Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வவுனிக்குளத்தில் மோதல் - 33 போராளிகள் வீரச்சாவு

Featured Replies

வவுனிக்குளம் மற்றும் அதனோடு இணைந்த பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலைவரை நடைபெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய 33 போராளிகளின் வித்துடல்களைக் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்புத் தெரிவித்துள்ளது.

விலை மதிக்க முடியாத தமது இன்னுயிர்களை விடுதலைக்காக ஈந்த இந்த மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி வணக்கம் செலுத்துவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

வித்தாகி போன போரளிகளுக்கு வீர வணக்கங்கள்.

இச்செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என மனம் சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இச்செய்தி பொய்யாக இருக்க வேண்டுமென்றுதான் என் மனமும் தவிக்கின்றது. : /

பொதுவாக போர்க்களத்தில் தற்காப்புச் சமரில் ஈடுபடுபவர்களிற்குத்தான் அதிக சேதம் ஏற்படுவதுண்டு. வன்னிக்களத்தைப் பற்றி சொல்லத் தேவையில்லை, அடர்ந்த காட்டுக்குள் நேருக்கு நேர் சண்டை போடவேண்டிய கட்டாயமே அதிக உயிர்ச்சேதங்கள் ஏற்படக் காரணம்.

மாவீரர்களிற்கு வீர வணக்கங்கள். : (

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தின் இழப்புகள் பற்றி ஒரு செய்தியையும் காணவில்லை????

மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலிகள்!

****

..... ஒரு தாக்குதல் .... பின் ஆறு மாத ஓய்வு .... இடையில் பாரிய அழிவுகள் ..... சிங்கள இராணுவத்தின் மனவலிமையை, சிங்கள அரசின் மனவலிமையை உடைப்பதற்குப் பதிலாக நாம், எமது நம்பிக்கைகளை சிதறடிக்கிறோம்!

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன கொடுமையப்பா , எதோ தவறாக நடக்கின்றது போல் உள்ளதே ........

கடைசியில் எங்களை காப்பாற்ற யாருமே இல்லையா ?

சிறீலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் கடும் மோதல் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் மற்றம் மல்லாவி ஆகிய பிரதேசங்கள் விடுதலைப் புலிகளின் 22 சடலங்கள் கிடப்பதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க..

  • தொடங்கியவர்

மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலிகள்!

****

..... ஒரு தாக்குதல் .... பின் ஆறு மாத ஓய்வு .... இடையில் பாரிய அழிவுகள் ..... சிங்கள இராணுவத்தின் மனவலிமையை, சிங்கள அரசின் மனவலிமையை உடைப்பதற்குப் பதிலாக நாம், எமது நம்பிக்கைகளை சிதறடிக்கிறோம்!

இது என்ன கொடுமையப்பா , எதோ தவறாக நடக்கின்றது போல் உள்ளதே ........

கடைசியில் எங்களை காப்பாற்ற யாருமே இல்லையா ?

போராட்டம் ஒன்றும் வழி தவறிப்போகவில்லை. தனது இலக்கு நோக்கி அது சரிவரப்பணித்துக் கொண்டிருக்கிறது.

போரின்போது எதிர்பாராத பின்னடைவுகள் ஏற்படுவது வழமை. அவ்வாறான ஒன்றே இதுவும். படையினரின் செய்திகளின் படி படையினர் கைப்பற்றிய வவுனிக்குளம்(குளக்கட்டின் ஒரு பகுதி) பகுதியை மீளக்கைப்பற்றும் நேக்குடன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலேயே இந்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்று அறியமுடிகிறது. இது போன்ற சம்பவங்கள் பல நடந்துள்ளன.

