Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசுக்கு அதிக அளவில் இராணுவ உதவி செய்யும் நாடு

சிறிலங்கா அரசுக்கு அதிக அளவில் இராணுவ உதவி செய்யும் நாடு 35 members have voted

  1. 1. சிறிலங்கா அரசுக்கு அதிக அளவில் இராணுவ உதவி செய்யும் நாடு எது?

    • அமெரிக்கா
      6
    • இந்தியா
      23
    • சீனா
      9
    • முன்னாள் சோவியத் நாடுகள்.
      0
    • பாகிஸ்தான்
      11
    • ஈரான்
      2
    • ஐரோப்பிய இணைய நாடுகள்
      0

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா வழங்கும் இராணுவ ஆதரவு பற்றி பல களங்களில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் சீன இராணுவ ஆதரவு பற்றியோ பாகிஸ்தானின் இராணுவ ஆதரவு பற்றியோ அமெரிக்க ஆதரவு பற்றி எழுதிய அளவுக்கு எழுதியிருப்பதாக தெரியவில்லை. இதனால் எந்த நாடு இலங்கைக்கு பெருமளவில் இராணுவ ஆதரவு வழங்கி வருகிறது என்பதை அறிவது பயனுள்ளதாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இந்தியா இந்தியா இந்தியா இந்தியா இந்தியா இந்தியா இந்தியா இந்தியா இந்தியா இந்தியா இந்தியா இந்தியா இந்தியா :)

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில் குட்டிப்பையன் . :)

நல்ல முயற்சி யூட்.

ஆயுத தளபாட விற்பனை (மற்றும் இலவசமாக கொடுப்பது கடனடிப்படையில் கொடுப்பது) என்பனவற்றின் அடிப்படையில் மாத்திரம் பட்டியல் இட்டால் பின்வரும் ஒழுங்கு என்பது எனது மதிப்பீடு

சீனா

பாக்கிஸ்தான்

முன்னாள் சோவியத் நாடுகள் (இதில் சில புதிதாக இணைந்த ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளும் அடக்கம்).

அமெரிக்கா

இந்தியா

ஐரோப்பிய நாடுகள் பிரித்தானியா உட்பட

இஸ்ரேல்

ஈரான்

ஆனால் தமிழருக்கு எதிரான போருக்கான பயிற்சிகள், உளவுத்தகவல் பரிமாற்றம், அரசியல் இராசதந்திர உதவிகள் அபிவிருத்தி நிதியுதிவிகள் என்று எல்லாத்தையும் சேர்த்து பார்த்தால் ஒழுங்கு வேறாக இருக்கும்.

பன்முகப்பட்ட உதவிகளின் மொத்த பெறுமதியின் (aggregate) அடிப்படையில் பின்வரும் ஒழுங்கு என்பது எனது மதிப்பீடு

சீனாவும் அமெரரிக்காவும் கிட்டத்தட்ட சம அளவில் 1 இடம்

இந்தியா

ஐரோப்பிய ஒன்றியம்

பாக்கிஸ்தான்

இஸ்ரேல்

ஈரான்

எமது போராட்டம் தொடர்பாக சர்வதேச அளவில் இருக்கும் கருத்தியலிற்கு அமெரிக்கா இந்தியா ஐரோப்பிய ஒன்றியம் போன்றவர்கள் தடை பாரதூரமானது ஏன் என்றால் சர்வதேச அரங்கில் அங்கீகாரம் என்று வரும்பொழுது இந்த நாடுகளின் clout தான் அதிகமானது.

அடுத்து முறையே அமெரிக்கா இந்தியா பிரித்தானியா வோடான பயிற்சிகள் தகவல் பரிமாற்றங்கள் கணிசமானவை.

மேலும் யப்பானின் பங்களிப்பு ஆர்வம் என்பவை அமெரிக்காவின் proxy ஆக தான் பார்க்கப்படுகிறது. யப்பானிற்கு இலங்கையில் ஒரு சுயாதீன நிகழ்ச்சி நிரல் இருப்பதாக தெரியவில்லை.

Edited by kurukaalapoovan

போராட்டத்தை முன்னெடுக்க அரசாங்கத்துக்கு ஆயுதங்களை அள்ளி கொடுக்கிறதே தவறாக உள்ளபோது, சிறிய அளவில் கொடுப்பவர்கள் பெரிய அளவில் கொடுப்பவர்கள் என்று கணக்கெடுப்பதில் அர்த்தமில்லை.

கொஞ்சமாய் கொடுத்தாலென்ன நிறைய கொடுத்தாலென்ன ?! மொத்தமாக அவை தமிழின அழிப்பிற்குதானே துணைபோகின்றன...

