Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தைத் தன் இதயத்தில் ஏந்திநிற்கும் ஈழவேந்தன் ஐயாவின் கழுத்தைப் பிடித்து தள்ளியவர்கள் யார்?

Featured Replies

உலகத் தமிழினத்தின் அன்புக்கும், மதிப்புக்கும் உரியவரும், எழுபத்தி எட்டு வயதிலும் அவரது இரு மொழித்திறமையால் தனது ஆழ்ந்த கருத்துக்களை எம்மினத்துக்காக சர்வதேசத்தின் முன் எடுத்துச்செல்ல என்றுமே தயங்காத ஈழவேந்தன் ஐயாவை, தமிழீழத் தேசியத் துக்கநாளான மே 18 ம் நாள்,.......கனடா மக்கள் அவையினரால் ரொறான்ரோ மாநகரில் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், மக்களவையைச் (NCCT) சார்ந்தவர்கள் அவரது கழுத்தில்ப் பிடித்துத் தள்ளியதாக ஈழவேந்தன் ஜயா வேதனையுடன் கூறினார்.

மேடை அருகே நின்ற புதிய மக்களாட்சித் (NDP) தலைவர் ஜாக் லேயிற்றனையும் ராதிகாவையும் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க சென்றவேளை ஈழவேந்தன் ஐயாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியது தமிழினத்தை அவமதித்தது மட்டுமல்ல மானிடத்தையே மதிக்காத ஓர் செயலாகும்.

அதைப் பார்த்தவர்கள் அனுதாபத்துடனான அக்கறையுடன் அவருக்கு வருத்தத்தோடான ஆறுதலை வழங்கியபோது மக்களவையைச் சார்ந்த முக்கியமானவர்கள் பார்த்தும் பாராமுகம் காட்டியது தனக்கு வேதனை தருவதாகவும் கனடாத் தமிழரின் மூத்த அரசியல்வாதியான ஈழவேந்தன் ஐயா கும்பிட்டார்.

நேரில் கண்ட பலர் தொலைபேசிமூலம் தன்னை அழைத்து ஆறுதல் கூறியதாகவும், சாட்சி சொல்வதற்கு தாம் எப்பவும் வரத்தயார் எனவும், மக்களவையினர் செயலுக்கு தாம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர்கள் கூறியது கண்டு தான் பெருமையடைந்ததாகவும் தேசியத்தலைவரால் பரப்புரைக்காக தேசியப் பட்டியலில், நாடு நாடாக பரப்புரை செய்ய, நியமித்த ஈழவேந்தன் ஐயா குறிப்பிட்டார்.

பெரியார் கூற்றின்படி தன்மானம் இழந்தும் தமிழ்மானம் காக்க தான் உறுதி கொண்டுள்ளதகவும் இந்தியாவில் இருந்து இரண்டு தடவைகள், பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவேளையிலும், ஈழத் தமிழருக்குப் பரப்புரை செய்ததற்காக அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட அந்த நாவின் வல்லவன் கூறினார்.

இன்றுவரை, மக்களவை நிர்வாகம் மௌனம் சாதிப்பது அவர்களுடைய கொள்கையை, அவர்களின் மனப்போகை திட்டவட்டமாகக் எடுத்துக் கூறுவதாகவே அமைகிறது. இந்தக் கொடிய நிகழ்வு கனடாத் தமிழருக்கு மட்டுமல்ல உலகத் தமிழருக்கும் வேதனையும், வெட்கமுமான ஓர் விடயமாகும்.

அவரை இம்சைப்படுத்தி, அவமானப்படுத்தியவர்களின் வயதை விட ஈழவேந்தன் ஐயாவின் ஈழத்தமிழ்ர்களின் விடிவுக்கான போராட்ட்தின் இடைவிடாத பங்களிப்பின் வயதோ பலமடங்கு. ஈழவேந்தன் ஐயா ஒரு பகுதிநேர ஈழப் போராளி அல்ல, தந்தை செல்வா காலம்தொட்டு இன்றுவரை தொடர்ந்து முழுநேரப் போராளியாக செயற்பட்டு வரும் ஈழத்தாயின் ஓர் இணையற்ற புதல்வன்.

