்களுமில்லை. சத்தான சாப்பாடில்லை. உறங்கிப்போக உரிமையுள்ள வீடுமில்லை. இப்பிடி ஆரோக்கியமாக வளரவேண்டிய பிள்ளைகளுக்குத் தேவையான எதுவுமில்லாமல் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் வாழும் சிறுவர்கள் செய்த தவறுதான் என்ன? அவர்களுடைய எதிர்காலம் எப்படியிருக்ப்போகிறது? கண்களில் சோகத்தைச் சுமக்கும் இந்தச்சிறுவர்களின் மனங்களில் ஆயிரம் கேள்விகள், ஏக்கம், கோபம்,விரக்தி, வெறுப்பு.அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, தம்பி ,தங்கை ,அயலவர் ,உறவினர் இப்படி கண் முன்னாலே கொல்லப்பட்டவர்களின் கடைசி அலறல்களையும் அவலங்களையும் இன்னும் முதல்தடவையாக உணர்பவர்களாக காட்சியளிக்கும் இந்தச்சிறார்களின் மனங்களில் யுத்தத்தின் வடுக்கள் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கிறது. இதன் மறைமுகப் பாதிப்புகள் நமக்கு இப்போது விளங்காவிட்டாலும் இதன் நீண்டகாலப்பாதிப்புகள் நாமெண்ணிப் பார்க்காத அளவுக்கு கொமடூரமானதாகவும் இருக்கலாம். இவர்களுக்கு உளவியல் பயிற்சிகள் இப்போதிருந்தே அளிக்கப்பட வேண்டும். இல்லையேல் ஒரு வன்முறை நிறைந்த சமுதாயத்தை வரவேற்பவர்களாகிவிடுவோம் நாங்கள்.

10 வயதிலெல்லாம் நாங்கள் என்ன செய்துகொண்டிருந்தோம்? நிச்சயமாக இரண்டு மூன்று குழந்தைகளுக்குத் தாயாக தந்தையாகவிருக்கவில்லை. தாய் தந்தை இருவரையும் போரில் அல்லது சுனாமியில் தொலைத்துவிட்டு தன்னிளைய சகோதரர்களுக்கு குளிப்பாட்டி, உணவூட்டி, பாடசாலைக்கு அனுப்பிவிட்டுப் பின்னர் வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை.எதற்கும் அம்மாவை அப்பாவை எதிர்பார்த்துக்கொண்டும், செல்லம் கொஞ்சிக்கொண்டுமிருக்கும் விளையாட்டுத்தனமாக இருக்கவேண்டிய 10 வயதில் ஒரு தாயின், தந்தையின் கடமைகளைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் இன்று எத்தனையோ சிறுவர்கள் இருக்கிறார்கள். ஆதரவு தேவைப்படும் நிலையிலிருக்கும் இந்தச்சிறுவர்கள் ஆதரவு வழங்கும் நிலைக்குத்தள்ளப்பட்டிருக்க

வணக்கம் சித்தி,

சீரியசா ஏதோ எழுதி இருக்கிறீங்கள்.

mild seizure, multiple personality disorder, split personality, antisocial personality , anxiety disorders, sleeping disorders

Behavioral therapy, Cognitive therapy, psychoanalytic therapy, psychodynamic therapy இப்படிப்பலவிதமான Psychotherapy (talk therapy) ..

உதில எத்தினை வியாதி எனக்கு இருக்கிதோ தெரியாது. நாங்களே மேல இருக்கிற தெராபிகள் எடுக்க வழியில்லாமல் ஓடித்திரியுறம். இதுக்கிள அங்க இருக்கிற குஞ்சு, குருமாண்கள தெராபியால பாதுகாக்க முடியுமா எண்டுறது கேள்விக்குறி.

முதலில சண்டைபிடிக்கிறவையள் இத உணர்ந்து கொள்ள வேணும். மேலும், சுனாமிய உருவாக்கின கடவுளுக்கு புத்தி எங்கபோச்சிது? கடவுளே டோண்ட் கெயார். நாங்கள் என்ன செய்யுறது?

நீங்கள் ஒரு பிள்ளைய அடப்ட் செய்யலாமோ எண்டு பாருங்கோ. எனக்கு இவ்வளவு பெருந்தன்மை இல்லை. நானே என்னையாராவது அடப்ட் செய்வீனமோ எண்டு எதிர்பார்க்கிற இந்தநிலையில வேற என்னத்த சொல்லிறது?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு உளவியல் பதிப்பு!!!

வணக்கம் சிநேகிதி,

இன்று புலம்பெயர்ந்து வாழும் பலர் தாயகத்தில் சிறிலங்கா அரசபடைகளின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அந்தப்பாதிப்பால்த்தான் எங்களுடைய நாடு எங்களுக்கானதாக வேண்டும் என்று தாயகத்தில் உள்ளவர்களும் சரி புலம்பெயர்ந்து வாழுகிறவர்களும் சரி ஒரு முனைப்போட செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வலிப்பட்டவர்கள் எழுச்சி கொள்வது முடக்கப்படக்கூடாது. முதலில் வலி கொடுக்கிறவர்களைத் திருத்துவதற்கு அல்லது அவர்களுக்கு என்ன வியாதி என்று கண்டு பிடித்துச் சொல்லுங்கள்.

உங்களுடைய உளவியல் கற்கை நெறி உங்களைச் செம்மைப்படுத்துகிறது.

உங்களுடைய எழுத்துகள் உங்கள் கற்கை நெறிக்குள் உட்பட்டதாகவே இருக்கிறது. அநுபவம் வித்தியாசமானது அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தாயகத்தில் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை போரினால் உடல், உளரீதியாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பது முற்றிலும் உண்மையே, அப்பாதிப்புகளில் இருந்து வெளிவரவேண்டுமாயின் முதலில் தொடர்ந்தும் அப்பாதிப்பிற்கு உள்ளாகாத நிலையைத் தோற்றுவிக்கவேண்டும் அதன் பின்னரே அங்கு பாதிப்பிற்குள்ளாகும் பலரைக் குணப்படுத்தமுடியும்.