கணக்கெடுத்து என்ன பிரியோசனம் ? கொஞ்சமாய் கொடுத்தவர்களை மட்டும் நல்லவவர்கள் என்று கூறவா முடியும் ?

இது என் தனிப்பட்ட கருத்து... இது ஒன்றும் இந்த கேள்விக்கு எதிரானதல்ல. நன்றி.

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் :)

Edited by தாயகன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோவான்

உங்கள் கருத்துக்கு நன்றி. வாக்கெடுப்பிலும் தங்கள் கருத்துப்படி வாக்களிப்பது பயனுள்ளதாக அமையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா, பாக்கிஸ்தான், சீனா; இந்த மூன்று நாட்டையும் எடுத்தா சீனாவும் பாக்கிஸ்தானும் போட்டி போட்டுக்கொண்டு உதவினம். இது இரண்டின்டையும் ஆதிக்கம் இலங்கையில அதிகரித்திடும் என்ட நிலைப்பாட்டில இந்தியாவும் குடுக்குது.!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தை முன்னெடுக்க அரசாங்கத்துக்கு ஆயுதங்களை அள்ளி கொடுக்கிறதே தவறாக உள்ளபோது, சிறிய அளவில் கொடுப்பவர்கள் பெரிய அளவில் கொடுப்பவர்கள் என்று கணக்கெடுப்பதில் அர்த்தமில்லை.

கொஞ்சமாய் கொடுத்தாலென்ன நிறைய கொடுத்தாலென்ன ?! மொத்தமாக அவை தமிழின அழிப்பிற்குதானே துணைபோகின்றன...

கணக்கெடுத்து என்ன பிரியோசனம் ? கொஞ்சமாய் கொடுத்தவர்களை மட்டும் நல்லவவர்கள் என்று கூறவா முடியும் ?

இது என் தனிப்பட்ட கருத்து... இது ஒன்றும் இந்த கேள்விக்கு எதிரானதல்ல. நன்றி.

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் :)

தாயகன்

கணக்கெடுப்பின் நோக்கம் நாடுகளை நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பகுப்பதற்கல்ல எந்த நாடுகளை நாம் குறிப்பாக கவனத்தில் எடுத்து அந்த நாட்டு அரசுகளிற்கு எமது மக்களின் நிலைப்பாட்டை புரிய வைக்க முயற்சிக்க வேண்டும் என்று அறிய இந்த கணக்கெடுப்பு உதவலாம். உதாரணமாக இந்த நாடுகள் எல்லாம் தமது பிரதிநிதிகளை ஐரோப்பிய நாடுகளில் வைத்திருக்கிறார்கள். இந்த நாட்டு குடிமக்களும் ஐரோப்பாவில் இருக்கிறார்கள். இவர்களுடன் நட்பு கொண்டு அவர்கள் நாட்டு இராசதந்திரிகளை சந்தித்து நமது நிலைப்பாட்டை அவர்கள் அரசுக்கு தெரிய வைக்க முயற்சிக்கலாம். பெருமளவில் இராணுவ உதவி செய்யும் நாட்டை கவனத்தில் எடுத்து தொடர்பு கொள்ளவது சிறிய அளவில் உதவும் நாட்டுடன் தொடர்பு கொள்வதிலும் பார்க்க பயனுள்ளதாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழின அழிப்புக்கு அதிகளவு துணைபோகும் நாடு என்பதுதான் இந்த கருத்துக் கணிப்பிற்கு ஏற்ற தலையங்கமாக இருக்கமுடியும்.

எனவே இந்தியாவை முதலிடத்தில் தெரிவு செய்கிறேன்.

இந்தியா

தாயகன்

கணக்கெடுப்பின் நோக்கம் நாடுகளை நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பகுப்பதற்கல்ல எந்த நாடுகளை நாம் குறிப்பாக கவனத்தில் எடுத்து அந்த நாட்டு அரசுகளிற்கு எமது மக்களின் நிலைப்பாட்டை புரிய வைக்க முயற்சிக்க வேண்டும் என்று அறிய இந்த கணக்கெடுப்பு உதவலாம். உதாரணமாக இந்த நாடுகள் எல்லாம் தமது பிரதிநிதிகளை ஐரோப்பிய நாடுகளில் வைத்திருக்கிறார்கள். இந்த நாட்டு குடிமக்களும் ஐரோப்பாவில் இருக்கிறார்கள். இவர்களுடன் நட்பு கொண்டு அவர்கள் நாட்டு இராசதந்திரிகளை சந்தித்து நமது நிலைப்பாட்டை அவர்கள் அரசுக்கு தெரிய வைக்க முயற்சிக்கலாம். பெருமளவில் இராணுவ உதவி செய்யும் நாட்டை கவனத்தில் எடுத்து தொடர்பு கொள்ளவது சிறிய அளவில் உதவும் நாட்டுடன் தொடர்பு கொள்வதிலும் பார்க்க பயனுள்ளதாக அமையும்.

