Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

…..வேட்டையாடப்பட்ட கதைகள் வேட்டைக்காரரையே புகழந்து சொல்லும்.

Featured Replies

உலகின் அனைத்துச் சமூகங்களிற்குள்ளும் வரலாறு என்ற விடயம் முக்கியத்துவம் பெற்றுத் தான் விளங்குகின்றது. எல்லோரையும் போல அல்லது மற்றையவர்களைக் காட்டிலும் சற்றுத் தூக்கலாக நாங்களும் வரலாறு பற்றிக் காலதிகாலமாகக் கதைத்துத் தான் வருகின்றோம். இருப்பினும், துரதிஸ்ரவசமாக, வரலாறு என்ற வார்த்தையும் எங்கள் மத்தியில் அவ்வப்போது வெறும் கோசமாக மட்டும் ஆகிப் போய் விடுகின்றது. அந்தவகையில் வரலாறு என்ற வார்த்தை பற்றி எமது சமூகம் சார்ந்து பார்க்க விழைகிறது இப்பபதிவு.

“சிங்கங்களின் பிரத்தியேக வரலாற்றாசிரியன் உருவாகும் வரை, சிங்கங்கள் வேட்டையாடப்பட்ட கதைகள் வேட்டைக்காரரையே புகழ்ந்து சொல்லும்” -- ஈபோ (நைஜீரியா) பழமொழி

“கடந்து போன போர்களை வைத்து எதிர்காலப் போர்களைத் திட்டமிட்டுக் கோட்டை விடும் இராணுவ ஜெனரல்களைப் போல, பல பெற்றோர்கள், கடந்து போன காலங்களிற்காகத் தம் குழந்தைகளைத் தயார் படுத்துகின்றார்கள்” – பெயர் மறந்து போன எப்போ வாசித்த ஒரு புத்தகத்தில் இருந்து

வரலாறு என்பதில் ஒரே ஒரு புரிதல் என்பது சாத்தியமற்றது. இருப்பினும், ஓரு பொதுவான புரிதலை வரலாறாக ஏற்றுக் கொள்ளுவதும், ஆவணப் படுத்துவதும், பரப்புவதும், சந்ததிகள் கடந்து காவிச் செல்லுவதும் பல நாடுகளிலும் நிறுவனங்களிலும் நடந்தவண்ணமே உள்ளன. தமது குழுமத்திற்கு ஆதரவான வரலாற்றினை கருத்தொருமித்து ஏற்றுக் கொள்வது அமெரிக்கா தொட்டு தென் சூடான் வரை நடக்கிறது. வாழ்வாதாரத்திற்கான அன்றாட முனைதல்கள் சார்ந்து தம்மைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாகவும் கூட மேற்படி வரலாற்றின் ஏற்றுக் கொள்ளலைப் பார்க்க முடியும். ஆனால் அத்தகைய ஒரு குழுநிலை உடன்பாட்டிற்கு வரலாறு சார்ந்து ஒருவர் வருவதற்கு, குறித்த குழுமத்தின் அங்கத்தவராக எத்துணை தூரம் அவர் தன்னை உணர்ந்து கொள்கிறார் என்பதும் குறித்த குழுமத்தின் பெறுமதிகளோடு அவர் எத்தனை தூரம் உடன்படுகிறார் என்பதும் அடிப்படைகளாக விளங்குகின்றன.

உதாரணமாக, கொள்கை வகுப்புக்கள் சார்ந்து குறித்த நாளின் அமெரிக்க அரசாங்கத்தோடு உடன்படாதோர் பலர் இருப்பினும் அமெரிக்கா என்ற பொதுமையோடும் அதன் இருப்பிலும் உயர்விலும் மிகப்பெரும்பான்மையான அமெரிக்கர்கள் எப்போதும் கரிசனையுடையவர்களாகவே இருக்கின்றார்கள். தம்மை அமெரிக்கர்களாக, அமெரிக்காவின் உயர்வைத் தமது உயர்வாக சந்தேகத்திற்கிடமின்றி இப்பெரும்பான்மையால் ஏற்றுக் கொள் முடிகின்றது. இந்த அடிப்படையிலேயே கட்சிஅரசியல் பன்மைத்துவம் என்பவற்றிற்கெல்லாம் அப்பால் அமெரிக்காவின் ஒவ்வொரு ஜனாதிபதியும் கதாநாயகர்களாகச் சித்தரிக்கப்படவேண்டும் என்பது தொட்டு அமெரிக்கா என்பதன் வரலாறு அமெரிக்காவைப் புகழ்வதாய் அமெரிக்காவின் இருப்பிற்கும் உயர்விற்கும் உறுதுணையாய் இருப்பதாய் ஏற்றுக் கொள்ளப்படுவது அவர்களிற்குச் சாத்தியமாகிறது. இது அமெரிக்காவிற்கு மட்டும் அன்றி உலகின் வெற்றிபெற்ற அத்தனை நிறுவனங்களிற்கும்;, குழுமங்களிற்கும்; நாடுகளிற்கும் பொருந்தும். தாம் சார்ந்திருக்கும் குழுமத்தின் உயர்வினைத் தமது உயர்வாக அதன் அங்கத்தவர்கள் கருதும் வரை தான் அக்குழுமத்தின் வரலாறு அவர்களிடம் முக்கியத்துவம் பெறுகிறது.

நாம் சாhந்த குழுமத்தின் அங்கமாக நாம் எம்மை உணராதவரை, வரலாற்றில் இருந்து பாடம் கற்போம் என்பது சாத்தியமற்றது. பொதுமையின் உயர்வு பிரத்தியேக உயர்வாக உணரப்படாதவரை பொதுமையின் எந்த வரலாறும் எதையும் கற்றுத்தராது. சிங்கம் தன்னைச் சிங்கமாக உணராதவரை சிங்கள் வேட்டையாடப்பட்ட கதை சிங்கத்திற்கு அர்த்தமற்றது.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தைப் பொறுத்தவரை, ஈழத்தமிழர் என்ற குழும உணர்வையும் ஈழத்தமிழரின் அபிலாசை என்ற ஒரு பொதுவான பெறுமதிக்கோர்வையினையும் இப்பெறுமதிகள் சார்ந்த கனவுகளையும் மிகமிகப்பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி உள்ளுர உண்மையாக உணர்ந்த நிலைமை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் மட்டுமே சாத்தியமானது என்பது என்னைப் பொறுத்தவரை விவாதத்திற்கு அப்பாற்பட்ட உண்மை.

எண்பதுகள் வரை ஏதோ ஒரு குழும உணர்வு படிப்படியாக எமக்குள் அருக்கூட்டிக்கொண்டிருந்தது என்பது உண்மை தான் என்றபோதும் முளை விட்ட குழும உணர்வு மரமாக வளரமுடியாதபடியே நிலைமை இருந்தது. எமது நம்பிக்கையீனங்களும் எமது சமூகத்தின் இதர குணவியல்புகளும் முளைகளை முறித்தெறிந்தபடியே இருந்தன. “உன்னுடைய மாடு போனது என்னுடைய மாடு வந்ததற்குச் சமன்” என்ற அளவிற்குப் புரையோடிப் போயிருந்த பொதுமைக்கு எதிரான பிரத்தியேகம் சார்;ந்த சிந்தனையினை, ஈழத்தமிழர் என்ற பொதுமையாக, உனது வாழ்விற்காக நான் எனது உயிரைக் கொடுக்கின்றேன், எனது சாவு உனது வாழ்வை மேம்படுத்தும் அதனால் எங்கள் நாடு உயரும் என்ற மனநிலையாக ஆயுதப் போராட்டம் தான் மாற்றியது.

ஆனால் ஆயுதப் போராட்டம் எடுத்த எடுப்பில் இதனைச் சாதித்து விடவில்லை, பல நம்பிக்கையீனங்கள் புரையோடிப்போயிருந்த சமூகத்தில், முப்பதிற்கு மேற்பட்ட இயக்கங்கள் தோன்றிய போதும், சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்ற வாசகம் பொதுவாகப் புழங்கும் அளவிலேயே மக்கள் இருந்தார்கள். மக்களின் இத்தகைய நம்பிக்கையீனங்களிற்குத் தூபம் போடும் வகையில் பிரச்சினை என்ன என்பதைத் தெளிவாக்காது பிரச்சினைக்குத் தீர்வு காணப் பல இயக்கங்கள் விழைந்து கொண்டிருந்தன.

சிங்களவன் திட்டமிட்டுக் குடியேற்றம் செய்து எம் நிலங்களைப் பறிக்கிறான் என்று ஒரு புறத்தில் போராட்டத்தை நியாயப்படுத்திய போராளி-மகன் இன்னுமொரு புறத்தில் சமவுடமை கதைத்து எடுத்த எடுப்பில் தந்தையின் நிலங்களைப் பிடுங்கித் தொழிலாளரிற்குப் பகிர்வதைத் தந்தையால் புரிந்து கொள்ளமுடியவில்லை. தந்தையின் நிலையைப் பார்த்த ஊரவரிற்கும் தம் நிலங்கள் பற்றியும் சொத்துப் பற்றியும் சிந்தனைகள் எழNவு செய்தன. சிங்களவன் கட்டவிழ்க்கும் பிரச்சினை பற்றியே ஒரு திட்டவட்டமான தெளிவினை ஏற்படுத்த முன்னர் உலகளாவிய புரட்சி வரலாறுகள் இயக்கங்களின் பிரசுரங்களாக வந்து கொண்டிருந்தன. கொழும்பிற்குப் போவது பற்றிய பிரச்சினைகள் இருந்துகொண்டிருக்கையில் பாட்டாளிகளின் பேரணி பருத்தித்துறையில் இருந்து பேளின் நோக்கி நகரும் என்ற கோசத்தை மக்களால் புரிந்து கொள்ள முடியவிவ்லை. சாம்பல் மேட்டில் இருந்து பூ பூக்கும் என்ற வாசத்தை வாசிக்கவும் ரசிக்கவும் உடன்பட்ட மக்கள் அவ்வாக்கியத்தின் இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட நடைமுறைப் பிரயோகம் புரியவில்லை என்றே உணர்ந்தார்கள். மொத்தத்தில் முப்பத்தாறு இயக்கங்கள் தோன்றினும் ஒரு இலக்கில் ஒரு பொதுமையில் ஒரே அபிலாசைகளோடு ஒரு குழுமமாக தேசியத்தைத் தைப்பது என்பதும் தைக்கப்பட்ட தேசியத்தை உணர்வது என்பதும் எண்பதுகளின் நடுப்பகுதிகள் சந்தித்த துன்பியல் சம்பவங்களின் பின்னரே மக்களிற்குக் கைவரப் பெற்றது.

ஆழிக்குமரன் ஆனந்தன் சாதிதத்தால் சாதனை என்று ஏற்று மகிழ்ந்தவர்கள் பக்கத்து வீட்டுப் பையன் 4-ஏ எடுத்தால் பொறாமையில் உழலும் நிலையே ஆயுதப் போராட்டம் வரை இருந்தது. பொறாமை எரிச்சல் என்பனவற்றைத் தாண்டி நாம் அனைவரும் எமக்கான பொது வெற்றியாய் அனுபவிப்பதற்கு தேசிய விiளாட்டு அணிகள் கூட எம்மிடம் இருக்கவில்லை. பள்ளிக்கூடங்களிற்கிடையேயான கிரிக்கட் போட்டிகளைக் கூட பிரிந்து நின்றே நாங்கள் பார்த்தோம். ஊர்கள் சட்டையிட்டுக் கிடந்தன. இந்நிலையில் எம் அனைவரிற்குமான வெற்றிகள் என்று நாம் மகிழக் கூடிய சந்தர்ப்பங்களை ஆயுதப் போராட்டமே ஏற்படுத்தித் தந்தது. எமது தேசியம் முளைநிலை தாண்டி வளரத் தொடங்கியது.

