Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

68 நாள் போராட்டத்துக்குப் பிறகு சிலி சுரங்க மீட்பு பணி வெற்றி

Featured Replies

சான் டியாகோ : சிலி நாட்டில் சுரங்க விபத்தில் சிக்கியவர்களில் முதல் நபர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

சரியாக 68 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு பிளாரன்சோ அவலாஸ் (31) என்பவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இன்னும் 32 பேர் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர். மீட்பு பணிகள் நடக்கும் இடத்தில் சிலி நாட்டு அதிபரும் இருந்தார். முதலில் மீட்கப்பட்ட பிளாரன்சோவை கைகொடுத்து வரவேற்றார். பிளாரன்சாவின் மனைவியும், குழந்தையும் அவரை கண்ணீர் மல்க வரவேற்ற காட்சி அங்கிருந்தவர்கள் அனைவரையும் ‌நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நாசா உதவியுடன் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நாளைக்குள் மீதமுள்ள சுரங்கத் தொழிலாளிகளும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என தெரிகிறது.சுரங்கத்தில் சிக்கியுள்ள ஒவ்வொரு தொழிலாளியையும் மீட்க சுமார் 90 நிமிடங்கள் தேவைப்படும் என மீட்பு குழு தெரிவித்துள்ளது.

சிலி நாட்டிலுள்ள அடகாமா பாலைவனத்தில் உள்ள 700 மீ., நீளம் கொண்ட சுரங்கத்தின் முக்கியப் பாதை, கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று திடீரென மண்சரிவால் மூடப்பட்டு விட்டது. அப்போது சுரங்கத்தின் உட்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த 33 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். உள்ளே இருந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்று அந்நாட்டில் பெரும் அச்சம் நிலவியது. இந்நிலையில் உள்ளிருந்தவர்கள், வெளியில் இருந்தவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தாங்கள் உயிருடன் இருப்பதை தெரியப்படுத்தினர். இதையடுத்து, மண்சரிவால் மூடப்பட்ட பகுதியில் துளை ஏற்படுத்தப்பட்டு அதன் வழியாக ஒரு சிறிய கேமரா மூலம் சுரங்கத்தின் உட்பகுதி கண்காணிக்கப்பட்டது. அப்போது உள்ளே இருந்தவர்கள் தங்கள் கைகளை அசைத்தனர். இதனை தொடர்ந்த மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டது.

மருத்துவ உதவி : மீட்கப்படும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவ உதவி அளிக்கப்படும் என சிலி அரசு அறிவித்துள்ளது. 68 நாட்கள் சுரங்கத்தில் இருளில் சிக்கியிருந்தததால் அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கலாம் என கூறும் மருத்துவர்கள், எனவே அவர்களுக்கு கவுன்சிலிங் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

http://www.4tamilmedia.com/ww5/index.php/newses/world/725-chile-miners

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105755

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/09/100926_chile.shtml

  • தொடங்கியவர்

சிலி:சுரங்க மீட்பு திரைப்படமாகிறது

சிலி நாட்டில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நிலத்துக்கடியில் சிக்கியிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மேலே கொண்டு வரப்பப்ட்ட நடவடிக்கை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலத்துக்கு கீழே அவர்களது வாழ்க்கை எப்படியிருந்தது என்பது குறித்த செய்திகளை, கதைகளை வெளியுலகுக்கு கூற வேண்டிஅவர்களுக்கு ஏகப்பட்ட அழைப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன.

சிலி நாட்டின் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், சுரங்கத்தில் அவர்கள் சிக்கியது முதல் மீட்கப்பட்டது வரையிலான பரபரப்பான விடயங்களைப் படமாக எடுக்கும் நடவடிக்கையில் ஏற்கனவே இறங்கிவிட்டார்.