இந்தத் தண்டனையைப்பெற அவர் செய்த குற்றம்தான் என்ன? தன் மொழிக்கும், தனது இனத்தின் விடுதலைக்கும் ஏறக்குறைய 60 வருடகாலமாக அயராது உழைத்தது, உழைப்பது தவறா? அல்லது தேசியத் தலைவரின் கொள்கைக்கு அமைய இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத்தை அமைக்க, தேசியத் தலைவரின் இலட்சியப் பாதையில் ஈழவேந்தன் ஐயா பயணிப்பது தப்பா? அவரின் கழுத்தைப் பிடித்து தள்ளியவர்களே சொல்லுங்கள்.

இந்த நிகழ்வு கனடா வாழ் தமிழருக்கு இழிவாக அமைந்தாலும், ஈழவேந்தன் ஐயாவுக்கு இது ஓர் பெருமைப்பட வேண்டிய விடயமாகும். தன் இனத்திற்காக இலங்கையில் சிங்களவனிடமும் கனடாவில் மக்களவையினரிடமும் (NCCT) அடிவாங்கிய ஒரே ஒரு மறத்தமிழனும், பாராளுமன்ற உறுப்பினரும் இவரே. தள்ளாத வயதிலும் தனியொருவனாக போரிட்டு தப்பிவந்த உங்கள் வீரத்தை, தீரத்தைக் கண்டு உலகத் தமிழினமே உன்னைச் சிரம்தாழ்த்தி வணங்குதய்யா.

ஈழவேந்தன் ஐயாவின் ஆழ்ந்த அரசியல் அனுபவத்தை எண்ணாது, 78 வயதிலும் காலை 8 மணிக்கே தமிழருக்கான பணியை ஆரம்பிக்கும் அவர் செயலை உணராது, அன்னாரின் அறிவை, ஆற்றலை, அனுபவத்தை மதிக்காது மக்களவையினர் செய்த மனிதாபிமானமற்ற செயலை உலகெலாம் வாழும் ஈழத் தமிழர் சார்பில் நாடுகடந்த தமிழீழ அரசின் கல்வி, கலாச்சார, உடல்நல அமைச்சு வன்மையாகக் கண்டிக்கிறது.

எமது பண்பாட்டுக்கு முரணான, எங்கள் கலாச்சாரத்துக்கு எதிரான, எம் பழக்க வழக்கத்துக்கு மாறான இச்செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல், இவர்கள் எம் மக்களின் சீற்றத்துக்கு ஆளாவதை யாராலும் தடுக்கமுடியாது.

கலாநிதி ராம் சிவலிங்கம்

கல்வி, கலாச்சார, உடல்நல அமைச்சு

நாடுகடந்த தமிழீழ அரசு

r.sivalingam@tgte.org

you can see this citivation in tamil one live program on may18,2010.ulakaththamizar did same assulted before too

1. இந்த செயல் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டும். நான் மக்கள் அவையின் தேசிய அவை உறுப்பினரிடம் இது பற்றி உண்மை என்ன என கோரியும், அவர்கள் இது உண்மை எனில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என கேட்டேன். அவர் அது பற்றி மேலதிகமாக வரும் நாட்களில் கூறுவதாக உறுதி அளித்தார்.

மேலும், முடிந்தால் கனேடிய தமிழர் பேரவையும், நாடுகடந்த அரசும் இணைந்து ஒரு அறிக்கை விடவேண்டும் எனவும் வேண்டினேன்.

2. அந்த 'போர்குற்ற நாள்' நிகழ்வுக்கு புதிய மக்களாட்சித் (NDP) தலைவர் ஜாக் லேயிற்றன் அவர்கள் சமூகம் தந்து இருக்கவில்லை. இது தவறு.