முதலில் அங்கு வாழும் மக்களுக்கு நிம்மதியான வாழ்விற்கு வழிகாட்டுவோம். நாளாந்த வாழ்வே அவர்களுக்குக் கேள்விக்குறியாக இருக்கும் இன்றைய நாளில் அவர்களின் உளப்பாதிப்புகளுக்கு எப்படி மருந்திடுவது?

சிநேகிதி, முதலில் நாங்கள் எல்லோருமாக இணைந்து எங்கள் மக்களின் அன்றாட வாழ்வைத்தன்னும் நிம்மதியாக்குவோம்.

ஆதி என்ன நீங்களும் சீரியசா எழுதி இருக்கிறீங்கள்? அப்ப நீங்களும் உளவியல் படிக்கலாமே? இஞ்ச எல்லாருக்குமே மண்ட கழண்டு இருக்கிது. யார் யாருக்கு ஆறுதல் சொல்லிறது? சிறீ லங்காவில இருகிறதில 90% பேருக்கு மண்டை கழண்டு போச்சிது எண்டு எங்கையோ வாசிச்சமாதிரி இருக்கிது.

trauma அய் மண்டைகழண்டு போச்சு எண்டு சொல்ல முடியாது. சிறீலங்காவில் எதோ ஒருவகை trauma ஆல் பாதிக்கப்பட்டவர்களா கிட்டத்தட்ட 90வீதமானவர் இருப்பது சாத்தியம்.

மேற்குலகில் வீதி விபத்துக்கள் தொழிற்சாலை விபத்துக்கள் முதல் ஏனை எதிர்பாராத சம்பவங்களைச் சந்தித்தவர்கள் குடும்ப அங்கத்தவர்களை இழந்தவர்கள் என்று பல தரப்பட்டவர்களும் trauma ஆல் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அணுகி அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு முடிந்தளவு திருப்ப உதவுவார்கள். அப்படிப் பார்க்கும் போது குண்டு வெடிப்புகள் இழப்புகள், இடப்பெயர்வுகள், சுனாமி என்று எத்தனையை சிறீலங்காவில் உள்ளவர்கள் வயது பால் வேறு பாடின்றி சந்தித்துவிட்டார்கள்.

trauma வ மண்டைகழண்டு போச்சு எண்டு சொல்ல முடியாதா? அப்ப எப்பிடி சொல்லிறது? மண்டை இளகி இருக்கிது எண்டு சொல்லலாமா? இஞ்ச யாழிலையும் எங்களில 90% பேருக்கு மண்டை இளகி இருக்கலாம் எண்டு நான் நினைக்கிறன்.

  • தொடங்கியவர்

childhood trauma, war related trauma இதுகள்தான் மண்டை களண்டுபோக காரணம் என்று சொல்லலாம்.

ஓ அப்பிடியா? இப்ப ஒருவருக்கு மண்டை கழண்டு இருக்கிதா இல்லையா எண்டு எப்பிடி கண்டுபிடிக்கிறது சித்தி? அதையும் கொஞ்சம் சொல்லுங்கோ.

சிகிச்சை அளிக்கப்படாத trauma வுகள் காலப்போக்கில் "மண்டைகழண்டு" போகும் நிலைக்கு இட்டுச் செல்லாம் அதற்கான சந்தர்ப்பங்களை அதிகரிக்கலாம் எண்டு சொல்லுங்கோ. மற்றும் படி trauma இருக்கிறவை எல்லாரையும் by default "மண்டை கழண்டவையாக" வகைப்படுத்துவது over statement என்பதற்கும் அப்பால் தவறு இல்லையோ?

  • தொடங்கியவர்

தவறுதான் குறுக்ஸ்...

  • கருத்துக்கள உறவுகள்

உப்படியான கட்டுரைகளை ஒருகாலத்தில வெள்ளைகாரன் தான் எழுதினவன் இப்ப எங்களுடைய சனமும் எழுதியினம் .அது சரி சினேகிதி இந்த புலத்தில வாழும் அனேகர் புதுப் புது தெய்வங்களை (கிறிஸ்தவர்கள், இந்துகள்)தங்களின் வழிப்பாட்டில் இனைத்துகொள்வதற்க்கு என்ன காரணம் .அதற்க்கும் எதாவது உளவியல் காரணங்கள் இருக்குதொ?

  • கருத்துக்கள உறவுகள்
:mellow: இந்த பகுதியில் இன்னுமொருவன் எழுதிய கருத்தொண்டு இருந்தது. இப்ப காணவில்லை. என்ன நடந்தது? ஆறுதலாக படிக்கலாம் என நினைத்திருந்தேன். :huh:
  • கருத்துக்கள உறவுகள்

:huh: இந்த பகுதியில் இன்னுமொருவன் எழுதிய கருத்தொண்டு இருந்தது. இப்ப காணவில்லை. என்ன நடந்தது? ஆறுதலாக படிக்கலாம் என நினைத்திருந்தேன். :D

ஒகோ நீங்களும் என்னை மாதிரியோ. நானும் உங்களை மாதிரி ஆறுதலாக பார்ப்போம் என்றால் அதை கானோம் :mellow:

  • தொடங்கியவர்

நானும் வாசிக்கவில்லை..அவரே அழித்துவிட்டார்.

கருத்துக் கீளே மீள் இணைக்கப்பட்டுள்ளது.