தேசியம் தன்னாட்சி சுயநிர்ணயம் என்ற வார்த்தைகள் மக்களிற்குப் பரிட்சயமாக நெடுங்காலம் இருந்திருப்பினும் அப்படியென்றால் என்னவென்பதை புத்தகம் படிக்காது மக்கள் இயற்கையாக உணர்ந்தமை புலிகளின் காலத்திலேயே சாத்தியப்பட்டது. இதர இயக்கங்களை அழித்தது என்பது மாபெரும் விலை என்பது அடுத்த கருத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது. ஆனால் அந்த விலையினை நிர்ணயித்தவர்கள் புலிகள் அல்லர். புலிகள் செய்தது நிர்ணயிக்கப்பட்ட கோர விலையினைக் கொடுத்தது மட்டுமே.

அயலவனின் மாடு தொலைந்ததை இட்டு மகிழ்ந்த என்னைத் தேசியத்தின் பெயரில் அயலவனிற்காக உயிர்விடும் நிலைக்கு மாற்றியது மட்டும் அன்றி எனது உயிர்க்கொடையினை எனது ஊரையும் தாண்டி என் மக்கள் ஒரேவாறு புரிந்து கொண்டமைக்கான நிலையாக மாற்றுவதற்கு அத்தகைய விலை தேவைப்பட்டது. இந்தவிலை ஏன் தேவைப்பட்டது என்பது புலிகள் மீதான விசாரணையால் மட்டும் புரியப்படமுடியாதது.

புலிகளில் மட்டும் தான் உயிர்கொடுக்க இளைஞர்கள் சித்தமானார்கள் என்பதாய் இதனை எவரும் தவறாகப் புரிந்து விடாதீர்கள். இங்கு நான் கோடிட்டுக் காட்ட விழைவது போராளியின் உயிரிழப்பைத் தமக்கான தியாகமாய் மக்கள் உணர முடிந்தமையினை மட்டுமே. அதாவது சிங்களக் குடியேற்றத்தால் உனது காணி பறிபோகும் என்று இயக்கம் தொடங்கி பின் கொமியூனிசத்தின் பெயரில் அவ்வியக்கம் எனது காணியினைப் பறித்துக் கொண்டிருக்குமேயாயின், அவ்வியக்கப் போராளியின் இழப்பை எனக்கான தியாகமாக உடனடியாகப் புரிவது எனக்குச் சிரமமாய் இருக்கும். (புலிகள் மட்டும் இதைச் செய்யவில்லையாக்கும் என்ற நக்கல் கேட்கிறது. ஆனால் நான் இங்கு குறிப்பிடுவது பொதுமை கட்டியெழுப்பப் படுவதற்கு முந்திய காலத்தை.)

மேலும் தேசியம் என்ற பொதுமையினை மக்கள் உள்ளுக்குள் இயல்பாய் உணர்வதற்கு முன்னர், அத்தேசியத்தின் அபிலாசைகள் சார்ந்து ஏதேதோ இசங்ககளை மேற்கோள் காட்டிப் பிரச்சாரங்கள்; துண்டுப்பிரசுரங்களாக வந்துகொண்டிருந்தன. மக்கள் அப்பிரச்சாரங்கள் முன்வைத்த இலக்குகளைத் தமது இலக்குகளாகப் பார்த்தார்களா என்பது தான் இங்;கு பிரச்சினை.

அதாவது, ஏகப்பட்ட நம்பிக்கையீனங்கள், சிறுபிள்ளை வேளாண்மைச் சிறுகதைகள் முதலியவற்றின் மத்தியில் முதலில் பொதுமையின் குறைந்தபட்ச அபிலாசைகள் என்றேனும் எதையேனும் வரையறுப்பது அவசியம். அதன்பின்னர் வரையறுத்த அபிலாசைகள் அடையப்படக்கூடியன என்ற நம்பிக்கை நம்பிக்கையீனங்களையும் பரிகாசங்களையும் தாண்டி நடைமுறை ரீதியாக ஏற்படுத்தப்படவேண்டும். அதுவும் எமது வளங்களை வைத்து அவ்விலக்குகள் எட்டப்படலாம் என்ற நம்பிக்கை பிறக்கவேண்டும். என்னைப் பொறுத்தவரை புலிகளால் மட்டுமே இது சாத்தியமானது. நடைமுறையில் உணரக் கூடிய “தேசியம்” என்ற ஒன்றையும் அத்தேசியதத்திற்கான பொதுவான அபிலாசையினை வரையறுத்துக் கொள்வதிலும் எமது வளங்களை வைத்து நாம் வரையறுத்த அபிலாசைகளை அடையலாம் என்பதை மக்கள் நம்புவதற்கும் பகீரதப் பிரயத்தனம் தேவைப்படடது. இந்த முயற்சிகளின் முன் தான் இதர இயக்கங்களைத் தடைசெய்ய வேண்டிய அவசியம் புலிகளிற்கு ஏற்பட்டது என்பது எனது அபிப்பிராயம்.

இரவு உணவின் பின் கோனியாக்குடன் கதைத்து இரசிப்பதற்கு ஈரோஸ் புளொட் மட்டுமல்ல சமையத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் துண்டுப் பிரசுரங்களும் மேற்தட்டுத் தமிழ் மக்களிற்கு இனித்தது தான். ஆனால் இந்தத் தட்டு மக்கள் சிங்களவரின் ஆபத்துக்களையும் தம்மால் சமாளிக்க முடியும் என்று நம்பிய மக்கள். தமது உரிமைகளை இன்னொருவர் போராடித் தான் தமக்குப் பெற்றுத் தரவேண்டும் என்ற மனநிலையில் இருந்திராத மக்கள். இந்தத் தட்டு மக்களைப் பொறுத்தவரை ஈரோசும் ஈபி ஆர் எல் எப்பும் புளொட்டும் துண்டுப் பிரசுரங்களை மட்டும் அனுப்பிக் கொண்டிருப்பது தான் சாதகமானது. அத்துண்டுப் பிரசுரங்கள் சொல்லும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் சிங்களப் பிரச்சினைக்கு உண்மையில் முகம் கொடுத்த மக்களிற்கு துண்டுப் பிரசுரங்கள் நடைமுறைப்படுத்தபட்டால் மட்டுமே நம்பிகை பிறக்கும். இந்தவகையில் இருந்திராத பொதுமையினைத் தைத்து எடு;ப்பதற்கு ஏகப்பட்ட முனைகளில் புலிகளிற்கு முயற்சி அவசியப்பட்டது.

ஆனால்; ரெலோ இதர இயக்கங்களை விட வித்தியாசமாகப் பார்க்கப்படவேண்டியது. புலிகளிற்கு மாற்றீடாக வரக்கூடிய ஏது நிலைகள் ரெலோவில் நிறையவே தென்பட்டது. புலிகளும் ரெலோவைப் போட்டியாகப் பார்த்தார்கள் என்றே தோன்றுகின்றது. அத்தகைய போட்டி தவிர்க்க முடியாதது. எமதுமக்களிற்குப் பொதுமையில் நம்பிக்கை ஏற்படுவற்கு எமது அபிலாசைகள் எமது வளங்களை வைத்து மட்டுமே அடையப்படக்கூடியன என்று நிரூபிக்கவேண்டியது அவசியம். ஆனால்; எமது சொற்ப வளங்கள் இரு நிறுவனங்களிற்குப் போதவில்லை என்ற போது வலிய நிறுவனம் மற்றைய நிறுவனத்தை “ஒரு ஹொஸ்ரைல் ரேக் ஓவர்” செய்தது போன்று தான் ரெலோவின் நிலை பார்கப்படமுடியும். பொபி தாஸ் மோதல், ஊரிற்குள் கொள்கைள், தோளில் ஏ-கே தொங்க ஒரு கையில் சிகரெட் மறு கையில் பன்ராவோடு நடமாடிய பொபி குரூப் பொடியள் என்று நிலமை இருந்தபோது வலிய நிறுவனமான புலிகள் நிலமையினைச் சாதகமாக்கிக் கொண்டமை தான் நடந்து. ஒரு முனையில் துன்பியல் என்றபோதும் தைக்கப்படவேண்டியிருந்த தேசியத்திற்கு இந்தவிலை தேவைப்பட்டமையினை ஆதரிக்கா விட்டாலும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆக ரெலோ அழிந்தபோது தேசியம் அழிந்தது என்பது பிதற்றல். ரெலோவின் இரத்தமும் தேசியம் வளரத் தேவைப்படடது என்பதும் தேசியம் வளர்ந்தது என்பதும் தான் துன்பமான கோரமான ஆனால் நிகழ்ந்த நிகழ்வு.

மேற்படி துன்பியல்கள் தொடர்பில், புலிகள் அழித்தார்கள் என்று மட்டும் சொல்லுவது போதாதது. அழிக்க வந்த புலிகளை எதிர்க்கும் பலமின்றி அழிந்தவர்கள் இருந்தார்;கள் என்பதும் கவனிக்கப்படவேண்டியது. பலமானவை தெரிவு செய்யப்படுவது உலக இயல்பு. (ஒருவேளை முள்ளிவாய்க்கால் முடிவில் தமது பலத்தைக் காட்டியதாய் முன்னர் தடைசெய்யப்பட்டவர்கள் கூறமுடியும். அது புலிகள் சார்ந்து ஒருவேளை அவர்களிற்குச் சரியாய் படலாம். ஆனால் பொதுமை தேசியம் என்ற விடயங்களில் தடைசெய்யப்பட்டோர் எப்போதும் தோற்றவர்களே).

இந்தவகையில் துன்பியல்கள் கோரங்கள் இன்னல்கள் தாண்டி தமிழ்த்தேசிய முளை ஒருவாறு மரமாகி மில்லர் என்ற பூ பூத்து பின் இந்திய இராணுவம் வந்து போய் அனுராதபுர வான்படை முகாம் வரை தேசியம் கிளை பரப்பியது. இந்தப் பாதையில் எமது வராலாறு இவ்வாறு தான் எழுதப்பட வேண்டும் என்று யாரும் சொல்லாமல் மக்கள் தாங்களாகவே உணர்ந்து கொண்ட நிலை பரிணமித்தது. வரலாற்றின் முக்கியத்துவமும் எங்களிற்குள் நாங்கள் அடிக்கடி கதைக்கும் விடயமாக ஆகியது. ஈழத்தின் உயர்வு எங்களின் உயர்வாக எங்களிற்குத் தானாகப் பட்டது. சமாதான காலத்தில் வன்னியில் நடந்த நேரங்களில் எங்களை அறியாது எங்கள் நெஞ்சுகள் நிமிர்ந்து நின்றன. நாங்களும் அமெரிக்கர்கள் போல் தான் எங்கள் நாயகர்களைப் போற்றியபடி எங்கள் உயர்வுகளை வரவேற்றுக் கொண்டிருந்தோம். இதற்கான அடிப்படை, எங்களை நாங்கள் நாங்காளாகவே பொதுமையாக நோக்கிக் கொண்டோம்-. எங்கள் பொதுமையின் உயர்வு எங்கள் உயர்வு என்று எங்களிற்கு எவரும் வகுப்பெடுக்கத் தேவையின்றி நாங்களாக உள்ளுர உண்மையாக உணர்ந்தோம். நாங்கள் பார்த்தது எங்களிற்குப் பிடித்தது அதைத் தக்கவைக்க எங்களிற்கு வரலாறு தேவைப்பட்டது-- எனது பார்வையில் இந்தப் பொதுமையினை உருவாக்கியமை புலிகளின் அதி உச்ச சாதனை

தமிழீழம் வேணும் என்று வாயால் சொல்லிக் கொண்டு ஆனால் அதற்காகத் தம்மை ஒறுக்கவோ எந்தப் பங்களிப்பை நல்கவோ மறுத்தவர்களிற்கும் புலிகளிற்கும் அல்லது இதர தமிழீழ ஆதரவாளர்களிற்கும் இடையே அவ்வப்போ முறுகல்கள் நடந்தன தான் என்ற போதும் ஒரு பொதுமை எங்களிற்கு இருந்தது. நாங்கள் தமிழீழம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தவரை அதற்காக உழைக்கப் புலிகள் இருந்தார்கள். அது மட்டுமன்றி நாங்கள் வேணும் என்று சொல்லும் விடயத்திற்காக எங்களையும் உழைக்கவைக்கவும் ஒறுப்புக்களை மேற்கொள்ளவும் புலிகள் எங்களை நிர்பந்திந்துக் கொண்டிருந்தார்கள் என்று கூடச் சொல்லலாம். வெறுமனே கோசம் போட்டுவிட்டு சும்மா இருக்க புலிகள் எங்களை விடவில்லை. ஆனால் எங்களிற்கென்றொரு பொதுமை இருந்தது. எங்களின் பொதுமைக்கு ஒரு நடைமுறை இருந்தது.