இதையடுத்து அமெரிக்க திரையுலகமான ஹாலிவுட்டும் இத்தகைய நடவடிக்கையில் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அரசியல் ஆதாயம்

உலகமே மிகுந்த எதிர்பார்ப்புடன் நோக்கிய இந்த நடவடிக்கையில், அரசியல் ரீதியாக பெருமளவில் ஒருவருக்கு வெற்றி கிட்டியது என்றால், அது சிலி நாட்டின் சுரங்கத்துறை அமைச்சரான லாரன்ஸ் கோல்பர்ண்தான்.

மூன்று மாதங்கள் முன்னர் வரை நாட்டில் பெரிதளவில் அறியப்படாத ஒரு அமைச்சராகவே அவர் இருந்தார். ஆனால் தற்போது நாட்டில் மிகவும் பிரபலமான அரசியல்வாதியாக அவர் கணிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பின் அடிப்படையில் 87 சதவீத மக்களின் ஆதரவு அவருக்கு இருப்பது தெரிய வந்துள்ளது.

சிக்கிய சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் அவர் காட்டிய ஆர்வமும் அக்கறையும், நாட்டில் அதிபராக இருக்கும் செபாஸ்டியன் பின்னேராவுக்கு அடுத்தபடியாக அவர் அப்பதவிக்கு வருவார் என கூறப்படும் அளவுக்கு அவருக்கான ஆதரவை பெருகச் செய்துள்ளன.

இதே நேரம் இந்த மீட்பு நடவடிக்கையை அரசு சிறப்பாக கையாண்ட விதம் காரணமாக நாட்டின் அதிபர் பின்னேராவுக்கான ஆதரவும் அதிகரித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் ஐரோப்பாவுக்கு பயணமாகவுள்ள பின்னேரா அங்கும் இந்த வெற்றிக் களிப்பில் மிதப்பார் என்பது உறுதி.

சில சமயங்களில் இந்த சம்பவம் தொலைக்காட்சிகளில் வரும் உண்மைச் சம்பவ நிகழ்ச்சி அதாவது ரியாலிட்டி ஷோ போன்று இருந்தது.

இந்தச் சுரங்கத் தொழிலாளர்கள் தொடர்பான ஒளிநாடாக்களை ஊடகங்களுக்கு அரசு வழங்கி வருகிறது. இந்த ஒளிநாடாக்களை உலகெங்கும் பார்த்த மக்கள் நிலத்தடியில் அவர்களது வாழ்க்கை குறித்து ஆச்சரியமும் திகிலும் அடைந்துள்ளனர்.

இந்த ஒளிநாடாக்களின் கதாநாயகன் மரியோ செபுவீடா. அவர்தான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக மற்ற சுரங்கத் தொழிலாளர்களை பேட்டி காண்பது மற்றும், தொலைக்காட்சி குழுவினரை அவர்கள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்வது போன்ற பணிகளை செய்கிறார்.

கவர்ச்சிகரமாகவும், நகைச்சுவை உணர்வும் உள்ள மரியோவுக்கு, சிலியில் பல தொலைக்காட்சி நிறுவனங்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

தகவலிற்கு நன்றி அகோதா

60 களில் ஜேர்மனியில் நடந்த சுரங்க விபத்தையும் இதே போன்ற ஒரு மீட்புப் பணியையும் ஏற்கனவே படமாக்கியுள்ளார்கள்

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப நன்றி இதை செயல் படுத்திய மீட்பு குழுவினர்க்கும் (குறிப்பாக அமெரிக்காவின் நாசா குழுவினர் )சிலி அரசுக்கும் பொறுமை காத்த மக்களுக்கும் மீண்டும் குடும்பத்துடன் அமைதியாக வாழ வாழ்துகள்..

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீண்ட காலங்களுக்குப் பின் உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்து மகிழ்ச்சி அடைந்த நிகழ்ச்சியிது.

இங்கே நாசாவின் பங்கு முக்கியமானது.