மேடை அருகே நின்ற புதிய மக்களாட்சித் (NDP) தலைவர் ஜாக் லேயிற்றனையும் ராதிகாவையும் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க சென்றவேளை ஈழவேந்தன் ஐயாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியது தமிழினத்தை அவமதித்தது மட்டுமல்ல மானிடத்தையே மதிக்காத ஓர் செயலாகும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழினத்தின் அன்புக்கும், மதிப்புக்கும் உரியவரும், எழுபத்தி எட்டு வயதிலும் அவரது இரு மொழித்திறமையால் தனது ஆழ்ந்த கருத்துக்களை எம்மினத்துக்காக சர்வதேசத்தின் முன் எடுத்துச்செல்ல என்றுமே தயங்காத ஈழவேந்தன் ஐயாவை, தமிழீழத் தேசியத் துக்கநாளான மே 18 ம் நாள்,.......கனடா மக்கள் அவையினரால் ரொறான்ரோ மாநகரில் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், மக்களவையைச் (NCCT) சார்ந்தவர்கள் அவரது கழுத்தில்ப் பிடித்துத் தள்ளியதாக ஈழவேந்தன் ஜயா வேதனையுடன் கூறினார்.

ஈழவேந்தன் ஐயா தமிழை வளர்த்ததுடன் தன்னை வளர்த்துக் கொண்டார் என்பது எனது தனிப்பட்ட கருத்து!

ஆனாலும் ஒரு முதியவரைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளுமளவுக்கு நமது கலாச்சாரம் சீரழிந்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விடயம்!

பொறுப்புள்ளவர்கள் மன்னிப்புக் கேட்பதே நாகரீகம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

தீராத பிரச்சனை மாற்றி மாற்றி ஒருவர் மீது மற்றவர் சேற்றை நாறநாறப் பூசிக் கொள்க.

மெல்ல மெல்ல விடுதலையைத் தீய்த்து வீசி எறிக தெருவினிலே

வாழ்க நாடு கடந்த தமிழீழ அரசு

வாழ்க மக்களவை

த்தூ......

Edited by valvaizagara

வெளிநாடுகளில் வயதுக்கு மதிப்பு கொடுப்பது இல்லை. வேலைத்தளங்களிற்கு போனால் இதை இன்னமும் கண்கூடாக காணலாம். கனடா இளையவர்கள் தாம் கனேடியர்கள் என்பதை நிரூபித்து உள்ளார்கள். கழுத்தை பிடித்து தள்ளியதன் மூலம் தாம் கனேடியர்கள் என்பதுடன் மட்டுமல்லாது கனேடிய தமிழர் என்பதையும் நிரூபித்து உள்ளார்கள். சாதாரணமாக வயதில் மூத்தவர்களிற்கு கிடைக்கக்கூடிய மரியாதை இது.

தீராத பிரச்சனை மாற்றி மாற்றி ஒருவர் மீது மற்றவர் சேற்றை நாறநாறப் பூசிக் கொள்க.

மெல்ல மெல்ல விடுதலையைத் தீய்த்து வீசி எறிக தெருவினிலே

வாழ்க நாடு கடந்த தமிழீழ அரசு

வாழ்க மக்களவை

த்தூ......

“நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, வஞ்சனை செய்வாரடி! – கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி.” (சுப்ரமணிய பாரதியார்)

ஈழவேந்தன் ஐயா தமிழை வளர்த்ததுடன் தன்னை வளர்த்துக் கொண்டார் என்பது எனது தனிப்பட்ட கருத்து!

ஆனாலும் ஒரு முதியவரைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளுமளவுக்கு நமது கலாச்சாரம் சீரழிந்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விடயம்!

பொறுப்புள்ளவர்கள் மன்னிப்புக் கேட்பதே நாகரீகம்!!!

தன்னை வளர்த்திருந்தால் இப்படி அலைய வேண்டியதில்லை. மற்றவர் தள்ள வேண்டியதில்லை. சிறிலங்காவில் அரசுடன் சந்தோசமாக இருந்திருக்கலாம்.

அவர் ஒருவர் தான் ஈழத்தமிழர் போராட்டம் குறித்து முழு அனுபவமுள்ள ஒரு முதியவர்.

தள்ளியவர் மன்னிப்பு கேட்க வைக்கனும் அல்லது பதவி விலகனும்.

உந்த மக்களவை எல்லா இடமும் குழப்புற வேலை தான் செய்கிறார்கள். மதிப்பதில்லை. மீண்டும் புலி மேல் ஏறி சவாரி செய்ய நிற்கிறார்கள்.