Edited by Innumoruvan

இன்னுமொருவன் எழுதியதை முழுமையாக வாசித்தனான். அதில் மோசமான முரண்பாடு எதிர்வாதம் என்று சொல்ல எதுவும் இல்லை. அதே விடையத்தை வேறு கோணத்தில் இருந்து சில நியாயமான கேள்விகளோடு வைக்கப்பட்டிருந்தது. அவற்றில் சிலவற்றை பற்றி நானும் யோசித்தனான் (உதாரணத்திற்கு உளவியல் ரீதியான இசைவாக்கம், அங்கு எதிர்கொள்ளப்படுபவை ஒரு வெறுமையில் சடுதியாக நிகழவில்லை பின்னணி இருக்கிறது, ஒட்டுமொத்த சமூகமும் எதிர்கொள்கிறது போன்றவை) .

இன்னுமொருவன் தனது திருப்த்திக்கு ஏற்ப முன்பு எழுதியவற்றை திருத்திப் போட்டு மீண்டும் இணைத்தால் இது ஒரு ஆக்கபூர்வமான கருத்துப் பகிர்வாக மாற உதவலாம்.

எனது கருத்தை மீள இணைக்கின்றேன். இது எனது கருத்து மட்டுமே, இது தான் சரி என்று நான் அடித்துக் கூறவில்லை.

நன்றி

இன்னுமொருவன்

-----

உங்களது ஆதங்கம் நியாயமானது தான் என்றபோதிலும் பின்வரும் கருத்தினை முன்வைக்காது இருக்க முடியவில்லை.

மேற்குலகின் உளவியல் கருதுகோள்கள் உலகின் அனைத்து மக்களிற்கும் ஏற்புடையனவா என்பது கேள்விக்குரியதே. இங்கு உளவியலின் Authoritative குரல்களாகத் தங்களைக் காட்டிக் கொள்கின்ற மிகப்பெரும்பான்மையானோரது அனுபவம் என்பது வெள்ளையினப் பாரம்பரியம் சார்ந்ததாகவே பெரும்பாலும் அமைகிறது. தமது புரிதல்களின் அடிப்படையில் தாம் அணுகிய நோயாளிகளில் தாம்பெற்ற அனுபங்களின் வாயிலாக உலகளாவிய கருதுகோள்கள் சில சந்தர்ப்பங்களில் முன்வைக்கப்பட்டு விடுகின்றன. ஆனால், உளவியல் என்பது கட்டுப்படுத்தப்பட்ட ஒரு இரசாயன பரிசோதனை போன்றதல்ல. இன்னமும் சொல்வதானால், உளவியல் என்பது விஞ்ஞானம் தானா என்பது கூட இன்னமும் பல சுவாரசியமான விவாதங்களிற்கு அடிப்படையாக அமைந்து வருகின்றது. இந்நிலையில் மேற்கின் கல்வித்திட்டம் எமக்குப் போதிக்கும் அனைத்து உளவியல் சிக்கல்களும் எமது தாயக சூழலிற்கு ஏற்புடையதா என்பதும், அப்படியே சிக்கல்கள் என்றிருந்தாலும் கூட அவற்றிற்கான இங்குள்ள சிகிச்சைகள் அங்கு ஏற்புடையனவா என்பதும் விவாதத்திற்குரியதே.

தாயகத்தில் வன்முறையினை எதிர்கொள்ளும் எமது சிறார்களிற்கு எவ்வித பாதிப்புமே ஏற்படாது என்று நான் கூறவரவில்லை. ஆனால், அவர்களிற்கு பாதிப்புக்கள் என்று இருக்கக் கூடியன இங்குள்ளவர்களின் பார்வையில் பார்த்துப் புரிந்துகொள்ளப்படக் கூடியனவா என்ற கேள்விக்குப் பல விடயங்கள் துருத்திக் கொண்டு இல்லை என்றே பதிலளிக்கின்றன.

தாயகத்;தில் நம் சிறார்கள் கண்ணுறும் வன்முறை என்பதற்கு அங்கு ஒரு Context உள்ளது. ஏன் வன்முறை நிகழ்கிறது என்பது தொடர்பிலான சமூக அரசியல் கருத்துப் பகிர்வு மிகச் சிறு பராயம் முதல் குழந்தைகளிற்கும் வளர்ந்தவர்களிற்கும் இடையே நிகழ்ந்து வருகின்றது. மேலும் வன்முறை என்பது அங்கு தனியாகச் சிறார்களால் ஒரு வெற்றிடத்திற்குள் எதிர்கொள்ளப்படவில்லை. மாறாக, ஒரு சமூகமாக அவர்கள் வன்முறையினையும் அதன் பாதிப்புக்களையும் Collective ஆக எதிர்கொள்கிறார்கள். குண்டு விழுகையில் குறிப்பிட்ட ஒருவர் தான் இழப்பை எதிர்கொள்ளினும், அவரது அயலவர்கள் அங்கு அவருக்கு முண்டாக விளங்குகிறார்கள்.

மேலும், மேற்கைப் பொறுத்தவரை இங்கு ஒரு இழப்பு ஒருவரிற்கு ஏற்படும் போது பொதுவாக அவரிற்குள் ஏற்படும் முதற்கட்ட ஆத்திரங்களில் ஒன்று, Why me? என்பதாகத் தான் இருக்கிறது என்று பலரும் அவதானிக்கிறார்கள். எமது தாயகத்தில் நிகழும் வன்முறைகளைப் பொறுத்தவரை, அங்கு வன்முறையின் கோரம் ஒட்டுமொத்த இனத்தையே ஆக்கிரமித்திருப்பதனால் மேற்படி ஆத்திரத்தின் வடிம் பொது எதிரி மீது காரண காரியத்தோடு நியாயமாக மாறிவிடுகின்றது. இலக்கற்ற ஆத்திரத்திற்கும் காரண காரியத்தோடமைந்த திட்டமிடப்பட்ட எதிhவினைக்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன (பாதிப்புக்களைப் பொறுத்தவரை).