  • தொடங்கியவர்

சிலி நாட்டில் சுரங்கத்தில் சிக்கிய 33பேரும் 69நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதை சிலி மக்கள் உடன் உலக மக்களில் பலரும் ஒரு வெற்றிகரமான மனிதாபிமான செயலாக பார்க்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மீட்புப்பணியில் எனக்கும் சிறு பங்கு இருக்கு..! :wub:

மிக மிக மகிழ்ச்சி தந்த ஒரு நிகழ்வு இது. பாராட்டுகள் அனைவருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு 15 நிமிடம் மேலே கீழே பாரம் தூக்கும் இயந்திரத்தில்(lift) மாட்டுப் பட்டு பெற்ற அனுபவம் இருக்கிறதே. இவர்கள் 68 நாட்கள் சுரங்கக் இருந்திருக்கிறார்கள்.

இந்த மீட்புப்பணியில் எனக்கும் சிறு பங்கு இருக்கு..! :wub:

அதனை விளக்கமாக எழுதுங்கள் இசை.

  • கருத்துக்கள உறவுகள்

அதனை விளக்கமாக எழுதுங்கள் இசை.

மீட்புப்பணியில் முதலில் இறங்கியது நான் வேலை செய்யும் நிறுவனம் தான்..! பின்னர் வேறு இரு நிறுவனங்களும் இணைந்துகொண்டன.

மீட்புப் பணி இரு கட்டங்களைக் கொண்டது. முதலாவது, ஒரு அடி விட்டத்திற்கு, 700 மீ. ஆழத்துக்கு (சுரங்கத்தொழிலாளர்கள் இருக்கும் இடத்திற்கு) ஒரு துளை போடுவது. பிறகு கீழிருந்து தொடங்கி மேலேவரைக்கும் இரண்டரை அடி விட்டமாக்கிக் கொண்டுவருவது.

இதற்கு முன்னர் வேறு சில சிறிய துளைகள் போடப்பட்டிருந்தன. இவை உணவு, மருந்து, காற்று போன்றவற்றை அனுப்புவதற்காக.

முதல் துளை போடுவதுதான் மிகக் கடினம். ஏனென்றால் 700மீ. ஆழத்தில் உள்ள ஒரு சுரங்கத்துக்கு துல்லியமாக பாறைகளூடாக துளை போட வேண்டும். சில மீட்டர்கள் பிசகினாலும் சுரங்கத்தைத்தாண்டி கீழே துளை சென்றுவிடும்.

இரு கனேடிய நிறுவனங்கள் முதல் துளை போடும் வேலையை செய்துகொண்டிருந்தன. இடையில் ஒரு அமெரிக்க நிறுவனத்தையும் அழைத்து ஏற்கனவே உணவு அனுப்பவென போடப்பட்டிருந்த துளைகளில் ஒன்றைக் கொடுத்துவிட்டார்கள். அவர்கள் துளையைப் பெருப்பிக்கும் வேலையை இலகுவாகச் செய்து முடித்துவிட்டார்கள்..! :D

பிறகு அந்த அமெரிக்க நிறுவனத்தின் முதலாளி சொன்னார்..

யார் முதல்ல முன்னுக்கு ஓடுறாங்கள் என்கிறது முக்கியமில்லை.. கடைசியில யார் முன்னுக்கு வராங்க என்கிறதுதான் முக்கியம்..! :wub::lol::)

நன்றி

இடையில் ஒரு அமெரிக்க நிறுவனத்தையும் அழைத்து ஏற்கனவே உணவு அனுப்பவென போடப்பட்டிருந்த துளைகளில் ஒன்றைக் கொடுத்துவிட்டார்கள். அவர்கள் துளையைப் பெருப்பிக்கும் வேலையை இலகுவாகச் செய்து முடித்துவிட்டார்கள்..! :)

:wub:

யார் முதல்ல முன்னுக்கு ஓடுறாங்கள் என்கிறது முக்கியமில்லை.. கடைசியில யார் முன்னுக்கு வராங்க என்கிறதுதான் முக்கியம்..! :lol::):D

பயங்கர சுளியங்கள். உண்மையும் அதுதான்.