இவர்களின் செயற்பாட்டால் மக்கள் விலகி செல்கின்ற தன்மை தொடங்கி விட்டது.

சொல்வதுக் ஒன்றும் இல்லை.

வீரம் சொறிந்த மைந்தர்கள் நாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓரு வயது முதிர்ந்தவரை அதுவும் இலங்கை பாராளுமன்றத்திலே தமிழர் தலை நிமிர்ந்து வாழுவதற்க்கு குரல் கொடுத்த ஒருவரை இப்பிடி செய்தவர்கள் கண்டிப்பாக வருத்தம் தெரிவித்தே ஆகவேண்டும் இல்லையேல் இவர்கள் எல்லாம் தமிழ்மக்களால் வெறுத்து ஒதுக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தமிழ் மக்களுக்காக உழைத்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். எல்லோரும் தேசியத்துக்காகப் பாடுபட்டவர்களே! இளையோர் பலர் தமது பாடசாலை நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியோ, நிறுத்தியோ தமிழ் மக்களின் துன்பங்களை வெளியுலகிற்கு சொல்ல முயன்றவர்கள். எல்லோருமே குறித்த பிரமுகர்களுக்கு வாழ்த்துச் சொல்கின்ற நிகழ்வாக அதை அடையாளம் செய்யவில்லை. அது ஒரு அஞ்சலி நிகழ்வு. அதில் தங்களை அடையாளம் செய்ய வேண்டிய தேவை யாருக்குமே இருந்திருக்கவில்லை.

இது பற்றி ஈழவேந்தன் அவர்கள் பிரச்சனையாக்கவில்லை. பொது இடங்களில் தங்களை அடையாளப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் அவருக்கு இருப்பதாகத் தோன்றவில்லை.

திரு.ஈழவேந்தன் அவர்களின் இச் சம்பவத்தை தமக்கிடையேயான பிரச்சனையின் தொடர்ச்சியாகக் கொண்டு செல்ல இரு தரப்பும் முயல்வதாகவே தோன்றுகின்றது. மே 18ம் திகதி நடந்த கூட்டம் ஒரு பொது திடலில் நடந்தது. தனிப்பட்டரீதியாக குறித்த பிரமுகர்களைச் சந்திக்கமுடியும் என்ற நிலை இருக்கின்றபோது, அக்கூட்டத்தில் "கழுத்தைப் பிடித்துத் தள்ளுதல்" என்ற பிரச்சனையை ஏன் உருவாக்க வேண்டும். கருத்தின் வீரியத்தைக் கூட்டுவதற்காக கழுத்தைப் பிடித்து தள்ளுதல் என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டிருக்கலாம். குறித்த பிரமுகர்களைச் சந்திக்க அனுமதிக்கவில்லை என்ற பதமே சரியாக இருந்திருக்கலாம்.

இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றே தோன்றுகின்றது.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

இது, உண்மையானால்,

வெட்கித் தலை குனிய வேண்டிய செய்கை. :(

இது முழுக்க முழுக்க உண்மையாக நடந்த விடயம். ஈழவேந்தன் ஐயா அவர்கள் என்.டி.பி பிரமுகரை (இராதிகா சிற்சபேசனை அல்ல) சந்திக்க முயன்றபோது, அவரைத் தள்ளி விட்டது வீடியோவிலும் பதிவாகியுள்ளது மட்டுமின்றி ஒரு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகியிருக்கிறது. இது நிச்சயமாக வேண்டுமென்று செய்யப்பட்ட ஒரு விடயமாகவே பார்க்கப்படுகிறது.

இது பற்றி ஈழவேந்தன் அவர்கள் பிரச்சனையாக்கவில்லை. பொது இடங்களில் தங்களை அடையாளப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் அவருக்கு இருப்பதாகத் தோன்றவில்லை.

இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றே தோன்றுகின்றது.

அப்படியா?

என்னைப் பொறுத்தவரை இந்த அறிக்கை உடனடியாகவே வந்திருக்கவேண்டியது. ஏன் இத்தனை காலம் தாமதித்தார்கள் என்றுதான் விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தீராத பிரச்சனை மாற்றி மாற்றி ஒருவர் மீது மற்றவர் சேற்றை நாறநாறப் பூசிக் கொள்க.