பின் முள்ளிவாய்கால் நடந்து முடிந்தது. எங்கள் தேசிய மரம் மீண்டும் முறிந்து போனது. இந்த முறிவிற்கான பொறுப்பைப் புலிகளில் மட்டும் போட்டுவிட்டு நாங்கள் இருந்து விடமுடியாது. அடிப்படை எங்கள் பொதுமையின் தன்மையில் இருக்கின்றது.

இப்போது நாங்கள் எங்கள் வரலாறு பற்றி ஒரு முடிவிற்கு வரமுடியாதவர்களாக நிற்கிறோம். வெறுமனே வரலாறு அவசியம் என சொல்லிக் கொள்கிறோம் வரலாற்றில் இருந்து பாடம் கற்கவேண்டும் என்று பிதற்றுகிறோம் ஆனால் வரலாறு ஏன் தேவையோ அந்ததப் பொதுமை இப்போது எங்களிடம் இல்லை. இதனால் தான் எங்கு திரும்பினாலும் சேறு பூசல்களும் அருவருப்புகளுமாக எங்கள் நடைமுறை விரிகிறது.

அமிர்தலிங்கம் பேசிக்கொண்டு மட்டும் நிற்கையில் ஆயுதங்கள் புது நம்பிக்கை ஏற்படுத்தின. இப்போது ஆயுதங்களையும் கடந்து வந்து நிற்கிறோம். இனித் திருப்ப குடியேற்றக் கதையிலும் தரப்படுத்தல் கதையிலும் ஆரம்பித்து வியூகம் அமைக்க முடியாது. எமது தேசியம் என்ற பொதுமை ஒன்று கட்டியமைக்கப்படவேண்டியது மீண்டும் தேவை ஆகி நிற்கின்றது. மீண்டும் நாங்கள் பொதுமையினை உணர்வதற்கும், நம்புவதற்கும் முயற்சிகள் தேவைப்படுகின்றன. ஆனால் இந்த முயற்சிகள் கடந்து போன காலங்களிற்கான தயார் படுத்தல்களாய் இருக்க முடியாது. தாம் வளாந்;த காலத்திற்காகப் பெற்றோர்கள் தம் குழந்தைகளைத் தயார் படுத்துவார்களேயாயின் குழந்தைகள் தோற்றுத் தான் போகும்.

வரலாற்றை எழுதி வைத்து அதைப் படித்துத் தான் பொதுமை வளரவேண்டும் என்பது அவசியமல்ல. பொதுமை உணரப்படுகையில் பொது வரலாறு தானாக எழுதப் படும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த ஒரு பதிவு...பல உண்மைகளை சுட்டிநிற்கிறது...

ஆழிக்குமரன் ஆனந்தன் சாதிதத்தால் சாதனை என்று ஏற்று மகிழ்ந்தவர்கள் பக்கத்து வீட்டுப் பையன் 4-ஏ எடுத்தால் பொறாமையில் உழலும் நிலையே ஆயுதப் போராட்டம் வரை இருந்தது. பொறாமை எரிச்சல் என்பனவற்றைத் தாண்டி நாம் அனைவரும் எமக்கான பொது வெற்றியாய் அனுபவிப்பதற்கு தேசிய விiளாட்டு அணிகள் கூட எம்மிடம் இருக்கவில்லை. பள்ளிக்கூடங்களிற்கிடையேயான கிரிக்கட் போட்டிகளைக் கூட பிரிந்து நின்றே நாங்கள் பார்த்தோம். ஊர்கள் சட்டையிட்டுக் கிடந்தன. இந்நிலையில் எம் அனைவரிற்குமான வெற்றிகள் என்று நாம் மகிழக் கூடிய சந்தர்ப்பங்களை ஆயுதப் போராட்டமே ஏற்படுத்தித் தந்தது. எமது தேசியம் முளைநிலை தாண்டி வளரத் தொடங்கியது.

இந்தப் பாதையில் எமது வராலாறு இவ்வாறு தான் எழுதப்பட வேண்டும் என்று யாரும் சொல்லாமல் மக்கள் தாங்களாகவே உணர்ந்து கொண்ட நிலை பரிணமித்தது. வரலாற்றின் முக்கியத்துவமும் எங்களிற்குள் நாங்கள் அடிக்கடி கதைக்கும் விடயமாக ஆகியது. ஈழத்தின் உயர்வு எங்களின் உயர்வாக எங்களிற்குத் தானாகப் பட்டது. சமாதான காலத்தில் வன்னியில் நடந்த நேரங்களில் எங்களை அறியாது எங்கள் நெஞ்சுகள் நிமிர்ந்து நின்றன. நாங்களும் அமெரிக்கர்கள் போல் தான் எங்கள் நாயகர்களைப் போற்றியபடி எங்கள் உயர்வுகளை வரவேற்றுக் கொண்டிருந்தோம். இதற்கான அடிப்படை, எங்களை நாங்கள் நாங்காளாகவே பொதுமையாக நோக்கிக் கொண்டோம்-. எங்கள் பொதுமையின் உயர்வு எங்கள் உயர்வு என்று எங்களிற்கு எவரும் வகுப்பெடுக்கத் தேவையின்றி நாங்களாக உள்ளுர உண்மையாக உணர்ந்தோம். நாங்கள் பார்த்தது எங்களிற்குப் பிடித்தது அதைத் தக்கவைக்க எங்களிற்கு வரலாறு தேவைப்பட்டது-- எனது பார்வையில் இந்தப் பொதுமையினை உருவாக்கியமை புலிகளின் அதி உச்ச சாதனை
  • கருத்துக்கள உறவுகள்

பின் முள்ளிவாய்கால் நடந்து முடிந்தது. எங்கள் தேசிய மரம் மீண்டும் முறிந்து போனது. இந்த முறிவிற்கான பொறுப்பைப் புலிகளில் மட்டும் போட்டுவிட்டு நாங்கள் இருந்து விடமுடியாது. அடிப்படை எங்கள் பொதுமையின் தன்மையில் இருக்கின்றது.

உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு நேரம் கிடைத்திருக்குது போல வழமை போல இரண்டு தரம் வாசித்து தான் புரிந்து கொண்டேன்[ நீங்கள் யாழில் வேறு பெயரில் எழுதுகிறீர்கள் என்றும் உங்கள் எழுத்து நடையை வைத்து இன்னார் எனக் கண்டு பிடிக்க கூடாது என்பதற்காக உங்கள் எழுத்து நடையை மாற்றி எழுதுகிறீர்கள் என நான் நினைக்கிறேன்.] :)

மற்ற இயக்கங்கள் அழிந்ததிற்கு அவர்களது தலைமைத்துவம் சரியில்லாதது தான் முக்கிய காரணம்... மற்ற இயக்கங்கள் அழியும் போது இந்தப் போராட்டத்தை கொண்டு நடத்துவதற்கு புலிகள் இருந்தார்கள் ஆனால் இனி மேல் போராட்டத்தை கொண்டு நடத்தப் போவது யார்?...புலம் பெயர் அமைப்புகள்,புலம் பெயர் மக்களா?...அவர்களால் புலிகளால் விடப்பட்ட போராட்டத்ததை கொண்டு நடத்த முடியாது என நான் நினைக்கிறேன்.உங்கள் கருத்து என்ன?

இனிமேல்மீண்டும் ஒரு ஆயுதப் போராட்ட‌ம் சாத்தியமா?...சாத்தியம் என்டால் அதிலாவது மக்கள் எல்லா வேற்றுமைகளை மறந்து ஒன்றாக இணைந்து போராடுவார்களா?...விட்ட பிழைகளில் இருந்து பாட‌ம் படிப்பார்களா?

உங்கள் கட்டுரைக்கும் நான் கேட்டதிற்கும் தொட‌ர்பு இருக்குதோ தெரியாது அப்படி உங்கள் கட்டுரையை என் கேள்வி திசை மாற்றி இருந்தால் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினை என்ன என்பதைத் தெளிவாக்காது பிரச்சினைக்குத் தீர்வு காணப் பல இயக்கங்கள் விழைந்து கொண்டிருந்தன.

தற்போதைய நிலையும் இதுதான்.

ஒவ்வொருவருக்கும் தங்களது தனிப்பட்ட காரணங்களுக்காகவே "தமிழீழம்" வேண்டும். தாயகத்தில் சிங்கள அடக்குமுறைகளுக்குள் இருந்தவர்களுக்கு அவற்றில் இருந்து வெளியேறத் தமிழீழம் தேவைப்பட்டது. அடக்குமுறைகள் காரணமாகப் புலம்பெயர்ந்து பிறநாடுகளில் குடியேறியவர்கள் "எனக்கும் ஒரு நாடு இருக்கின்றது" என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல தமிழீழம் தேவைப்பட்டது. ஆனால் பொதுமையாக ஏன் தமிழீழம் வேண்டும் என்பது தெளிவாக்கப்படவில்லை என்றே நினைக்கின்றேன். பொதுமை என்பது தற்போதைய நிலையில் என்னவாக இருக்கவேண்டும்?

  • தொடங்கியவர்

ரதி,

யாழில் நான் வேறு எந்தப் பெயரிலும் எப்போதும் எழுதுவதில்லை. யாழை இயன்ற வரை வாசிப்பினும் அப்பப்போ எழுதுவது நேரப்பிரச்சினையால் மட்டுமே. எழுத்துநடைப் பிரச்சினையினை ஏற்றுக்கொள்கிறேன். என்னைச் சிந்திக்கத் தூண்டும் வாசிப்பு மிகப்பெரும்பான்மையில் ஆங்கிலப்புத்தகங்களாய் இருப்பதால் சிந்தனைகளைத் தமிழ்ப்படுத்திச் சொல்லவிழையும் போது சில சமயங்களில் சிக்கலாகிப் போய்விடுகின்றது—விமர்சனத்திற்கு நன்றி. இயன்ற வரை திருத்திக்கொள்ள முயலுகின்றேன்.

கிருபன்,

ஒவ்வொருவரிற்கு ஒவ்வொரு காரணங்களிற்காகத் தமிழீழம் தேவைப்பட்டதில் கெடுதலில்லை. உண்மையில் ஒவ்வொருவரும் தமிழீழம் பிறப்பதனால் தமக்குக் கிடைக்கக்கூடிய அனுகூலங்கள் பற்றி தத்தமது நிலை சார்ந்து நினைப்பது தான் சிறந்ததும் கூட. காரணங்கள் வேறுபடினும் புலிகளின் காலத்தில் தமிழீழம் பிறப்பது தமக்கும் அனுகூலமானது என்பதை மிகப்பெரும்பான்மையானோர் தங்கள் தங்கள் நிலைசாhந்;து நினைத்தது மட்டுமன்றி மிகமுக்கியமாக தமிழீழம் சாத்தியம் என்றும் நம்பினார்கள். துரதிஸ்ரவசமாக இப்போது நிலை மீண்டும் குழம்பிப்போய்விட்டது.

உங்களது கேள்விக்கு வரின், என்னைப் பொறுத்தவரை கடந்த இரு ஆண்டுகளில் எனது அபிப்பிராயமாக இருப்பது, சிங்களப்பூச்சாண்டி காட்டி மட்டும் நாங்கள் எங்கள் பொதுமையினை மீளக் கட்டியெழுப்ப முடியாது என்பதே—முள்ளிவாய்க்காலில் குண்டு மழைக்குள் வாழ்ந்து தப்பியவர்களிடம் சென்று சிங்களவன் வன்முறை செய்வான் என்று நாம் பாடம் எடுக்க முடியாது. மாறாக எங்களின் பொதுமையின் வளர்ச்சியும் வீரியமும் சிங்களப் பூதத்தை ஒரு பக்கவிளைவாகக் கட்டிப்போடும் நிலையே சாத்தியம் என்பது எனது அபிப்பிராயம்.