எனது போலந்து தேசத்து நண்பி ஒருத்தி அடிக்கடி கூறுவாள், தனது பெற்றோர் தங்களின் வீட்டில் அடிக்கடி கூறுவார்களாம், தங்களின் பதின்மப் பராயத்தில் ஒட்டுமொத்த போலந்திற்கு என்று ஒரு Cause இருந்ததனால் தமது பார்வைகள் குவியப்படுத்தப் பட்டு தேவையற்ற வம்பை விலைக்கு வாங்காது அர்த்தபூர்வமாக இருந்தது என்றும், இன்றைய போலந்தின் இளைய தலைமுறை ஒரு பொது அபிலாசை என்றால் என்ன என்றோ அத்தகைய அபிலாசைக்காக ஒருசேர உழைப்பது எத்தகையது என்றோ தெரியாததால் தான் திசை மாறிச் செல்கின்றனர் என்று. அதாவது, வன்முறை கூட ஒரு சமூக அரசியல் பரிமாணத்திற்குள் எதிர்கொள்ளப்படும் போதும், அது தொடர்பில் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தின் எதிர்வினை நிகழ்த்தப்படும் போது அதன் தாக்கம் எழுந்தமான வன்முறையின் தாக்கத்தை ஒத்திருக்கும் என்று கூறிவிட முடியாது. போலந்து உதாரணம் போல், எமது தாயகத்தின் வன்முறை கூட உளவியல் ரீதியில் பலரிற்கு ஒரு குவியத்திற்கான காரணமாகக் கூட அமையவும் வாய்ப்புள்ளது.

அதுபோன்றே, தனது வாழ்நாளில் முதற்தரமாக கடந்தமாதம் இஸ்ரேல் சென்று வந்த எனது யூத நண்பர் கூறினார், அங்கு கட்டாய இராணுவச் சேவையின் நிமித்தம் இளையோர்கள் எல்லாம் ஆண்களும் பெண்களுமாக பேருந்திலும் இதர அன்றாட நடவடிக்கைகளிலும் துப்பாக்கிகளைத் தூக்கிக் கொண்டு அலைவதனைத் தன்னால் சற்று நாட்கள் சீரணிக்க முடியவில்லை என்று. அவரும் நானும் அவர் இஸ்ரேலில் கண்ட ஆயதம் தாங்கிய இளையோர் பற்றியும், எமது தாயகத்தில் ஆயதம் தாங்கிய இளையோர் பற்றியும் மேற்கில் நிகழும் இளையோரின் வன்முறை பற்றியும் இவற்றிற்கிடையேயான தெட்டத்தெளிவான வித்தியாசங்கள் பற்றியும் பேசி கொண்டோம்.

மொத்ததத்தில் எழுந்தமானத்தில் நிகழும் ஒரு வன்முறைக்கும் நன்கு புரிந்து கொள்ளப்பட்ட ஒரு சமூக அரசியல் பரிமாணத்திற்குள் நடக்கும் வன்முறைக்கும் நிறையவே பார்வையாளரின் பார்வையில் வித்தியாசங்கள் உள்ளது.

மேலும் இங்குள்ள கலாச்சாரத்தில் உளவியல் சிகிச்சை முறையில் ஒரு பிரச்சினை பற்றி மனந்திறந்து கதைப்பது மிகவும் பயனுடையது என்கிறார்கள். அதிலும் குழுவாக ஒரே பிரச்சினை உடைய பலர் ஒன்றிணைந்து சிகிச்சை பெறும் போது, ||எனக்கு மட்டுமல்ல இந்த பிரச்சினையால் வேறும் பலர் என்னைப் போன்று பாதிக்க்ப்பட்டு உள்ளனர்|| என்று அறிந்து கொள்ளும் போது பிரச்சினையின் தாக்ககம் குறைந்து பலத்த பயனளிக்கிறது என்று கூறி Group Therapy செய்கிறார்கள். எமது தாயகத்தில் பிறந்த நாள் முதலே குழந்தைகள் இப்பிரச்சினை அனைத்துத் தமிழர்களிற்குமான பொதுப் பிரச்சினை என்று இயல்பாகப் புரிவதனால் வன்முறை அங்கு இங்குள்ளவர்கள் கற்பனை செய்வது போல் பாரதூர விளைவுகளை உருவாக்கும் என்று அடித்துக் கூறி விடமுடியாது.

ஆது போன்றே, ஒருபிரச்சினைக்கு இருக்கக் கூடிய ஒரு வினைத்திறன் மிக்க எதிர்வினை பற்றி அப்பிரச்சினையால் பாதிக்கப்படுபவர் அறிவது கூட வன்முறையின் தாக்கத்தை அவரில்; குறைக்கும் என்கிறார்கள். அதாவது, ஒரு பிரச்சினை தொடர்பில் ஒருவர் எதையுமே செய்யமுடியாது அப்பிரச்சினை எப்போதுமே தீhக்கப்பட முடியாது என்று உணர்வதற்கும் (Helplessness),அப்பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்படக்கூடிய ஒரு எதிர்வினை உள்ளது என்று அறிவதற்கும் இடையே நிறையவே உளவியல் ரீதியாக அத்தாக்கத்தின் பாதிப்பில் வித்தியாசங்கள் உள்ளன. எமது தாயகச் சூழலில் நடக்கும் வினைத்திறன் மிக்க போராட்டமானது அங்கு வன்முறை சிறார்களில் ஏற்படுத்தும் தாக்கத்தின் உளவியல் பாதிப்பைக் குறைக்க வாய்ப்புள்ளது (அவர்களிற்கு அவ்வன்முறை ஓயம் என்ற நம்பிக்கையும் சுபீட்சமான ஒரு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் போராட்டத்தால் எழுகிறது).