ஜெயசிக்குறு காலத்தில் புளியங்குளத்தைக் கைப்பற்ற படாதபாடுபட்ட படையினர் நெடுங்கேணிப் பகுதியிலிருந்து முன்னேறி திடிரென மாங்குளத்திற்கு அருகே உள்ள ஒலுமடுப்பகுதிவரை வந்த போது கரப்புக்குத்தி, விஞ்ஞான குளப்பகுதிகளில் படையினரை ஊடறுத்துத் தாக்கி மூவாயிரத்திற்கும் அதிகமான படையினரைத் தனிமைப்படுத்தினர். தனிமைபடுத்தப்பட்ட படையினரை மேலும் தனிமைப்படுத்தும் நோக்குடன் பெரியமடுப்பகுதியில் நிலைகொண்டிருந்த படையினர் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல் பின்னடவைச் சந்தித்து 50 வரையான போராளிகளின் வித்துடல்கள் படையினரால் கைப்பற்றப்பட்டன. அதேபோல வெட்டசர் செட் படை நடவடிக்கை மற்றும் அததெற்கெதிரான தாக்குதல்களின் போதும் பெருமளவான போராளிகளின் வித்துடல்கள் படையினரால் கைப்பற்றப்பட்டன. அதற்கு முன்னரும் பல தடவைகள் படையினரால் போராளிகள் வித்துடல்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

எனவே இப்போதுதான் இப்படி நடக்கிறதென்பதுபோலவும், போராட்டம் தவறான பாதையில் செல்கிறது என்றும் கருத்துக்களை வைக்காதீர்கள். இவ்வாறு ஏற்படும் பின்னடைவுகள் எதிர்பாராதவை. தலைமை வேண்டுமென்றே போராளிகளைப் பலி கொடுக்கவில்லை.

விலைமதிக்க முடியாத இந்த உத்தமர்களின் இழப்பு பேரிழப்புத்தான் எனினும் அந்த இழப்பைக் கண்டு துவண்டு விடக்கூடாது. தாயகத்தில் என்னதான் நடந்தாலும் அவற்றைத் தாங்கிக் கொண்டு போராட்டம் வெல்வதற்கான எமது கடமைகளைச் செய்வோம்.

எதிரியின் பலஆயிரம் இழப்பிற்கு எமது ஓரு போராளியின் இழப்பும் சமனாகாது. எமது வீரர்கள் விலைமதிப்பற்றவர்கள்.

ஈழத்தின் விடியலிற்காய் தம்மை அர்ப்பணித்த வீரப்புதல்வர்களிற்கு வீர வணக்கங்கள்.

நம்பிக்கை எம் கை எனவே நாம் துவழ மாட்டோம். . . .

குறிப்பு

தயவுசெய்து அப்படியான புகைப்படங்களை இணைக்கவேண்டாம். எம் சகோதரர்களின் உடல்களை அப்படி பார்க்கமுடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

வீரத்தின் வேர்களே!

வீரிய மா வல்லவரே!

தற்காப்பு நிலையென்று உட்கார்ந்த நிலை போதும்.

உக்கிர மூச்செடுத்து உலைக்களத்தில் நிமிர்க!

ஊர்மனை கிழித்து உள் நுழையும் ஷெல்லனைத்தும்;

நீர் மூசும் பெருங்காற்றில் நெருப்பேந்தும் அறிக!

அவையே நீர் காட்டும் திசையில்

வளியைக் கிழித்து வைரியை தின்னும் உணர்க!

யுத்தச் சாத்தான் பக்கத்து வீட்டில் அல்ல,

படலைக்குள் புகுந்து முற்றத்தில் நின்றாடி ரத்தப்பலி கேட்கிறது.

போதும்.....

தற்காப்பு நிலை போதும்.

கூரையிலே தீப்பிடிக்க குடிசைக்குள் பாதுகாப்பா?

தூவாணங்கூட உலகவானம் தூவலையே....

தாரை, தப்பட்டை, உருமி மேளம் கொண்டு

உரசும் காற்றிடையே உக்கிரம் மூட்டியெழும்

நெருப்பின் தூர் வானில் துளைத்தெகுமாகில்

கார்முகில் கொண்டு வரக் காத்திருக்கும் உலகமய்யா!