எனது பார்வையில் உலகின் மிகப்பெரும்பான்மையான பொதுமைகளை அடிப்படையில் கட்டிக் காத்து நிற்பது பொருளாதாரமே. மொழி கலை லாச்சாரம் பொழுதுபோக்குத் தொட்டுப் பொதுமையின் இன்ன பிற அங்கங்கள் பொருளாதாரத்தால் பாதுகாக்கப் பட்டுக்கொண்டிருக்கும் பொதுமையில் வெளிப்படுகின்றன. பின் ஒன்றிற்கு ஒன்று பலமாக பொதுமை இனிமையாகக் கட்டிக் காக்கப்படுகின்றது. மொத்தத்தில் பொதுமை பாதுகாக்கப்படவேண்டிய கரிசனை பொதுமையின் அங்கத்தவர்களிற்குப் பொருளாதாரம் சார்ந்தே அவசியப்படுவதை பல இடங்களில் பாhக்க முடிகிறது. ஒருவேளை எங்கள் பொதுமை மீளக்கட்டியெழுப்பப்படுவதற்கும் பொருளாதார முனையும் ஒரு சிந்தனையாக இருக்கமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

இதர இயக்கங்களை அழித்தது என்பது மாபெரும் விலை என்பது அடுத்த கருத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது. ஆனால் அந்த விலையினை நிர்ணயித்தவர்கள் புலிகள் அல்லர். புலிகள் செய்தது நிர்ணயிக்கப்பட்ட கோர விலையினைக் கொடுத்தது மட்டுமே.

புலிகள் இதனை செய்த போது மக்கள் ஆத்திரம் கொண்டது என்னவோ உண்மைதான். எம்மை நாமே அழிக்கிறோம் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்.ஆனால் ரெலோவினதும் ஈ.பி.டி.பியினதும் தலைமைகள் இந்தியா தம்மை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை உணராமல் இன்றும் புலிகளை விரோதிகளாக பார்ப்பது எய்தவன் இருக்க அம்பை நோவதற்கு ஒத்தது. இந்திய உளவுப்படையும் அரசும் எமது கண்ணை எமது விரலால் குத்த வைத்தது என்பது தான் கசக்கும் உண்மை.

தேனி ,தேசத்தால் தமிழர் வரலாறு எழுதி நாம் வாசிக்க வேண்டும் என யாழ்க்களத்தில் எதிர்பார்ப்பவர் இக்கட்டுரைக்கு துணிந்து தனது கருத்தை வைப்பார் என என்னைப் போன்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வழக்கம் போல் உங்கள் எழுத்து வாசிப்பதற்கு ஒரு சுக அனுபவம்.ஆனால் இம்முறை போராட்டத்திற்கும் தேசியத்திற்கும் இடையில் பெரிதும் குழம்பிவிட்டீர்கள் என நினக்கின்றேன்.இலங்கையின் சுதந்திரத்திற்கு முதலே இருந்த எமது தேசியம் இன்றும் இம்மியளவும் குறைந்துவிடவில்லை.அதில் யாருக்கும் சந்தேகமே வரக்கூடாது.எமது போராட்டங்கள் தான் வடிவங்கள் மாறி வெற்றியிலும், தோல்வியிலும்,ஒற்றுமையிலும்,வேற்றுமையிலும்,நட்பிலும்,துரோகத்திலும் புரண்டோடி மூச்சுவிடமுடியாத இடத்தில் வந்து நிற்கின்றது.

தேசியம் சுதந்தரத்துடன் கொங்கிரசாகவும்,தமிழரசாகவும்,கூட்டணியாகவும்,பின்னர் இயக்கங்களாககவும்,இப்போ தேசியகூட்டமைப்பாகவும்,நாடு கடந்த அரசாகவும் எப்போதுமே அசைக்கமுடியாமல் தான் இருக்கின்றது.இதை அசைத்துப்பார்த்தவர்கள் தான் தோல்விகண்டார்களே ஒழிய தமிழ்தேசியம் எப்போதுமே ஆட்டம் கண்டதில்லை.

காங்கிரஸில் இருந்து தமிழரசு வந்ததும் பின்னர் காலத்தின் தேவைக்கு கூட்டணியாக வந்து எதிர்க்கட்சியாகியது தேசியத்தின் அதி உயர் நிலை.சிங்களத்தின் பேரினவாத பயங்கரவாதம் ஆயுதத்தை தூக்கவைத்து போராட்டத்தை வழி மாற்றியதே ஒழிய தேசியம்தான் அங்கும் அனைத்து இயக்கங்களாலும் திம்புவில் முன்னிறுத்தப்பட்டது.(டெலோவை அழிப்பதற்கும் தேசியத்திற்கும் என்ன சம்பந்தம்.அது ஒரு ஆயுதம் தாங்கிய இயக்கம்).

தொடரும்.

இயக்கங்களுக்கான முரண்பாடு பற்றி உங்கள் எழுத்திலும் எனக்கு உடன்பாடில்லை.சிங்களத்திற்கெதிரான எமது ஆக்கிரோசத்தை இந்தியா என்ற திமிங்கிலம் விழுங்கி ஏப்பம் விட்டதே நடந்தது.இதில் கருவறுக்கப்பட்டன பல இயக்கங்கள், சுழியோடி கடைசிமூச்சுவரை போராடிமாண்டது புலிகள்.(முதல் அழிந்தவற்றிற்கும் நிலைத்து நின்றதற்கும் அவர்களின் தத்துவாந்த கருத்தை வைத்தே ரோ முடிவு எடுத்தது)

இனி தேசியத்திற்கு வருவோம்.ஆனால் புலிகளால் என்றும் இல்லாத அளவிற்கு அடிமட்டத்தில் இருந்து புத்திஜீவிகள்,மாற்று இயக்கத்தவர்,புலம் பெயர்ந்தவர் வரை நடந்தவை மறந்து ஒன்றாக தேசியத்தின் ஒரே விடிவிற்காகான தமிழீழத்திற்கான பாதையிடப்பட்டது.அந்த 25 வருடங்களும் இலங்கையிலும் சரி,சர்வதேச ரீதியிலும் சரி தமிழ்த்தேசியத்திற்கான அங்கீகாரம் வரை வளர்ந்தே வந்தது.ஆனால் புலிகள் தமது 76 களில் தொடங்கிய அந்த கொலைக்கலாச்சாரத்தை(பழி வாங்குதல்,அடாவடி,கொலை) விட்டு வெளிவரமுடியாதவர்களாக இருந்தார்கள்.உள்நாட்டு அரசியலிலும்சரி சர்வதேசத்தில் இன்று செய்வதைப்போல் பரப்புரை செய்ய ஒரு அரசியல் அமைப்பையோ (அயர்லாந்து சின் பெயின் போல்) அமைக்க முயலவில்லை.முயன்றாலும் அவர்களது கொலைகலாச்சாரத்தால் சர்வதேசம் அவர்களை ஏற்கவுமில்லை.(இங்கு தான் புலிகள் சர்வதேசத்திடம் தோற்றது).

சடுதியாக ஏற்பட்ட சர்வதேச அரசியல் நிலைப்பாடுகள் புலிகளை முற்றுமுழுதாக பயங்க்.அரவாதிகள் ஆக்கிவிட்டிருந்தது.அதன் பின் போர் நிறுத்தம்,பேச்சுவார்த்தை என்றுமுயண்ராலும் அது காலம் கடந்த ஞானமாகப் போய்விட்டது.இங்கு தான் புலம் பெயர்ந்தவர்கள் தமிழர்களுக்கு மாபெரும் துரோகம் செய்தார்கள்.சர்வதேச நிலைபாடுகள் மாறிக்கொண்டுவருவதை அவர்கள் தெரிந்தும் மவுனம் காத்து தொடரும் கொலைகளுக்கு ஆசீர்வாதமும்,காசு பறிப்பதிலேயுமே குறியாய் இருந்தார்களே ஒழிய எமது போராட்டம் எமது தேசியத்தியே கேள்விக்குறியாக்கும் நிலைக்குதள்ளப்படுவது பற்றி கவலைப்படவில்லை.கடைசியில் அதுதான் நடந்தது.

இன்னமும் தொடரும்

முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் நடந்த நகராட்சி தேர்தலும் சரி,ஜனாதிபதி தேர்தலும் சரி,பொது தேர்தலும் சரி எமது தேசியம் இன்றும் உடையாமலொரு நம்பிக்கையுடனும் இறுக்கமாகவும் இருக்கின்றது என்பதையே வெளிக்காட்டி நின்றது.

காலத்திற்கு காலம் விலை போன ராஜதுரையில் இருந்து,மாற்று இயங்கள்,டக்கிளஸ்,கருணா,இன்று கே.பீ வரை எமது தேசியத்தால் ஒதுக்கப்பாட்டவர்களானார்களே ஆனார்களே ஒழிய அவர்களால் ஒரு சிறு துரும்பைக்கூட அசைக்கமுடியவில்லை..

புலிகளின் பெயராலும் ,சில புலம்பெயர்ந்தவர்களின் அனுசரணையுடனும் நடந்த சிவாஜிலிங்கம்,கஜேந்திரன்,பத்மினி சிதம்பரநாதன் நாடகம் கூட அரங்கேறமுடியாமல் போய்விட்டது.சம்பந்தனுக்கு இவைகள் எல்லாம் தெரிந்துதான் எவரைப்பற்றியும் கவலைப்படாமல் தனது அரசியலை நடாத்துகின்றார்.

ஆனால் சிங்களம் முழுமூச்சாக தங்களிடம் எதற்கும் கையேந்தும் நிலையில் தமிழனை கொண்டுவந்தும்,சில தமிழ்,முஸ்லிம்கள்,மலையக தலைவர்களைக்கொண்டும் தேசியத்தை உடைத்தே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றது.

அதுதான் இந்தமுறையாவது எப்படியும் கூட்டமைப்பை தேர்தலில் தோற்கடித்துவிடவேண்டும் என்று அனைத்துவழிகளிலும் முயற்சிகள் நடைபெறுகின்றது.போரால் கைவிடப்பட்டு அனாதரவாக இருக்கும் எம்மவர்களின் நிலயையும், விலை போகும் புலம் பெயர் தேசத்தவர்களின் எண்ணிக்கைகளையும்,புலம் பெயர்ந்து தேசியம் என்று வெறும் கோசம் மட்டும் வைப்பவர்களியும் போது இப்போதுதான் முதன் முதல் தேசியத்தின் இருப்பு கேள்விக்குறியாகிவிடுமோ என பயமாக இருக்கின்றது.

சில குறிப்புக்கள்-

ரோவால் அழிந்தது,எப்படியும் ரோ அழிக்குமென்றால் சர்வதேச அங்கீகாரம் வந்து என்ன பிரயோசனம் என கேட்கலாம்.இந்தியாவையும் மீறி ஒரு சர்வதேசபேச்சுவார்தைக்கு போனவர்கள் அரசாங்கத்தைவிட புலிகளின் நம்பகதன்மையில் கேள்விக்குறி ஏற்பட பண்ணிவிட்டார்கள்.

புலிகளால் தான் ராஜபக்சாவந்ததும் ராஜபக்சா இந்தியாவுடன் கூடி சர்வதேச அங்கீகாரத்துடன் புலிகளை அழித்ததும் எல்லோருக்கும் தெரிந்ததே.

  • தொடங்கியவர்

அர்யுன் உங்கள் விமர்சனத்திற்கு நன்றி.

தேசியம் என்ற பதம் எப்போதும் எங்களிற்குள் வீச்சுடைய சொல்லாகப் பாவனையில் இருந்தது என்பதனை நான் மறுக்கவில்லை. ஆனால் தேசியம் என்பது எவ்வாறு தனிநபர் மட்டத்தில் உணரப்பட்டது என்பது வேறு வகையினது.