அமெரிக்காவின் கொலம்பைன் பள்ளிக்கூட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தால் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டு இன்று வரை எந்தப் பள்ளிக் கூடத்திற்கும் செல்லமுடியாதவர்களாக, எவ்வித சிகிச்சையும் பலனளிக்காது வாழ்பவர்கள் இங்கு உள்ளார்கள். வேறு பலர், பள்ளிக் கூடத்திற்கு மீண்டிருந்தாலும், அந்தக் கோரச் சம்பவத்தின் பாதிப்பினால்; தத்தமது அன்றாட வாழ்வினை இயல்பாக மேற்கொள்ள முடியாதவர்களாக இன்றும் உள்ளார்கள். இதோடு ஒப்பிடும் போது, தாயகத்தில், கிபிர் வந்து குண்டு வீசிப் போன மறு வினாடி காயப்பட்டவர்களைகத் தூக்கி அனுப்பி விட்டு பள்ளியில் பாடத்தைக் கவனிப்போர் ஏராளம். இதற்குக் காரணம் வெள்ளையரைக் காட்டிலும் நாங்கள் உள ஸ்திரம் மிக்கவர்கள் என்பது அல்ல. மாறாக, பிறப்பில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட போர்ச்சூழலிற்குள் வாழுகின்ற ஒரு குழந்தை ஒரு குண்டு வெடிப்பினை அல்லது சாவினைப் பார்ப்பதானது பதின் வயதுக் கழியாட்டங்களில் திழைத்திருந்த ஒரு அமெரிக்கக் குழந்தை என்றோ ஒரு நாள் எதிர்பாராவிதமாகப் பார்ப்பததைக் காட்டிலம் வேறுபடுவது. இசைவாக்கம் என்ற பாரிய விடயத்திற்குப் பல உப பரிமாணங்கள் உள்ளது.

இந்நிiலியில், தாயகத்தில் அதே சூழ்நிiலியில் வாழ்ந்து வளர்ந்த உளவியல் நிபுணர்கள் அங்குள்ளவர்களின் உளவியலை ஆராய்ந்தால் ஒரு வேளை சில பாதிப்புக்கள் உணரப்படலாம். ஆனால் இங்குள்ளவர்கள் இங்குள்ள தரவின் அடிப்படையில் எதிர்வு கூறும் அனைத்துச் சிக்கல்களும் அங்கு இருந்தே தான் தீரவேண்டும் என்பதில்லை என்றே எனக்குப் படுகின்றது.

மேலும் ஒரு நோயினை இனங்காணுவது மட்டுமன்றி நோயின் பீடிப்பில் இருந்து குணமாவது என்பதும் கூட உலகளாவிய ரீதியில் ஒரேவாறாக அமையவேண்டியதில்லை. இங்குள்ள சிகிக்சை முறைகளை அப்படியே அங்கு ஏற்றுமதி செய்வதும் கேள்விக்குரியதே. உதாரணமாக Postpartum depression என்ற வியாதி பற்றி ஊரில் நாம் அதிகம் கேள்விப்பட்டதில்லை. இதற்கான காரணம் இவ்வியாதி அங்கு சரியாக Diagnose பண்ணப்படாமை தான் என்று நாம் மொட்டையாகக் கூறிவிட முடியாது. ஒரு வேளை அங்கு இந்நோய் இருந்திருப்பின் விகிதாசார அடிப்படையில் அது மிகக் குறைவாகவே இருந்திருக்க முடியும். மகப்பேறைத் தொடர்ந்து எமது கலாச்சாரத்தில் தாயானவளிற்கு பலத்த உறுதுணை உறவினராலும் அயலவராலும் வழங்கப்படுவது வழமை. குழந்தையின் நலன்களை உறுதிசெய்தல் என்ற பாரிய பொறுப்பினால் மலைப்பு ஏற்பட்டு இப்பொறுப்பைத் தன்னால் சரிவரச் செய்ய முடியுமா என்பது போன்ற அங்கலாய்ப்புக்கள் (Anxiety) ஒரு தாயிற்கு ஏற்படா வண்ணம் பராமரிக்கும் எமது பாரம்பரியத்திற்கும் இந்நோய் அங்கு அதிகம் காணப்படாமையில் பங்கிருக்கலாம்.

ஆக, ஓரே காரணிகள் ஒரே உளவியல் தாக்கங்களை உலகளாவிய ரீதியில் அனைத்து மக்களிலும் ஒரே வாறு ஏற்படுத்தும் என்று கூற முடியாதுள்ளது. வன்முறையும் அதன் பாதிப்பும் என்ற விடயம் கூட இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது என்றே எனக்குத் தோன்றுகின்றது.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்தை மீள இணைக்கின்றேன். இது எனது கருத்து மட்டுமே, இது தான் சரி என்று நான் அடித்துக் கூறவில்லை.

நன்றி இன்னுமொருவன். சிரமபடுத்தியதற்கு மன்னிக்கவும். வாசிக்கவேண்டும் என நினைத்திருந்த கருத்தை தேடியபோது காணாததால் அப்படி கேட்டு எழுதியிருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணத்திற்கு உளவியல் ரீதியான இசைவாக்கம், அங்கு எதிர்கொள்ளப்படுபவை ஒரு வெறுமையில் சடுதியாக நிகழவில்லை பின்னணி இருக்கிறது, ஒட்டுமொத்த சமூகமும் எதிர்கொள்கிறது போன்றவை.

நானும் இப்படித்தான் யோசித்தனான். சிறிய வயதிலிருந்தே இசைவாக்கம் அடைந்தனால் மன அதிர்சி இருக்காவிடினும் சினேகிதி கூறியது போல் மனம் வன்மையனால் அவர்களை அதிலிருந்து வெளியே கொண்டு வருவது அவ்வளவு சுலபமானதாக இருக்காது.

என்ன சபேஸ் தீவிரமா உதுகள வாசிக்கிறீங்கள். உங்களுக்கும் ஏதாவது பிரச்சனையோ?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சபேஸ் தீவிரமா உதுகள வாசிக்கிறீங்கள். உங்களுக்கும் ஏதாவது பிரச்சனையோ?