மெல்ல மெல்ல விடுதலையைத் தீய்த்து வீசி எறிக தெருவினிலே

வாழ்க நாடு கடந்த தமிழீழ அரசு

வாழ்க மக்களவை

த்தூ......

உண்மை வல்வைசகாரா அவர்களே.

த்தூ................ இவர்களெப்படி மக்களை ஒற்றுமைப்படுத்தப் போகிறார்கள்.

இது முழுக்க முழுக்க உண்மையாக நடந்த விடயம். ஈழவேந்தன் ஐயா அவர்கள் என்.டி.பி பிரமுகரை (இராதிகா சிற்சபேசனை அல்ல) சந்திக்க முயன்றபோது, அவரைத் தள்ளி விட்டது வீடியோவிலும் பதிவாகியுள்ளது மட்டுமின்றி ஒரு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகியிருக்கிறது. இது நிச்சயமாக வேண்டுமென்று செய்யப்பட்ட ஒரு விடயமாகவே பார்க்கப்படுகிறது.

இது ஈழவேந்த ஜயாவுக்கு மட்டும் நடந்து இருக்காது. இனி யார் உண்மையான தேசியவாதிகளாக இருந்தாலும் இப்படியான அவமானங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரலாம்.

இது கூட தவறுதலாக நடந்தாலும் செய்தவர்கள் மற்றவர்களை மதிக்கத அடாவடித்தனம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

Eelaventhan_With_CanadianPM.jpg

எனக்கென்னவோ அவரை பார்த்தால் பாவமாக தெரிகிறார் .. போக பெரிய தமிழ் அறிஞ்சர் போல தென்படுகிறார்..

660_744726166f48d5c0L.jpg

5 பைசா வருமானம் இல்லாத மக்களவையிலே ..... வெறும் இனம் சார்ந்த முன்னெடுத்தலுக்காக ஆரம்பிக்கபட்டதிலே இவ்வளவு புடுங்குபாடுகள் என்றால் இன்னும் பட்ஜட்டு.. ரிசர்வ் பேங்கு..... என உள் கட்டமைப்புகள் வந்தால் அதோ கதிதான்... :(

டிஸ்கி:

இதை போக்க அனைவரும் ஒற்றுமையை.. பெருந்தன்மையை உருவாக்கும் சுக்கிரபகவானை வெள்ளி கிழமை தோறும் நெய்விளக்கு ஏற்றி அர்ச்சனை செலுத்துக .. இது எப்படி இருக்கு?? :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

உங்களை நினைக்கையில் பரிதாபமாக இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

.

eelaventhan_TC_0210_2.JPG

மூதறிஞர் ஈழவேந்தனின் அரசியல் அறிவியல் புலமைக்கு, இணையாக இங்கு யாரும் இருக்கப் போவதில்லை.

அவர் பாராளுமன்றத்தில்..... தமிழிலோ, சிங்களத்திலோ, ஆங்கிலதிலோ, உரையாற்றினால்... பாராளுமன்றமே... கலங்கும்.

என்ன செய்வது, தமிழன் இவ்வளவு கேடு கெட்டும்.... முக்கியமான விடயங்களை அடிக்கடி ஞாபகப் படுத்த வேண்டியிருக்குது.

அடுத்த பிறப்பிலை தமிழனாய் மட்டும் பிறக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் பிறவிக்குருடன் வெண்மையை உணர்ந்ததுபோல்.... உங்கள் கருத்துக்களை பதிவு செய்கிறீர்கள்.

எனக்கு இந்த அறிக்கையை வெளியிட்ட பகுதியையும் தெரியும். முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வை நடாத்தியவர்களையும் தெரியும். இவர்களைத் தாண்டி ஈழவேந்தன் ஐயாவையும் தெரியும். அததோடு இங்கு கட்டுரையாக எழுதப்பட்டிருக்கும் அந்த நிகழ்வில் அந்த இடத்தில் நடைபெற்ற இங்கு எழுதப்பட்டிருக்கும் அந்தச்சர்ச்சையையும் நன்றாக அவதானிக்கக்கூடிய இடத்திலேயே நான் நின்று கொண்டிருந்தேன் இனி .....