போதும்,.... தற்காப்பு நிலை போதும்.

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

33 விடுதலைப் புலிகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது

இலங்கையின் வடக்கே நடக்கின்ற மோதல்களில் கடந்த இருதினங்களில் மொத்தமாக 33 விடுதலைப்புலிகளின் சடலங்களைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறும் இலங்கை இராணுவம், அவற்றை விடுதலைப்புலிகளிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை தாம் தற்போது மேற்கொண்டுவருவதாகக் கூறியுள்ளது.

இலங்கையின் வடக்கே வன்னிப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படைகள் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்டம் பனங்காமம் பகுதியிலிருந்து மல்லாவி நோக்கிய இராணுவத்தின் முன்னேற்ற நடவடிக்கையின்போது கடந்த இரண்டு தினங்களாக இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

இதில் மல்லாவி பகுதியில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 28 சடலங்ளையும், மற்றுமொரு இடத்தில் கொல்லப்பட்ட இன்னுமொரு விடுதலைப் புலி உறுப்பினரின் சடலத்தையும் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  • கருத்துக்கள உறவுகள்

தற்காப்பு நிலையென்று உட்கார்ந்த நிலை போதும்.

உக்கிர மூச்செடுத்து உலைக்களத்தில் நிமிர்க!

அருமையான வரிகள் இவை வல்வை சகாரா .

  • கருத்துக்கள உறவுகள்

வவுனிக்குளம் மற்றும் மல்லாவி தெற்குப் பகுதியில் சிறீலங்காப் படையினருடன் நடைபெற்ற மோதல்களில் ஆங்காங்கே விடுதலைப் புலிகளின் 33 உடலங்களை தாம் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் சார்ள்ஸ் அன்ரனியின் தாக்குதல் தளபதிகளில் ஒருவரான பல்லவன், அன்புமணி, செல்வக்கண்ணன், செல்லப்பா, முகி, இலம்பு, சுடர் உள்ளடங்குவதாகவும் சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 23 ஏ.கே ரக துப்பாக்கிகள், ஏ.கே ரவைக்கூடுகள் 5, ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி 1, ஆர்.பி.ஜி உந்துகணைகள் 3, கைக்குண்டு 1, உந்துறுளி 1, வோக்கி டோக்கி 15 , ஆகியவற்றைக் பைக்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

http://www.pathivu.com/?p=2401

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மாதமும் இதே போன்றதொரு பேரிழப்பு. இப்போ மீண்டும் ஒரு பேரிழப்பு. இதற்கிடையே சிறுகச் சிறுகவும் இழப்புகளும் உடலங்கள் கைப்பற்றல்களும். இரண்டு மாதத்திலும் சுமார் 100 போராளிகளின் உடலங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

அகலக் கால்பதிக்க அனுமதித்ததன் விளைவுகளில் இவையும் சேரும்.

யுத்த களம் எமக்கு சாதகமாகாத வரை இழப்புக்கள் தொடரவே செய்யும்..!

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்..! :lol::):D

Edited by nedukkalapoovan

மண்ணின் மைந்தர்களே

மெளனமாக நிற்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தின் சிராட்டிக்குளம் சண்டையில் ஈடுபட்ட அணி இதிலும் ஈடுபட்டுள்ளது.

அப்போது கைப்பற்றிய உடலங்களோடு நின்ற இராணுவ வீரர்களில் குறிப்பிட்ட அடையாளங்களோடு நின்றவர்கள்.. இப்போது வெளியிடப்பட்ட படங்களிலும் நிற்கின்றனர்..!

இது படங்கள் வெட்டி ஒட்டப்பட்டவை என்பதாக அமையாது. ஒரே அணியினர் ஈடுபட்டதாக இருக்கலாம்..! :)

சிராட்டிக்குளம் மோதலில் ஏற்பட்ட அதே விளைவு இதிலும் ஏற்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் ஏன் ஒரே தவறை மீண்டும் செய்தனர் என்பதுதான் புரியவில்லை.