என்ன இப்பிடி கேட்டுடிங்கள்? எனது ஊர் பலாலி இராணுவ தளத்திற்கு அருகாமை அதனால் சிறுவயதிலிருந்தே வெடிச்சத்தம், தாக்குதல் வானூர்தி போன்றவற்கு இசைவாக்கம் அடைந்திருந்தேன். ஆனால் விரும்பியோ விரும்பாமலோ பதின்ம வயதில் தனியாக புலம் பெயர் நாட்டிற்கு வந்தேன். வந்த பாதை கடும் சிரமங்களுக்கு மத்தியிலானதாக இருந்தது. இலங்கையை விட்டு வெளிக்கிட்ட முதல் 2-3 மாதமும் வேகமாக ஓடும் ஆற்றில் ஒரு துரும்பு போன்றதான பயணமாக இருந்தது. அப்போது மனம் சிறிது சிறிதாக இறுக்கமாகி யது. அன்பா ஆதரவா கதைக்க ஆறுதல் சொல்லவென யாரும் இருக்கவில்லை. அதன் தாக்கமோ என்னவோ எனது பழக்க வழக்கங்களில் என்னையறியாமலே மாற்றங்கள் வந்திச்சு. உதாரணமாக முற்கோவம் (இப்ப கூட என்னால் மாற்ற முடியாமல் உள்ள ஒரு விடயம்), வெட்டொன்று துண்டு 2 என்பது பொல கதைப்பது (இது குடும்பத்தினருடன் கூட உள்ளதால் பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டி இருந்திச்சு), சிறிய விடயமானாலும் பிடிக்காவிடின் உதறி தள்ளிவிட்டு போவது, யாருடனும் கடமைக்காக பளகுவது உதவி/சேவை செய்வுது என அடுக்கி கொண்டே போகலாம்.

இதில முக்கியம் என்னவென்றால் இவ்வளவு காலமாகியும் மேற் கூறியவற்றில் இருந்து முழுமையாக என்னால் வெளியே வர முடியவில்லை. இப்ப கொஞ்ச காலமாக தான் எனது பிரச்சனையை உணர்றேன். ஆனாலும் முழுமையாக வெளியே வரமுடியவில்லை. ஒண்டுமே அறியாத 1.5 வயது மகன் செய்யும் குழப்படிக்கு (எதுக்காவது அடம் பிடிக்கும் போது) கோபப்படும் போது தான் எனது பிரச்சனையை முழுமையக உணர்கிறேன். நண்பர்கள் சிலர் பகிடியாக "உன்ரை கிறுக்கு குணம் அவனுக்கும் இருக்கும் தானே" எனக்கூறும் போது பகிடியாக இருந்தாலும் என்னனை அதிகமாக சிந்திக்க தூண்டும்.

எனிவே.... பதின்ம வயதில் ஒரு சிறிய காலப்பகுதியில் எனக்கு வந்த கடினங்கள் ஏமாற்றங்கள் ஆதரவின்மை சுமைகள் போன்றவற்றால் இறுகிய/வன்மையாகிய மனதை பதப்படுத்த முடியவில்லையாயின்.....

பிஞ்சு வயதிலேயே ஆதரவை இழந்து சுமைகளைச் சுமந்த அந்த சிறியவர்களை எப்படி பதப்படுத்துவது?

Edited by Sabesh

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிநேகிதியக்கா நல்ல விசயம் எழுதியிருக்கீங்க............................

இன்னுமொருவனண்ணா யுத்தத்தால எந்த உளவியல் பாதிப்பும் எங்கட மக்களிட்ட இல்லையெண்டுற மாதிரியெல்லோ நீங்க எழுதியிருக்கீங்க................................

...............

எல்லா விசயமுமே அந்தந்த இடத்தையும் சூழலையும் காலத்தையும் வச்சு மாறுபடுமஇ..................... அது உளவியலுக்கும் பொருந்தும் தானே பிறகென்ன........................ ஏற்படுற தாக்கமும் அதுக்கான தீர்வுகளும் சிகிச்சை முறையளும் இடத்துக்கேற்ற மாதிரி................... அந்த சமூகக் கட்டமைப்புக்கு ஏற்றமாதிரி மாறுபடும்............... ஆனா psychologist மார் வெளிநாட்டில இருந்து போய் அங்க சிகிச்சை கொடுக்கலாம்..................... அவை அங்கத்த நிலமையள ஆராஞ்சு............... அதுக்கேத்த சிகிச்சைமுறையத் தான் கையாளுவினம்................ தாக்கம் எண்டதும் தீர்வு எண்டதும் தனிய நாட்டுக்கு நாடு மட்டும் வித்தியாசப் படுறேல....................... அது மனுசருக்கு மனுசர் வித்தியாசப்படும்............................

உதாரணமா நானும் நீங்களும் ஒரு நாட்டில வசிக்கிறம்................. எனக்கும் உங்களுக்கும் சிலவேளை ஒரே பிரச்சனையாக் கூட இருக்கலாம்................ ஆனா எனக்கு வேற சிகிச்சைமுறைய கையாளோணும்............ உங்களுக்கு வேற சிகிச்சை முறைய கையாளோணும்.................. ஏனெண்டா உங்கட குடுமு்ப கட்டமைப்பு வேற .......... என்ர குடும்ப கட்டமைப்பு வேற............. உங்கட வளப்புமுறை வேற என்ர வளப்பு முறை வேறையா இருக்கலாம்............... உளவியல பொறுத்தவரைக்கும்............... இதான் பிரச்சனை இதான் தீர்வு எண்டு முடிவுகள் இல்ல........................... பிரச்சனையள இனங்காணுறதுக்கான சில பொது அளவீடுகள வச்சிருக்கினமே தவிர................ அதான் பிரச்சனை எண்டுற தீர்மானங்கள் இல்ல.........................