தேசியம் என்ற எண்ணம் எப்போதோ உருவாக்கப்பட்டுவிட்டது என்றபோதும், உயிரையும் உடமைகளையும் தொடர்ந்து இழந்து தேசியத்தைத் தக்கவைக்கும் அளவிற்குத் தேசியம் தனிநபர் மட்டத்தில் தேவையாகக் கருதப்பட்டதா என்றால் திட்டவட்டமாக ஆம் என்று கூறிவிடமுடியாது என்றே எனக்குப் படுகின்றது. எந்த ஒரு விடயமும் இன்னல்களைக் கடந்து தொடரப்படவேண்டுமேயாயின் அது தேவையாகக் கருதப்படவேண்டும். வாழ்க்கைச் செலவிற்குத் தேவையான பணம் தானாக வந்துகொண்டிருக்குமேயாயின் எத்தனையோ பேர் வேலைப் பழுவினை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். புலத்தில் பலர் தொழிலில் ஏற்படும் உடல் உள உழைச்சல்களைத் தாங்கிக் கொண்டு தொடர்ந்தும் வேலைக்குச் செல்கிறார்கள் என்றால் “உத்தியோகம் புருச லட்சணம்” என்பது போன்ற சொல்லாடல்களின் உந்துதால் அல்ல, மாறாக வேலைக்குப் போகவேண்டியது அவர்களிற்குத் தேவையாக இருப்பதனால் மட்டுமே.

காலாதிகாலமாகத் தமிழ் அரசியல் வாதிகள் நடாத்திக்கொண்டிருந்த கவர்ச்சியான பேச்சுக்களைத் தமிழர்கள் ரசித்தார்கள் என்பதனாலோ அல்லது வட்டுக்கோட்டை போன்ற சந்தர்ப்பங்களில் தேசியத்திற்கு மிகப்பெரும்பான்மையாய் வாக்களித்தார்கள் என்பதனாலோ தேசியம் விருட்சமாய் வேரூன்றி இருந்தது என்று நிறுவி விடமுடியாது. முதலீடே இல்லாது வீடு வாங்கலாம் வாங்கி மகிழுங்கள் என்ற பேச்சால் உந்தப்பட்டு வாங்கித் தான் பார்ப்போமே என்று பலர் வீடு வாங்குவது போல, தேசியம் என்ற கவர்ச்சியினையும் நல்;லாத் தான் இருக்குதே என்று ஆமோதித்தார்கள் என்பதற்காய்த் தேசியத்திற்காய் உயிர்விட அறுபது ஆண்டுகாலம் தமிழர்கள் சித்தமாய் இருந்து வருகிறார்கள் என்று கூறிவிடமுடியாது. தேசியத்தைத் தமிழர்கள் எப்போதும் ஒரு தேவையாகப் பார்த்தார்கள் என்று கூறிவிடமுடியாது. அப்பப்போ வந்த கலவரங்கள் தந்த நோவுகளைப் போக்கும் வல்லமை அரசியல் பேச்சுக்களிற்கு இருந்தது ஏனெனில் நோக்கள் சொற்பமாயும் சுருக்கமாயும் வந்து போயின. அப்பிடி இருந்தும், இனித் தமிழரைக் கடவுள் தான் காப்பாத்தவேண்டும் என்பதாய்த் தான் நிலமை விரிந்தது. குடியேற்றம் தரப்படுத்தல் முதலியனவும் அப்பப்போ வந்து போன கலவரங்களும் தனிநபர் நிலையில் ஒரு பாதுகாப்பின்மையினை உணரச்செய்தது உண்மையெனினும், கடவுள் தான் காப்பாத்த வேண்டும் என்ற நிலையில் வெளிநாடு செல்வது வினைத்திறன் மிக்க பாதுகாப்பு ஒழுங்காகவே தனிநபர் பலரிற்குப் பட்டதற்கு நாங்கள் சாட்சி.

அந்தவகையில் எங்களின் தேசியத்திற்கும் உண்மையில் சக்தி இருக்கிறது என்று தமிழர்கள் நம்பியது ஆயுதப்போராட்டத்தில் அதிலும் புலகளினால் தான். தேசியம் என்பது வாhத்தைக்கு அப்பால் நடைமுறையில் உணரப்பட்டது எங்கள் தேசியம் எதிரியுடன் உண்மையில் களமிறங்கியது மட்டுமன்றி வெல்லத் தொடங்கியபோது தான். கனடாவை 1867ல் பிரகடனப்படுத்தினும் கனடா உருவானது விமி றிட்சில் தான் என்று கூறப்படுவதைப் போல, எஙகளின் தேசியம் ஆயுதப்போராட்டத்தின் தொடர்வெற்றியில் தான் வயதிற்கு வந்தது. பரம்பரை அரசியல் வாதி தான் தேர்தல் முடிவுகளோடு கொழும்பு போய் வரவேண்டும் என்பது மாறி தமிழர்களால் தமிழத்Nதிசயத்திற்கான முனைதல்கள் ஆயுதப்போராட்டத்தில் தான் சாத்தியப்பட்டது. இந்த ஆயுதப்போராட்டத்திற்கு உந்து சக்தியாக அதற்கு முந்தைய அரசியல் பேச்சுக்களும் முயற்சிகளும் இருந்தன என்பதை மறுக்கவில்லை. ஆனால் கடவுளை நோக்கிக் கையை விரித்துக் கொண்டு தலைமை நிற்கையில், தேசியம் என்ற கவர்ச்சிச் சொல்லை உச்சரித்து அடிவாங்குவதற்குத் தமிழர்கள் முண்டி அடித்தார்கள் என்று கூறமுடியவில்லை.

இனி ரெலோ தொடர்பான உங்கள் கேள்விக்கு வரின், தேசியம் என்பதை அரசியல் விஞ்ஞான புத்தக வரைவிலக்கணமாகக் கருதின் உங்கள் கேள்வி நியாயமானது. எனினும் இங்கு கூறப்பட்டது, தனிநபர் மனங்களில் பொதுமையின் உருவாக்கம், பொதுமையால் தனிநபரிற்கு நன்மை என்னவென்ற நடைமுறை உதாரணம், பொதுமை தக்கவைக்கப்படலாம் என்ற நம்பிக்கை முதலியனவே. அமெரிக்காவான அமெரிக்காவவே வியட்நாமில் இருந்து உடல் பொதிகள் வந்து குவியத்தொடங்குகையில் ஆடிப்போன நிலையில், ஆரம்பிக்கும் ஆயுதப்போராட்டத்தை—அதுவும் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கைவிரிக்கப்பட்ட நிலையில் ஆரம்பபிக்கப்படும் சிறுபிள்ளை வேளாண்மையினை--முதலில் மக்கள் நம்பச் செய்வது இலகுவானது அல்ல. உதாரணத்திற்கு ரெலோ ஒரு தாக்குதலைச் செய்து நூறு இளைஙர்களின் சடலம் வருகிறது என்று வைத்துக் கொண்டால் முளையிலேயே ஆயுதப்போராட்ம் பற்றிய நம்பிக்கையீனம் தான் அதிகரிக்கும். புலி அடிச்சால் மட்டும் உயிரிழப்பு வராதா என்று கேட்கலாம், அதற்காகத் தான் கூறியிருந்தேன் புலிகள் அழித்தார்கள் என்று மட்டும் கூறுவது போதாது அழிக்க வந்த புலிகளை எதிர்க்கும் பலமின்றி அழிந்தவர்கள் இருந்தார்கள் என்பதும் கவனிக்கப்படவேண்டும் என்று. ஒரே சமூகத்தில் இருந்து ஒரே காலகட்டடத்தில் வந்த போராளிகளில் காணப்பட்ட இந்த பலம் தொடர்பான வித்தியாசம் மறுக்கப்படமுடியாதது--இதற்கு வைத்திருந்த ஆயுதங்கள் தான் காரணம் என்று கூற முடியாது. அந்தவகையில், எங்கள் பொதுமை எங்கள் வளங்களை வைத்துப் பாதுகாக்கப்படாலம் என்று மக்களை நம்பப்பண்ணுவதற்கு, இருந்த இயக்கங்களுள் பலம் பொருந்திய இயக்கத்திற்கு எமது அனைத்து வளங்களும் தேவைப்பட்டது. போராடத் தயாராய் இருந்த சொற்பமானவர்கள் அனைவரும் ஒரே அணியில் போராடினே அந்த நம்பிக்கை ஏற்படுத்தப்படலாம் என்றுணரப்பட்டது என்ற அடிப்படையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டது. ஏற்கனவே கூறப்பட்டது போன்று, இவ்வழிப்பை ஆரவரித்து நான் ஆதரிக்கவில்லை. ஆனால் புரிந்து கொள்ள முடிகிறது என்று மட்டுமே கூறியுள்ளேன்.

நீங்கள் கூறுவது போல் தேசியம் என்ற எங்களின் பொதுமை எப்போதும் உறுதியாய் இருந்தது என்பதை ஏற்றுக்கொள்ளின் மேற்கண்ட கருத்துத் தவறானது தான். இல்லாத இப்பொதுமை தைத்துக் கட்டியமைக்கப்பட்டது என்று நான் கூறுவதில் தான் எங்களின் அடிப்படை முரண்பாடு இருப்பதாய் நான் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னுமொருவன் உங்களுடைய நீண்ட பதிவிற்கு நன்றி. எல்லாரும் சுத்தி சுத்தி ஒன்றிற்குள் நிற்பது போலத்தான் இருக்கிறது.

நான் நினைக்கிறேன் இன்னும் சிலபேர் வரலாறு எழுதினால் சிலவேளைகளில் அடுத்த சந்தததிக்கும் நிலைத்து அகக்குரன்தது இன்னும் 5 அல்லது 10வருடம் நிலைக்கும் ?வரலாறு பிறக்கும். அதுவரை தகவல்களாக , அசெய்திகளாக அனைத்தையும் உள்வாங்குவதே சிறந்தது என நான் நினைக்கிறன்.

3 அல்லது 4 வருடத்துக்கு முந்தி நடந்ததையே கதைக்க தவிர்க்கிற அல்லது நம்ப மறுக்கிற நாங்கள் 10 அல்லது 20 வருடம் முந்தி நடத்த நிகழ்வுகளை ஏந்தினை ஆயிரமாய் அவர் அவர் மனம் போனபடி எழுதலாம். அப்படி எழுதவது குறை என்றோ, தவறென்றோ இல்லைத்தானே. மற்றது, யாராக இருந்தாலும், அதைத்தான் அவர்கள் நம்பவேண்டும்..எங்கேயாது பிரபாகரன் ஒளித்திருந்தாலும் கூட, அந்த காலத்தில் பரவின கதைதான் உண்மைதான் என்று சொல்ல வேண்டும் . அது அவருக்கும் வசதி, பாதுக்காப்பு. "நான் சபாரத்தினத்தை கொல்லச்சொல்லவில்லை, டெலோவை அழிக்க சொல்லவில்லை" என்று மறுப்பறிக்கை விட வசதியாக இருக்கும். முன்பும் ஒரு முறை பதிந்திருந்தேன், வன்னியில் கட்டாய ஆட்சேர்ப்பு தொடங்க முன்பு மட்டக்களப்பில் தொடங்கிவிட்டது என, அந்த நேரம் என்னுடம் படித்த நண்பர் ஒருவரின் சகோரதமும் கடத்தப்படிருந்தார். அந்த நேரத்தில் ஒரு முக்கியஸ்தர் ஒருவரிடம் அது பற்றி கதைத்தேன், அவர் சொன்னார் "ஒருக்காலும் அப்படி நடக்காது, அப்படி நடந்தால் நான் சொல்லவேண்டிய இடத்துக்கு சொல்லி நடவடிக்கை எடுக்கிறான் என்று" பிறகு என்ன நடந்து என்றால் வசதியாக கருணா தலையில் போட்டதுதான். இப்படித்தான் எங்கட போராட்டம் - எனது பார்வையில் நடந்தது. ஆனால் அதுதான் வரலாறு என்று சொல்லமாட்டேன். ஆனால் எல்லாருடைய கருத்துக்களையும், செய்திகளையும், கேட்பதன் மூலம் நாங்களும் அறியாத விடயங்களை அறிகிறோம். அதைத்தான் விசுவின் பதில் போட்டனான் இதுமாதிரி 50 , 100 பக்கம் தாண்டினால்தான் சிவனே என்று ஒரு முடியாவது கிடைக்கும். அதுவரைக்கும் காத்திருப்போம்.