ஆம் அண்ணா நீங்கள் சொல்வது நிச்சயமாக உண்மைதான். இதை நான் வேறு கோணத்தில் பார்த்தனால் தான் எனது பதில் அப்படி இருந்தது.

அதனால் நான் மேலே குறிப்பிட்டதை தவறாக எண்ணாதீர்கள், அது ஒரு தனிப்பட்ட கருத்து என்றே எழுதியிருந்தேன் :D

அந்தவகையில் நானும் உங்கள் கருத்தெடுப்பில் பங்கு கொள்கிறேன்.

சூப்பர் ஸ்டார் யாரெண்டு கேட்ட சின்ன குழந்தையும் சொல்லும், அதேபோல்தான் இங்கயும் சூப்பர் ஸ்டார் ? வேற யார், இந்தியாவேதான் :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி யூட்.

ஆயுத தளபாட விற்பனை (மற்றும் இலவசமாக கொடுப்பது கடனடிப்படையில் கொடுப்பது) என்பனவற்றின் அடிப்படையில் மாத்திரம் பட்டியல் இட்டால் பின்வரும் ஒழுங்கு என்பது எனது மதிப்பீடு

சீனா

பாக்கிஸ்தான்

முன்னாள் சோவியத் நாடுகள் (இதில் சில புதிதாக இணைந்த ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளும் அடக்கம்).

அமெரிக்கா

இந்தியா

ஐரோப்பிய நாடுகள் பிரித்தானியா உட்பட

இஸ்ரேல்

ஈரான்

ஆனால் தமிழருக்கு எதிரான போருக்கான பயிற்சிகள், உளவுத்தகவல் பரிமாற்றம், அரசியல் இராசதந்திர உதவிகள் அபிவிருத்தி நிதியுதிவிகள் என்று எல்லாத்தையும் சேர்த்து பார்த்தால் ஒழுங்கு வேறாக இருக்கும்.

பன்முகப்பட்ட உதவிகளின் மொத்த பெறுமதியின் (aggregate) அடிப்படையில் பின்வரும் ஒழுங்கு என்பது எனது மதிப்பீடு

சீனாவும் அமெரரிக்காவும் கிட்டத்தட்ட சம அளவில் 1 இடம்

இந்தியா

ஐரோப்பிய ஒன்றியம்

பாக்கிஸ்தான்

இஸ்ரேல்

ஈரான்

எமது போராட்டம் தொடர்பாக சர்வதேச அளவில் இருக்கும் கருத்தியலிற்கு அமெரிக்கா இந்தியா ஐரோப்பிய ஒன்றியம் போன்றவர்கள் தடை பாரதூரமானது ஏன் என்றால் சர்வதேச அரங்கில் அங்கீகாரம் என்று வரும்பொழுது இந்த நாடுகளின் clout தான் அதிகமானது.

அடுத்து முறையே அமெரிக்கா இந்தியா பிரித்தானியா வோடான பயிற்சிகள் தகவல் பரிமாற்றங்கள் கணிசமானவை.

மேலும் யப்பானின் பங்களிப்பு ஆர்வம் என்பவை அமெரிக்காவின் proxy ஆக தான் பார்க்கப்படுகிறது. யப்பானிற்கு இலங்கையில் ஒரு சுயாதீன நிகழ்ச்சி நிரல் இருப்பதாக தெரியவில்லை.

சும்மா உதவிசெய்ய அவர்களுக்கு என்ன பைத்தியமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் வாக்குப் போடச் சொல்லியிருக்கிறதா கருத்தெழுதச் சொல்லியிருக்கிறதா? சிலர் தங்கள் சொந்தக் கருத்துகளை எழுதித் தள்ளியிருக்கிறார்கள். புரியவில்லை.

நீங்கள் வாக்குச்சாவடியில் வாக்கு போட்டது இல்லையா...???

வாக்கு போட்டுவிட்டு வந்து நீங்கள் வாக்கு போட்டதற்கான கருத்தை சொல்லலாம்.

அது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை :):D

  • கருத்துக்கள உறவுகள்

நாம் கருத்தெழுதுவதால் அதிக அளிவில் உதவி செய்யும் நாடு குறைந்த அளவில் உதவி செய்யும் நாடாக மாறிவிடுமா?