இன்னொரு உதாரணம்.............. ஒரு விபத்த நானும் பாக்கிறன்............... அதே விபத்த நீங்களும் பாக்கிறீங்க.................. ஆனா அதால எனக்கு ஏற்படுற தாக்கம் வேறயா இருக்கும்................. உங்களுக்கு ஏற்படுற தாக்கம் வேறயா இருக்கும்........................ இதுவும்................ உங்கட குடும்பம் உங்கட சமூகக் கட்டமைப்பு உங்கட வாழ்க்கைமுறை வளப்புமுறை எண்டதுகளில தங்கியிருக்கு...................

psychologist இதுகளயெல்லாம் ஆராஞ்சுதான் சிகிச்சையள தீர்வுகள முன்வைப்பினம்................ சும்மா இந்த போத்தலுக்கு இந்த மூடி அந்த போத்தலுக்கு அந்த மூடி எண்டில்ல............. ஈழத்த பொறுத்தமட்டில......... short term effects .................. long term effects எண்டு இருக்கும்............................. இப்ப உணரமுடியாத பிரச்சனையள் அடுத்த சந்ததில கூட தெரியலாம்..................... யுத்தம் ஓஞ்சாலும்................... பாதிப்புகள் தாக்கங்கள் அடுத்த தலைமுறைக்கும் காவப்படும்..................................................

........ யுத்தம் அவைக்கு பழக்கப்பட்டிட்டு அதால எந்தப் பாதிப்பும் வராது.............. அல்லாட்டி வாறது குறைவா இருக்கும் எண்டு சொல்லேலாது............................ தனிய குண்டு விழுகிறது மட்டும் யுத்தமில்ல........................ குண்டு விழுறது........... அதால வீடுகள் உடையுறது................ அம்மா அப்பா உறவுகள் சொந்தங்கள இழக்கிறது......... தான் நேசிச்ச நாய்க்குட்டி............... தான் வளத்த ஆட்டுக்குட்டி சாகிறது......................... பயங்கர சத்தங்கள்..................... புலப்பெயர்வு.................................. தூக்கமின்மை..................... வறுமை............ ரத்தம்...... பாலியல் வன்முறையள்............. எண்டு கனக்கு இருக்கு..................ரத்தத்த பாத்து பாத்து அன்றாடம் பழகினவைக்கு ரத்தம் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது எண்டு சொல்லேலாது................... அப்பிடி பழக்கப்பட்வை நாளைக்கு ஒரு கொலையை சர்வசாதாரணமா செய்திட்டு போவினம்................

பாக்கிறதுக்கு பாதிப்பு இல்லாத மாதிரி தான் வெளியில தெரியும்....................... மனம் எண்டது சந்தர்ப்பம் பாத்து தன்ர பாதிப்ப வெளிப்படுத்தும்.................... அப்ப தான் நாங்க அவன் ஏன் அப்பிடி நடந்துகொண்டான்................... அவள் ஏன் அப்பிடி செய்தவள் எண்டு ஆராய வெளிக்கிடுவம்............. அதால சிறுவர்களும் குழந்தையளும் மகிழ்ச்சியான சூழலில வாழுறதுக்கான ஏற்பாடுகள செய்யணும்........................... சுனாமி ரைம்ல வெளிநாடுகளில இருந்து போய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனவளப் பயிற்சி குடுத்திருக்கினம்.......................

ரத்தம் பழகிப்போறதும்................ குண்டுச் சத்தம் பழகிப்போறதும்..................... அழுகுரல் பழகிப்போறதும்.......................... மொத்தத்தில யுத்தமும் யுத்த சூழலும் பழகிப்போறதும்..................... ஆபத்தானது.................................... சுதந்திர தமிழீழத்தில எங்கட மக்கள் உளநலத்துடனும் எங்கட குழந்தையள் மகிழ்ச்சியோடயும் வளமான எதிர்காலத்தோடயும் வாழவேணும்.......................... இதான் என்ர விருப்பம்.............. இதுக்கு எங்கள மாதிரி உளவியல் படிக்கிற மாணவர்களின்ர பங்களிப்பு எப்பவும் இருக்கும்.......................................

நான் நினைக்கிறன் குறுகிய கால நோக்கில் பார்த்தால் ஒருவகை இசைவாக்கத்திற்கு வந்தவர்களால் தான் தொடரந்து அந்தச் சூழலில் இயங்க முடிகிறது. அதன் அர்த்தம் அவர்கள் நீண்ட கால நோக்கில் தாக்கப்படவில்லை வடுக்களை சுமக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. ஊடகத்துறையை எடுத்துக் கொண்டால் ஒரு யுத்தம் நடக்கும் பகுதிக்கு வெளிநாடு ஒன்றில் இருந்து செல்லும் ஊடகரால் அங்கு நடப்பவற்றை விபரிக்கும் முறை படப்பிடிபாளர் படங்கள் எடுக்கும் கோணம் கவனம் செலுத்தும் காட்சிகள் என்பன அங்கு இருந்து பழகிய ஊடகத்துறையினரின் பார்வை கண்ணோட்டத்தை விட முற்றிலும் வேறாதானதாக இருக்கிறது.

நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராமல் நடக்கும் ஓர் விடயம்தான் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, விபத்துக்களைச் சொல்லலாம். அப்படிப் பார்க்கும்போது, தாயகத்தில் நடக்கும் போர், உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு சந்தர்ப்பங்கள் குறைவு. இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல, அங்குள்ள பிள்ளைகளுக்கு உளவியல் பாதிப்பு பெரிதளவாக இல்லை. சுனாமியின் பின்னர்கூட, நாம் எதிர்பார்த்த அளவிற்கு அங்கு உளவியல் தாக்கங்கள் ஏற்படவில்லை. காரணம், அங்கு அவர்கள் இழப்புகளை சந்திப்பது சகஜம். கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக அவர்கள் நாளாந்தம் இழப்புகளைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இழப்புகளைச் சந்திக்கும்போது, அவர்களுக்குக் கவலைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்காக வெளிநாட்டவர்கள் கூறுவது போன்ற பாரிய உளவியல் தாக்கங்கள் அங்கு இல்லை. சிறியளவிலேயே உள்ளது. அங்கு ஓரிருவரே உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களை நாம் சாதாரண வகையிலேயே மாற்ற முடியும்.