சீ.என்.என் இல் நேரடி ஒளிபரப்பு பார்த்துக்கொண்டிருந்தேன்.ஒரு வித அரசியலாக இருந்தாலும் தமது தேசியக் கொடியை ஏற்றி அதை வெற்றிவிழாமாதிரி கொண்டாடும் போது எமக்கான ஒரு நாட்டின் அவசியம் மனதில் வருகின்றது.கிரிகெட்,உதைபந்தாட்ட உலக கோப்பைகள் பார்க்கும் போது அந்த எண்ணம் நெடுகிலும் வரும்.விளையாடா விட்டாலும் பரவாயில்லை ஒரு கொடி தூக்கவாவது வழிபிறக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

முதல் துளை போடுவதுதான் மிகக் கடினம். ஏனென்றால் 700மீ. ஆழத்தில் உள்ள ஒரு சுரங்கத்துக்கு துல்லியமாக பாறைகளூடாக துளை போட வேண்டும். சில மீட்டர்கள் பிசகினாலும் சுரங்கத்தைத்தாண்டி கீழே துளை சென்றுவிடும்.

இதில என்ன கதைக்கிறீர்கள் இசை

முதலாவது இரண்டாவது என்று......... :wub:

ஒன்றுமே புரியல...

இருந்தாலும் முதலாவது துளைபோட்ட தங்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இதில என்ன கதைக்கிறீர்கள் இசை

முதலாவது இரண்டாவது என்று......... :D

ஒன்றுமே புரியல...

இருந்தாலும் முதலாவது துளைபோட்ட தங்களுக்கு என் வாழ்த்துக்கள்

முதல் துளை என்பது பைலட் ஹோல் (Pilot Hole)..! Directional Drilling எனப்படும் தொழில்நுட்பத்தைக்கொண்டு துல்லியமாக ஒரு துளை போட்டுக்கொள்ளுதல் இது.

4+The+Strata+950.jpg

பிறகு Reamer எனப்படும் துளையைப் பெருப்பிக்கும் அடி இணைப்பை சிறு பாகங்களாகப் பிரித்து ஏற்கனவே போட்ட சிறு துளை வழியாக கீழே சுரங்கத் தொழிலாளர்களிடம் அனுப்புவது இரண்டாம் கட்டம். அவர்கள் அதை இணைத்து இரண்டரை அடி விட்டமுள்ள ஒரு கருவி ஆக்குவர். அதை ஏற்கனவே பைலட் ஹோல் வழியாக இறக்கப்பட்ட Drill Rod உடன் இணைத்துவிட வேண்டும்.

பிறகு மேலே இருந்து அந்த Drill Rod ஐ சுழற்றியபடி மேலே இழுக்க சிறிய துளை பெரிதாகும். ஒரு ஆள் வெளியே வருமளவுக்குப் பெரிதாக்கப்படும். இந்த விளக்கம் போதுமா ஐயா? :D

இதில என்ன கதைக்கிறீர்கள் இசை

முதலாவது இரண்டாவது என்று......... :D

ஒன்றுமே புரியல...

இருந்தாலும் முதலாவது துளைபோட்ட தங்களுக்கு என் வாழ்த்துக்கள்

முதலாவது, ஒரு அடி விட்டத்திற்கு, 700 மீ. ஆழத்துக்கு ஒரு துளை போடுவது. பிறகு கீழிருந்து தொடங்கி மேலேவரைக்கும் இரண்டரை அடி விட்டமாக்கிக் கொண்டுவருவது.

தொழில்நுட்பத்தை அழகாக விபரித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் யோசிக்கிறன்..! டபிள் மீனிங்கில சொன்னாரோ தெரியாது..! :D விசுகு அண்ணை.. நீங்கள் ஆனாலும் ரொம்ப மோசம்..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.