நான் உங்களுடைய பதிவில், காலப் பிறழ்வு இருக்குது போல இருக்கு. "4 எ" விடயங்கள் தொடங்கியதே வலு பிந்தி..எனக்கு தெரிய 86 / 87 முந்தி இப்படி பேபரில் போட்டு பிரபல்யப்ப்டுத்துகிற "வியாதி", "மரபு" இருந்ததோ தெரியாது. உதயனும் இந்துகல்லூரிய்ம் கைகொர்ப்பதர்ற்கு முன்பு அதற்கான சந்த்தியங்களும் குறைவு என்றுதான் நினைக்கிறன். போராட்டத்துக் முதல் பக்கத்து வீடுகாரன் 4 எ எழுத்ததிர்க்கு முன் மனம் புளுன்கினது என்கிற வாதம் சரியா என பார்க்கவும். போராட்டத்துக்கு முன்பு எப்படி இருந்தது என்றால், யாழ்பாணத்து டீச்சர், முழங்காவில் படிப்பிப்பா, பிள்ளை O / L முழங்காவில் மாஹவித்தியாலைத்தில் எடுத்துப்போட்டு, - அதும் அரைவாசி நாள் யாழ்பாணத்தில் டியூஷன் படிச்சுப்போட்டு, பிறகு எ. எல் வேம்படியில் படித்து 2c 2 S மேடிசின் படிப்பா. வேம்படி புத்தகத்தில்லும் இருக்கும் இந்தமுறை 22 பேர் மேடிசின் எண்ட பண்ணினவை என்று.

இந்த உதாரணத்தை ஏன் சொன்னான் என்றால் 80 தொடக்கத்தில் என்ன நடத்து என்கிற ஒரு ? ஐடியா இல்லாதவர்கள் கூட தங்களுக்கு தெரிந்த வகையில் ஒவ்வொரு விளங்கங்களை சொல்லுகிறார்கள். எனக்கு தெரிந்த வகையில் 80 தொடக்கத்தில் புலிகளை விட டெலோ பெரிய அமைப்பாக இருந்தது, இன்று முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என்கிறநிலையில் இருந்தது போலத்தான் நான் அன்றும் உணர்ந்தேன். பின்னர் அறிந்தது, சாத்திரி ponror சொல்லக்கூடும்... பெரிய ஓட்டை அல்லது பிரச்சனை, புலிகளை தவிர்ந்து ( அல்லது அவர்களில் பெரும்பாலானவர்களை தவர்த்து ) அந்த காலத்தில் இரவு நேரரத்தில் கம்பில்/ வீடுகளில் இருக்கும் தலைவர்கள் குறைவு. பலரை சுற்றி பிடித்தது நித்திரை பாயில் என்று சொல்லுவார்கள். இங்கே யாரோ குறித்திருந்தார்கள் கிட்டுவை பற்றி..அந்த நேரத்தில் பலரும் மன்மத ராசக்களே அதைவிட அந்த நேரத்தில் இருந்த குறைந்தளவு தொடர்படலுமே அவர்களின் அச்தமனத்திர்ற்கு அத்திபாரம் ஆயிற்று.

"இலங்கையில் முதல் முதல் வந்த இயக்கம் நீங்கள் டெலோவில் சேருங்கள்"..இந்த paddai யாரும் கேடவர்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை.. ஆனால் இதை கேட்டுவிட்டு கொப்பியை கிழித்து 8 அல்லது 16 மடித்து வந்த கூரால் தேச்சு தேச்சு கையில் டெலோ என்று எழுதியவர்களை எனக்கு தெரியும்..அப்படி போனவர்களை கொலை செய்துவிட்டு..நீ கிடந்த வளத்தை பறிக்க வந்தனீ என்றோ, அல்லது நீ பிறக்கும் போதே துரோகி என்றோ, அல்லது தக்ககென பிழைக்கும் என்றோ, நீ டெலோ வில் சேர்ந்ததே களவெடுக்க என்றோ, இனி வர வரலாற்றாசிரியர்கள் என்ன சொல்லுவினமோ என்று தெரியாது.

ஆனால் இப்ப நாங்கள் கதை/வரலாறு எழுதிகிற மாதிரி 80 இருக்கவில்லை.

நான் நினைக்கிறன், வரலாறை 2011 இல் இருந்து பின்னோக்கி தொடங்கினால் சில உண்மைகளும் வரலாம். ஆனால் நாங்கள் சொல்ல நினைப்பது 20 , 30 வருடங்களுக்கு முந்திய சம்பவங்களை, மிகக் கடினமான பாதை, ஆனால் போனால் சில தெளிவுகள் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கங்களுக்கான முரண்பாடு பற்றி உங்கள் எழுத்திலும் எனக்கு உடன்பாடில்லை.சிங்களத்திற்கெதிரான எமது ஆக்கிரோசத்தை இந்தியா என்ற திமிங்கிலம் விழுங்கி ஏப்பம் விட்டதே நடந்தது.இதில் கருவறுக்கப்பட்டன பல இயக்கங்கள், சுழியோடி கடைசிமூச்சுவரை போராடிமாண்டது புலிகள்.(முதல் அழிந்தவற்றிற்கும் நிலைத்து நின்றதற்கும் அவர்களின் தத்துவாந்த கருத்தை வைத்தே ரோ முடிவு எடுத்தது)

இனி தேசியத்திற்கு வருவோம்.ஆனால் புலிகளால் என்றும் இல்லாத அளவிற்கு அடிமட்டத்தில் இருந்து புத்திஜீவிகள்,மாற்று இயக்கத்தவர்,புலம் பெயர்ந்தவர் வரை நடந்தவை மறந்து ஒன்றாக தேசியத்தின் ஒரே விடிவிற்காகான தமிழீழத்திற்கான பாதையிடப்பட்டது.அந்த 25 வருடங்களும் இலங்கையிலும் சரி,சர்வதேச ரீதியிலும் சரி தமிழ்த்தேசியத்திற்கான அங்கீகாரம் வரை வளர்ந்தே வந்தது.ஆனால் புலிகள் தமது 76 களில் தொடங்கிய அந்த கொலைக்கலாச்சாரத்தை(பழி வாங்குதல்,அடாவடி,கொலை) விட்டு வெளிவரமுடியாதவர்களாக இருந்தார்கள்.உள்நாட்டு அரசியலிலும்சரி சர்வதேசத்தில் இன்று செய்வதைப்போல் பரப்புரை செய்ய ஒரு அரசியல் அமைப்பையோ (அயர்லாந்து சின் பெயின் போல்) அமைக்க முயலவில்லை.முயன்றாலும் அவர்களது கொலைகலாச்சாரத்தால் சர்வதேசம் அவர்களை ஏற்கவுமில்லை.(இங்கு தான் புலிகள் சர்வதேசத்திடம் தோற்றது).

சடுதியாக ஏற்பட்ட சர்வதேச அரசியல் நிலைப்பாடுகள் புலிகளை முற்றுமுழுதாக பயங்க்.அரவாதிகள் ஆக்கிவிட்டிருந்தது.அதன் பின் போர் நிறுத்தம்,பேச்சுவார்த்தை என்றுமுயண்ராலும் அது காலம் கடந்த ஞானமாகப் போய்விட்டது.இங்கு தான் புலம் பெயர்ந்தவர்கள் தமிழர்களுக்கு மாபெரும் துரோகம் செய்தார்கள்.சர்வதேச நிலைபாடுகள் மாறிக்கொண்டுவருவதை அவர்கள் தெரிந்தும் மவுனம் காத்து தொடரும் கொலைகளுக்கு ஆசீர்வாதமும்,காசு பறிப்பதிலேயுமே குறியாய் இருந்தார்களே ஒழிய எமது போராட்டம் எமது தேசியத்தியே கேள்விக்குறியாக்கும் நிலைக்குதள்ளப்படுவது பற்றி கவலைப்படவில்லை.கடைசியில் அதுதான் நடந்தது.

இன்னமும் தொடரும்

இதை உங்களுடைய தனிபட்ட கருத்தாக பார்க்க முடியலலாம். இதை தவறென்று என்னால் ஒரு கருத்து முன்வைக்கபடுமாயின் அதுவும் எனது தனிபட்ட கருத்தாகவே அமையும். இருவருடைய கருத்துக்களையும் தாண்டியதே (தனிபட்ட கருத்துக்களை) உண்மை நிலையும் நடந்த நடக்கவிருக்கும் எழுச்சிகளும்.

அந்த போராட்டத்தை போல பல அரசியல் முன்னகர்வுகளை புலிகளால் முன்வைக்க முடியவில்லை என்பது உங்களுடைய தனிபட்ட பார்வையே அன்றி அது உண்மை நிலை கிடையாது. ஆயுத போராட்டத்தை ஒரு தற்பாதுகாப்பாக புலிகள் முன்னெடுத்தார்களே தவிர அரசியல் போராடட்த்தையே முதன்மை படுத்தினார்கள் என்பதே உண்மை. அதனாலேயே முள்ளிவாய்கலுக்கு போக வேண்டும் என்ற காட்டாய நிலையை புலிகளுக்கு உண்டுபண்ணியது ஆயுத போரட்டத்தை புலிகள் முதன்மை படத்தியிருந்தால் முள்ளிவாய்க்கால் அவர்களது நகர்வுக்கு தெரிவாகியிருந்திருக்காது.

அவரும் இயக்கம் தொடங்கிவிட்டார் நானும் ஒரு இயக்கத்தை தொடங்கலாம் என்ற தொனிப்பில் தொடங்கபட்ட பல இயக்கங்கள் மழைக்கால ஈசல்போல் சிங்கள பேரினவாதம் ஆயுதபோராட்டத்தை முன்னடுத்த நாட்களில் காணமல் போய்விட்டன. அரசியல் நகர்வுகளும் கோரிக்கைகளும் சத்தியாகிரகங்களும் தோற்றுபோன நிலையிலேயே ஆயுதபோராட்டம் முளைவிட்து என்ற உண்மையான முழு பூசனிகாயை சோற்றுகோப்பைக்குள் மறைக்க முயற்ச்சி செய்யலாமே தவிர வெற்றியடைய முடியாது.

யார் யாரோவால் தொடக்கபட்ட ஆயுதபோராட்டத்தால் வெறிகொண்ட சிங்களம் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தாலே நிண்டவர்கள் கண்டவர்கள் மேல் கைவைக்க தொடங்கியபோது அதில் தமது உறவுகளை இழந்து ஆத்திரம் அடைந்த பல இளைஞர்களை தமிழ்ஈழத்திற்கான விடுதலைபோருக்கான இயக்கம் என்ற போர்வையில் தமது சொந்த நலனை முன்னிறுத்தி இளைஞர்களை ஏமாற்றினார்கள் என்ற உண்மையை ஈழத்தில் பிறந்த ஆறறிவு கொண்ட அனைவரது மூளையிலும் பதிவாகியுள்து.