உளவியல் படித்ததால் மட்டும் ஒருவரின் உளவியல் தாக்கத்தை சரிப்படுத்தி விடமுடியாது. அதற்கு அனுபவமும் வேண்டும். உளவியல் உணர்வுகள் சம்பந்தப்பட்டது. உளவியலாளர்களும், பாதிக்கப்பட்டவரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டால்தான் அவர்களுக்கு உதவ முடியும். அவர்களும் அதன் தாக்கத்தினைப் புரிந்து கொள்ளக்கூடியவர்களாக இருந்தால் மட்டுமே, அவர்களின் சிகிச்சை பலனளிக்கும். ஆனால், வெளிநாடுகளிலுள்ள பல உளவியலாளர்கள் தாம் படித்த படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு சிகிச்சையளிக்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில், உண்மையான பிரச்சனையை அறிவதற்கே அவர்களுக்குப் பல காலங்கள் பிடிக்கிறது. உளவியலில் மருத்துவம் போன்று, பிரச்சனைகளைக் கண்டறிவதற்குக் கருவிகள் இல்லை. பாதிக்கப்பட்டவருக்கும் உளவியலாளருக்கும் இடையே உள்ள தொடர்பினைப் பொறுத்தே அப்பிரச்சனைக்கான தீர்வு உள்ளது. முதலில் உளவியலாளர், பாதிக்கப்பட்டவரின் நம்பிக்கையைப் பெறவேண்டும். அதன்பின்னர், பாதிக்கப்பட்டவர் சொல்வதை, உரிய முறையில் விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது, பாதிக்கப்பட்டவரின் உணர்வை இவரும் உணரவேண்டும். ஆனால் உளவியலாளர்கள் பாதிக்கப்பட்டவரின் உணர்வுகளை உணருவதில்லை. அவர்கள் உளவியல் பிரச்சனைகளை, ஓர் நோயாகக் கருதுகிறார்கள். நோய்களுக்கு எவ்வாறு மருந்துகள் தருகிறார்களோ, அதே போன்று இன்ன பிரச்சனைகளுக்கு இன்ன தீர்வு என மற்ற ஆய்வாளர்கள் கூறியதையோ, அல்லது அவர்கள் படித்ததையோ வைத்து சிகிச்சை தருகிறார்கள். அதனால்தான், இங்கு உளவியல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வெகுநாட்கள் பிடிக்கிறது. பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமலே இருந்திருக்கின்றன. அல்லது சிகிச்சைக்காகப் போன பிரச்னை தீர்க்கப்பட்டு, வேறொரு பிரச்சனை வந்து விடும். இங்கு உளவியல் படிக்கும் பல தமிழ்ப்பிள்ளைகளும் இவ்வாறான சிகிச்சை முறைகளையே பின்பற்றுகிறார்கள். தங்களுக்கு வரும் பிரச்சனைகளையே இவர்களால் தீர்க்க முடியாமல் உள்ளது. எமது சிந்தனைகள்தான் உளவியல் பிரச்சனைகளுக்கான சிறந்த சிகிச்சை. எமது சிந்தனைத் திறனை வளர்த்தாலே, பல பிரச்சனைகளை நாம் சமாளித்து விட முடியும்.

சபேஸ், நீங்கள் உங்கள் பிரச்சனையைக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஒன்றை யோசித்துப் பாருங்கள். நீங்கள் மட்டும்தான் பலாலி இராணுவ முகாமுக்கு அருகாமையில் இருந்தீர்களா? பலாலி இராணுவ முகாமைச் சுற்றி எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்குமே இப்படியான பாதிப்பு உண்டா? உங்கள் பிரச்சனைக்குக் காரணம் போர் அல்ல. உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட அதிரடி மாற்றமே. அதாவது உங்களது புலம்பெயர்வும் அதன் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களுமே (தனிமை) அதற்குக் காரணம் என நினைக்கிறேன். உங்களது பிரச்சனையை நீங்கள் விளங்கத் தொடங்கி விட்டீர்கள். இனி அதனை எவ்வாறு களையலாம் எனச் சிந்தித்தீர்களானால் உங்களால் அதிலிருந்து விரைவில் மீளமுடியும். நீங்கள் அனுமதித்தால், நான் அதற்கான வழிமுறைகளைக் கூறலாம்.

எமது வாழ்க்கையைப் பற்றி நாம் சிந்திப்பது மிகவும் குறைவு. எமது பிரச்சனைகளைப் பற்றி, நாம் ஆழமாகச் சிந்திப்பதில்லை. பிரச்சனைகள் வருவதற்கு முன்னரோ அல்லது ஆரம்பத்திலோ நாம் அவைகளைப் பற்றிச் சிந்திப்பதில்லை. பிரச்சனைகள் முற்றிய பின்னரே நாம் அவற்றைப் பற்றி யோசிக்கத் தொடங்குகிறோம். இதனால்தான், எம்மால் பல பிரச்சனைகளை எதிர்நோக்க முடியாமல் உள்ளது. அவைதான் உளவியல் பாதிப்பிற்கு வழிகோலுகின்றன.

தாயகப்பிள்ளைகளுக்கு முதலில் தேவையானது, நிம்மதியான வாழ்க்கையே. அது கிடைக்கும்போது, அவர்களுக்கு எந்தவிதமான ஒரு உளவியல் பிரச்சனைகளும் இருக்கப் போவது இல்லை. இதுவரை காலமும் நடந்த போரில், அவர்கள் அவ்வளவாகப் பாதிக்கப்படவில்லை. அங்குள்ள பிள்ளைகள் சாதரணமாகத்தான் இருக்கிறார்கள். ஓரிரு சிலரே பாதிக்கப்பட்டிருந்தார்கள். சமாதான காலத்தில் தாயகம் சென்று வந்தவர்களுக்கு இது விளங்கும்.

Edited by Thamilachchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.