உண்மையிலேயே மிகத்திரிவுபடுத்தப்பட்ட எழுத்துவடிவம்.

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர ஆராய்தல் மிகவும் அவசியம். அடுத்து கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எப்படி இனத்தை இணைக்கப்பயன்படுத்தலாம் என்பதை விடுத்து எங்காவது உரசல் விரிசல் இருந்தால் அதனைப் பெரிப்பிக்கும் குழுமங்களே நம்மிடையே இருக்கின்றன. இதில் யாரும் விதிவிலக்கல்ல.

இறுதியாக ஈழவேந்தன் ஐயாவின் பேச்சாற்றல் அவர் ஒரு கருத்தை மக்களுக்கு எடுத்துக்கூறும் விதம் ஈழவர்களுக்குள் நான் அப்படி ஒருவரை அறியவில்லை. நாங்கள் அவரையிட்டு பெருமைப்படவேண்டும். அத்தோடு ஈழவேந்தன் ஐயா சிற்சில இடங்களில் சம்பந்தமே இல்லாமல் தன் பேச்சாற்றலின் தனித்துவத்தை சிதைத்து வருவதை அண்மைக்காலங்களில் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. எது எப்படியாயினும் அவருடைய ஆற்றலை சரியான திசையில் பயணிக்கச் செய்வோமானால் பல நன்மைகளை அடைய முடியும் ஆனால் இங்கிருக்கும் அனைத்துவகைக் குழுமங்களும் அவரை தமக்குத் தேவையென்றால் அணைப்பதும் தேவையில்லா இடத்தில் தவிரப்பதுமாக தங்களுடைய ஆட்டத்தை ஆடிக்கொண்டு இருக்கிறார்கள் இப்போது அநேகமான இணையத்தளததில் இந்தக்கட்டுரையைக் காணக்கூடியதாக இருக்கிறது. கிரிக்கெட் வீரர்களின் கையில் அகப்பட்ட பந்துபோல இப்போது ஈழவேந்தன் ஐயாவின் நிலமை. இதுதான் இந்தச் சர்ச்கைக்குரிய கட்டுரையின் உண்மையான இலட்சணம்

சுத்தி வளைக்காம சொல்லுங்கள்..

இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதா? கண்ணால் கண்டதை ஏன் நீங்கள் சரியாக சொல்ல கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்

வினித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதாக கூறியிருக்கிறார்கள் அந்த இணைப்பை இங்கு இணைத்த பிற்பாடு என்னுடைய பதிவை மேற்கொள்கிறேன்.

நடந்தது என்ன?

முடிந்தால் ஈழவேந்தன் ஐயாவை ஒரு பேட்டி எடுத்து இங்கு இணைத்து விடுகிறேன்.

சில சந்தர்ப்பங்களில் இப்படியான சில தவறுகள் எங்கும் நடக்கின்றனதான்(இது நடந்ததா? இல்லையா? என்பதற்கு மேல்)! .. சிலர் அதில் மனவேதனைகளும் அடைவது இயல்புதான், அப்படியான சம்பவங்கள் தவிர்க்கப்படல் வேண்டும் ... அவை பின் பேசி, கதைத்து தீர்த்திருக்கலாமானால் ... அதனை குடைந்தெடுத்து, குழப்பி அடித்து நாறப்பண்ணுவதில் சிலருக்கு அலாதி பிரியம்!!

... இந்த நடைபெற்றதாக கூறப்படும் சம்பவம், இந்த நா.க.த.அ இன் முக்கிய அமைச்சர்(????????????) ஒருவரால் அறிக்கை வடிவாக விடப்பட வேண்டிய தேவை என்ன இருந்தது??? இச்சம்பவம் ஈழத்தமிழர்களின் தலை போகும் அளவிற்கு முக்கியமான பிரட்சனையா???.... கலாநிதிகள் பட்டம் பெற்றால் மட்டும் ..?????????????

... உந்த நா.க.த.அ செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்கின்றன ... அதற்கு மேல் வாயளவில்தான் இதுவரை அவர்களின் பணிகள்!!! ... இது ஒன்றுதான் குறை?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.