ஆயுதபோராட்டத்தை முதன்மைபடுத்தி இளைஞர்களை இணைத்தவர்களால் பின்பு ஆயுதபோராட்த்தையும் தமது இலக்கான சிங்கள ஆதிக்க வெறியையும் கைவிட்டு மாற்று கருத்து இந்தியா வென்றுதரும் புலிகளை அழித்தால் நாம்தான் முதன்மை இயக்கம் போன்ற சகதிகளுக்குள் தள்ளினார்கள். இதில் இந்திய றோ தனது கைவேலைகளை கங்கணமாக தொடங்கியபோது அதில் ஏமாந்துபோனார்கள் என்ற உண்மையும் மறுக்க முடியாதாது உதராணத்திற்கு முஸ்லீம் நாடான மாலைதீவு பாகிஸ்தான் சார்பு கொண்டதாக மாறிகொண்டிருந்தபோது அதை இந்திய சார்பாக்க நடத்திய நாடக்திற்காக புளட் என்ற இயக்கத்தை மாலைதீவுக்கு அனுப்பி பின்பு கைது செய்து அந்த இயக்கத்தை சின்னாபின்மாக்கியது ( சிங்கள இனவாதம் தமது இலக்கு என்பதை முதன்மைபடுத்தியிருந்தால் இந்த வேண்டாத ஆசைகளுக்கு அடிபணிந்திருக்க தேவையில்லை?) சிறப்பு போராளியான தாஸ் என்ற போராளியை தமது சொந்த இயக்க தளபதியாக இருந்தும் தலைவர் சிறிசபாரட்ணமும் பொபி என்ற பினாமியும் சேர்ந்து சுட்டுதள்ளினார்கள் புலிகளை அழியுங்கள் என்ற இந்திய றோவின் பசப்பிற்கு ஆளாகி சக போராளிகளையே கொன்றுபோடுவது என்ற கலாச்சாரத்தை தொடக்கிவைத்தார்கள். ஆரவரமில்லாது நகர்ந்து கொண்டிருந்த புலிகளை தமது ஆடம்பரம் வென்றுவிடும் என்ற பகல் கனவிற்கு இரையாகி போனார்கள். புலிகளை அழிப்பது என்ற போர் உண்மையை நிலையை அடைந்தபோது புலிகள் அதை கச்சிதமாக வென்றார்கள் தோற்வர்கள் பழிகளை புலிகள் மீது போட்டார்கள்......................... உண்மையிலையே தமது தலமை மீது கொண்ட அசராத பாசத்தால் உண்மையை அறிய பல இளைஞர்களுக்கு இடம் இருக்கவில்லை என்பதும் ஒரு பக்க உண்மையானது. பல கச்சிதமான போராளிகளுக்கு இலக்கு என்பது சிங்களம் என்பதை தாண்டி புலிகள் என்ற ஒரு மாயவிம்பத்தை நச்சுகலந்து உருவாக்கினார்கள். புளட் இயக்கத்தில் இருந்த சங்கிலியன் என்பவனை இதற்கு ஒரு உதாரணமாக கொள்ளலாம் இந்திய இராணுவத்தின் எந்த சலுகைகளையும் ஏற்காது தனித்த தனது போராளிகளை மன்னாரில் வழிநடத்தகொண்டிருந்தான் புலிகள் அவனது இலக்காக இருந்தார்கள் அவர்கள் இருந்த பிரதேச மக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் கொடுக்காதும் இருந்தார்கள் உண்மையை சொல்லபோனால் தமது பாதுகாப்பு சங்கிலியன் என்ற நிலையில்தான் அந்த இடத்து மக்களும் இருந்தார்கள். புலிகள் அவர்களை தேடி சென்றபோது மற்ற இயக்க போராளிகள்போல் ஒடுவதற்கு முற்படவில்லை தனது இருப்பை காட்டிலும் தனது இலக்கை அழிப்பது என்ற வெறியே அவனிடமிருந்தது துர்ரதிஸ்டவசமாக இலக்கு அவனுக்கு பிழையாக கற்றுகொடுக்கபட்டது. புலிகளின் வரலாற்றிலேயே மற்றைய இயக்கங்களுடனான முதல்களில் பல இழப்புகளை புலிகள் சந்தித்தது என்பது சங்கிலியனுடனான மோதல் ஒன்றிலேயே அதற்கு தலமைதாங்கிய புலிகளின் தனபதியான பானு கூட காயத்திற்கு உள்ளாகி இருந்தார் அதன்பின்பு வீறுகொண்ட புலிகளினாலேயே அவனுடைய முகம் வெற்றிகொள்ளபட்டது.

இவையெல்லாம் கடந்து ஒரு அரிய சந்தர்ப்பமாக இந்திய இராணுவம் கால்பதித்த காலம் வந்தபோதும். மற்றைய இயக்கங்கள் எல்லாம் திரும்பவும் இந்திய இராணுவ பாதுகாப்புடன் கொண்டுவரபட்டபோதும் மக்கள் அவர்களை ஏற்கவில்லை என்ற உண்மையை ஏன் உதறி தள்ளவேண்டும்? தமது இலக்கான விடுதலை என்பதை யாரும் முன்னெடுக்கவில்லை புலிகளை அழிப்பது என்ற நிலையையும் இப்போது கடந்து ஆக்கிரமிப்பு இராணுவம் செய்ய முற்பட்டவைகளை தாமும் மக்களை நோக்கி முன்னெடுத்த அருவெறுப்பான செயலை எந்த கற்பனையை கட்டவிழ்த்தும் நியாயபடுத்த முடியாது. ஆயுதங்களை ஒப்படைத்து வெறும் அரசியல் போராளிகளாக இருந்த புலிகள் இந்த பூச்சலாண்டிகளை வெறும் தூசாக நினைத்து ஊதிவிட்டு காந்திய நாட்டிற்கு காந்தியம் கற்பிக்க தியாகி தீலிபனை பறிகொடுத்தார்கள்.............. ஆதாவது எந்தவடிவம் கொண்டாலும் தமது இலக்கு நோக்கி நகர்ந்துகாண்டே இருந்தார்கள். இதில் மிகவும் பணிவானவர் மாற்றுகருத்துக்களை உள்வாங்குபவர் என்ற வெறும் கற்பனைகளால் நிலைநிறுத்த முயற்சித்த பட்மநாப எனடற ஈபிஆர்எல்வ் வின் தலைவர் மிகமோசமான வேலைகளுக்கு தனது இயக்க போராளிகளை பயன்படுத்திகொண்டிருந்தார் பல பிளவுகளை அந்த இயக்கம் சந்திக்க இவரே காரணமாவார் அடிமட்ட போராளிகளுக்கு உண்மை தெரியாது இருந்தது அந்தளவிற்கு புரிய கூடிய புரிந்துணர்வும் இல்லாதிருந்தது. உமாமகேஸ்வரனோ கற்பனையிலேயே சஞ்சரித்துகொண்டிருந்தார் ஜேவிபி க்கு ஆயுதம் கொடுப்பது பயிற்சி கொடுப்பது பாகிஸ்தான் உழவுத்துறையோடு சேர்ந்து இந்தியாவை அழிப்பது என்று அவருடைய சிருஸ்டிகள் பல சொந்த இயக்க போராளிகளை மலையகம் கூட்டிசென்று அவராலேயே சுட்டு புதைக்கபட்டார்கள்................. அவரை சுட வேண்டிய தேவை புலிகளுக்கு இல்லாதுபோனது அந்த அழுக்கை சுட சென்று தமது கைகளிலேயும் சில அழுக்குகளை புலிகள் பூசாது போனது அதிர்ஸ்டமானது. அவரது சொந்த சகாக்களாலேயே தீர்த்துகட்டபட்டார்.

இந்திய இராணுவம் வெளியேறியபோது மக்கள் முன்னணியை உருவாக்கி அரசியல் கட்சியை தேர்தலை நோக்கி புலிகள் முன்னிறுத்தினார்கள் புலிகளுடைய வெற்றி உறுதியானது என்பதை தெரிந்த அரசியல் விரும்பிகளாலும் தற்போதைய ஜனநாயகர்களாலும் ஜனநாயகம் கொலைசெய்யபட்டு மீண்டும் ஆயுத போர் திணிக்கபட்டது. பின்பு தந்தையை சுட்டவரையே சுடவிரும்பாத சந்திரிக்கா என்ற சமாதான விரும்பி பூனகரி பாதையை கூட திறக்க மறுத்து மக்கள் நலனை பாதுகாத்தார் யாழ் மக்களை பொருளாதார தடைதான் மீட்கும் என்ற புதிய சித்தாந்தம் இந்த ஜனநாயகவாதியால் அரங்கேறி நவாலி தேவாலயத்தில் தஞ்சமடைந்த மக்களை குண்டுபோட்டு கொல்லும் அளவிற்கு அவருடைய அறபமான மனிதாபிமானம் அரங்கேறியது.

பின்பு சாமாதன பிரியரான நோர்வே றோவினுடைய நிகழ்சிநிரலை அரங்கேற்ற புலிகளை புதுமாத்தளன் வரை கூட்டி சென்று தனது உச்ச கட்ட சமாதனத்தை உலகிற்கு அறிமுகம் செய்து இப்போது எல்லாம் காலம் கடந்துவிட்தாக புதிய அரசியல் ஆய்வை செய்துகொண்டது என்பதே உண்மை.

புலிகள் மக்கள் போராட்த்தையே எப்போதும் வலியுறுத்தினார்கள் மக்களுக்கு அது எப்போதும் புரியவில்லை புலிகள் எல்லாவற்றையும் வெல்வார்கள் என்ற ஒரு கற்பனைக்குள் இருந்துவிட்டார்கள். இந்த குற்றசாட்டை மக்கள் என்று யாரையும் கைநீட்டி காட்டிவிட்டு நானும் நீங்களும் விலக முடியாது................................ ஆனால் தோல்விகளுக்கான காரணங்களை தோற்றுபோன பின்னாவது உணாந்தவர்கள் என்ற ஒரு உயரிய கற்பனை நிலையை உருவாக்கி எங்களை நாங்களே திருப்த்திபடுத்த முடியலாம். அங்கும் உண்மை நிலை வேறானது.

காலத்திற்கு காலம் விலை போன ராஜதுரையில் இருந்து,

இது அமிர்தலிங்கத்தின் கேடுகெட்ட தந்திரம். அதே தந்திரத்திற்கு அவர் பலியானது வேறு கதை.

இராசதுரையின் பிரிவு ஏன் ஏற்பட்டது?

அமிர்தலிங்கம் / இராசதுரையின் தனிப்பட்ட குடும்ப பகையே காரணம். நீங்கள் சொல்வது மாதிரி குத்து மதிப்பாய் 'காலத்திற்குக் காலம் விலை போன' கதையல்ல இது.

77 இல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இராசதுரையை பழிதீர்ப்பதற்காகவே மட்டக்களப்பு தொகுதியில் இரண்டாம் வேட்பாளராக காசி ஆனந்தன் நிறுத்தப்பட்டார்.

தமிழர் விடுதலை கூட்டணியிலிருந்து அரச கட்சிக்கு தாவிய பொத்துவில் எம்பி கனகரத்தினத்தை சுட்ட 'TNT ' (உமா பிரபா இணைந்திருந்த அமைப்பு) கூட இராசதுரையின் மீது கைவைக்கவில்லை. காரணம் முடியாமையில்லை. தமிழ் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டதுதான். இராசதுரையை மிக இலகுவாகவே தீர்த்துக் கட்டியிருக்கலாம். பின்பு புலிகள் கூட அதை செய்யவில்லை.

ஊரறிந்த பா---- சர்ச்சைகளிலிருந்து ஒதுங்கியே செயற்பட்டார்கள்.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

"இலங்கையில் முதல் முதல் வந்த இயக்கம் நீங்கள் டெலோவில் சேருங்கள்"..இந்த paddai யாரும் கேடவர்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை..

சின்னப்பிள்ளையா இருந்த காலத்தில ரெலோவின் ஆதரவாளர்களான எனது ஊரவர்கள் சிலர் மூலம் கேட்ட பாடல்.... "முதல் முதல் தோன்றிய இயக்கம் அதுதமிழீழ விடுதலை இயக்கம் தங்கண்ணா தலைமையில் தொடக்கம்....." இப்பிடித்தான் ஞாபகம் பாட்டு சரியோ Volcano ?

  • கருத்துக்கள உறவுகள்

இது அமிர்தலிங்கத்தின் கேடுகெட்ட தந்திரம். அதே தந்திரத்திற்கு அவர் பலியானது வேறு கதை.

இராசதுரையின் பிரிவு ஏன் ஏற்பட்டது?

அமிர்தலிங்கம் / இராசதுரையின் தனிப்பட்ட குடும்ப பகையே காரணம். நீங்கள் சொல்வது மாதிரி குத்து மதிப்பாய் 'காலத்திற்குக் காலம் விலை போன' கதையல்ல இது.