முன்னர் சந்திரிக்கா அம்மையார் காலத்திலும்.. இதே போன்ற தவறுகள் நடந்திருக்கின்றன. மணலாறில் 180 போராளிகளும் சூரியக் கதிர் முறியடிப்புத் தாக்குதலில் புத்தூரில் 120 போராளிகளும் ஒரே வகையில் ஜனக பெரேராவின் தந்திரத்துக்கு பலியானார்கள். அதேபோல் ஓயாத அலைகள் 3இன் முடிவில் சாவகச்சேரியில் நடந்த சண்டையில் 200 வரையான போராளிகளின் உடலங்களை கைவிட்டிருந்தனர். அதுவும் ஜனக பெரேராவின் வழிநடத்தலில் நிகழ்ந்த தாக்குதல்களே.

அந்த இழப்புக்கள் இன்று வரை தொடர்கிறது..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வேதனை

  • கருத்துக்கள உறவுகள்

இழப்புகள் எமக்கு புதியவை அல்ல

சோதனைகளை எமது தலைவன் சந்திப்பது இதுதான் முதல் தடவையுமல்ல!

ஆனாலும் எமது போராட்டம் பாதிவழியில் நிற்காது

(தமிழிழ விடுதலை புலிகள் 1987. குமரப்பா புலந்திரனின் உயிக்கொடையின் காலத்தில்)

இறுதிவரை நின்று உயிர் போகுவரை மண் காத்த மைந்தர்களே.....

நீங்கள் மானிடரல்லா......... மானிடர் தெய்வங்கள் என்று சொல்வார்களே.

அவர்கள் நீங்கள்தான்!

வணங்குகிறேன் உங்களை!

கனத்த மனதுடன் எமது வீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்களை பார்க்கேக்கை இவர்கள் எல்லாம் எங்கட அண்ணாமார் தம்பிமார் என்டு நினைக்க சரியான கவலையா இருக்கு :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: வீரவணக்கம் !!!!!

அகலக் கால் வைக்கிறான் எதிரி என்று எதிரியைக் குறைத்து மதிப்பிட்டதாலோ என்னவோ எமக்கும் இழப்புகள் இப்போது அதிகரித்துச் செல்கின்றன. எதுவுமே எழுத மனமில்லை. இழப்புக்கள் இதுவாவது இறுதியாக இருந்துவிடக்கூடாதா என்று மனம் அங்கலாய்க்கிறதே ?!

எதுவும் எழுதிவிடப் பயம் எனக்கு. எழுதினால் தலைவருக்கே போர்ப்பாடம் சொல்லிக் கொடுக்கிறான், மேதை என்ற நினைப்பு என்று வருவார்கள சிலர்.

ம்...இவ்வளவு காலமும் பொறுத்துவிட்டோமாம்...இன்னும் கொஞ்சக்காலம் தானே ! பொறுத்திருப்போம். அதுவரையாவது போராளிகளை இறைவன் காப்பாற்றி வைத்திருப்பானாக !

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: பொன்னைய்யர்,

தயவுசெய்து இந்தப் படங்களை அகற்றி விடுங்கள். இதயம் வலிக்கிறது.....

இதனால் என்ன பயன் எவருக்கும் ? கவலைதானே மிச்சம் ? தயவு செய்து அகற்றி விடுங்கள்.உங்களுக்குக் கோடிப் புண்ணியம்.

நன்றி.

மண்ணின் மைந்தரே வித்தாய் வீழ்ந்தவரே வீர அஞ்சலிகள்.

எமக்காய் தம் உயிர் ஈந்து விதையாய் வீழ்ந்தவிட்ட உத்தமரை காண விழிகள் மட்டுமல்ல உள்ளமும் இரத்தம் சிந்துகின்றது. உறவுகளே தயவுடன் இப்படியான படங்களை இணைப்பதை தவிருங்கள். தாங்க முடியவில்லை.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

வீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.