மொத்த ராணுவச் செலவினங்களில் எந்தெந்த நாடுகளிலிருந்து சிறீலங்கா எந்த அளவைப் பெற்றுக்கொண்டது என்னும் அளவீடுதானே இதைத் தீர்மானிக்கும். அல்லது அந்தந்த நாடுகள் கொடுத்த அளவுகளை அந்த நாடுகள் தரும் புள்ளிவிபர அடிப்படையில் அறிந்துகொள்ளலாம்.

அது சிரமமானதால் ஒரு பொதுவான கணிப்பில் சரியான விடையை (அது சிலவேளை பிழையாயுமிருக்கலாம்) அறிந்து கொள்ளும் முயற்சியாக இது இருக்கலாமென எண்ணினேன்.

இங்கே யானைப் பார்த்த குருடர்களைப் போல ஆளுக்கொன்றைச் சொல்வதால் ஒன்றும் புரியவில்லை.

சிலவேளை எனக்குப் புரியவில்லையோ தெரியவில்லை. அப்படியானால் மன்னிக்க வேண்டுகிறேன்.

சரியாகத்தான் சொல்லயிருக்கிறீர்கள்.

இங்கே யானைப் பார்த்த குருடர்களைப் போல ஆளுக்கொன்றைச் சொல்வதால் ஒன்றும் புரியவில்லை.

சிலவேளை எனக்குப் புரியவில்லையோ தெரியவில்லை. அப்படியானால் மன்னிக்க வேண்டுகிறேன்.

யாழ்கள அங்கத்தவர்கள் தமிழீழ நிலை பற்றி போதிய அறிவுடையவர்கள்; குருடர்களாக பிறந்தவர்கள் யானையை பல பகுதிகளிலும் தட்டித்தடவி பார்த்துத்தான் யானை எப்படியாக அமைந்திருக்கிறது என்று அறிந்து கொள்ள முடியும். எமக்கு தெரிந்ததை பரிமாறி அதிலிருந்து தேவையான அறிவை பெற்றுக்கொள்ள யாழ் களமாக அமைகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ உபகரணங்கள், தளபாடங்களை அதிகளவில் சீனாவும், இராணுவ உத்திகளை அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளும் அதிகளவில் வழங்கலாம்.

சிங்கள பாதுகாப்பு அமைச்சின் உள்ளக அறிக்கைகளை பெற்றுக் கொள்ளக்கூடியவர்களுக்கு வாக்களிப்பு இல்லாமலே யார் அதிகம் உதவி செய்கின்றார்கள் என்பது தெரியும். ஆனால் நாங்கள் ஊகத்தின் அடிப்படையிலேயே கருத்து வைக்கமுடியும். சிலவேளை http://www.janes.com/ இல் தரவுகள் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை

தமிழீழ நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது இந்தியாதான்

எனவே அவர்கள் ஸ்ரீலங்கா கேட்கும் அனைத்தையும் செய்து தருவார்கள்

புலிகள் அழியவேண்டும் என்பதில் ஸ்ரீலங்காவைவிட அக்கறையுள்ள நாடு இந்தியாதான் என்பது என்கருத்து

புலிகளைத்தடை செய்ததை வைத்து ஐரோப்பிய நாடுகளையும் கனடாவையும் தமிழர்களின் எதிரிகளாக பார்ப்பது சரியல்ல. ஏனெனில் முதலில் இந்தியாவே தடை செய்தது

ஸ்ரீலங்கா கூட இன்னும் தடை செய்யவில்லை

இந்தியாவே ஐரோப்பிய நாடுகளையும் கனடாவையும் கேட்டுக்கொண்டது தடை செய்யும்படி.

எம்மில் பலர் இன்றும் நினைத்துக்கொண்டிருக்கின்றோ

U.S. Arms Sales to Nations at War,2006/07 (in current dollars)

Asia Foreign Military Sales Foreign Military Sales Total

FY 2006 FY 2007

Afghanistan $1,727,000 -- $1,727,000

Burma(Myanmar) -- -- --

India -- $92,334,000 $92,334,000

Nepal $100,000 $200,000 $300,000

Pakistan $3,475,245,000 $187,156,000 $3,662,401,000

Philippines $30,578,000 $125,502,000 $156,080,000

Sri Lanka $1,400,000 $310,000 $1,710,000

Thailand $75,576,000 $88,439,000 $164,015,000

http://www.newamerica.net/publications/pol...pons_war_2008_0

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா. இவர்கள் பாகிஸ்தானை ஒரு முகவராக பாவித்தும் பல நாடுகளுக்கு ஆயுதங்களை ஆசிய நாடுகளுக்கு விற்பனை செய்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.