77 இல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இராசதுரையை பழிதீர்ப்பதற்காகவே மட்டக்களப்பு தொகுதியில் இரண்டாம் வேட்பாளராக காசி ஆனந்தன் நிறுத்தப்பட்டார்.

தமிழர் விடுதலை கூட்டணியிலிருந்து அரச கட்சிக்கு தாவிய பொத்துவில் எம்பி கனகரத்தினத்தை சுட்ட 'TNT ' (உமா பிரபா இணைந்திருந்த அமைப்பு) கூட இராசதுரையின் மீது கைவைக்கவில்லை. காரணம் முடியாமையில்லை. தமிழ் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டதுதான். இராசதுரையை மிக இலகுவாகவே தீர்த்துக் கட்டியிருக்கலாம். பின்பு புலிகள் கூட அதை செய்யவில்லை.

ஊரறிந்த பா---- சர்ச்சைகளிலிருந்து ஒதுங்கியே செயற்பட்டார்கள்.

தப்பிலிக்கும் பழைய விடயங்கள் தெரிந்திருக்கு மங்கையகரசியக்காவும் சும்மா சொல்லக்கூடாது பிரச்சார மேடையிலையே ஆடுவா. அப்ப நாங்கள் வயசுக்கு வாற வயசு. காசிஆனந்தனின் பழைய வரலாற்றையும் எழுதமுடியாது ஆரம்பம் மோசமானதுதான்.பின்னர் மாறியிருந்தார்.

சின்னப்பிள்ளையா இருந்த காலத்தில ரெலோவின் ஆதரவாளர்களான எனது ஊரவர்கள் சிலர் மூலம் கேட்ட பாடல்.... "முதல் முதல் தோன்றிய இயக்கம் அதுதமிழீழ விடுதலை இயக்கம் தங்கண்ணா தலைமையில் தொடக்கம்....." இப்பிடித்தான் ஞாபகம் பாட்டு சரியோ Volcano ?

அதையே அந்தகாலததிலை நாங்க மாத்தி படிப்பமில்லை தமிழீழ விடுதலை இயக்கம் தங்கண்ணா தலைமையில் தொடக்கம் குட்டிமணி செத்ததும் மடக்கம். மிச்சத்தையும் நாங்கள்தான் தான் முடிச்சம். :lol:

மருதங்கேணியின் பதிவு தலையுமில்லாமல் வாலுமில்லாமல் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் போட்ட முடிச்சாக உள்ளது.70,80,90,2000 எல்லாம் கலந்து எழுதினது எதுவும் எனக்கு புரியவில்லை.

இராசதுரைக்கு அமிர்தலிங்கம் செய்த துரோகம் எல்லோருக்கும் தெரியும் அதற்கு அரசுடன் சேர்வதுதான் பரிகாரமல்ல.அப்படி பார்க்கபோனால் நாங்கள் துரோகி பட்டியலிடும் எல்லோருமே ஏதோ ஒருவகையில் அப்படியேதான் போனார்கள்.

தப்பிலிக்கும் பழைய விடயங்கள் தெரிந்திருக்கு மங்கையகரசியக்காவும் சும்மா சொல்லக்கூடாது பிரச்சார மேடையிலையே ஆடுவா. அப்ப நாங்கள் வயசுக்கு வாற வயசு. காசிஆனந்தனின் பழைய வரலாற்றையும் எழுதமுடியாது ஆரம்பம் மோசமானதுதான்.பின்னர் மாறியிருந்தார்.

நான் இராஜதுரையைத்தான் மாத்திரம்தான் சொன்னேன். நீங்கள் சொல்லும் விடயம் எனக்கு புதிது. :D

மொத்தத்தில் நான் சொல்ல வந்த விடயம் தனிப்பட்ட காரணங்களால் துரோகியாக்கப்பட்டவர் இராஜதுரை. பின்பு 'காலத்திற்கு காலம் விலைபோன' எனும் குரூப்புக்குள் தள்ளப்பட்டார்.

அந்த நேரத்தில் மட்டக்களப்பு இரட்டைத் தொகுதி. வஞ்சகமாக இராஜதுரையை தோற்கடிப்பதற்காகவே, காசியானந்தனும் நிறுத்தப்பட்டார். வாக்குகள் பிரிந்து இருவரும் தோற்கடிக்கப்பட்டு தமிழர் தரப்பில் உறுப்பினர் இல்லாது போயிருக்கும். இரு அரச கட்சி முஸ்லிம் உறுப்பினர்கள் வந்திருப்பார்கள். காசியானந்தனும் பகடைக்காயாகவே பாவிக்கப்பட்டார். அமிர்தலிங்கத்தின் சூழ்ச்சியின் மீது மிகவும் வெறுப்படைந்த மக்கள் இராஜதுரைக்கே வாக்களித்தனர். அதனாலேயே அவர் வென்றார். இரண்டாவதாக வந்தது பரீத் மீராலேப்பை.

பின்பே இராஜதுரை கட்சி மாறினார். அந்த நேரத்தில் இயக்கங்கள் அவரை இலகுவாக போட்டிருக்கலாம். போட்டிருந்தால், இயக்கங்கள் மீது மக்களுக்கு வெறுப்பு வந்திருக்கும்.

இங்கு நான் இராஜதுரைக்கு வக்காலத்து வாங்க வரவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக தமிழர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு, தங்கள் நலன்களுக்கேற்ற மாதிரி ஒருவர் துரோகியாக்கப்பட்டதை சுட்டிக்காட்டவே.

பின்பு அமிர்தலிங்கம் துரோகியானது வேறு கதை.

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குகள் பிரிந்து இருவரும் தோற்கடிக்கப்பட்டு தமிழர் தரப்பில் உறுப்பினர் இல்லாது போயிருக்கும்.

இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதியில் ஒருவர் இரு வாக்குகள் அளிக்க முடியும் அல்லவா? :unsure::unsure:

இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதியில் ஒருவர் இரு வாக்குகள் அளிக்க முடியும் அல்லவா? :unsure::unsure:

அந்த நேரத்தில் அப்படியான நடைமுறை இருந்ததோ எனச் சரியாகத் தெரியாது. அப்படியிருந்திருந்தாலும் முஸ்லிம்களுக்கும் இரண்டு வாக்குகள் இருந்திருக்கும். அந்த நேரத்தில் பொத்துவிலும் இரட்டைத் தொகுதிதான். அங்கு கூட்டணியின் சார்பாக ஒரு வேட்பாளரே நிறுத்தப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணியின் பதிவு தலையுமில்லாமல் வாலுமில்லாமல் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் போட்ட முடிச்சாக உள்ளது.70,80,90,2000 எல்லாம் கலந்து எழுதினது எதுவும் எனக்கு புரியவில்லை.

இராசதுரைக்கு அமிர்தலிங்கம் செய்த துரோகம் எல்லோருக்கும் தெரியும் அதற்கு அரசுடன் சேர்வதுதான் பரிகாரமல்ல.அப்படி பார்க்கபோனால் நாங்கள் துரோகி பட்டியலிடும் எல்லோருமே ஏதோ ஒருவகையில் அப்படியேதான் போனார்கள்.

முழுமையாக உடலைபற்றி எழுதினால் முழங்கால் மொட்டந்தலை என்று எல்லாவற்றையுமே எழுதவேண்டும்.

70 75 80 85 என்று எந்த இலக்கத்தை வேண்டுமானாலும் நீங்கள் போடலாம் அங்கெல்லாம் அரசியலை முதன்மைபடுத்தியே புலிகள் இருந்தார்கள் என்ற ஆதாரங்களை உங்களுக்கு என்னால் தரமுடியும்.

அரைவேக்காட்டுதனமான அரசியலை முன்னிறுத்தவில்லை என்ற கற்பனைகளை கட்டவிழ்பது என்றால் முழுமையாக எழுதமுடியாது. எதாவது ஒன்றிரண்டு சம்பவங்களை எழுதிவிட்டு பிற்பு எமது கற்பனைகளை தொடர முடியும்.

அந்த நிலை இங்கே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

எமது தேசியம் இன்றும் உடையாமலொரு நம்பிக்கையுடனும் இறுக்கமாகவும் இருக்கின்றது

உண்மைதான். இல்லையென்றால் ஏன் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தேர்தலில் வெல்லப்பண்ணுகின்றார்கள்?

எனினும் தேசிய எழுச்சியை நசக்க மகிந்த மிகவும் வேகமாகச் செயற்படுகின்றார். எனவே இன்னும் சில வருடங்களில் தமிழ்த் தேசியம் தமிழர்களுக்குள்ளும் சிறுபான்மையாகவே வந்துவிடும் நிலைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இராஜதுரையைத்தான் மாத்திரம்தான் சொன்னேன். நீங்கள் சொல்லும் விடயம் எனக்கு புதிது. :D

மொத்தத்தில் நான் சொல்ல வந்த விடயம் தனிப்பட்ட காரணங்களால் துரோகியாக்கப்பட்டவர் இராஜதுரை. பின்பு 'காலத்திற்கு காலம் விலைபோன' எனும் குரூப்புக்குள் தள்ளப்பட்டார்.

அந்த நேரத்தில் மட்டக்களப்பு இரட்டைத் தொகுதி. வஞ்சகமாக இராஜதுரையை தோற்கடிப்பதற்காகவே, காசியானந்தனும் நிறுத்தப்பட்டார். வாக்குகள் பிரிந்து இருவரும் தோற்கடிக்கப்பட்டு தமிழர் தரப்பில் உறுப்பினர் இல்லாது போயிருக்கும். இரு அரச கட்சி முஸ்லிம் உறுப்பினர்கள் வந்திருப்பார்கள். காசியானந்தனும் பகடைக்காயாகவே பாவிக்கப்பட்டார். அமிர்தலிங்கத்தின் சூழ்ச்சியின் மீது மிகவும் வெறுப்படைந்த மக்கள் இராஜதுரைக்கே வாக்களித்தனர். அதனாலேயே அவர் வென்றார். இரண்டாவதாக வந்தது பரீத் மீராலேப்பை.

பின்பே இராஜதுரை கட்சி மாறினார். அந்த நேரத்தில் இயக்கங்கள் அவரை இலகுவாக போட்டிருக்கலாம். போட்டிருந்தால், இயக்கங்கள் மீது மக்களுக்கு வெறுப்பு வந்திருக்கும்.

இங்கு நான் இராஜதுரைக்கு வக்காலத்து வாங்க வரவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக தமிழர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு, தங்கள் நலன்களுக்கேற்ற மாதிரி ஒருவர் துரோகியாக்கப்பட்டதை சுட்டிக்காட்டவே.

பின்பு அமிர்தலிங்கம் துரோகியானது வேறு கதை.

மலேசியாவில் பின்னர் சந்தித்து கதைத்த பொழுது மனிசன் மனமுடைஞ்சுதான் கதைச்சார். ஆனால் ஆசை யாரைத்தான் விட்டது எண்டமாதிரி பிறகு ஊருக்கு போறன் எலெக்சனிலை நிக்கிறன் எண்டார். மலேசியாவில் எமக்கான பல உதவிகளை செய்தவர்.ஒத்துக்ககௌ;ளத்தான் வேணும்.

மலேசியாவில் பின்னர் சந்தித்து கதைத்த பொழுது மனிசன் மனமுடைஞ்சுதான் கதைச்சார். ஆனால் ஆசை யாரைத்தான் விட்டது எண்டமாதிரி பிறகு ஊருக்கு போறன் எலெக்சனிலை நிக்கிறன் எண்டார். மலேசியாவில் எமக்கான பல உதவிகளை செய்தவர்.ஒத்துக்ககௌ;ளத்தான் வேணும்.

அரசுடன் சேராமல் இருந்திருந்தால் அவருக்கு மிகவும் மதிப்பு இருந்திருக்கும். வாழ்நாள்வரை மட்டக்களப்புத் தொகுதி எம்பியாக இருந்திருப்பார். அவரின் அந்தச் செயலால் மக்களிடம் இருந்த நண்பதிப்பை இழந்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.